பிகே7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இயக்கத்தில் வெளியான ‘ஜாக்கி’ திரைப்படம் நான்காவது வாரமாக வெற்றிநடை போடுகிறது
ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளியுள்ள ‘ஜாக்கி’ மதுரையில் நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டு உருவான முதல் படம் என இயக்குநர் பெருமிதம்
மழைக்காடுகளில் நடத்தப்படும் சவாலான மட் (Mud) ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து இந்தியாவில் முதல் முறையாக உருவான ‘மட்டி’ திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி பாராட்டுகளைப் பெற்ற டாக்டர் பிரகபல் இயக்கத்தில் அடுத்து உருவான திரைப்படம் ‘ஜாக்கி’. கடந்த ஜனவரி 23ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஜாக்கி’ நான்கு வாரங்களாக வெற்றிநடை போட்டு வருகிறது.
பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கியுள்ள ‘ஜாக்கி’, மதுரையை களமாகக் கொண்டு நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டு உருவான முதல் படம் ஆகும். மண் மணத்துடனும் மண்ணின் மைந்தர்களின் குணத்துடனும் இப்படம் திகழ்கிறது.
ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுகளை ஜாக்கி அள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய இயக்குநர் டாக்டர் பிரகபல், “இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் சில தினங்களை கடப்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் ‘ஜாக்கி’ நான்கு வாரங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். தரமான படங்களை என்றும் ஆதரிக்கும் தமிழ் ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி,” என்றார்.
‘ஜாக்கி’ திரைப்படத்தில் இயக்குநர் டாக்டர் பிரகபல்லின் முதல் படமான ‘மட்டி’ திரைப்படத்தில் நடித்த யுவான் கிருஷ்ணா மற்றும் ரிதான் கிருஷ்ணாஸ் முக்கிய வேடங்களில் நடிக்க, அம்மு அபிராமி கதை நாயகியாக நடித்துள்ளார். திரைப் பிரபலங்கள் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைக்க, உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஸ்ரீகாந்த் மேற்கொண்டார். கிரியேட்டிவ் ப்ரொடியூசராக ஆர்.பி. பாலா பணிபுரிந்துள்ளார். புரொடக்ஷன் கன்ட்ரோலர்: எஸ். சிவகுமார், கலை இயக்குநர்: சி. உதயக்குமார், ஆடியோகிராபி: எம்.ஆர். ராஜாகிருஷ்ணன், சண்டை பயிற்சி: ஜாக்கி பிரபு, உடைகள்: ஜோசுவா மேக்ஸ்வெல் ஜே, ஒப்பனை: பாண்டியராஜன், கலரிஸ்ட்: ரங்கா.
பிகே7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இயக்கத்தில் யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள ‘ஜாக்கி’ தொடர்ந்து நான்கு வாரங்களாக திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.
ராயாவின் வருகை உறுதியானது : ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீட்டு தேதி போஸ்டருடன் அறிவிப்பு
‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் டீசர் பிப்ரவரி 20, காலை 9.35 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
தனித்துவமான போஸ்டர், படத்தின் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் வன்முறையும் இருண்மையும் நிறைந்த உலகத்தை காட்டுகிறது. ரத்தம் கசிந்த பனிப்புயல் போன்ற சூழலில், நடுவில் ராயாவாக யாஷ் நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. முகம் தெளிவாக தெரியாத நிலையில், நேரடியாக பாட்டிலிலிருந்து குடிக்கும் அவர், இரத்தம் தோய்ந்த தரையில், கண்களுக்கு எட்டாத வன்முறையின் சிதைவுகளால் சூழப்பட்ட நிலையில், ஆபத்தான ஒரு பிரபஞ்சத்தில் நிற்பதாக அந்த போஸ்டர் காட்டுகிறது.
இந்த டீசர் அறிவிப்பு, “டாக்ஸிக்” திரைப்படம் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக தொடர்ந்து இருப்பதற்கான மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. கதாபாத்திரங்களை ஒவ்வொரு கட்டமாக வெளியிடும் உத்தியும், திட்டமிட்ட மார்க்கெட்டிங் உத்திகளும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இதுவரை கதையைப் பற்றிய விவரங்கள் மிகக் குறைவாகவே வெளியிடப்பட்டுள்ளதால், படத்தின் காட்சியமைப்பு மற்றும் கதாபாத்திரங்களின் உறவுகள் குறித்து ரசிகர்கள் யூகிக்கத் தொடங்கியுள்ளனர். பிப்ரவரி 20, இந்த உலகத்துக்குள் முதல் நெருக்கமான பார்வை கிடைக்கும் நாளாக பார்க்கப்படுகிறது. கதையின் தாக்கத்தை காக்கும் வகையில், டீசர் ஒரே மொழியில் வெளியிடப்படவுள்ளது. இதனால் படத்தின் அழுத்தமான காட்சிகளும் சூழலும் தான் நேரடியாக ரசிகர்களிடம் பேசும்.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பின் ஒரு பகுதி, கவனமாக வெளியிடப்பட்ட நட்சத்திர பட்டாள அறிவிப்பிலிருந்து உருவானது. கியாரா அத்வானி, உணர்ச்சி சுமை கொண்ட கதாப்பாத்திரத்தில், நாடியாவாக நடித்துள்ளார். ஹூமா குரேஷி, அதிகாரமும் அபாயமும் கலந்த எலிசபெத் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். நயன்தாரா, கங்காவாக அதிகாரமிக்க கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தாரா சுதாரியா, விரும்பத்தக்க மற்றும் புரிந்து கொள்ள முடியாத ரெபெக்காவாகவும், ருக்மிணி வசந்த் அதிகாரத்தை வெளிப்படுத்தும் மெலிசாவாகவும் நடித்துள்ளனர். இறுதியாக வெளியான கதாபாத்திர அறிமுகம் யாஷ். ராயாவாக, அவர் கூறும் “Daddy’s home…” என்ற வசனம், கதையில் அவரது வருகையையும், திரையரங்குகளுக்கு அவர் திரும்பி வருவதை அறிவிக்கும் ஒரு அறிவிப்பாகவும் அமைந்துள்ளது.
யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுத, கீது மோகன் தாஸ் இயக்கிய ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இது படத்தின் உலகளாவிய லட்சியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி- இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்- படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்ணி – தயாரிப்பு வடிவமைப்பாளர் T.P.அபித்- ஆகியோர் அடங்கிய ஒரு வலிமையான தொழில்நுட்பக் குழுவையும் இந்தப் படம் கொண்டுள்ளது. ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெரி ( ஜான் விக்) (John Wick) – தேசிய விருது பெற்ற அதிரடி சண்டை இயக்குநர்களான அன்பறிவ்- கெச்சா காம்பக்டி (Kecha Khamphakdee) ஆகியோரின் வடிவமைப்பில் அதிரடியான சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் படமாக்கப்பட்டுள்ளன.
கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions )மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் (Monster Mind Creations)ஆகிய நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட ‘டாக்ஸிக்’ திரைப்படம் – ஈத், உகாதி, குடி பட்வா, ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது
சமூக அக்கறை மிக்க ஒரு படைப்பாகவும், ரசிகர்களை ரசிக்க வைத்த படைப்பாகவும் பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில்…
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,
மறுபடியும் நன்றி சொல்ல வந்திருக்கிறேன் இம்முறை மை லார்ட் படத்திற்காக…. சில படங்கள்…நாம் ஒரு பணி எடுத்திருக்கிறோம் ,நாம் அதை நன்றாக செய்ய வேண்டும் என தோன்றும். ஒரு சில படங்கள் மட்டுமே இது வெறும் படம் கிடையாது ஒரு இசையமைப்பாளராகவும் சரி ஒரு மனிதனாகவும் இது நமக்கு ஒரு பெரிய பொறுப்பு… இதில் வேலையை மட்டும் முடித்தால் பத்தாது, இதை நாம் பதிவாகவும் அமைக்க வேண்டும் என்பது இரு பொறுப்புகள் ஆகிவிடும். எப்போதுமே ராஜூ முருகன் சார் எனக்கு பாட்டு எழுதும் போதோ இல்லை அவரோட படத்துக்கு நான் இசையமைக்கும்போதோ அந்தப் பொறுப்பை நான் உணர்ந்திருக்கிறேன்.
அவர் ஒரு ஸ்பெஷலான கிரியேட்டர், மை லார்ட் படத்துல ஒரு புதுவிதமான சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
அவருக்கே உரித்தான பொலிட்டிக்கல் satire ஐ ரொம்ப ஜனரஞ்சகமாக எல்லோரும் ரசிக்கும்படி கொண்டு வந்தது சர்ப்ரைசிங்கா இருந்தது.மை லார்ட் படத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி.டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்குப் பிறகு இந்த படம் தொடர்ச்சியாக சசி சாருடன் வெற்றியில் பங்கேற்பது ஒரு ஸ்பெஷலான தருணமாய் உணர்கிறேன்.
அம்பேத் சாருடன் நேரில் சந்தித்து பேசியதை விட போனில் பேசியது தான் அதிகம்… இந்தப் படம் சமூகத்துக்கு ஒரு நல்ல விஷயத்தை செய்யக்கூடிய படம் . இந்தப் படத்தை நான் எடுத்து பண்றேன்னு அவர் எடுத்த அந்த முயற்சி இன்று வெற்றி என்ற புள்ளியில் வந்து நின்றதற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சத்யராஜ் சாருக்கு மை லார்ட் படம் கண்டிப்பாக ஒரு மைல்கல்லாக இருக்கும் என நம்புகிறேன். சத்யராஜ் சார் மியூசிக் ல சில இன்புட்ஸ் கொடுத்தாரு. படங்களின் கலெக்ஷனை நாம் கம்பேர் பண்ணலாம் ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே காலத்தைத் தாண்டி மனதில் நிற்கும். அப்படிப்பட்ட ஒரு படமாக மை லார்ட் இருக்கும். இப்படத்தில் வேலை செய்த இசை கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.நல்ல படங்களுக்கு ஒரு பலமாக இருந்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ரொம்ப நன்றி
தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசியதாவது..,
படம் வெளியாகி இவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் ‘தேங்க்ஸ் மீட் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று சொல்லி, எனக்கு ஒரு பெரிய ஊக்கமும் ஆக்கமும் கொடுத்தவர் சசிகுமார் சார். இந்தப் படம் ரிலீஸுக்கு முன்னாலிருந்து இன்று வரைக்கும், ‘இந்த படத்தை மக்களிடம் எப்படியாவது கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தோடு தொடர்ந்து உழைத்து வருகிற இந்த மாதிரியான ஹீரோவை, உண்மையிலேயே நான் இதுவரை பார்த்ததே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல; மனிதநேயமும், மனிதாபிமானமும் நிறைந்த ஒரு அற்புதமான மனிதர் சசிகுமார் சாருக்கு என்னோட மனப்பூர்வமான நன்றிகள். அதேபோல், இந்த படத்தின் இயக்குநர்—என்னோட அருமையான நண்பர் ராஜுமுருகன் சாருக்கும் என் நன்றி. இந்த படத்தைப் பற்றி முன்வந்து பேசின வார்த்தைகளில் மட்டும் இல்லாமல், உள்ளத்திலேயே மனிதநேயத்தை சுமந்து பேசின—அருமையான நண்பர் ஷான் ரோல்டன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், ‘மை லார்ட்’ ஒரு நல்ல படம், சிறந்த படம், பிரியமான படம் என்று மக்களிடம் தொடர்ந்து கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பத்திரிகை நண்பர்களுக்கும் என்னோட அன்பும், மரியாதையும், வணக்கமும். இப்படம் எனக்கு ஜிப்ஸியை விட இந்தப் படம் எனக்கு வெற்றி படம்தான்.