Breaking
June 5, 2026

April 2026

ராக்கிங் ஸ்டார் யாஷ்: ‘டாக்ஸிக்’ ஒரு புதுமையான கேங்ஸ்டர் சினிமா அனுபவம்!

CinemaCon 2026 விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்” திரைப்படம் !!

CinemaCon 2026 விழாவில் லாஸ் வேகாஸ் நகரில் இந்திய சினிமா உலகளவில் கவனம் ஈர்த்த வேளையில், நடிகர் யாஷ் தனது ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ ( Toxic: A Fairy Tale for Grownups ) படம் குறித்து பகிர்ந்த கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நமித் மல்ஹோத்ரா உடன் கலந்து கொண்ட அவர், இந்த படம் கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படைப்பாக இருக்குமென தெரிவித்தார்.

படத்தைப் பற்றி யாஷ் கூறியதாவது:

“எங்கள் திரைத்துறையில் முதன்முறையாக இந்த படத்தை ஆங்கிலத்திலும் எடுத்துள்ளோம். இந்த படத்தின் கான்செப்ட் பல அடுக்குகள் கொண்டது. இது சாதாரண கேங்ஸ்டர் ஆக்ஷன் படம் அல்ல. வெளிப்படையாக பார்த்தால் இது ஒரு ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் படம் போல தோன்றும். ஆனால் இதில் ஆழமான சைக்கலாஜிகல் அம்சங்களும், மனித வாழ்க்கையின் சுவாரஸ்யமான கோணங்களும் உள்ளன. ஒரு டார்க் கதாபாத்திரத்தை மிகவும் தனித்துவமான முறையில் காட்டியுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்.”

இயக்குநர் கீது மோகன் தாஸ் மற்றும் தொழில்நுட்பக் குழுவுடன் பணியாற்றிய அனுபவத்தைப் பற்றி அவர் கூறுகையில் :

“அது மிகவும் உற்சாகமான அனுபவமாக இருந்தது. எங்கள் இயக்குநர் கீது மோகன் தாஸ் கேங்ஸ்டர் படங்களுக்கு ஒரு புதிய பார்வையை கொண்டு வந்துள்ளார். நான் இதை மிகவும் ரசித்தேன். இதன் காட்சி ரசிகர்களுக்கு ஒருவிருந்தாக இருப்பதோடு, பார்வையாளர்களின் மனதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.”

இந்திய சினிமாவின் வளர்ச்சியைப் பற்றி பேசும்போது.., இந்தியா ஒரு தனி உலகம் போல உள்ளது — சில நூறு கிலோமீட்டர் சென்றாலே மொழியும் கலாச்சாரமும் மாறிவிடும் என்று அவர் கூறினார். டப்பிங் மற்றும் பான்-இந்தியா கதைகள் மூலம் இப்போது அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள பார்வையாளர்களை இணைக்கும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் டாக்ஸிக் Toxic இந்த மாற்றத்தின் பிரதிபலிப்பாகும் — இந்திய உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டாலும், உலகளாவிய பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு படம். அனைவருக்கும் பிடிக்கும் வகையில், அதே சமயம் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் படம் இது,” என்று அவர் முடித்தார்.

கீது மோகன் தாஸ் இயக்கத்தில், கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions ) மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் (Monster Mind Creations) தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் -அப்ஸ்’ ( Toxic: A Fairy Tale for Grownups ) படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் உலகம் முழுவதும் 2026 ஜூன் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது

‘ஜோ’ இயக்குநருடன் கைகோர்க்கும் ஜி.வி.பிரகாஷ்

லார்க் ஸ்டூடியோஸ் – பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணையும் புதிய படம்

லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து இசையமைக்க உள்ளார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

‘கருடன்’ மற்றும் ‘மாமன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படமாக இது உருவாகிறது. இதன் ஆரம்பகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தினை ‘ஜோ’ வெற்றி படத்தினை இயக்கிய ஹரிஹரன் ராம் இயக்கவுள்ளார். அவர் சொன்ன கதையைக் கேட்டுவிட்டு நாயகனாக நடிப்பது மட்டுமன்றி இசையமைத்து, தயாரிப்பாளராக இணையவும் முடிவு செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அவரது நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் இருந்து வேறுபட்டு, முழுக்க வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக தீவிர பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.

