பிரைம் வீடியோ திகில் நிறைந்த க்ரைம் டிராமா “இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் மார்ச் 29 தேதி அன்று வெளியிடப்படவிருப்பதை அறிவித்தது
நந்தினி ஜே.எஸ் உருவாக்கத்தில், மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ், சுக்தேவ் லஹிரியால் தயாரிக்கப்பட்ட இந்த ஒரிஜினல் தமிழ் திரைப்படத்தில், சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோருடன் இணைந்து நவீன் சந்திரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி நடித்துள்ளார்.
“இன்ஸ்பெக்டர் ரிஷி” இந்தியா மற்றும், உலகம் முழுவதிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மார்ச் 29 தேதி அன்று பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
அறிவிப்பை இங்கே பதிவிறக்கம் செய்யுங்கள் https://x.com/PrimeVideoIN/status/1768134578726678603?s=20
மும்பை, இந்தியா- மார்ச் 14, 2024 – இந்தியாவில் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு மையமாக திகழும் பிரைம் வீடியோ, வரவிருக்கும் அதன் தமிழ் ஒரிஜினல் திரைப்படமான “இன்ஸ்பெக்டர் ரிஷி” வெளியிடப்படும் தேதியை இன்று அறிவித்தது. நந்தினி ஜே.எஸ் (Nandhini JS,) உருவாக்கத்தில் தயாரிக்கப்பட்ட இந்த திகிலூட்டும் க்ரைம் டிராமாவில் பல்துறை திறன் கொண்ட நடிகர் நவீன் சந்திரா(Naveen Chandra) வுடன் இணைந்து சுனைனா(Sunainaa), கண்ணா (Kanna ) ரவி (Ravi), மாலினி (Malini ) ஜீவரத்தினம், (Jeevarathnam) ஸ்ரீகிருஷ்ண தயாள்(Srikrishna Dayal,) மற்றும் குமரவேல் (Kumaravel) உள்ளிட்ட திறமைவாய்ந்த நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். பத்து எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது “இன்ஸ்பெக்டர் ரிஷி” பிரைம் மெம்பர்ஷிப்பில் சமீபத்தில் இணைக்கப்பட்ட புத்தம் புதிய திரைப்படமாகும். இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், ஒற்றை உறுப்பினர் சந்தாவாக ஆண்டுக்கு ₹1499 மட்டுமே செலுத்தி சேமிப்பு, வசதி மற்றும் பொழுதுபோக்கு அனைத்தையும் அனுபவித்து மகிழலாம்.
மர்மங்களால் சூழப்பட்ட சிக்கலான மற்றும் விசித்திரமான நிகழ்வுகளை எதையும் சந்தேகக் கண்களுடன் அணுகும் ரிஷி நந்தன், என்ற காவல் ஆய்வாளர் ஆராயத் தொடங்கும் போது, அவரது உறுதியான கருத்துக்களுக்கு எதிரான சவால்களை எதிர்கொள்ள நேரும் அவரது பயணத்தின் ஒரு அழுத்தமான கதையை “இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படம் விவரிக்கிறது. மனதை நிலைக்குலையச்செய்யும் இந்த திகில் மற்றும் மர்மம் நிறைந்த வழக்கின் விசாரணையின் ஊடே, குற்றத்தின் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் போதும் தனது ஆழ்மனதில் பீறிட்டு எழும் உணர்வுகளை கையாளும் போதும் இருநிலைகளிலுமே இன்ஸ்பெக்டர் ரவி அச்சமூட்டும் மாபெரும் தடைகளை எதிர்கொள்கிறார்,
“நாடு முழுவதிலுமிருந்து வரும் வளமான, ஆழமாக வேரூன்றிய மற்றும் கலாச்சார ரீதியாக மனதை ஆழ்ந்து போகச்செய்யும் கதைகளின் வரிசையை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இங்கே பிரைம் வீடியோவில், நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் பிராந்திய உள்ளடக்கத்தோடு கூடிய எங்களின் கலைத் தொகுப்பை நாங்கள் தொடர்ந்து விரிவாக்கம் செய்து கொண்டிருக்கும் வேளையில், நந்தினி ஜே.எஸ் உருவாக்கிய முதுகுத்தண்டை சிலிர்க்கச் வைத்து உறையச்செய்யும் திகில் நிறைந்த தமிழ் ஒரிஜினல் டிராமா தொடரான “இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படத்தை வெளியிடுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.” என்று இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிரைம் வீடியோ ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித் கூறினார். “அமானுஷ்ய நிகழ்வுகளின் கூறுகள் நிறைந்த இந்த மனதைக் கொள்ளைகொள்ளும் கிரைம் தொடரின் புலன் விசாரணைக்கு நந்தினி வழங்கும் ஒரு தனித்துவமான பெண்ணியப் பார்வைக் கோணம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த சினிமா அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்கிறது.”
“ஒரு படைப்பாளியாக, “இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படத்தில் பணிபுரிந்தது ஒரு ஆழ்ந்த மகிழ்ச்சிகாரமான அனுபவமாக இருந்தது மற்றும் இந்த கூட்டாண்மைக்கு நான் மிகவும் நன்றி பாராட்டுபவனாக இருக்கிறேன். திகில் மற்றும் மர்மங்களுடன் போலீஸ் நடைமுறைகளை ஒருங்கிணைத்து வழங்கியது கதை சொல்லல் செயல்பாடுகளில் இன்ஸ்பெக்டர் ரிஷியின் அச்சமூட்டும் விந்தையான உலகத்தினுள் மேலும் ஆழமாக சென்று ஒரு புதிய பரிமாணத்தை ஆராய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.” என்று நந்தினி ஜே.எஸ்.கூறினார் “நவீன் சந்திரா, சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள், குமரவேல் உள்ளிட்ட நடிகர்களின் உன்னதமான நடிப்பும், படக் குழுவினரின் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சிகளும் எனது பார்வைக் கோணத்தை திரையில் அழகாக காட்சிப்படுத்த உதவியிருக்கிறது.”
