August 2024

நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தசரா” திரைப்படம், 6 மதிப்புமிக்க ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றது !!

நேச்சுரல் ஸ்டார் நானியின் ஆக்சன் அதிரடி திரைப்படமான “தசரா” திரைப்படம், எதிர்பார்த்தபடியே, ஃபிலிம்ஃபேர் விருதுகளில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியது, இவ்விழாவில் ஆறு வெவ்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

வெண்ணிலா கதாபாத்திரத்தில் கலக்கிய கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.

ஃபிலிம்ஃபேர் விருதுகள் தசராவுக்குப் பின்னால் உள்ள படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத் திறமையைக் கொண்டாடியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா, தொலைநோக்கு அணுகுமுறை மற்றும் புதுமையான கதைசொல்லல் ஆகியவற்றிற்காகக் கௌரவிக்கப்பட்டார். ஃபிலிம்ஃபேர் விருதை வென்ற முதல் அறிமுக இயக்குநர் என்ற சாதனையைப் படைத்த அவர், தனது முதல் படத்திலேயே 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் கடந்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன், படத்தின் அற்புதமான காட்சிகளைப் படம்பிடித்த அவரது சிறப்பான பணிக்காக, அங்கீகரிக்கப்பட்டார். தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா படத்தின் செட் மற்றும் காட்சி சூழல்களை வடிவமைப்பதில் தனது உன்னிப்பான பணிக்காக விருதைப் பெற்றார்.

நடன இயக்குநர் மாஸ்டர் பிரேம் ரக்ஷித் துள்ளலான மற்றும் ஈர்க்கக்கூடிய தூம் தாம் பாடலை வடிவமைத்ததிற்காகக் கௌரவிக்கப்பட்டார்.

விருதை பெற்றுக் கொண்ட பிறகு நடிகர் நானி கூறியதாவது.. , “எனக்குப் பல விருதுகளை வெல்ல வேண்டும் என்ற ஆசை ஒரு காலத்திலிருந்தது, ஆனால் காலப்போக்கில் அந்த ஆசை குறைந்துவிட்டது. விருதுகளுக்காக எனக்கே அதிக ஆசை இல்லை. மாறாக, என்னுடைய இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், என் படங்களில் அறிமுகமான புதிய திறமையாளர்கள், மற்ற கலைஞர்கள் விருதுகளைப் பெற வேண்டும் என்பதே எனது இப்போதைய ஆசை. இப்போது அது நடந்திருப்பது என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது.

இன்று, ஸ்ரீகாந்த் மற்றும் ஷௌரியவ் விருதுகளை வெல்வதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அந்த தருணத்தின் ஒரு பகுதியாக இருப்பது பாக்கியம். இயக்குநர்கள் ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் ஷௌரியவ் ஆகியோரின் வெற்றிகளைக் கொண்டாடும் வகையில், விருது அட்டைகளைப் போட்டோ பிரேம் செய்யத் திட்டமிட்டுள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை, இந்த விருது அவர்கள் விரும்பும் இடத்தை அடைய அவர்களின் பயணத்தின் ஒரு சிறிய பகுதியாக இருக்கும். அவர்களின் முதல் அடிக்கு நான் மிகச் சிறிய அளவிலாவது பங்களித்திருந்தால் அதுவே எனக்குப் போதுமானது. 2023 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது. தசரா மற்றும் ஹாய் நானா ஆகிய சிறந்த திரைப்படங்கள் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.”

இரண்டு பெரிய பிளாக்பஸ்டர்களைப் பெற்ற நானிக்கு, 2023 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்தது. நடிகர் நானியின் அடுத்த திரைப்படமான “சூர்யா’ஸ் சாட்டர்டே” வரும் ஆகஸ்ட் 29 அன்று திரைக்கு வரவுள்ளது.

சமசரமற்ற வகையில் பெரும் பட்ஜெட்டில் தசரா படத்தை உருவாக்கிய, SLV சினிமாஸின் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி, நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலாவின் பிளாக்பஸ்டர் கலவையில் மீண்டும் ஒரு அற்புத படைப்பைத் தரவுள்ளார்.