நான் திருப்தியாக இருக்கிறேன்.எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் ராஜுமுருகன் பேசியதாவது..,
இந்த படத்தை சரியாகப் புரிந்து கொண்டு, அது உங்களுக்குள் ஏற்படுத்திய பாதிப்புகளை தொடர்ந்து எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
‘மை லார்ட்’ படத்தை தொடங்குவதற்கு முதன்மையான காரணமாக இருந்த அம்பேத்கர் சாருக்கு என் சிறப்பு நன்றிகள். ஷான் —தொடர்ந்து ஒரு வாத்தியார் மாதிரி, பல விஷயங்களை என்னோடு பகிர்ந்து கொண்டு, என்னுடைய இசை பயணத்திலும் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருவதற்காக அவருக்கும் என் நன்றிகள். எடிட்டர் சத்யராஜ் சார், நீரவ் ஷா சார், இந்த படத்தில் வேலை பார்த்த அத்தனை பேருக்கும் என் மனப்பூர்வமான நன்றி.நான் சினிமாவுக்கு வந்ததிலிருந்து இன்றுவரை, இந்த உலகம் ரொம்ப மாறியிருக்கிறது. ஒரு படத்தை எழுதத் தொடங்கும் இடத்தில் ஒரு எழுத்தாளரின் வேலை ஆரம்பிக்கிறது. ஷூட்டிங் நேரத்தில் இயக்குநரின் வேலை வருகிறது. அதற்குப் பிறகு ரிலீஸ், போஸ்ட்-புரடக்சன் என்று தொடர்கிறது. ஆனால் இன்றைக்கு, படம் ரிலீஸான பிறகும்—ப்ரமோஷன் வரைக்கும்—நிறைய விஷயங்களை நாமே கவனிக்க வேண்டிய ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. ஒரு ரைட்டிங்குக்கு எவ்வளவு உழைப்போ, ஒரு படத்தை உருவாக்க எவ்வளவு உழைப்போ, அதே அளவு உழைப்பை இன்றைக்கு அந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவும் கொடுக்க வேண்டியிருக்கிறது.நான் அடிப்படையில் ஒரு ஜர்னலிஸ்டாக இருந்ததால், முன்பெல்லாம் ப்ரமோஷன், இன்டர்வியூஸ் இதிலெல்லாம் அதிக ஆர்வம் காட்டியதே இல்லை. ஆனால் இப்போ அது ஒரு பெரிய சவாலாக மாறியிருக்கிறது
ஒரு படத்துக்கு எப்படி முழு மனசோடு வேலை செய்கிறோம், அதே தீவிரத்தோடு ப்ரமோஷனுக்கும் வேலை பண்ண வேண்டிய ஒரு சூழல் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இது நல்லதா, கெட்டதா என்ற விவாதத்தை தாண்டி—இந்த உலகம் மாறிக்கிட்டே இருக்கிறது என்பதையும், அதுக்கேற்ற மாதிரி நாமும் மாற வேண்டியிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
நாம் படத்தில் எதைப் பற்றி பேசினாலும், அந்த படத்தை எடுத்துக் கொண்டு போய் ஆடியன்ஸிடம் சேர்ப்பது ஒரு மிகப் பெரிய வேலை. அந்த இடத்தில் உறுதுணையாக நிற்பது ஊடகங்களான நீங்கள் தான்.உங்களுடைய பாசிட்டிவான அணுகுமுறை, பாசிட்டிவான வார்த்தைகள் எப்போதுமே எனக்கு பெரிய ஊக்கமாக இருந்திருக்கிறது. அதற்காக உங்களுக்கெல்லாம் என் மனப்பூர்வமான நன்றி. இந்த படைப்பில் எப்போதும் கூடவே இருந்து துணைநின்ற ஜேம்ஸ் சார், திங்க் மியூசிக் சந்தோஷ் சார்,இந்த படம் உருவாகுவதற்கு உறுதுணையாக இருந்த இரா. சரவணன் உட்பட அத்தனை நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.
நடிகர் சசிக்குமார் பேசியதாவது..,
இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததற்கு முதலில் உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி.என்னுடைய நடிப்பை எல்லாருமே பாராட்டியதை கேட்கும்போது எனக்கு உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்னோட நடிப்பும், சைத்ரா நடிப்பும், அதுக்கப்புறம் குருசசோமசுந்தரம் உள்ளிட்ட பல சிறிய சிறிய கேரக்டர்ஸும் — முதல் காட்சியிலிருந்தே பாராட்டப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
ஒரு நடிகராக, என்னை இன்னொரு விதமாக அழகாக மாற்றிக் காட்டியிருக்கிறார் ராஜுமுருகன். அதுக்காக அவருக்கு நான் மனதார நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார், எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லக்கூடிய அவரது மனது தான் பெரிய விஷயம். ராஜு முருகன் கொடுத்து வைத்தவர். ஒரு நல்ல இயக்குநரும், ஒரு நல்ல தயாரிப்பாளரும் எப்போதும் தோற்றுப் போகக் கூடாது. எப்போதும் ஜெயிக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம்.
முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது, ஆனால் எனக்கு தைரியமாக இருந்தது. ஏனென்றால் எல்லாருமே படம் நல்ல படம் எனச் சொன்னார்கள். அது கண்டிப்பா மக்களிடம் இன்னும் போய் சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது நடந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி. ‘அயோத்தி’படத்தில் நான் பார்த்த அனுபவம் தான் எனக்கு இந்த தைரியத்தை கொடுத்தது. அந்தப்படமும் இரண்டாவது, மூன்றாவது வாரத்தில் தான் கலெக்ஷனை எடுத்தது. அதே மாதிரி இந்தப் படமும் கண்டிப்பாக எடுக்கும் என்ற நம்பிக்கை மக்கள்மேல் இருக்கிறது. இப்படம் போய் சேர வேண்டிய இடத்திற்கு கண்டிப்பா போய்ச் சேரும். படம் பார்த்து விஜய் டிவி ரிலீஸுக்கு அப்புறம் வாங்கியதும், ஓடிடியிலும் வாங்கியதும்—இதெல்லாமே ஒரு பெரிய வெற்றிதான். அதே போல சூர்யா சார் படம் பார்த்து, இந்த படத்தை ப்ரெசென்ட் பண்ணுறோம் என சொன்னதுக்கும், அவருக்கும் அவரோட டீமுக்கும் என் மனப்பூர்வமான நன்றி. சந்தோஷ், ஜேம்ஸ்—ஆரம்பத்திலிருந்தே கூடவே நின்ற எல்லாருக்கும் நன்றி. ஷான் மியூசிக் படம் முடிந்தும் மனதுக்குள் நின்றது. சத்யராஜ் எடிட்டிங் நன்றாக இருந்தது. இறுதியாக, எங்களை வாழ்த்திய, எங்களை பாராட்டிய அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”
மை லார்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது
இப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனித்துள்ளார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைத்துள்ளனர்.
மூன்வாக் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏத்து’ வீடியோ பாடல் இன்ஸ்டாகிராமை அதிர வைத்துள்ளது. இது ஒரு பெரிய நடன ட்ரெண்டாக மாறி, உலகம் முழுவதும் வேகமாக வைரலாகி வருகிறது.
ஆப்பிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ட்ரெண்டில் உற்சாகமாக கலந்து கொண்டு, பாடலின் உணர்வை காப்பாற்றியபடி அதிக ஆற்றலுடன் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர்.
Yethu பாடல் வெளியான இரண்டு வாரங்களிலேயே யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. மேலும், சர்வதேச விமர்சகர்கள் Yethu பாடலை பார்த்து ஆர்வத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது சமூக ஊடகங்களில் “Yethu” பாடலை கொண்டு செய்யப்பட்ட ரீல்கள் 100 மில்லியன் பார்வைகளை கடந்து படுவைரலாகி வருகிறது.
ஜனவரி 27ஆம் தேதி தொடங்கிய இந்த ட்ரெண்ட், இன்றளவும் சற்றும் குறையாமல் தொடர்ந்து வேகமெடுத்து வருகிறது. நடனக் கலைஞர்களைத் தாண்டி, இசைக்கலைஞர்கள் மற்றும் வாத்தியக்கலைஞர்களும் “Yethu” பாடலுக்கு ரீல்ஸ் செய்து அசத்தி வருகின்றனர்.
ஆப்பிரிக்காவின் பிரபலமான “Hypers Kids Africa” என்ற குழந்தைகள் இசைக்குழு “Yethu” பாடலுக்கு நடன ரீமேக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வைரல் அலைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் A R ரஹ்மான் அவர்களே அந்த வீடியோவில் “Thank you for the love. You guys are terrific” என கமெண்ட் செய்துள்ளார். அதற்கு பதிலளித்த குழந்தைகள் குழு, “Happy to see your comment. We love you too” என்று தெரிவித்துள்ளது. இந்த தருணம் ரசிகர்கள் மற்றும் இப்பாடலுக்கு மேலும் reels தயாரிப்பவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி, இப்பாடல் கலாச்சாரம் தாண்டி எல்லோராலும் கொண்டாடப்படுகிறது என்பதை உறுதிப்படுத்திருக்கிறது
“Yethu” பாடலில் நடனப்புயல் பிரபுதேவா மிகவும் கடினமான நடன அசைவுகளை எளிதாக ஆடி அசத்திய விதத்திற்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. A R Rahman அவர்களின் துள்ளலான இசையுடன் கூடிய பிரபுதேவாவின் அதிரடி நடனம், பாடலின் ஒளிப்பதிவு அமைப்பு — இவை அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இப்பாடல் உலகமெங்கும் வைரல் லிஸ்டில் இணைந்துள்ளது.
இப்பாடலின் மீது ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ‘Yethu’ ஒரு உலகளாவிய நடன கீதமாக மாறி வருகிறது. தாளம், ஒற்றுமை மற்றும் எல்லைகளை தாண்டிய படைப்பாற்றலை கொண்டாடும் ஒரு திருவிழாவாக மாறியுள்ளது “Yethu” பாடல்
‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில் முதல்வரை சந்தித்த தயாரிப்பாளர்கள்
திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ் (With Love)’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவான இப்படம், வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இன்று தயாரிப்பாளர்கள் தமிழக முதல்வரைச் சந்தித்தனர்.
முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் தயாரிப்பாளர்களுடன் சிறிது நேரம் உரையாடி, ‘வித் லவ்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, படக்குழுவின் முயற்சியையும் பாராட்டினார். இந்த சந்திப்பு படக்குழுவினருக்கு மேலும் உற்சாகம் அளித்துள்ளது.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடித்துள்ள ‘வித் லவ்’, 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைய இளைஞர்களின் உலகம், அவர்களின் உணர்வுகள் மற்றும் காதலை மையமாக வைத்து உருவான இப்படம், ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் விமர்சகர்களிடமும் பாராட்டுகளை குவித்துள்ளது.
‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன், இப்படத்தின் இயக்குநராக அறிமுகமாகி, தனது நேர்த்தியான கதை சொல்லலால் கவனம் ஈர்த்துள்ளார்.
இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K. சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.
நீண்ட காத்திருப்பு நிறைவடைந்தது. தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோரின் தயாரிப்பில் அபிஷேக் நாமா ( Abhishek Nama) இயக்கத்தில் விராட் கர்ணா நடிப்பில் புராண ஆக்சன் படமான ‘நாக பந்தம்’ திரைப்படத்தின் எதிர்பார்க்கப்பட்ட டீசர், புனித நாளான மகா சிவராத்திரி நாளில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தத் திரைப்படம் உலகத் தரம் வாய்ந்த அளவிலான பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் தயாரிப்பு வடிவமைப்பு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. படக்குழுவின் துணிச்சலான பார்வை ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிப்பதுடன்.. ஆன்மீகத்தின் ஆழமும் காட்சி மொழிகளில் கலந்திருக்கிறது.
முன்னணி நட்சத்திர நடிகரான ‘டோலிவுட் பிரின்ஸ்’ மகேஷ்பாபு இப்படத்தின் டீசரை வெளியிட்ட உடன், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏராளமான உற்சாகத்துடன் புதிய உயரங்களுக்கு உயர்ந்தது. அத்துடன் நாடு முழுவதும் மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு அலையையும் உண்டாக்கியது.
மர்மங்கள் அடங்கிய இமயமலையின் பனி படர்ந்த பரப்பில் அமைக்கப்பட்ட இந்த டீசர்.. காலத்தை விட பழமையான ஒரு ரகசியம் புதைந்து கிடக்கும் ஒரு உலகத்தின் நுழைவாயிலை திறக்கிறது. ஒரு மனிதனின் பேராசை இந்த பிரபஞ்ச உண்மையை அம்பலப்படுத்த அச்சுறுத்தும் போது.. விதி அதன் போர் வீரனை தேர்ந்தெடுக்கிறது.
அப்தாலி தலைமையிலான வரலாற்று ரீதியான ஆப்கானிய படையெடுப்பால் ஓரளவு ஈர்க்கப்பட்ட இந்தக் கதை, புராணம், வரலாறு மற்றும் ஆன்மீகப் போர் ஆகியவற்றை இணைத்திருக்கிறது. கலாச்சார எதிர்ப்பு மற்றும் தெய்வீக பாதுகாவலர் ஆகியவற்றின் சந்திப்பில்.. நடைபெறும் மோதல் வடிவத்தை முன்னிறுத்துகிறது.
இந்த காவியத்தின் மையத்தில் புனிதமான நாகபந்தம் கோயில் உள்ளது. இது – வான சக்திகளால் பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு பண்டைய அண்ட சக்தியை பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. ரகசியமான இமயமலை பாதைகளுக்குள் ஆழமாக அமைந்திருக்கும் இந்தக் கோயில் , தவறானவர்களின் கைகளில் விழுவது கற்பனை செய்ய முடியாத பேரழிவைத் தூண்டும் அளவிற்கு மகத்தான சக்தியை கொண்டுள்ளது.
பிரம்மாவின் படைப்பிலிருந்து பிறந்து … விஷ்ணுவின் தர்மத்தால் பாதுகாக்கப்பட்டு … மகா தேவ்- வின் கோபத்தால் இயக்கப்படுகிறது… இந்த குறிப்பிடத்தக்க வரிகள்… நாகபந்தத்தின் ஆன்மாவை மிகச் சரியாகப் படம் பிடிக்கிறது. தெய்வீகம்- விதி மற்றும் அழிவு ஆகியவை மோதும் ஒரு சரித்திரம் தான் இது.
இயக்குநர் அபிஷேக் நாமா- துணிச்சலான இலட்சியத்தையும், தெளிவான பார்வையையும் வெளிப்படுத்துகிறார். விதிவிலக்குடைய தொழில்நுட்ப செயலாக்கத்தால் உயர்த்தப்பட்ட அவரது புராணம், செயல் மற்றும் ஆன்மீக ஆழம் ஆகியவற்றின் கலவை..இந்த நாகபந்தம் படத்தின் டீசருக்கு ஒரு மகத்தான அனுபவத்தை வழங்குவதில் உறுதி அளிக்கிறது. அத்துடன் ஒரு சக்தி வாய்ந்த சினிமாவுக்கான அடையாளத்தையும் அளிக்கிறது. ஒரு உரையாடல் கூட இல்லாமல்… டீசர் அதன் வெளிப்படையான காட்சி மொழி ஆற்றல் மற்றும் வாழ்க்கையை விட பெரிய கதை சொல்லல் மூலம் பார்வையாளர்களை வசீகரிக்கிறது.
முதல் ஃபிரேமில் இருந்து நாகபந்தம், ஒரு பிரம்மாண்டமான காட்சி காவியமாக நிலை நிறுத்துகிறது. ஒளிப்பதிவாளர் சௌந்தர்ராஜன். எஸ் வியக்க வைக்கும் இயற்கைக் காட்சிகளை அற்புதமான நேர்த்தியுடன் படம் பிடித்து உயர்தரமான வி எஃப் எக்ஸ் அளவையும், காட்சியையும் மேம்படுத்துகிறார்.