’ஜோ’ படத்தில் தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த மாளவிகா மனோஜ், இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் பணிபுரியவுள்ளார். ‘கர்ணன்’, ‘வாழை’ உள்ளிட்ட பல படங்களுக்கு தனது ஒளிப்பதிவின் மூலம் மெருகூட்டியவர் இப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இதற்கான படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

ஹாலிவுட் தரத்தில் சாம் CS இசை – “மகா அவதார் பரசுராம்” மீது உச்ச எதிர்பார்ப்பு!

250+ கலைஞர்களுடன் உலகத் தர இசை – சாம் CS அவர்களின் புதிய முயற்சி !!

சாம் சி.எஸ். இசையில் உருவாகும் “மகா அவதார் பரசுராம்” – புதிய சினிமா அனுபவம்!

இந்திய சினிமாவில் தனித்துவமான பின்னணி இசை மற்றும் சவுண்ட் டிசைன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள இசையமைப்பாளர் சாம் CS தற்போது “மகா அவதார் பரசுராம்” படத்தின் மூலம் மீண்டும் இசை ரசிகர்களுடைய கவனத்தின் மையமாகியுள்ளார்.

“மகாவாதார் நரசிம்மா” படத்தின் மிகப்பெரிய கமர்ஷியல் மற்றும் விமர்சன வெற்றிக்குப் பிறகு, அதன் யூனிவர்ஸை விரிவுபடுத்தும் இந்த புதிய படத்தில் அவர் தொடர்ந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவெனில், சாம் CS வழக்கமான முறையை மாற்றி, கதைக்கு முன்கூட்டியே இசையமைத்து முடித்துள்ளார். பொதுவாக காட்சிகள் தயாரான பிறகே இசை அமைப்பது வழக்கம் என்றாலும், இங்கு அதற்கு மாறாக இசையே முதலில் உருவாக்கப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு அனிமேஷன் மற்றும் காட்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த “music-first” அணுகுமுறை இந்திய சினிமாவில் அரிதாக காணப்படும் ஒன்றாகும். இதனால், இந்த படத்தின் இசை வெறும் பின்னணி இசையாக இல்லாமல், முழுக் கதையின் ஓட்டத்தையும் உணர்வையும் வழிநடத்தும் மைய சக்தியாக மாறியுள்ளது.

மேலும், இந்த படத்தின் தொழில்நுட்ப தரம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. உலகத் தரத்தில் பணியாற்றிய அனுபவமுள்ள ஹாலிவுட் இசைக் கலைஞர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்கள் இதில் இணைந்துள்ளனர். இத்தகைய பிரம்மாண்டமான அணியில் சாம் CS தனது இசையை உலகத் தரத்தில் வடிவமைத்து வருகிறார். மிகப்பெரிய ஆர்கெஸ்ட்ரேஷன், ஆழமான சவுண்ட் லேயரிங் மற்றும் விஷுவலுடன் நேரடியாக இணையும் இசை அமைப்பு ஆகியவை இந்த படத்தின் முக்கிய பலங்களாக இருக்கின்றன.

“மகா அவதார் பரசுராம்” படத்தில் முந்தைய பகுதிகளை விட முழுக்க புதிய விஷுவல் மாடல்கள் மற்றும் மேம்பட்ட கிராஃபிக்ஸ் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கேற்ப, சாம் CS ன் இசையும் புதிய பரிமாணத்தில் உருவாகி வருகிறது.

இப்படத்தில் சாம் CS ஒரு சாதாரண இசையமைப்பாளராக அல்லாமல், கதையின் உணர்வுகளை முன்கூட்டியே வடிவமைக்கும் முக்கிய படைப்பாளராக செயல்படுகிறார். இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், இந்திய சினிமாவில் புதிய முயற்சியாகவும், இசை மற்றும் அனிமேஷன் இணையும் ஒரு வித்தியாசமான அனுபவமாகவும் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சமீபமாக பின்னணி இசைக்கு பெயர் பெற்ற சாம் CS பாடல்களிலும் கலக்கி வருகிறார். அவரது இசையில் சமீபத்தில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தனித்துவமான இசை மற்றும் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் மெலடிகள் மூலம் தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் பல மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பாலிவுட் தொடங்கி பல மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் தற்போது அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

அதில் முக்கியமாக புஷ்கர் காயத்ரி இயக்கும் அடுத்த திரைப்படம், ரவிமோகனின் “கராத்தே பாபு”, கார்த்தியின் “சர்தார் 2” படங்களில் பணியாற்றி வருகிறார். மேலும் இயக்குநர் H. வினோத் மற்றும் நடிகர் தனுஷுடன் பணியாற்றவுள்ளார். மேலும் பாலிவுட், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பல புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் “29” திரைப்படத்தை வரும் மே 8 ஆம் தேதி White Carpet Films தமிழகமெங்கும் வெளியிடுகிறது !!

