Breaking
June 5, 2026

Entertainment

தலை வெட்டியான் பாளையம் பட நாயகனும், குக்ட் (Cookd) குழுவினரும் இணைந்து சுவைபட தயாரித்த முருங்கைக்காய் பிரியாணி

தலை வெட்டியான் பாளையம் எனும் அசல் நகைச்சுவை இணைய தொடரின் நாயகனான அபிஷேக் குமார் இணையதள பிரபலமான குக்ட் சமையல் கலைஞர்களுடன் இணைந்து முருங்கைக்காய் பிரியாணி எனும் சாகச சமையலை சுவைபட தயாரித்த காணொளி பிரபலமாகி இருக்கிறது.

யூட்யூபில் 2.7 மில்லியன் சந்தாதாரர்களுடன் சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் டிஜிட்டல் சமையல் தொடர்பான ஸ்டார்ட் அப் நிறுவனம் குக்ட் . இந்த யூட்யூப்பில் பிரபலங்கள் கலந்து கொள்ளும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள், சமையல் வகைகள், சமையல் தயாரிப்புகள் மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் ஏராளமான அம்சங்களை கலவையாக தயாரித்து வழங்கி வருகிறது.

தலை வெட்டியான் பாளையம் – ப்ரைம் வீடியோவில் இடம்பெற்றுள்ள அசல் தமிழ் நகைச்சுவை இணைய தொடர். பார்வையாளர்களின் மனதை கவரும் இந்த இணைய தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை கண்டு ரசித்தவர்கள் ஆரோக்கியமானது … ஆத்மார்த்தமானது… தென்றலாக தாலாட்டுகிறது…பெருங்களிப்பை வழங்குகிறது..என பாராட்டுகிறார்கள். இந்த இணையத் தொடரின் நாயகனான அபிஷேக் குமார் – இந்த தொடரில் நகர்ப்புற கிராம செயலாளர் சித்தார்த் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் பிரபலமான தமிழ் சேனலான குக்ட் – உடன் இணைந்து சமீபத்தில் மகிழ்ச்சியான சமையல் சாகசத்தில் ஈடுபட்டார் . ராஜீவ் இம்மானுவேல் மற்றும் நிர்மல் ஆகியோருடன் அபிஷேக் இணைந்து சுவையான… நாவிற்கு ருசியான.. முருங்கைக்காய் பிரியாணியை தயாரித்தார்.

ஒரு நகைச்சுவையான நிகழ்வுகளில் குக்ட் குழுவினர் தங்களின் சிக்கன் பிரியாணிக்கான முக்கிய மூலப் பொருளை காணவில்லை என்பதை உணரும்போது.. அவர்கள் ஒரு சங்கடத்தை எதிர்கொள்கிறார்கள். இந்த தருணத்தில் அதிர்ஷ்டவசமாக முருங்கக்காய் உள்ளிட்ட எல்லாவற்றிலும் உள்ளூரின் நிபுணரான அபிஷேக் எனும் கிராம செயலாளரான சித்தார்த்தை அவர்கள் சந்திக்கிறார்கள். பார்வையாளர்களை மகிழ்விக்கும் ஈடுபாட்டுடன் கூடிய உரையாடல்களுடன் அவர்கள் தங்கள் சமையல் சாகசத்தில் வெற்றி பெறுகிறார்களா..? என்பதை அந்தக் காணொளியில் காண்பது உற்சாகமாக இருக்கும்.

இதற்கான வீடியோவை இங்கே பார்க்கவும்…

எட்டு அத்தியாயங்கள் கொண்ட நகைச்சுவை இணைய தொடர் தலைவெட்டியான் பாளையம். தமிழகத்தின் தொலைதூர கிராமமான தலை வெட்டியான் பாளையத்தில் தனது புதிய மற்றும் அறிமுகம் இல்லாத சூழலில் சவால்களை எதிர்கொள்ளும் பெரிய நகரத்தை சேர்ந்த ஒருவரின் பயணத்தை விவரிக்கிறது இந்த இணைய தொடர். இயக்குநர் நாகா இயக்கத்தில் உருவான இந்த இணையத் தொடரை பாலகுமாரன் முருகேசன் எழுதி, தி வைரல் பீவர் (TVF) எனும் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார். இந்த குடும்ப பொழுதுபோக்குடன் கூடிய இணைய தொடரில் திறமையான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் அதில் அபிஷேக் குமார், சேத்தன் கடம்பி, தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சாமி மற்றும் பால்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தலை வெட்டியான் பாளையம் தற்போது தமிழில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஆங்கில சப்டைட்டில்களுடன் வெளியாகி இருக்கிறது.

