MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S. சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”.
வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
நிகழ்வில் பேசியவர்கள்
தயாரிப்பாளர் மகேஷ்: எங்கள் படத்தை வாழ்த்த வந்த திரை ஆளுமைகளுக்கு நன்றி. படம் இப்போது தான் ஆரம்பித்தது போல உள்ளது, முடிந்து இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. அமீர், சமுத்திரக்கனி சார் நிறைய ஆதரவு தந்தார்கள். ஒளிப்பதிவாளர் சூரஜ் பற்றி ஏன் அதிகம் ப… [12:47 pm, 30/8/2025] Sandy Cine Pro Aim: இயக்குநர் ஆர். கே. செல்வமணி இந்த விழாவிற்கு எதுவும் தெரியாமல் தான் வந்தேன். வந்த பிறகுதான் தெரிகிறது இது என் குடும்ப விழா என்று. ஹீரோ தேவ் எனக்குச் சின்ன வயதிலிருந்து தெரியும். அவரை எனக்கு பூர்ணேஷ் எனத்தான் தெரியும், படத்திற்காக தேவ் என மாறியுள்ளார்.அவரது மாமா டெல்லி பாபு, உலகத்தின் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவராக இருந்தார். அவருக்குத் தீமையே தெரியாது, நன்மை தான் செய்வார். மிகச் சிறந்த இயக்குநர்களை, மிகச் சிறந்த படைப்புகளை உருவாக்கிய தயாரிப்பாளர். காலம் அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டது. அவர் தன் மகனை ஹீரோவாக்க வேண்டுமென்று பல முறை சொல்லியுள்ளார். இன்று அந்த ஆசை நிறைவேறியுள்ளது மகிழ்ச்சி. அவருடைய ஆசி உனக்கு எப்போதும் உண்டு.
“YOLO” என்றால் என்னவென்று தெரியவில்லை. இங்கு வந்த பிறகுதான் கேட்டேன் — You Only Live Once என்றார்கள். உண்மை தான், நாம் ஒரு முறை தான் வாழ்கிறோம், அதை அழகாக வாழ்வோம்.
இந்த படத்தில் எல்லோரும் இளமையாக இருக்கிறார்கள். எல்லோரும் தங்கள் முழு உழைப்பைத் தந்துள்ளார்கள். சகிஷ்னா வரும்போதே 6 பாடலுடன் வந்துள்ளார். சாம், சமுத்திரகனி, அமீர் மாதிரி இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறார், அதுவே அவர் திறமையைச் சொல்லும்.
எனக்கு முதல் படத்துக்குச் சம்பளம் ₹14,000 தான். ஆனால் அடுத்த படத்துக்குச் சம்பளம் ஒரு கோடி ரூபாய். அதனால் முதல் படத்துக்குச் சம்பளத்துக்கு அலையாதீர்கள். முதல் படத்தோட பட்ஜெட் என்னவோ அது தான் உங்கள் சம்பளம். ஏனெனில் என்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் 1 கோடி போடுகிறார் என்றால் அது தான் என் சம்பளம். அப்படி இயக்குநர்கள் நீங்கள் நினைத்தால்தான் அடுத்து ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்க முடியும். இப்படத்திற்கு உழைத்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள். நன்றி, வணக்கம்.
இயக்குநர் அமீர் இந்த விழாவில் கலந்து கொண்ட எங்களுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் பெருந்தன்மையோடு காரணமில்லாமல் கலந்து கொண்ட அண்ணன் ஆர். கே. செல்வமணி அவர்களுக்கு நன்றி.
புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு “கேப்டன்” எனும் பெயர் நிரந்தரமாக அமையக் காரணமானவர். அவருடைய மறைவுக்கு பின்னாடியும் ஓடிய கேப்டன் பிரபாகரன் படத்தை தந்தவர். இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்றைக்கும் திரையிடப்பட்டு ஒரு மாபெரும் வெற்றி அடைகிறது என்றால் அதற்குக் காரணம் அந்த படத்தின் தரம்.
என்னுடைய முதல் படம் மௌனம் பேசியது முதல் இப்போ வரைக்கும் நிறைய அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் என்கிட்ட இருந்து வெளியில் போயிருக்கிறார்கள். அதில் பாதி பேரின் பெயரே எனக்கு தெரியாது. “சார், உங்களோடு தான் ஒர்க் பண்ணேன்” என சொன்னால் “அப்படியா, சரி ஓகே” அப்படின்னு சொல்வேன். ஏன்னா ஒரே ஒரு ஷெட்யூலில் மட்டும் தான் ஒர்க் பண்ணியிருப்பான். அடுத்த ஷெட்யூலில் இருக்க மாட்டான். அப்படிப்பட்டவர்கள் ஒரு 30–40 பேர் இருக்கிறார்கள். ஆனால் வெற்றி பெற்றவர்கள் மிகக் குறைவு தான். அதில் சாம் ஒருவர்.
எல்லாரும் கனி பற்றி தான் சொன்னார்கள். அவன் இளகிய மனசுக்காரன். பருத்திவீரன் படப்பிடிப்பில் யாரையும் திட்டக்கூட மாட்டான். இப்போது அவனை நடிகனாகப் பார்க்கப் பிரமிப்பாக இருக்கிறது. அவனுடைய வளர்ச்சிக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
இந்தப் படத்தின் ஹீரோ பற்றி எனக்கு பெருசா ஒன்றும் தெரியாது. பொதுவாக ஒரு பழமொழி சொல்வார்கள்: “ஊராம் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானா வளரும்?” என்று. அவருடைய மாமா நிறைய புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்திருக்கிறார். மரகத நாணயம் எடுத்த சரவணன், பேச்சலர் எடுத்த சதீஷ் — இவர்களை எல்லாம் அறிமுகப்படுத்தியதால் தான் இன்று மகேஷ் என்ற தயாரிப்பாளர் மூலமாக தேவ் ஹீரோவாகி இருக்கிறார்.
தேவ் தன் அப்பா அம்மா இந்த மேடையில் இல்லை, அவர்கள் இருக்கனும்னு ஆசைப்பட்டேன்னு சொன்னார். வாழ்க்கை அப்படி நம்ம நினைப்பது போல நடக்காது. அப்படி நினைத்த மாதிரி நடந்ததுன்னா அது வாழ்க்கையே இல்லை. பொதுவாக சொல்வார்கள் — நீ போகும் பாதையில் இடையூறு இல்லையென்றால் அது உனக்கான பாதை இல்லை. நீ போட்ட பாதையில் இடையூறு இருந்தால் அதைச் சரி பண்ணினால்தான் அது உன் பாதையாக இருக்கும்.
நிச்சயமாக இந்த படம் உங்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நம்புகிறேன். சாம் என்கிட்டயும் ஒர்க் பண்ணியிருக்கான், கனிகிட்டயும் ஒர்க் பண்ணியிருக்கான். ஆனா இருவரின் பாணியையும் பின்பற்றாமல் புதுசாக படம் எடுத்திருக்கான். ஒவ்வொன்றையும் கவனமாகச் செய்துள்ளான். டிரெய்லரில் அது தெரிகிறது. படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரும் நம்பிக்கையோடு பேசினார்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற பிரார்த்திக்கிறேன். நன்றி.
இயக்குநர் சாம் முதலில் என் அப்பா அம்மாவுக்கு நன்றி. அவர்களால்தான் இன்று நான் இங்கு நிற்கிறேன்.அமீர் சார் ஒரு சிங்கம் மாதிரி. அவருடன் வேலை செய்வது சவாலானதாக இருந்தது. அவர் கடின உழைப்பாளி. தயாரிப்பாளரின் பணத்தை வீணாக்கக் கூடாது என்பதை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன். அவரால்தான் புதுமுகங்களை வைத்து படம் எடுக்க தைரியம் வந்தது.
நான் சோர்வாக இருக்கும் போதெல்லாம் அமீர் சாரும், கனி சாரும் என்னை ஊக்கப்படுத்தினார்கள். அவர்கள் எனக்கு இப்போதுவரை நிறைய உதவி செய்திருக்கிறார்கள். கனி சார் எந்த ஒரு நொடியையும் வீணாக்க மாட்டார். அவரிடமிருந்து அதைக் கற்றுக்கொண்டேன். “எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும்” என்பார். அவர் இந்தப் படத்திற்குப் பெரிய ஆதரவாக இருந்தார்.
எங்கள் அழைப்பை மதித்து வந்த ஆர். கே. செல்வமணி சாருக்கு நன்றி. எனக்கு இப்பட வாய்ப்பை தந்த மகேஷ் சாருக்கு நன்றி. அவர் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்த உறுதுணையாக இருந்தார். அதுபோலவே தேவை லீடாக அறிமுகப்படுத்தினார்.
ஆகாஷ் ஒரு அப்பாவி பையனாக நன்றாக நடித்துள்ளார். பலரைத் தேடி கடைசியாக தேவிகாவை ஒப்பந்தம் செய்தோம். அவர் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். என் நண்பன் ராம் — கல்லூரியிலிருந்தே ஒன்றாக வேலை செய்திருக்கிறோம். இன்ஸ்டிடியூட்டில் சூரஜ் உடன் பணிபுரிந்திருக்கிறேன். நான் கேட்டதைச் சிறப்பாகச் செய்து தந்துள்ளார்.சகிஷ்னா இந்தப் படத்தில் 6 வெவ்வேறு பாடல்களை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளார்.எடிட்டர் ரமேஷ் நேரடியாக வந்து எனக்கு உதவினார். தயாரிப்பில் நாகராஜ் புரொடக்ஷன் மேனேஜர் பெரிய ஆதரவாக இருந்தார்.என் உதவி இயக்குநர்கள் குழு என்னைவிட வேகமாக இருப்பார்கள். ரகு மாஸ்டர், டேஞ்சர் மணி மாஸ்டர் இருவருக்கும் நன்றி.பாடலாசிரியர்கள் சூப்பர் சுப்பு, முத்தமிழ், சதீஸ்காந்த், சகிஷ்னா சேவியர், மகேஷ் செல்வராஜ் — இவர்களின் வரிகள் படத்துக்கு வலு சேர்த்துள்ளன. படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படவா கோபி பெரிய ஆதரவாக இருந்தார். நன்றி.
இது இளமையான எண்டர்டெயின்மென்ட் படம். நிச்சயம் படம் பார்ப்பவர்களை திருப்திப்படுத்தும். “YOLO” செப்டம்பர் 12 அன்று திரைக்கு வருகிறது.மீடியா நண்பர்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். நன்றி.
இயக்குநர், நடிகர் சமுத்திரகனி இறைவனுக்கு நன்றி. மிக மகிழ்ச்சியான தருணம். என் படத்தை விட அதிக சந்தோசமாக உள்ளது.அமீர் அண்ணனுக்கு நன்றி சொல்ல வேண்டும். பருத்திவீரன் படத்தில் தான் நானும் சாமும் சந்தித்தோம். அமீர் அண்ணன் எங்களிடம் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
சாமுக்கும் எனக்கும் இனிமையான பயணம். அண்ணனிடமிருந்து வந்த பிறகு “இவனை விட்டு விடக்கூடாது” என நினைத்து என்னுடன் இணைத்துக் கொண்டேன். அவன் எனக்காக நிறையச் செய்துள்ளான். இந்த மேடை அவனுக்கு ரொம்ப லேட்டாக கிடைத்துள்ளது. அதனால் இந்தப் படத்திற்காக அவனுடன் நிற்க வேண்டும் என நினைத்தேன்.
