நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’

நகுல் நடிக்கும் ‘ தி டார்க் ஹெவன்’ என்கிற சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை நடிகர்கள் சசிகுமார், பரத் ,சிபிராஜ் வெளியிட்டுள்ளனர்.

இந்த ‘தி டார்க் ஹெவன்’
திரைப்படத்தை பாலாஜி இயக்குகிறார்.டீம் B புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிக்கிறது.

ஒரு கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை மர்மமான முறையில் கொலை நடக்கிறது.

கொலைகளுக்கிடையே உள்ள தொடர்ச்சியை யாரும் எண்ணிப் பார்க்கவில்லை. ஊரில் யாராவது அது பற்றிப் பேசும் போது மற்றவர்கள்
அதை ஒரு கதை போல எண்ணி நம்பாமல் கடந்து போகிறார்கள்.
அப்படி ஒரு கொலை நடக்கும் போது அங்கே இளம்பாரி என்கிற இன்ஸ்பெக்டர் பணிக்கு வருகிறார் .அவர் கொலைக்கான பின்னணியை ஆராய்கிறார் .அதன் பின்னே ஒளிந்துள்ள மர்மங்களைத் தேடிப் பிடித்து ஆராய்கிறார். கொலைகளில் ஒளிந்துள்ள இருளைக் கண்டு அஞ்சாமல் புலனாய்வு என்கிற விளக்கைக் கொண்டு தீவிரமாகத் தேடுகிறார்.
பல மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன. இப்படி ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராகச் செல்கிற கதை தான் தி டார்க் ஹெவன்.இதில் புலனாய்வு செய்பவராக நகுல் நடிக்கிறார்.ரேணு சௌந்தர் நாயகியாக நடிக்கிறார். இவர் கேரளத்து வரவு.
எதிர்பாராத ஒரு பாத்திரத்தில் இலங்கையிலிருந்து ஒரு நடிகர் நடிக்கிறார். சரண், கேசவன், ஜான் அலெக்ஸ், மனோஜ், ஆண்டனி பிரகன், டேனி தயால், ஆகியோர் பெயர் சொல்லும் படியான பாத்திரங்களில் வருகிறார்கள்.

இப்படத்திற்கு மணிகண்டன் பி.கே.ஒளிப்பதிவு செய்கிறார்.இவர் D3 படத்திற்கு ஒளிப்பதிவு செய்த வர். சக்தி பாலாஜி இசையமைக்கிறார். இவர் ஏற்கெனவே உடன்பால் படத்திற்கு இசையமைத்தவர். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பு செய்கிறார். இவர் D3, லேபில் படங்களில் பணியாற்றியவர்.

இப்படி பல்வேறு திறமையான இளைஞர்கள் இணைந்துள்ள இந்தப் படம், முழு வீச்சில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

இப்படிப்பட்ட கதைகள் மொழி எல்லையைக் கடந்தவை என்பதால் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளில் உருவாகிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் வெளியாகிப் பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது.

Related Post