‘கியாரா கியாரா’ தமிழ் மற்றும் தெலுங்கில் செப்டம்பர் 20 முதல் ZEE5 இல் ஒளிபரப்பாகிறது

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ சீரிஸ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில்

~ கரண் ஜோஹர் மற்றும் குனீத் மோங்கா தயாரிப்பில் உருவான, “கியாரா கியாரா” சீரிஸில், ராகவ் ஜூயல், கிருத்திகா கம்ரா மற்றும் தைர்யா கர்வா ஆகியோர் நடித்துள்ளனர் ~

ZEE5 தளத்தில் வெளியான கியாரா கியாரா சீரிஸ் பெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த சீரிஸின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப்பதிப்புகளை வெளியிட்டுள்ளது. கிருத்திகா கம்ரா, ராகவ் ஜூயல் மற்றும் தைரிய கர்வா ஆகியோரின் நடிப்பில், வித்தியாசமான கதைசொல்லல் மற்றும் தனித்துவமான நடிப்பிற்காகக் கொண்டாடப்படும், இந்த அற்புத சீரிஸ், தற்போது அதன் பல மொழி வெளியீட்டின் மூலம், புதிய பார்வையாளர்களை வசீகரிக்கத் தயாராக உள்ளது. குனீத் மோங்கா கபூரின் சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் கரண் ஜோஹரின் தர்மா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், திறமை மிகு இயக்குநர் உமேஷ் பிஸ்ட்டால் இயக்கத்தில், உருவான ‘கியாரா கியாரா’ ஏற்கனவே ZEE5 இல் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் ZEE5 இல் அதிகம் பார்க்கப்பட்ட அசல் தொடராகும்.

உத்தரகாண்ட் மலைகளில் ‘கியாரா கியாரா’ கதை விரிகிறது, அங்கு யுக் ஆர்யா (ராகவ் ஜூயல்) என்ற போலீஸ் அதிகாரி, கடந்த கால போலீஸ் அதிகாரியான ஷௌர்யா அன்த்வால் (தைரிய கர்வா) உடன், மிகத்துல்லியமாக 11 மணிக்கு நொடிகள் மட்டும் கடந்த காலத்துடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் வாக்கி-டாக்கியைக் கண்டுபிடிக்கிறார். 15 ஆண்டுகளாக ஊரை ஆட்டிப்படைத்த அதிதி என்ற இளம்பெண்ணின் கொலை உட்படத் தீர்க்கப்படாத குற்றங்களைத் தீர்க்க அவர்கள் ஒன்றாக வேலை செய்கிறார்கள். ஒன்றாக, அவர்கள் கடந்த காலத்தை மாற்றுகிறார்கள், இது நிகழ்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கில் கியாரா கியாரா வெளியானது குறித்து தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர் கூறுகையில்..
‘கியாரா கியாரா’ தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த சீரிஸ் எங்கள் எதிர்பார்ப்புகளைத் தாண்டி, ரசிகர்களின் அன்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. ZEE5 மூலம், எங்கள் கதை இந்தியா முழுதும், பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது, தமிழ் மற்றும் தெலுங்கு வெளியீடாக, மொழித் தடைகளைத் தகர்த்து, ‘கியாரா கியாரா’ இன்னும் அதிகமான இதயங்களைத் தொடவுள்ளதில், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ரசிகர்களிடமிருந்து கிடைத்து வரும் ஆதரவுக்கு நன்றி. இந்த பல மொழி டப்களை ரசிகர்கள் கொண்டாடுவதைக் காண ஆவலோடு இருக்கிறோம்.