இந்தப் படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும். ஏனெனில் அவ்வளவு உழைப்பைச் செய்திருக்கிறார்கள். படத்தில் உண்மையும், உணர்வும் இருக்கிறது. தேவ் கவலைப்படாதீர்கள், உங்கள் அப்பா அம்மா மாமா ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு. அவர்கள் இங்கு தான் இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.நண்பன் மகேஷ் இந்தக் குழுவின் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
படத்தின் குறிப்பு
நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நிகழ்வு வாழ்க்கையில் நடந்தால் — அதுவே இந்தப் படத்தின் ஃபேண்டஸி மையம். மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச் செய்யும் அழகான காதல் திரைப்படமாகவும், இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாகவும், ரொம்-காம் ஜானரில் கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்மென்ட்டாகவும் இப்படம் உருவாகியுள்ளது.
இயக்குநர் அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய S. சாம் இப்படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர்கள்
தேவ்
தேவிகா
படவா கோபி
ஆகாஷ் பிரேம்குமார்
பிரவீன்
நித்தி பிரதீப்
திவாகர்
யுவராஜ்
விஜே நிக்கி
தீபிகா
தீப்சன்
சுப்ரு
சுவாதி நாயர்
பூஜா ஃபியா
சுபா கண்ணன்
கலைக்குமார்
தொழில்நுட்பக் குழு
தயாரிப்பு நிறுவனம் – MR Motion Pictures
தயாரிப்பாளர் – மகேஷ் செல்வராஜ்
இயக்கம் – S. சாம்
ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி
இசை – சகிஷ்னா சேவியர்
எடிட்டிங் – A. L. ரமேஷ்
கலை இயக்கம் – M. தேவேந்திரன்
கதை – ராம்ஸ் முருகன்
ஸ்டண்ட் – டேஞ்சர் மணி
நடனம் – கலைக்குமார், ரகு தாபா
திரைக்கதை – S. சாம், ராம்ஸ் முருகன், பண்பு செல்வன், மகேஷ் செல்வராஜ்
பாடல்கள் – முத்தமிழ், சூப்பர் சுப்பு, சதீஸ்காந்த், சகிஷ்னா சேவியர், மகேஷ் செல்வராஜ்
GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்”.
வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
GEMBRIO PICTURES சார்பில் ஷரைலி பாலகிருஷ்ணன் பேசியதாவது…
எங்கள் படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இது எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம். இந்தப்படம் பார்த்தபோது எங்களுக்குப் புரிந்தது – இந்தப்படம் அனைத்து தரப்பினருக்குமானது என்பது தான்.ஒரு குறிப்பிட்ட தரப்பே பார்க்க வேண்டிய படம் அல்ல; அனைவரும் ரசிக்கும் படம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். அன்பே சிவம். அன்புதான் நம்மை எல்லோரையும் ஒன்றிணைக்கும். அதை இந்தப்படம் செய்கிறது. நன்றி.
GEMBRIO PICTURES சார்பில் சம்விதா பாலகிருஷ்ணன் பேசியதாவது…
அன்பைத் தாண்டி இந்தப்படத்தில் எல்லோரையும் இணைக்கும் வேறு ஒரு விஷயமும் உள்ளது. டிரெய்லர் பார்த்தால் உங்களுக்குப் புரியும். படத்துக்கு அப்பாற்பட்ட வகையில் இசை மிகச்சிறப்பாக வந்துள்ளது. இமான் சார் இசையில் அனைத்து பாடல்களும் அருமையாக வந்துள்ளன. நாங்கள் படம் பார்த்த போது பெற்ற சந்தோஷத்தை, நீங்கள் அனைவரும் உணர்வீர்கள். இந்தப் படத்தை வெளியிடும் சக்திவேலன் சாருக்கு நன்றி.
ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் பேசியதாவது…
தயாரிப்பாளர் சுதா மேடமுக்கு நன்றி. விஷாலும் நானும் இன்ஸ்டிடியூட்டில் ஒன்றாக படித்தோம். அங்கிருந்து தொடங்கிய பயணம் இன்று இணைந்து படம் செய்வதற்கு வழிவகுத்தது. இமான் சார் சிறப்பான இசையைத் தந்துள்ளார். படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி.
நடிகர் சரவணன் பேசியதாவது…
இயக்குநர் விஷால் வெங்கட்டை, நான் வாய்ப்பு தேடி அலையும் போது, “நரை எழுதும் சுயசரிதம்” பட ப்ரிவ்யூவில் சந்தித்தேன். அவர் இயக்கிய “சில நேரங்களில் சில மனிதர்கள்” மிகச்சிறந்த படம். மிக நல்ல கலைஞர். அவரிடம் ஆசைப்பட்டுக் கேட்டு, கெஞ்சியும் வாங்கி நடித்திருக்கிறேன். மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.
நடிகர் டி. எஸ். கே பேசியதாவது…
போன வருடம் லப்பர் பந்து, இந்த வருடம் பாம். அந்தப் படத்தில் நடித்த பல நண்பர்கள் இதிலும் நடித்துள்ளனர். இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. இதற்கு முன் காமெடி தான் செய்து கொண்டிருந்தேன்; ஆனால் என்னை நம்பி விஷால் வெங்கட் ஒரு நல்ல வேடம் தந்தார்.அவரின் சில நேரங்களில் சில மனிதர்கள் படம் பார்த்து அவரிடம் வாய்ப்பு கேட்டேன். இரண்டு வருடம் கழித்து அவரே கால் செய்து இந்த வாய்ப்பை தந்தார் – அவருக்கு நன்றி.இமான் சார் ரசிகன் நான்; அவருடைய பாடல்களை மிமிக்ரி செய்து வந்தவன். அவருடைய படத்தில் நடித்தது பெருமை. ஏ, பி, சி ஆடியன்ஸை கவரும் இசையமைப்பாளர் இமான் சார் – அவருக்கு நன்றி.மாஸ் ஆக்ஷனாக நடித்த அர்ஜூன் தாஸை, முழுக்க முழுக்க சாஃப்டாக காட்டும் படமாக இது இருக்கும். ஷ்வாத்மிகா ஹீரோயின் மாதிரி நடக்கவே மாட்டார்; மிக இயல்பாகப் பழகுவார். ஒரு ஹேப்பியான உணர்வைத் தரும் சிறப்பான படமாக இது இருக்கும். அனைவருக்கும் நன்றி.
TrendMusic ஜித்தேஷ் பேசியதாவது… இப்படத்தில் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. சுதா மேடம் இந்த படத்தை நம்பி தயாரித்ததற்கு வாழ்த்துக்கள். படம் பார்த்தோம் மிகச் சிறப்பாக இருந்தது. அர்ஜூன் தாஸை வேறு கலரில் காட்டியுள்ளார்கள். இந்தப்படத்தின் இசையில் நாங்கள் பங்கு கொண்டது மகிழ்ச்சி. மணிகண்டன், காளி வெங்கட் எனப் பல திறமையாளர்கள் இப்படத்தில் பங்கேற்றுள்ளார்கள். இமான் அற்புதமான இசையை தந்துள்ளார். செப்டம்பர் 12 எல்லோரும் திரையில் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
எழுத்தாளர்கள் மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன் பகிர்ந்துகொண்டதாவது… விஷாலுடன் நாங்கள் ஒரு டீக்கடையில் பேசி, பேசி உருவானது தான் இந்தப்படத்தின் கதை. அவர் எல்லோரையும் போல எங்களிடமும் வேலை வாங்கினார். இந்தப்படத்தில் பெரிய கருத்தெல்லாம் பேசாமல், உங்களைச் சிந்திக்க வைக்க சிரிக்க வைக்க முயற்சித்துள்ளோம்.
அன்பென்றால் என்ன என்பதை இப்படம் பேசியுள்ளது. ரைட்டிங்கில் இல்லாத பெரிய விஷயத்தை ஒரு ஷாட்டில் காட்டி தான் இயக்குநர் என்பதை விஷால் வெங்கட் நிரூபித்திருக்கிறார்.
டிரெய்லர் எல்லோருக்கும் பிடித்திருக்குமென நம்புகிறோம். படத்தில் மிகச் சிறந்த செய்தி இருக்கும். அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.
சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது… இந்தப்படம் பார்த்து மிகவும் பிடித்திருந்தது. தயாரிப்பாளர் சுகுமார் சார் செய்யாத தொழிலே இல்லை. எல்லாவற்றிலும் ஜெயித்துள்ளார். படத்திலும் ஜெயிக்கலாம் என வந்துள்ளார். அடுத்த மாதத்தில் பெண்களுக்கென ஒரு சாட்டிலைட் சேனல் ஆரம்பிக்கவுள்ளார். அவரிடம் நிறைய புது ஐடியாக்கள் உள்ளது. அவர் போல நிறையப் புதுமுகங்கள் திரைக்கு வரவேண்டும். இந்தப்படத்தில் காளி வெங்கட் அற்புதமாக நடித்துள்ளார். இப்படம் மண்டேலா, முண்டாசுபட்டி படங்கள் போல இனிமையான படமாக இருக்கும். அர்ஜூன் தாஸுக்கு ஒரு புதுமையான படமாக இருக்கும். அவர் இயக்குநர் கேட்டதை அப்படியே தந்துள்ளார். இமான் பாமர மக்களுக்கான எளிய இசையைத் தொடர்ந்து தந்து வரும் இசையமைப்பாளர். அவருடைய தேவை இங்கு நிறைய இருக்கிறது. எல்லோரும் இணைந்து அழகான படத்தைத் தந்துள்ளார்கள். இந்தப்படத்தில் பங்குபெற்றுள்ள அனைவரும் முழு உழைப்பையும் தந்துள்ளார்கள். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் நன்றி.
இயக்குநர் ரா பார்த்திபன் பேசியதாவது… பாம் படத்தை பற்றி என்ன பேசுவது என நிறைய யோசித்தேன். முதலில் வாயு பகவானை வணங்கித் தொடங்குவோம். இந்த மாதிரி கதையை டைட்டிலை தேர்ந்தெடுக்கனும் என்றால் இயக்குநர் விஷால் வெங்கட் எவ்வளவு பெரிய குசும்பனாக இருக்க வேண்டும், இதைத் தயாரிக்க வேண்டுமென்றால் தயாரிப்பாளர் அதைவிட எவ்வளவு பெரிய குசும்பனாக இருக்க வேண்டும். ஆங்கில படங்களில் தான் இது மாதிரி பார்த்திருப்போம். ஆனால் அதைத் தமிழ் சினிமாவில் காட்டுவது சவாலான விஷயம், அதை இந்தப்படக்குழு சாதித்துள்ளது. சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் எப்போதும் கண்டென்ட் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார். இந்த கண்டென்ட் அவருக்கு பிடித்திருக்கிறது. இமான் ஏ பி சி செண்டர் மட்டுமில்லை டி செண்டரையும் கவர்ந்து விடுவார், அதனால் தான் அவர் டி. இமான். தயாரிப்பாளர் சுகுமார் இல்லை சதா தான் – ஆம், சதா. சுதாவைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருப்பார். அதனால் சுதா இல்லை சதா தான் தயாரிப்பாளர். நான் எப்போதும் ஹீரோயின் பார்த்து தான் படம் செய்ய ஆசைப்படுவேன். ஆனால் அர்ஜூன் தாஸைப் பார்த்தால் ஹீரோவை மையமாக வைத்துப் படமெடுக்கத் தோன்றுகிறது. ஷிவாத்மிகாவை சின்ன வயதிலிருந்து பார்த்து வருகிறேன் – நல்ல நடிகை. தயாரிப்பாளருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையட்டும் வாழ்த்துக்கள்.