World Breastfeeding Week, Seethapathy Hospital launches free breastfeeding consultation helpline for new mothers in Chennai

Chennai, August 2024: To mark World Breastfeeding Week, Seethapathy Hospital has organized various awareness activities. The hospital launched free breastfeeding consultation helpline (7305644465) aims to provide mothers with accurate and reliable medical advice, addressing any questions or concerns they may have. This helpline provides access to certified and experienced lactation consultants and operates 24 X 7.

Additionally, the hospital held an interactive session with experts on breastfeeding to highlight its importance, aiming to educate new and expectant mothers, as well as their families, on balancing work and breastfeeding.

Seethapathy Hospital also introduced the Mother’s Support Club today, which is dedicated to supporting mothers from their child’s birth up to the child’s second year. This club will offer support to new mothers regarding breast feeding, assist in recognizing feeding cues and provide tips on weaning going forward.

Breastfeeding reduces the burden of childhood illness and the risk of certain types of cancers and noncommunicable diseases for mothers. When mothers receive the support, they need to breastfeed their babies, everyone benefits. Improving breastfeeding rates could save over 820,000 children’s lives each year, according to the latest available data.

In her comments, Dr Uma Ram, Senior Obstetrician and Gynecologist and Director Seethapathy Hospital said, “Some studies from India shows 20-25% skin to skin in the first hour after birth. Globally 6/10 babies are not put to the breast within the first hour. With a commitment from the health care facility and motivated staff along with antenatal preparation of the mothers through breastfeeding classes at Seethapathy hospital we have been able to achieve 85% skin to skin, 60% baby to breast within the first hour and 70% exclusive breast feeding at 6 months.”

In her comments, Mrs Rekha Sudarsan, Childbirth Educator and Lactation Consultant, Seethapathy Hospital said, “The first hour after birth is important for the mother and baby. The time soon after the delivery of the baby is when many physiological changes happen in the mother. Careful observation at this period is needed to pick up potential problems. The first hour is also very significant for the baby and called the golden hour. At this time, initiating skin to skin contact and breast feeding is crucial as it imparts many advantages to the baby.”

“Exclusive breast feeding is also important. Some women will have difficulty in feeding or may not be able to feed due to medications they are on. Others can develop mastitis or breast abcess. These women need additional support as they can continue to bond effectively and need not feel guilty because they have good reasons to introduce alternative feeds to the baby” added Mrs Rekha Sudarsan

World Breastfeeding Week is observed annually from August 1 to 7, raising awareness about the importance of breastfeeding and providing support to mothers. The theme for World Breastfeeding Week 2024 is “Closing the gap: Breastfeeding support for all.” This year’s focus is on celebrating the diversity of breastfeeding mothers throughout their breastfeeding journeys. The campaign aims to showcase how families, societies, communities, and health workers can support every breastfeeding mother, regardless of their circumstances.

APL Season 4

4 ஆகஸ்ட் 2024 இன்று நேரு வெளியரங்கத்தில் APL Season 4 காலை 6:30 மணியளவில் ஆரம்பித்தது.இது கடந்த 4 பருவங்களாக வெற்றிகரமாக நடைப்பெற்று வருகிறது. விசேஷமாக இந்த 4.ஆம் பருவத்தில் 3 தலைமுறையினரும் பங்கு பெற்றனர். 4 வயது முதல் 55 வயது வரையிலான தடகள வீரர்கள் பங்கு பெற்றனர். இந்த நிகழ்வினை மேலும் சிறப்பிக்க சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் ஆர்யா, ரெட் ஜெயண்ட் மூவீஸ் திரு.M.செண்பகமூர்த்தி, IAS officer சுப்ரியா சாஹீ, IPS Officer A. மயில்வாகனன், DAC Developers MD திரு. சதீஷ்குமார், ஸ்ரீகோகுலம் குழும நிறுவன V.C Praveen மற்றும் விக்கான் ஷெல்டர்ஸ் ஆகிய பலரும் கலந்து சிறப்பித்தன, மாலை 6 மணியளவில் வெற்றிகரமாக இந்நிகழ்வு நிறைவு பெற்றது

“கூடசாரி” திரைப்படத்தின் ஆறாவது ஆண்டு நிறைவையொட்டி, அதன் அடுத்த பாகமான, ஸ்பை திரில்லர் #G2 லிருந்து ஆறு ஆச்சரியம் தரும் தருணங்களை, நடிகர் அடிவி சேஷ் பகிர்ந்திருக்கிறார்.