ராகவ் ஜூயல் தனது கூறுகையில்..
“தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்கள் இப்போது தங்கள் பிராந்திய மொழியில் ‘கியாரா கியாரா’வின் அற்புத அனுபவத்தை அதன் மாயத்தன்மை மற்றும் சிலிர்ப்பைப் பார்த்து, அனுபவிக்க முடியும் என்பதை அறிந்து, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்ச்சி மூளையை அதிரவைக்கும் அதிரடி திருப்பங்களால் நிரம்பியுள்ளது, அது உங்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும். இந்த சீரிஸில் வாக்கி-டாக்கி கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கிறது, கதைக்கு ஒரு புதிய பலத்தைச் சேர்க்கிறது. ஒவ்வொரு எபிசோடிலும், எதிர்பாரா ஆச்சரியங்கள் உங்களை வியப்பின் உச்சிக்குக் கூட்டிச்செல்லும். தவறவிடக்கூடாத ஒரு அற்புதமான சீரிஸ் இப்போது ZEE5 இல் உங்கள் மொழியில்.

செப்டம்பர் 20 முதல் ZEE5 இல் ‘கியாரா கியாரா’வை தமிழ் மற்றும் தெலுங்கில் பார்வையாளர்கள் ஸ்ட்ரீம் செய்யலாம்!

அக்டோபர் 6 முதல், “பிக்பாஸ் சீசன் 8”, உங்கள் விஜய் தொலைக்காட்சியில் !!

நடிகர் விஜய் சேதுபதி களமிறங்கும், “பிக்பாஸ் சீசன் 8” அக்டோபர் 6 முதல் ஒளிபரப்பாகவுள்ளது !!

“ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு..” பிக்பாஸ் சீசன் 8, அக்டோபர் 6 முதல் !!

புத்தம் புதிய பல ஆச்சரியங்களுடன், உங்கள் “பிக்பாஸ் சீசன் 8”, அக்டோபர் 6 முதல் !!

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது. சமீபத்தில் மிகப்புதுமையான முறையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில், மக்கள் முன்னிலையில் மக்கள் கைகளால் வெளியிடப்பட்ட இந்த பிக்பாஸ் சீசன் 8ன் அசத்தலான ப்ரோமோ, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மிகப்பெரும் புகழைப்பெற்று, மக்களின் மனங்களில் இடம்பிடித்த நிகழ்ச்சி, பிக்பாஸ். கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன், கோலாகலமாக அறிவிக்கப்பட்டது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கும், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் அசத்தலான ப்ரோமோ, வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது புதிய சீசன் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு துவங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த புதிய சீசனின் ப்ரோமோ வெளியீட்டை, விஜய் டிவி மிகப்புதுமையான முறையில் நடத்தியது. தமிழகம் முழுக்க, மக்கள் குழுமியிருக்கும், முக்கிய நகரங்களின் முக்கிய இடங்களில், பெரிய திரையில் மக்கள் முன்னிலையில் அவர்களையே வைத்து சர்ப்ரைஸாக வெளியிட்டது.

இந்த ப்ரோமோவில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் பற்றி, மக்கள் அறிவுரை சொல்ல, அதைக்கேட்டுக்கொண்டு, அசத்தலாகக் களமிறங்கும் விஜய் சேதுபதி, உங்க விருப்பமான show.. இன்னும் நெருக்கமா.., இந்த வாட்டி “ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு..” எனும் டேக் லைனை சொல்லி முடிக்கும் டிரெய்லர், மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த முறை நடிகர் விஜய் சேதுபதி களமிறங்குவது, மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பல புது ஆச்சரியங்களுடன், புதுப்பொலிவுடன் “பிக்பாஸ் சீசன் 8” வரும் அக்டோபர் 6 ஆம்தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்ட விழாவுடன் கோலாகலமாகத் துவங்கிறது.

பிக்பாஸ் சீசன் 8 உங்கள் விஜய் தொலைக்காட்சியில், அக்டோபர் 6 முதல் கண்டுகளியுங்கள்.

