Breaking
January 24, 2025

“ரகு தாத்தா” திரைவிமர்சனம்…..

சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் எம் எஸ் பாஸ்கர் ரவீந்திர விஜய் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் “ரகு தாத்தா”

1960 காலகட்டத்தில் வள்ளுவன் பேட்டை என்னும் கிராமத்தில் கீர்த்தி சுரேஷ் தாத்தா எம்எஸ் பாஸ்கர் மற்றும் அண்ணன் தாய் ஐயருடன் வசித்து கீர்த்தி சுரேஷ் அந்த ஊரில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார். கதாநாயகி கீர்த்தி சுரேஷ் அந்த ஊரில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் அந்த கிராமத்தில் உள்ள ஹிந்தி பிரச்சார சபாவை எதிர்த்து போராட்டம் செய்து, அந்த ஆசிரியரையும் சபாவையும் மூடுகின்றனர்.மேலும் கீர்த்தி சுரேஷ் க. பா. என்ற புனை பெயரில் பத்திரிகைகளில் பெண்ணியம் சார்ந்த கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார். ரவீந்தர் விஜய், கீர்த்தி சுரேஷை ஒருதலையாக காதலித்து,முற்போக்கு சிந்தனையாளராக தன்னை சித்தரித்து கொள்கிறார். இந்நிலையில் தாத்தா எம்எஸ் பாஸ்கருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருமணமே வேண்டாம் என்று இருக்கும் கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்.

இந்நிலையில் தனக்கு நீண்ட நாள் பழக்கமான ரவீந்திர விஜய் என்பவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து ஒத்துக் கொள்கிறார். ஆனால் திருமணத்திற்கு முன்பே தனக்கு வரப்போகும் கணவர் முற்போக்கு சிந்தனைவாதி இல்லை, அவன் ஆணாதிக்க சிந்தனை கொண்டவன் என்றும், பெண்களை மதிக்காதவன் என்றும் தெரிய வருகிறது. இதை தெரிந்து கீர்த்தி சுரேஷ் தான் ஒத்துக்கொண்ட திருமணத்தை நிறுத்த எடுக்கும் முயற்சிகளும் அதை சுற்றி நடக்கும் சம்பவங்களுமாக திரைக்கதை நகர்கிறது.

கீர்த்தி சுரேஷ் ஹிந்தி கற்று ப்ரோமோஷன் வாங்கிக்கொண்டு கல்கத்தாவில் உள்ள வங்கி கிளைக்கு சென்று விட்டால், நடக்கவிருக்கும் இந்த திருமணம் நின்று போகும் என்ற எண்ணத்தில் ஹிந்தி கற்று கொள்ள ஆரம்பிக்கிறார்.கீர்த்தி சுரேஷ் ஹிந்தியை எதிர்ப்பவர் ஹிந்தி கற்றுக்கொண்டு கல்கத்தாவில் உள்ள வங்கி கிளைக்கு சென்றாரா? செல்லவில்லையா?
அவர் நினைத்தது போல் திருமணம் நின்றதா? என்பதுதான் ‘ ரகு தாத்தா திரைப்படத்தின் மீதிக்கதை.

ரவீந்திர விஜய் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் பெண்ணியம் பேசும் கதாபாத்திரத்தில் நடிப்பை துறுதுறுவெனவும் அதே சமயம் தன்னம்பிக்கையுடன் நடித்து இருக்கிறார்.

தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம்.எஸ் பாஸ்கர் அவரின் நடிப்பை சற்று வீணடித்து இருப்பது போல் இருக்கிறது. அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.அண்ணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கும் இஸ்மத் பானு ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளார்.

மாமி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் தேவதர்ஷினி மிகவும் அளவான நகைச்சுவையை வெளிப்படுத்தியுள்ளார். வங்கி மேலாளரின் நடிப்பு, ஹிந்தி வாத்தியாரின் நடிப்பு மற்றும் பலரின் நடிப்பு செயற்கை தனமாகவே இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் யாமினி யாக்னாமூர்த்தியின் ஒளிப்பதிவு 60களில் காலகட்டத்திற்கு நம்மை இழுக்கவில்லை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசை ஏனோ மனதை வருடவில்லை  

ஹிந்தி எதிர்ப்பையும் ஹிந்தி திணைப்பையும் வைத்து இயக்கி இருக்கும் இந்த படத்தின் திரைக்கதையை இன்னும் ஆழமாக அமைத்திருந்தால் படம் நிச்சயம் நம்மை கவர்ந்திருக்கும்.

படத்தின் மிகப்பெரிய பலம் இரட்டை அர்த்தங்கள் இல்லாமல் கவர்ச்சிகள் இல்லாமல் படமாக்கி இருப்பது.

 ரகு தாத்தா திரைக்கதை ஓட்டத்தில் ஓய்ந்து போன தாத்தா!!!!!!!!

Related Post