இசை ரசிகர்களுக்கு கூடுதலான வசதிகளுடன் பிரமாண்டமாக அரங்கேறும் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி
‘ராக் ஸ்டார்’ அனிருத்தின் இசை நிகழ்ச்சி இதற்கு முன் கண்டிராத வகையில்… பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டுள்ளார்.
பான் இந்திய இசையமைப்பாளரான அனிருத் – ரசிகர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, சென்னையில் இதற்கு முன் இசை ரசிகர்கள் பார்த்திராத வகையில் புதிய இசை அனுபவத்தை வழங்குவதற்காக தயாராகிறார். இந்த இசை நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதியன்று கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் எனும் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி ( MARG SWARNABHOOMI ) எனும் இடத்தில் நடைபெறுகிறது.
பல்லாயிரக்கணக்கில் திரளும் இசை ரசிகர்களின் பாதுகாப்பு.. பார்க்கிங்.. என ஏராளமான வசதிகளுடன் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சி நடைபெறும் வகையில் விரிவான ஏற்பாடுகளை இசை நிகழ்ச்சியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அனிருத் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை District எனும் பிரத்யேக ஆப்( App)பில் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் தொடங்குகிறது. அதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
இசை ரசிகர்கள் இதற்கு முன் இப்படியொரு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி அனுபவத்தை அனுபவித்திராத வகையில் பிரத்யேக ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் செய்து வருகிறார்கள். குறிப்பாக ஏராளமான இசை ரசிகர்களின் வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி விசாலமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் இசை ரசிகர்களின் உற்சாகத்தையும், கொண்டாட்டத்தையும் உளவியல் ரீதியாக மேம்படுத்தும். மேலும் இந்த நிகழ்ச்சி – இசை ரசிகர்களுக்கான ஆகச் சிறந்த முன்னுதாரணமாக திகழும் என்றும் ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.
‘ராக்ஸ்டார்’ அனிருத் – பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் – பிரம்மாண்டமான மற்றும் கூடுதலான வசதிகள் – ஒப்பற்ற இசை அனுபவம் – ஆகியவை ஒன்றிணைந்திருப்பதால் அனிருத்தின் #Hukum மிகப் பிரம்மாண்டமான வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பல உலக நாடுகளில் நடைப்பெற்ற ‘ராக்ஸ்டார்’ அனிருத்தின் #Hukum இசை நிகழ்ச்சியின் ஃபைனல் சென்னையில் நடைபெறுவதால் மிகப் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Chennai, July 25, 2025: Dalmia Bharat Foundation (DBF), the Corporate Social Responsibility (CSR) arm of leading cement company, Dalmia Bharat Ltd, inaugurated a new Skill Development Centre– DIKSHa (Dalmia Institute of Knowledge and Skill Harnessing)inChennai in partnership with Athulya Assisted Living Private Limited, a leader in senior care services.
As part of the inauguration, a virtual signing of the Memorandum of Understanding (MoU) was held between Mr. Ashok Kumar Gupta, CEO, DBF and Mr. Srinivasan G, Founder & CEO Athulya Senior Care to formalize the partnership and its shared goal of creating career-ready healthcare professionals.
The centre will begin with training 150 youth annually in the General Duty Assistant (GDA) role through a blend of 30 days of classroom instruction and 60 days of on-the-job training at Athulya’s assisted living facilities. The program is aligned with NSDC standards and includes accommodation, meals, uniforms, and stipends during the internship. Upon successful completion, trainees will receive NSDC certification and formal job offers with starting salaries between ₹12,000 and ₹18,000 per month. The inauguration program was attended by the management of Athulya Assisted Living Private Limited, Dr. Venkatesan, Principal, Dr. Kiran Kumar, Programme Director and Mr. Paneer Chelvam, VP, HR and officials of Dalmia Cement (Bharat) Limited.
Reinforcing its commitment to skill-based education and sustainable livelihoods, Mr. Ashok Gupta, CEO Dalmia Bharat Foundation said “This initiative is a testament to our belief that meaningful partnerships can drive long-term social change. With Chennai’s healthcare sector on a steady growth trajectory, this DIKSHa centre will be a step towards bridging the skill gap while creating dignified employment opportunities for the youth”
Currently, 23 DIKSHa centres operate across India, offering training in sectors such as healthcare, beauty therapy, electrical work, data entry, and solar installation. To date, over 25,000 youth have been trained under the program, with approximately 75% securing employment or becoming self-employed. Notably, over half the trainees are women, reflecting DIKSHa’s emphasis on inclusive development. The DIKSHa centre in Chennai marks not just the expansion of DBF’s skilling footprint, but a shared commitment to building a resilient, job-ready healthcare workforce rooted in community and care.
About Dalmia Bharat Foundation:
Dalmia Bharat Foundation focuses on building Sustainable Livelihoods and ensure Rural Development in its program areas. These programs combine in-depth, long-term plans and strategies along with medium- and short-term initiatives and campaigns. Owing to the great differences across locations, DBF has adopted a flexible, multi-intervention approach that allows programs and people to grow together and sustain each other. The two focus areas have been derived from the felt needs of the community and issues material to the business. Visit us at http://www.dalmiabharatfoundation.org.
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”. இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் விஜய் ஆண்டனியின் பிறந்த நாளான இன்று 24.07.2025 பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் விஜய் ஆண்டனி, அருண் பிரபு, தனஞ்செயன், கார்த்திக் நேத்தா, திருப்தி, அரவிந்த் ராஜ் மற்றும் படக்குழுவில் பலரும் கலந்துக் கொண்டு இவ்விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர்.
நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி பேசுகையில், “நான் எப்போதுமே வேலை வேலை என்று வேலையில் கவனம் செலுத்துவதனால் எனக்கு பத்திரிகை நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் தான் நான் சமீபத்தில் கொடுக்கும் அனைத்து நேர்காணல்களிலும் மிகவும் காமெடியாகவும், ஜாலியாகவும் பதிலளித்துக் கொண்டிருக்கிறேன்.
தமிழ் சினிமாவில் நான் டாப் 5 படங்களில் அருவி ஒரு படம். அதே போல் இந்திய அளவில் டாப் 3 இயக்குனர்களில் அருண் பிரபு ஒருவர். சர்வதேச அளவில் படம் எடுக்கக் கூடிய வல்லமை அவருக்கு இருக்கிறது. எப்போது அருண் வந்தாலும் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் அவருக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். அவருக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு தயாராக இருக்கிறேன்.
ஷெல்லியின் சப்போர்ட் இல்லாமல் அருண் பிரபு அவர்களால் அருவியை செய்திருக்க முடியாது. சில்லி அருணுக்கு மனைவி போன்றவர். இவர்கள் இருவரும் இணைந்து பெரிய அளவில் படங்களை உருவாக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். அருண் பிரபு அடுத்து இயக்கும் படம் பெரிய படமாக தான் இருக்க வேண்டும். கார்த்திக் நேத்தா அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எப்போதுமே மகிழ்ச்சியான தருணமாக தான் இருந்திருக்கிறது. நான் சில காலமாக இசையமைப்பதில் கவனம் செலுத்தவில்லை. சக்தித் திருமகன் படத்தின் வெளியீட்டிற்கு பின்பு நான் மீண்டும் இசையில் கவனம் செலுத்தவுள்ளேன் அப்போது மீண்டும் கார்த்திக் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்.
அருண் பிரபு எப்போதுமே கதாநாயகியை தேர்வு செய்வதில் தனித்தன்மையாக இருப்பார். அவர் படங்களில் இருக்கும் நாயகிகள் பக்கத்து வீட்டு பெண்கள் போல தான் இருப்பார்கள். அதுபோலத்தான் இந்த படத்திற்கும் யாரை தேர்வு செய்வார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாள் திருப்தியை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவரும் மிகவும் நன்றாக இப்படத்தில் பணியாற்றி இருக்கிறார். அவர் மென்மேலும் வளர வாழ்த்துகள். இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “தமிழ் சினிமாவின் விடாகண்டன், கொடா கண்டன் விஜய் ஆண்டனி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். மார்கன் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகள். விஜய் ஆண்டனி அவர்களை பற்றி நான் பல முறை சொல்லியிருக்கிறேன். விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் தயாரித்த எந்த படமும் தோல்வி அடைந்ததில்லை.
விமர்சக ரீதியாக வெற்றியடையாவிட்டாலும், வணிக ரீதியாக வெற்றியடையும். தமிழ் சினிமாவில் படங்களை பிஸினஸ் செய்யும் நுட்பம் யாருக்கும் தெரியாது. ஆனால், விஜய் ஆண்டனியின் படங்கள் அனைத்தும் வியாபார ரீதியாக சிறப்பாக கையாண்டுவிடுவார். இப்படத்தின் திரையரங்கு உரிமையை தவிர மற்ற அனைத்து உரிமைகளையும் விற்றுவிட்டார் விஜய் ஆண்டனி.
நாம் அனைவரும் பார்த்து வியந்த ஒரு இயக்குனர் தான் அருண் பிரபு. இப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார். இதற்கு முன் அவர் இயக்கிய அருவி மற்றும் வாழ் படத்திலிருந்து இப்படம் மாறுபட்டு இருக்கும். இப்படத்தின் மூலம் திருப்தி அறிமுகமாகிறார் அவருக்கு வாழ்த்துகள். ஒரு முழு கமர்ஷியல் படமாக சக்தித் திருமகன் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.” என்றார்.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசுகையில், “முதலில் விஜய் ஆண்டனி சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு இது 25வது திரைப்படம். அவரைப் பற்றி பேசும் போது மலரும் நினைவுகள் தான் வருகிறது. நான் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் போது சூளைமேடு கில் நகரில் அவர் ஸ்டுடியோ வைத்திருந்தார். ‘நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய்’ என்ற பாடல் மிகவும் பிரபலமான காலகட்டம் அது. அந்த சமயத்தில் தான் நான் அவரது ஸ்டுடியோவிற்கு சென்று வாய்ப்பு கேட்டேன். அந்தப் பாட்டையே வேறு மாதிரி எழுதி கொடுங்கள் என்று எனக்கு தேர்வு வைத்தார். நானும் எழுதிக் கொடுத்தேன். அதைப் பார்த்துவிட்டு மெட்டுக்குள் வரும்படி நன்றாக எழுதி இருக்கிறீர்கள். நான் அழைக்கிறேன் என்று கூறினார். சிறிது நாட்களிலேயே ஒரு தொடருக்கு இசையமை இசையமைத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பாடலுக்கு மெட்டு கொடுத்து எழுத சொன்னார். ‘என்னை தேடி காதல் என்னும் தூது அனுப்பு’ என்ற மெட்டுக்கு நான் எழுதிக் கொடுத்தேன். என்னோடு சேர்ந்து தேன்மொழி தாஸ் என்கிற கவிஞரும் பாடல் எழுதினார். ஆனால் அவருடைய வரிகள் ஆழமாக இருந்ததால் அவருடைய வரிகளையே எடுத்துக் கொண்டார்கள். அதன் பிறகு நான் வாய்ப்பு தேடவில்லை. நிறைய கற்றுக் கொள்ளலாம் என்று இருந்தேன். அப்போது விஜய் ஆண்டனி சார் இசையமைக்கவில்லை ஆனால் அவர் நடித்த கொலை படத்தில் இரண்டு பாடல்களை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு ரோமியோ படத்தில் நான் எழுதிய ‘சிடு சிடு’ பாடல் நன்றாக பேசப்பட்டது.