காட்சிப்படுத்தலுக்கு உறுதுணையாக அசோக் குமாரின் தயாரிப்பு வடிவமைப்பு – ஜுனைத் குமாரின் பிரமிப்பூட்டும் பின்னணி இசை மற்றும் R C பிரணவின் நேர்த்தியான எடிட்டிங் ஆகியவை பார்வையாளர்களின் பக்தி, போராக மாறும் மற்றும் நம்பிக்கை கோபமாக மாறும் ஒரு பிரபஞ்சத்திற்குள் அழைத்துச் செல்கின்றன.
தயாரிப்பாளர்களின் முதல் தயாரிப்பாக இருந்தாலும் படைப்பிற்கான சமரசமற்ற அணுகுமுறை படம் முழுவதும் தெளிவாகத் தெரிகிறது. இயக்குநர் அபிஷேக் நாமாவின் இலட்சியப் பார்வையை வலிமையாக ஆதரித்திருக்கிறார்கள். பிரம்மாண்டமான அரங்கங்களை அமைப்பதில் இருந்து… வி எஃப் எக்ஸ் மற்றும் ஒவ்வொரு தொழில்நுட்பத் துறையிலும் விரிவாக – ஆழமாக கவனம் செலுத்துவது வரை.. படத்தின் தயாரிப்பு மதிப்புகள், இந்திய சினிமாவின் அளவுகோல்களை மறு வரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்
கதையை வழிநடத்தும் விராட் கர்ணா ஒரு கடுமையான மாற்றத்தை ஏற்படுத்தும் அவதாரத்தில் காட்சி தருகிறார். அவரது கட்டளையிடும் தோரணையுடன் கூடிய திரை இருப்பு குறிப்பாக முதலையுடனான சண்டைக் காட்சிகளை விட அதிர்ச்சியூட்டும் வகையில் சிவனாக தோன்றுவது டீசரின் சிறப்பு அம்சமாகும். சிவனை சித்தரிப்பது ஒருபோதும் எளிதானது அல்ல, ஆனால் விராட் கர்ணா அந்த குறிப்பிடத்தக்க பாத்திரத்தை நம்பிக்கையுடன் வெளிப்படுத்துகிறார். தீவிரம்- உடல் மாற்றம் – உணர்வுபூர்வமான ஆழம் – ஆகியவை என ஒரு வாழ்க்கையை வரையறைக்கும் நடிப்பை குறிக்கின்றன.
நடிகர்களின் தேர்வு – இப்படத்தின் மற்றொரு முக்கிய பலம் என சொல்லலாம். இதில் நபா நடேஷ் , ஐஸ்வர்யா மேனன், மகேஷ் மஞ்சரேக்கர், ஜெகபதி பாபு , ரிஷப் சாவ்னி, கருடா ராம், ஜெயப்பிரகாஷ், முரளி சர்மா ,அனுசுயா பரத்வாஜ் மற்றும் பி. எஸ். அவினாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருவதால்… ‘நாகபந்தம்’ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்திய படங்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது, அதற்கு படத்தின் டீசர் தான் அறிகுறி. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நம்பிக்கை- சீற்றம் மற்றும் விதி.. ஆகியவற்றை ஒரு காவிய அளவிலான மறக்க முடியாத சினிமா பயணத்திற்காக பார்வையாளர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
இந்த டீசர் ஹைதராபாத்தில் உள்ள நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பிரசாத் PCXல் திரையிடப்பட்டது. வாழ்க்கையை விடப் பெரிய கதை சொல்லலால் இந்த டீசர் எதிர்பார்த்ததை விட கூடுதலான பாராட்டுகளைப் பெற்றது. டீசரைப் பார்த்த பத்திரிகையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கை தட்டி பாராட்டினர்.
இந்த கோடையில் தர்மம் உயர்ந்து.. அழிவு நடுங்கும் வகையில்..ஒரு காலமற்றப் போரை காணத் தயாராகுங்கள்.
நடிகர்கள் :
விராட் கர்ணா , நபா நடேஷ் , ஐஸ்வர்யா மேனன், ரிஷப் சாவ்னி, ஜெகபதி பாபு , கருடா ராம், மகேஷ் மஞ்சரேக்கர் , ஜெயப்பிரகாஷ் ,முரளி சர்மா, அனுசுயா பரத்வாஜ், பி. எஸ் .அவினாஷ் மற்றும் பலர்
தொழில்நுட்பக் குழு :
கதை ,திரைக்கதை, இயக்கம் : அபிஷேக் நாமா தயாரிப்பாளர்கள் : கிஷோர் அன்னபுரெட்டி & நிஷிதா நாகிரெட்டி ஒளிப்பதிவு : சௌந்தர்ராஜன் .எஸ் இசை : அபே – ஜுனைத்குமார் தயாரிப்பு வடிவமைப்பு : அசோக் குமார் படத்தொகுப்பு : R C பிரணவ் CEO : வாசு பொதினி மக்கள் தொடர்பு : யுவராஜ்
Malali Manvi Movie Makers, D Studios, சன்னி டென்வி (Denvi Productions) தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டீசர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முன்னதாக வெளியிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புதுமையான காதல் கதையைச் சொல்லும் இப்படத்தின் டீசர், சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.
ஒரு அழகான காதல் கதையாகத் தொடங்கும் டீசர், ‘ரீசெட்’ – ‘ரிபீட்’ என்ற தலைப்புக்கேற்றவாறு, எதிர்பாராத திருப்பங்கள், உணர்ச்சி பூர்வமான காட்சிகள் மற்றும் புதுமையான கதை சொல்லல் பாணியுடன் பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இது ஒரு சாதாரண காதல் கதை அல்ல, எந்த மாதிரியான காதல் கதை என்பதே புரியாத வகையில் பல ஆச்சரியங்களைத் தரும் படமாக ‘காதல் ரீசெட் ரிபீட்’ இருக்கும் என்பதை டீசர் உறுதி செய்கிறது.
