December 2023

‘பாய் ‘திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா

மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தி ‘பாய் ‘ திரைப்படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தின் பிரதான நாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷா . வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார்.
கே ஆர் எஸ் ஃபிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார்.எடிட்டிங் இத்ரிஸ்.

இப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

‘பாய் ‘படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

பிரபல திரைப்படப் பாடல் ஆசிரியர் உடுமலை நாராயண கவியின் கொள்ளுப்பேத்தியான ஸ்ரீ நியா இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
இவ்விழாவில் தயாரிப்பாளர் ஸ்ரீ நியா பேசும்போது,

“பாய் படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர்.சஸ்பென்ஸ் திரில்லர் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். இதில் நிறைய திருப்பங்களும் அழகழகான முடிச்சுகளும் இருக்கும். இன்றைய சமுதாயத்தில் நடக்கிற விஷயம் மட்டுமல்ல நடக்கப் போவதையும் இப்படத்தில் கூறியிருக்கிறோம் .தமிழ் சினிமாவிற்கு இந்தக் கதை புதிதாக இருக்கும் . கொரோனா சவால்கள் எல்லாம் நிறைந்த காலத்தில் கடினமான நேரத்தில் இதை எடுத்தோம். படக் குழுவினர் கடினமாக உழைத்து தங்கள் உழைப்பை வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் ” என்றார்.

தயாரிப்பாளர் சங்கம் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது,

“இந்தப் படத்தின் இயக்குநர் எப்படியோ இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு இந்தத் தலைப்பை வாங்கி விட்டார். இதன் ட்ரெய்லர் பார்க்கும் போது பெரிய வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கை தருகிறது. இந்தப் படத்தில் எல்லா நல்ல அம்சங்களும் உள்ளன பணியாற்றிய அனைவரும் சிறப்பாக வேலை பார்த்துள்ளனர்”என்றார்.

தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன் பேசும்போது,

“இந்த பாய் படத்தின் மூலம் படத்தைத் தயாரித்துள்ள தயாரிப்பாளர், இயக்கி உள்ள இயக்குநர்,நடித்துள்ள கதாநாயக நடிகர் வெற்றி பெற வேண்டும். உங்கள் முயற்சி நிச்சயம் வெற்றியைப் பெற்று தரும்.

பாய் என்றால் சகோதரன் என்ற பொருள். நாம் அனைவருமே சகோதரர்கள்.இந்தப் படமும் சகோதரத்துவத்தைத் தான் பேசுகிறது .இந்த உலகத்தில் சகோதரத்துவம் வளர வேண்டும். மனிதநேயம் வளர வேண்டும்.
இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர். அதாவது கொடுப்பவன் பெரியவன் .கொடுக்காதவன்கீழ்குலத்தோன் இவ்வளவுதான்.வேறு எந்தப் பிரிவும் கிடையாது.

இது மாதிரி மேடைகளில் பேசும்போது எங்களுக்கு ஒளிவு மறைவு கிடையாது . வெளிப்படையாகத்தான் பேசுவோம். ஆனால் வாழ்த்த அழைக்கும்போது சுமாராக உள்ள படத்தைக் கூட வாழ்த்தி விட்டுத் தான் வருவோம். ஆனால் இதன் ட்ரெய்லர் நன்றாக உள்ளது.

உடுமலை நாராயணகவியின் கொள்ளுப்பேத்திதான் ஸ்ரீநீயாதான் இங்கே தயாரிப்பாளராக வந்துள்ளார்.அவர் ஆங்கிலம் கலந்து பேசினார் .தமிழையும் மறக்கக்கூடாது.

ஒரு முறை எம்ஜிஆரிடம் நீங்கள் வாரி வாரி வழங்குகிறீர்களே என்று கேட்டபோது,அவர் அதற்குக் காரணம் என் குருநாதர் என்எஸ்கே தான் என்றார்.ஏனென்றால் என் எஸ் கே நாடகக் குழுவில் எம்ஜிஆர் மாத சம்பளத்தில் நடித்தவர். எம்ஜிஆரே போற்றக்கூடிய அளவுக்கு வாரி வழங்கியவர் என் எஸ் கே. அவர் கடைசிவரை கொடுத்துக் கொண்டே இருந்தார். அந்தளவுக்கு மனிதநேயம் கொண்டவர்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். இதை உலகத்தில் யாருமே இதைச் சொல்லவில்லை. ஒருவனை பழிவாங்க அவனுக்கு நல்லதுதான் செய்ய வேண்டும் என்று திருவள்ளுவர் தான் கூறினார். அப்படி மனிதநேயத்தை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும்.
உலகத்தில் சிறந்தது மனித நேயம் தான் என்று
அப்படி ஒரு அற்புதமான கருத்தை இந்தப் படம் கூறியுள்ளது .நல்ல படத்திற்குரிய அனைத்து தகுதிகளும் இந்த படத்திற்கு உள்ளன. படத்தின் தயாரிப்பாளர் நாயகன் இயக்குநர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

படம் பற்றி இயக்குநர் கமலநாதன் புவன் குமார் பேசும்போது,

“இன்று படம் எடுப்பது முக்கியமல்ல, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் முக்கியம் மட்டுமல்ல சிரமமானதும் கூட. அந்தப் பணியில் இருக்கும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.

இதை நன்றி கூறும் விழாவாகத்தான் நான் பார்க்கிறேன் .முதல் வார்த்தையே நன்றி என்று தான் கூற வேண்டும்.
நானும் நாயகன் ஆதவா ஈஸ்வராவும் நண்பர்கள்.அவர் என்னிடம் பேசும்போது நீங்களும் வளருங்கள் நானும் வளர்கிறேன் என்று தான் சொல்வார் . அப்படி சம மரியாதை கொடுப்பவர்.
நான் சோர்டைந்த நேரத்தில் எல்லாம் என்னை அருகில் வைத்துக் கொண்டு ஊக்கப்படுத்துவார். எங்களிடம் இருப்பது நட்பைத் தாண்டிய நல்ல உறவு.இது தொடர வேண்டும்.இந்தப் படத்திற்காக
எத்தனை பேருக்கு நன்றி சொல்வது?அத்தனை பேரும் இந்த படத்திற்காக அந்த அளவுக்கு உழைத்து உள்ளார்கள்.தொழில் நுட்பக் கலைஞர்களை நண்பர்கள் என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் அப்படி அமைந்தது ஒரு வரம் என்றுதான் நான் கூறுவேன்.

பாய் என்றால் சகோதரன் மட்டுமல்ல நண்பன் என்றும் சொல்லலாம்.

இது ஒரு NON-LINEAR வகை திரைப்படமாக உருவாகியிருக்கிறது . படத்தின் முதல் பாதியில் கேள்விகளாகவும் இரண்டாவது பாதியில் அதற்குரிய பதில்களாகவும் வரும்படி இந்த திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் எந்த மதத்தையும் புண்படுத்தவில்லை. மனித நேயம் தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையானது என்கிற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.வேறு எதுவும் படத்தைப் பற்றி நான் கூற விரும்பவில்லை பார்த்து விட்டு நீங்கள் தான் சொல்ல வேண்டும்” என்றார்.

நடிகர் லொள்ளு சபா ஜீவா பேசும்போது,

“நான் படத்தின் தலைப்பைப் பார்த்து விட்டு விழாவிற்கு வரத் தயங்கினேன் .ஆனால் படம் எப்படிப்பட்டது என்று பிறகு புரிந்தது.ஏனென்றால் இன்று சமூக ஊடகங்களில் நாம் ஏதாவது ஒன்றை நினைத்து சொல்லி அதை வேறு வகையாக எடிட் செய்து வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி விடுகிறார்கள். எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள் ஜாதி மதம் பாராமல் பகிர்ந்து கொள்வது அன்பு மட்டும்தான்.