Kamal Haasan’s Raaj Kamal Films International (RKFI) recently announced their next project, a song , titled ‘Inimel’ with Shruti Haasan and Lokesh Kanagaraj. The project marks RKFI’s second collaboration with Lokesh Kanagaraj after Vikram which was a resounding success at the global box office. It also marks Lokesh’s debut as an actor as mentioned the in the poster. ‘Inimel’, which means From Now On, is a song that portrays all stages of love in a modern urban relationship along with its ebbs and flows. Sung and composed by Shruti Haasan herself, Inimel has been penned by Kamal Haasan and it perfectly captures the dynamics of a contemporary romance which is bound to strike a chord with the audiences. The track has been conceptualised by Shruti who has previously conceived her successful independent songs like Edge, She’s a Hero and Monster Machine.
Inimel has piqued the interest of the fans ever since RKFI announced the project few days ago. The first look was widely appreciated and has been a taking point ever since. Much of the anticipation stems from the fact that the single brings together three powerhouses of Indian Cinema and fans are looking forward to a stellar outcome.
The release date of the Inimel is yet to be announced but the makers are leaving no stone unturned to make this a memorable collaboration.
உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம், சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் ‘இனிமேல்’ என்ற தலைப்பில் ஒரு பாடலை அறிவித்தது. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைப் பெற்ற விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் RKFI இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. போஸ்டரில் குறிப்பிட்டுள்ளபடி லோகேஷ் ஒரு நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘இனிமேல்’ பாடல் நவீன நகர்ப்புற ரிலேஷன்ஷிப்பில், காதலின் அனைத்து நிலைகளையும் அதன் ஏற்ற இறக்கங்களுடன் சித்தரிக்கும் பாடலாகும். ஸ்ருதி ஹாசன் பாடி, இசையமைத்துள்ள இனிமேல் பாடலை, கமல்ஹாசன் எழுதியுள்ளார். இப்பாடல் தற்போதைய தலைமுறையில் காதல் இயங்கும் விதத்தைக் கச்சிதமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. எட்ஜ், ஷீ இஸ் எ ஹீரோ மற்றும் மான்ஸ்டர் மெஷின் போன்ற வெற்றிகரமான சுயாதீன ஆல்பம் பாடல்களை ஸ்ருதிஹாசன் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்பு RKFI நிறுவனம் இனிமேல் பாடல் குறித்து அறிவித்ததிலிருந்தே, இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் பரவலான பாராட்டுக்களைப் பெற்றதுடன் இணையம் முழுக்க பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்த சிங்கிள் பாடல் மூலம் இந்திய சினிமாவின் மூன்று முக்கிய ஆளுமைகள் இணைகிறார்கள் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இனிமேல் பாடலின் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை, எனினும் தயாரிப்பாளர்கள் மூன்று ஆளுமைகள் இணையும் இப்பாடலைப் பெரிய அளவில் எடுத்துச்செல்வதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
‘எட்டு தோட்டாக்கள்’ வெற்றி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் விரைவில் வெளியாகும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் சிவா .ஆர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தில் வெற்றி, மதுரா, விவேக் பிரசன்னா, ஹரிஷ் பெராடி, ‘அருவி’ மதன் குமார், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். கே. உதயகுமார் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை காசி விஸ்வநாத் மேற்கொண்டிருக்கிறார். ரொமான்டிக் ட்ராமா ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை 3 S பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் சிவா. ஆர் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் படத்தின் வெளியிட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” ஆலன் ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை தேடல்… மற்றும் ஓர் அழுத்தமான காதல் களம்… இந்தக் களம் படமாக்கப்பட்டபோது கொடைக்கானலில் கடும் மழையும், குளிரும் உடன் பயணித்தது. சென்னையில் படமாக்கப்பட்ட போது புயலும், காற்றும் இந்த காதலை ஆரத் தழுவியது. வாரணாசியிலும், ரிஷிகேசிலும் படமாக்கப்பட்ட போது பனிக்காற்றும், கடும் குளிரும் கூடவே இருந்து தாலாட்டியது. இப்படி இயற்கை அன்னை ஆசீர்வதித்த இந்த காதலை தமிழ் ரசிகர்களின் பார்வைகளுக்கு பரிமாற.. இறுதி கட்ட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறோம்.
‘இசைப்புதல்வன்’ மனோஜ் கிருஷ்ணாவின் இசை மெட்டிற்கு கவிஞர் கார்த்திக் நேத்தா பாடல் வரிகளை எழுத, பின்னணி பாடகர் சங்கர் மகாதேவனின் வசீகர குரலில் ‘வாரணாசியில் மனித பிறப்பின் ரகசியங்களை சிவனைப் பார்த்து கேட்பது போல்..’ ஒரு பாடலும்.., இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தன் காந்தக் குரலால் காதலில் பரிதவிக்க ஒரு பாடலும்… . பாடகிகள் சின்மயியும், மும்பை நிகிதா காந்தியும் தங்களின் தேனினும் இனிய குரலால் காதலை ஆரத் தழுவ தலா ஒரு பாடலும்..என இந்த நான்கு கானங்களும் உங்கள் செவிகளுக்கு செந்தமிழில் உள்புக.. இசையின் தாளலயங்களில் தாலாட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. விரைவில் உங்கள் செவி வழியாக இதயத்தில் தஞ்சமடையவும் காத்திருக்கிறது.