இப்படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் ஜோடியோடு மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களோடு எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக, பல புதுமுக திறமைகளைத் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி வரும் இயக்குநர் விஜய், இத்திரைப்படத்தின் மூலம் மதும்கேஷ் – ஜியா சங்கர் ஜோடியை அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் காதலும் உணர்ச்சியும் கலந்த இசை ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா காட்சிகளுக்கு அழகிய காட்சித் தன்மையை வழங்கியிருக்கிறார், ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை சரவணன் வசந்த், சண்டை இயக்கத்தை மனோகர் வர்மா, உடை வடிவமைப்பை ருச்சி முனோத் கவனித்துள்ளனர். பாடல் வரிகளை வைரமுத்து, கார்கி, ஆர்கஸ் ஆர்யன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை T Series நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
டீசர் தற்போது இணையம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தைத் திரையரங்குகளுக்குக் கொண்டு வரும் பணிகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மார்ச் 6 அன்று ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தமிழகமெங்கும் Romeo Pictures நிறுவனம் வெளியிடுகிறது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிடிரைலர் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளும் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
காதல் ரீசெட் ரிபீட் திரைப்படம் வரும் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
TEASER LINK : https://www.youtube.com/watch?v=MntwVt7nJg4
சென்னையில் ஒரே இடத்தில் வசிக்கும் மூன்று நண்பர்கள் அதில் ஒருவன் ஆன்மீகத்தை நோக்கி செல்ல நினைக்கிறான் மற்ற இருவரும் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க ஜாலியாக இருக்க நினைக்கிறார்கள் இதே நேரத்தில் ஒரு கிராமத்தில் வாழும்ஒரு பெண் தாய் தந்தை இல்லாமல் தனது தாத்தாவுடன் வாழ்ந்து வருகிறார். அந்த நேரத்தில் ஆன்மீகத்தை தேடி வரும் நாயகன் அவர்கள் இருக்கும் இடத்தை வரும் பொழுது பசிய மயக்கத்தில் பாறையில் இருந்து விழுந்துதலையில் அடிபட்டு சுயநினைவை இழக்கிறான் அவர்களை காப்பாற்றும் தாத்தாவும் பேத்தியும் அவன் நார்மல் நிலைக்கு வரும் பொழுது அந்த பெண்ணை காதலிக்க தொடங்குகிறான்.ஒரு கட்டத்தில் தாத்தா ஒரு சொத்து பிரச்சனையில் அவர்கள் உறவினர்களாக கொல்லப்பட இந்த பெண்ணையும் கொலை செய்ய தேடுகிறார்கள் இந்த சூழலில் நாயகன் அவர்களை காப்பாற்றி சென்னைக்கு அழைத்து வருகிறான்.சென்னைக்கு வரும் அவன் அந்த பெண்ணின் மேல் உள்ள காதலில் தன் நண்பர்களை சந்தேகப்பட்டு அந்த சந்தேகம் ஒரு கொலையிலும் சென்று முடிகிறது இந்த நிலையில் அந்த இடத்தில் இருந்து வெளியேறும் நாயகி தனது சிறு வயது காதலனை கரம் பிடிக்கிறாள் இதுதான் தெரிஞ்சா காதலியே என்னும் திரைப்படத்தின் கதை. திரைப்படத்தில்உங்கள் அனைவருமே புதுமுகம் என்பதால் அனைவருக்கும் நடிப்பு சற்று சிரமமாகத்தான் வருகிறது இருந்தாலும் கதைக்கான களம் அந்த கிராமத்து சூழ்நிலை மிகவும் அருமையாக அமைந்துள்ளது ஆனால் அதற்கு ஏற்றார் போல் திரைக்கதை கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்திருந்தால் நிச்சயம் தெரிஞ்சா காதலுங்க படம் பார்க்கிற மாதிரி இருந்திருக்கும்
சென்னையின் மிகப்பெரிய பிசினஸ்மேன் சத்யராஜ் அவரது ஒரே மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் திருமணமே வேண்டாம் என்று இருக்கும் ஐஸ்வர்யா அர்ஜுன் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள மதுரைக்கு சாலை வழியே காரில் செல்கிறார் செல்லும் வழியில் நிரஞ்சன் லெஃப்ட் கேட் ஏறிக்கொள்ள இருவரும் பயணப்படுகிறார்கள் வழியில் அவர்கள் பார்க்கும் சம்பவம் நிகழ்வுகள் இந்த நிகழ்வுகளால் அவர் சேர வேண்டிய இடத்திற்கு சில நொடிகள் தாமதமாக செல்ல அந்த தாமதம் அவரது உயிரை காப்பாற்றுகிறது அவர் செல்ல வேண்டிய இடம் வெடித்து அனைவரும் இறந்து விட இவர் அந்த ஒரு சில நொடிகள் தாமதத்தால் தப்பிக்கிறார் அவ்வாறு தப்பிக்கும் அவர் தான் வந்த வழியில் ஒவ்வொரு இடத்திலும் ஒரு ஒரு சம்பவத்தால் சில நொடிகள் தாமதமாக அந்த தாமதம் தான் தனது உயிரை