

முதல்முறையாகக் குழந்தைகள் கொண்டாட Sofa Boy கலக்கும் “ஸ்கூல் லீவ் விட்டாச்சு” ஆல்பம் பாடல் !!
Bereadymusic தயாரிப்பில், சமீபத்திய சென்ஷேசன், குட்டி ஸ்டார் Sofa Boy நடிப்பில், இந்த விடுமுறைக் காலத்தைக் கொண்டாடும் வகையில், குழந்தைகளுக்காக பிரத்யேகமாக, டோங்லி ஜம்போ இயக்கத்தில், இசையமைப்பாளர் சுதர்ஷன் வரிகள் மற்றும் இசையமைப்பில், ஸ்கூல் லீவ் விட்டாச்சு ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது .
சமீபத்தில் ஒற்றை வீடியோ மூலம் இணையம் முழுக்க ஃபேமஸானவர் குட்டி ஸ்டார் Sofa Boy. கண் இமைக்கும் ஸ்பீடில், கடகடவென பேசி, மயக்கும் குரலில் இவர் அசத்திய Sofa விற்பனை வீடியோ பெரும் வைரலாக, ஒரே நாளில் மிகப்பெரியளவில் பிரபலமானார். பொது மக்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்களும் இவரது திறமையைப் பாராட்டி, பல சினிமா வாய்ப்புகளை தந்தனர்.
தற்போது அதன் அடுத்த கட்டமாக சுயாதீனா இசை ஆல்பங்கள் வெளியீட்டில் தொடர்ச்சியாக அசத்தி வரும் Bereadymusic நிறுவனம், Sofa Boy நடிப்பில் குழந்தைகளுக்கான பிரத்தியேக ஆல்பம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.
தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள இந்த ஆல்பம் பாடல் ரசிகர்களின் வரவேற்பில், சார்ட்பஸ்டரில் இடம்பிடித்து வைரலாகி வருகிறது.
Bereadymusic தயாரித்துள்ள இந்த வீடியோ ஆல்பம் பாடலை எழுதி இசையமைத்துள்ளார், இசையமைப்பாளர் சுதர்ஷன். பல வெற்றிபெற்ற ஆல்பம் பாடல்களை உருவாக்கிய டோங்லி ஜம்போ இப்பாடலை வடிவமைத்து இயக்கியுள்ளார். பல டிரெண்டிங் ஆல்பம் பாடல்களுக்கு நடன இயக்கம் செய்துள்ள நடன இயக்குநர் ரிச்சி ரிச்சர்ட்ஸன் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.
முதல்முறையாகத் தமிழில், குழந்தைகள் நடிப்பில், குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருப்பது இப்பாடலின் சிறப்பு என்றாலும், இப்பாடல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படி அமைந்துள்ளது.
இப்பாடலை இங்கே ரசிக்கலாம்
லிங்க் : https://bit.ly/4adhGjH