திரிஷா,டான்சிங் ரோஸ்,சபீர் சந்தோஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தி ரோடு
கணவர் மற்றும் மகன் மூன்று மாத கர்ப்பமாக வாழ்ந்து வரும் திரிஷா, இவர்கள் வாழ்க்கையில் திடீரென ஒரு விபத்து, அந்த விபத்தில் கணவர் மற்றும் குழந்தையை பறிகொடுத்து விடுகிறார். அவர்கள் இறந்த இடத்தில் அஞ்சலி செலுத்த வரும் திரிஷா, அங்கு நடக்கும் தொடர் விபத்துகளை கண்டு அதிர்ச்சி அடைகிறார். தனி ஒரு ஆளாக அந்த விபத்துக்கள் ஏன் நடக்கிறது என்று துப்பறிய இறங்குகிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்ற கதையை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அருண் வசீகரன்.
திரிஷா எப்பொழுதும் போல் இளமையாக, ஒரு குழந்தைக்கு தாயாக, கணவருக்கு காதல் மனைவியாக,ஒரு அழகான குடும்பத் தலைவியாக,வாழ்ந்து, பின்பு துப்பறியும் பணியில் இறங்கி காவல்துறை அதிகாரிகளை தூக்கி சாப்பிடும் தோரணையில் வலம் வருகிறார்.
டான்சிங் ரோஸ் சபீர் பெண்கள் கல்லூரியில் பேராசிரியராக வந்து அமைதியான அப்பாவியாக இருக்கும் பொழுதும், அங்கு தன்னிடம் படிக்கும் பெண்ணின் ஒரு தலை காதலை ஏற்க மறுத்து இந்தப் பெண்ணால் துரோகத்துக்கு ஆளாகி அவமானப் படும் பொழுது, அந்த அவமானத்திலிருந்து மீள அவர் தேர்ந்து எடுக்கும் வழி சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை நினைவுபடுத்தும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது அவரது கதாபாத்திரம்.
தந்தையாக வேலராமமூர்த்தி எப்பொழுதும் முரட்டுத்தனமாகவே நடிக்கும் இவருக்கு இந்த படத்தில் ஒரு பாசமான அப்பாவாக கண்கலங்க வைக்கிறார்.
தோழியாக வரும் மியா ஜார்ஜ் துப்பறியும் புலிக்கு அசிஸ்டன்ட் புலியாக வருகிறார்.
காவல்துறை இன்ஸ்பெக்டராக வரும் எம் எஸ் பாஸ்கர் அவருக்கு வழக்கமான நடிப்பு அதை திறம்பட வழங்கி இருக்கிறார்.
செம்மலர் அன்னம் வித்தியாசமான வேடம் அதை திறம்பட வழங்க தன்னால் முடிந்த வரை முயற்சி செய்து இருக்கிறார்.
சாம் சி எஸ் இன் இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது கே ஜி வெங்கடேசன் ஒளிப்பதிவு ஹைவே ரோடு வேகத்திற்கு செல்கிறது.
படத்தில் ஹைவே வில் வரும் ஏகப்பட்ட திருப்பங்களை போல் காட்சிக்கு காட்சி திருப்பங்கள் வந்தாலும் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமலே, சீரான வேகத்தில் படம் ஓடவில்லை
தி ரோடு ஏகப்பட்ட குண்டு குழிகளுடன் பயணம் செய்யலாம்.
OVER ALL RATTING———2/5