இந்த படத்தின் போஸ்டரை பார்த்தேன் குல்லா, விபூதிப் பட்டை, கையில் சிலுவை என்று உள்ளது .இது தலைவரின் ஜக்குபாய் ஸ்டைல் ஆச்சே என்று இயக்குநரிடம் கேட்டேன் அவரும் தலைவரின் விசிறி என்றார்.

இந்த மனித குலத்தை அழிக்கும் ஆயுதங்களைத் தான் உலக நாடுகள் அதிக செலவு செய்து வாங்குகின்றன. உலக நாடுகள் இந்தியா உள்பட ராணுவத்திற்குச் செலவு செய்யும் தொகை தான் அதிகமாக இருக்கிறது. வேறு நல்ல விஷயங்களுக்கு அவ்வளவு செலவு செய்வதில்லை. மனிதர்களை அழிப்பதற்கு இவ்வளவு ஆயுதங்கள் எதற்கு? இவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்த பிறகு அது ஏன் என்ற கேள்வி எழுகிறது.அன்பு மட்டும் தான் உருவம் இல்லாதது.
அதனால் தான் அன்பே சிவம் என்றார்கள்.அன்பு தான் உயர்வானது.
அடுத்த தலைமுறைக்கு நாம் இதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டியது அன்பையும் நல்லவற்றையும் மட்டும் தான்.

இப்படி மனிதநேயத்தை பேசும் இந்தப் படம் சரியான நேரத்தில் வெளியாகி வெற்றி பெற வேண்டும் என்று எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

புயல் வெள்ளப் பாதிப்புகளை பார்த்தோம்.நம்மாழ்வார் ஐயா இதைப் பற்றி முன்பே கூறியிருக்கிறார்.இனி வருங்காலத்தில் வரப்போவது எல்லாம் பருவம் மழை அல்ல, புயல் மழை தான் என்று.காலம் தவறித்தான் இனி மழை வரும். ஒவ்வொரு மழையிலும் பள்ளிகள் விடுமுறை இன்று விடுவார்களா என்று குழந்தைகள் பதற்றத்துடன் இருக்கின்றன .எனவே கோடை விடுமுறை என்பதை மாற்றி மழைக் காலத்தில் விடுமுறை விடலாம் என்று அரசுக்கு நான் ஒரு யோசனை வைக்கிறேன். இதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்பதை ஒரு கோரிக்கையாக வைக்கிறேன்.
இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும் போது,

” முதலில் இந்தப் படத்தைத் தணிக்கை செய்த சென்சார் துறைக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்தையும் தெரிவிக்கிறேன்.பாய் என்று தலைப்பு வைத்து, அந்தப் படத்தை எப்படி சென்சாருக்கு எடுத்துக் கொள்வார்கள் என்று நான் நினைத்திருந்தேன். ஒரு வழியாக சென்சார் முடிந்துள்ளது அதற்காகப் பாராட்டுகிறேன்.
இந்த தலைப்பைத் தணிக்கைக்கு ஏற்று பிறகு தணிக்கை சான்றிதழ் கிடைத்திருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்தப் படம் சமூக நல்லிணக்கம் பேசும் படமாகத் தான் இருக்கும்.

இஸ்லாமியர்களை நாம் பிரித்துப் பார்ப்பதில்லை. ஒன்றுக்குள் ஒன்றாகத்தான் பழகுவோம்.எல்லாருக்கும் ஒரு முஸ்லிம் நண்பர் இருப்பார். எங்கோ ஏதோ ஒரு இடத்தில் மதப் பிரச்சினை வந்தால் அதை அரசியலாக்கி விடுகிறார்கள்.
ஆனால் நாம் அப்படி நினைப்பதில்லை.

படத்தில் மதம் ஒரு அரசியல் கருவி என்ற வசனம் வருகிறது. மதம் என்பது மனிதனுக்கு அடையாளம் அல்ல. மனிதாபிமானம் தான் மதம் .மனிதாபிமானம் இருந்தால் எந்த மதமும் தேவையில்லை.

தீவிரவாதி என்றாலே அவன் எந்த மதமும் கிடையாது. அவன் மனித ஜாதியே கிடையாது .அவன் மிருகஜாதி.
ஒரு குண்டு வைத்து 100 பேரைக் கொல்கிறான் என்றால் அவன் இஸ்லாமியனாக இருக்க முடியாது .இந்துவாக இருக்க முடியாது .வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவனாகவும் இருக்க முடியாது.

அன்னை தெரசா கருணையின் உருவம். அவரை யாராவது ஒரு கிறிஸ்தவப் பெண்மணியாக பார்க்கிறோமா?

அப்துல்கலாமை யாராவது இஸ்லாமியராகப் பார்க்கிறோமா?
அவரை மனிதநேயம் உள்ள இந்தியனாகத் தான் பார்க்கிறோம்.

கர்மவீரர் காமராஜர் இந்துவாக பிறந்தவர் தான். ஆனால் அவரை யாராவது இந்துவாகப் பார்க்கிறோமா? மனிதநேயம் உள்ள ஒரு சிறந்த ஆட்சியாளராகத்தான் பார்க்கிறோம்.

மக்கள் இன்று எல்லா பிரச்சினைகளையும் வெறும் செய்தியாகக் கடந்து போகிறார்கள். அதற்குத் தீர்வு என்ன என்று பார்ப்பதில்லை. இது பற்றி ஆட்சியாளர்கள் யாரும் யோசிப்பதில்லை.

ஒரு சிறந்த படம் என்பது எது? நல்ல கதையா? திரைக்கதையா?. வசனமா? பாடல்களா? சண்டைக் காட்சிகளா? எந்த திரைப்படம் சமூக பிரச்சினையைச் சொல்கிறதோ அது சிறந்த படம் தான்.மக்களுக்கு நல்ல விஷயத்தைச் சொல்வது சிறந்த படம் தான்.அப்படிப் பார்க்கும் போது பாய் மிகச் சிறந்த படம்.இந்த காலகட்டத்தில் நல்ல படங்களை மக்கள் வரவேற்கிறார்கள் கொண்டாடுகிறார்கள்.
இன்று குறைந்த முதலீட்டுப் படங்களும் நன்றாக இருந்தால் ஓடுகின்றன.நல்ல படங்களை மக்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள்.
இந்தப் படத்திற்கும் மக்கள் ஆதரவு தந்து கொண்டாட வேண்டும்” என்றார்.

நாயகன்ஆதவா ஈஸ்வரா பேசும்போது.

“நாங்கள் எங்கள் உழைப்பை இந்த படத்திற்கு நூறு சதவீதம் கொடுத்துள்ளோம்.திரை உலகத்தில் சிறிய படம் பெரிய படம் என்கிற பாகுபாடு தேவையில்லை. இது ஒரு படம் அவ்வளவுதான்.சிறிய படத்திற்கும் பெரிய படத்திற்கும் எல்லாருமே உழைக்கிறார்கள் அதைவெளியிடுகிற திரைகளின் எண்ணிக்கை தான் வேறுபடுகிறது.
அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி எல்லாம் ஒன்றுதான்.அந்த நிலையில்தான் இந்தப் படத்தை அனைவரும் எங்கள் உழைப்பைக் கொடுத்து எடுத்திருக்கிறோம்” என்றார்.