ஓடிடி தளங்களில் வெற்றி நடை போடும் “வாஸ்கோடகாமா”

ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல்,அர்த்தனா பின்னு,கே எஸ் ரவிக்குமார், ஆனந்த்ராஜ், வம்சி கிருஷ்ணா, முனிஸ்கான் மற்றும் பலர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வந்து வெற்றி நடை போட்ட வாஸ்கோடகாமா திரைப்படம் தற்பொழுது பிரைம் வீடியோ மற்றும் ஆகா ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது

இந்த கலியுகத்தில் இருக்கும் மனிதர்கள் அனைவரும் கெட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மத்தியில் ஒருவன் நல்லவனாக எப்படி வாழ முடியும் என்னும் ஒரு வித்தியாசமான கதை களத்தை கையில் எடுத்த இயக்குனர் அதைத் திறம்பட திரைக்கதை அமைத்து இயக்கி அதில் வெற்றியும் கண்டார் இப்பொழுது இந்த படம் ஓடிடி தளங்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது

  ‘டிமான்ட்டி காலனி 2’   ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது !

இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘டிமான்ட்டி காலனி 2’  படத்தின்  உலகளாவிய டிஜிட்டல் பிரீமியரை ZEE5 அறிவித்துள்ளது !!

படு பயங்கர ஹாரர் அனுபவத்திற்கு  உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள் : ‘ டிமான்ட்டி காலனி 2’ ZEE5 இல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது !

லார்ட்  டிமான்ட்டி மீண்டும் வருகிறார் ! ZEE5 இல் இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படத்தைக்  கண்டு மகிழுங்கள் !! 

~ விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தமிழ் திகில் ஹாரர் கிளாசிக்கின்  இரண்டாம் பாகமான  ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படம்,  வரும் செப்டம்பர் 27 அன்று வெற்றிகரமாக ZEE5 இல் பிரத்தியேகமாகத் தொடர்ந்து ஸ்ட்ரீமாகவுள்ளது ~

~ பி.டி.ஜி யுனிவர்சல், ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ், பாபி பாலச்சந்திரன் தயாரிப்பில், ஆர். அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி 2’.

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான, ZEE5 தென்னிந்தியாவில் உள்ள பார்வையாளர்களைக் கவரும் வகையில், தொடர்ச்சியாகப் பல அற்புதமான படைப்புகளை வழங்கி வருகிறது.  சமீபத்திய வெளியீடுகளான ‘ரகுதாத்தா’, ‘நுனக்குழி’ உள்ளிட்ட அசத்தலான படைப்புகளை அடுத்து,  இந்த ஆண்டின் அதி பயங்கரமான ஹாரர் பிளாக்பஸ்டர் “டிமான்ட்டி காலனி 2” படத்தினை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.  வரும் செப்டம்பர் 27 முதல் ZEE5 இல்  “டிமான்ட்டி காலனி 2” படத்தைக் கண்டுகளிக்கலாம். சஸ்பென்ஸ் மாஸ்டர் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில்  இந்தப் படம், ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகி,  ரசிகர்களை மிரட்டிய நிலையில், தற்போது டிஜிட்டலில்  ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.  அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோரின் நடிப்பில், மிக மாறுபட்ட திரைக்கதையில்,  பார்வையாளர்களை இருக்கைகளின் நுனியில் நிறுத்திய, ‘டிமான்ட்டி காலனி 2’, ஒரு பயங்கரமான தலைசிறந்த ஹாரர் படைப்பாகக் கொண்டாடப்பட்டது.  இப்படம் திரையரங்குகளில் 55 கோடிக்கு மேல் வசூலித்து,  தமிழ் சினிமா வரலாற்றில் பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களின் வரிசையில் இடம்பெற்றது. செப்டம்பர் 27 முதல் ZEE5 இல் மட்டும், லார்ட் டிமான்டேவின் வருகையைக்  கண்டுகளிக்கத் தயாராகுங்கள்!

