Breaking
August 11, 2026

விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ரெட் ஃப்ளவர்”

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்க, விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ரெட் ஃப்ளவர்” (Red flower). ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியிருக்கிறார். ஆகஸ்ட் 8ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடிகர் விஷால், இயக்குனர்கள் பி.வாசு, சுராஜ் மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

ரெட் ஃப்ளவர் படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் பேசியதாவது:

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸின் முதல் மற்றும் மிக பிரமாண்டமான தயாரிப்பு இந்த ரெட் ஃப்ளவர். மேடையில் இருப்பவர்கள் மட்டும் சிறப்பு விருந்தினர்கள் அல்ல, இங்கு வந்திருக்கும் எல்லோருமே என்னுடைய சிறப்பு விருந்தினர்கள் தான். இந்த படம் தொடங்கிய நாளில் இருந்து இந்த நொடி வரை மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த பிரபஞ்சத்துக்கு மிகப்பெரிய நன்றி. இரண்டு படங்கள் எடுத்து முடித்தும் இதுவரை ரிலீஸ் செய்யவில்லை. முதல் படமாக இந்த படம் தான் ரிலீஸாக வேண்டும் என்பது தான் என் ஆசை. இது ஒரு காதல் கதையோ, குடும்பக் கதையோ அல்ல. இந்தியாவை உயர்த்தி சொல்லும் ஒரு படம். இந்தியா வல்லரசு என்று சொன்னால் யாராலும் அதை மறுக்க முடியாது. இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் இந்த தலைமுறையின் ஒரு சிறந்த இயக்குனராக வருவார்.

நடிகை காவ்யா பேசியதாவது:

2047ல் ஒரு மூன்றாம் உலகப் போர் நடந்தால் எப்படி இருக்கும், போர் நடக்கும் போது என்னவெல்லாம் நடக்கும் என்பதை மிகச்சிறப்பாக திரையில் காட்டியுள்ளார் இயக்குனர். 2047 காலகட்டத்தில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார். கிரீன் மேட் காட்சிகள் எடுத்தால் நன்றாக இருக்காது என்பதால் முழுக்க முழுக்க ரியல் லொகேஷன்களில் படத்தை எடுத்திருக்கிறார். இப்படம் நிச்சயம் ஒரு புது அனுபவத்தை கொடுக்கும்”.

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசியதாவது:

மேடையில் இருக்கும் அனைவருமே ஜாம்பவான்கள். இந்த படம் வெற்றி அடைந்தால் அதற்கு ஒரே காரணம் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன். அவருக்கு பக்கபலமாக தயாரிப்பாளரும், நடிகர் விக்னேஷூம் இருக்கிறார்கள். இது ஒரு Futuristic பாகுபலி. future-ல் நடக்கும் கதை என்பதால்  பாகுபலியை விட இது தான் கஷ்டம். மிஷன் இம்பாஸிபிள், மேட்ரிக்ஸ் படங்களைப் போல இந்த படம் இருக்கும். நான் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு கதாபாத்திரத்தை எனக்கு தந்திருக்கிறார். 2047-ல் இந்தியாவின் பிரதமர் கதாபாத்திரம். நேதாஜி கனவு கண்ட இந்தியா வந்து கொண்டிருக்கிறது. இந்த படம் இளைஞர்களை கவரும், அதே சமயத்தில் நாடு நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும்”.

தலைவாசல் விஜய் பேசியதாவது:

இந்த படத்துக்கு தேவையான இசையை தந்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ். இந்த படத்தின் வில்லன் நீங்க தான் என சொன்னார் இயக்குனர். என் 32 வருட சினிமா கேரியரில் இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்தது இல்லை. இந்த வாய்ப்பை தந்த இயக்குனருக்கு நன்றி. அவரின் விஷனை நீங்கள் திரையில் பார்ப்பீர்கள்.

நடிகர் ஜான் விஜய் பேசியதாவது:

கல்லூரியில் ஒன்றாக என்னுடன் படித்தவர் விஷால், இந்த மேடையில் ஒன்றாக அவருடன் இருப்பது மகிழ்ச்சி. விஷால் எப்போதுமே எல்லோருக்காகவும் வந்து நிற்பவர். ஆத்தங்கரை மரமே பாடல் கேட்டிருப்போம், அன்று முதல் இன்று ரெட் ஃப்ளவர் வரை அதே இளமையுடன் இருக்கும் ஒரு ஹீரோ விக்னேஷ். மிகச்சிறப்பான ஒரு கதாபாத்திரத்தை எனக்கு தந்திருக்கிறார்கள்.

இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் பேசியதாவது:

2047-ல் மால்கம் வரி செலுத்த மறுக்கும் நாடுகளின் மீது போர் தொடுக்கிறது, நேதாஜியால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் ரெட் ஃப்ளவர். அதை இந்தியா எப்படி அணுகுகிறது. இந்தியா எப்படி அதை முறியடிக்கிறது. கேமரா மேன் ஒரு நாளைக்கு 300 முதல் 350 ஷாட்ஸ் எடுப்பார். அவ்வளவு வேகமாக வேலை செய்பவர். எடிட்டரின் பங்கு அபரிமிதமானது.