விழாவில் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் டி. எஸ். ஆர். சுபாஷ், படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் அக்ஷய் , நடிகர் தீரஜ், பாடலாசிரியர் சங்கத் தலைவர் தமிழமுதன் இயக்குநர் ஷிவானி செந்தில், மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

ZEE5 வழங்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

‘கூச முனிசாமி வீரப்பன்’ இந்தியாவின் மிகப் பிரபல வனக் கொள்ளைக்காரன் வீரப்பனின் வாழ்க்கையையும் அவனது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ஆகும்.  தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபாவதி இந்த டாக்குமெண்ட்ரி சீரிஸைத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸ் டிசம்பர் 14 ஆம் தேதி பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்பட உள்ளது

இந்நிலையில் இந்த சீரிஸ் பத்திரிக்கையாளர்களுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. திரையிடலுக்குப் பின்னர் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில் ..  

ZEE5 சார்பில் ஷ்யாம் திருமலை பேசியதாவது..
6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு சிறப்பான சீரிஸுடன் வந்துள்ளது ZEE5. நிறைய பேர் பாஸிடிவ் ரிவ்யூ தந்திருக்கிறீர்கள். பிரபா மூலம் தான் இந்த சீரிஸ் நடந்தது. அவருக்கும் அவரை அறிமுகப்படுத்திய எஸ் ஆர் பிரபு சாருக்கும் நன்றி. முக்கியமாக மூன்று பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். இவர்கள் மூவர் தான் இந்த சீரிஸுன் கிரியேட்டிவ் டீம்.  ஜெய்சந்திர ஹாஸ்மி, இவர் தான் இந்த சீரிஸுக்காக முதன் முதலில் பேசினார். இந்த சீரிஸை எழுதியிருக்கிறார். சமீபத்திய லேபிள் சீரிஸிலும் இவர் எழுதியிருக்கிறார். வசந்த் ரிசர்ச் ஹெட் எல்லா ரிசர்ச்சும் இவர் தான் செய்தார். மூன்றாவதாக சரத், இவர்கள் மூவரும் தான் இந்த சீரிஸ் உருவாகக் காரணம். மேலும் இதில் உழைத்த எல்லோருக்கும்  நன்றி.

ZEE5 சார்பில் கௌஷிக் நரசிம்மன் பேசியதாவது..
ZEE5 க்கு இது ரொம்ப சேலஞ்சிங்கான புராஜக்ட். ரொம்ப பெருமையான புராஜக்ட். இதற்குப் பின்னால் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. இதன் ஆரம்பம் கோபால் சாரும் அவரது டீமும் தான். அவர்கள் உழைப்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்த விஷுவலை முதன் முறையாக பார்க்கும் யாருக்கும் கூஸ்பம்ஸ் வரும். உங்களுக்கும் வந்திருக்கும். இந்த சீரிஸின் தூண்கள் சரத், ஜெய், வசந்த். அவர்களின் ரிசர்ச்சும் அதைத் தரைக்குக் கொண்டு வந்த விதமும் பிரமிப்பானது. பிரபா மேடத்துக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் ராஜ் இசையமைப்பாளர் சதீஷ் அசத்திவிட்டார்கள்.  ZEE5க்கு மிகவும் பெருமையான படைப்பாக இருக்கும். இனி இது உங்கள் கைகளில் நன்றி.

ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் பேசியதாவது…
ZEE5 உடன் இரண்டாவது புராஜக்ட். முதலில் ஷாம் பிரசாந்த்திற்கு நன்றி. ஜெய், வசந்த், சரத் மூவருக்கும் நன்றி. என்னை நம்பி இந்த புராஜக்டை தந்ததற்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் இந்த சீரிஸ் பிடிக்கும் நன்றி.

இசையமைப்பாளர் சதீஷ் ரகுநாதன் பேசியதாவது..
ZEE5 உடன் மூன்றாவது புராஜக்ட். இந்த புராஜக்டில் என்னைக் கொண்டு வந்த ஷாமுக்கு நன்றி. எனக்கு முழு சுதந்திரம் தந்து என் இசையைச் சரியாக பயன்படுத்திக் கொண்ட ஜெய், வசந்த், சரத் மூவருக்கும் நன்றி. நீங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி.  

எடிட்டர் ராம் பாண்டியன் பேசியதாவது..
ZEE5 க்கு நன்றி. ஜெய், வசந்த், சரத் மூவருக்கும் நன்றி. ஒன்றரை வருடம் வேலை பார்த்துள்ளோம். நீங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி.  

பிரசாந்த் பாலகிருஷ்ணன் பேசியதாவது..
வீரப்பன் பேரை இப்போது தேடினாலும் 500 க்கும் மேலான வீடியோக்கள் வரும். நிறைய டாக்குமெண்ட்ரி வந்திருக்கிறது அதைத் தாண்டி இந்த சீரிஸ் ஏன் என்றால் அதில் அத்தனை கதைகள் இருக்கிறது. வீரம், நகைச்சுவை, ஏமாற்றம், வலி என எல்லாமே இருக்கிறது. சொல்லாத பக்கம் நிறைய இருக்கிறது. அதில் முக்கியமானது நக்கீரன் 1996 எடுத்த வீடியோக்கள். ஜர்னலிஸ்டிக் டிரசர் என்று தான் சொல்ல வேண்டும். பிரபா இந்த ஐடியா சொன்ன போதே நன்றாக இருந்தது. எங்கள் கோபால் சார் இது எப்படி வர வேண்டும் என்று சொன்னார். வீரப்பனை ஒரு ஹீரோவாகவும் முழுமையாக இருப்பார், வில்லனாகவும் இருப்பார். இதை முழுமையாகச் சொல்ல வேண்டும் என்று தான் இந்த சீரிஸ். சரித்திரத்தில் தோற்ற அரசர்கள் கதை இருக்கும், ஜெயித்த அரசர்கள் கதைகள் இருக்கும், ஆனால் மடிந்து போன மக்களின் கதை இருக்காது. அந்த வகையில் நக்கீரன் மக்களின் கதையைத் தொடர்ந்து சொல்லி வருகிறது. அதில் முக்கியமான சீரிஸாக ‘கூச முனிசாமி வீரப்பன்’ இருக்கும். ஜெய், சரத், வசந்த் மற்றும் உடன் உழைத்த அனைவருக்கும் நன்றி. இது விவாதங்களை உருவாக்கும் ஒரு பெருமையான படைப்பாக இருக்கும் நன்றி.

நக்கீரன் நிருபர் சுப்பு பேசியதாவது..1993ல என்னுடன் வீரப்பனை சந்திக்க இருவர் வந்தனர். அப்போது புகைப்படங்கள் மட்டுமே எடுத்தோம். அது நக்கீரனில் வந்தது. இது எல்லோருக்கும் தெரியும். பின்னர் 1996 ல் வீடியோ பதிவு செய்து ஒளிபரப்பினோம். நாங்கள் சேகரித்த பல தகவல்கள் உங்களுக்கு இந்த டாக்குமெண்ட்ரி மூலமாகக் கொண்டு வந்து தந்திருக்கிறோம்.  இதைச் சாத்தியமாக்கிய எங்கள் கோபால் ஆசிரியருக்கு நன்றி.