“கூடசாரி” படத்தின் ஆறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், நட்சத்திர நடிகர் அடிவி சேஷ், தனது டிவிட்டர் பக்கம் வழியே, பல புது அறிவிப்புகளை வெளியிட்டு, ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

முதல் பாகத்தின் புகழைக் கட்டிக்காக்கும் வகையில் , G2 பல புதுமையான அம்சங்களுடன் உயர்தரத்தில் உருவாகிறது. 40% படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தயாரிப்பாளர்கள் படத்திலிருந்து ஆறு ஸ்டைலான அதிரடி தருணங்களை வெளியிட்டுள்ளனர். இது படத்தின் சர்வதேச தர உருவாக்கத்தையும் மற்றும் நுட்பத்தையும் முன்னிலைப்படுத்துகிறது. G2 இன் இந்த தருணங்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய தளத்திலும் தனித்து நிற்கும், ஒரு ஸ்பை த்ரில்லரை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு மிக்க முயற்சியைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

இப்படம் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. G2 அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும், பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது. இப்படத்தை வினய் குமார் சிரிகினிடி இயக்குவதோடு, முன்னணி நாயகன் அடிவி சேஷுடன் இணைந்து படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார். வெவ்வேறு மொழிப் பின்னணியில் இருந்து வரும் பார்வையாளர்களின் உணர்வுகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இருக்கை நுனியில் அமர்ந்து ரசிக்கும் பரபர அனுபவத்தை வழங்கும் வகையில், படம் சிறப்பான படைப்பாக இருக்க வேண்டும் என்பதில், தயாரிப்பாளர்கள் உறுதியாக உள்ளனர்.

இதுபற்றி அடிவி சேஷ் கூறுகையில், “கூடசாரி” பல சிறப்புகள் மிக்க படம். காலப்போக்கில் அப்படத்தின் பாரம்பரியமும், புகழும் இன்னும் இன்னும் பெரிதாகி வருகிறது. கடந்த 6 வருடங்களில் ஒரு வாரம் கூட அப்படம் குறித்த பாராட்டுக்களைக் கேட்காமல் நான் இருந்ததில்லை. G2 இன்னும் பெரியதாக இருக்கும், சர்வதேச அளவில் இருக்கும், G2 வில் அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு பெரிய விஷுவல் விருந்து காத்திருக்கிறது என்றார்.

இயக்குனர் சிரிகினீடி கூறுகையில்.., “தற்போது தயாரிப்பில் 40% நிறைவு செய்திருக்கிறோம், இதுவரை நாங்கள் படமாக்கிய பகுதிகள், மிகச்சிறப்பாக வந்துள்ளன. அதன் தரம் மற்றும் நுட்பத்தில் மிகுந்த திருப்தியுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறோம். பார்வையாளர்களுக்கு பிரமிக்க வைக்கும் உலகத்தை உருவாக்குவதில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறோம், பரபரப்பான காட்சித் தருணங்கள் முதல், டைனமிக் ஆக்ஷன் காட்சிகள் வரை, ஒவ்வொரு பகுதியும் பார்வையாளர்களை புதிய உலகத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் டிராமா வகையைச் சேர்ந்த அனைத்து ரசிகர்களுக்கும், இந்தப் படம், பெருமைப்படக்கூடிய அனுபவமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