நடிகர் அஜய் ரத்னம் பேசியதாவது:

இயக்குனரின் கனவு திரையில் வந்திருக்கிறது. நம்பிக்கை எப்போதுமே வெற்றியைடையும். ரெட் ஃப்ளவர்னா சிவப்பு மலர், சிகப்பு ரோஜாக்கள் போல இந்த படமும் மிகப்பெரிய வெற்றியடையும்.

நடிகர் விக்னேஷ் பேசியதாவது:

எனக்கு இயக்குனர் பாரதிராஜா மீது மிகப்பெரிய மரியாதை உண்டு. அவருக்கு இணையாக பி.வாசு சாரை பிடிக்கும். புரட்சித் தளபதி விஷால் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். மனிதாபிமானம் மிக்கவர். நடிகர் சங்கத்தில் யாருக்கு எந்த பிரச்சினை என்றாலும், உதவி தேவைப்பட்டாலும் உடனே இறங்கி வேலை செய்பவர். ஒய்ஜி மகேந்திரன் அவர்களின் ஆர்வம் எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தை பற்றி தினமும் கேட்டுக் கொண்டே இருப்பார். ஜான் விஜய், அஜய் ரத்னம், சுரேஷ் மேனன் என அத்தனை நடிகர்களும் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞர்களை பொறுத்தவரை எல்லோருமே இளைஞர்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. இயக்குனர் ஆண்ட்ரூ நல்ல மனிதர், நேர்மையான உழைப்பை தந்துள்ளார். நிறைய பேர் விக்னேஷை வைத்து படம் எடுக்காதீர்கள் என தயாரிப்பாளரை தடுத்தனர். ஆனால் மாணிக்கம் சார் பின்வாங்காமல் படத்தை முடித்திருக்கிறார். அவர் சினிமாவில் சம்பாதிக்க வரவில்லை. சினிமா மீது பற்று வைத்துள்ளார். அவருக்காக மிகப்பெரிய வெற்றி அடையும். இந்த படம் வெற்றி அடைந்தால் அவர் அடுத்தடுத்து பல படங்களை தயாரிப்பார்.

30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் கஷ்டப்பட்டிருக்கிறேன். எவ்வளவோ உழைத்திருக்கிறேன். சினிமா தான் எனக்கு எல்லாமே. சினிமாவை அவ்வளவு பிடிக்கும். அதனால் தான் இவ்வளவு நாள் கழித்தும் மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன். நான் தோற்கலாம், ஆனால் என் முயற்சி தோற்கக்கூடாது.

முன்பெல்லாம் முதல் வாரம் கூட்டமே இல்லாமல் இருந்தால் கூட, ஓரிரு வாரங்கள் கழித்து லேட் பிக்கப் ஆகி வெற்றி பெறும். என்னுடைய சின்னத்தாயி, ராமன் அப்துல்லா போன்ற படங்கள் எல்லாமே லேட் பிக்கப் தான். ஆனால் இப்போது முதல் நாளே நன்றாக ஓடினால் தான் படம் வெற்றி அடையும். அதனால் ஒரு வாரம் கழித்து பார்க்கலாம், அப்புறம் பார்க்கலாம் என நினைக்காதீர்கள். தியேட்டரில் சென்று பாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இயக்குனர் சுராஜ் பேசியதாவது:

நான் ஏற்கனவே விஷாலை வைத்து படம் இயக்கியிருக்கிறேன். எங்கள் படப்பிடிப்பில் பலர் அவரைத் தேடி, அவரின் உதவி நாடி வருவார்கள். அத்தனை பேருக்கும் உதவி செய்வார். அவர் இந்த விழாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி. நடிகர் விக்னேஷ் உங்கள் கஷ்டத்துக்கும், கடின உழைப்புக்கும், நீங்கள் பட்ட அவமானங்களுக்கும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும். தயாரிப்பாளர் மாணிக்கம் என் உறவினர், என் மாப்பிள்ளை. ஒரு படம் எடுக்க வேண்டும் எனறார், சின்ன பட்ஜெட்டில் எடுப்பார் என நினைத்தால் மிக பிரமாண்டமாக எடுத்து வைத்திருக்கிறார். 9 கோடி பட்ஜெட்டில் 2.5 கோடி சிஜிக்கு மட்டுமே செலவு செய்திருக்கிறார்.

இதற்கு முன் இரண்டு படங்களை அவர் தயாரித்துள்ளார், ஆனாலும் அதை ரிலீஸ் செய்யவில்லை. ஏன் என்று கேட்டால் முதல் படம் பெரிய படமாக இருக்க வேண்டும் என்றார். இந்த படம் வெற்றி பெற்றால் அவர் இன்னும் பல படங்களை தயாரிப்பார், அதற்காகவே இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும்.