இயக்குநர் சரத் ஜோதி பேசியதாவது..
எல்லா இயக்குநருக்கும் முதல் புராஜக்ட் ரொம்ப முக்கியமானது. ஷங்கர் சார் கிட்ட இருந்து வெளியே வந்து ஒரு சீரிஸுக்காக உழைத்தோம். கோவிடால அது தடங்கல் ஆயிடுச்சு. அந்த நேரத்தில தான் இந்த வாய்ப்பு வந்ததது. இந்த புராஜக்ட் கேக்க அவ்வளவு பிரமிப்பாக இருந்தது. முதல்ல வீரப்பன எனக்கு அடையாளப்படுத்தியது நக்கீரன் புத்தகம் தான். இப்ப இந்த புராஜக்ட் பண்ணும்போது அந்த புத்தகங்கள் படிச்சேன். அதில் பிரமிப்பை ஏற்படுத்தியது முதல் முதல்ல வீரப்பன தேடிபோன பத்திரிக்கையாளர்களோடு அனுபவம் தான். அது மிகப் பிரம்மாண்ட து. தன்னோடு வீரப்பன் பேட்டிகள எடுத்த எல்லா பத்திரிக்கையாளர்களையும் கோபால் சார் தன் புத்தகங்களில் அடையாளப்படுத்திருக்காரு. இந்தக்கதையை எந்தக்காரணத்துக்காகவும் இத சினிமாத்தனமா ஆக்கிடக்கூடாதுங்கிறதுல தெளிவா இருந்தோம். எல்லாத்துக்கும் உண்மையான வீடியோ  பதிவுகள் சாட்சியங்கள் இருக்கு. அதை அப்படியே வீரப்பனோட பக்கத்துல இருந்து உங்களுக்கு சொல்லனும்னு முயற்சி பண்ணினோம். மூணு டிராஃப்ட் எழுதி அதில் ஃபைனலா வந்தது தான் திரையில் பார்க்குறீங்க. சிலர் வீரப்பன ஹீரோவா காட்டுற கதையானு கேக்குறாங்க, இல்ல எந்த வகையிலும் அப்படி ஆகிடக்கூடாதுன்றது தான் எங்கள் நோக்கம். இப்ப வடநாட்டில் அடக்குமுறை நடக்குது, அத பதிவும் பண்றாங்க. இனி வர்ற காலத்தில் அதுவும் டாக்குமெண்ட்ரியா வரலாம். தமிழில் இது முதல் முறையா இருக்கும். பல சொல்லப்படாத கதைகள் இன்னும் இருக்கு. இன்னும் எக்கச்சக்க வீடியோக்கள், பேட்டிகள், பலரோட துயரங்கள் இருக்கு. எல்லாத்தையும் நாங்க ஆய்வு செஞ்சு, அத 6 எபிசோடா கொண்டு வந்திருக்கோம். இந்த மாதிரி ஒரு டாக்குமெண்ட்ரி தமிழுக்கு ரொம்ப புதுசு. ஆனால் எங்க மேல நம்பிக்கை வச்சு, இந்தக்கதை மக்களுக்கு போய்ச்சேரனும்னு முடிவு பண்ணி ஆதரவு தந்த ZEE5 க்கு நன்றி. காட்டுக்குள்ள நாங்க போய் ஷீட் பண்ணினது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, ஆனால் அங்க கேமராவ தன்னோட தோள்ல தூக்கிட்டே சுத்துன என்னோட கேமராமேன் ராஜுக்கு நன்றி. ரொம்ப குருஷுயலனா டைம்ல நிறைய பேர் பார்த்து கடைசியா வந்தவர் தான் மியூசிக் டைரக்டர் சதீஷ். இந்த ஃபார்மேட்ட புரிஞ்சுகிட்டு அதுக்கேத்த மாதிரி வெறும் 5 நாள்ல மியூசிக் பண்ணி தந்தாரு. அவருக்கு நன்றி. எடிட்டர் ரொம்ப சிறப்பான எடிட்டிங் தந்தார். இந்த புராஜக்ட் நல்லா வரக் காரணம் என்னோட எழுத்தாளர்கள் டீம். நிறைய சண்டை போட்டிருக்கோம். பிரபா, ஜெயசந்திர ஹாஷ்மி, வசந்த் மூவருக்கும் என் நன்றி. என்னோட குழு ரொம்ப ரொம்ப கடுமையா உழைச்சிருக்காங்க, அவங்க எல்லோருக்கும் என்னோட நன்றி. இந்த புராஜக்ட் பின்னாடி கோபால் சாரோட 30 வருட உழைப்பு இருக்கு. அவர் இதுக்காக கொடுத்த விலை அதிகம். இந்த ஃபுட்டேஜ் எல்லாம் அவர் இவ்வளவு வருடம் பாதுகாத்து வச்சிருந்தது ரொம்ப பெரிய விஷயம். அவர் எங்களை நம்பியதற்கு மிகப்பெரிய நன்றி.  எல்லோருக்கும் நன்றி.