நீண்ட நாட்களுக்கு பிறகு சாருக்கு நான் எழுதும் முதல் படம் இது. அந்த வகையில் எனக்கும் இந்த படம் ஸ்பெஷல் திரைப்படம் தான். அருண் உடைய முதல் இரண்டு படங்களை பற்றி பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அருவி மற்றும் வாழ் போன்ற திரைப்படங்களை நுணுக்கமாக கவனித்தால் நாம் வாழ்கின்ற வாழ்க்கை சமூகமாகவும் அரசியலாகவும் உளவியல் ரீதியாகவும் சரி இல்லை என்று தோன்றுகின்ற படமாக இருக்கும். அதிலும் அருவி நாம் தப்பு தப்பாக வாழ்ந்து கொண்டு சமூகத்தை தவறாக சொல்கிறோம் என்று நம்மை கேள்வி கேட்கும் படமாகவும், சுட்டி காட்டுகின்ற படமாகவும் இருக்கும்.
ஒரு தனி மனிதன் சரியாக இல்லை என்றால் ஒரு சமூகம் சரியாக அமையாது என்பதை மிக அழகாக, ஆழமாக வாழ் படத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும். இந்த இரண்டு படங்களும் பிடிக்கும் என்பதை தாண்டி நாம் தேடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையை முன்பும் பின்பும் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அது நமக்கு புரியவில்லையே என்கிற ஏக்கம் இந்த இரண்டு படங்களிலும் இருந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக வாழ் படத்தை வைத்து சமூகத்தில் நாம் கலந்து ஆலோசத்திருக்க வேண்டிய படம். அந்த வரிசையில் இந்தப் படமும் நியோ பொலிட்டிக்கல் பேசும் படமாக வந்திருக்கிறது என்பது உறுதியாக தெரிகிறது. பாடல் எழுதும் போது இந்த படத்தின் கதை தெரிந்து விட்டது. அதிலும் குறிப்பாக இரண்டாவதாக வந்திருக்கும் வாகேஷின் பாடல் வரிகள் ஆகும் மெட்டாகவும் சிறப்பாக இருக்கிறது. இந்த பாடல் வரிகளை தமிழ் மொழியின் ஆளுமைகளான முருகனும் வந்திருந்ததில் பெரு மகிழ்ச்சி.
நான் எழுதிய வரிகளை பாடிய நண்பருக்கு நன்றிகள். அருணுக்குள் ஆழமான தெளிவான தெளிவான அரசியல் பார்வை இருக்கிறது அடுத்தடுத்த படங்களிலும் அதை செய்வார். இந்த படத்தை பார்த்த பிறகு, நுட்பமான விஷயங்கள் நிறைய இருக்கிறது அது பற்றி பேசலாம். அன்புத்தம்பி தின்சாவுக்கு வாழ்த்துக்கள். நாங்கள் இருவரும் இதற்கு முன்பு மனிதர்கள் படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றினோம். நாம் வாழக்கூடிய நிலத்திற்கு ஏற்ற பல திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதுதான் ஆக்கப்பூர்வமானது. மாநில திரைப்படங்கள் எப்போதும் சர்வதேச திரைப்படங்களாக இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன். அதை நம் தமிழ் படங்கள் கொடுத்துக் கொண்டிருப்பது பெருமையாக இருக்கிறது. புதிதாக அறிமுகமாகும் கதாநாயகியை தமிழ் சினிமா வரவேற்கிறது. மென்மேலும் வளர வாழ்த்துகள். இப்படத்தில் பணியாற்று அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.
ஆடை வடிவமைப்பாளர் அனுஷா மீனாக்ஷி பேசுகையில், “விஜய் ஆண்டனி சாருடன் நான் இணைந்து பணியாற்றும் 5 வது படம் இது. எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு படம், காரணம் இது விஜய் ஆண்டனி சாரின் 25 வது படம். இப்படத்தில் நாங்கள் சந்தோஷமாக பணியாற்றினோம். வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி,” என்றார்.
மாஸ்டர் கேசவ் பேசுகையில், “சக்தித் திருமகன் என்னுடைய இரண்டாவது படம், இப்படத்தில் நான் நடித்தது எனக்கு கிடைத்தது பெரிய வாய்ப்பாக பார்க்கிறேன். இப்படத்தின் மூலம் எனக்கு நிறைய நினைவுகள் கிடைத்துள்ளது. எனக்கு வாய்பளித்த அருண் சார் மற்றும் விஜய் ஆண்டனி சார் அவர்களுக்கு நன்றி.” என்றார்.