ZEE5 இன் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில்,
‘டிமான்ட்டி காலனி 2’ படத்தினை எங்கள் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், குறிப்பாக ZEE5 இல் தமிழ் மற்றும் தென்னிந்திய உள்ளடக்கத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த திரைப்படம் முந்தைய படத்தின் பாரம்பரியத்தைத் தொடர்வதோடு, முதல் படத்தினை விடவும் ஒரு மிரட்டலான ஹாரர் அனுபவத்தை வழங்குகிறது. இப்படத்தை வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

டிமான்ட்டி காலனி 2 படத்தின் இயக்குநர் ஆர். அஜய் ஞானமுத்து கூறுகையில்..,
திரையரங்குகளில் பெற்ற மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, “டிமான்ட்டி காலனி 2” திரைப்படம், இப்போது ZEE5 இல் பெரிய அளவிலான பார்வையாளர்களே சென்றடைவது மகிழ்ச்சியளிக்கிறது. ZEE5 மூலம் உலகளாவிய பார்வையாளர்களுக்கு இந்த அனுபவத்தை விரிவுபடுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், பல்வேறு பகுதிகளில் உள்ள ரசிகர்களைச் சென்றடைய ZEE5 நம்பமுடியாத தளத்தை வழங்குகிறது.  இந்த பரந்த ரீச் எங்கள் படத்தை, இன்னும் கூடுதலான திகில் ஆர்வலர்களுக்குக் கொண்டு சேர்க்கும், மேலும் அனைவரும் தங்கள் வீடுகளில் அமர்ந்து, இந்த அட்டகாசமான அனுபவத்தைப் பெறலாம். ரசிகர்களின் வரவேற்பைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

டிமான்ட்டி காலனி 2 படத்தின் முன்னணி நடிகரான அருள்நிதி கூறுகையில்..,
“டிமான்ட்டி காலனி 2 படத்தில், இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, முதல் படத்திலிருந்த ஸ்ரீனியின் கதாபாத்திரம் இந்த பாகத்திலும் தொடர்கிறது.  மேலும்  ஸ்டைலிஷான மற்றும் அலட்சியமாக இருக்கும் ரகு எனும் இன்னொரு  பாத்திரத்தில் நடித்தது, மகிழ்ச்சி. இந்த இரண்டு வித்தியாசமான பாத்திரங்களில் நடித்தது, மிக சவாலாக இருந்தது.   திரையரங்குகளில் எங்களுக்குக் கிடைத்த பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ், மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. ZEE5 மூலம்  இந்தக் கதாபாத்திரங்களின் ஆழத்தையும் மாறுபாட்டையும் பரந்த பார்வையாளர்கள் அனுபவிப்பதைக் காண ஆவலோடு காத்திருக்கிறேன். 

சின்ன கண்ணனைக் கொஞ்சும் அன்னமையாவின் பாடல்:

குழந்தைக் கண்ணனை ஒன்பான் மணிகளோடு ஒப்பிட்டுக் கொஞ்சும் “முத்தம் தூறும்” என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல்
அன்னமையாவின் “முத்துகாரே யசோதா” என்ற தெலுங்குப் பாடலின் தமிழாக்கமாகும்.
புகழ்பெற்ற இந்தத் தெலுங்குப் பாடலைப் பாடலாசிரியர் மதன் கார்க்கி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதனைப் பாடகி சுவேதா மோஹன் பாடியுள்ளார். குழந்தைக் கண்ணனின் சிறுவயது துணிவுமிக்க செயல்களை அழகாக எடுத்துரைத்து, வரிக்கு வரி முத்தே மணியேயென்று கண்ணனை விளிக்கும் இப்பாடல் சுவைமிக்கது. வரிகளின் பொருள் மாறாமல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள “முத்தம் தூறும்” பாடலுக்குச் சாம் லாரன்ஸ் இசைக்கோர்ப்பு செய்துள்ளார். இப்பாடலின் முன்னோட்டம் கடந்த வாரம் வெளியான நிலையில், பா மியூசிக் யூடியூப் தளத்தில் இப்போது இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து இசைச் சீரோடைகளிலும் வெளியிடப்படும்.

