Breaking
September 30, 2024

“தங்கலான்” திரை விமர்சனம்

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடித்து இருக்கும் திரைப்படம் “தங்கலான்”விக்ரமின் நடிப்பை மட்டுமே நம்பி…………..

கதை சுருக்கம்,
வடாற்காடு மாவட்டம் வேப்பூர் கிராமத்தில் வசிக்கும் அடிமை மக்களை சுற்றி கதை ஆரம்பித்து அவர்கள் தங்க சுரங்கத்தை தேடிச் செல்லும் ஆங்கிலேயர்கள் காலத்து கதைக்களத்தை கையில் எடுத்து இருக்கிறார் இயக்குனர்.
வடாற்காடு மாவட்டம் வேப்பூர் என்னும் கிராமத்தில் வசிக்கும் மக்கள் அந்த ஊரில் உள்ள ஒரு ஜமீன்தாருக்கு அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர், அவர்களது நிலங்களை எல்லாம் அந்த ஜமீன்தார் அபகரித்து அவர்களை அடிமையாக வைத்திருக்கிறார். ஆனால் அதே ஊரில் வசிக்கும் விக்ரம் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார், இவ்வாறு வாழ்ந்து வரும் விக்ரமுக்கு ஒரு கனவு வந்து செல்கிறது, அந்த கனவில் அவர் ஒரு தங்க சுரங்கத்தை தேடிச் செல்வதாகவும், அந்த தங்க சுரங்கத்தை ஒரு சூனியக்காரி பாதுகாத்து வருவதாகவும், அந்த சூனியக்காரியை கொன்று அந்த தங்கத்தை எடுத்து, அதன் மூலம் நிலத்தை தன் முன்னோர்கள் வாங்கியதாக அவருக்கு அடிக்கடி கனவு வருகிறது.

இந்நிலையில் விவசாயம் முடிந்து அறுவடை செய்து வைத்திருக்கும் நெல்களை ஜமீன்தார் ஆட்கள் கொளுத்தி விட, அதனால் அவரால் வெள்ளையர்களுக்கு வரி கட்ட முடியாமல் போகிறது. அந்த வரியை ஜமீன்தார் கட்டி விக்ரமையும் அடிமைப்படுத்திக் கொள்கிறார்.இந்த நேரத்தில் அந்த ஊருக்கு வரும் ஒரு ஆங்கிலேயர் இவர்களைக் கொண்டு ஒரு தங்கச் சுரங்கத்தை கண்டுபிடிக்க, விக்ரம் மற்றும் அந்த மக்களை அழைத்துச் செல்கிறார் .அவ்வாறு செல்லும் விக்ரக்கு நம் கனவில் வரும் அந்த இடம் தான் தங்கச் சுரங்கம் என்று கூறி அழைத்துச் செல்கிறார்.

அந்த இடத்தில் உண்மையிலேயே தங்கச்சுரகம் இருந்ததா?

அந்த இடத்தை அந்த சூனியக்காரி தான் காவல் காத்து வருகிறாரா?

அந்த சூனியக்காரிடமிருந்து தங்கத்தை எடுக்கிறார்களா?

என்பதை சுற்றி திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் முதன்மை பாத்திரத்தில் விக்ரம் தங்கலானாக தன் உடலை வருத்தி நடித்திருக்கிறார்.இந்த தங்கலானுக்கு படத்தில் கிட்டத்தட்ட 13 கெட்டப்புகள் ,இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக விக்ரமின் நடிப்பு மட்டுமே.
விக்ரமின் மனைவியாக வரும் பார்வதி மூன்று பிள்ளைகளுக்கு தாயாக வாழ்ந்திருக்கிறார், பசுபதியின் கதாபாத்திரம் சிறப்பாக நடித்திருந்தாலும் அது திரைக்கதையில் திணித்தது போல் இருக்கிறது அவரது கதாபாத்திரம்.
மாளவிகாவின் கேரக்டர் படம் முழுவதும் கத்திக்கொண்டே இருக்கிறது. அவளை சூனியக்காரியாக காட்ட அவ்வாறு கத்த வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.
படத்தில் வில்லனாக வரும் ஆங்கிலேய நடிகர் தன் வில்லன் கதாபாத்திரத்தை தந்திருக்கிறார்.
இந்தப் படத்தை இயக்கியிருக்கும் ரஞ்சித் அவர்கள் திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். இந்த படத்தில் விக்ரம் மட்டுமே மிகவும் மெனக்கட்டு தன் உடம்பை வருத்தி சிக்ஸ் பேக் எல்லாம் வைத்துக் இருப்பது போல் கதாபாத்திரத்தை வடிவமைத்துவிட்டு மற்றவர்களை அனைவரும் தொந்தியும் தொப்பையுமாக இருப்பது போல் வடிவமைத்திருக்கிறார் இது விக்ரமிற்கு இடைஞ்சலாக தான் உள்ளது அதை கவனித்திருக்கலாம். மேலும் இயக்குனர் தனக்கே உரிய குறியீடுகளை ஆங்காங்கே திணித்திருக்கிறார் ராமானுஜர், திப்பு சுல்தான், ஆங்கிலேயர்கள், பண்ணையார்கள் என்று பலரை திரைக்கதை வம்படியாக புகுத்தியிருக்கிறார்.ஒருவேளை கோலார் தங்க சுரங்கத்தில் சிக்கி பலர் உயிரிழந்த, அதை தோண்டி எடுக்க அவர்கள் பட்ட அவஸ்தையை ஆராய்ந்து எடுத்து அதை அப்படியே திரைக்கதை அமைத்திருந்தால் படம் நிச்சயமாக ரசிக்கும்படி இருந்திருக்கலாம்.
படத்தின் இரண்டாவது மிகப் பெரிய பலம் ஜிவி பிரகாஷ் இசை
படத்தின் மிகப்பெரிய மைனஸ் படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் கிராபிக்ஸ் டெக்னாலஜிகள் எவ்வளவோ வளர்ந்து இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 10,15 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது போல் உள்ளது.

தங்கலான் தூக்கம் வரவிடாமல் தவிர்த்திருக்கலாம்!!!!!

Related Post