எழுத்தாளர் ஜெயச்சந்திர ஹாஷ்மி
எல்லாம் ஆரம்பித்தது நக்கீரனிலிருந்து தான். முதல் நன்றி கோபால் சாருக்கு தான். தன் உயிரை கொடுத்து 30 வருட உழைப்பில் உருவாக்கின, பாதுகாத்து வச்ச புட்டேஜை எங்களை நம்பி தந்தார். அது எங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பை தந்தது. அவருக்கு நன்றி. அவர் எங்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் எங்களிடம் இருந்தது. இப்போது இந்த சீரிஸ் பார்க்கும் போது அவர்களுக்கு மகிழ்ச்சி என்பதே எங்களுக்கு வெற்றி தான். அடுத்ததாக பிரபா எங்களுடன் இணைந்து கனவை நனவாக்கியதில் இதை இங்கு வரை கொண்டு சேர்த்ததில் அவரது உழைப்பு மிகப்பெரிது. பல வேலைகளுக்கிடையில் இதில் உழைத்தது மிகப்பெரிய பிரமிப்பு தான். வசந்த் இந்த சீரிஸில் எங்கு திரும்பினாலும் இருப்பார். இந்த புராஜக்டில் ரிசர்ச் மிக மிக முக்கியம். நாங்கள் எழுதியதை உண்மையாகத் தேடி எங்கள் முன் அதை கொண்டு வந்தவர் அவர் தான், அதற்காக அவருக்கு முக்கிய நன்றி. சரத்தின் உழைப்பு மிக முக்கியமானது. நாங்கள் இணைந்து உருவாக்கிய கனவைத் திரையில் கொண்டு வந்தவர் அவர் தான். எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் உழைத்தார். நாங்கள் ஆரம்பித்த போது நினைத்ததை இந்த சீரிஸில் கொண்டு வந்துவிட்டோம். இந்த மாதிரி ஒரு சீரிஸை எங்களை நம்பி ஆதரவு தந்த ஷாம், கௌஷிக், ZEE5க்கு மிகப்பெரிய நன்றி. என் படக்குழுவிற்கு நன்றி. நக்கீரன் வீரப்பனை அடையாளம் காட்டியது, அவன் செய்த தவறுகளையும் மக்களுக்கு நடந்த அநியாயங்களையும் கொண்டு வந்தது நக்கீரன் தான். அதைத்தான் இதில் கொண்டு வந்துள்ளோம். நல்ல கலை நடுக்கத்தை தர வேண்டும் என்பார்கள். அப்படி ஒரு பெருமையான படைப்பில் பணியாற்றியது மகிழ்ச்சி.
தயாரிப்பாளர் பிரபாவதி பேசியதாவது..
இது எனக்கு மிக முக்கியமான மேடை. என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்தது என் தந்தை தான். என் சிறு வயதில் அப்பா கிளம்பும்போது வீடே அழும், ஏன் எனக் கேட்பேன்.  அப்பா வீரப்பனைப் பார்க்கப் போகிறார், அவர் யானையைக் கொன்றவர் மனிதர்களைக் கொன்றவர் என்றார்கள். அவரை ஏன் அப்பா பார்க்கப் போக வேண்டும் என நினைப்பேன். ஆனால் ஒரு நாள் காட்டில் இருந்து வந்து மயிலிறகு தந்து, வீரப்பன் தந்தாக சொன்னார். வீரப்பன் எப்படி இவ்வளவு எளிமையான மனிதராக இருக்க முடியும் எனத் தோன்றியது. கல்லூரி காலத்தில் தான் அவரைப் பற்றி முழுதாக தெரிய ஆரம்பித்தது. என்றாவது ஒரு நாள் அவரது கதையை படமாக்க வேண்டும் என நினைத்தேன். அப்பாவிடம் கேட்ட போது எனக்கு தான் நிறைய டெஸ்ட் வைத்தார். இதை செய்தால் முறையாகச் சரியாகச் செய்ய வேண்டும் என்றார். அப்படித்தான் இந்தப் பயணம் ஆரம்பித்தது. இதைத் தயாரிக்கப் போகிறோம் என்றவுடன் எஸ் ஆர் பிரபு சாரிடம் போனேன் அவர் மிக ஆதரவாக எல்லாம் சொல்லித்தந்தார். எங்களுக்குக் கனவிருக்கலாம் ஆனால் அதைச் சரியாகப் புரிந்து கொண்டு ஷாம், கௌஷிக், ZEE5 யிலிருந்து பெரிய ஆதரவைத் தந்தார்கள். ஜெய், வசந்த் இருவரும் தான் என் கனவிற்குத் துணையாக இருந்தார்கள். எங்களுடன் எந்த ஈகோவும் இல்லாமல் வந்து எங்களுடன் உழைத்து உருவாக்கிய சரத்துக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் ராஜ் காட்டுக்குள் அவரது உழைப்பு பெரியது.  இசையமைப்பாளர் சதீஷ் மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளார். இதில் நிறையப்பேர் உயிரைத்தந்து உழைத்துள்ளனர். சீமான், என் ராம் சார் என எங்கள் மீது அக்கறை கொண்டு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. வீரப்பனுடன் இருந்த சித்தன் அவர்களை நக்கீரன் சரணடைய வைத்தது. இப்போது அவரின் எளிமையான வாழ்வை தீரன் புரடக்சன்ஸுக்காக படம்பிடித்தது பெருமை. நல்ல படைப்பிற்கு ஆதரவு தரும் நீங்கள் எங்கள் படைப்பிற்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நக்கீரன் கோபால் பேசியதாவது..
ஷாம், கௌஷிக் ZEE5 க்கு நன்றி ஏனென்றால் முதலில் நக்கீரன் என்றால் தைரியம் வேண்டும், அப்புறம் வீரப்பன் என்றால் இன்னும் தைரியம் வேண்டும். ஆனால் அதைச் சாத்தியமாக்கி இருக்கிறார்கள். வீரப்பனின் கதையை எடுப்பதற்காக நிறைய பேர் வந்தார்கள். என் மகள் கேட்பதற்கு முன்பாகவே நிறைய பேர் கேட்டார்கள். ஆனால் இதைச் சரியாகச் செய்ய வேண்டுமே என்கிற தயக்கம் இருந்தது. பாலுமகேந்திரா கூட கேட்டார் ஆனால் மறுத்துவிட்டேன். இதற்காக நாங்கள் எங்கள் டீம் இழந்தது அதிகம். இது வரை வந்தது அனைத்துமே போலீஸ் பார்வையில் வீரப்பனின் கதை. அதைப் பார்க்கும் போதே கோபமாக வரும். பாதிக்கப்பட்டவன் அவ்வளவு பேர் இருக்கிறார்களே, அதைப்பதிவு செய்ய வேண்டுமே, அவர்களுக்குத் தீர்வு வேண்டுமே என்று தோன்றும். பாதிக்கப்பட்டவர்களுக்காக எவ்வளவோ போராடினோம். இதில் வந்திருப்பது வெறும் .001 பகுதி மட்டுமே. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரை நிவாரணம் இல்லை. அந்த பாதிப்பை வலியை இவர்கள் சரியாகப் பதிவு செய்து விட்டார்கள். என் மகளுடைய டீம் அதைச் செய்துள்ளார்கள் என்பது பெருமையாக இருக்கிறது. இதைத் தைரியமாக செய்த  ZEE5 க்கு நன்றி. இது நக்கீரனின் 30 வருட உழைப்பு, எனக்கு வீரப்பனைப் பிடிக்கும் வீரப்பனுக்கு என்னைப் பிடிக்கும் ஆனால் எந்த இடத்திலும் நக்கீரன் வீரப்பனுக்கு ஆதரவாக ரிப்போர்ட் செய்ததில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் தான் நாங்கள் நின்றோம். வீரப்பனைத் தேடிப்போய்ப் பார்த்துப் பல கஷ்டங்களுக்கு பிறகு 1996 ல் அவரை வீடியோவில் கொண்டு வந்தோம். அதை அத்தனையையும் இவர்களிடம் தந்து இதைச் சரியாகக் கொண்டு வந்து விடுங்கள் என்று மட்டும் சொன்னேன். அதை மிகச் சரியாகச் செய்து விட்டார்கள். இதில் உழைத்த கலைஞர்கள் அனைவரும் அவ்வளவு அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார்கள். பல வருடங்களுக்குப் பிறகு நேரில் போய்ப் பல ரிசர்ச் செய்து, அந்த தகவல்களைக் கொண்டு வந்து சேர்த்துள்ளார்கள். திரையில் அந்தக்கதையை உண்மையாகக் கொண்டு வந்துள்ளார்கள். இதற்காக உழைத்த என் டீம் பலர் ஜெயிலுக்கு போயிருக்கிறார்கள் நான் 9 மாதம் ஜெயிலுக்குப் போனேன். நக்கீரனின் இந்த உழைப்பைக் காப்பாற்றிக் கொண்டு வந்த இந்த குழுவிற்கும்  ZEE5 க்கும் நன்றி.

ஹிஸ்ட்ரி ஹண்டர்’ நிகழ்ச்சியில் மணிஷ்பால் அவர்கள் புதிர் நிறைந்த மகாபலிபுரத்தின் ஏழுகோயில்கள் குறித்த பழங்கதைகளை ஆராய்கிறார்

தொடர் 4 டிஸ்கவரி சேனல் மற்றும் டிஸ்கவரிஆகியவற்றில்டிசம்பர் 11 அன்று இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது!

Chennai-13.12.2023வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியின் ஒரு‘ஹிஸ்ட்ரி ஹண்டர்’ தொடரில் புகழ்பெற்ற நிகழ்ச்சித்தொகுப்பாளரான மனிஷ் பால் அவர்கள் இந்தியாவில்பழங்காலம் முதலே புகழோடு உள்ள மகாபலிபுரத்தின் ஏழுகோயில்களைச் சுற்றியுள்ள மர்மங்களை கண்டறிவதற்கானஒரு மனம்கவரும் வரலாற்றுப் பயணத்தை மேற்கொள்கிறார்.சென்னையில் இருந்து வெறும் 60 கி.மீ தெற்கே அமைந்துள்ளஇந்த யுனெஸ்கோ உலக புராதான சின்னம் ஒற்றைக் கல்லால்உருவாக்கப்பட்டு தனியாக நிற்கின்ற ரதங்கள் என்றுஅழைக்கப்படும் 7 மற்றும் 8ஆம் நூற்றாண்டுக் குகைக்கோயில்களுக்கு புகழ்பெற்றதாகும்.

டிசரம்பர் 11 அன்று இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும்இந்த தொடர், 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியகடற் பயணிகளுக்கு ஒரு அடையாளச் சின்னமாககடற்கரையோரம் காணப்பட்டதாக ஒரு காலத்தில்நம்பப்படுகின்ற ஏழு கோயில்களின் புதிர் நிறைந்தவரலாற்றைப் பற்றிய ஒரு தெளிவினை ஏற்படுத்துகிறது. எனினும், காலப்போக்கில், இந்த கட்டமைப்புகள் யாவும்மறைந்துவிட்டன, மேலும் அவற்றுக்கு என்ன ஆனது என்கின்றவிடை தெரியாத கேள்விகளை மட்டும் விட்டுச் சென்றுள்ளன.

2003ஆம் ஆண்டு தேசிய கடலியல் மையம் மகாபலிபுரத்தின்கடற்கரையில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் மூலமாக மணிஷ்பால் அவர்கள் பார்வையாளர்களை ஒரு மனம் கவரும்பயணத்தில் அழைத்துச் செல்கிறார். இந்த கடற்கரைகோயிலுக்கு தெற்கே கட்டமைப்புகள்கண்டுபிடிக்கப்பட்டாலும், போதுமான ஆதாரம் இல்லாதகாரணத்தால் ஏழு கோயில்களுக்கான தொடர்பு இன்னும்புரியாத ஒன்றாகவே உள்ளது. 2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப்பிறகு நீருக்கு அடியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிபழங்கால சிதைவுகளை வெளியே கொண்டு வந்ததோடு இந்தபகுதியில் உள்ள இரகசியங்களை வெளிப்படுத்துவதில் ஒருமுக்கிய பங்காற்றியுள்ளது.

மண்ணுக்கு அடியில் காலத்தால் மறைக்கப்பட்ட புதிர்களைவெளிக்கொண்டு வரும் வகையில், அடுத்தடுத்துமேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது அந்த பகுதியல்கோயில் இருந்ததற்கான ஆதாரத்தை வெளிப்படுத்தும்எழுத்துக்களுடன் கூடிய கற்கள் உள்பட பலவற்றை மணிஷ்பால் அவர்கள் ‘ஹிஸ்ட்ரி ஹண்டரில்’ வழங்குகிறார். மகாபலிபுரத்தின் ஏழு கோயில்கள் என்னும் வரலாற்றுப் புதிர்பற்றிய ஒரு மனதை ஈர்க்கும் விளக்கத்திற்கு இந்த ஆராய்ச்சிஉறுதியளிக்கிறது.

டிசம்பர் 11 அன்று இரவு 9:00 மணிக்கு டிஸ்கவரி சேனலில்ஒளிபரப்பாகின்ற மற்றும் டிஸ்கவரி+ இல் பார்க்கக்கூடிய, இத்தகைய ஒரு மனம்கவரும் வரலாற்றுப் பயணத்தைப்பார்க்கத் தவறாதீர்கள்.  

Cummins India Limitedin collaboration with Repos Energy launches DATUM, aninnovative Fuel Management System for Diesel applications

Chennai,13.12.2023: Cummins India Limited (“Cummins”), one of the leading power solutions technology providers in the country,announced the launch of DATUM (Data Automated Teller Ultimate Machine), an intelligent Fuel Management System, in collaboration with Repos Energy at CII EXCON 2023, at Bengaluru International Exhibition Centre (BIEC). As a part of the collaboration, Cummins will market and distribute the DATUM range of products through its vast distribution network in India.

Currently, customers face multiple challenges while managing their fuel operations including cumbersome procurement processes, fuel pilferage and adulteration, high dead-mileage operations, and unbalanced diesel inventory. Managing fuel requirements for multiple sites through conventional and manual processes locks working capital, contributing to a higher Total Cost of Ownership (TCO) and lower profitability. DATUM addresses these customer challenges by offering a solution that enhances the visibility into the downstream diesel value chain, driving cost and operational efficiency for its users.

DATUM leverages sensors and digital technologies to provide real-time updates on fuel inventory and consumption across multiple installations. The safe and certified smart fuel storage solution enables remote monitoring of fuel levels, sends alerts when fuel level is low,and facilitates 24×7 doorstep delivery of diesel thereby enhancing theefficiency of operations while reducing its carbon footprint. The entire process from fuel ordering to payment and invoicing is digital. The customer benefits from reduced fuel procurement costs, improved management of diesel inventory, higher asset utilization, and assurance of quality and quantity of fuel consumed. This has shown a direct reduction of up to 10% in fuel costs, coupled with a significant improvement in operational uptime.

Commenting on the launch, Vivek Malapati, Vice President, Distribution BusinessCummins India Limited, said At Cummins, we believe that the path to environmental sustainability involves developing innovative, low to zero-emission solutions for tomorrow while powering the success of our customers through innovation and dependability today. The introduction of the DATUM range in collaboration with Repos marks a significant step in addressing the existing challenges faced by customers in managing fuel operations. Our collaboration with Repos Energy further strengthens our efforts to provide convenience, efficiency, and cost-effectiveness to our customers, helping them to do their bit for environmental sustainability and emission reduction efforts.

Speaking on the occasion, Aditi Bhosale Walunj, Co-Founder, Repos Energy, said, “The Cummins and Repos partnership will catalyzea fuel distribution transformation across industries through the innovative solution of DATUM. This tech-enabled tool will enable end consumers to avail fuel delivery at their desired location with just a click on their phone. It will not only improve easy fuel accessibility for consumers but also help in structuring and organizing the fuel delivery industry. DATUM as a solution will improve fuel efficiency by cutting out losses and helping the world move towards a carbon-neutral future. With Cummins onboard, our intent to take this solution across industries and geographies is only bolstered.”

The DATUM range of products consists of different variants based on applications. Datum X is suitable for stationary genset applicationwhereas DATUM Y and DATUM Z come with a dispenser and are suitable for fleet owners of diesel equipment and on-highway vehicles.To learn more about the DATUM range, click here.

ரொமான்ஸில் கலக்கும் கிங்கான் !, கொண்டாடும் நெட்டிசன்கள்!, டங்கி டிராப் 5 ஓ மஹி இந்த ஆண்டின் சிறந்த பாடல் !!

டங்கி படைப்பாளிகள் “டங்கி டிராப் 5 ஓ மஹி” பாடல் மூலம் நிபந்தனையற்ற அன்பின் சிம்பொனியை பார்வையாளர்களுக்கு தந்துள்ளனர். ஹார்டி மற்றும் மனு கதாபாத்திரங்களுக்கு இடையேயான தன்னலமற்ற அன்பின் புதிய அத்தியாயத்தைத் திறக்கும் இந்தப் பாடல், அவர்களின் காதல் கதையின் அழகைப் படம்பிடித்து காட்டுவதுடன், கேட்போரின் மனதில் ஆழமான அன்பை விதைக்கிறது. அழகான பாலைவனப் பகுதிகளின் பின்னணியில் இந்தப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது, ஹார்டிக்கும் மனுவுக்கும் இடையேயான காதலைக் கொண்டாடும் அதே வேளையில், அவர்களின் பயணத்தின் உள்ளார்ந்த போராட்டங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பாடல் வெளியானதிலிருந்து, இணையம் முழுக்க ஒரே பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த ஆண்டின் மிகச்சிறந்த பாடல் என்று நெட்டிசன்கள் இப்பாடலைப் பாராட்டி வருகின்றனர். SRK, அரிஜித் சிங் மற்றும் ப்ரீதம் ஆகியோரின் கூட்டணியில், இந்த பாடல் மனம் மயக்கும் மாயாஜால அனுபவத்தை தருகிறது. இணையம் முழுக்க ரசிகர்கள் பாடல் குறித்துப் பாராட்டிப் பகிர்ந்து வருகின்றனர். இதோ அவற்றிலிருந்து சில உங்களுக்காக..

https://twitter.com/yagaa__/status/1734181294303822241?s=46&t=PusltWkTns46RNMqjWxAeA
https://twitter.com/amitrahangdale4/status/1734200496830001555?s=46&t=PusltWkTns46RNMqjWxAeA

நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களை கைப்பற்றிய அனிமல் திரைப்படம் !!

நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் நடிப்பில் உருவான அனிமல் திரைப்படம், உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகிய இப்படம், பாக்ஸ் ஆபிஸில் உலகளாவிய வசூல் மூலம் பல சாதனைகளை முறியடித்து வரும் அதே வேளையில், சர்வதேச அளவில்  அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடதக்கது. நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களில் அனிமல் படப்பாடலான அர்ஜன் வைலி, விளம்பர பலகைகள் மற்றும் டிஜிட்டல் ஹோர்டிங்குகளில் இடம்பெற்றுள்ளது. இந்த இடங்களில் இசைக்கப்படும் முதல் இந்தியப் பாடல் இதுவாகும். உலகம் முழுவதும் அர்ஜன் வைலி பாடல், பெரும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தியுதுடன் எட்டுதிக்கும் கேட்கும் பாடலாக சாதனை படைத்து வருகிறது.  அனிமல் படத்தின் சாதனைகள் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகின்ற நிலையில், வரும் நாட்களில் இந்தப் படம் இன்னும் பல புதிய சாதனைகளைச் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

பூஷன் குமார் மற்றும் கிரிஷன் குமாரின் டி-சீரிஸ், முராத் கெடானியின் சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வாங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து  அனிமல் படத்தைத் தயாரித்துள்ளன. க்ரைம் டிராமா வகையைச் சேர்ந்த இப்படம் பார்வையாளர்களை திரில்லான ஒரு புதிய அனுபவத்திற்கு அழைத்துச் செல்கிறது. இப்படம் 1 டிசம்பர் 2023  அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

SRK “டங்கி” படத்திலிருந்து அடுத்ததாக வெளியாகும் ஓ மஹி பாடலான டங்கி டிராப் 5

SRK “டங்கி” படத்திலிருந்து அடுத்ததாக வெளியாகும் ஓ மஹி பாடலான டங்கி டிராப் 5 வீடியோவின் சிறு துணுக்கை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகமூட்டியுள்ளார்!!

வருகிறது ‘டங்கி டிராப் 5 – ஓ மஹி பாடல்’, க்ளிம்ப்ஸே வெளியிட்ட SRK !!

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் டங்கி டிராப் 1, டங்கி டிராப் 2 லுட் புட் கயா, டங்கி டிராப் 3 நிக்லே தி கபி ஹம் கர் சே மற்றும் டங்கி டிராப் 4, டிரெய்லர் என வரிசையாக டங்கி அப்டேட்கள் மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளித்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள். ராஜ்குமார் ஹிரானி உருவாக்கிய அன்பான, அழகான திரை உலகத்தைப் பார்ப்பதற்கான எதிர்பார்ப்பை இது நிச்சயமாக அதிகரித்துள்ளது. தற்போது ரசிகர்களின் உற்சாகத்தை கூட்டும் வகையில், தயாரிப்பாளர்கள் இப்போது டங்கி டிராப் 5, ஓ மஹி பாடலை வெளியிட தயாராகி வருகின்றனர். இந்த பாடலின் வீடியோவை வெளியிடுவதற்கு முன்னதாக அதிலிருந்து ஒரு கிளிம்ப்ஸே வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

சமீபத்திய #AskSRK அமர்வில், கிங் கான் இந்தப் பாடலைத் திரைப்பட ஆல்பத்தில் இருந்து தனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாகக் குறிப்பிட்டார், எனவே ரசிகர்கள் இப்பாடலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஷாருக்கான் நடிப்பில் டங்கி ரிலீஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது, ஆனால் பார்வையாளர்களை கவர்ந்திழுக்க தயாரிப்பாளர்கள் எந்த வாய்ப்பையும் தவற விடவில்லை. இதோ டங்கி டிராப் 5 இன்று அதன் வருகைக்கு தயாராகிவிட்டது!

ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகிறது.

“Dance Don Guru Steps 2023 Kollywood Awards“ நடனக் கலைஞர்களை கௌரவிக்கும் பிரம்மாண்ட  விழா !

தமிழ் சினிமாவில்  கோலோச்சி, நம் நினைவுகளில் இருந்து மறைந்து போன, பல முன்னாள் நடனக் கலைஞர்களை நினைவு கூறும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் Dance Don Guru Steps 2003 Kollywood Awards விழா, டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி, நடனக் கலைஞர் கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் தலைமையில், எண்ணற்ற திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள, பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த டான்ஸ் டான் விழாவை அறிவிப்பதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர்,  அக்‌ஷதா ஶ்ரீதர், அசோக் மாஸ்டர், பாபா பாஸ்கர் மாஸ்டர், லலிதா மணி மாஸ்டர், குமார் சாந்தி மாஸ்டர், வசந்த் மாஸ்டர், விமலா மாஸ்டர், சம்பத் மாஸ்டர், ஹரீஷ் குமார் மாஸ்டர், மாலினி மாஸ்டர், DKS பாபு மாஸ்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்

உலகளவில் இந்தியா சினிமா ஆடல் கலை மற்றும் பாடலுக்கு பெயர் பெற்றது. பாடலும் ஆடலும் இல்லாமல் இந்திய சினிமா இல்லை. இங்கு சினிமா உருவானதிலிருந்தே ஆடல், பாடல் சினிமாவின் ஒரு அங்கமாக, சினிமாவிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடனக் கலையை பயிற்றுவிக்கும் நடனக் கலைஞர்களின் பணி அளப்பரியது.

இத்தனை புகழ்மிக்க நடனக் கலையை  ஆரம்ப காலத்தில் பயிற்றுவித்த பல புகழ்மிகு நடனக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் வரலாற்றில் இல்லை.

1950 களில் துவங்கி 2023 வரையிலும் பல புகழ்பெற்ற நடனக் கலைஞர்கள் தமிழ்த்திரையுலகில் பணியாற்றி வந்துள்ளனர். இன்றைய நவீன டிஜிட்டல் உலகைப் போல அவர்களைப் பற்றிய அறிமுகங்களோ, விவரங்களோ, அனைவருக்கும் தெரிந்ததில்லை. திரையுலகில் பணியாற்றும் நடனக் கலைஞர்களுக்கே நம் முந்தைய தலைமுறையின் ஆரம்பத்தில் புகழுடன் பணியாற்றிய நடனக் கலைஞர்களின் விவரங்கள் தெரிவதில்லை.

நம் தலைமுறையில் நமக்கு முன் சாதித்து காட்டிய நடனக் கலைஞர்களை அடையாளம் காட்டும் வகையிலும், அவர்களைப் பற்றி வரலாற்றில் பதிவு செய்து, அவர்களின் நினைவை போற்றும் வகையிலும் இந்த  டான்ஸ் டான் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவில் தமிழ் திரையுலகில் புகழுடன் பணியாற்றி மறைந்த நடனக் கலைஞர்கள் பற்றி பதிவு செய்து, அவர்களின் சாதனைகளை,  நினைவு கூர்ந்து, அவர்களின் புகழ் திரைப்பிரபலங்கள் முன்னிலையில்  கௌரவிக்கப்படவுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற முன்னாள் நடன கலைஞர்களும் இவ்விழாவில் கௌரவிக்கப்படவுள்ளனர். மேலும் தமிழகத்தின்  38 மாவட்டங்களில் நடனப்பள்ளி நடத்தி வரும் நடனக் கலைஞர்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்படவுள்ளனர்.

Dance Don Guru Steps 2023 Kollywood Awards தமிழ்த் திரையுலகின் முன்னணி நடனக் கலைஞரான கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் முன்னின்று இவ்விழாவை ஏற்பாடு செய்து நடத்துகிறார். வரும் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி காமராஜர் அரங்கில் நடக்கவுள்ள இவ்விழாவில், தமிழ் சினிமாவின் முன்னணி நடன கலைஞர்களுடன், தமிழ்த்திரைத்துறையின் பல முன்னணி இயக்குநர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர்.

டான்ஸ் டான் விழா டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி காமராஜர் அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் மூன்றாவது மலையாள ஒரிஜினல் சீரிஸ் “பேரில்லூர் பிரீமியர் லீக்” ஜனவரி 05, 2024 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது !!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சமீபத்தில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள ஒரிஜினல் சீரிஸான ​​“பேரில்லூர் பிரீமியர் லீக்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. அரசியலை இதயம் வருடும் நகைச்சுவை கலந்து சொல்லும் அட்டகாசமான சீரிஸ் “பேரில்லூர் பிரீமியர் லீக்”. இந்த சீரிஸ் வரும் 2024 ஜனவரி 5 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.