பாடல் இணைப்பு 🔗 https://youtu.be/bNQUpa_rYMg

ZEE5 இல் “மனோரதங்கள்”

சமீபத்தில் ZEE5 இல் வெளியான ‘மனோரதங்கள்’ எனும் ஆந்தாலஜி திரைப்படம், உலகமெங்கும் திரை ரசிகர்களிடையே பெரும் அலையைக் கிளப்பியுள்ளது. இது மற்ற படங்களைப் போல சாதாரண படைப்பல்ல, எப்போதாவது நிகழும் அற்புதமாக நிகழ்ந்துள்ள படைப்பு இது!

இது புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.க்கு ஒரு அற்புதமான அஞ்சலி செலுத்தும் ஒரு தலைசிறந்த சினிமா படைப்பாகும். வாசுதேவன் நாயரின் ரசிகர்கள் விரும்பக்கூடிய அனைத்தும் இந்த படைப்பில் உள்ளது. நட்சத்திர நடிகர்கள் கூட்டம், பிரமிக்க வைக்கும் இயற்கைக்காட்சிகள் மற்றும் மிக முக்கியமாக, அற்புதமான கதைகள் மூலம் இந்த படைப்பு உங்களை மேலும் ஏங்க வைக்கும். நீங்கள் ஏன் உடனடியாக, இந்த திரைப்படத்தை காண வேண்டுமென்பதற்கான, 5 உறுதியான காரணங்களைப் பார்ப்போம்.

ZEE5 இல் இப்போதே ‘மனோரதங்கள்’ பாருங்கள் !

  1. ‘மனோரதங்கள்’ திரைப்படம் இலக்கிய உலகின் பிதாமகனான, எம்.டி என்று அன்புடன் அழைக்கப்படும், வாசுதேவன் நாயரின் 90 ஆண்டுக்கால பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. மாபெருமெ எழுத்தாளருக்கான இதயப்பூர்வமான அஞ்சலியாக இந்த படைப்பு உருவாகியுள்ளது. இந்த ஆந்தாலஜி திரைப்படம், வாசுதேவன் நாயரின் சின்னச் சின்னப் படைப்புகளின் சாரத்தை அழகாகப் படம்பிடித்து, அவரது இலக்கிய மரபு வரையறுத்துள்ள மனித உணர்வுகள் மற்றும் உறவுகளின் ஆழங்களை பற்றி, பார்வையாளர்களுக்கு ஒரு பார்வையை வழங்குகிறது.
  2. சினிமா மேஸ்ட்ரோக்கள் மற்றும் முன்னோடிகளான பிரியதர்ஷன், ரஞ்சித், ஷ்யாமபிரசாத், மகேஷ் நாராயணன், ஜெயராஜன் நாயர், அஸ்வதி நாயர் மற்றும் ரதீஷ் அம்பாட் போன்ற ஆளுமை மிக்க இயக்குநர்களின் இயக்கத்தில் இந்த அற்புதமான படைப்பு உருவாகியுள்ளது. ஒவ்வொரு இயக்குநரும் தங்களின் தனித்துவமான காட்சித் திறனையும் கதை பாணியையும் இந்த படைப்பில் கொண்டு வந்திருப்பதால், இந்த கூட்டு முயற்சி, பலதரப்பட்ட பார்வை அனுபவத்தை உறுதி செய்துள்ளது. இந்த ஆந்தாலஜி தொடர் மலையாளப் பார்வையாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்திழுத்துள்ளது. மேலும் சமூக ஊடகங்களில் பெரும் உரையாடல்களையும் தூண்டியுள்ளது.
  3. பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகள் மூதாதையர் வீடுகள், பசுமையான வயல்வெளிகள், வளைந்து நெளிந்து செல்லும் கல்பாதைகள் வழியாக கேமரா லாவகமாக பயணிக்கும்போது, ‘மனோரதங்கள்’ படத்தின் காட்சிக் கோர்வைகள் பார்வையாளர்களை எம்.டி.யின் அன்பான அரவணைப்பில், அவரின் உலகத்திற்குள் மூழ்கடிக்கிறது. இந்த ஆந்தாலஜியின் ஒளிப்பதிவு மற்றும் உருவாக்கம், ஒவ்வொரு ஃப்ரேமிலும் நீங்கள் WOW என்று சொல்லத் தூண்டும்!