தயாரிப்பாளர் டி.ஜி.விஸ்வ பிரசாத் மேலும் கூறுகையில், “பீப்பிள் மீடியா ஃபேக்டரிக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்த “கூடசாரி” திரைப்படத்தின் 6வது ஆண்டு விழாவை இன்று கொண்டாடுகிறோம். 40% படப்பிடிப்புடன் “G2″ சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த இரண்டாம் பாகம் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும். மேலும், ‘G2’ படத்திற்காக பெரும் பட்ஜெட்டில் ஒரு ஆடம்பரமான சண்டைக் காட்சியை நாங்கள் சமீபத்தில் படமாக்கினோம் ஆத்வி சேஷின் நடிப்பு மற்றும் எங்கள் குழுவின் அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன், இப்படம் சர்வதேச தரமிக்க படைப்பாக வரும் என்று நம்புகிறோம். இப்படம் முன்னெப்போதும் இல்லாத சிலிர்ப்பான சாகசமாக இருக்கும்.”

தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் கூறுகையில்.., “ஜி2 எங்களின் மிகவும் மதிப்புமிக்க படைப்புகளில் ஒன்றாகும். உலகத்தரம் வாய்ந்த தயாரிப்பைக் கொண்டுவர சேஷ், வினய் மற்றும் குழுவினர் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். திரைக்கதை பிரமாண்டத்தைக் கோருகிறது, மேலும் படத்தை உருவாக்க நாங்கள் முழு உழைப்பையும் தந்து வருகிறோம். இப்படத்தின் ஒரு காட்சிக்கு செல்வான தொகை, கோடாச்சாரியின் மொத்த பட்ஜெட்டைத் தாண்டியது என்றார்.

G2 படக்குழுவினர் முதல் பாகத்தை காட்டிலும் சிறப்பான படத்தை தர வேண்டுமென்கிற உத்வேகத்தில் முழு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றனர். சஸ்பென்ஸ் நிறைந்த பரபர சீட் எட்ஜ் திரில்லர் அனுபவத்தை வழங்க, ஒவ்வொரு விசயத்தையும் மிக மிக கவனமாக செய்து வருகின்றனர். உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை மகிழ்விக்கும், ஒரு அற்புதமான திரைப்படத்தை உருவாக்குவதே எங்களது குறிக்கோள்.

On Goodachari’s sixth anniversary, Adivi Sesh Reveals Six Stunning Moments from the Highly Anticipated Spy Thriller Sequel #G2

In a thrilling announcement for fans, acclaimed actor Adivi Sesh took to Twitter to celebrate the six-year anniversary of his groundbreaking spy thriller, Goodachari. He teased the fans with what is amongst the most thunderous announcements of recent times.

Building on the success of the original film, G2 promises to elevate the franchise to new heights. With 40% of the shoot already wrapped up, the makers have released six stylish action moments that highlight the film’s international scale and sophistication. These moments into G2 showcase the meticulous effort to deliver a spy thriller that stands out not just in India but on a global platform.

Slated for a grand release in the second half of 2025, G2 will be available across all major Indian languages, ensuring it reaches a wide and diverse audience. The film is helmed by Vinay Kumar Sirigineedi, who has also co-written the film with leading man Sesh. The makers are dedicated to staying true to the genre, offering an edge-of-the-seat experience that caters to the sensibilities of audiences from different linguistic backgrounds.

Talking about it, Sesh said, “Goodachari is a special film for many reasons. The legacy of the film has gotten even bigger with time. There hasn’t been a single week in the last 6 years that I haven’t heard appreciation for Goodachari. G2 will be bigger, international in scale but Indian in emotion. For all the fans of Goodachari, G2 will be a Massive Visual treat. Stay tuned…”

Director Sirigineedi said, “We’re currently around 40% through production, I am incredibly confident and excited about the quality and energy of what we have captured so far.
Our approach is completely focused on creating a visually stunning world, from thrilling set pieces to dynamic action sequences, every element is designed to transport audiences into a world where the stakes are as high as they can get. I can promise to all the fans of the action drama genre that this film will be an experience that they would be proud of.”

