Breaking
February 22, 2025

ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 ல், 11.25 கோடியை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது “டங்கி” திரைப்படம் !!

புதிய ஆண்டு பிறந்துவிட்டது. டங்கி பட பாக்ஸ் ஆபிஸ் வசூல் இன்னும் தொடர்கிறது. படம் வெளியான நாளில் 30 கோடியில் ஆரம்பமான இப்பட வசூல், ரசிகர்கள் ஆதரவுடன் உயர்ந்து வருகிறது. ரசிகர்களின் பாசிட்டிவ் வார்த்தையுடன், குடும்ப பார்வையாளர்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களிடமிருந்து அபரிமிதமான அன்பைப் பெற்று வருகிறது இப்படம். இரண்டாவது வாரத்திலும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருவதுடன், புத்தாண்டு கொண்டாட்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்டகாசமான வசூலைக் குவித்துள்ளது.

இந்த ஆண்டின் இறுதி நாளில் இரட்டை இலக்கத்தில் கோடிகளை குவித்துள்ளது இப்படம். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் டங்கி டிசம்பர் 30 சனிக்கிழமை அன்று 9 கோடியை ஈட்டியது.; டிசம்பர் 31 ஞாயிறு அன்று இப்படம் 11.25 கோடி வசூல் செய்தது. இதன் மூலம், இந்தியாவில் படத்தின் உள்நாட்டு மொத்த வசூல் 188.07 கோடியை எட்டியுள்ளது. வார இறுதி நாளில் 38 சதவீதத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இப்படத்தை கண்டுகளித்துள்ளனர். இந்த விடுமுறை காலத்தை கொண்டாட, குடும்ப பார்வையாளர்களுக்கு ஒரு அருமையான படைப்பாக டங்கி அமைந்திருக்கிறது. உலகளவிலான பாக்ஸ் ஆபிஸ் வசூல் சூப்பர் ஸ்டேடியாக 380.60 கோடியை எட்டியுள்ளது. இப்படம் இந்தியாவில் 200 கோடியையும் உலகளவில் 400 கோடியையும் விரைவில் கடக்கவுள்ளது.

இப்படத்தில் ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Related Post