Breaking
January 21, 2025

“கருடன்”திரைவிமர்சனம்

இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் கதையின் நாயகனாக சூரி, மற்றும் சசிக்குமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்கில் வெளியாக இருக்கும் திரைப்படம்தான் “கருடன்”.
சூரி மற்றும் சசிக்குமார், உன்னி முகுந்தன் மூவரும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள் இவர்கள் மூவரையும் சிறு வயது முதல் வளர்த்து வருபவர் வடிவுக்கரசி.

கோம்பை அம்மன் கோவில் நிர்வாக தலைவராக வடிவுக்கரசி இருந்து வருகிறார்.

கதாநாயகன் சூரி மற்றும் சசிக்குமார், உன்னி முகுந்தன் ஆகிய மூவரும், அந்த கோவிலின் நிர்வாகத்தில் இருக்கிறார்கள்.

தாய் தந்தை இல்லாத தன்னை வளர்த்த உன்னி முகுந்தனுக்கு நண்பனாக மட்டுமல்லாமல் நல்லதொரு விசுவாசியாகவும் கதாநாயகன் சூரி இருந்து வருகிறார்.

தேனி மாவட்ட கிராமத்தில் லாரி பிஸ்னஸ், செங்கல் சூளை, கோம்பை அம்மன் கோயில் சொத்தை பராமரிப்பது எனக் குடும்பமாக, ஊரின் முக்கியப் புள்ளிகளாக கதாநாயகன் சூரி மற்றும் சசிக்குமார், உன்னி முகுந்தன் ஆகிய மூவரும், வலம் வரும் இவர்கள் பராமரித்து வரும் கோம்பை அம்மன் கோவில் நிலம் ஒன்று சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அமைச்சர் ஆர் வி உதயகுமார் அதற்காக அந்த கோவிலுக்கு வைக்கப்பட்டுள்ள பட்டயம் ஒன்றை கைப்பற்ற நினைக்கிறார்.

அதனால், அந்த அமைச்சர் ஆர் வி உதயகுமாரின் ஆளான மைம் கோபி கோவிலின் நிர்வாகத்திற்குள் அனுப்ப நினைக்கிறார்.

அந்த ஊருக்கு புதிதாக இடமாற்றம் செய்யப்பட்டு வரும் காவல்துறை உயர் அதிகாரியான சமுத்திரக்கனி வைத்து அமைச்சர் ஆர்.வி உதயகுமார் காய் நகர்த்த கதாநாயகன் சூரி மற்றும் சசிக்குமார், உன்னி முகுந்தன் ஆகிய மூவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனைகளும் பிளவுகளும் ஏற்படுகிறது.

அமைச்சர் ஆர்.வி உதயகுமார் உன்னி முகுந்தனுக்கு பணத்தாசையை காண்பிக்க தன் மனைவியின் பணத்தாசையிலும் திசை மாறி செல்கிறார்.

இறுதியில் அமைச்சர் அறிவு உதயகுமாரின் கோவில் நிலத்தை அபகரிக்கும் திட்டம் நிறைவேறியதா? நிறைவேறவில்லையா? சசிகுமார், உன்னி முகுந்தன் நட்பு என்ன ஆனது? விசுவாசத்திற்கும் நியாயத்திற்குமான போராட்டத்தில் கதாநாயகன் சூரி யாருக்கு சாதகமாக செயல்பட்டார்? என்பதுதான் இந்த கருடன் திரைப்படத்தின் மீதிக்கதை.

சூரி சொக்கன் கதாபாத்திரத்தில் நடிகர் உன்னி முகுந்தனின் மீது அதீத அன்பு கொண்ட அடிமையாகவும் விசுவாசியாகவும் மிகவும் அருமையாகவும் நடித்திருக்கிறார்.

கதாநாயகி ரேவதி ஷர்மா அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து ரசிகர்களுக்கு மனதில் இடம் பிடித்து விட்டார்.

இந்த கருடன் திரைப்படத்தில் ஆதி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சசிகுமார், நட்புக்கு அடையாளமாகவும் நட்புக்கு இலக்கணமாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி,

அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர் வி உதயகுமார், மைம் கோபியின் நடிப்பு மிக மிக அருமையாக நடித்திருக்கிறார்.

ஸ்வேதா நாயர் தன் கணவர் சசிகுமார் நினைத்து உருகும் காட்சிகளில் ரசிகர்களை கண்கலங்க வைத்து விட்டார்.

ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ வில்சனின் தேனியின் வறண்ட பகுதிகளையும், காதல் பாடலில் மலைப்

பகுதியின் குளுமையையும், நட்பு, துரோகம் என உணர்வுக்கேற்றபடி திரை அனுபவத்தையும் ஒளிப்பதிவின் மூலம் பதிவு செய்துள்ளது

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஓகே ரகமாக தென்பட்டாலும், பின்னணி இசையில் மிகப்பெரிய அளவில் மாஸ் காண்பித்திருக்கிறார்.

தமிழகத்தில் அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கும் கோவில் நிலத்தை அபகரிக்க நினைக்கும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியை மையமாக வைத்து இந்த கருடன் திரைப்படத்தை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆர்.ஏஸ் துரை செந்தில்குமார்.

கருடன் இன்னும் கூர்மையாக பார்த்திருக்கலாம்

Related Post