நடிகர் காளிவெங்கட் பேசியதாவது… இந்தப்படத்தில் இப்படி ஒரு வாய்ப்பை தந்ததற்கு விஷால் வெங்கட்டுக்கு நன்றி. முதலில் கதை சொன்ன போது அவர் நடிப்பேனா என்ற சந்தேகத்திலேயே இருந்தார். அருமையான கேரக்டர் எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சி. எத்தனை கோடி சம்பாதித்தாலும் தன் பிணக்கோலத்தைப் பார்க்கும் வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. அது மாதிரி நிறைய ஆச்சரியங்கள் இப்படத்தில் கிடைத்தது. அர்ஜூன் தாஸுடன் அநீதிக்கு பிறகு சேர்ந்து நடிக்கிறோம். படத்தில் என்னைத் தூக்கிச் சுமந்து நடித்துள்ளார், அவருக்கு என் நன்றி. சக்தி ஃபிலிம் ரிலீஸ் என்றார்கள் – படம் வெற்றி தான். தயாரிப்பாளர்கள் என்னை அமெரிக்கா கூட்டிப்போவதாகச் சொல்லியுள்ளார்கள். மறந்து விடாதீர்கள். இது மிக நல்ல படம். ஆதரவு தாருங்கள். எல்லோருக்கும் நன்றி.
இயக்குநர் கார்த்திகேயன் மணி … இந்தப்படத்தின் கதைக்கரு சுவாரஸ்யமானதாக உள்ளது. காளிவெங்கட் சார் மெட்ராஸ் மேட்னி படத்தில் நடிக்கும் போது இந்தப்படம் பற்றிச் சொன்னார். அவர் சின்ன வயதிலேயே எத்தனை விதமான பாத்திரங்கள் செய்துவிட்டார். ஒரு முறை சேவலாக நடித்து காட்டி அசத்தினார். சயின்ஸ் ஃபிக்ஷன் படமெடுத்தால் அவரை ஏலியனாக நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குநர் சண்முகபிரியன் … விஷால் வெங்கட் மிக நல்ல மனிதர். எனக்குப் படம் காட்டினார், அட்டகாசமாக இருந்தது. ஷிவாத்மிகா ஃபேன் நான், அருமையாக நடித்துள்ளார். அர்ஜூன் தாஸை எப்படி இந்த கதாபாத்திரத்தில் யோசித்தார் எனத் தெரியவில்லை. அவர் என்ன கொடுத்தாலும் செய்வார் என்பதற்கு இந்தப்படம் சாட்சி. எல்லோரும் மிக அட்டகாசமாக நடித்துள்ளனர். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இசையமைப்பாளர் டி. இமான் … இப்படம் முள்ளு மேல் நடப்பது மாதிரியான ஒரு கதை, ஆனால் அதை மிக கவனமாக அழகாக எடுத்துள்ளார் விஷால் வெங்கட். சில நேரங்களில் சில மனிதர்கள் பார்த்தவுடன் அவருடன் வேலை பார்க்க ஆசைப்பட்டேன். அவருடன் பணிபுரிந்தது மிக மிக சந்தோசமாக இருந்தது. நம் மண்ணின் கதை சொல்லும் இந்த மாதிரி படங்களுக்கு நம் மண்ணின் இசை கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்படத்தில் முறையான புதுமுக பிளேபேக் சிங்கர்ஸ் பாடியிருக்கிறார்கள். அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். அர்ஜூன் தாஸ் தன் பிம்பத்தை உடைத்து புதிதாகச் செய்கிறார். வாழ்த்துக்கள். கண்டிப்பாக இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும். நன்றி.
இயக்குநர் லோகேஷ் … அர்ஜூன் தாஸ் பிரதர் அவருடைய இமேஜை உடைத்து இப்படத்தைச் செய்துள்ளார். ஷிவாத்மிகா இப்படத்தில் நேரில் நடிப்பதைப் பார்த்தேன் – மிகச் சிறப்பாக நடித்துள்ளார், அவருக்கு வாழ்த்துக்கள். காளி வெங்கட் சார் நிறைய இடத்தில் என் அப்பாவைப் பிரதிபலித்தார் – மிகச்சிறந்த நடிகர். வாழ்த்துக்கள். விஷால் வெங்கட்டும் நானும் புரொடக்ஷன் மேட், தயாரிப்பு கம்பெனியில் சந்தித்தோம், நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். விஷால் எந்த பிரச்சனையையும் ரொம்ப கேஷுவலாக எடுத்துக்கொள்வார். நம் வெற்றியை அவர் வெற்றியாகக் கொண்டாடுவார். இப்படி ஒரு கதையைப் படமாக்கும் தைரியம் இவரைத் தவிர யாருக்கும் வராது. கண்டிப்பாக இந்தப்படம் மிகச்சிறப்பான வெற்றியைப் பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இயக்குநர் ஶ்ரீகணேஷ் … விஷாலின் முதல் படம் எனக்கு ரொம்ப பிடிச்ச படம். அவரை தேடி கால் செய்து பேசினேன். அவரின் இந்தப்படம் வெற்றிப்படமாக இருக்கும் என்பது இங்கு பேசியவர்கள் மனதிலிருந்து தெரிகிறது. அர்ஜூன் தாஸுக்கு இந்தப்படம் அவரை புது டைமென்ஷனில் பார்க்கும் படமாக இருக்கும். டி. இமான் சார் செய்யும் புது விஷயம் – இவ்வளவு புதுமுக பாடகர்களுக்கு வாய்ப்பு தருவது மிகப்பெரிய விஷயம். காளி அண்ணா இந்தியாவில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருத்தர். அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குநர் சிபி சக்கரவர்த்தி … விஷால் பிரதர் கதை சொன்ன போது யார் நடிக்கிறார்கள் எனக் கேட்டேன், அர்ஜூன் தாஸ் என்று சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் படம் பார்த்து அசந்து விட்டேன். வில்லன் நடிகர் இன்னொசன்ஸை செய்வதை இந்தியாவிலேயே சிறப்பாக செய்பவர் ரஜினி சார். அவருக்கு அப்புறம் அர்ஜூன் தாஸ் தான். காளி வெங்கட் அண்ணன் டான் பைலட் ஃபிலிமில் எந்த தயக்கமும் இல்லாமல் நடித்து தந்தார். சினிமாவை உண்மையாக நேசிப்பவர், அவர் திறமைக்கு ஏற்ற கதாப்பாத்திரங்கள் அவருக்குக் கிடைக்கவில்லை. விஷால் வெங்கட்டும் நானும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். இப்படத்தில் அவர் இயக்குநராக இல்லாமல் எல்லா வேலையும் பார்த்துள்ளார். இந்தப்படம் மிகப்பெரிய விஷயத்தை மிக எளிமையாகப் பேசுகிறது. கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
நடிகர் மணிகண்டன் … இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருமே என் நெருங்கிய நண்பர்கள் தான். கிட்டதட்ட எல்லா துறையில் வேலை பார்த்தவர்களும் என் நண்பர்கள். அவர்கள் எல்லோரும் இப்படத்தில் வேலை பார்த்துள்ளார்கள் என்பது மகிழ்ச்சி. காளி அண்ணா யார் என்ன உதவி, எந்த சமயத்தில் கேட்டாலும் செய்யத் தயங்காதவர். அவரைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் பத்தாது. இமான் சார் வெரைட்டியான சாங்ஸ் தரும் வெகு சில இசையமைப்பாளர்களில் ஒருத்தர். அவர் இசையமைத்தது மகிழ்ச்சி. இப்படி ஒரு கதையைத் தயாரித்த தயாரிப்பாளருக்கு நன்றி. அர்ஜூன் தாஸ் அவர் முதல் படத்திலேயே எப்படி அவ்வளவு கான்ஃபிடன்ஸ்-ஆ அந்த கதாப்பாத்திரத்தை செய்தார் என ஆச்சரியமாக இருந்தது. தொடரும் அவர் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஷிவாத்மிகா அருமையாக நடித்துள்ளார். விஷால் வெங்கட் 2008 ல் இருந்து பழக்கம். அவன் அனுபவித்த தடைகளை, அனுபவித்த வலிகளை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். அவன் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன். அவன் வெற்றி எனக்கு மிகப்பெரிய பெருமை. இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றிபெறும். நன்றி.
நடிகை ஷிவாத்மிகா … எனக்கு வாய்ப்பு தந்த சுகுமார் சார், சுதா மேம் இருவருக்கும் நன்றி. இமான் சார் இசைக்கு நான் ரசிகை. அவர் இசையில் நடித்தது மகிழ்ச்சி. காளி வெங்கட் சார் மாதிரியான ஒரு நடிகரோடு நடித்தது பெருமை. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. விஷால் சார் பல தடங்கல்களைத் தாண்டி இந்தப்படம் செய்துள்ளார். எங்களை விட அவருக்காக இப்படம் பெரிய வெற்றி பெறும். என்னை இந்த கதாபாத்திரத்திற்காக நம்பியதற்கு நன்றி. அர்ஜூன் தாஸ் நல்ல நண்பராகக் கிடைத்துள்ளார். அவருடன் நடித்ததும் மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் விஷால் வெங்கட் … GEMBRIO PICTURES சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் இருவருக்கும் பெரிய நன்றி. ஒரு ஐடியா மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பளிப்பது மிகப்பெரிய விஷயம், என்னை நம்பி இன்று வரை ஆதரவாக இருக்கிறார்கள் நன்றி. அர்ஜூன் தாஸுக்கு இந்தக் கதை சொன்னேன், அவர் என்னை நம்பியதற்கு நன்றி. கதை எழுதியது முதல் ஷிவாத்மிகா தான் என் மைண்டில் இருந்தார், சிறப்பாக நடித்து தந்ததற்கு நன்றி. காளிவெங்கட் சாரிடம் கதை சொன்ன போது அவர் நடிப்பாரா எனச் சந்தேகம் இருந்தது. படம் முழுக்க பிணமாக நடிக்க வேண்டும், மூச்சு விடக்கூடாது – ஆனால் அசத்தியிருக்கிறார். சிங்கம்புலி சாரை நிறையக் கஷ்டப்படுத்தியுள்ளோம், சகித்துக்கொண்டதற்கு நன்றி. நாசர் சார் என் படத்தில் ஒரு ஃப்ரேமிலாவது இருக்க வேண்டும் என ஆசைப்படுவேன், அதே போல் தான் அபிராமி மேடமும். இருவருக்கும் நன்றி. ராஜ்குமார் – கேமரா பற்றி எதுவுமே தெரியாத ஆள்; நான் இயக்கம் என்றால் என்னவென்று தெரியாத ஆள். ஆனால் நாங்கள் படித்து இப்போது இந்த மேடையில் ஒளிப்பதிவாளராக, இயக்குநராக இருக்கிறோம் – மகிழ்ச்சி. இப்படத்தில் எனக்காக உழைத்துத் தந்த அனைவருக்கும் நன்றி. செப்டம்பர் 12 இந்தப்படம் திரைக்கு வருகிறது. உங்கள் எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்குமென நம்புகிறேன். ஆதரவு தாருங்கள். நன்றி.