4.மலையாள சினிமாவின் மிகச்சிறந்த திறமைகள் இந்த ஆந்தாலஜி திரைப்படத்திற்காக ஒருங்கிணைந்துள்ளனர், பழம்பெரும் ஆளுமைகளான மம்மூட்டி, மோகன்லால், பன்முக நடிகரான பஹத் பாசில் மற்றும் அழகி பார்வதி திருவோத்து உள்ளிட்ட மலையாள சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களின் பங்கேற்பில், இந்த அற்புதமான கதைகள் உயிர்பெற்றுள்ளது. இந்த நட்சத்திரங்கள் நாயரின் கதாபாத்திரங்களின் சிக்கலான தன்மைகளை சிரமமின்றி வெளிப்படுத்தி, பார்வையாளர்கள் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளனர்.

5 மனித உறவுகளின் நுணுக்கங்களை பேசும் ஒரு ஆழ்ந்த உணர்ச்சிமிகு பயணம் தான் ‘மனோரதங்கள்’. பார்வையாளர்களை அவர்களின் வாழ்வோடு தொடர்புபடுத்திக் கொள்ளும் கதைகளுக்குள் இழுத்து செல்லும் இந்த ஆந்தாலஜி திரைப்படம், உலகமெங்கும் ஒரே மாதிரி உணர்வுகளான காதல், இழப்பு மற்றும் சுய-கண்டுபிடிப்பு எனும் கருப்பொருள்களில் ஆழமான கதைகளை கண்முன் விருந்தாக படைக்கிறது. மனித இயல்பின் சிக்கலான இருமையை ஆராய்வதற்கான ஒரு சினிமா டூர் இது.

“மனோரதங்கள்” , இப்போது ZEE5 இல் கிடைக்கிறது, இலக்கிய மேதை M.T-வாசுதேவன் நாயரின் விவேகமுள்ள ஒவ்வொரு ஆர்வலர்களும் மற்றும் திரை ரசிகர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.!

ஸ்ரீரங்கத்தின் ஸ்தல புராண நாட்டிய நாடக நிகழ்வு

ஸ்ரீரங்கத்தின் ஸ்தல புராண நாட்டிய நாடக நிகழ்வு
சென்னை தி நகர் கிருஷ்ணகான சபாவில்
சுஷோபனம் அகாடமி ஆஃப் கிளாசிக்கல் ஆர்ட்ஸ் (SACA) மூலமாக
பூலோக வைகுண்டம்- அரங்கனின் ஸ்ரீரங்கம்
என்ற தலைப்பில் ஸ்ரீரங்க ஸ்தல புராணத்தை கருப்பொருளாகக் கொண்டு நாட்டிய நாடகம் நடைபெற்றது.

திரைப்பட நடிகை, நடனக் கலைஞர் டாக்டர் சோபனாவின் மாணவியான சீதாலட்சுமி விஜய் அவர்கள் தனது மாணவிகளுடன் இந்த நாட்டிய நாடகத்தை உருவாக்கி மேடை ஏற்றினார்.

திரைப்பட நடிகர்
ஒய்.ஜி.மகேந்திரா தலைமை ஏற்க,
நடனக் கலைஞர்
உமா சத்தியநாராயணா சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த நிகழ்வு
ஆகஸ்ட் 31
(நேற்று)
தி.நகர்
கிருஷ்ணகான சபாவில் 10வது முறையாக அரங்கேறியது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரங்கம் நிறைந்த மக்களுடன் விழா நடைபெற்றது.

நமது அடையாளத்தை நமது கலாச்சாரத்தை, அனைவரையும் ஈர்க்கும் விதமாக, அற்புதமான நாடகமாக, அனைத்து மக்களுக்கும் பிடிக்கும் விதமாக உருவாக்கி இருக்கிறார்கள் என்று
ஓய்.ஜி.மகேந்திரா பாராட்டினார்.

முதல்முறையாக கோயம்புத்தூரில், Return Of The Dragon ஹிப் ஹாப் தமிழா ஆதியின் Music Concert !!

Torque Entertainment மற்றும் Raj melodies வழங்கும், “Return Of The Dragon” ஹிப் ஹாப் தமிழா ஆதியின் Music Concert !!

கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி, இளைஞர்களின் யூத் Icon ஆக கொண்டாடப்படும், ஹிப் ஹாப் தமிழா ஆதியின் “Return Of The Dragon” இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. Torque Entertainment மற்றும் Raj melodies நிறுவனங்கள் இணைந்து, மிகப்பிரம்மாண்டாமான முறையில், கோயம்புத்தூரின் மிகபெரிய கொடிசியா மைதானத்தில், இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

தமிழக Independent Music துறையில் ராப் பாடகராக அறிமுகமாகி, தமிழ் திரைத்துறையில் இசையமைப்பாளராகவும், நாயகனாகவும் உயர்ந்து, இன்றைய இளைஞர்களின் யூத் Icon ஆக மாறியுள்ளவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசைக்கச்சேரிக்கு உலகம் முழுதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. “Return Of The Dragon” எனும் பெயரில் லண்டன், மலேசியா என உலக நாடுகளில் வெற்றிகரமாக இசைக்கச்சேரி முடிந்த நிலையில் தற்போது தன் சொந்த ஊரான கோயம்புத்தூரில் Music Concert யை நடத்தவுள்ளார்.

Torque Entertainment மற்றும் Raj melodies நிறுவனங்கள் இணைந்து இந்த Music Concert யை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளன.
இந்த Music Concert ல் கோயம்புத்தூர் ரசிகர்களுக்கென பிரத்தியேகமாக பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றது.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ரசிகர்களுக்கு, இனிப்பான செய்தியாக வந்துள்ள இந்த Music Concert, இப்போதே ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை விதைத்துள்ளது.

இந்த Music Concert ல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளும் வகையில், முழுப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதற்கு முன்பாக நடைபெற்ற Concert ல் ஏற்பட்ட சிக்கல்கள், எதுவும் இவ்விழாவில் ஏற்படாதவாறு, அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்களை, ஆன்லைனில் Paytm ஆப் மூலம் எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஐந்தாவது மலையாள ஒரிஜினல் சீரிஸ் “1000 பேபிஸ்” ஃபர்ஸ்ட் லுக்……

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “1000 பேபிஸ்” சீரிஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஐந்தாவது மலையாள ஒரிஜினல் சீரிஸாகும். 1000 பேபிஸ் சீரிஸ் அடையாளத்தின் மீதான சிக்கல்கள் மற்றும் விதியின் விளையாட்டை, பல எதிர்பாரா திருப்பங்களுடன் சொல்கிறது. தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

“1000 பேபிஸ்” சீரிஸில் நீனா குப்தா மற்றும் ரகுமான் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் நஜீம் கோயா இயக்கியுள்ளார், நஜீம் கோயா , அரூஸ் இர்பான் இணைந்து வசனம் எழுதியுள்ளார்கள். ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் சார்பில், ஷாஜி நடேசன் மற்றும் ஆர்யா ஆகியோர் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளனர்.

நீனா குப்தா மற்றும் ரகுமானுடன் இணைந்து, சஞ்சு சிவராம், ஜாய் மேத்யூ, ராதிகா
ராதாகிருஷ்ணன், அஷ்வின் குமார், இர்ஷாத் அலி, ஷாஜு ஸ்ரீதர், காலேஷ் ராமானந்த், ஸ்ரீகாந்த்
முரளி மற்றும் ஜேம்ஸ் ஆலியா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஃபைஸ் சித்திக்கின் அற்புதமான ஒளிப்பதிவு மற்றும் சங்கர் ஷர்மாவின் வசீகரிக்கும் இசையுடன்,
தனுஷ் நாயனாரின் சிறந்த ஒலி வடிவமைப்பு மற்றும் ஃபசல் A பேக்கரின் ஒலி கலவையில், “1000 பேபிஸ்”
சஸ்பென்ஸ், மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன், புதுமையான அனுபவம் தரும் சீரிஸாக உருவாகியுள்ளது. விரைவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் “1000 பேபிஸ்” சீரிஸை கண்டுகளியுங்கள் !