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள “29” திரைப்படத்தை White Carpet Films K விஜய் பாண்டி தமிழகமெங்கும் வெளியிடுகிறார் !!

White Carpet Films K விஜய் பாண்டி வெளியீட்டில் “29” திரைப்படம் தமிழகமெங்கும் வெளியாகிறது !!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் தரமான தயாரிப்புகளையும் வழங்கி முன்னேறி வரும் தயாரிப்பு நிறுவனமாக White Carpet Films திகழ்கிறது. குறுகிய காலத்திலேயே தனித்துவமான படைப்புகளால் கவனம் ஈர்த்துள்ள இந்த நிறுவனம், தற்போது தனது அடுத்த முக்கிய வெளியீடாக “29” திரைப்படத்தை ரசிகர்களுக்கு கொண்டு வரத் தயாராகியுள்ளது. இத்திரைப்படம் வரும் மே 8 2026 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடப்படவுள்ளது. இந்த வெளியீட்டை இந்நிறுவனம் சார்பில் K விஜய் பாண்டி முன்னின்று மேற்கொள்கிறார்.

White Carpet Films நிறுவனம் இதற்கு முன்பு திரில்லர் வகையைச் சேர்ந்த “தேஜாவு” திரைப்படத்தையும், முழுக்க கமர்ஷியல் அம்சங்களுடன் உருவான “வித்தைக்காரன்” படத்தையும் தயாரித்து கவனம் பெற்றது. அதேசமயம், விநியோகத் துறையிலும் தங்களது திறனை நிரூபித்துள்ள இந்த நிறுவனம், அஜித் நடித்த “துணிவு” மற்றும் “ஆர் யூ ஓகே பேபி” போன்ற படங்களை விநியோகம் செய்துள்ளது. தயாரிப்பிலும், விநியோகத்திலும் சமநிலையை பேணிக் கொண்டு வளர்ந்து வரும் சிறந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக White Carpet Films இன்று திகழ்கிறது.

“29” திரைப்படம் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. “மேயாத மான்”, “ஆடை” போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியதன் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் ரத்னகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். 2000களின் காதலை மையப்படுத்திய ஒரு உணர்ச்சிப்பூர்வமான படைப்பாக, அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தில் நாயகனாக விது நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான “ரெட்ரோ” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அவர், இந்த படத்தில் முழுமையான நாயகனாக புதிய முகமாக ரசிகர்களை கவர இருக்கிறார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2000ம் ஆண்டுகளின் காதல் உணர்வுகளை, அந்த காலத்து நினைவுகளையும் மனநிலையையும் அழகாக பிரதிபலிக்கும் விதத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

மொத்தத்தில், புதிய முயற்சிகளுக்கும் தரமான கதை சொல்லலுக்கும் முக்கியத்துவம் அளித்து வரும் White Carpet Films நிறுவனம், “29” திரைப்படத்தின் மூலம் தனது வளர்ச்சிப் பாதையில் இன்னொரு முக்கியமான படியை எடுத்து வைக்கிறது. காதல், நினைவுகள் மற்றும் உணர்ச்சிகளை இணைக்கும் இந்த படம், மே 8 அன்று திரையரங்குகளில் ரசிகர்களுக்கு ஒரு இனிய அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூரி ஜெகன்நாத் 26 ஆண்டுகள் திரைப்பட பயணம் நிறைவு –“ஸ்லம் டாக்” ஒரு ஸ்பெஷல் படம் விரைவில் திரையில் – விஜய் சேதுபதி பாராட்டு! !!

26 ஆண்டுகள் திரைப்பயணத்தை நிறைவு செய்த பூரி ஜெகன்நாத் – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாராட்டு !!

முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா ஆக்சன் திரில்லர் “ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது அனைத்து மொழிகளிலும் இறுதிக்கட்ட பணிகள் (post-production) வேகமாக நடைபெற்று வருகின்றன. “33 டெம்பிள் ரோடு” என்ற திகில் நிறைந்த டேக் லைனுடன் உருவாகும் இந்தப் படம், அதன் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தை Puri Connects நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்க, JB Mohan Pictures நிறுவனத்தின் சார்பில் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணைந்து தயாரிக்கிறார்.

பூரி ஜெகன்நாத் தனது இயக்குநர் பயணத்தை பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்த “பத்ரி” படத்தின் மூலம் தொடங்கினார். அந்த படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இப்போது 26 ஆண்டுகளை அவர் நிறைவு செய்துள்ளார்.

இந்த சிறப்பு தருணத்தில், விஜய் சேதுபதி சமூக வலைதளத்தில் தனது இயக்குநருக்கு மனமார்ந்த பாராட்டுகளை பகிர்ந்துள்ளார்:

“இந்த மனிதரின் பயணம் எவ்வளவு அற்புதமானது 26 ஆண்டுகள் என்பது ஒரு மைல்கல் மட்டுமல்ல; தைரியம், நம்பிக்கை, மற்றும் அச்சமற்ற குரல் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மரபு.

அன்புள்ள பூரி சார், #ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு படத்தில் உங்களுடன் வேலை செய்தது மிகப் பெரிய மகிழ்ச்சி. நடிகர்களாக நாங்கள் எப்போதும் எங்களை நம்பி, எங்களது கம்ஃபர்ட் ஜோனை தாண்டி தள்ளும் இயக்குநர்களை தேடுகிறோம்; நீங்கள் அதை மிகவும் எளிதாக செய்கிறீர்கள்.

இந்த படம் நிச்சயம் எங்களுக்கெல்லாம் ஒரு மிகவும் சிறப்பான படமாக நினைவில் இருக்கும் என்று நான் நம்புகிறேன். உங்கள் பயணம் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகள். என்றும் அன்புடன் ” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் சம்யுக்தா விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க, தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். மேலும் பிரம்ஹாஜீ மற்றும் VTV கணேஷ் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

அர்ஜுன் ரெட்டி, அனிமல் போன்ற படங்களில் துடிப்பான இசையமைப்பை வழங்கிய தேசிய விருது பெற்ற ஹர்ஷவர்தன் ராமேஷ்வர், “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” படத்திற்கு இசையமைக்கிறார்.

“ஸ்லம் டாக்” படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது. தமிழ்நாடு தேர்தல் முடிந்த பின் படத்தின் புரமோஷன் பணிகளை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

நடிப்பு: விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய் குமார்

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத்,சார்மி கௌர் , JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா
வழங்குபவர் : சார்மி கௌர்
தயாரிப்பு நிறுவனங்கள்: Puri Connects
CEO : விஷு ரெட்டி
இசை: ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா

அட்லீ- பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. மகன் ‘மீர்’ உற்சாக அறிவிப்பு

திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் அவர்களது குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினர் இணைந்துள்ளார்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்களது மகன் மீர் மிகவும் நெகிழ்ச்சியான முறையில் தனது பெற்றோரின் சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.‌ தனக்கு ஒரு தங்கை பிறந்திருப்பதாகவும் தான் இப்போது ஒரு ‘அண்ணன்’ ஆகிவிட்டதாகவும் அதில் அவர் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பிற்கு நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடமிருந்து அன்பும் வாழ்த்துக்களும் குவிய தொடங்கி உள்ளன.

இந்த குழந்தையின் வருகை அக்குடும்பத்திற்கு அளவற்ற மகிழ்ச்சியை கொண்டு வந்துள்ளதுடன் அவர்களது வாழ்வில் ஒரு அழகான புதிய அத்தியாயத்தையும் தொடங்கியுள்ளது.

இந்த சிறப்பான தருணத்தை நெகிழ்ச்சியுடன் வரவேற்கும் அட்லீ மற்றும் பிரியா தம்பதிக்கு.. வாழ்த்துக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027 ஜனவரி 21 வெளியீடு !! ; இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் பிரம்மாண்ட காதல் காவியம்!