இயக்குனர் திருமலை பேசியதாவது:

மாணிக்கம் ஆர்வத்தில் சினிமாவிக்கு வந்தாரா? ஆரவக்கோளாறில் வந்தாரா? என நினைத்தேன். அவரிடம் பேசும்போது தான் அவரின் சினிமா ஆர்வம் புரிந்தது. இந்த ரெட் பிளவர் படத்தை பெரிய இயக்குனர்களிடம் கொடுத்திருந்தால் 50 கோடி செலவு செய்திருப்பார்கள். ஆனால் ஆண்ட்ரூ பாண்டியன் 9 கோடி பட்ஜெட்டில் எடுத்து முடித்திருக்கிறார். அவர் இன்னொரு படத்தையும் எடுத்து வைத்திருக்கிறார். அதை நான் பார்த்திருக்கிறேன், சிறப்பாக எடுத்திருந்தார். அந்த அளவுக்கு ஒரு சிறப்பான திட்டமிடல். அவர் இந்த படத்தை இயக்கியிருப்பது சிறப்பு. அவருக்கு பக்கபலமாக முழுக்க இளைஞர்கள் இந்த படத்தில் பணிபுரிந்திருக்கிறார்கள். இது இந்திய தேசத்துக்கான படம்”.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் பேசியதாவது:

ரெட் ஃப்ளவர் திரைப்படம் முழுக்க முழுக்க புது தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து உருவாக்கப்பட்ட படம். இவ்வளவு பெரிய பொருட்செலவில் இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தை விநியோகிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய ஒரு அமைப்பு தான் ரெட் ஃப்ளவர். 2047-ல் அது மீண்டும் வந்தால் என்னவாகும் என்பது தான் கதை. அட்வான்ஸ் சிஜியை இந்த படத்தில் பயன்படுத்திருக்கிறார்கள். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக வந்திருக்கிறது.
ஆகஸ்ட் 8-ஆம் தேதி படம் வெளியாகிறது, திரையரங்குக்கு வந்து பாருங்கள்.

இயக்குனர் பி. வாசு பேசியதாவது:

விக்னேஷ் 2 ஆண்டுகளுக்கு முன்பு  இயக்குனரை அழைத்து வந்து கதையை சொன்னார். அதை எப்படி படமாக்கப் போகிறார்கள் என்ற வியப்பு எனக்கு இருந்தது. அதீதமான தொழில்நுட்ப விஷயங்கள் இந்த படத்தில் இருக்கிறது. சிஜி என்பது சாதாரண விஷயம் இல்லை, பல பேரின் உழைப்பு அடங்கியது. ஒரு சாதாரண விஷயத்தை செய்யவே மிகப்பெரிய உழைப்பு தேவை. இந்த படத்தில் 90 நிமிட சிஜி காட்சிகள் இருக்கிறது என சொன்னார்கள். விக்னேஷ் ரொம்ப துறுதுறுவென இருப்பவர். கடின உழைப்பாளி.  உங்கள் உழைப்பு நிச்சயம் வீண் போகாது. இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். சினிமா இன்று ரொம்பவே போட்டி நிறைந்த ஒரு துறையாக மாறி விட்டது. இளம் இயக்குனர்க்ள் எல்லாம் மிக மிக திறமையானர்வர்கள். ஓடிடி வந்த பிறகு பல மொழி படங்களையும் பார்க்க தொடங்கியபோது அவர்களின் கண்டெண்ட் மிகச்சிறப்பாக இருக்கிறது. அவர்களுக்கு இணையாக, போட்டியாக நாமும் படங்களை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு நடிகன் பல விதமான கதாபாத்திரங்களை செய்ய வேண்டி இருக்கிறது. அந்த வேலையை இந்த படத்தில் நடித்த நடிகர்கள் மிகச்சிறப்பான செய்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.

விஷால் வீட்டில் தான் வால்டர் வெற்றிவேல் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அவரின் தந்தை ஜிகே ரெட்டி சினிமாவின் மிகச்சிறந்த ஒரு ரசிகர். அவரின் வாரிசு விஷால் எப்படி சோடை போவார். அவர் அடுத்தவர்களின் வெற்றியை பார்த்து மகிழ்பவர்.

இயக்குனரின் முதல் வேலை தயாரிப்பாளரிடம் கதை சொல்லி சம்மதிக்க வைப்பது. பின் படத்தை எடுத்து முடித்து தயாரிப்பாளரை திருப்திப்படுத்துவது. அதன் பின் விநியோகஸ்தர்களை மகிழ்விப்பது.  ஆண்ட்ரூ அந்த வகையில் இந்த கதையை ரிலீஸ் கட்டம் வரை மிகச்சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார்.

சந்திரமுகி படத்தில் காத்தாடி பாடலில் சிஜி செய்திருப்போம். அதற்கே ரொம்ப கஷ்டப்பட்டோம். ஆனால் இந்த படத்தில் கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் சிஜி. இயக்குனரின் தெளிவு தான் இந்த படத்தை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது”.

ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது:

விக்னேஷ் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் இந்த படம் அவருக்கு மிக முக்கியமான படமாக, வெற்றிப்படமாக அமையும். தயாரிப்பாளர் விக்னேஷ் மீது நம்பிக்கை வைத்து படத்தை எடுத்திருக்கிறார். இப்போதெல்லாம் நடிகர்கள், இயக்குனர்கள் தயாரிப்பாளருக்கு நன்றியாக இருப்பதில்லை.  விக்னேஷ் தயாரிப்பாளரை என்றும் மதிக்க வேண்டும்.

பி வாசு சார், கேஎஸ் ரவிக்குமார் சார் எல்லாம் தயாரிப்பாளர்களின் இயக்குனர்களாக இருந்தார்கள். சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்துக் கொடுத்தனர். தற்போது இயக்குனர்கள் சொன்ன பட்ஜெட்டில் படங்களை எடுப்பதில்லை. தெலுங்கு சினிமாவில் ஒரு படத்தின் பட்ஜெட் அதிகமாகும்போது நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்கிறார்கள். நலிந்து போன பல தயாரிப்பாளர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுங்கள்.

ஓடிடி நிறுவனங்கள் படத்தை பார்த்து விட்டு தான் வாங்குகிறார்கள். அதனால் ஷூட்டிங்குக்கு முன்பே கொஞ்சம் திட்டமிட்டு படத்தை எடுங்கள்.

நடிகர் விஷால் பேசியதாவது:

பி.வாசு சார் அன்றிலிருந்து இப்போது வரை நிற்கிறார் என்றால் அவரின் படங்கள் மற்றும் அவரின் உழைப்பு. இப்போதெல்லாம் நிறைய பேருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள், ஆனால் சுராஜ் அவர்களுக்கு கண்டிப்பாக டாக்டர் பட்டம் தரணும். அவர் இயக்கிய படங்கள் பல பேருக்கு மெடிஷன். அவர் வடிவேலுவை வைத்து இயக்கிய நகைச்சுவை காட்சிகள் தான் இன்றும் பலருக்கும் மருந்தாக இருக்கிறது.

இந்த அரங்கம் நிறைந்து இருப்பது போல அரங்கம் நிறைந்த காட்சிகளாக இந்த படம் ஓடணும். இங்கு சின்ன படம் பெரிய படம் என்று எதுவும் இல்லை. இந்த படத்தின் விழாவுக்கு வருவது என் கடமை. என் நண்பன் போராளி விக்னேஷூக்காக நான் வந்திருக்கிறேன். அதற்கு காரணம் அவர் கஷ்டம், அவமானங்களை தாண்டி இங்கு வந்திருக்கிறார். அவர் வெற்றி பெற வேண்டும். மாணிக்கம் என்ற ஒரு பொக்கிஷம் உங்களுக்கு தயாரிப்பாளராக கிடைத்திருக்கிறார்.

2025-ல் என்ன நடக்கிறது என்பதை படமாக எடுக்கவே இன்று பல இயக்குனர்கள் திண்டாடுகிறார்கள். ஆனால் இயக்குனர் ஆண்ட்ரூ 2047-ல் என்ன நடக்கும் என்பதை திரைக்கதையாக்கி படமாக எடுத்துள்ளார். எனக்குப் பிடித்த இரண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் பகத் சிங், நேதாஜி. அதில் நேதாஜிக்கு இந்த படத்தில் Tribute செய்தது மகிழ்ச்சி.

திரையரங்க உரிமையாளர்களுக்கு ஒரு கோரிக்கை. ஒரு திரைப்படம் வெளியாகும்போது முதல் 3 நாட்களுக்கு மட்டும் திரையரங்க உரிமையாளர்கள் பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம். வெளியில் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு முக்கியமான கோரிக்கை. தமிழ் சினிமாவில் ஒரே நாளில் 10 படங்கள் வெளியாகிறது, எந்த படத்துக்கும் சரியான அளவில் தியேட்டர் கிடைப்பதில்லை. அதனால் ரிலீஸை ஒழுங்கு முறைப்படுத்த வேண்டும்.

விரைவில் நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க வேலைகள் நடந்து வருகின்றது. ஆகஸ்ட் 29 என் பிறந்த நாள்.  கண்டிப்பாக நல்ல செய்தி காத்திருக்கிறது. திருமண தேதியை விரைவில் அறிவிப்பேன்.

ரெட் ஃப்ளவர் திரைப்படத்தில் நடிகர் விக்னேஷூக்கு ஜோடியாக மனிஷா ஜஷ்னானி நடிக்கிறார். படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரத்தில் நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான் விஜய், அஜய் ரத்தினம், லீலா சாம்சன், டி.எம்.கார்த்திக், கோபி கண்ணதாசன், தலைவாசல் விஜய், மோகன் ராம், யோக் ஜேபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு கே.தேவசூர்யா ஒளிப்பதிவு செய்ய , சந்தோஷ் ராம் இசை அமைக்க , படத்தொகுப்பு அரவிந்தன் ஆறுமுகம் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன். ஆகஸ்ட் 8ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது ரெட் ஃப்ளவர்.

