கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் அனைவரும் பள்ளி வாழ்க்கையை கடந்து கல்லூரி வாழ்க்கையைக் கடந்து அவரவர் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுகின்றனர்.
இதற்கிடையே பத்து வருடங்களுக்கு முன்பு தான் படிக்கும் பள்ளியில் அதே வகுப்பில் படிக்கும் கதாநாயகி மலினாவை ஒரு தலையாக கதாநாயகன் ரக்ஷன் காதலித்து வருகிறார்.
இந்நிலையில் பத்து வருடங்கள் முன்பு படித்த கல்வியாண்டில் அனைத்து மாணவர்கள் எழுதிய தேர்வில் பாஸ் ஆனது செல்லாது என தீர்ப்பு வருகிறது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்ட மாணவர்கள் அதிர்ச்சியும், ஆனந்தமும் படுகின்றனர்.
இதனால் மீண்டும் பள்ளிக்கு சென்று மூன்று மாத காலம் வகுப்பில் இருந்து படித்து அந்த அனைத்து மாணவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே அந்த மாணவர்களின் தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் நீதிமன்றம் கூறுகிறது.
10 வருடங்கள் கழித்து அந்த பள்ளிக்கு வந்த நேரத்தில், ரக்ஷன் தனது காதலை எப்படியாவது சொல்லியாக வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.
ரக்ஷன் மலீனாவிடம் தன் காதலை கூறினாரா? அந்த காதலை கதாநாயகி மலீனா ஏற்றுக் கொண்டாரா? என்பதுதான் இந்த ‘மறக்குமா நெஞ்சம்’ திரைப்படத்தின் கதை.
நடிப்பில் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் பாராட்டலாம்.
நாயகி மலீனா நடிப்பிலும் முடிந்தவரை நன்றாகவே நடித்து ரசிக்க வைத்திருக்கிறார்.
விஜய் டிவி தீனாவின் காமெடிகள் ஆங்காங்கே ரசிக்க வைத்தது.
ப்ராங் ஸ்டார் ராகுல், பி டி வாத்தியாராக முனீஸ்காந்த் அவருடைய மனைவியாக அகிலா.
கோபி துரைசாமியின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் சச்சின் வாரியர் .
மறக்குமா நெஞ்சம் மறக்க முடியாத படி திரைக்கதை அமைத்திருந்தால் நிச்சயம் நமக்கு மறக்குமா நெஞ்சம் அப்படித்தான் இருந்திருக்கும்.
STAR RATTING———-2.5/5