நடிகர் அர்ஜூன் தாஸ் … எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும். இந்த கதாப்பாத்திரம் தந்த விஷாலுக்கு நன்றி. இங்கு வந்து வாழ்த்தும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. GEMBRIO PICTURES சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் இருவருக்கும் நன்றி. இருவரும் டீம்-ஓடு ஷூட்டில் கலந்துகொண்டு ஆதரவு தந்ததற்கு நன்றி. விஷால் – இமான் சார் தான் இசை என்றவுடன், அவர் படத்தைப் பார்த்துக்கொள்வார் என்று சொன்னேன். காளி வெங்கட் சார், அநீதி படத்தில் நடித்திருந்தாலும் அதில் ஒன்றாக நடிக்கவில்லை, ஆனால் இப்படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் நான் லீட் இல்லை, விஷால் அவர் டீம் தான் லீட். நான் ஒரு குட்டி பார்ட். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். ஷிவாத்மிகா அருமையாக நடித்துள்ளார், அவருடன் வேலை பார்த்தது சந்தோஷம். விஷால் கதை சொன்னவுடன் – “நான் தான் பண்ணனுமா?” எனக் கேட்டேன். எல்லோரும் சொல்லியும் என்னை நம்பி தந்ததற்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
இப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளது.
கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான பி.கிருஷ்ண பிள்ளையின்வாழ்க்கை வரலாறு. கேரளாவுக்கும்,இது தமிழகத்துக்கும் அரசியல் ரீதியாகவும், முதல் பெண்கள்முன்னேற்றம் மற்றும் சமூக நீதி போராட்டங்கள் ரீதியாகவும் இருக்கும்ஒற்றுமையை எடுத்துரைப்பது தான் இப்படத்தின் கதைதமிழக கிராமம் ஒன்றின் செல்வந்தரான பரத், கம்யூசனிவாதியாக இருக்கிறார்.ஊர் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வது, சாதியினரில், ஏழைபணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு வித்தியாசமாக பார்க்காமல் .அனைவருடனும் பழகுகிறார்.
அதே சமயம், அவரது பக்கத்து ஊரில் சாதி வன்கொடுமை பிரச்சனைகளில்பாதிக்கப்படும் மக்களுக்கு துணையாக நிற்பது, அந்தமக்களின்பிரச்சனைகளை எதிர்த்து போராட வைப்பதற்காக அவர்களைகேரளாவுக்கு அழைத்துச் சென்று கம்யூனிச போராளிகளை சந்திக்க வைக்கிறார்.அப்போது 96. வயதுள்ள பெண் கம்யூனிச போராளி பி.கே.மேதினி, புரட்சிவீரர் பி.கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கை வரலாறு மற்றும் கேரளாவில் கம்யூனிய புரட்சிஉருவாகி, விஸ்வரூபம் எடுத்தது என்பதை விவரிப்பது தான்
“வீரவணக்கம்” 1940 – ஆண்டில். தொடங்கும் கதை 1946 வரை பயணிக்கின்றனது.இந்த காலக்கட்டங்களில் வெள்ளையனைவெளியேற்ற ஒரு தரப்பு போராடிக் கொண்டிருந்த சமயத்தில்,இந்திய கிராமங்களில் தனி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருந்தஜமீன்கள். மற்றும் நில சுவாந்தர்கள் மூலம் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட விவசாய தொழிலாளர்களைஅனைவரையும் மீட்டு, இதுல புதிய மக்கள் புரட்சியை கம்யூனிசம் எப்படி உருவாக்கியது,என்பதை எதார்த்தாம் மீறாமல், அழுத்தமாக பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர் அனில் வி.நாகேந்திரன்.
சமுத்திரக்கனி பி.கிருஷ்ண பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பணக்காரகம்யூனிசவாதி கதாபாத்திரத்தில் பரத்,
அனில் வி.நாகேந்திரன்எழுதி இயக்கியிருக்கும்,பி.கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கையை உணர்வுப்பூர்வமான படைப்பாக கொடுத்துள்ளார்.
Sriperumbudur, August 29, 2025: Vignesh Polymers, a pioneer in appliance and automotive component and module manufacturing, today marked a historic milestone with the Groundbreaking Ceremony of its Air Conditioning Division, unveiling its 10th Factory Unit at the SIPCOT Industrial Park, Sriperumbudur Taluk.
The new facility will feature a world-class manufacturing unit, reinforcing the company’s commitment to innovation, excellence, and global quality standards. The project involves the establishment of a fully integrated air-conditioning manufacturing facility, designed to support end-to-end production under one roof. The plant will encompass sheet metal fabrication, heat exchanger and copper tubing lines, injection moulding and EPS packing operations as well as the in-house production of propeller and crossflow fans.
The event was graced by distinguished guests from Blue Star, including:
Mohit Sud, Group President, CPAG Division
Nithianand S, Executive VP (P&SCM)
Haridas C, Executive VP – Sales and Marketing
Munish Malhotra, VP (P&SCM)
Suresh Kaushal, VP – Corporate QA
Sudhir Sonkhedkar, GM (P&SCM)
Naveen Kumar, Plant Head
Bijal Naik, Procurement Head
Kulin Bankar, QA Head
Jaysingh Chaudhary, AGM – SQA
Saravanakumar Muthu, Manager (P&SCM)
Satyaban Behera, Zonal Head – Union Bank of India, Chennai The celebrations began with a traditional welcome, Tamil Thai Valthu, and lamp lighting ceremony, followed by the Groundbreaking ritual. Guests also participated in a symbolic tree planting activity, underscoring Vignesh Polymers’ vision of sustainability alongside industrial progress.
Chennai, August 28, 2025: Kauvery Hospital Vadapalani has unveiled Kauvery-SAC – Sports Medicine & Arthroscopy Centre setting a new benchmark in advanced orthopaedic care for the city. The centre also offers cartilage regenerative therapy for young, active individuals, providing cutting-edge solutions to preserve and restore joint health at an early stage. With this launch, Kauvery Vadapalani positions itself as Chennai’s exclusive destination for arthroscopy, the gold standard in minimally invasive joint treatment.
Arthroscopy, a procedure performed through keyhole incisions using high-definition 3D cameras and specialized instruments, has revolutionized orthopaedics worldwide. Globally, more than 5 million arthroscopic procedures are performed annually, and studies show that it offers patients up to 50% faster recovery compared to open surgeries, with lower complication rates. Despite its advantages, awareness in India remains limited, often being associated only with elite athletes. Kauvery Vadapalani aims to change this perception by making arthroscopy accessible to anyone with persistent joint pain, instability, or injuries from young athletes to the elderly.
Speaking at the launch, Dr. Ravi Sankar Kirubanandan, Senior Consultant Orthopaedics at Kauvery Hospital Vadapalani, said “At Kauvery Vadapalani, we are not just offering a treatment, we are building an ecosystem around recovery. Arthroscopy allows us to treat conditions such as ACL tears, rotator cuff injuries, and meniscus damage with minimal intervention and the fastest rehabilitation. The patients get to walk, and return to normalcy in 6 hours. But it’s not limited to sports, it is equally transformative for an elderly patient with degenerative knee issues or a homemaker with shoulder stiffness and pain. Our focus is comprehensive: precision surgery, structured rehab, and enabling patients to return not just to activity, but to confidence and quality of life.”
Adding a leadership perspective, Dr. Aravindan Selvaraj, Executive Director and Co-founder, Kauvery Group of Hospitals, stated “The launch of Kauvery-SAC at Vadapalani is part of our broader vision to build true centres of excellence. As an orthopaedic surgeon myself, I know that joint problems don’t just limit mobility, they impact independence, mental health, and livelihood. This centre combines advanced technology, expert clinicians, and personalised and spontaneous rehabilitation, ensuring Chennai has a world-class hub for arthroscopy. We want every individual to know that world-class joint preservation and recovery is now accessible, right here in Vadapalani.”
The launch event was inaugurated by Mr. Sai Kishore, Indian cricketer and chief guest, who shared his thoughts on the importance of accessible sports medicine:
“In sport, injuries are inevitable, but recovery is what defines a comeback. It’s heartening to see a facility like Kauvery-SAC focusing not just on elite athletes but on every individual who deserves the same quality of care. Arthroscopy and sports medicine together can change lives, and I believe this centre will play a huge role in strengthening Chennai’s sporting and healthcare ecosystem.”
With this launch, Kauvery Hospital Vadapalani strengthens its position as the city’s trusted destination for arthroscopy and joint care, bringing global standards of treatment to local communities, ensuring quicker recoveries, safer procedures, and improved quality of life for all.
The brand is set to redefine comfort, support, and durability with the launch of four new product series
Tamil Nadu, August 28th, 2025: Peps Industries, India’s leading sleep solutions brand, has unveiled its latest range of luxurious mattresses, exclusively designed to bring world-class sleep experiences for consumers in Chennai, Tamil Nadu.
The exclusive store in Chennai was formally inaugurated by Mr. G. Shankar Ramm, Managing Director, Peps Industries Pvt. Ltd. marking a significant milestone in the brand’s journey of bringing world-class sleep solutions closer to consumers in Tamil Nadu.
Developed with a commitment to innovation and value, Peps’ new range introduces four product series including Peps Comfort, Peps Supreme, Peps Restonic Memory Foam, along with the Superior Spring Range, each crafted to elevate comfort, support, and durability, while addressing evolving consumer needs for quality sleep.
Speaking on the launch, Mr. G Shankar Ramm, Managing Director, Peps Industries, said, “At Peps, our mission has always been to bring world-class sleep solutions closer to our consumers. With the launch of our new product series in Chennai, we are not only expanding our portfolio but also setting new benchmarks in comfort, durability, and sustainability. Each mattress in this collection has been thoughtfully designed with advanced global technologies and premium materials to meet the evolving lifestyle and wellness needs of today’s consumers. Tamil Nadu has always been a key growth market for us, and this launch reinforces our commitment to delivering quality sleep that truly enhances lives.”
Peps Comfort is crafted using premium high-carbon, high-tensile steel wire sourced from Tata Steel, ensuring exceptional durability and long-term sag resistance. Built with advanced European technology, the mattress also features an iron-resistant flat-knitted polyester fabric and is made with 93% biodegradable materials, making it both resilient and eco-friendly.