பரத் – அஜய் கார்த்திக் இணைந்து நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2

தமிழில் பிரபலமான நடிகர் பரத் மற்றும் புதுமுக நடிகர் அஜய் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ரவி மோகன் – ஜீ. வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

2019 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற ‘காளிதாஸ்’ படத்தை தொடர்ந்து அதன் இயக்குநரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், ‘ஆடுகளம்’ கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ , அபர்னதி, ராஜா ரவீந்தர், டி எம் கார்த்திக் , ‘சிங்கம்’ ஜெயவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சங்கீதா- இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை புவன் ஸ்ரீனிவாசன் கவனிக்க, கலை இயக்கத்தை துரைராஜ் கையாள, நிர்வாக தயாரிப்பு பணியை எஸ். பழனியப்பன் மேற்கொண்டார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரபல விநியோகஸ்தரும் , தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் , அவரின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகளும், மயக்கும் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் படத்தை பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

எம். எஸ். பாஸ்கர் – ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இணைந்து நடிக்கும் புதிய படம்

குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிப்பில் நடிகர் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

காமெடி நடிகராக பிரபலமான ‘ஃப்ராங்க்ஸ்டர்’ ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகரான எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை திவாகர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை பிரேம் கவனிக்கிறார் . சண்டை காட்சிகளை பீனிக்ஸ் பிரபு அமைக்க, ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். காமெடி வித் ஹாரர் ஃபேண்டஸி ஃபிலிமாக தயாராகும் இந்த திரைப்படத்தை குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிக்கிறார். மெட்ரோ முரளி மற்றும் மெட்ரோ கிரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகி இருக்கிறார்கள்.

இப்படத்தின் தொடக்க விழாவும் , படப்பிடிப்பும் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

‘பார்க்கிங் ‘ படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த நடிகர் எம் எஸ் பாஸ்கர் – இணைய தள பிரபலமான நடிகர் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்முதலாக கூட்டணி அமைத்திருப்பதால் இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஷ்மிகா மந்தனா – தீக்ஷித் ஷெட்டி நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” படத்தின் முதல் பாடல் “நதிவே”

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஜோடியாக நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” திரைப்படம், கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீராஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகி வருகிறது. புகழ்பெற்ற தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இப்படத்தினை வழங்குகிறார். இயக்கும் பணியை நடிகராகவும், இப்போது இயக்குநராகவும் செயல்படும் ராகுல் ரவீந்திரன் மேற்கொள்கிறார்.

முழுமையான காதல் படைப்பாக உருவாகி வரும் இப்படத்திலிருந்து முதல் இசை வெளியீடாக “நதிவே” எனும் பாடல் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.

ஹேஷம் அப்துல் வாஹாப் இசையமைத்துள்ள இந்த பாடல், மனதைக் கொள்ளை கொள்ளும் இசையும், ஈர்க்கும் குரலும் கொண்ட ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாக உள்ளது. தமிழ் பாடல்வரிகளைக் கவிஞர் ராகேந்து மௌலி எழுதியுள்ளார். அவருடைய வரிகள், இசையுடன் நெருக்கமாக இணைந்து, காதல் உணர்வுகளை ஆழமாகப் பிரதிபலிக்கின்றது.

ராஷ்மிகா மந்தனா மற்றும் தீக்ஷித் ஷெட்டி இடையிலான வசீகரிக்கும் கெமிஸ்ட்ரி பாடலின் வசீகரத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது. விஸ்வகிரண் நம்பி நடன அமைப்பில், நேர்த்தியான நடன அசைவுகள், ராஷ்மிகாவின் அழகான முகபாவங்கள் மற்றும் தீக்ஷித்தின் அழகான நடிப்பு ஆகியவை உணர்ச்சிப்பூர்வமான ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. இசை, பாடல் வரிகள் மற்றும் காட்சிகள் ஒன்றாக இணைந்து ஒரு ஆழமான, நெகிழ்ச்சியுடன் கூடிய மயக்கும் அனுபவத்தை உருவாக்குகின்றன.

தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.