இந்தியாவின் மிகப்பெரிய காதல் காவியம் “லவ் & வார்”. 2027 ஜனவரி 21 வெளியீடு !!

இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027 குடியரசு தின வார இறுதியை மையமாகக் கொண்டு, உலகம் முழுவதும் 2027 ஜனவரி 21 வியாழக்கிழமை, அன்று வெளியாகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த காதல் திரைப்படத்தில், ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் இணைந்து நடிக்கின்றனர். வலுவான உணர்ச்சிகள் நிரம்பிய ஒரு தீவிரமான காதல் காவியமாக இப்படம் உருவாகியுள்ளது.

பன்சாலியின் தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் ஆழமான கதை சொல்லும் முறைப்படி, இந்த படம் பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய காட்சி அனுபவத்தையும், ஆழமான உணர்ச்சியையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரம்மாண்டமான அளவில் உருவாகும் “லவ் & வார்”, சஞ்சய் லீலா பன்சாலியின் மிகபெரும் கனவுப்படைப்பாக உருவாகி வரும், பிரம்மாண்டமான காதல் படைப்பாகும். கதை அமைப்பும், தீவிரமான உணர்வுகளும், இதை இந்தியாவின் மிகப்பெரிய காதல் காவியங்களில் ஒன்றாகவும், இந்திய சினிமாவின் மிகப்பெரிய காதல் காட்சி அனுபவங்களில் ஒன்றாகவும் நிலைநிறுத்துகிறது.

“லவ் & வார்” படம், தமிழ் ,இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்தியாவெங்கும் பிரம்மாண்டமாக வரும் 2027 ஜனவரி 21 அன்று வெளியாகவுள்ளது.

சீயான் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்ட “சீயான் 63” புதிய படம் !!

சீயான் விக்ரம் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படம் ஸ்டைலீஷ் புரோமோ வீடியோவுடன் அறிவிக்கப்பட்டது !!

சீயான் 63 ஸ்டைலீஷ் புரோமோ வீடியோவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது !

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சீயான் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புதிய படம் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார்.

இந்த படத்தின் அறிவிப்பு, சீயான் விக்ரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒரு ஸ்டைலிஷ் புரோமோ வீடியோவுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புரோமோ வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இப்போதே ரசிகர்கள் மத்தியில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை பெருமளவில் உயர்த்தியுள்ளது.

தனித்துவமான கதைக்களம் மற்றும் ஸ்டைலிஷ் திரைக்காட்சிகளின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். 2016 ல் சீயான் விக்ரம் கூட்டணியில் இவர் இயக்கிய “இருமுகன்” படம், ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது இந்த கூட்டணி 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் TG தியாகராஜன் வழங்க, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரிக்கின்றனர்.

தனித்துவமான பின்னணி இசைக்காக புகழ்பெற்ற சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இவரின் இசை இந்த படத்தின் மாஸ் மற்றும் எமோஷனல் அம்சங்களை மேலும் உயர்த்தும்.

அனுபவமிக்க ஒளிப்பதிவாளர் R. D. ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குநராக சூர்யா ராஜீவன் பணியாற்றுகிறார். வசனங்களை ஷான் கருப்புசாமி எழுதுகிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன்,
படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி ஆகியோர் பணியாற்றுகின்றனர். இவர்களின் தொழில்நுட்ப பங்களிப்பு படத்தின் காட்சியமைப்பை உலகத் தரத்தில் கொண்டு செல்லும்.

“சீயான் 63” படம், சீயான் விக்ரமின் திரை வாழ்க்கையில் இன்னொரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் பெயர் பெற்ற அவர், இந்த படத்திலும் புதிய பரிமாணத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார் என நம்பப்படுகிறது.