நாயகி திருப்தி பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இந்த வாய்ப்பளித்த விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. காஸ்டியும், லைட், கேமரா என அனைத்து திரையினரும் மிக ஒழுக்கமாக இருந்தனர். ஷெல்லி சார் இப்படத்திற்காக நிறைய உழைதிருக்கிறார். விஜய் ஆண்டனி சார் இப்படத்தின் செட்டில் என்னை சிறப்பாக கவனித்துக் கொண்டார். அருண் பிரபு சாருக்கு நன்றி.” என்றார்.
ஒளிப்பதிவாளர் ஷெல்லி காலிஸ்ட் பேசுகையில், “10 ஆண்டுகளுக்கு முன் நான் அருண் அவர்களிடம் நீ என்ன மாதிரியான படத்தை இயக்க போகிறாய் என்று கேட்டேன். அதற்கு அவர் என் படங்கள் அனைத்திலும் அரசியல் இருக்கும் என்று சொல்லியிருந்தார். அவர் வீட்டிற்கு சென்றால் தினசரி நடக்கும் அரசியல் விஷயங்களை அவர் பதிவு செய்து வைத்திருப்பார். மிக ஆழமான அரசியலை அவர் புரிந்து வைத்துள்ளார். இப்படம் சிறப்பாக வந்துள்ளது, நன்றி.” என்றார்.
இயக்குநர் அருண் பிரபு பேசுகையில்,
“பொதுவாகவே எனக்கு ஜனரஞ்சகமான அரசியல் படம் பார்க்க எனக்கு பிடிக்கும், அப்படிபட்ட படம் தான் சக்தித் திருமகன் படமும். அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் வகையில் இப்படம் இருக்கும். ஒரு கதையை சொல்லும்போது ஒரு பதட்டம் எப்போதுமே இருக்கும். அந்த படத்தில் ஹீரோயிசமும் இருக்கும். அதை இப்படத்தில் நான் இயக்கியுள்ளேன். அருவி படத்தில் எந்த அளவிற்கு உழைத்தோமோ அதே உழைப்பு தான் இப்படத்திலும் செய்திருக்கிறேன். இப்படத்திற்கும் உங்களின் ஆதரவு கிடைக்கும் என்று நினைக்கிறேன் நன்றி.” என்றார்.
தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை.பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராகு கேது”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழின் புகழ்மிகு இயக்குநர் திரு.A.P.நாகராஜன் அவர்களுக்கு பிறகு, நம் புராணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. தமிழில் சாமி படங்களும் புராண படங்களும் வரவில்ல எனும் ஏக்கத்தை போக்கும் வகையில் இப்படம் ஆன்மிக ரசிகர்களை மகிழ்விக்கு அருமைமிகு படைப்பாக உருவாகியுள்ளது.
ராகுகேது உருவான வரலாறு, அவர்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை அற்புதமான கதையாக இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் நடிகர் சமுத்திரகனி சிவனாகவும், கஸ்தூரி மேடம் துர்கையாகவும், விக்னேஷ் மகாவிஷ்ணுவாகவும் நடித்துள்ளனர். மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தினை அனைத்து வயதினரும் பார்த்து ரசிக்கும் வகையில் U சான்று வழங்கப்பட்டுள்ளது.
கதை, வசனம், பாடல்கள் எழுதியுள்ளார் கலைமாமணி K.P.அறிவானந்தம். இயக்குந்ர தமிழ்மாமணி துரை.பாலசுந்தரம் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் சாந்தி பாலசுந்தரம் தமிழரசன் தியேட்டர் சார்பில் தயாரிக்க, S.ஆனந்த், v.உமாதேவி இணை தயாரிப்பு செய்துள்ளனர்.
தொழில் நுட்ப குழுவில் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் பரணிதரன் பின்னணி இசையமைத்துள்ளார், கிட்டாரிஸ்ட் சதானந்தம் மூன்று பாட்டுகளுக்கு இசை அமைத்துள்ளார், எடிட்டிங் பணிகளை B.லெனின் மேற்கொண்டுள்ளனர்.
இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வரும் ஆகஸ்ட் மாதம் 8 தேதி வெளியாகிறது.
சென்னை நகரின் புகழ்பெற்ற காசினோ திரையரங்கில் ஹரி ஹர வீர மல்லு திரைப்படத்திற்கான சிறப்புவிழா மிக விமர்சனமாக நடைபெற்றது. இந்த நிகழ்வு உண்மையாகவே ஒரு திருவிழாவைப் போன்று இருந்தது. ரசிகர்கள் பெருமளவில் திரண்டுவந்து படத்தின் வெற்றியை உற்சாகத்துடன் கொண்டாடினர். படம் வெளியான முதல்நாளிலிருந்தே அதற்கு கிடைத்த வரவேற்பு கணிசமானது. நான்காவது நாளிலும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஹவுஸ் புல் காட்சிகளுடன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது.
தமிழகத்தில் ரசிகர்கள் அளிக்கும் ஆதரவு குறிப்பிடத்தக்கது. நடிகர் பவன் கல்யாண் மீது உள்ள தீவிர பாசம், அவரது சொந்த மாநிலங்களில் காணப்படும் அளவுக்கு தமிழகத்திலும் வெளிப்படுகிறது. குறிப்பாக சென்னை நகரம், அவருக்கென ஒரு கோட்டையாகவே அமைந்துவிட்டது என்பதை இந்த வெளியீடு மீண்டும் நிரூபித்தது.