Designed for an undisturbed night’s sleep, Peps Supreme features zero-disturbance pocketed springs, eliminating motion disturbance between partners. Manufactured with the world’s most advanced pocketed spring technology, the mattress is crafted for durability, breathability, and comfort.
Peps Restonic Memory Foam features two new launches including the Peps Sanibel Bonnell Plush Memory Foam, and Peps Ardene Pocketed Plush Memory Foam. Part of the American Restonic Great Sleep Series, the Peps Sanibel Bonnell Plush Memory Foam is a hybrid mattress that integrates temperature, and pressure-sensitive breathable memory foam, with high-carbon Tata Steel bonnell springs for superior comfort. Additionally, the Peps Ardene Pocketed Plush Memory Foam serves as the ultimate luxury mattress with zero motion transfer. Combining advanced pocketed spring technology with plush memory foam, the mattress offers unparalleled comfort and undisturbed sleep.
Peps has built a strong footprint in Tamil Nadu with over 2,500 multi-brand outlets, including 250 dealers in Chennai, making its products widely accessible across the state. Strengthening this presence further, the company currently operates 18 exclusive stores in Tamil Nadu, with plans to expand this network to 25 stores shortly. The newly launched 750 sq. ft. exclusive store in Chennai has been designed as an immersive experience center, showcasing the brand’s complete collection – from spring, foam, and coir mattresses to a wide range of sleep accessories, enabling consumers to explore and choose the perfect sleep solution in a hands-on environment. Across India, Peps currently operates 77 exclusive stores, with an aggressive expansion plan underway to deepen its retail presence.
About Peps Industries Pvt. Ltd.
Peps has a pan-India representation with their manufacturing units in Northern, Eastern & Western India. The products are delivered with care to exceed the customer expectations. The manufacturing facility is built on an 11-acre industrial campus in Coimbatore. It is managed by industry experts with over four decades of manufacturing expertise. All their products are patented in India and internationally such as Marvelous Middle spine guard for look & feel, Zero disturbance for no partner disturbance from many. Marvelous Middle – the unique construction to support one-third of the body’s weight, helps reduce back strain significantly. Spine Guard India’s first Inner spring mattress with Visco Elastic foam positioned as End –of – Backache. For more details, visit www.pepsindia.com
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை, கோலாகலமாக நடைபெற்றது.
பிரம்மாண்டமாக நடைபெற்ற பூஜை விழாவினில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் சசிகுமார், சிம்ரன், RJ பாலாஜி, நடிகர் மணிகண்டன், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, லவ்வர் பட இயக்குநர் பிரபு ராம் வியாஸ், டிடி, ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான காதல் கதையாக உருவாகும் இப்படத்தை, “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
இந்த வருடத்தின் மெகா பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த், இப்படத்தில் நாயகனாக களமிறங்குகிறார். அவருக்கு ஜோடியாக, மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரம். இளைஞர்களின் கனவுகன்னியாக கொண்டாடப்படும் நாயகி அனஸ்வரா ராஜன் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்கிறார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றுகிறார்.
படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள பெத்தி (Peddi) படத்துக்கான பாடல் படப்பிடிப்பு, மைசூரில் ஜானி மாஸ்டர் நடன அமைப்பில், 1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் தொடங்கியது!!
குளோபல் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், முன்னணி இயக்குநர் புஜ்ஜி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கும், மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி” படம், பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. குளோபல் ஸ்டார் ராம் சரண் அசத்தலான மேக் ஓவர், வலிமையான உடல் மாற்றம், கடுமையான பயிற்சிகள் என அந்தக் கதாபாத்திரத்தை முழுமையாக வெளிப்படுத்த அவர் தனது முழு ஆற்றலையும் தந்து உழைத்து வருகிறார்.
மிகுந்த பெருமையுடன், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்க, விருத்தி சினிமாஸ், மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் & சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்க, மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் இப்படம், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் கிளிம்ப்ஸே, ராம் சரண் மேக் ஓவர் புகைப்படங்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், படக்குழு மைசூரில் குளோபல் ஸ்டார் ராம் சரண் பங்கேற்க, பிரம்மாண்டமான பாடலைக் காட்சிப்படுத்த தொடங்கியுள்ளது. பிரபல நடன அமைப்பாளர் ஜானி மாஸ்டர் நடன அமைப்பில், ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் A.R. ரஹ்மான் இசையமைத்த இந்த மாஸ் பாடல், மிகப்பெரிய அளவில், 1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் படமாக்கப்படுகிறது. ராம் சரண் தனது தனித்துவமான கவர்ச்சி மற்றும் ஆற்றல்மிகு நடன அசைவுகளால் ரசிகர்களை கவர, இந்தப் பாடல் படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகவும், ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டமாகவும் அமைய உள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை உற்சாகத்தில் இருந்தாலும், “பெத்தி” குழுவினர் தங்கள் பணியில் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது.
இந்தப் படத்தில் முன்னணி கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்க, கருநாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். மேலும் ஜகபதி பாபு (Jagapathi Babu) மற்றும் திவ்யேந்து ஷர்மா ( Divyendu Sharm) முக்கிய துணை வேடங்களில் நடிக்கின்றனர்.
பிரபல ஒளிப்பதிவாளர் R. ரத்தினவேலு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, தேசிய விருது பெற்ற நவீன் நூலி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.
பெத்தி 2026 மார்ச் 27 அன்று பான்-இந்திய ரிலீசாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கதை, இயக்கம்: புஜ்ஜி பாபு சனா வழங்குபவர்கள்: மைதிரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ் தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு இசை: A.R. ரஹ்மான் ஒளிப்பதிவு: R. ரத்தினவேலு தயாரிப்பு வடிவமைப்பு: அவிநாஷ் கொல்லா எடிட்டிங்: நவீன் நூலி நிர்வாக தயாரிப்பாளர்: V. U. பிரவீன் குமார் மார்க்கெட்டிங்: First Show மக்கள் தொடர்பு : யுவராஜ்
“கச்சி சேரா (Kachi Sera),” “ஆச கூட (“Aasa Kooda),” “சித்திர பூத்திரி (Sithira Poothiri),” “விழி வீழுது” (Vizhi Veezhudhu) போன்ற வைரல் ஹிட் சிங்கிள்களால் 21 வயதிலேயே சமூக வலைதளங்களில் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்ற சாய் அப்யங்கர், இப்போது தனது முதலாவது மலையாள சினிமா பாடலை வெளியிட்டுள்ளார். ஷேன் நிகம் ( Shane Nigam) நடிக்கும் “பல்டி” படத்தில் இடம்பெறும் “ஜாலக்காரி” பாடல் வெளியானவுடன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வினாயக் சசிகுமார் (Vinayak Sasikumar) எழுதியுள்ள இந்தப் பாடலை, சாய் அப்யங்கர் (Sai Abhyankar) தானே இசையமைத்து, சாய் மற்றும் “கூலி” படத்தின் ஹிட் பாடல் “மோனிகா” m-வைப் பாடிய சுப்லாஷினி (Subhlashini ) இணைந்து பாடியுள்ளனர். சாயின் அறிமுகப் புரமோ வீடியோ ஏற்கனவே சமூக வலைதளங்களில் 4 மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்களைத் தாண்டியுள்ளது. இப்போது “ஜாலக்காரி” அதிகாரப்பூர்வ வெளியீட்டுடன், இசை ரசிகர்கள் இதுவே அடுத்த வைரல் ஹிட் ஆகுமா என ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
பிரபல பாடகர்கள் திப்பு மற்றும் ஹரினியின் மகனான சாய், யூடியூபில் ஏற்கனவே சாதனைகளைப் படைத்துள்ளார். “கச்சி சேரா” மற்றும் “ஆச கூட” சிங்கிள்கள் மட்டும் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளன. “ஜாலக்காரி” மூலம் சாய் அப்யங்கர், மலையாளத் திரையுலகில் தனது இசை அமைப்பாளர் மற்றும் பாடகர் அறிமுகத்தை அதிகாரப்பூர்வமாகக் அறிவித்துள்ளார்.
உன்னி சிவலிங்கம் ( Unni Sivalingam) இயக்கும் “பல்டி”, எஸ்டிகே ஃப்ரேம்ஸ் மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் (Binu George Alexander) புரொடக்ஷன்ஸ் சார்பில் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் தயாரிக்கின்றனர். ஷேன் நிகம் இதுவரை நடித்த படங்களில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம், இசை, ஆக்ஷன் மற்றும் மலையாளம்–தமிழ் நட்சத்திர அணியை ஒருங்கே கொண்டு வருகிறது. இது ஷேன் நிகமின் 25வது படமாகும்.
சாய் அப்யங்கர், தற்போது மலையாள அறிமுகத்துடன், தமிழ் சினிமாவில் பல பெரிய திட்டங்களில் பணிபுரிந்து வருகிறார். அதில் லோகேஷ் கனகராஜின் “பென்ஸ்”, சூர்யா நடிக்கும் “கருப்பு”, சிலம்பரசனின் “STR 49”, அல்லு அர்ஜுன் – அட்லீ இணையும் படம் மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “டூட்” ஆகியவை அடங்கும். இருந்தாலும், “ஜாலக்காரி” என்ற பாடல், அவரது முதலாவது திரைப்பட இசை அமைப்பும், பிளேபேக் பாடகராகும் அறிமுகமாக என்றும் நினைவில் நிற்கும்.
பல்டி படத்தில் வில்லன் கதாபாத்திரம் சோடா பாபுவாக அல்போன்ஸ் புத்ரன், குமாராக ஷாந்தனு பக்யராஜ், பயிரவனாக இயக்குநர்-நடிகர் செல்வராகவன் ஆகியோரும் நடிக்கின்றனர். இதன் புரமோ வீடியோக்கள், கதாபாத்திர க்ளிம்ப்ஸ் ஆகியவை ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படத்தின் தயாரிப்பு கட்டுப்பாட்டாளராக கிஷோர் புரக்கத்திரி, முதன்மை துணை இயக்குனராக ஸ்ரீலால். துணை இயக்குனர்களாக, சபரிநாத், ராகுல் ராமகிருஷ்ணன், சாம்சன் செபாஸ்டின் மற்றும் மெல்பின் மேத்யூ பணியாற்றுகின்றனர். இப்படத்தின் கலை இயக்குனராக ஆஷிக்.S, கூடுதல் வசனகர்த்தாவாக T.D.ராமகிருஷ்ணன் மற்றும் க்ரியேடிவ் தயாரிப்பாளரக வாவா நுஜுமுதீன் பணியாற்றிகின்றனர்.
படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம் :
ஒளிப்பதிவு : அலெக்ஸ் ஜே. புலிக்கல் (RDX: Robert Dony Xavier புகழ்) எடிட்டிங் : சிவ்குமார் வி. பானிக்கர் இணை தயாரிப்பாளர் : ஷெரின் ரேச்சல் சாந்தோஷ் நிர்வாக தயாரிப்பு : சந்தீப் நாராயண் DI : கலர் பிளானெட் ஆடை : மெல்வி J ஒலி வடிவமைப்பு & மிக்ஸ் : விஷ்ணு கோவிந்த் கலை இயக்கம் : ஆஷிக் எஸ். சண்டை : ஆக்ஷன் சாந்தோஷ் & விக்கி மாஸ்டர் நடன இயக்கம் : அனுஷா இசை உரிமை : திங்க் மியூசிக் மேக்-அப்: ஜிதேஷ் பொய்யா ஸ்டில்ஸ் : சஜித் R M கலரிஸ்ட்: ஸ்ரிக் வாரியர் VFX : Accel Media, Foxdot Media தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் : பென்னி கட்டப்பண்ணா CFO : ஜோபீஷ் ஆண்டனி COO : அருண் சி தம்பி வெளியீடு: மூன்ஷாட் என்டர்டெயின்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட். பப்ளிசிட்டி டிசைன்ஸ்: வியாகி டைடில் வடிவமைப்பு : ராக்கெட் சயின்ஸ் ப்ரோமோஷன் : Snakeplant LLP மக்கள் தொடர்பு : யுவராஜ்
நடிகர் ரவி மோகன் தனது புதிய அத்தியாயமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தை என்று பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார். அதனுடன், அவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படத்தின் அறிமுகம், இயக்குனர் கார்த்தியோகியின் “BROCODE” திரைப்படம் என ரவி மோகன் ஸ்டுடியோஸின் தயாரிப்புகளை அறிவித்தனர்.
இவ்விழாவில், ரவி மோகன், கெனிஷா, சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கார்த்திக் யோகி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ கௌரி பிரியா, மணிகண்டன், கண்ணா ரவி, அர்ஜுன் அசோக், மாளவிகா மனோஜ், ரித்தீஷ், ஜெனிலியா, பேரரசு என பலர் இவ்விழாவில் கலந்துக்கொண்டனர்.
இயக்குனர், தயாரிப்பாளர் & நடிகர் ரவி மோகன் பேசும்போது,
என்னுடைய அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி இந்த தருணத்தில் நான் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.
நான் இயக்குனர் ஆகி விட்டேன். நான் இயக்குனர் ஆகினால் யோகி வைத்ததால் படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அதற்கான புரோமோவும் எடுத்துவிட்டேன். இன்று என்னுடைய இரண்டு படங்களின் பூஜையும் ஒரே நேரத்தில் நடப்பதில் மிகவும் மகிழ்ச்சி.
கார்த்தியும் நானும் ஆடம்பரத்தை விரும்பாதவர்கள். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது தாய்லாந்தில் சாலையில் அவ்வப்போது பேசிக்கொண்டே நடந்து போவோம். அப்போது எங்களுடைய மீசை, தாடி, உடைகளை பார்த்து இருவரும் அண்ணன் தம்பிகளா என்று பலர் கேட்டிருக்கிறார்கள். அந்த ப்ரோ கோட்-ம் அன்பும் வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
சினிமா… கோடிக்கணக்கான மக்களுக்கான பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு உணர்ச்சி. திரையரங்கில், யாரோ ஒருவரின் வசனமும் நடிப்பும் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும், கண்ணீர் சிந்தவும் செய்கிறது. பலரின் உழைப்பால் தான் ஒரு படம் உருவாகிறது. அந்தப் படங்களில் மக்களால் விரும்பப்பட்டவை வெற்றியை அடைகின்றன. பல நல்ல படங்கள் மக்களால் காலங்கள் கடந்தும் இன்னமும் கொண்டாடப்படுகின்றன.
ஒரு சாதாரண நபரை கூட, உலகம் கொண்டாடும் ஒரு பிரபல நட்சத்திரமாக மாற்றும் சக்தி சினிமாவுக்கே உண்டு. அதில் நானும் ஒருவன் தான்.
எனக்கு இந்த உலகத்தில் மிகவும் பிடித்தது என் ரசிகர்கள். அவர்கள் எனக்குக் கொடுத்த பரிசு – இந்த சினிமா. நடிப்பதைக் கடந்து, சினிமாவில் நான் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவது நிறைய இருக்கிறது. அது, நான் நீண்ட நாட்களாகக் கனவு காண்பதும்கூட.
அதில் ஒன்று தான் ரவி மோகன் ஸ்டுடியோஸ் – என் சொந்த தயாரிப்பு நிறுவனம். என் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படியாக, என் மனசுக்கு பிடித்த இரண்டு முக்கிய விஷயங்களை வைத்திருக்கிறேன்.
ஒன்று – இயக்குநர் கார்த்திக் யோகியின் இயக்கத்தில் நான் நடிக்கும் ப்ரோ கோட் படம். இன்னொன்று – நம்ம யோகிபாபுவை வைத்து, நான் முதன்முறையாக இயக்கவிருக்கும் மற்றொரு படம்.
முக்கியமாக உங்களிடம் சொல்ல வேண்டிய விஷயம் இன்னும் இருக்கு. ரவி மோகன் ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்டது, என்னுடைய படங்களை தயாரிப்பதற்காக மட்டுமல்ல. பலரின் கனவுகளுக்கு உயிர் கொடுக்கத்தான்.
அதில், முதல் முறையாக திரைப்படம் இயக்கவிருக்கும் புதிய இயக்குநர்கள், இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு, முன்தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
அதோடு, ஓடிடி தளங்களில் கற்பனை மற்றும் ஆவணப்படத் தொடர்கள் என பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
மேலும், சரியான முறையில், நல்ல உள்ளடக்கத்துடன் உருவாக்கப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் படங்களுக்கு ஆதரவளிக்க எப்போதும் ஒரு துணைக் கை இருக்கும். நல்ல கைத்திறமைகளுக்கு, திரை கதவுகள் திறக்கப்படும்!
புது புது பாடல்களை உருவாக்கும் சுயாதீன இசைத் திறமையாளர்களுக்கு அடையாளம் கொடுக்கவும் இதே நிறுவனம் பங்கெடுக்கிறது.
சினிமா துறையில் ஆரம்ப காலத்திலிருந்தே எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள் நடிகர்களாகவும், இயக்குநர்களாகவும். அவர்களில் பலர் ஏற்கனவே ரவி மோகன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ளனர். இன்னும் பல நண்பர்களுடன் சேர்ந்து நல்ல படங்கள் செய்ய வேண்டும்.
இதுவே எங்களின் முக்கிய நோக்கம். இது ஒரு நீண்ட பயணம். தனி ஒருவரின் உழைப்பையும் கனவையும் தாண்டி வெற்றியை அடைவதற்கு, இதில் பயணிக்கப்போகும் உங்களின் 200% பங்களிப்பும் உறுதியும் இருக்கும் என்பதே நம்பிக்கை. அதற்காகத்தான் இந்த தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எல்லாரும் பயன் அடைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
சிவராஜ் அண்ணா எனக்காக இங்கு வந்து இந்த அளவிற்கு பேசுவார் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை மிக்க நன்றி அண்ணா. நான் உங்க வீட்டிற்கு வந்தேன் நீங்கள் சாப்பாடு போட்டீர்கள் உங்கள் வீட்டு உப்பை சாப்பிட்டு இருக்கிறேன் அந்த நன்றி எனக்கு எப்போதும் இருக்கும்.
கன்னடத்தில் சிவா அண்ணன் படம் தான் சூப்பர் ஹிட் ஆகும் அவருடைய படங்களை எனது தந்தை வாங்கி தெலுங்கில் வெளியிடுவார் அப்போது இருந்தே நான் சிவா அண்ணனை பார்த்து தான் வளர்ந்தேன் அவருடன் ஒரு காட்சியில் நடித்தாலும் எனக்கு சந்தோஷம்தான்.
ரவி மோகன் ஸ்டுடியோஸ் நன்றாக வளர்ந்த பிறகு நிச்சயம் சிவகார்த்திகேயனுக்கு அவர் விருப்பப்படி வாய்ப்பு கிடைக்கும்.
இன்று இன்னொரு இன்ப அதிர்ச்சி, நான் இயக்குனராக முடியும், தயாரிப்பாளராக முடியும் என்று நம்பிக்கையோடு உன்னால் பாடலாசிரியராகவும் ஆக முடியும் என்று கெனிஷா நம்பிக்கை கொடுத்தார். அந்த நம்பிக்கையில் நான் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன். அவர் அம்மாவை பற்றி எழுத சொன்னார். ஆனால், நான் என் அம்மாவை மனதில் நினைத்து எழுதினேன். அம்மா என்பது உறவு அல்ல, உணர்வு என்று அப்போதுதான் புரிந்தது. நான் எழுதிய பாடல் வரிகளுக்கு கெனிஷாவே இசையமைத்து பாடியுள்ளார் என்றார்.
நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் பேசும்போது,
இங்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தயாரிப்பு நிறுவனம் என்பது சாதாரண விஷயம் அல்ல. நம்முடைய கனவை திரையில் கொண்டு வரக்கூடிய மிகவும் பொறுப்பு மிகுந்த விஷயம். ரவிமோகன் சரி எனக்கு அவ்வளவாக தெரியாது. நான் சார் என்று தான் கூப்பிடுவேன். சினிமா துறையில் அவர் என்னைவிட சீனியர்.
பராசக்தி படத்தின் போது தான் அவருடன் நெருங்கி பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. மிகவும் நல்ல மனிதர் நம் அவருடைய படங்களை பார்த்து அவர் இப்படித்தான் இருப்பார் என்று ஒரு எண்ணம் இருக்கும். அவர் அப்படியேதான் இருக்கிறார். இந்த விழாவிற்கு என்னை அழைத்தது மட்டுமில்லாமல் நேற்று எனக்கு போன் செய்து, நாளைக்கு நிச்சயம் வந்துருங்க ப்ரோ என்று நினைவுபடுத்தினார்.
இங்கு வந்து பார்த்த பிறகு அவருக்குள் இருக்கும் அத்தனை கனவுகளும் ஒரு நடிகராக தயாரிப்பாளராக பொறுப்பேற்று என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து இருக்கிறார். ப்ரோ கோட் படத்தின் ப்ரோ மூவி திருட்டுத்தனமாக நான் பத்து நாட்களுக்கு முன்பே பார்த்து விட்டேன். இயக்குனர் கார்த்திக் யோகி எனக்கு காண்பித்தார். எனக்கு மிகவும் பிடித்த ஜானர். அப்போதே, முதல் பாதியை காண்பித்து விட்டீர்கள், அடுத்த பாதியை எப்போது காட்டப் போகிறீர்கள் என்று கேட்டேன். அந்த அளவிற்கு மிகவும் நகைச்சுவையாக இருந்தது. ப்ரோ கோட் என்ற பெயரே சூப்பர். பெயரிலேயே அனைத்தும் வந்துவிட்டது. ரவி மோகன் ஸ்டுடியோவில் நடிகராக நீங்கள் பணியாற்றி இருக்கும் ப்ரோ கோட் படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்.
அடுத்து, யோகி பாபு சாருக்கு வாழ்த்துகள். அவருடைய நகைச்சுவைக்கு அவர் எப்போதும் எல்லை வகுத்துக் கொண்டதே கிடையாது. ஆர்டினரி மேன் உடைய வாழ்க்கை ஒரு எக்ஸ்ட்ரா ஆர்டினரி பயணமாக இருக்கும் என்பதை கூறுவது தான் இந்த படம். அதுக்கு பொருத்தமானவர் யோகி பாபு தான். ஆனால் அவரிடம் கேட்டால் குரு நான் காமெடி நடிகன் என்பார். ஆனால், அவருக்குள் ஒரு ஹீரோ இருக்கிறார் என்பதை படத்தை பார்த்தால் தெரியும்.