Producer TG Vishwa Prasad added, “Today, we celebrate the 6th anniversary of “Goodachari,” a film that marked a significant milestone for People Media Factory. We are excited to announce that “G2″ is progressing well, with 40% of the shoot completed. Our team is putting in a relentless effort to ensure that this sequel not only meets but exceeds audience expectations. We have recently shot a lavish fight sequence, which alone cost as much as the entire budget of ‘Goodachari’. G2 aims to set new benchmarks with its grand scale and ambitious vision. We are focusing on delivering a quality experience to fans and audiences. We are confident that Adivi Sesh’s performance and our team’s dedication will resonate with audiences worldwide. Agent 116 returns on an international mission, promising a thrilling adventure like never before.”

Producer Abhishek Agarwal told us, “G2 is one of our most prestigious projects. Sesh, Vinay and the team are working very hard to bring a world class product. The script demands grandeur and we are not leaving any stone unturned to make the film a visual marvel. We have just completed an action sequence. The budget of that single sequence is more than the entire budget of Goodachari. That is how big this project is.”

The team behind G2 is committed to crafting a breathtaking spy thriller that remains authentic to its roots. Every detail is being carefully considered to ensure that the film delivers an exhilarating experience, filled with suspense and high-stakes drama. The goal is to create an enthralling film that resonates with viewers across the globe.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர் சத்யராஜ் நடிக்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், முன்னணி நடிகர் சத்யராஜ் நடிப்பில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சீரிஸின், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது.

மிக வித்தியாசமான முறையில், மூன்று ஹீரோயின்களுடன் சத்யராஜ் இடம்பெற்றிருக்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய, பொழுதுபோக்கு படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

தயாரிப்பாளர் முகமது ரசித் தயாரித்துள்ள இந்த சீரிஸினை, இயக்குநர் தாமிரா இயக்கியுள்ளார். இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸிற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் எடிட்டிங் பணிகளைப் பார்த்தசாரதி செய்துள்ளார்.

இந்த சீரிஸில் சத்யராஜுடன் நடிகைகள் சீதா, ரேகா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் இந்த சீரிஸில், நடிகர்கள் வர்ஷா பொல்லம்மா, ரக்ஷன், லிவிங்ஸ்டன், அஜீத் காலிக், கிருத்திகா மனோகர், ராகவி மற்றும் ரேஷ்மா பசுபால்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸுக்கு மெல்லிசை மன்னர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

விஜய் தேவாரகொண்டாவின் ‘VD12’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

விஜய் தேவரகொண்டா- கௌதம் தின்னனுரி- சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் ‘VD 12’ திரைப்படம்- 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது.

‘ரௌடி’ என ரசிகர்களால் அன்புடன் போற்றப்படும் விஜய் தேவரகொண்டா தனது அசத்தலான நடிப்புத் திறமையால் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து, இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் புகழ் பெற்றிருக்கிறார். இவர் தற்போது ‘ஜெர்ஸ்ஸி’ & ‘மல்லி ராவா’ ஆகிய படங்களின் மூலம் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநரான கௌதம் தின்னனுரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘VD 12 ‘எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகி வரும் இந்த திரைப்படம் – அனைத்து தரப்பு ரசிகர்களையும் பரவசப்படுத்தும் வகையில் தயாராகி வருகிறது.

இந்தப் படத்திற்கு தற்போது ‘ VD 12’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களுக்கு இதற்கு முன் எப்போதும் இல்லாத புதுமையான அனுபவத்தை வழங்குவதற்காக தயாரிப்பாளர்கள் மிகுந்த கவனத்துடனும், ஆர்வத்துடனும் அயராது உழைத்து வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையின் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் நடைபெற்று வருகிறது. அறுபது சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால்.. இந்த திரைப்படத்தை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி அன்று வெளியிட பட குழு தீர்மானித்திருக்கிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் மாதமான இம்மாதத்திற்குள் வெளியிடப்படும்.

