



இயக்குநர் சுசீந்திரன் வெளியீட்டில், நடிகர் நரேன் நடிப்பில், ஹாரர் திரில்லர் “ஆத்மா”!!
KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், நடிகர் நரேன் நடிப்பில், மாறுபட்ட ஹாரர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ஆத்மா இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. இப்படத்தினை தமிழகமெங்கும் பிரபல இயக்குநர் சுசீந்திரன் வெளியிடுகிறார்.
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு, தான் தங்கும் வீட்டில் ஒரு குரல் கேட்கிறது. அதன் பின்னால் உள்ள மர்மத்தை அவன் தேட ஆரம்பிக்க, அதன் தொடர்ச்சியாக, பல மர்ம முடிச்சுகள் அவிழ ஆரம்பிக்கிறது. பரப்பரபான பல திருப்பங்களுடன், ஹாரர் கலந்த, மிஸ்டரி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
ராகேஷ் சங்கர் கதை திரைக்கதை எழுத, இயக்குநர் சுகீத் இப்படத்தினை இயக்கியுள்ளார். K சந்துரு இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.
கேள்விக்கான விடைகளை தேடும் நாயகனை மையப்படுத்தி, வெளியாகியுள்ள மாறுபட்ட ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடமும், திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.
கைதி, விக்ரம் படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, ஆட்டிசம் பாதித்த இளைஞனாக இப்படத்தில் முதன்மைப்பாத்திரத்தில் அசத்தியுள்ளார் நடிகர் நரேன். நாயகியாக தில்லுக்கு துட்டு 2 புகழ் ஷ்ரத்தா ஷிவதாஸ் நடித்துள்ளார். பால சரவணன் காளி வெங்கட், கனிகா, விஜய் ஜானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஃபிலிப்பினோவைச் சேர்ந்த நடிக்கைகள் ஷெரீஸ் ஷீன் அகாட், கிறிஷ்டீன் பெண்டிசிகோ ஆகியோர் திருப்புமுனை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் முழுமையாக துபாய் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. துபாயில் முழுக்க முழுக்க படமாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் பொருட்செலவில், KADRIS ENTERTAINMENT UAE. நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி இப்படத்தினை தயாரித்துள்ளார். தமிழகமெங்கும் பிரபல இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தினை வெளியிடுகிறார்.
முழு படப்பிடிப்பும் முடிந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.
தொழில் நுட்பக் குழு
இயக்கம் – சுகீத்
கதை திரைக்கதை – ராகேஷ் N சங்கர் ,
வசனம் – K சந்துரு
இசை – மங்கள் சுவர்னன், சஸ்வதி சுனில்குமார்
ஒளிப்பதிவு – விவேக் மேனன்
எடிட்டிங் – நவீன் விஜயன்
தயாரிப்பு – நஜீப் காதிரி
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் – பதேருதீன் பனக்கட்
மக்கள் தொடர்பு – சதீஷ் ( AIM )