ஒரு நடிகர் இயக்குனர் ஆவது சாதாரண விஷயம் அல்ல. சிறு வயது முதலே சினிமாவில் பயணித்ததால் அந்த நம்பிக்கை அவருக்கு வந்திருக்கிறது. எல்லோருக்கும் இயக்குனராக வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால், எல்லோராலும் ஒரு படத்தை இயக்கி விட முடியாது. அதேபோல், எல்லா நடிகர்களுக்கும் இயக்குனராகும் தகுதி வந்து விடாது. ஆனால், ரவி மோகனுக்கு இருக்கிறது. அடுத்து கார்த்தியும் படம் இயக்குவார் என்று நம்புகிறேன். அவருக்குள்ளும் இயக்குனர் இருக்கிறார். அதேபோல், மணிகண்டனும் விரைவில் இயக்குனர் ஆகி விடுவார் என்று நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள்.
இப்படத்தின் ப்ரோமோ பார்க்கும்போது நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிகிறது. ரவி மோகன் இயக்கும் ஆர்டினரி மேன் படமும் வெற்றியடைய வாழ்த்துகள்.
அடுத்து காக்கி ஸ்குவாட். இப்படத்தின் டீசர் பார்த்தேன். நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது. கண்ணா ரவியுடைய மண்டேலா, குருதி ஆட்டம், இப்போது கூலி வரைக்கும் அவருடைய நடிப்பை பார்த்து வருகிறோம். அதேபோல் இந்த படத்திலும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
இப்படத்தின் இயக்குனர் சக்தியையும் எனக்கு தெரியும். இதற்கு முன்பு மூன்று படம் இயக்கி இருக்கிறார். எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசர் ஆகுவும் இருக்கிறார். எப்படி இரண்டு வேலைகளையும் செய்கிறார் என்று தெரியவில்லை.
இப்போது ரவி மோகன் ஸ்டுடியோ என்று இன்னொரு தயாரிப்பு நிறுவனம் வந்துவிட்டது. தைரியமாக ஒரு கதையை நம் தேர்வு செய்யலாம். நானும் அது போல ஒரு சில படங்களை அளித்துக் கொண்டிருக்கிறேன். இதுபோல இன்னும் ஒரு 15 தயாரிப்பு நிறுவனங்கள் வந்துவிட்டால், நிறைய நல்ல விஷயங்களை வெளிக்கொண்டு வர முடியும். எங்கள் மீது படும் வெளிச்சம் அதன் மீதும் பட்டால் இதுவரை மக்கள் எங்களுக்கு கொடுத்த இடத்தை நாங்கள் சரியாக பயன்படுத்தி இருக்கிறோம் என்று மகிழ்ச்சியாக இருக்கும். இந்த மூன்று படங்களும் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மூன்று படங்களின் வெற்றி விழாவிற்கும் அழையுங்கள். கண்டிப்பாக வந்து கலந்து கொள்வேன்.
நான் கல்லூரியில் படிக்கும்போது சந்தோஷ் சுப்பிரமணியம் படம் வந்தது, ஜெனிலியாவை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்று ஜெனிலியா மற்றும் ரவி மோகனின் நடிப்பை பார்த்ததும் கல்லூரி நாட்கள் நினைவிற்கு வந்தது. இருவரும் மீண்டும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும்.
ரவி மோகன் தயாரிப்பில் அல்லது இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். தயாரிப்பில் அவரை விட நான் சீனியர். ஆகையால் ரவி மோகன் சார் உங்களுக்கு எப்போது சந்தேகம் வந்தாலும் என்னிடம் தாராளமாக கலந்து கொள்ளலாம்.
பராசக்தி படத்தில் நானும் ரவி மோகன் சாரும் நடித்ததை பற்றி கூறுவதற்கு நிறைய இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பம் வரும்போது கூறுகிறேன்.
சிவராஜ் சாரை எங்க பார்த்ததில் மகிழ்ச்சி என்றார்.
நடிகர் டாக்டர் சிவராஜ் பேசும்போது,
ஜெயம் படத்தில் இருந்து எப்போது வரைக்கும் ரவி மோகனின் வளர்ச்சி அற்புதமான வளர்ச்சியாக இருக்கிறது. அவரை எனக்கு அவ்வளவாக பழக்கம் இல்லை ஆனாலும் அவர் படங்களை நான் பார்த்திருக்கிறேன் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக செய்வார். குறிப்பாக சகலகலா வல்லவன் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் சென்னை என்னுடைய ஊர். எனக்கு எப்போதும் சென்னை வருவது பிடிக்கும்.
சேகர் மற்றும் விஜய் பிரசாத் இருவரும் என்னுடைய பால்ய நண்பர்கள். 45 வருடங்களாக நாங்கள் நண்பர்கள். அவர்களுடன் இங்கு வந்திருக்கிறேன்.
ஆர்டினரி மேன் என்று இப்படத்திற்கு அழகாக பெயர் வைத்திருக்கிறார்கள். சுருக்கமாக ஓம் என்று அழைக்கப்படும் இப்படம் நிச்சயம் மாபெரும் வெற்றி அடையும். ஏனென்றால், ஓம் என்றாலே நேர்மறையான அதிர்வலைகள் தான் அங்கு இருக்கும்.
ரவி மோகனுடன் நான் இணைந்து நடித்தால், அண்ணனாகவோ நண்பனாகவும் மெதுவாக இருந்தாலும் நேர்மறையான கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பேன்.
ரவி மோகனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். கார்த்திக் சாருக்கு நன்றி என்றார்.
நடிகர் கார்த்தி பேசும் போது,
என் நண்பன் ரவி தயாரிப்பாளராக ஆகும்போது ஒரு நண்பனாக நான் சில விஷயங்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இங்கு வந்து பார்க்கும்போது தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் தயாரிப்பு நிறுவனத்தை இவ்ளோ பெரிய விழாவாக நடத்தியதில்லை.
அதுமட்டுமில்லாமல், அவர் ஏன் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என்று கூறிய போது மிகவும் பெருமையாக இருந்தது. இப்போது தன்னை கை கொடுத்து தூக்கி விட மாட்டார்களா என்று பல திறமையான இயக்குனர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரவிக்கு அப்பா இருந்தார், அண்ணன் இருந்தார். ஆனால், அனைவருக்கும் நான் இருக்கிறேன் என்று ரவி கூறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
மேலும், எனக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. ப்ரோ கோட் என்பதை கேட்கும் போது புதுசாக இருக்கிறது. ஆர்வமாக இருக்கிறது.
ரவியை நான் முதன்முதலாக பார்த்தது எப்போது என்று கூற ஆசைப்படுகிறேன். நான் சினிமாவுக்கு வரும்போது சண்டை பயிற்சி வகுப்பிற்கு சென்றேன் அங்கு தான் ரவி அண்ணனை சந்தித்தேன். சாதாரணமாக நாங்கள் மூன்று அடியில் குதித்தால் ரவி அண்ணன் 10 அடியில் குதிப்பார். ஐயையோ! சினிமா என்றால் இப்படித்தான் இருக்குமோ என்று பயந்தேன். பிறகு எங்களை அழைத்து சென்று ஜூஸ் வாங்கி கொடுப்பார். காசு கொடுத்தால், நீங்க எல்லாம் சின்ன பசங்க காசு குடுக்க கூடாது என்று அவரே கொடுப்பார். சிறிது காலத்திற்கு பிறகு தான் அவர் என்னைவிட சின்ன பையன் என்று தெரிந்தது. அதன் பிறகு அண்ணா என்று கூப்பிட்டால் அடி விழும் என்று ரவி என்று கூப்பிட ஆரம்பித்தேன். பிறகு அவருடைய முதல் படத்தை பார்த்த பிறகு அவருடைய உடைகள் போன்று எல்லா விஷயங்களையும் பேசுவோம். அப்படித்தான் எங்களுடைய நட்பு ஆரம்பித்தது.
பொன்னியின் செல்வன் படத்தில் ரவியை பார்த்து நான் மிகவும் மகிழ்ந்தேன். ஏனென்றால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டிலேயே ராஜாவாக நடிக்கப் போவது யார் என்ற ஒரு கேள்வி இருந்தது. தாய்லாந்தில் படப்பிடிப்பில் அவர் ராஜாவாக உக்காந்திருந்ததை பார்த்தபோது ராஜாவுக்கு உரிய அனைத்து லட்சணங்களும் அவரிடம் இருந்தது. அதைவிட அவரிடம் எனக்கு பிடித்த விஷயம் என்றால் மனதால் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் ரவி. அதை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது.
இரவு உனது நேரத்தில் எனக்கு ஒரு கதையை சொன்னார். அதை கேட்டதும் ஜிம் கேரி அளவிற்கு இருந்தது அவருடைய ஒரு பக்கம் மட்டும் தான் நமக்கு தெரியும். ராஜா அண்ணா கூட திரையில் இன்னும் அதை காட்ட வில்லை, யோகி பாபுவை வைத்து இயக்கும் படத்தில் அதை பார்க்கலாம் என்று நினைக்கிறேன். ரவி எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார் என்று தான் நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவருக்குள் சீரியஸ் ஆன ஒரு மனிதர் இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. உலக சினிமா அனைத்தையும் அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டே இருப்பார். அவருக்கு படத்தொகுப்பும் மிக நன்றாக தெரியும். அதாவது ஒருவன் படிக்காதது போன்று இருக்கும். ஆனால், நல்ல மார்க் எடுப்பதை நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா?! அது போல் தான் ரவியும், என்றார்.
இயக்குனர் ராஜா மோகன் பேசும்போது,
ரவியுடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு 17 வயது இருக்கும் போது அவனுக்கு 11 வயது அப்போது பரதநாட்டியம் 5 மணி நேரம் தொடர்ச்சியாக அரங்கேற்றம் செய்தான். அப்போது இவ்வளவு வருடமாக மிரட்டி உருட்டி கொண்டிருந்து அவனை அண்ணார்ந்து பார்த்தேன். அதேபோல் இன்றும் அண்ணார்ந்து பார்க்கிறேன்.
புதுப்பேட்டை படத்தில் ஒரு வசனம் வரும் அது போல, இவ்வளவு திறமைகளையும் வைத்துக் கொண்டு தான் என்னிடம் இத்தனை வருடம் நடித்துக் கொண்டிருந்தாயா?! என்று தான் கேட்கத் தோன்றுகிறது. முதல் படத்தில் இருந்து எப்போது வரை நான் சொன்னதை கேட்டு இயக்குனரின் நடிகராக இருந்திருக்கிறான். இப்போது இயக்குனராக நிச்சயம் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது. இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் ரவி நன்றாக இருக்க வேண்டும் என்று தான் மனதார நினைக்கிறார்கள். இவ்வளவு பேரை அவன் சம்பாதித்து வைத்திருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
பாடகி கெனிஷா பேசும் போது,
அனைவருக்கும் வணக்கம், நான் ஒரு பாடகி, இசை தயாரிப்பாளர், ஆன்மீக சிகிச்சையாளர் தற்போது “ரவி மோகன் ஸ்டுடியோஸ்”-ன் பங்குதாரர். இந்த வாய்ப்பை வழங்கிய திரு.ரவி மோகன் அவர்களுக்கு நன்றி. கடவுளுக்கும் பிரபஞ்சத்துக்கும் நன்றி. அம்மா, அப்பா மற்றும் ராஜா அண்ணா அவர்களுக்கு நன்றி. நான் நீண்ட காலமாக தனிமையில் இருந்தேன். இப்போது ரவி அவர்களின் மூலம் இப்படி அழகான மனிதர்கள் கிடைத்துள்ளார்கள்.