கிரிஷ் கங்காதரன் – ஜோமோன் டி. ஜான் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ‘ராக் ஸ்டார்’ அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற கலைஞரான நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

இந்த திரைப்படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சூரிய தேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.‌

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் விரைவில் தயாரிப்பாளர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

நடிகர்கள் & தொழில்நுட்பக் குழுவினர்:

படத்தின் தலைப்பு : ( VD 12) – பெயரிடப்படாத திரைப்படம்
நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா
எழுத்து & இயக்கம் : கௌதம் தின்னனுரி
இசை : அனிருத் ரவிச்சந்தர்
ஒளிப்பதிவாளர்கள் : கிரிஷ் கங்காதரன் & ஜோமோன் டி. ஜான்
படத்தொகுப்பு : நவீன் நூலி
தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா
தயாரிப்பாளர்கள் : நாக வம்சி எஸ் & சாய் சௌஜன்யா
தயாரிப்பு நிறுவனங்கள் : சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்
வெளியீட்டு தேதி : 28 மார்ச் 2025.

விஜய் தேவாரகொண்டாவின் ‘VD12’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

விஜய் தேவரகொண்டா- கௌதம் தின்னனுரி- சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் ‘VD 12’ திரைப்படம்- 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது.

‘ரௌடி’ என ரசிகர்களால் அன்புடன் போற்றப்படும் விஜய் தேவரகொண்டா தனது அசத்தலான நடிப்புத் திறமையால் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து, இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் புகழ் பெற்றிருக்கிறார். இவர் தற்போது ‘ஜெர்ஸ்ஸி’ & ‘மல்லி ராவா’ ஆகிய படங்களின் மூலம் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநரான கௌதம் தின்னனுரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘VD 12 ‘எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகி வரும் இந்த திரைப்படம் – அனைத்து தரப்பு ரசிகர்களையும் பரவசப்படுத்தும் வகையில் தயாராகி வருகிறது.

இந்தப் படத்திற்கு தற்போது ‘ VD 12’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களுக்கு இதற்கு முன் எப்போதும் இல்லாத புதுமையான அனுபவத்தை வழங்குவதற்காக தயாரிப்பாளர்கள் மிகுந்த கவனத்துடனும், ஆர்வத்துடனும் அயராது உழைத்து வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையின் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் நடைபெற்று வருகிறது. அறுபது சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால்.. இந்த திரைப்படத்தை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி அன்று வெளியிட பட குழு தீர்மானித்திருக்கிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் மாதமான இம்மாதத்திற்குள் வெளியிடப்படும்.

கிரிஷ் கங்காதரன் – ஜோமோன் டி. ஜான் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ‘ராக் ஸ்டார்’ அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற கலைஞரான நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

இந்த திரைப்படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சூரிய தேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.‌

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் விரைவில் தயாரிப்பாளர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

நடிகர்கள் & தொழில்நுட்பக் குழுவினர்:

படத்தின் தலைப்பு : ( VD 12) – பெயரிடப்படாத திரைப்படம்
நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா
எழுத்து & இயக்கம் : கௌதம் தின்னனுரி
இசை : அனிருத் ரவிச்சந்தர்
ஒளிப்பதிவாளர்கள் : கிரிஷ் கங்காதரன் & ஜோமோன் டி. ஜான்
படத்தொகுப்பு : நவீன் நூலி
தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா
தயாரிப்பாளர்கள் : நாக வம்சி எஸ் & சாய் சௌஜன்யா
தயாரிப்பு நிறுவனங்கள் : சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்
வெளியீட்டு தேதி : 28 மார்ச் 2025.

SIMS Hospital Pays Tribute to Unsung Heroes on the occasion of Indian Organ Donation Day


Chennai, August 3rd, 2024 : SIMS Hospital celebrated Indian Organ Donation day, by paying tribute to the altruistic individuals who have profoundly impacted lives through the selfless act of organ donation. SIMS Hospital invited donor families and launched a wall of hope by displaying donor photos as a tribute to for their selfless act. Dr. M. Ravi, IPS (Former DGP, Greater Chennai Police) pledged his support for organ donation and inspired others.