இந்த காதல் காவியத்தில் ‘எட்டு தோட்டாக்கள்’ வெற்றி கதையின் நாயகனாகவும், நாயகிகளாக ஜெர்மன் மதுரா மற்றும் அனு சித்தாராவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஹரிஷ் பெராடி, மதன்குமார், விவேக் பிரசன்னா, கருணாகரன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை காண காத்திருங்கள். உங்களை ‘ஆலன்’ வெகு விரைவில் வெண் திரையில் சந்திப்பான்.. காதலின் வாசத்துடன்…” என்றார்.
Rebel star Prabhas stands out among all star heroes with numerous records and achievements. Whether it’s unique collaborations, smashing box office records, or extensive pan-global film projects, he consistently leads the pack.
This has elevated Prabhas from a Tollywood sensation to a pan-Indian icon. His popularity was recently highlighted in X’s (formerly Twitter) list of Top Hashtags in India, where Prabhas emerged as the sole hero featured in the entertainment category’s top 10 most utilized hashtags, according to a release by Twitter India.
This achievement is seen as a testament to Prabhas’ massive social media influence, much to the delight of his fans. With highly anticipated blockbusters like Kalki 2898 AD and Raja Saab on the horizon, Prabhas is set to further captivate audiences and celebrate with his fans.
‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் – புதிய சாதனைகளை நிகழ்த்துவதிலும், பல சாதனைகளை முறியடிப்பதிலும் ஏனைய நட்சத்திர நடிகர்களில் தனித்து நிற்கிறார். அவருடைய பிரத்யேகமான ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பின் காரணமாக.. பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடிப்பதுடன், இந்திய அளவில் மட்டும் இல்லாமல் உலகளவில் அவருடைய திரைப்படத்தை ரசிகர்களுக்காக கொண்டு செல்வதிலும் தனித்துவத்தை பின்பற்றுகிறார்.
‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் – தெலுங்கு திரையுலகின் வணிக எல்லையிலிருந்து பான் இந்திய அளவிலான சந்தையின் நட்சத்திர ஐகானாக உயர்ந்திருக்கிறார். ட்விட்டர் இந்தியா நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியாவில் உள்ள எக்ஸ் தளத்தின் ( முன்னர் ட்விட்டர் ) சிறந்த ஹேஸ்டாக்குகளின் பட்டியலில் அவருடைய புகழ் சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பிரபாஸ் பொழுதுபோக்கு வகைகளில் சிறந்த 10 ஹேஸ்டாக்குகளை பெற்ற ஒரே நட்சத்திர நடிகராக உருவெடுத்திருக்கிறார்.
இந்த சாதனை… பிரபாஸின் சமூக வலைதளம் மற்றும் சமூக ஊடகங்களில் அவரது செல்வாக்கிற்கு சான்றாகியிருக்கிறது. இது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸின் நடிப்பில் ‘கல்கி 2898 AD’ மற்றும் ‘ ராஜா ஸாப்’ ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டுகளுடன்.. பிரபாஸ் பார்வையாளர்களை மேலும் கவர்ந்து, அந்த வெற்றியை தன்னுடைய ரசிகர்களுடன் கொண்டாடவிருக்கிறார்.
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான ‘ஹார்ட் பீட்’ சீரிஸை, தற்போது ஸ்ட்ரீம் செய்யத் தொடங்கியுள்ளது.
ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களைச் சுற்றி, நடக்கும் பரபரப்பு சம்பவங்கள் தான், ஹார்ட் பீட் சீரிஸின் கதைக்களம் ஆகும்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், மனதைக் கவரும் இந்த சீரிஸை, மார்ச் 8 ஆம் தேதி, சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டமாக ஸ்ட்ரீம் செய்யத் துவங்கியுள்ளது.
இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மன், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.
‘ஏ டெலி பேக்டரி’ நிறுவனம் இந்த சீரிஸை தயாரித்துள்ளது, இந்தத் சீரிஸை இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்போது “ஹார்ட் பீட்” சீரிஸை, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுகளியுங்கள்.
People Production House சார்பில் முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், NV Creations நாகராஜன் இணைந்து தயாரிக்க இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’. அனைவரும் ரசித்து மகிழும் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. Action Reaction நிறுவனம் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் தமிழகமெங்கும் இப்படத்தினை வெளியிடுகிறார். இந்நிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
நடிகர் மகேந்திரன் பேசியதாவது… நான் என்றும் ஹீரோ இல்லை உங்கள் வீட்டுப் பையன் தான். இந்த 30 வருடத்தில் எனக்கு எப்போதும் உங்கள் ஆதரவு தந்து கொண்டே இருக்கிறீர்கள், அதற்கு நன்றி. கொரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்து விட்டேன். என்ன செய்யப்போகிறேன் என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தான் இயக்குநர் பிரசாந்த் வந்தார். முதலில் டாக்குமெண்ட்ரி எடுக்கனும் என்றார், நான் தான் படமெடுக்கலாம் என சொன்னேன். சரி என்றார். அவர் அப்பா புரடியூசராக வந்தார். பல நண்பர்களும், அவர் குடும்பத்தினரும் இணைந்து தயாரிக்க முன்வந்தனர். பல கஷ்டங்களுக்கு பிறகு, இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இங்கிருக்கும் எல்லோருமே பணத்திற்காக வேலை செய்யவில்லை. இந்தப்படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி.
இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் பேசியதாவது… இது என் முதல் குழந்தை, என் முதல் படம். முதல் படம் எத்தனை முக்கியம் என அனைவருக்கும் தெரியும். பல கஷ்டங்களுக்கு பிறகு தான், இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளோம். ஒரு நல்ல படமாக உருவாக்கியிருக்கிறோம். ஒரு கதை எழுதிவிட்டு காத்திருந்தபோது, மகேந்திரன் அண்ணாவைச் சந்தித்தேன் அங்கு தான் இப்படம் ஆரம்பித்தது. இப்படத்திற்காக பல தயாரிப்பாளர்களைச் சந்தித்தோம், ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை. அப்புறம் பல நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கலாம் என்றார்கள். பலரும் இணைந்து தான் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். மகேந்திரன் ஒரு நடிகராக இல்லாமல், தன் படமாக இன்று வரை தாங்கி வருகிறார். அவருக்கு என் நன்றி. ஜி எம் சுந்தர் அண்ணா மிக முக்கியமான பாத்திரம் செய்துள்ளார். கமல் சார் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் நடித்தவர் அவர். ஷீட்டிங்கில் அவரிடம் எனக்குத் தேவையானதை எப்படி வாங்குவது என்ற தயக்கம் இருந்தது, ஆனால் என்னிடம் மிக எளிமையாகப் பழகி, படத்திற்கு தேவையானதைத் தந்தார். தாசரதி என் முதல் ஷார்ட் ஃபிலிமிலிருந்து இருக்கிறார், நல்ல நண்பர் நல்ல ரோல் செய்துள்ளார். நாயகி ஆதிரா நன்றாக நடித்துள்ளார். இந்த படத்தின் பெரிய பலம் பாலமுரளி அண்ணாவின் இசை தான். அவருக்கும் எனக்கும் நல்ல வேவ் லென்த் இருந்தது. பாடல்களுக்கு இப்போது கிடைத்து வரும் வரவேற்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. கு கார்த்திக் பாடல் தரும்போதே ஐந்து சரணம் தந்துவிடுவார், அவருக்கு என் நன்றி. விஜய குமார் மிகச் சிறந்த நண்பர். அவருடன் ஆறு வருட பயணம், அட்டகாசமான ஒளிப்பதிவை தந்துள்ளார். அசோக் அண்ணா, நல்ல ஆக்சன் ப்ளாக் தந்துள்ளார். எல்லோருமே எனக்காகக் கடுமையான உழைப்பைத் தந்துள்ளனர். இந்த ட்ரெய்லருக்கு வாய்ஸ் தந்த மைம் கோபி அண்ணாவிற்கு நன்றி. இப்படம் 3 வருட உழைப்பு, என் அப்பா இல்லை என்றால் இது எதுவும் நடந்திருக்காது. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
NV Creations தயாரிப்பாளர் நாகராஜன் பேசியதாவது… இங்கு வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள். இப்படத்தின் இயக்குநர் என் மகன். அமீகோ என்றால் என்ன என்று அவனிடம் கேட்டேன், அமீகோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் ஃபிரண்ட் என அர்த்தம் என்றார். இது நண்பர்கள் சம்பந்தமான படம். மாஸ்டர் மகேந்திரன் ஒரு நடிகராக எங்களிடம் அறிமுகமானார், இன்று எங்கள் குடும்பத்தில் ஒருவராகிவிட்டார். படத்தில் பணியாற்றிய அனைவரும் ஒரு குடும்பமாக தான் பழகுகிறார்கள். இந்தப்படம் எடுக்கும் போது தான் ஒரு படம் எடுப்பது எத்தனை கடினமானது என்பது புரிந்தது. என் மகன் எடுத்துள்ள இந்த படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
Action Reaction நிறுவனம் சார்பில் ஜெனிஷ் பேசியதாவது.. அமீகோ பெயரே இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. விஷுவல்களும் சூப்பராக வந்துள்ளது. வியாபாரத்திற்காக பேசும்போது எல்லா இடத்திலும் நல்ல வரவேற்பு உள்ளது. திரை வட்டாரத்தில் நல்ல பெயரை இந்தப் படம் பெற்றுள்ளது. ஆக்சன் ரியாக்சன் சார்பில், இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறோம். நல்ல டீம் மிகச்சிறந்த ஆதரவைத் தந்தார்கள். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நாயகி ஆதிரா ராஜ் பேசியதாவது… 2 வருடங்களாக நாங்கள் காத்திருந்த படம், இப்போது ரிலீஸுக்கு ரெடி ஆகியிருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப் படம் ஆரம்பிக்கும் போது, எனக்கு தமிழ் தெரியாது, இப்போது கொஞ்சம் பேச ஆரம்பித்து விட்டேன். இந்தப் படம் எல்லோரும் இணைந்து ஒரு குடும்பமாக இணைந்து மகிழ்ச்சியுடன் உருவாக்கியுள்ளோம். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
நடிகர் முரளி பேசியதாவது… மகேந்திரன் ஃபிரண்டாக தான் இங்கு வந்தேன். இந்தப்படத்தின் கனெக்டிங் பீப்பிளாக அவன் தான் இருந்திருக்கிறான். எல்லா நண்பர்களுக்கு வாய்ப்பு வாங்கி தந்துள்ளான், அவருக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் இல்லை அப்பா என்று தான் சொல்ல வேண்டும். எல்லாருக்கும் இப்படி ஒரு அப்பா கிடைக்க மாட்டார்கள், எனக்கு இயக்குநரைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது. இயக்குநர் பிரசாந்தும் நானும் நிறையப் பேசியிருக்கிறோம், நல்ல படம் எடுத்துள்ளார். கண்டிப்பாக இந்தப்படம் உங்களை ஆச்சரியப்பட வைக்கும் அனைவருக்கும் நன்றி.
