Breaking
January 24, 2025

“டிமான்டி காலனி 2” திரைவிமர்சனம்…..

அஜய் ஞானமுத்து இயக்கத்தின் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் மற்றும் பலர் நடித்த திரைப்படம் டிமான்டி காலனி 2.

பிரியா பவானி சங்கரின் கணவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைக்கும் நிலையில்,திடீர் என்று மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.அவருடைய ஆத்மா, பிரியா பவானி சங்கரிடம் எதோ சொல்ல வருவதாக மனதளவில் உணர்கிறார். அதற்காக புத்த துறவிகள் உதவியை நாடி அவர்கள் மூலமாக கணவர் மரணத்தில் இருக்கும் பின்னணியை அறிய முயற்சி செய்கிறார்.அது ஒரு பக்கம் இருக்க ஐதராபாத்தில் வசிக்கும் அண்ணன் கதாநாயகன் அருள்நிதி தனது தந்தையின் சொத்தை அடைய முயற்சி செய்கிறார்.ஆனால், அதில் தம்பி அருள்நிதி சென்னையில் இருப்பதாகவும் அவருடைய கையெழுத்தை பெற நினைக்க தேடி சென்னைக்கு வருகிறார்முதல் பாகத்தில் இறந்துப் போன தம்பிதான் அருள்நிதி’ ஆனால் சாகவில்லை கோமாவில் தான் இருக்கிறார்.தன் தம்பி அருள்நீதியை கொல்வ போகும் போதுதான், தம்பி இறந்தால் தானும் இறந்துவிடுவோம் என்ற உண்மையை புரிந்துக் கொள்கிறார்.பிரியா பவானி சங்கர், தன்னுடைய கணவன், இறப்பிற்கும், அருள்நிதி சாவின் விழிம்பில் இருப்பதற்கும் டிமான்ட்டி காலனிக்கும் உள்ள தொடர்பை கண்டுப் பிடிக்கிறார்.6 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த சம்பவம், சாத்தானுக்கு மனிதர்களை பலியிடும் வழக்கத்தை ஒரு குழு வைத்துள்ளனர்.இந்த முறை இந்த பலிக்கு ஆளாக போவது அருள்நிதி மற்றும் கதாநாயகி பிரியா பவானி சங்கர் இருவரும், சாத்தானின் பிடியில் இருந்து தப்பித்தார்களா? தப்பிக்கவில்லையா? என்பதுதான் டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் மீதிக்கதை.

அருள்நிதி இந்த கதைக்கு எந்த அளவிற்கு நடிப்பை கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு மிக அருமையாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.திகில் காட்சிகளில் நடிப்பின் மூலம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம்.

பிரியா பவானி சங்கர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.அமானுஷ்யத்திற்கு பயப்படும் காட்சிகளிலும், தனது காதல் கணவனை இழந்த துக்கத்திலும் பரிதவிக்கும் காட்சிகளில் மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற அர்ச்சனா ஒரு சில காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிந்துவிடுகிறார்.

அட்வகேட் கதாபாத்திரத்தில் வரும் முத்துக்குமார் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவின் மூலம் ரசிகர்களை திகிலடைய செய்ய முயற்சி செய்துள்ளார்.

இசையமைப்பாளர் சாம் சி. எஸின் பின்னணி இசை திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

வழக்கமான ஹாரர் திரைப்படத்தில் வரும் சம்பவங்கள் இல்லாமல்,  இந்த கதைக்கு தேவை இல்லாத பாடல்கள், , பேய்க்கு பிளாஷ்பேக் இல்லாமல் இருப்பது மிகச் சிறப்பு.

கதையின் முதல் பாதியில் திரைக்கதை மிகச்சிறப்பாக அமைந்தாலும், இரண்டாம்  பாதியில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் நிரைப்படம் இன்னும் சிறப்பாக அமைந்து இருக்கும்.

Related Post