Breaking
September 29, 2024

“போகுமிடம் வெகு தூரம் இல்லை” திரை விமர்சனம்….

விமல் கருணாஸ் மற்றும் பல நடிப்பில் மைக்கேல் கே ராஜா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் போகுமிடம் வெகு தூரம் இல்லை

அமரர் ஊர்தி ஓட்டுனரான விமல், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனது தாத்தாவை துணைக்கு வைத்து விட்டு மருத்துவ செலவிற்காக -சென்னையில் இறந்தவரின் சடலத்தை ஏற்றுக் கொண்டு திருநெல்வேலிக்கு பயணிக்கிறார்.வழியில் கூத்து கலைஞர் கருணாஸ் தன்னை செல்லும் வழியில் இறங்கி விடுமாறு கேட்க, மனதளவில் பிடிக்காமல் துணைக்காக ஏற்றுக்கொள்கிறார்.
இருவரும் பயணிக்க வழியில் ஒரு காதல் ஜோடியும் வண்டியை நிறுத்தி ஏறிக்கொள்ள இந்த இருவர் மற்றும் கருணாஸ்னால் பல விதத்தில் பல பிரச்சனைகள் கதாநாயகன் விமலுக்கு வருகிறது.
இந்த காதல் ஜோடிகளால் வந்த பிரச்சனை என்ன? அமரர் ஊர்தியில் உள்ள சடலத்தை ஒப்படைத்தாரா? ஒப்படைக்கவில்லையா? என்பதுதான் போகுமிடம் வெகு தூரம் இல்லை திரைப்படத்தின் மீதிக்கதை.
அமரர் ஊர்தி ஓட்டுனர் குமார் கதாபாத்திரத்தில் மிகவும் கனத்த முகத்துடனும் தன்னுடன் பயணித்த கருணாஸ் இறந்த பிறகு மிகவும் நினைத்து வேதனைப்படும் காட்சிகளிலும் அருமையாக தன்னை மறந்து நடித்துள்ளார்.எப்பொழுதும் பார்க்கும் விமலாக இல்லாமல் புது மாதிரியான விமலாக நடித்திருக்கிறார்.
மற்றொரு கதையின் நாயகனாக கருணாஸ் நடித்துள்ளார்.
கூத்துக் கலைஞர் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாகவும் கூத்துக் கலைஞரின் நடை உடை பாவனை அனைத்தையும் ஏற்று கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அற்புதமாக நடித்து இருக்கிறார்.
நம்மளால் ஏற்பட்ட தவறுக்கு நாம் தான் பரிகாரம் செய்ய வேண்டும் என கருணாஸ் எடுக்க முடிவு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை தூக்கி வாரி போட்டு விட்டது.
விமல் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மேரி ரிக்கெட்ஸ், அருமையாக நடித்துள்ளார்.
தீபா சங்கர், ஆடுகளம் நரேன், பவன், சார்லஸ் வினோத், அருள்தாஸ், வேல ராமமூர்த்தி, மனோஜ்குமார் அனைத்து கதாபாத்திரங்களும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் டெமில் சேவியர் எட்வர்ட்ஸ். மிகச்சிறந்த ஒளிப்பதிவை கொடுத்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இசை உயிரோட்டமாக உள்ளது.
ஒரு அமரர் ஊர்தி ஓட்டுனரின் ஒரு நாள் வாழ்க்கையை வைத்து, அதை சுற்றிய பல சுவாரஸ்யமான காட்சிகளும் அந்த ஒரு நாள் வாழ்க்கையின் அனுபவங்களையும் படமாக்க முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மைக்கேல் கே ராஜா. இந்த அமரர் ஊர்தியில் பயணிக்கும் இரண்டு கதாபாத்திரங்களை மையமாக வைத்து யோசித்த கதை அருமை, அதன் திரை கதையை இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு சுவாரஸ்யமாக அமைத்திருந்தால், அந்த மனிதர்களின் வாழ்க்கையை சுவாரசியமாக கொடுத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
மொத்தத்தில் போகும் இடம் வெகு தூரம் இல்லை விமலின் திரை வாழ்க்கைக்கு நிச்சயம் ஒரு மயில் கல்லாக இருக்கும்

Related Post