இரண்டு நிமிடங்கள் கொண்ட இந்த டிரெய்லர், ஒரு கிராமம் அதன் மனிதர்கள் அவர்களிடையேயான உறவுகள், அரசியல் வேடிக்கைகள், வெடித்துச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை என அதிரடியான விருந்தளிக்கிறது “பேரில்லூர் பிரீமியர் லீக்”. நிகிலா விமல் மற்றும் சன்னி வெய்னுடன், இந்தத் தொடரில் விஜயராகவன், அஜு வர்கீஸ், அசோகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இந்த சீரிஸில் நடித்துள்ளனர் மற்றும் திறமையான தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு பேரில்லூர் பிரீமியர் லீக்கை உண்மையிலேயே ரசிக்க வைக்கிறது.

E4 என்டர்டெயின்மென்ட் பேனரில் முகேஷ் R மேத்தா மற்றும் CV சாரதி தயாரித்துள்ள ‘பேரில்லூர் பிரீமியர் லீக்’ சீரிஸை புகழ் பெற்ற இயக்குநர் பிரவீன் சந்திரன் இயக்கியுள்ளார், தீபு பிரதீப் இந்த சீரிஸை எழுதியுள்ளார். ஒளிப்பதிவு இயக்குநரான அனூப் வி ஷைலஜா, கிராமப்புற கேரளாவின் சாரத்தை அசத்தலான காட்சிகளுடன் படம்பிடித்துள்ளார், அதே நேரத்தில் பவன் ஸ்ரீ குமாரின் தலைசிறந்த எடிட்டிங் இக்கதையைத் திரையில் அழகாக உயிர்ப்பிக்கிறது. முஜீப் மஜீதின் இசை இந்த சீரிஸை மெருகேற்றுகிறது.

‘பேரில்லூர் பிரீமியர் லீக்’ ஏழு வெவ்வேறு மொழிகளில் (மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி மற்றும் பெங்காலி) ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது, இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்கள் தங்கள் சொந்த மொழியில் இந்த நகைச்சுவை சீரிஸை ரசிக்க முடியும்.

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் “டங்கி” படத்தை வெளியிடுகிறது!!

‘ஜவான்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, மிகுந்த எதிர்பார்ப்பிலிருக்கும் ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படத்தினுடைய கேரளா மற்றும் தமிழ்நாட்டு விநியோக உரிமையை வாங்கியுள்ளது, ஸ்ரீ கோகுலம் மூவிஸ். இதில் ஷாருக்கான் அனைவரையும் மயக்கும் அட்டகாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாராகி, இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி எழுதி, இயக்கி, எடிட்டிங் செய்திருக்கும் இப்படம் டிசம்பர் 21 முதல், திரையரங்குகளில் வெளியாகிறது.

ட்ரீம் பிக் பிலிம்ஸ் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ‘டங்கி’ படத்தின் விநியோக பங்குதாரராக இணைந்துள்ளது. கிங் கான் ஷாருக்குடன் மீண்டுமொரு படத்தில் நாங்கள் இணைவதில் பெருமிதம் கொள்கிறோம். மேலும் அவருடன் இன்னும் பல படங்கள் இணைந்து பணியாற்றுவோம் என நம்புகிறோம்” ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தை கேரளா மற்றும் தமிழ்நாட்டில் விநியோகம் செய்துள்ளது ஸ்ரீ கோகுலம் மூவிஸ். ‘ஜவான்’ படத்திற்கு பிறகு ‘டங்கி’ படத்தையும் விநியோகம் செய்கிறோம் என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.

2023 வது வருடம் ஷாருக்கானின் பிரமாண்டமான கம்பேக் வருடம் ஆக அமைந்துள்ளது. ஜனவரியில் ‘பதான்’, செப்டம்பரில் ‘ஜவான்’, தற்போது டிசம்பரில் ‘டங்கி’. பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார் மற்றும் அனில் குரோவர் போன்ற பாலிவுட் திறமைகள் இணைந்துள்ள ‘டங்கி’ இதயம் வருடும் அழகான படமாக இருக்கும் என்பதை படத்தின் பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன. ராஜ்குமார் ஹிரானி, கௌரி கான் மற்றும் ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி மற்றும் கனிகா தில்லானுடன் இணைந்து ராஜ்குமார் ஹிரானி வசனம் எழுதியுள்ளார். மும்பை, ஜபல்பூர், காஷ்மீர், புடாபெஸ்ட், லண்டன், ஜெட்டா மற்றும் நியோம் என உலகின் பல இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அமன் பந்த் பின்னணி இசையமைத்துள்ளார் மற்றும் ப்ரீதம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். CK.முரளிதரன், மனுஷ் நந்தன், அமித் ராய் ஆகியோர் இப்படத்தின் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் “டங்கி” படத்தை வெளியிடுகிறது!!

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படத்திற்கான, விநியோகம் செய்யும் உரிமையை பெற்றுள்ளது !!

‘ஜவான்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, மிகுந்த எதிர்பார்ப்பிலிருக்கும் ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படத்தினுடைய கேரளா மற்றும் தமிழ்நாட்டு விநியோக உரிமையை வாங்கியுள்ளது, ஸ்ரீ கோகுலம் மூவிஸ். இதில் ஷாருக்கான் அனைவரையும் மயக்கும் அட்டகாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாராகி, இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி எழுதி, இயக்கி, எடிட்டிங் செய்திருக்கும் இப்படம் டிசம்பர் 21 முதல், திரையரங்குகளில் வெளியாகிறது.

ட்ரீம் பிக் பிலிம்ஸ் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ‘டங்கி’ படத்தின் விநியோக பங்குதாரராக இணைந்துள்ளது. கிங் கான் ஷாருக்குடன் மீண்டுமொரு படத்தில் நாங்கள் இணைவதில் பெருமிதம் கொள்கிறோம். மேலும் அவருடன் இன்னும் பல படங்கள் இணைந்து பணியாற்றுவோம் என நம்புகிறோம்” ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தை கேரளா மற்றும் தமிழ்நாட்டில் விநியோகம் செய்துள்ளது ஸ்ரீ கோகுலம் மூவிஸ். ‘ஜவான்’ படத்திற்கு பிறகு ‘டங்கி’ படத்தையும் விநியோகம் செய்கிறோம் என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.

2023 வது வருடம் ஷாருக்கானின் பிரமாண்டமான கம்பேக் வருடம் ஆக அமைந்துள்ளது. ஜனவரியில் ‘பதான்’, செப்டம்பரில் ‘ஜவான்’, தற்போது டிசம்பரில் ‘டங்கி’. பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார் மற்றும் அனில் குரோவர் போன்ற பாலிவுட் திறமைகள் இணைந்துள்ள ‘டங்கி’ இதயம் வருடும் அழகான படமாக இருக்கும் என்பதை படத்தின் பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன. ராஜ்குமார் ஹிரானி, கௌரி கான் மற்றும் ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி மற்றும் கனிகா தில்லானுடன் இணைந்து ராஜ்குமார் ஹிரானி வசனம் எழுதியுள்ளார். மும்பை, ஜபல்பூர், காஷ்மீர், புடாபெஸ்ட், லண்டன், ஜெட்டா மற்றும் நியோம் என உலகின் பல இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அமன் பந்த் பின்னணி இசையமைத்துள்ளார் மற்றும் ப்ரீதம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். CK.முரளிதரன், மனுஷ் நந்தன், அமித் ராய் ஆகியோர் இப்படத்தின் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.