ஒளிப்பதிவாளர் விஜய குமார் சோலைமுத்து பேசியதாவது… இது என் முதல் மேடை. இந்த வாய்ப்பிற்காக இயக்குநருக்கு என் நன்றி. ஒரு நல்ல படம். எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர். இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
இசையமைப்பாளர் பாலமுரளி பாலு பேசியதாவது… மகேந்திரன் என் தம்பி மாதிரி. அவன் தான் எனக்கு போன் செய்து, ஒரு நல்ல கதை நீங்கள் இசையமைக்க வேண்டும் எனக் கேட்டான். அவனுக்குப் பண்ணாமல் எப்படி ? அப்படி தான் நான் இப்படத்திற்குள் வந்தேன். அதன் மூலம் இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எனும் இன்னொரு தம்பி கிடைத்தார். தயாரிப்பாளர் முரளி மிகப்பெரிய ஆதரவு தந்தார். அவரோடு சென்னையில் எல்லா ஹோட்டல்களிலும் சாப்பிட்டிருக்கிறேன். இந்த படத்தில் பணியாற்றியது மிக இனிமையான அனுபவமாக இருந்தது. கு கார்த்திக் எல்லாப்பாடல்களையும் அழகாக எழுதித் தந்தார். எப்போதும் ஒரு பாடலுக்கு 5 சரணங்கள் எழுதித் தந்து விடுவார். படம் மிக நன்றாக வந்துள்ளது படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
ஸ்டன்ட் இயக்குநர் டான் அசோக் பேசியதாவது… அனைவருக்கும் என் வணக்கம். அமீகோ கேரேஜ் பற்றிச் சொல்ல நிறையச் சொல்ல இருக்கிறது. விஷுவல், பாடல்கள் எல்லாம் அருமையாக வந்துள்ளது. ஆக்சன் காட்சிகள் எல்லாம் சூப்பராக வந்துள்ளது. மகேந்திரன் எந்த ஷாட்டாக இருந்தாலும், ரெடியாக இருப்பார். நிறைய ஒத்துழைப்புத் தந்தார் ஆக்சன் காட்சிகளில் அசத்தியுள்ளார். இயக்குநர் பழகப் பழக ஒரு குடும்பமாகவே ஆகிவிட்டார். இப்போது அவர் வீட்டில் நாங்கள் சமைத்து சாப்பிடும் அளவு நெருக்கமாகிவிட்டார். படம் மிக நன்றாக வந்துள்ளது படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.
பாடலாசிரியர் கு கார்த்திக் பேசியதாவது… அமீகோ கேரேஜ் மிக ஜாலியாக வேலை பார்த்த படம். இதுவரை இசையமைப்பாளர் பால முரளி உடன் காமெடி கமர்ஷியல் என செம்ம ஜாலியான படமாகத்தான் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் இது ஆக்சன் டிராமா படம், பால முரளியிடம் நமக்கு நல்ல வாய்ப்பு என்றேன். இப்படி ஒரு படத்தில் பணியாற்றியது மிக மகிழ்ச்சியாக இருந்தது. மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தோம், பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளது. இப்படத்தைப் பத்திரிக்கையாளர்கள், மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். தயாரிப்பாளர், இயக்குநர் அனைவருக்கும் என் நன்றி .
ஒலிப்பதிவாளர் டோனி பேசியதாவது… அமீகோ கேரேஜ் மிக நல்ல படமாக வந்துள்ளது. எல்லோரும் திரையரங்கில் இப்படத்தைப் பார்த்து படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் தாசரதி பேசியதாவது… இது என்னுடைய முதல் மேடை. இயக்குநர் பிரசாந்த் எனக்கு லைஃப் சேஞ்சிங் மொமண்ட் தந்துள்ளார். அவர் என் நண்பன், இங்கு எல்லோருமே நண்பர்கள் தான். இது நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய படம். படத்தை அனைவரும் இணைந்து அர்ப்பணிப்புடன் உருவாக்கியுள்ளோம், இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் முரளிதரன் சந்திரன் பேசியதாவது… இயக்குநர் பிரசாந்த் இந்த கேரக்டர் பற்றிச் சொன்னபோது, எனக்கு நடிக்கத் தெரியாது என்றேன். வாங்கப் பார்த்துக் கொள்ளலாம் என்றார். என்னை நடிகனாக்கி விட்டார். இப்போது எல்லோருமே நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டார்கள், இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
ஶ்ரீக்கோ உதயா பேசியதாவது… ஊடக நண்பர்களுக்கு நன்றி. கொரோனா டைமில் மகேந்திரன் போன் செய்து 2 நாள் வேலை இருக்கிறது வாருங்கள் என்றார். என்னை மிக நன்றாகக் கவனித்தனர். கொரோனா சமயம் ஆனால் எல்லோரையும் அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார்கள். அமீகோ கேரேஜில் நானும் நடித்திருப்பது மகிழ்ச்சி. பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளது. இசையமைப்பாளர் பாடலாசிரியர் இருவருக்கும் என் வாழ்த்துக்கள். இயக்குநர் இசை ஞானம் கொண்டவர், படத்தையும் அருமையாக எடுத்துள்ளார். இப்படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.
