Breaking
September 30, 2024

இந்தியன் || திரைவிமர்சனம்

ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் , சித்தார்த் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் இந்தியன் ||

சென்னையில் சித்தார்த் மற்றும் நண்பர்கள் இணைந்து பார்கிங் டாக் என்னும் யூடியூப் சேனலை நடத்தி அதன் மூலம் நாட்டில் நடக்கும் ஊழல் குற்றங்களை மக்களுக்கு நையாண்டி தனமாக எடுத்து கூறி நாட்டை திருத்த பார்க்கிறார்கள் ஆனால் இவர்களால் மாட்டும் குற்றவாளிகள் தண்டனை அடையாமல் ஊழல் மூலமாக நாட்டில் சுதந்திரமாக இருக்கிறார்கள் இதனை கண்ட வெகுண்டெழும் சித்தர்த் குரூப், பல ஆண்டுகளுக்கு முன்பு ஊழலை ஒழிக்க போராடி பெற்ற மகனையே கொன்றுவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி சென்ற இந்தியன் தாத்தாவை திரும்ப அழைக்க முடிவெடுத்து கம்பேக் இந்தியன் என்னும் ஹாஸ்டேக் உருவாக்கி அதை வைரல் ஆக்குகிறார்கள் அதை பார்த்து இந்தியன் தாத்தா வந்து நாட்டை காப்பாற்றுவர்கள் என்று நினைக்கிறார்கள், அவர்கள் நினைத்த மாதிரியே தாய் பே என்னும் நாட்டில் அமைதியாக வாழ்ந்து வரும் இந்தியன் தாத்தா பொங்கி எழுந்து அங்கு வரும் ஒரு ஊழல் பெருச்சாளியை கொன்று தன் கணக்கை துவக்கி இந்தியா வருகிறார்.

இங்கே இவரை பிடிக்கும் காவல் அதிகாரியாக பாபி சிம்ஹா தாத்தாவை விமான நிலையத்தில் கைது செய்ய சென்று அவரை பிடித்து கைது செய்ய சொன்னால் வயதான தன் அப்பாவை கூட்டி சென்று இந்தியன் தாத்தாவிடம் அடகு வைத்து தப்பிக்க விடும் காமடி காவல் அதிகாரியாக வருகிறார் அங்கிருந்து தப்பி செல்லும் தாத்தா கத்தியை தூக்கு வார் என்று எதிர்பார்த்தால் பேஸ்புக் லைவில் வந்து ஊழலை ஒழிக்க வேண்டுமானால் முதலில் வீட்டை திருத்த வேண்டும் எனவே வீட்டில் யாராவது ஊழல் செய்தால் அவர்களை வீட்டில் உள்ளவர்களே அரசிடம் காட்டி தர வேண்டும் என்று கூற, அதை கேட்கும் சித்தார்த் அண்ட் கோ அவர் அவர் வீட்டில் இருக்கும் ஊழல்வாதிகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள். இதற்கிடையே இந்தியன் தாத்தா இந்தியா முதுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தன் களை எடுக்கும் பணியை செய்கிறார். இப்படி சீரியசாக எடுக்க வேண்டிய படத்தை படுகாடுமடியாக, அபத்தமாக எடுத்திருக்கிறார் இயக்குனர்.
இது ஷங்கர் படமா என்று சந்தேகமாக இருக்குமளவிற்கு இருக்கிறது.

இந்தியன் முதல் பாகத்தில் தாத்தா கெட்டப் எவ்வளவு கம்பீரமாக இருந்தது. ஆனால் இதில் நேபாளி படத்தில் வரும் நாயகனை போல் மேக்கப்பில் சொதப்பி இருக்கிறார்கள். சும்மா கிடந்த தாத்தாவை கூட்டி வந்து ஓடவிட்டு அடிக்கிறார்கள். அவரும் வடிவேலு ஒரு படத்தில் தாவுடா செவல தாவுடா என்று கூறிகொண்டு ஓடுவதை போல் தாத்தாவையும் ஒடவிட்டிருக்கிறார்கள்.
சித்தார்த்தை சொஞ்சம் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
படத்தில் ஊழல் அதிகாரிகளை பார்த்தால் வெறுப்புதான் வர வேண்டும் ஆனால் இங்கு சிரிப்பு தான் வருகிறது.

இசை என்னத்த சொல்ல இந்தியன் வெற்றிக்கு முக்கிய கரணம் AR ரஹமான் இசை, ஆனால் இந்த படத்தின் முதல் எதிரி இசைதான். பல எமோஷனலான காட்சிக்கு இசையமைக்கு சொன்னால் கருமம் என்னத்தையோ வாசித்து இருக்கிறார் . தாத்தாவை வரவேற்க பாடலை போட சொன்னால் தாத்தவராரு கலக்க போறாருன்னு பிக்காலி பசங்க பாட்டா போட்டிருக்காங்க.இசை வரவில்லை. என்றால் வேறு வேலைபார்க்கலாமே
படத்தின் இரண்டு நல்ல விஷயம் ஒளிபதிவு, செட் அமைப்பு.

ஷங்கர் தன் தன் பிரம்மாண்ட எண்ணத்தை வேண்டும். அதேபோல் தன் கதைவிவாத குழுவையும் மாற்ற வேண்டும்

இந்தியன் || தாத்தாவிற்கு ஓய்வுதந்திருக்கலாம்

Related Post