The donors who made significant contributions in different age groups includes, Mr. Pattabiraman, a man of enormous compassion and strong spirit, continues to impress with his incredible philanthropy. Four people now have a chance to live because to his organ donation. Mr. Ganapathi Akash, a passionate and skilled football player, died too soon, yet his legacy lives on via his followers. His organ donation saved 6 lives. Mr. Akash, a talented young donor, left an impression on everyone. His organ donation shows his empathy and saved 5 lives.
Dr. Bhuvaneswari, a champion and COVID warrior in difficult times, spent her life saving 6 lives. Organ donation was a direct result of her virtue. Mr. Stanislavaus, a meticulous and determined donor, is honoured for saving 5 lives. Organ donation shows his compassion. Donor Altruistic Mr. Raja, who always supports his family, inspires others. His organ donation gave seven families hope. Donor Mr. Sudhakar’s willingness to help and his generosity saved 4 lives.
During the occasion Dr. M. Ravi, IPS stated “Organ transplantation is more than a medical marvel; it’s a heroic testament to the indomitable human spirit. Let us elevate organ donation to a symbol of honor and collectively commit to this life-affirming endeavor.”
Dr. Ravi Pachamuthu, Chairman, SRM group said “More than just a name, the hope, bravery, and empathy of donors and their families shine through. Many people have been given a second life because of their kindness. Organ donation gives people hope when times are tough. We must establish a culture that appreciates kindness. In honouring the donors and their families, SIMS Hospital is overjoyed and proud”.

5 Sweet Ways Choco Pie Can Make Your Friendship Day Extra Special

Chennai, 2 August, 2024:Friendship Day is more than just a date on the calendar; it symbolizes the
cherished relationships that enrich our lives. A friend is like family, a steadfast companion, and a
confidant who understands the unspoken. In India, Friendship Day is celebrated on the first Sunday
of August, which falls on August 4, 2024, this year. It’s a perfect opportunity to express gratitude for
the love and support friends provide.
Celebrating doesn’t require extravagant gifts. Simple gestures, such as spending quality time
together, surprising them with thoughtful acts, or sending heartfelt messages, can make the day
special. Ultimately, the best way to honour this day is by being present, attentive, and supportive of
those who matter most. This Friendship Day, remind your friends how significant they are in your
life. Here are five fun ideas to make your Friendship Day celebrations extra special with Choco Pie.

  1. Choco Pie Gift Boxes: A Sweet Surprise
    Surprise your friends with customized boxes full of Choco Pies, each one different and full of
    variety. Mix it up in each box by including the the classic chocolate and other unique Flavors
    including the choco burst and orange pie to keep things interesting. Add a heartfelt note or maybe
    a small trinket of cuteness. It’s a really nice way to show appreciation and to share some sweetness
    in friendship.
  2. DIY Choco Pie Dessert Station
    Set up a DIY dessert station where you and your friends can unleash your creativity. Provide a
    variety of toppings like sprinkles, nuts, fruits, and cream to customize your Choco Pies. This
    interactive experience not only makes for a delicious treat but also sparks fun conversations and
    memories as you craft your perfect Choco Pie creation together.
  3. Friendship Games with a Choco Pie Twist
    Spice up your Friendship Day celebrations with games that include Lotte Choco Pies as prizes or
    challenges. From trivia about your friendships to fun relay races, add a Choco Pie twist to traditional
    games. The winner gets to enjoy an extra Choco Pie, making the competition sweet and enjoyable!
  4. Choco Pie and Chill: Movie Marathon
    Host a cozy movie marathon with your friends, complete with a Choco Pie bar. Choose a lineup of
    friendship-themed movies and set up a snack table featuring Choco Pies and other treats. It’s the
    perfect setup for a relaxed and heartwarming day, enjoying good films and great company.
  5. Sharing the Love: Choco Pie for All