நடிகர் மதன கோபால் பேசியதாவது… எங்கள் குழுவே அமீகோ கேரேஜ் படத்திற்காக வெயிட் பண்ணிக்கொண்டிருந்தோம். இந்த படக்குழு எனக்கு புதியது, மகி மட்டும் தான் நண்பர். ஆனால் படப்பிடிப்பு முடிந்து, இப்போது எல்லோரும் குடும்பமாகிவிட்டார்கள். இந்த டீமில் நானும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
சக்தி கோபால் பேசியதாவது… இந்தப் படம் ஃபிரண்ட்ஸ் இல்லாவிட்டால் நடந்திருக்காது. இயக்குநர் பிரசாந்த் தான் அனைவருக்கும் வாழ்க்கை தந்துள்ளார். எல்லோரும் கடுமையாக உழைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
கேங்ஸ்டர் வாழ்வை சுற்றிய ஒரு இளைஞனின் பயணமாக, சுவாரஸ்யமான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது அமீகோ கேரேஜ். இப்படத்தில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, GM சுந்தர், தசரதி, அதிரா ராஜ், ஶ்ரீக்கோ உதயா, முரளிதரன் சந்திரன், மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை முரளி ஶ்ரீனிவாசன் தயாரித்துள்ளார். ராமசந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஷ்வின் குமார் VG இணை தயாரிப்பு செய்துள்ளனர்.
இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்க, விஜய குமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங் செய்துள்ளார்.
இப்படம் வரும் மார்ச் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. Action Reaction நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தினை வெளியிடுகிறது.
நான் ச. பிரேம்குமார், ’96’ படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குனர். கடந்த மார்ச் – 7’ஆம் தேதி ‘Cheyyaru Balu official’ என்ற Youtube Channel’ல், ‘உங்களுக்கு ஆண்மை இல்லீயா, என் பாட்டை யூஸ் பண்ணி இருக்கீங்க.. நாக்க புடுங்கறா மாதிரி கேட்ட இளையராஜா’ என்ற தலைப்பில் ஒரு காணொளி வெளியானது. https://youtu.be/lqdaTuw3FsQ?si=6Z958bJXU5mtTyf. அதில் திரு.செய்யாறு பாலு வெளியான மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் நான் எழுதி இயக்கி 2018-ல் வெளியான 96 திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு நாங்கள் முறையான அனுமதி பெறாதவாறு பேசியுள்ளார்.
குறிப்பாக, ’96 பற்றி பேசும்போது, இசைஞானி இளையராஜா அவர்கள் சொன்னதை மேற்கோள் காட்டியதோடு நிறுத்தாமல், இன்னொரு வார்த்தை, ‘பொ’ என்கிற வார்த்தையை வேற யாராவது இருந்தா யூஸ் பண்ணி இருப்பாங்க’ என்றும் பேசியுள்ளார். மேலும் அதற்கு 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மன்னிப்பு கேட்டதாகவும் சொல்கிறார். வன்மம் நிறைந்த இந்த கருத்துகளுக்கு பதில் சொல்லாமல் என்னால் கடந்து செல்ல இயலவில்லை.
திரு. செய்யாறு பாலு அவர்கள் குறிப்பிட்டுள்ள மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கும், 96 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களுக்கும் Think Music வாயிலாகவும், அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் மூலமாகவும், இரண்டு திரைப்படங்களும் வெளியாவதற்கு முன்னரே அதற்கான அனுமதியை பணம் செலுத்தி பெற்றுவிட்டோம்.
ஒரு மூத்த பத்திரிகையாளராக இருந்துகொண்டு இந்த முக்கியமான தகவலை கூட விசாரிக்காமல், அல்லது அந்த உண்மையை உள்நோக்கத்துடன் மறைத்து பொய் கூறியதேன்? ஒரு காணொளியின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்கு ஒரு செய்தியாளரின் அடிப்படை அறத்தை விட்டுக்கொடுப்பதா?
அந்த காணொளி இசைஞானி இளையராஜா அவர்களை பற்றியது. அவருடைய பெருமையை பேசுவதற்கு அவர் இசையமைத்த ஆயிரம் திரைப்படங்களிலிருந்து ஏதோ ஒரு பாடலே போதுமானது. அப்படி இருக்க, முறையாக ஒரு செயலை செய்த எங்களை சிறுமைப்படுத்துவதேன்? ஒன்றை உயர்த்த இன்னொன்றை தாழ்த்த வேண்டும் என்பது அடக்குமுறை அல்லவா…..
மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் 96 திரைப்படங்களில் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தினோம் என்பதை விட, அது அவருடைய இசைக்கான எங்கள் சமர்ப்பணம். இசைஞானியின் இசையை கேட்டு பிறந்து, வளர்ந்த தலைமுறை நாங்கள்.
’96 பற்றி இசைஞானி இளையராஜா Daring’ஆக ஒரு அறிக்கை வெளியிட்டார் என்று திரு. செய்யாறு பாலு சொல்கிறார்.
தவறு,
அது ஒரு நேர்காணலில் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில். அதற்கான உரிய விளக்கத்தை நாங்கள் கொடுத்த பிறகு அந்த சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டது.
