Breaking
January 22, 2025

‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’

‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண்- இயக்குநர் ஹரிஷ் சங்கர் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகி வரும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் பரபரப்பான படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.

‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் சங்கரின் வித்தியாசமான கலவையில் பவர் பேக் செய்யப்பட்ட ஆக்ஷன் காட்சிகளும், பவர்ஸ்டாரின் பவரான நடிப்புடன் தீவிரமாக நடைபெற்று வந்த இப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் படத்தை பற்றிய புதிய அப்டேட்களை தயாரிப்பாளர்கள் வெளியிடவுள்ளனர். பணிகள் விரைவாக நடைபெற்று வருவதை கண்டு படக் குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

‘உஸ்தா பகத்சிங்’ ஒரு பெரிய அதிர்வை உருவாக்கியிருக்கிறார். இவர்களின் கூட்டணியில் வெளியான ‘கப்பர் சிங்’ திரைப்படம்- பரபரப்பான வெற்றியைப் பெற்றதுடன் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைந்து பெரும் வரவேற்பையும் பெற்றது. இந்த திரைப்படத்தில் மிக முக்கியமாக ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.‌

தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தை தயாரித்து வருகிறது. இதன் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் பிரம்மாண்டமான பொருட்செலவில் ஆக்சன் என்டர்டெய்னராக உருவாக்கி வருகின்றனர்.

ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாணுடன் நடிகை ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அஸ்த்தோஷ் ராணா, ‘கே ஜி எஃப்’ புகழ் அவினாஷ், கௌதமி, நர்ரா சீனு, நாக மகேஷ் மற்றும் ‘டெம்பர்’ வம்சி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அயனங்கா போஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை சோட்டா கே. பிரசாத் கையாள, அதிரடி சண்டை காட்சிகளை ராம் – லக்ஷ்மன் அமைத்திருக்கிறார்கள். மக்கள் தொடர்பு பணிகளை யுவராஜ் மேற்கொள்கிறார்.

Related Post