திரையரங்கின் வெளியில் ரசிகர்கள் கொண்டாட்டங்களை மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடினர். வானில் பட்டாசுகள் வெடித்தன, பெரும் கேக்குகள் வெட்டப்பட்டன, பேனர்கள் ஏற்றப்பட்டன, பவன் கல்யாணுக்கான முழக்கங்கள் இடைவிடாது எழுந்தன. இது ஒரு சாதாரண திரைப்பட விழாவை விட, உண்மையான கலாச்சார திருவிழாவாகவே மாறியது. அவரது தமிழ் ரசிகர்கள் காட்டிய அன்பும் உணர்ச்சியும் இதன் ஊடாக வெளிப்பட்டன.
திரையரங்கின் உள்பகுதியிலும் அதே அளவிலான உற்சாகம் நிலவியது. அதிரடியான காட்சிகளில் ரசிகர்கள் கைதட்டினர், ஆரவாரம் செய்தனர், மகிழ்ச்சியில் ஒலித்தனர். அவர்கள் திரையறை அனுபவத்தில் முழுமையாக மூழ்கியிருந்தனர். படம் அவர்களை கவர்ந்ததுடன், கதையின் உணர்வுப்பூர்வ பிணைப்பும் அவர்களை நெகிழ வைத்தது.
திரையரங்கில் இருந்து வெளியே வந்த பின்னரும் ரசிகர்களின் உற்சாகம் குறையவில்லை. பலர் சமூக ஊடகங்களில் தங்கள் விமர்சனங்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்தனர். படம் அனைத்துத் தரப்பினரிடமும் பெரும் பாராட்டுக்களையும் அன்பையும் பெற்றது. ரசிகர்கள் அனைவரும் ஒரே கருத்தைச் தெரிவித்தனர் ; ஹரி ஹர வீர மல்லு தொடர்ச்சியை விரைவில் காணவேண்டும் என்ற ஆவல் மிகுந்துள்ளது.
இந்த திரைப்படம் ரசிகர்களை மகிழ்வூட்டியதோடு, தொடரும் உற்சாகத்திற்கும் தெளிவான துவக்கமாக அமைந்துள்ளது.
Chennai, 27 July 2025: Synergo Multi Sports Arena was launched in a grand manner at Nanganallur, in Chennai on Sunday. The arena comprises Four USA standard pickleball courts with a skating rink and Two Badminton courts of Badminton World Federation (BWF) standard.
Pickleball’s popularity in India has been on the rise recently, with the trend being no different in Chennai. A combination of tennis, badminton and table tennis, pickleball is popular among people from different age categories.
India and CSk cricketer Vijay Shankar, who was the chief guest for the launch, said: “Synergo Multi Sports Arena is coming up with four USA-standard pickleball courts and international-standard badminton courts. It is a great platform for everyone to have some fun with your friends, and up your skill in pickleball and badminton.”
Chennai Pickleball Association secretary Manendra said: “Initiatives like this are taken to ensure pickleball is played at the Olympic Games in the future and our players get to that level. For training players, we have coaches for all three levels – beginner, intermediate and advanced.”
ஒரு படத்துல ஒரு ஹிஸ்டரியாபேசன்ட் இருக்கலாம் ,இல்ல ரெண்டு ஸ்டீரியா பேசன்ட் இருக்கலாம், ஆனால் இந்த படத்துல வர்றவங்க போறவங்க எல்லாம் ஹிஸ்டரிய பேசன்ட்டுங்களா இருந்தா பாக்குற நாம என்ன பேசன்டா மாறுவோம் அப்படின்னு சொல்ல வருவது தான் தான் “தலைவன் தலைவி” மதுரை ஒத்தக்கடையில் ஒரு சிறிய ஹோட்டல் நடத்தி வரும் விஜய் சேதுபதி அண்ட் கோ பேமிலி, அவருக்கு பெண் தேடுகிறார்கள், அவ்வாறு தேடும் பொழுது ஆர் கே சுரேஷின் தங்கைநித்யா மேனனை பெண் பார்க்கிறார்கள். காதல் பிறக்கிறது விஜய் சேதுபதியின் கொத்து புரோட்டாவில் மயங்கி நித்யா மேனன் குடும்பம் விஜய் சேதுபதிக்கு பெண் தர முடிவெடுக்கிறார்கள். இதற்கிடையே விஜய் சேதுபதி அம்மாவுக்கு யாரோ ஒரு ஜோசியக்காரன் நித்யா மேனன் உங்க வீட்டுக்கு வந்தா மாமனார், மாமியாரை ஒரு மூளையில் உட்கார வைத்து விடுவாள் என்று கூற, விஜய் சேதுபதி அம்மவோ அந்த பெண் வேண்டாம் என்று கூறுகிறார், ஆனால் விஜய் சேதுபதி வம்படியாக நித்தியாமேனனை தூக்கி வந்து திருமணம் செய்கிறார் இந்த திருமணத்தில் ஆர் கே சுரேஷ், விஜய் சேதுபதி இருவருக்கும் மோதலை உண்டாக்குகிறது.இவ்வாறு திருமணம் செய்துவிட்டு இருவரும் ஒற்றுமை இல்லாமல் அடிக்கடி சண்டை போடுவதும் கத்திக் கொண்டே இருப்பதும் அம்மா வீட்டிற்கு கோபித்துக் கொண்டு செல்வதுமாக நித்யா மேனன் இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் நிரந்தரமாக பிரிந்து செல்ல அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு தந்தைக்கு தகவல் தெரிவிக்காமல் மொட்டை அடிக்கும் பங்க்ஷன் நடக்கிறது. அங்கு வரும் விஜய் சேதுபதி அவர்களிடம் சண்டை போட்டு அடிக்கடி பிளாஷ் பைக்கில் கதைகளை சொல்லி அவர்கள் சண்டைக்காண காரணத்தை சொல்லி, இதெல்லாம் ஒரு காரணமா என்று நம்மை எண்ண வைத்து நம்மையும் கிறுகிறுக்க பிடிக்க வைத்து திரைக்கதை எழுதியவர்கள் கிறுகிறுத்து இந்த திரைப்படத்தை இருவரையும் சேர்த்து முடிக்கிறார்கள். அப்பாடா முடிந்து விட்டது என்று பார்த்தால் மீண்டும் சண்டை ஆரம்பித்து கோர்ட்டுக்கு செல்கிறார்கள், சரி டைவர்ஸ் தான் வாங்கி விட்டார்கள் என்று பார்த்தால் மீண்டும் ஒன்றாக பரோட்டா பிசைந்து கொண்டிருக்கிறார்கள் இதுதான் இந்த தலைவன் தலைவி படத்தின் கதை.
.இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹிஸ்டரியாபேசன்ட் போல் எப்போதும் கத்திக் கொண்டே இருக்கிறார் மனைவியிடம் சாப்பிடுங்க மேடம், சாப்பிடுங்க மேடம், ஓகே மேடம் ,சொல்றது பத்து தெருவிற்கு தள்ளி கேட்பது போல் தான் பேசுகிறார் இவர்கள் சாதாரணமாக பேசினாலே இப்படி இருக்கும் போது, சண்டை போட்டால் ஊரில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் ஆனால் இவர்கள் சண்டை போடும் காரணம் எல்லாம் பைத்தியக்கார குடும்பத்தில் கூட இந்த மாதிரி சண்டை போட மாட்டார்கள், அந்த மாதிரியான காரணங்களை தான் காட்டியிருக்கிறார்கள் ஒரே ஒரு காட்சியும் கூட நமக்கு மனதில் பதியும் அளவிற்கு படத்தில் இல்லை என்பதுதான்,
யோகி பாபு இந்த படத்தில் படம் ஆரம்பிப்பதற்கு, முடிப்பதற்கு மட்டுமே உதவி இருக்கிறார் மத்த படத்தில் செட் ப்ராப்பர்ட்டி போல் ஆங்காங்கே வந்து போகிறார் இதே மாதிரி நிறைய கதாபாத்திரங்கள். படத்தில் நித்தியாமனின் அம்மாவாக வருபவரும், விஜய் சேதுபதி அம்மாவாக வருபவரும் நடிப்பின் வில்லத்தனம் மட்டும் தான் நம்மால் ரசிக்க முடிகிறது ஓரளவிற்கு. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கிடைப்பதெல்லாம் போட்டு அடித்து இசையமைத்திருக்கிறார் படம் முழுவதும் நமக்கு சவ்வு கிழிந்தது நிச்சயம்.
கத்துவது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த இசை ஒரு பக்கம் நம் காது ஜவ்வு கிழிகிறது இந்தப் படத்தின் பாராட்டக்கூடிய ஒரே விஷயம் இந்த படத்தின் லொகேஷன் ஒரு கோவிலுக்குள் அதுவும் அந்த கிராமத்து சூழ்நிலையில் இருக்கும் அந்த கோவிலை செட்டாக பயன்படுத்தி அந்த இடத்தில் எடுத்திருப்பது மிகவும் பாராட்டக்கூடிய விஷயம் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது தலைவன் தலைவி இந்த படத்திற்கு பொருத்தமான தலைப்போ இல்லையோ நமக்கு தெரியவில்லை????????????
பெருமாளின் ஒன்பது அவதாரங்களில் மூன்றாவது அவதாரம் மற்றும் நான்காவது அவதாரம் வராக, நரசிம்ம அவதாரம் இந்த இரண்டு அவதாரங்களை வைத்து அனிமேஷன் மூலமாக சொல்லப்பட்ட கதை மகா அவதார் நரசிம்மா. காசிபர் முனிவர் மற்றும் திதி ஆகியோரின் மகன்களாக இரண்யகசிபுவும், இரண்யாட்சனும்பிறக்கிறார்கள். ஒரு தவறான நேரத்தில் அவர்கள் இருவரும் இணைவதால் அரக்கர்களின் வரம் பெற்று குழந்தைகளாக பிறக்கிறார்கள் அவர்கள் பிறக்கும் பொழுது அவர்கள் அனைத்து தேவர்களையும் அடிமைப்படுத்தி ஆள்வார்கள் என்றும் அவர்கள் பெருமாளின் அவதாரத்தால் தான் வதம் செய்யப்படுவார்கள் என்பதும் நாம் அறிந்த கதை. அவ்வாறுஇரண்யகசிபுவும், இரண்யாட்சனும் தேவர்களை நோக்கி கடும் தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று கொடுங்கோல் ஆட்சி செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் இரண்யாட்சன் பூமாதேவியை கடலுக்குள் ஒளித்து வைத்து சிறை பிடிக்கிறான். அப்பொழுது அனைத்து தேவர்களும் பிரம்மனிடம் சென்று முறையிட அவருடைய தும்மலையிலிருந்து வராக அவதாரமாக உருவெடுத்து பூமிதேவியை காப்பாற்றுகிறார் இரண்யாட்சனையும் கொல்கிறார். தன் தம்பியின் மறைவுக்கு விஷ்ணு தான் காரணம் விஷ்ணுவை நான் வதம் செய்வேன் என்றும் இரண்யகசிபு சபதம் செய்துஇறைவனிடம் நான் காலையிலும் சாகக்கூடாது, இரவிலும் சாகக்கூடாது ,வானிலும் சாகக்கூடாது நீரிலும் சாகக்கூடாது, பூமியிலும் சாகக்கூடாது, மிருகங்களாலும் சாகக்கூடாது, ஆயுதங்களாலும் சாகக்கூடாது, வீட்டிற்கு உள்ளே என் சாகக்கூடாது, வெளியேயும் சாகக்கூடாது, என்று வரம் பெறுகிறான். இந்த வரத்தின் பிறகு அவன் ஆடும் அனைத்து கோரத்தாண்டவம் அதே நேரத்தில் அவனுக்கு பிறக்கும் மகன் விஷ்ணுவின் சீடனாக விஷ்ணுவின் பக்தனாக விஷ்ணுவை அடைய நினைப்பவனாக வளரும் பிரகலாதன் ஒரு கட்டத்தில் இரண்யகசிபு தன்மகன்பிரகலாதனையே கொல்ல நினைக்கிரான் ஆனால் அவனுடைய திட்டம் எதுவும் நிறைவேறாமல் விஷ்ணு பிரகலாதனை காப்பாற்றுகிறார் .