Extend the spirit of Friendship Day by sharing Lotte Choco Pies with others. Whether it’s at work, in
your neighbourhood, or even with new friends, spreading the love with these sweet treats is a
wonderful way to celebrate the essence of friendship. You might just brighten someone’s day and
start a new friendship!
Let Choco Pie be that sweet little touch which draws you closer to your friends this Friendship Day.
Be it gifting, crafting, playing, or sharing, the sweet little treats make for some celebration calls for.
Cheers to friendship

கவிஞர் வைரமுத்துவுக்கு முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம் தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது


மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. இந்தப் பட்டமானது 1லட்சம் ரூபாய், பொற்கிழி, பதக்கம் மற்றும் பட்டயம் கொண்டது. ஆகஸ்ட் 5ஆம் தேதி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் விழாவில், அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைத் தமிழ் இசைச் சங்கத் தலைவர் ஏ.சி.முத்தையா, தேவகி முத்தையா உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். கர்நாடக இசைப் பாடகியும் சமயச் சொற்பொழிவாளருமான விசாகா ஹரி பொற்கிழி பெறுகிறார்.

கவிஞர் வைரமுத்து வாழ்க்கைக் குறிப்பு:

பழைய மதுரை மாவட்டமாய் விளங்கிய இன்றைய தேனி மாவட்டத்தில் வைகை அணையை ஒட்டியுள்ள மெட்டூரில் 1953ஆம் ஆண்டு கவிஞர் வைரமுத்து பிறந்தார். தந்தை ராமசாமித் தேவர்; தாயார் அங்கம்மாள்.

உயர்நிலைப் பள்ளிப்படிப்பை வடுகபட்டியில் முடித்த வைரமுத்து சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ படித்துத் தங்கப்பதக்கம் பெற்றார். இவர் எழுதிய ‘வைகறை மேகங்கள்’ என்ற கவிதை நூல் இவர் கல்லூரியில் படிக்கும்போதே ஒரு மகளிர் கல்லூரிக்குப் பாடமாக விளங்கியது. கல்லூரிப் படிப்பை முடித்த கவிஞர் வைரமுத்து தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தில் மொழிபெயர்ப்பாளராகச் சிறிதுகாலம் பணியாற்றினார்.

1980ஆம் ஆண்டு பாரதிராஜாவின் நிழல்கள் படத்தில் ‘பொன்மாலைப் பொழுது’ என்ற பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை 8000 பாடல்கள் எழுதியுள்ள கவிஞர் வைரமுத்து, இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்காக 7முறை தேசிய விருது பெற்றிருக்கிறார்.
திரைப்பாட்டு – இலக்கியம் என்று இரண்டு துறைகளிலும் சிகரம்தொட்ட வைரமுத்து தனது கள்ளிக்காட்டு இதிகாசம் நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார். அது 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் உயர்ந்த விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

அந்நாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் இவரைக் ‘காப்பியக் கவிஞர்’ என்று கொண்டாடினார். அந்நாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இவரைக் ‘கவிசாம்ராட்’ என்று பாராட்டியிருக்கிறார். தமிழ்நாட்டின் அந்நாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி இவருக்குக் ‘கவிப்பேரரசு’ என்று பட்டம் தந்திருக்கிறார்.

உலகின் 5 கண்டங்களிலும் தமிழ் இலக்கியப் பயணம் செய்தவர். அண்மையில் இவர் எழுதிய ‘மகாகவிதை’ என்னும் பெருங்கவிதை நூலுக்கு மலேசியன் இந்தியக் காங்கிரஸ் மற்றும் தமிழ்ப்பேராயம் இணைந்து ஒரு லட்சம் ரிங்கிட் (இந்திய மதிப்பில் 17லட்சம்) பரிசு வழங்கின.
இதுவரை 39 நூல்கள் எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து மூன்று பல்கலைக் கழகங்களின் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றவராவார். இவரது படைப்புகளை ஆராய்ச்சி செய்து 40க்கும் மேற்பட்டவர்கள் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். இப்போது தமிழ் இசைச் சங்கம் முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டத்தை வழங்கியுள்ளது.