நடிகர்கள்: ரஷ்மிகா மந்தனா, தீக்ஷித் ஷெட்டி மற்றும் பிறர்

திரைப்படக் குழு விவரம்:
இசை: ஹேஷம் அப்துல் வாஹாப்
உடை வடிவமைப்பு : ஷ்ராவ்யா வர்மா
தயாரிப்பு வடிவமைப்பு : எஸ். ராமகிருஷ்ணா, மௌனிகா நிகோட்ரி
மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ
வழங்குபவர்: அல்லு அரவிந்த்
தயாரிப்பு நிறுவனம்: கீதா ஆர்ட்ஸ், தீராஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட்
தயாரிப்பாளர்கள் : தீராஜ் மோகிலினேனி, வித்யா கோப்பிநீதி
கதை மற்றும் இயக்கம் : ராகுல் ரவீந்திரன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில், 96 பிரேம்குமார் இயக்கும் புதிய படம் !!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனம், அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. இந்திய திரைப்பட உலகின் பெருமைமிகு நடிகர் சீயான் விக்ரம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, 96, மெய்யழகன் புகழ் இயக்குநர் பிரேம் குமார் இப்படத்தை இயக்கவுள்ளார்.

உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன் சிறப்பான கதைகளை வழங்கும் திறமை கொண்ட இயக்குநர் பிரேம் குமார், பன்முக திறமை கொண்ட நடிப்புக்காக பெயர் பெற்ற சீயான் விக்ரம் ஆகியோர் இணைந்து தமிழ் சினிமாவிற்கு தனித்தன்மை வாய்ந்த ஒரு சினிமா அனுபவத்தை வழங்கவிருக்கின்றனர்.

இந்த திரைப்படத்தை, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட்டின் தலைவர் டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிக்கிறார். இப்படம், நம் மனதை ஆழமாக தொடும் கதைக்களத்துடன், பரவசமான நடிப்பை கலந்துசேர்த்த, ஒரு புதிய முயற்சியாக உருவாக உள்ளது.

இத்திரைப்படத்தின் தலைப்பு, நடிகர் பட்டியல் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும் பல ஆச்சரியமான தகவல்களுக்கு காத்திருங்கள்!

ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படத்தில் இணையும் கவின் – பிரியங்கா மோகன்

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் கவின் கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில கவின்- பிரியங்கா மோகன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு ஓஃப்ரோ (OFRO) இசையமைக்கிறார் . ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி ஜானரிலான இந்த திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்களும், ்படப்பிடிப்பு குறித்த தகவலும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் கவின் மற்றும் பிரியங்கா மோகன் முதன்முறையாக இணைந்திருப்பதால்.. இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊர்வசி – ஜோஜு ஜார்ஜ் இணைந்து நடிக்க, ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் – “ஆஷா

ஊர்வசி – ஜோஜு ஜார்ஜ் இணைந்து நடிக்க, ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் – “ஆஷா” திரைப்படம், இன்று பூஜையுடன், படப்பிடிப்பு துவக்கம்!

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படமான “ஆஷா” படத்தின் பூஜை, திருகக்கரையில் உள்ள வாமன மூர்த்தி கோவிலில் இன்று விமரிசையாக நடைபெற்றது. பூஜையைத் தொடர்ந்து, படக்குழு இன்று படப்பிடிப்பை துவங்கியுள்ளது.

இந்த விழாவில், ஜோஜு ஜார்ஜ் உடன் ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் மற்றும் இயக்குநர் சஃபர் சனல் விளக்கேற்றி படத்தை துவக்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து படத்தின் ஜோஜு ஜார்ஜ் கிளாப் அடிக்க, மது நீலகண்டன் கேமரா ஸ்விட்ச் ஆன் செய்து படப்பிடிப்பை துவக்கி வைத்தனர்.

இப்படத்தில் ஊர்வசி, ஜோஜு ஜார்ஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, விஜயராகவன், ஐஸ்வர்யா லட்சுமி, மற்றும் “பனி” திரைப்படத்தில் நடித்த ரமேஷ் கிரிஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒரு பான்-இந்தியப் படமாக உருவாகும் இப்படம் ஐந்து இந்திய மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.

படத்தின் டைட்டில் லுக் போஸ்டர், பூஜை நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளது, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தை அஜித் வினாயகா ஃபிலிம்ஸ் சார்பில் வினாயகா அஜித் தயாரிக்கிறார். இப்படத்தின் கதையை எழுதியுள்ள சஃபர் சனல் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். திரைக்கதை மற்றும் வசனங்களை ஜோஜு ஜார்ஜ், ரமேஷ் கிரிஜா, மற்றும் சஃபர் சனல் இணைந்து எழுதியுள்ளனர்.

தொழில்நுட்பக் குழு விவரங்கள்:
ஒளிப்பதிவு: மது நீலகண்டன்
எடிட்டிங்: ஷான் முகமது
இசை: மிதுன் முகுந்தன்
ஒலி வடிவமைப்பு & சிங் சவுண்ட்: அஜயன் அடாட்
ஆர்ட் இயக்கம்: விவேக் கலாத்தில்
மேக்கப்: ஷமீர் ஷம்ஸ்
உடை வடிவமைப்பு: சுஜித் சி.எஸ்
ஸ்டண்ட்ஸ்: தினேஷ் சுப்பராயன்
தயாரிப்பு மேலாளர்: ஷபீர் மலவட்டம்
சீனியர் அசோஷியேட் இயக்குநர்: ரதீஷ் பிள்ளை அசோசியேட்ஸ்: ஜிஜோ ஜோஸ், ஃபெபின் எம். சன்னி
ஸ்டில்ஸ்: அனூப் சக்கோ
மக்கள் தொடர்பு : யுவராஜ்
பப்ளிசிட்டி டிசைன் : யெல்லோ டூத்

தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாகக் களமிறங்கும் “PRK Productions”

தமிழ்த் திரைத்துறையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ராஜ்குமார், “PRK Productions” எனும் பெயரில், புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

புதிதாகக் கால் பதித்திருக்கும், “PRK Productions” நிறுவனம் வித்தியாசமான கதைக்களத்தில், நேர்த்தியான கதைகளைத் தேர்ந்தெடுத்து, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் பல புதுமையான படைப்புகளை வழங்கும், நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் துவங்கிய இந்த புதிய தயாரிப்பு நிறுவனத்தின் துவக்க விழாவில், நடப்பு தமிழ் தயாரிப்பு சங்கத்தின் செயல் தலைவர் சத்ய ஜோதி பிலிம்ஸ் திரு தியாகராஜன், திருமதி செல்வி தியாகராஜன், பெப்சி சங்கத்தின் தலைவர் திரு ஆர் கே செல்வமணி, பெப்சி சங்கத்தின் செயலாளர் திரு சுவாமிநாதன், பெப்சி சங்கத்தின் துணைத்தலைவர் திரு மோகன மகேந்திரன் மற்றும் மாமன் படத் தயாரிப்பாளர் திரு குமார், நடிகர் திரு யோகிபாபு, இயக்குநர் திரு சுசீந்திரன், ராட்சசன் பட இயக்குனர் திரு இராம்குமார் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

முனியாண்டி விலாஸ் உணவகங்களின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவரான தெய்வத்திரு பாண்டியராஜ் அவர்களின் மகன் தான் திரு. ராஜ்குமார். பள்ளி வயது முதலே தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்க வேண்டும் என்ற கனவில் இயங்கி வந்த திரு ராஜ்குமார், தான் பத்தாவது படிக்கும் பொது, “PRK Productions” எனும் பெயரை உருவாக்கி வைத்துள்ளார். அதை நோக்கிய கனவில், இன்ஞ்சினியரிங் படிப்பிற்குப் பிறகு, தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தில், திரு தியாகராஜன் அவர்களின் ஆசியுடன், தயாரிப்பு மேற்பார்வையாளராக 15 வருடம் பணியாற்றியுள்ளார். தயாரிப்பு நிறுவனத்தின் நுணுக்கங்களை முழுமையாகக் கற்றுக்கொண்டவர், தற்போது புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார்.

இந்நிறுவனத்தின் முதல் படைப்பு, முன்னணி நட்சத்திர நடிகரின் நடிப்பில், முன்னணி இயக்குநர் இயக்கத்தில், தமிழின் சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களின் பங்களிப்பில், மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகவுள்ளது. இப்படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Celebrating 70 Years with Customers: Yamaha Offers INR 10,000 Price Benefit on RayZR 125 Fi Hybrid

 

Yamaha Motor Co., Ltd. (YMC) today celebrates its 70th Foundation Day — a significant milestone in its journey of delivering innovation, performance, and riding excitement to customers around the world. Since 1955, Yamaha has stayed true to its challenger spirit, bringing together engineering excellence and a passion for mobility that inspires millions.

To commemorate this special occasion, India Yamaha Motor is offering a price benefit of ₹7,000 (on the ex-showroom price) on its popular RayZR 125 Fi Hybrid and RayZR 125 Fi Hybrid Street Rally. This limited-time celebratory offer is our way of thanking customers for their continued trust and support over the decades. With this benefit, customers can now save up to ₹10,000 on the final on-road price. The offer also includes Yamaha’s industry-leading 10-Year ‘Total Warranty’, making the RayZR an even more compelling choice in the 125cc segment.

This 10-Year ‘Total Warranty’ includes a 2-Year Standard Warranty and an 8-Year Extended Warranty covering critical engine and electrical components, including the Fuel Injection (Fi) system, for up to 1,00,000 km. Fully transferable to subsequent owners, this industry-leading coverage reflects Yamaha’s confidence in its product durability and enhances long-term ownership value.

The RayZR 125 Fi Hybrid is designed to meet the needs of today’s urban riders who seek both performance and practicality. Its 125cc Fi Blue Core engine with Hybrid Power Assist offers enhanced acceleration and fuel efficiency—ideal for quick city commutes. The Smart Motor Generator (SMG) ensures smoother, quieter starts, making daily rides more convenient. With E20 fuel compatibility, it’s future-ready, and the 21-litre under-seat storage makes it practical for everyday use. Riders also benefit from features like front Telescopic Suspension for better ride comfort, Side Stand Engine Cut-off Switch for added safety, Automatic Stop-and-Start System for improved mileage in traffic, and a fully digital instrument cluster with Y-Connect Bluetooth connectivity that keeps them informed and connected on the go.