கடைசியில் விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து எப்படி இரண்யகசிபு வை வதம் செய்கிறார் என்பதுதான் இந்த மகா அவதார் நரசிம்மா. .இந்தப் படத்தின் அனைத்து கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் அவர்களின் முகபாவனையும் மிகச் சிறப்பாக காட்டியிருக்கிறார்கள் கிராபிக்ஸ் குழுவினர் குறிப்பாக கிளைமாக்ஸ்சில் வரும் நரசிம்மா அவதாரத்தின் சண்டைக் காட்சி மிகவும் பிரம்மாண்டம் ஒருவேளை இதை நிஜ கதாபாத்திரங்களை வைத்து படமாக்கி இருந்தால் நிச்சயம் பிரம்மாண்டமாக காட்டி இருக்கலாம் ஆனாலும் அதைவிட இந்த அனிமேஷன் படம் மிகச் சிறப்பாக நமக்கு நரசிம்மர் அவதாரத்தின் கதையை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறார்கள் நிச்சயம் குழுவினருக்கு ஒரு பாராட்டுக்கள் தான்
சின்ன சின்ன திருட்டுகளில் அடிக்கடி சிறைக்குச் செல்லும் தயாளன் என்னும் பகத் பாசில் ஒருநாள் சிறையில் இருந்து வெளியில் வருந்து ஒரு வண்டியை திருடிக் கொண்டு செல்லும் அவன், ஒரு வீட்டில் திருடன் திட்டமிடுகிறான் அந்த வீட்டிற்குள் சென்று திருடும்பொழுது அந்த வீட்டில் அல்சைமர் என்னும் நினைவு இழப்பு நோயால் பாதிக்கப்பட்டு வேலாயுதம் பிள்ளை எனப்படும் வடிவேலு அங்கு சங்கலியால் கட்டி வைக்கப்பட்டு இருக்கிறார்.
அவரிடம் வடிவேலு என்னை காப்பாற்றினால் உனக்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் தருவதாக பேரம் பேசுகிறார். பணம் கிடைக்கிறது என்பதால் வடிவேலுவை அவரும் விடுவித்து கூட்டி செல்க, ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது வடிவேலின் அக்கவுண்டில் 25 லட்சம் இருப்பதைபார்க்கும் பகத் பாஸில் அதை எப்படியாவது திருடன் நினைக்கிறார்.
அல்சைமரல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வடிவேலு அடிக்கடி அனைத்தையும் மறந்து விடுகிறார், தான் செல்லும் ஊரே மறந்து விடுவார் ஒரு தடவை திருவண்ணாமலை என்கிறார் அதை பிறகு பாலக்காடு என்கிற இப்படி தனக்கு வாயில் வந்த ஊர் பெயர் எல்லாம் சொல்லும் வடிவேலு அவரை நம்பி பகத் பாசில் இருவரும் பயணப்படுகிறார்கள்.
வழியில் பகத் பசில் 25 லட்சம் திருடினாரா? அல்லது வடிவேலு ஏமாற்றப்பட்டாரா? என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை இந்த படத்தில் முக்கிய நாயகர்களுக்காக வடிவேலு மட்டும் பகத் பாஸில் வடிவேலுக்கு அல்சைமர் நோய் இருக்கும் என்பதை காட்டும் இயக்குனர் ஆரம்பத்திலேயே அவர் நடிக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது அந்த அளவிற்கு திரை கதையில் தெளிவாக எழுதி இருக்கிறார். மேலும் இவர்கள் பயணப்படும் பொழுது இவர்கள் இருவரும் மட்டுமே சுமார் ஒன்றரை மணி நேரம் பயணப்பட்டு இடைவேளைக்கு முன் ஒரு மூன்று பேர் இறந்து கிடப்பதாக திடீரென காட்டுகிறார்கள். அது காட்டும்போதே தெரிந்து விட்டது அதை செய்ததெல்லாம் வடிவேலு தான் என்று இனி அவர் வேறு யாரையோ ஒருவர் கொலை செய்யத்தான் இரண்டாம் பாகத்தில் பயணப்பட போகிறார் என்பதும் தெரியும்.