நான் மிகவும் கடினமான சூழலில் இருந்து வந்த ஒருவர், ரவி அவர்கள் மிகவும் சிறப்பான ஒரு சூழலில் இருந்து வந்தவர். நாங்கள் இருவரும் இணைந்து, ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை பெரிய அளவில் பிரபலமாக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். எங்களின் கனவும் அது தான். எங்களுடைய குழு இல்லாமல் இன்றைய நாள் சாத்தியம் ஆகிருக்காது.
ரவி அவர்களை பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் வாழ்கையில் மிகவும் கடினமான சூழ்நிலையை கடந்து வந்து இருக்கிறார். அவருக்கு என்ன சோகம் இருந்தாலும், வலி இருந்தாலும் வெளியில் அதை காட்டிக்கொள்ளாமல் மற்றவரிடம் பழகுவார். அது சரி தான். ஆனால், நீங்கள் யார் உங்களிடம் வந்தாலும், அவர் இருளில் இருந்தாலும் நீங்கள் அவர் வாழ்கையை வெளிச்சமாக மாற்றி விடுகிறீர்கள். இப்போது என்னிடம் 7 முழு ஸ்கிரிப்ட் உள்ளது. அவ்வளவு திறமையான நீங்கள், உங்களின் அனைத்து திறமைகளையும் இந்த உலகம் பார்க வேண்டும். எனக்கு மிகப் பெரும் பேராசை உள்ளது. என்னவென்றால், இந்த உலகத்திலுள்ள அத்தனை மனிதரும் உங்களுள் இருக்கும் கடவுளை பார்க வேண்டும். அந்த கடவுளை நான் பார்த்து விட்டேன். வெற்றிக்கான நாட்கள் குறைவாக தான் உள்ளது. அதற்காக நீங்கள் அதிக உழைப்பை கொடுத்துள்ளீர்கள்.
நீங்கள் ஒருநாள் வரலக்ஷ்மி அம்மாவுடன் இருந்தால் தெரியும், ரவி மோகன் அவர்கள் என் இவ்வளவு சிறந்த மனிதராக இருக்கிறார் என்று. இப்படி பட்ட ஒருவரை கொடுத்ததற்கு நன்றி அம்மா. இங்கு வருகை தந்திருக்கும் அனைவர்க்கும் நன்றி, என்றார்.
நடிகர் யோகி பாபு பேசும்போது
கோமாளி படத்தில் பணியாற்றும்போது ரவி நான் படம் இயக்கினால் நீங்கள் தான் ஹீரோ என்று கூறினார். ஆறு வருடம் கழித்தும் அதை மறக்காமல் இன்று நிறைவேற்றி இருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி என்றார்.
இயக்குனர் கார்த்திக் யோகி பேசும்போது,
இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. மிகவும் மகிழ்ச்சியான தருணம். ஏனென்றால், தேதியும் கொடுத்து, காசும் கொடுத்து, படமும் கொடுத்து தயாரிப்பது என்பதை நான் ஆசீர்வாதமாக நினைக்கிறேன். முதலில் இந்த கதையை அண்ணா நம்பினார். பிறகு இத்தனை பேர் இந்த கதையை நம்பி இந்த படத்திற்காக வந்தது மிகவும் மகிழ்ச்சி. நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பட குழுவினர் அனைவருக்கும் மிக்க நன்றி. மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அந்த பொறுப்பை உணர்ந்து இப்படத்தை மாபெரும் வெற்றி படமாக உருவாக்க எல்லாவித முயற்சிகளையும் எடுப்பேன் என்றார்.
இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்.ஜே சூர்யா பேசும்போது,
முதலில் ரவி மோகன் சார் கதை கேட்க சொன்னார் கார்த்திக் சார் வந்து கதை சொன்னார் கதை கேட்டதுமே பிடித்து விட்டது. இப்போது வரும் படங்களில் குடும்பத்துடன் சந்தோஷமாக பார்க்கக்கூடிய காதலோடு நகைச்சுவையோடு உணர்வு பூர்வமான பயணத்தை இன்றைய சினிமா இழந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட அம்சத்தில் இந்த படம் வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. ப்ரோ கோட் என்கிற விஷயம் உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும். ரவி மோகன் சார் ஸ்டுடியோஸ் முழுக்க முழுக்க பொழுதுபோக்கான திரைப்படமாக உருவாகி இருக்கிறது. அதிலும் முதல் படமாக இது வருவது நல்ல விஷயம். கதை கேட்டதும் பிடித்திருந்தால் உள்ளே குதித்து விடுவேன். கதைப் பிடித்து இருக்கிறது என்று ரவிசாரிடம் கூறினேன் அதன் பிறகு ஒவ்வொரு வேலையாக ஆரம்பித்து இன்று பூஜை வரை வந்திருக்கிறது. பெரிய நடிப்பு பட்டாளங்கள் இப்படத்தில் இருக்கிறார்கள் என்றார்.
ரித்தீஷ் தேஷ்முக் பேசும்போது,
என்னுடைய கல்யாணத்திற்கு ரவி மோகன் மற்றும் ராஜா மோகன் அவர்கள் கொடுத்த வரதட்சணை தான் சந்தோஷ் சுப்பிரமணியம். ஏறத்தாழ 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து இயக்குனராக அறிமுகம் ஆவதில் மகிழ்ச்சி மற்றும் அவருடைய எல்லா படங்களும் வெற்றி அடைய வாழ்த்துகள். மேலும் ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ, சிங்கம் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சிங்கம் போல் வெற்றி பெற்று கர்ஜிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.
நடிகை ஜெனிலியா ரித்தேஷ் பேசும்போது,
சந்தோஷ் சுப்ரமணிய படத்தில் பார்த்த ரவியை, இன்று தயாரிப்பாளராக இயக்குனராக பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் எப்போதும் அன்பாக ஆத்மார்த்தமாக பழகக் கூடியவர். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் பேசும்போது,
இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த ரவி மோகன் சாருக்கு நன்றி. ரவி மோகன் ஸ்டுடியோஸ் இன் முதல் படம் மட்டுமல்ல, இனி வரும் அடுத்தடுத்த எல்லா படங்களும் வெற்றியாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அதற்காக எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் நாங்கள் செய்வோம். இப்படத்தில் பிரம்மோ படப்பிடிப்பிற்காக எஸ்.ஜே சூர்யாவை பார்த்தபோது மிகவும் வியந்தேன். படப்பிடிப்பில் அவருடைய கதாபாத்திரத்தை பார்த்து சிரித்துக் கொண்டே இருப்பேன். எஸ் ஜே சூர்யா சாரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.
இப்பட குழு அனைவருக்கும் நன்றி . இங்கு வந்திருக்கும் பத்திரிக்கை மற்றும் மீடியா அனைவருக்கும் நன்றி . எனக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கும் நன்றி என்றார்.
நடிகை மாளவிகா மனோஜ் பேசும்போது
அனைவருக்கும் வணக்கம். இப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சாருக்கு நன்றி, ரவி மோகன் சார் அவர்களுக்கும் மிக்க நன்றி. இப்படம் மிகப் பெரிய வெற்றியடையும் என்ற நம்புகிறேன் என்றார்.
அர்ஜுன் அசோக் பேசும்போது
மிகப்பெரிய தருணம் இது. இந்த வாய்ப்பைக் கொடுத்து ரவி மோகன் சார் அவர்களுக்கு நன்றி. எஸ் ஜே சூர்யா சார் கார்த்திக் அனைவருக்கும் நன்றி மிகப்பெரிய பொறுப்பு இது. இப்படம் வெற்றி பெற சிறப்பாக பணியாற்றுவேன் என்றார்.
ஸ்ரீ கௌரி பிரியா பேசும் போது,
இந்த அரங்கத்திற்கு வந்த உடனே மிகவும் நேர்மறையான அதிர்வலைகள் உணர்ந்தேன். ரவி மோகன் சார் ஸ்டுடியோவில் பணியாற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள். ரவி மோகன் சார், உங்களுடன் ஜோடியாக இப்படத்தில் நடிக்கிறேன். இதை நான் மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு மிக்க நன்றி. நம் அனைவரும் சேர்ந்து தட்றோம், கலக்குறோம், தூக்குறோம் என்றார்.
நடிகர் கண்ணா ரவி பேசும்போது,
சக்தி சாருக்கு மிகவும் நன்றி ஏனென்றால் நான் எவ்வளவு பெரிய விழாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் பார்த்து ரசித்து பணியாற்றிய அனைத்து நடிகர்களும் முன்னிலையில் நான் செய்த ஒரு சிறிய புரோமோ இன்று வெளியாவதில் மிகவும் மகிழ்ச்சி.
ரவி அண்ணா ஒவ்வொரு படத்திலும் அவருடைய கதாபாத்திரம் நல்லவராகவே இருக்கும். கார்த்தி சார் கூறியது போல அவர் மிகவும் நல்ல மனிதர். அதை நான் ஒரு சில நிமிடங்களிலேயே உணர்ந்து கொண்டேன். என்னுடைய குடும்பமே அவருடைய ரசிகர்கள் தான். முக்கியமாக என்னுடைய அப்பா அம்மா ரவி படம் வந்திருக்கு வா பார்க்கலாம் என்று கூப்பிடுவார்கள். அவர் நல்ல நடிகர், சமூக பொறுப்பு மிகுந்த மனிதர். அவர் ஒரு படம் எடுக்கும் போது சமூகத்தை சார்ந்தது தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த படத்தில் என்னுடைய பங்கும் இருப்பதில் மகிழ்ச்சி என்றார்.
இயக்குனர் சக்திவேல் பெரியசாமி பேசும் போது,
நான் ஷியாம் மற்றும் ரவி சார் மூவரும் ஒன்றாக பயணித்துக் கொண்டிருக்கிறோம் அப்போது ஒரு நாள் நான் ஒரு கதை சுருக்கத்தை அனுப்பினேன் அதை படித்துவிட்டு நிச்சயம் செய்யலாம் என்றார். என் மீது நம்பிக்கை வைத்து படத்தை கொடுத்ததற்கு நன்றி. நான் கொடுத்த கதை சுருக்கத்தை விட படம் மிகவும் நன்றாகவே வரும். அதே போல் ஆர்டினரி மேன், ப்ரோ கோட் குழுவினருக்கும் நன்றி, ஏனென்றால், மூன்று படத்தில் இணைந்து நானும் பணியாற்ற போகிறேன். எல்லோருக்கும் நன்றி என்றார்.