ModelVariantColors AvailableNew Price (Ex-showroom, Delhi)
Ray ZR 125 Fi HybridDrumCyan Blue, Metallic Black and Matte Red79,340
DiscCyan Blue, Metallic Black, Matte Red, Racing Blue and Dark Matte Blue86,430
Ray ZR 125 Fi Hybrid Street RallyDiscIce Fluo Vermillion, Cyber Green and Matte Black92,970

Yamaha remains focused on creating deeper value for riders through exciting products and customer-centric initiatives. With the same spirit that fueled its founding in 1955, Yamaha will continue to take on new challenges—powered by the trust of its customers and its illustrious legacy of 70 years.

 Chennai Retail Summit 2025: RAI Showcases Innovation and the Next Phase of Retail

Chennai, July 16, 2025: The Retailers Association of India (RAI) successfully hosted the Chennai Retail Summit 2025 at the prestigious ITC Grand Chola, Chennai, bringing together influential leaders and decision-makers from across the Indian retail landscape. Held under the theme “Changing World of Retail,” the summit served as a vibrant platform for industry stakeholders to exchange insights, explore growth opportunities, and navigate the evolving dynamics of retail in India.

Set against the backdrop of Chennai’s thriving retail environment, the summit reinforced the city’s growing reputation as a hub of retail innovation and collaboration. The summit also featured a keynote address by esteemed industrialist Mr. R. G. Chandramogan, Founder of the Hatsun Group, and a special address by Ba. Ramesh, Joint Managing Director of Thangamayil Jewellery, further building on the summit’s legacy of forward-thinking dialogue and industry inspiration.

Speaking about the summit, Kumar Rajagopalan, CEO, Retailers Association of India (RAI), said, “Tamil Nadu has long been a pioneer for modern retail, with many businesses evolving their formats over the last five decades. What makes the state unique is the depth of retail activity across its towns. Consumers here are informed, and open to new formats and technologies. The state also benefits from a strong technology backbone, which is helping retailers adopt smarter systems and digital tools to serve customers better. Retail in Tamil Nadu is also a major contributor to livelihoods, offering employment across sales, logistics, supply chains, and support services. The broader ecosystem here enables retail businesses to grow, experiment, and scale responsibly. When retailers gather in Tamil Nadu, it offers a meaningful glimpse into how the sector continues to adapt and thrive.”

The summit featured a distinguished lineup of speakers who brought rich experience and diverse perspectives to the table. Among them were R. Balachandar, Managing Director of Haribhavanam Restaurants India Pvt. Ltd., Balachandar R, Director of Junior Kuppanna, Suhail Sattar, Director of Hasbro Clothing (Basics), C.K. Kumaravel, Co-Founder and CMD of Naturals Salon & Spa, and Palaniswamy Vanjimuthu, Director of Boomerang Ice Cream. Each speaker offered practical insights and thought leadership on navigating today’s challenges and capitalizing on tomorrow’s opportunities.

Panel discussions at the summit delved into critical themes such as “Scaling Up Smartly: Strategies for Sustainable Growth,” “Tradition Meets Innovation: Bridging Retail Generations,” “Beyond the Metros: Big Opportunities in Smaller Cities,” and “Retail Tomorrow: Trends Shaping the Next Decade.” These conversations sparked engaging dialogue on sustainable expansion, intergenerational business transitions, the untapped potential of non-metro markets, and the technologies and consumer behaviours shaping the future of retail.

Balachandar R, Director, Junior Kuppanna: “Retail in Tamil Nadu is rooted in deep customer relationships. As we grow, we’re seeing a shift—not in what people value, but in how they access it. Whether it’s food or fashion, the future lies in being consistent across formats, not necessarily being everywhere at once. What works in Madurai may not work in Coimbatore, and recognising these nuances is key.”

Suhail Sattar, Director, Hasbro Clothing (Basics) and chairman, RAI, Chennai Chapter: “The customer base in Tamil Nadu is evolving rapidly; they’re young, connected, and brand-aware, yet still price-conscious and loyal to value. For apparel retail, this means striking a fine balance between trend and utility. We’re not just selling clothes anymore, we’re responding to changing expectations across multiple touchpoints.”

Sunil Sanklecha, Founder, Nuts ‘N’ Spices, and Vice Chairman, RAI Chennai Chapter: “Retail in Tamil Nadu has always had strong fundamentals — trust, consistency, and a deep connection with customers. What we’re seeing now is a generational shift in how those fundamentals are being delivered. Technology, better supply chains, and evolving customer expectations are pushing even traditional retailers to rethink their approach. At the same time, the retail sector continues to create meaningful employment across formats. It’s a space that’s dynamic, resilient, and closely tied to the aspirations of local communities.”

The 2025 edition of the Chennai Retail Summit highlighted RAI’s continued vision for a progressive retail landscape, bringing together key voices to drive innovation and chart the course for the sector’s future.