அந்தப் பயணத்தில் பகத் பாஸில் திருடனாக இருந்து திருந்தி அந்த நான்காவது நபரை இவர்தான் கொலை செய்வார் என்பது ஆரம்பித்த உடனே நம்மால் யுகம் செய்ய முடிகிறது இந்த அளவுக்கு ஒரு எந்த சஸ்பென்சும் இல்லாமல் ஒரு சஸ்பென்ஸ் கதையை இயக்கி இருக்கிறார் இயக்குனர். மேலும் இந்த படத்தில் இந்த கொலைகளை ஏன் வடிவேலு செய்கிறார் என்பதற்கு ஒரு வலுவான காரணம் இருந்தும் அது நம்மை ஒரு நிமிடம் கூட கண்கலங்க வைக்கவில்லை, ஒரு நெருடலை ஏற்படுத்தவில்லை, அந்த காட்சிகள் முக்கியமாக ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகம் விஷயத்தை அவருடைய தாய் கூறும் போது ஏதோ டயலாக்கை மனப்பாடம் செய்து பள்ளியில் ஒப்படைக்கும் ஒரு மாணவியை போல் கேமராவை பார்த்து ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார். அவர் மகள் இறந்துவிட்டாள் என்ற ஒரு துளி கவலையும் அந்த முகத்தில் காட்டவில்லை இந்த மாதிரியான ஒரு விஷயம் இந்த படம் சொதப்பலுக்கு காரணமாக இருக்கிறது.
இந்த படம் முழுக்க முழுக்க வடிவேலு மட்டும் பகத் பாசிலை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கிறது இருவரும் நடிப்பில் மிகப்பெரிய அரக்கர்கள் ஆனால் அந்த அரக்கத் தன்மையை திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார்கள்.
ஒளிப்பதிவு அருமை அவர்கள் செல்லும் பயணத்தை மிகவும் அருமையாக காட்டுகிறது இது ஒன்று மட்டும் தான் இந்த படத்திற்கு மிகவும் பக்கபலமாக இருக்கிறது.
மாரீசன் அந்த கதாபாத்திரத்தின் பெயரில் இருக்கும் சூட்சுமம் திரைக்கதையில்இல்லை
Kauvery Hospital Vadapalani Introduces Full-Spectrum Hypertrophic Cardiomyopathy (HCM) Clinic Bringing Together All Modalities of Treatment in One Place
Chennai, 23 July 2025: Kauvery Hospital, Vadapalani, one of Chennai’s prominent health-care center has announced the launch of its Hypertrophic Cardiomyopathy (HCM) Clinic, a facility designed to offer patients a comprehensive approach to managing this complex cardiac condition. The clinic brings together a range of diagnostic and treatment options, many of which are often offered in isolation across different institutions, now accessible in one integrated setting.
Hypertrophic Cardiomyopathy is a condition where the heart muscle thickens abnormally, often due to genetic factors. This thickening can interfere with the heart’s ability to pump blood effectively, leading to symptoms such as chest pain, breathlessness, fatigue, fainting, and in some cases, sudden cardiac death, especially in younger individuals. Early diagnosis and a structured treatment approach can significantly improve long-term outcomes.
HCM Clinic will be only one of its kind to offer the whole gamut of services; from a genuine genetic testing, (PGT-M) to genetic counselling, and family screening diagnostics in cardiogenetics, from focused diagnostics from biomarker to advanced echo, and MRI Imaging, from routine diagnostic cath to alcohol septal ablation (ASA) to the latest SESAME tech, from continous electrical monitoring with holter to advanced electrophysiological studies with ablation and devices like pacemaker and ICDs, from septal myectomy to mitral valve repair. A rare case scenario when patient reaches a burnout phase, patient may need evaluation for heart transplantation. Kauvery Hospital, Vadapalani promises to offer all of the above under one roof within its core competence in personalized, focused, and affordable care.
Speaking about the initiative, Prof. Dr P. Manokar, senior interventional cardiologist, Clinical Lead – Heart Failure & Transplant Program at Kauvery Hospital Vadapalani, said, “HCM is not a one-size-fits-all condition. Each patient presents differently, and the management needs to be tailored accordingly. Our approach focuses on identifying the condition early, especially in families with a known history, and offering every treatment option available medical, procedural, surgical in a structured and coordinated manner.”
Dr. Anbarasu Mohanraj, Clinical Lead & Senior Consultant, Cardiovascular & Thoracic Surgery, added, “Surgical intervention such as septal myectomy or mitral valve procedures can be life-changing for patients with obstructive HCM who do not respond well to medications or other treatments. At our HCM Clinic, we assess each case through a multi-disciplinary lens, ensuring that surgical decisions are precise and aligned with the individual’s long-term prognosis.”
A Heart Team Approach which is lacking in many organizations in India, is the key focus of this HCM Clinic. The Heart Team in Kauvery, Vadapalani is a team based approach to this disease, so that the best possible therapy is offered to our patient, by the best experts in this field – all under one roof.
Dr. Aravindan Selvaraj, Co-founder and Executive Director of Kauvery Group of Hospitals added, “This clinic brings together all the modalities of HCM care that are usually scattered across departments or even different hospitals. Our aim is to make it easier for patients and families to access every form of treatment they may need, from first consultation to advanced procedures, without unnecessary delays or referrals. We believe such an approach can improve diagnosis, reduce risk, and lead to better quality of life for patients living with this condition.”
By consolidating expertise from multiple disciplines such as cardiology, electrophysiology, genetics, psychology, and cardiac surgery, the HCM Clinic at Kauvery Hospital Vadapalani sets a new direction in how this challenging condition can be addressed especially for patients who may not otherwise receive coordinated care.