மொத்தத்தில், வெற்றிகரமான கூட்டணி, திறமையான தொழில்நுட்பக் குழு மற்றும் பெரிய அளவிலான தயாரிப்புடன் உருவாகும் இந்த “சீயான் 63” பட அறிவிப்பு, அவரது பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

நடிகர் :

சீயான் விக்ரம்

தொழில்நுட்பக் குழு

எழுத்து & இயக்கம் : ஆனந்த் சங்கர்
தயாரிப்பு நிறுவனம் : சத்ய ஜோதி பிலிம்ஸ்
வழங்குபவர் : TG.தியாகராஜன்
தயாரிப்பாளர்கள் : செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன்
இணை தயாரிப்பு : G. சரவணன் மற்றும் சாய் சித்தார்த்
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : R.D. ராஜசேகர் ISC
தயாரிப்பு வடிவமைப்பு : ராஜீவன்
வசனம் : ஷான் கருப்புசாமி
படத்தொகுப்பு : ரேமண்ட் டெரிக் கிராஸ்டா
கலை இயக்கம் : சூர்யா ராஜீவன்
ஆடை வடிவமைப்பு : பூர்ணிமா ராமசாமி

Link : https://www.youtube.com/watch?v=VL34SYoMS_g

பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார் பினு. டி. ஜான் போஸ்கோநடிப்பிலும் படிப்பிலும் அசத்தும் சிறுவன்!

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கிய ‘டீன்ஸ்’ படத்தில் சர்வேஷ் கதாபாத்திரத்தில்
நடித்த பினு. டி. ஜான் போஸ்கோ பத்தாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்பிற்கு முதல் நிலை மதிப்பெண்களுடன் வெற்றிகரமாகப் பயணம் செய்வதுடன் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் .

இவர் சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல் மற்றும் ஜி5 நிறுவனம் தயாரிக்கும் இணையத்தொடர்களுக்கு படத்தொகுப்பாளராகப் பணி புரிந்த பிஜு V டான் போஸ்கோவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு படத் தொகுப்பாளரின் மகன் நடிப்பிலும் படிப்பிலும் கவனம் செலுத்தி வெற்றிப் பாதையில் செல்வதை இயக்குநர்கள்..
இயக்குனர் பார்த்திபன், ரமேஷ் கண்ணா, எஸ் .ஆர். பிரபாகரன், யூகி சேது, இசைக் கலைஞர் ட்ரம்ஸ் சிவமணி, ஸ்ரீகாந்த் தேவா, வடிவேல் முருகன், ஜாக்குவார் தங்கம், போன்ற திரைப் பிரபலங்கள் பாராட்டி வாழ்த்தி இருக்கிறார்கள்.

“கான் சிட்டி” முதல் சிங்கிள் வெளியீடு…, வைரலாகும்  கொரியன் ஃபேமிலி சாங்  “ரா ரா ரங்கையா” குத்துப்பாடல்!

“ரா ரா ரங்கையா” ரிலீஸ்… ரசிகர்களை ஆட வைக்கும் “கான் சிட்டி” குத்துப்பாடல்!

கொரியன் ஃபேமிலி சாங் வைப்ஸ்… “கான் சிட்டி” முதல் சிங்கிள் கலக்கல் ஹிட்!

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்த பாடலை வங்கல் புள்ள, விக்கி, சுப்லாஷினி, லீலா ஆகியோர் உற்சாகமாக பாடியுள்ளனர். “கொரியன் ஃபேமிலி சாங்” என சுவாரஸ்யமான தலைப்புடன் வெளியாகியுள்ள இந்த பாடல், “ரா ரா ரங்கையா” என்ற வரியுடன் துவங்கி, நம்மூர் தரைலோக்கல் குத்துப்பாணியில் முழுக்க முழுக்க உற்சாகத்தைக் கொட்டுகிறது.

பாடலின் இசை மட்டுமல்லாமல், காட்சியமைப்பும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் சேர்ந்து ஆடும் குத்தாட்டம், பாடலுக்கு மேலும் உயிரூட்டுகிறது. திரையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தன்மையுடன் தெரியும் வகையில் அமைந்துள்ள இந்தப் பாடல் ரசிகர்கள்  எதிர்பார்க்காத பல ஆச்சரியங்களை அள்ளித் தெளித்து, வெளியான வேகத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு சுவாரஸ்யமாக நகர்கிறது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி,  குழந்தை நட்சத்திரம்  அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். (மேலும் விரிவான கதாப்பாத்திர பட்டியல் இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது.)

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இந்த படம், மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் பெரும் தொகைக்குக் கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் பெரும் சுவாரஸ்யங்களை தந்து வரும் நிலையில்,  முதல் சிங்கிள் மூலம் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ள “கான் சிட்டி”, விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Link :  https://youtu.be/e-uMIm-Yxhk?si=JUqDyHJgLi691ftE