



தமிழகத்திலேயே மிகப்பெரிய மிக நவீன வசதிகளுடன் கூடிய, திரையரங்கமாக பிராட்வே திரையரங்கம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. இத்திரையரங்கத்தினை பார்வையிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் இனைத் தயாரிப்பாளர் திரு செண்பகமூர்த்தி, திரையரங்கு உரிமையாளர் திரு சதீஷ்குமார் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல் முறையாக அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன திரையரங்கமாக, பிராட்வே திரையரங்கம் அமைந்துள்ளது. 9 திரைகள் கொண்ட இந்த திரையரங்கில், தமிழகத்திலேயே மிகப்பெரிய திரை அளவைக்கொண்ட, லேசர் ஸ்கிரீன் எபிக், ஐமேக்ஸ் ஸ்கிரீன் மற்றும் மிகச்சிறந்த ஒலி அமைப்பும் புதுமையான வகையில் உயர்தரத்திலான இருக்கை வசதிகளுடன் கூடிய கோல்ட் ஸ்கிரீன் அமைந்துள்ளது. இதனுடன் 6 வழக்கமான திரைகளும் அமைந்துள்ளது.
ரசிகர்களும், திரைக்காதலர்களும் வியந்து பார்க்கும் வகையிலான, இந்த மல்டிப்ளெக்ஸ் பிராட்வே திரையரங்கினை பார்த்துப் பிரமித்த, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் திரு செண்பகமூர்த்தி அவர்கள், திரையரங்க உரிமையாளர் திரு சதீஷ்குமார் அவர்களை சந்தித்து, பாராட்டுத் தெரிவித்தார். இந்நிகழ்வில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் Manager திரு சுப்பு அவர்கள் உடனிருந்தார்.