Breaking
November 19, 2024

சென்னைரேடியல்ரோட்டிலுள்ளகாவேரிமருத்துவமனையில்முதல்சிறுநீரகமாற்றுஅறுவைச்சிகிச்சைவெற்றிகரமாகச்செய்யப்பட்டது


மார்ச் 21, 2024, சென்னை: ரேடியல் ரோட்டில் உள்ளகாவேரி மருத்துவமனை தனது முதல் சிறுநீரக மாற்றுஅறுவைச் சிகிச்சையை பிப்ரவரி 21ஆம் தேதி அன்றுவெற்றிகரமாகச் செய்தது. இது, நோயாளிகளின்வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்தும் சிகிச்சைகளைவழங்கும் மருத்துவமனையின் திறன்களில் மற்றொருகுறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

நாற்பத்திரண்டு வயதான பெண், இறுதி நிலைசிறுநீரக செயலிழப்பு காரணமாக நான்குஆண்டுகளுக்கும் மேலாக டயாலிசிஸ் செய்து வந்தார். அவர், குடும்ப சிறுநீரக நோயால்பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், அவரதுசகோதரருக்கு சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சைக்காக அவரது தாய் ஒரு சிறுநீரகத்தைவழங்கியிருந்தார். அவர் குடும்பத்தில் வேறொருதானம் கொடுப்பவர் இல்லாததால், அவர்மருத்துவமனையின் இறந்த நன்கொடையாளர்காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனையில்இறந்தவரின் சிறுநீரகம் நன்கொடையாகவழங்கப்பட்டதன் காரணமாக, நோயாளிக்கு கடந்தமாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைசெய்யப்பட்டது.

மருத்துவர் முத்துக்குமார் P, மருத்துவர் கார்த்திகேயன்B, மருத்துவர் ராஜா R, மருத்துவர் பிரதீப்குமார் K, மற்றும் மருத்துவர் முத்து வீரமணி உள்ளிட்டபுகழ்பெற்ற மாற்று அறுவைச் சிகிச்சைமருத்துவர்களும், நிபுணர்களும் கொண்ட குழு, இந்தச் செயல்முறையைச் செய்தது. அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு, நோயாளி நன்றாகக்குணமடைந்தார் மற்றும் அவரது சிறுநீரக செயல்பாடுதிறம்பட மீட்டெடுக்கப்பட்டது. மருத்துவமனையில்இருந்து வெளியேறிய பிறகு, அவர் தன் அன்றாடநடவடிக்கைகளை சாதாரணமாகச் செய்யும்வலிமையைப் பெற்றிருக்கிறார். இனி அவருக்குடயாலிசிஸ் தேவையில்லை.

மூத்த ஆலோசகரும், சிறுநீரக மருத்துவரும், மாற்றுஅறுவைச் சிகிச்சை நிபுணருமான மருத்துவர்முத்துக்குமார் P, “இங்கு செய்யப்பட்ட எங்கள் முதல்சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையின் முடிவைக்குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.இறந்த நன்கொடையாளரின் குடும்பத்தின்பெருந்தன்மைக்கு நன்றி கூறிக் கொள்கிறோம். தானம் செய்யப்பட்ட சிறுநீரகத்திற்கு நன்றி, அதனால்ஒரு நபருக்கு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது. மருத்துவர்கள் குழுவின் அர்ப்பணிப்பு, நிபுணத்துவம், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்களின் ஆதரவைநான் பாராட்ட விரும்புகிறேன். நோயாளி நல்லஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் பெறவாழ்த்துகிறேன்” என்றார்.

“இது எங்களின் முதல் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை. இறந்த நன்கொடையாளரின் சிறுநீரத்தைநோயாளிக்கு மாற்றும் சிக்கலான இந்த அறுவைச்சிகிச்சையை, மருத்துவமனையில் உள்ள அதிநவீனவசதிகளாலும், சிறந்த மருத்துவர்களின்குழுப்பணியாலும், திறம்பட சிக்கல்கள் இல்லாமல்செய்ய முடிந்தது” என்றார் சிறுநீரகவியலின் மூத்தஆலோசகரான மருத்துவர் ராஜா R.

ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனையில்உள்ள ‘தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் கிட்னி சயின்சஸ்’, அதிக சவால் மிக்க மாற்று அறுவைச் சிகிச்சை, குழந்தைகளுக்கான மாற்று அறுவைச் சிகிச்சை, ABO-இணக்கமற்ற சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை மற்றும் கீஹோல்/லேப்ராஸ்கோபிக் டோனர்நெஃப்ரெக்டோமி செயல்முறைகளைச் செய்வதற்கானநிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பத்துடன் நன்குபொருத்தப்பட்டுள்ளது.

தனது முதல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையைவெற்றிகரமாக செய்து முடித்த நிலையில், காவேரிமருத்துவமனை, ரேடியல் ரோட்டில், அதிசிறந்தமருத்துவ பராமரிப்பையும் நம்பிக்கையையும்வழங்குவதற்கான தனது பணியைத் தொடர்கிறது.

இது நரம்பியல், இருதயவியல், இரைப்பை குடல், பெண்கள் மற்றும் குழந்தை ஆரோக்கியம், எலும்பியல், மூட்டு புனரமைப்பு, சிறுநீரகவியல், மற்றும் பிற சிறப்புமேம்பட்ட சிகிச்சைகள் மற்றும் அறுவைச் சிகிச்சைமுறைகளை  வழங்கும் ஒரு முன்னணிமருத்துவமனையாகும். அனுபவமிக்க மருத்துவர்கள், 50+ தீவிர சிகிச்சை படுக்கைகள், 20+ பச்சிளம்குழந்தைகளுக்கான படுக்கைகள், 7+ அறுவைசிகிச்சை அறைகள், மேம்பட்ட கேத் லேப்கள், 3T MRI மற்றும் 4K + 3D நியூரோ மைக்ரோஸ்கோப் போன்றகருவிகள் உள்ளிட்ட அதிநவீன மருத்துவவசதிகளுடன், அவசர சிகிச்சை மற்றும்  24/7 டயாலிசிஸ் வசதிகள் கொண்ட மருத்துவமனை ஆகும்.இது உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்குஉலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையைவழங்குகிறது.

Related Post