காப்பாற்றியதாக நினைத்து அவர்களுக்கு நேரில் சென்று நன்றி சொல்ல செல்கிறார் இதற்கு இடையில் நிரஞ்சன் உடன் ஒரு காதல் நிறைந்தவரின் குடும்பத்தாருடன் நெருங்கி பழக அவர்கள் குடும்பத்தையும் பிடித்து போகிறது இவ்வாறு அவர்களது பயணத்தில் அனைவரையும் சென்று நன்றி சொன்னாரா? நிரஞ்சனுக்கும் ஐஸ்வர்யா அர்ஜுனுக்குமான காதல் நிறைவேறியதா என்பதுதான் இந்த சீதா பயணம். இந்த சீதாப்பயணம் திரைப்படத்தை ஆக்சன் கிங் அர்ஜுன் கதை திரைக்கதை இயக்கம் செய்திருக்கிறார் தயாரித்தும் இருக்கிறார் தன் மகளுக்காக மேலும் இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலும் செய்து இருக்கிறார். படத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் நிரஞ்சனி நடிப்பு ஓரளவுக்கு கதையுடன் பொருந்தி போகிறது மேலும் இந்த படத்தில் குரு சார்ஜா ஒரு கெஸ்ட் ரோலும் பிரகாஷ்ராஜ் நாயகனின் தாத்தாவாகவும் கோவை சரளா ஒரு ஹோட்டல் வைத்திருக்கும் பெண்மணியாகவும் மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள் அனைவருக்கும் ஒரு சிறு கதைகளை இயக்குனர் தந்திருக்கிறார் அந்த கதைகள் இந்த படத்தின் திரைக்கதையை இணைக்கிறது. படத்தின் ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு ஏற்றவாறு செல்கிறது. என்னதான் அர்ஜுன் தன் மகளுக்காக இந்த படத்தை எழுதியிருந்தாலும் முதல் பாதையில் சற்றே தலை தொடங்குகிறது நமக்கு கதையில் விறுவிறுப்பு இல்லாமல் மிகவும் ஸ்லோவாக செல்கிறது இரண்டாம் பாதியில் அதை நிவர்த்தி செய்து வருகிறார்.
இயக்குனர் அர்ஜுன் முதல்பாதியில் இன்னும் சிறப்பாக செய்திருந்தால் இரண்டாம் பாதி மனதில் நிச்சயம் நீங்காத பயணமாக அமைந்திருக்கும் இந்த “சீதா பயணம்”
ஊட்டியில் தாய் தந்தை இல்லாமல் சித்தி சித்தப்பா ஆதரவில் வசித்து வரும் கிருஷா குரூப்.நிறைய சொத்துக்கள் இருக்கும் இவரை சித்தி சொத்திற்காக ஆசைப்பட்டு தனது தம்பிக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்.குடித்துவிட்டு கும்மாளம் அடித்துக்கொண்டு ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் அவரை பிடிக்காமல் பக்கத்து வீட்டு ஒரு பெரிய மனிதனிடம் ஐடியா கேட்டு யாரையாவது காதலித்து இந்த ஊரை விட்டு ஓடி விட வேண்டும் என்று முடிவு எடுக்கிறார் கிருஷா குரூப்.அவர் தேர்ந்தெடுக்க நம்பர் தன் வீட்டில் தங்கியிருக்கும் ஒரு ஈபி இன்ஜினியரை ஆனால் அவரோ திடீரென்று ஒரு நாள் வீட்டை காலி செய்துவிட்டு சென்னைக்கு சென்று வருகிறார்.சோகமடையும் நாயகி அவர் எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார். இதே நேரத்தில் சென்னையில் வைட் லைஃப் போட்டோகிராபராக இருக்கும் ஸ்ரீராம் கார்த்திக் ஊட்டியில் இருக்கும் ஒரு அரிய வகை பறவையை படம் பிடிக்க வருகிறார் அங்கே நாயகி உடன் நட்பு ஏற்பட அந்த நட்பு அந்த நட்பு பின்பு ஒரு தலை காதலாக மாறுகிறது ஸ்ரீராம் கார்த்திக் இருக்கு.சொல்ல நினைக்கும் வேலையில் நாயகியோ நான் ஒருவனே காதலிக்கிறேன் அவனுடன் என்னை சேர்த்து வை என்று ஸ்ரீராம் கார்த்திக் இடம் உதவி கேட்கிறார். உங்களை சேர்த்து வைத்தாரா இல்லை இவர்களது காதல் சேர்ந்ததா என்பது தான் மயிலாஞ்சி படத்தின் திரைக்கதை இந்த மாதிரியான ஒரு முக்கோண காதல் கதையை எடுத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் அஜயன் பாலா இவர் ஒரு பிரபல எழுத்தாளர் பல படங்களுக்கு பணிபுரிந்திருக்கும் அஜயன் பாலா தனது படத்திற்கான திரைக்கதையில் கோட்டை விட்டு இருக்கிறார். மேலும் இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்திகை நடிப்பு மிகவும் செயற்கை தனமாகவே உள்ளது அவர்அவர் நடிப்பு காதலிலும் சரி, சோகத்திலும் சரி எந்த ஒரு ஃபீலிங் இல்லாமல் ஒரே மாதிரியாக உள்ளது நடிப்பில் மெருகேற வேண்டும் ஸ்ரீராம் கார்த்திக். கிரிஷா குரூப் இந்த கதாபாத்திரத்தை என குழந்தைத்தனமாகவே வடிவமைத்து இருக்கிறார். மேலும் இந்த படத்தில் சிங்கம் புலி முனீஸ் காந்த் இன்னும் நிறைய பேர் வருகிறார்கள் போகிறார்கள் அவ்வளவே இந்த படத்தில் பணியாற்றிய டெக்னிஷிகள் அனைவரும் மிகவும் அனுபவசாலிகள் ஒளிப்பதிவாளர் செழியன் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்,இசை இளையராஜா,இப்படி பலர் இருந்தாலும் பல சொதப்பல்கள் தான் இவர்கள் அனைவருமே மைலாஞ்சி இன்னும் சற்று மைலேஜ் தந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்