மேலும், அதற்கு ’96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் மன்னிப்பு கேட்டதாக ஒரு பொய்யான தகவலையும் சொல்கிறார் திரு. செய்யாறு பாலு. முதலில் 96 படத்தின் இசையமைப்பாளர் பெயர் கோவிந்த் வசந்தா. கோவிந்த் வசந்த் அல்ல. அடுத்ததாக அவர் எந்த மன்னிப்பும் கேட்கவே இல்லை.
திரு. செய்யாறு பாலு எங்களைப் பற்றிய உண்மையைதான் சொல்ல வேண்டும் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. ஆனால், எங்களைப் பற்றி பொய் சொல்ல வேண்டாம்.
சினிமா என்பது திரைத்துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமானது அல்ல. சினிமாவைப் பற்றி விமர்சித்து செய்தி வழங்கும் செய்தியாளர்களுக்கும் அது சொந்தமானதுதான்.
சினிமாவை பாதுகாப்பது இருவரின் கடமைதான்.
கடந்த காலத்தில் 96 திரைப்படத்திற்கு வந்த ஒரு முக்கியமான பிரச்சினையை, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் துணையோடுதான் தீர்வு கண்டு, மீண்டு வர முடிந்தது.
அந்த நன்றியை நான் மறக்கவே மாட்டேன்.
ஐந்து வருடங்கள் கடந்தும், மீண்டும் ஒரு பிரச்சினை திரு. செய்யாறு பாலுவின் மூலமாக வந்துள்ளது.
தன்னிலை விளக்கம் அளிக்கவும், உண்மையை நிலைநாட்டவும் எனக்கு வேறு வழி தெரியவில்லை,உங்களையே மீண்டும் நாடுகிறேன்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் – அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கிறார். இந்த திரைப்படம்- அப்ளாஸ் என்டர்டெய்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இடையேயான பல திரைப்படத் தயாரிப்பின் கூட்டு ஒப்பந்தத்தின் தொடக்கத்தை குறிப்பிடுகிறது.
கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரும் வெற்றியை பெற்ற ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்- தமிழின் தரமான திரைப்படங்களை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட படைப்பாளி பா. ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் அதிதி ஆனந்த்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பல திரைப்படங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்கமாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் விளையாட்டை மையப்படுத்திய திரைப்படத்தை, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ என தொடர்ந்து வெற்றி பெற்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாரிக்கிறது.
படைப்பாளி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படத்தின் பணிகள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியது. கபடி விளையாட்டை மையப்படுத்திய படைப்பாக உருவாகிறது. அனைத்து தரப்பிலும் எதிரிகள் சூழ்ந்த இந்த உலகத்தில் துணிச்சலையும், தைரியத்தையும் வாழ்வியலாக கொண்ட இளைஞனின் கதையை சொல்கிறது இந்த திரைப்படம். இந்தக் கதை- ஒரு மனிதன் விளையாட்டையே துப்பாக்கி போன்ற வலிமை மிக்க ஆயுதமாக ஏந்தி, வன்முறையற்ற.. அமைதியான.. மரணமற்ற வாழ்க்கையை வாழ்வதற்காக போராடும் போராட்டத்தை விவரிக்கிறது.
தனித்துவம் மிக்க நட்சத்திர நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘பிரேமம்’, ‘குரூப்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.
திரைப்படத்தைப் பற்றி அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சமீர் நாயர் பேசுகையில், ” நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடனான எங்களது ஒத்துழைப்பு.. அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்டுகான ஒரு அற்புதமான அத்தியாயத்தை குறிக்கிறது. இந்தக் கூட்டணி ஒரு அசாதாரணமான விளையாட்டை மையப்படுத்திய திரைப்படத்துடன் தொடங்கி, தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை தேர்வு செய்வதில் எங்களது அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டுகிறது. இயக்குநர் மாரி செல்வராஜின் திறமை மற்றும் திறன் மிகு தொழில்நுட்ப குழுவினரின் ஆதரவுடன் தென்னிந்திய சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தையும் அமைக்கிறது” என்றார்.
நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்கள் பா.ரஞ்சித் மற்றும் அதிதி ஆனந்த் பேசுகையில், ” பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நீலம் ஸ்டுடியோஸ், மாரி செல்வராஜுடனும் இணைந்து பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது. அர்த்தமுள்ள சினிமா மற்றும் உண்மையான கதைகளுக்கான எங்களின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டு காட்டும் வகையில் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்டுடன் இந்தப் பயணத்தை மேற்கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றனர்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், ” பரியேறும் பெருமாள்- பா ரஞ்சித் அண்ணாவுடன் நான் இணைந்த முதல் திரைப்படம். இப்படம் இவ்வளவு உயரம் எட்டியதற்கு பா. ரஞ்சித்தும் ஒரு முக்கிய காரணம். என்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு அது ஒரு படிக்கல்லாக அமைந்தது. அவருடன் மீண்டும் ஒரு முறை இணைந்து பணியாற்றுவது உற்சாகத்தை அளிக்கிறது. இப்போது என்னுடைய ஐந்தாவது படத்திற்காக அவருடனும், மற்றொரு வலிமையான கூட்டாளியான அப்ளாஸ் என்டர்டெய்ன்மெண்ட்டுடனும் இணைந்திருக்கிறேன். மீண்டும் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. பரியேறும் பெருமாள் முதல் என்னுடைய அனைத்து படைப்புகளையும் அதிதி ஆனந்த் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். அவர் ஒரு நல்ல தோழியும் கூட. மேலும் அவருடைய உள்ளார்ந்த ஆதரவுடன் இந்தத் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திரைப்படம் கபடி என்னும் விளையாட்டின் வேர்களைத் தேடிச் செல்லும் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இருக்கும். மேலும் துருவுடன் இணைந்து பணியாற்றுவது என்பதும் மகிழ்ச்சி. இந்தத் திரைப்படத்தில் வலிமையாகவும்.. திறமையான இளைஞனாகவும் துருவ் விக்ரம் வித்தியாசமான கோணத்தில் திரையில் தோன்றுவார். இந்த திரைப்படம் நம் அனைவருக்கும் ஒரு முக்கியமான மைல் கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை” என்றார்.
அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பற்றி…
தொலைக்காட்சி தொடர், தொலைக்காட்சி நிகழ்ச்சி, இணைய தொடர், திரைப்படம், ஆவண படங்கள் மற்றும் அனிமேஷன் படைப்புகளுக்கு உள்ளடக்கம் மற்றும் கதை கருவினை வழங்கும் முன்னணி ஸ்டூடியோவாக அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் திகழ்கிறது. இது ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு பிரிவாக இயங்குகிறது. மேலும் ஊடகத்துறை நிபுணரான சமீர் நாயரின் வழிகாட்டலில் செயல்படுகிறது. இந்த ஸ்டுடியோ ஏராளமான தொடர்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. வெவ்வேறு ஜானரில்… வெவ்வேறு மொழிகளில்… நிகழ்ச்சிகளையும் வழங்கி இருக்கிறது. குறிப்பாக ‘ருத்ரா : தி எட்ஜ் ஆப் டார்க்னெஸ்’, ‘கிரிமினல் ஜஸ்டிஸ்’, ‘ஸ்கேம் 1992 : தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி’, ‘ஸ்கேம் 2003 : தி தெஹல்கி ஸ்டோரி’, ‘உன்டேகி’, ‘கஃபாஸ்’ என பல தொடர்கள் பார்வையாளர்களின் பாராட்டுகளையும், வரவேற்பையும் பெற்றது. அத்துடன் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், நந்திதா தாஸ் இயக்கத்தில் நடிகர் கபில் சர்மா நடிப்பில் ‘ஸ்விகாடோ’ எனும் திரைப்படத்தை தயாரித்து, உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியிட்டு, விமர்சன ரீதியாக பெரும் பாராட்டையும் பெற்றது. இதனுடன் இந்த நிறுவனத்தின் முதல் தமிழ் சினிமாவான ‘போர் தொழில்’ திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்றதுடன், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் அமோக வரவேற்பையும் பெற்றது. மேலும் அபர்ணா சென் இயக்கத்தில் உருவான ‘தி ரேப்பிஸ்ட்’ எனும் திரைப்படம் அண்மையில் பூஸன் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு மதிப்புமிக்க கிம் ஜிஜோக் விருதை வென்றது. அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் – டிஜிட்டல் தள உலகில் முன்னணியில் திகழும் நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, சோனி லைவ், எம் எக்ஸ் ப்ளேயர், ஜீ5 மற்றும் வூட் செலக்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஆக்கபூர்வமான படைப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்களிப்பை செய்து வருகிறது.
நீலம் ஸ்டுடியோஸ் பற்றி…
இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோரால் தொடங்கப்பட்ட நீலம் ஸ்டுடியோஸ் – புதிய இளம் திறமையாளர்களை கண்டறிந்து, அவர்களின் திறமையை.. நிலையான வணிக நடைமுறைகளுடன் உருவாக்கி, வெற்றி பெற வைப்பதுடன்.. நீலம் சினிமாடிக் யுனிவர்ஸ் மூலம் இந்தியத்தனத்துடன் கூடிய சுதந்திரமான உள்ளடக்கத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர அடையாளங்களில் ஒருவராக ஜொலிக்கும் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘நட்சத்திரங்கள் நகர்கிறது’ ஆகிய படைப்புகள் வெளியாகி இருக்கிறது. விரைவில் சீயான் விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ எனும் திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
அதிதி ஆனந்த் – தொழில் முனைவோர், லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளராவார். அவரது தயாரிப்பில் ‘தேரே பின்லேடன்’, ‘நோ ஒன் கில்ட் ஜெசிக்கா’, ‘பான் சிங் தோமர்’, ‘சில்லார் பார்ட்டி’ மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான ‘தி ஜேர்னி ஆப் த ஃபக்கீர்”, ‘பெரனீஸ் பெஜோ’, ‘பர்கத் அப்ட்டி’ மற்றும் ‘எரின் மோரியாரிட்டி’ ஆகிய திரைப்படங்கள் உருவாகி இருக்கிறது.
பா. ரஞ்சித் – அதிதி ஆனந்த் ஆகிய இருவரும் இணைந்து, இயக்குநர் பிராங்கிளிங் ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘ரைட்டர்’ எனும் விமர்சன ரீதியாகவும், வணிகரீதியாகவும் பாராட்டைப் பெற்ற திரைப்படத்தை தயாரித்தனர். மேலும் நீலம் ஸ்டுடியோஸ் சார்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, தினேஷ் நடிப்பில் உருவான ‘ஜே பேபி’ எனும் திரைப்படம் அண்மையில் வெளியாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து கலையரசன், தினேஷ், ஷபீர், ரித்விகா மற்றும் வின்சு ரேச்சல் ராம் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தண்டகாரண்யம்’ எனும் திரைப்படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது.