Breaking
June 7, 2026

Cinema

சூரி நடிக்கும் ‘கருடன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

நடிகர்கள் சூரி – சசிகுமார்- உன்னி முகுந்தன்- ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘கருடன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் அம்பேத்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கருடன்’ திரைப்படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K.குமார் தயாரித்திருக்கிறார்.

மே 31 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் சூரி, சசிகுமார், சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் K.குமார், இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மைம் கோபி, ரோஷினி ஹரி ப்ரியன், பிரிகிடா, ரேவதி ஷர்மா, ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ. வில்சன், கலை இயக்குநர் துரைராஜ், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ், சண்டை பயிற்சி இயக்குநர் மகேஷ் மேத்யூ, திரைப்பட விநியோகிஸ்தர் பைவ் ஸ்டார் K. செந்தில், பாடலாசிரியர்கள் சினேகன் மற்றும் சூப்பர் சுப்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

பாடலாசிரியர் சினேகன் பேசுகையில்,

‘இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் புதிதாக இருந்தது. இந்தத் திரைப்படத்தில் மூன்று பாடல்களை எழுதி இருக்கிறேன். பாடல்களை எழுதினாலும் இயக்குநரை நேரில் சந்திக்கவில்லை. தொலைபேசி மூலமாகவே உரையாடி இருக்கிறேன்.

தற்போது திரையுலகில் பிரபலமாக இருக்கும் அனைத்து முன்னணி நட்சத்திர நடிகர்களுக்கும் நான் பாடல்கள் எழுதி இருக்கிறேன். இருப்பினும் நம்மில் ஒருவன் என்ற உணர்வை ஏற்படுத்தும் சில கதாநாயகர்களில் மண்ணின் மைந்தனான சூரியும் ஒருவர்.

அவருக்குள் இருந்த இதுபோன்ற ஆளுமை செலுத்தும் நடிப்புத் திறனை கண்டறிந்ததற்காகவும், தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு என்றிருந்த வரைமுறையை உடைத்து எறிந்து, எங்கள் ஊர் திருவிழாவில், கூட்டத்தில் ஒருவராக.. எங்கள் ஊர் ஜனத்திரள்களில் ஒருவராக.. உலா வரும் ஒருவனை.. அவனுக்குள் இருக்கும் நாயக பிம்பத்தை ஹீரோவாக திரையில் செதுக்கியதற்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிமாறன் கொடுத்த வாய்ப்பை உணர்ந்து சூரியும் கடினமாக உழைத்திருக்கிறார். சூரியும் ஒவ்வொரு திரைப்படத்திலும் அவருக்குள் ஏற்பட்ட மாற்றத்தை காணும் போது வியக்க வைக்கிறார். அந்த வகையில் இந்தப் படத்தில் சூரிக்கு வாய்ப்பளித்த இயக்குநர் தயாரிப்பாளர் ஆகியோருக்கு சூரியின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

இன்று உலக சினிமா என்று வியந்து பாராட்டும் எந்த திரைப்படமும் பிரம்மாண்டத்தை பற்றி பேசுவதில்லை. நடிகர்களை பற்றி பேசுவதில்லை. உணர்வுகளைப் பற்றி பேசுகிறது. உண்மையை பேசுகிறது. வாழ்வியலை பேசுகிறது. எனவே உலக சினிமா என்பது நமக்கு தூரமாக இருக்கும் என்பதெல்லாம் இல்லை. நமக்கு வெகு அருகிலேயே இருக்கிறது. நம்மை சுற்றி நடப்பவைகளை.. நமக்கே தெரியாத விசயங்களை.. உணர்வுகளாக பிரதிபலிப்பது தான் உலக சினிமா. இதனை பூர்த்தி செய்யும் வகையில் சமீப காலமாக படைப்பாளிகள் தமிழ் சினிமாவில் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒப்பனைகளை கடந்து கற்பனைகளை கடந்து வாழ்வியலோடு கலந்து கைபிடித்து நடக்கத் தொடங்கி விட்டது. எனவே கருடன் போன்ற படங்களும், கருடனை படைத்த படைப்பாளிகளும் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெறும். ” என்றார்.

நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில்,

” தம்பி சூரி நிறைய நல்ல மனிதர்களை சம்பாதித்திருக்கிறார். ஒவ்வொரு திரைப்படத்திலும் தலைமை கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பவர்களுக்கு அப்படத்தின் வெளியீடு என்பது பூக்குழிக்குள் இறங்குவது போன்றது. வெளியிலிருந்து பார்க்கும் போது பூக்குழி என்பது பூவின் புதையல் போன்று தோன்றும். ஆனால் அருகில் சென்று பார்த்தால் தான் அது தீமிதி என தெரியவரும். அவருடைய முதல் படத்தில், அவரை அருமையான பூசாரி ஒருவர் அவருக்கு கை பிடித்து அழைத்து வந்தார். இந்த திரைப்படத்தில் அவருடன் பலமுறை தீமிதித்தவர்கள் உடன் இருந்தனர். தீ மிதிக்கும் போது அவருக்கு அருகில் இரண்டு பக்கங்களிலும் வேட்டியை மடித்துக் கொண்டு நின்றனர். தீ மிதிக்கும் போது ஏதேனும் தடுமாற்றம் ஏற்பட்டால் காப்பாற்றுவதற்காக தான் இந்த ஏற்பாடு. ஆனால் சூரி எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் நிதானமாக தீ மிதியில் இறங்கி நடந்து வந்தார்.

இந்தப் படத்தில் அவருடைய உழைப்பு அசாதாரணமானது. ஒவ்வொரு நொடியும் படத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார். இதனாலேயே அவர் திரைத்துறையில் மிக உயரத்திற்கு செல்வார். அதற்காக மனமார வாழ்த்துகிறேன்.

நீண்ட நாள் கழித்து தம்பி சசியுடன் மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன்.

இந்த படத்திற்கு பின்னணி பேசும்போது, இயக்குநர் வெற்றிமாறன் என்னை சந்தித்து, ‘இந்தப் படத்திற்கு அனைத்தும் நல்லபடியாக அமைந்து விட்டது.’ என்றார். அவரிடமிருந்து இதுபோன்ற வாழ்த்து கிடைத்தவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் துரை செந்தில்குமார்- கலைஞர்களை தோழமையுடனும், புன்னகையுடனும் அணுகி பணியாற்ற வைத்த அனுபவம் மறக்க இயலாது. இந்த திரைப்படத்தில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு பெருமிதமாக இருக்கிறது. ” என்றார்.

நடிகை ரேவதி சர்மா பேசுகையில்,

” இது எனக்கு இரண்டாவது திரைப்படம். வெற்றிமாறன்- துரை. செந்தில்குமார் -சசிகுமார் -சமுத்திரக்கனி -சூரி போன்ற பிரபலங்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க இயலாததாக இருந்தது.

நான் நடித்த முதல் திரைப்படமான ‘1947 ஆகஸ்ட் 14’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். என்னுடைய இரண்டாவது படமான ‘கருடன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார். இதனை நான் பாக்கியமாக கருதுகிறேன்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி- அதிதி பாலனுடன் இணைந்து பணியாற்றும்போது அவரை சந்தித்து பேசி இருக்கிறேன். அவரும் இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மே 31 ஆம் தேதியன்று ‘கருடன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது .அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகர் சசிகுமார் பேசுகையில், ”

இந்த படத்தில் நான் தான் கடைசியாக இணைந்தேன். படத்தில் ஏனைய நட்சத்திரங்கள் எல்லாம் தேர்வு செய்த பிறகு கடைசியாக என்னை அழைத்தார்கள். இயக்குநர் துரை. செந்தில்குமார் கதையை விவரித்தார். என் நண்பர் இரா. சரவணன், ‘இப்படத்தின் கதையைக் கேட்டிருக்கிறேன். நன்றாக இருக்கிறது. நீங்கள் நடிக்கலாம்’ என்றார். இயக்குநர் கதையை சொல்லி முடித்தவுடன் நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்று கூட கேட்கவில்லை. அதில் நடிக்க உங்களுக்கு சம்மதமா? என்று கூட கேட்கவில்லை. தயாரிப்பாளர் ஒரு தட்டில் பழங்கள் இனிப்புடன் வருகை தந்து அட்வான்ஸ் கொடுத்தார். அந்தத் தருணத்தில் படத்தைப் பற்றி சில சந்தேகங்கள் இருக்கிறது. அதை அதைப்பற்றி இயக்குநரிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே இந்த திரைப்படத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள் என்று சொல்லி, படக் குழுவினருடன் புகைப்படத்தை எடுத்து அதனை வெளியிட்டு விட்டனர். தயாரிப்பாளர் குமார் இந்த படத்தில் நான் நடிப்பேனோ..! நடிக்க மாட்டேனா..! என்ற சந்தேகத்தோடு இருந்திருக்கிறார். கதை கேட்ட பிறகு மனம் மாறி விடுவேன் என்று பதற்றம் அடைந்தார். உண்மை என்னவென்றால் இந்தப் படத்தின் கதை நன்றாக இருக்கிறதோ.. இல்லையோ.. என் நண்பன் சூரிக்காக இந்த படத்தில் நடிக்க வேண்டும் என முன்பே தீர்மானித்து விட்டேன்.

இயக்குநர் வெற்றிமாறன் சூரியை கதாநாயகனாக உயர்த்திருக்கிறார். சூரியின் வளர்ச்சிக்காக சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். இவர்களெல்லாம் சூரியின் நல்ல மனதிற்காகத்தான் வந்திருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோருக்கும் சூரிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இந்த எண்ணம் எனக்கும் இருந்தது.

சுந்தரபாண்டியன் படத்திற்கு பிறகு அவரோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அந்தத் திரைப்படத்தில் அவர் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருப்பார்.

இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. நான் படத்தை பார்த்துவிட்டேன். சூரி இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

இயக்குநர் துரை செந்தில்குமார் பேசுகையில்,

” இயக்குநர் பாலு மகேந்திராவிடம் பணியாற்றும்போது இயக்குநர் வெற்றிமாறன் எனக்கு சீனியர். நான் கடைசி உதவியாளர். அன்று முதல் இன்று வரை என்னை ஒரு சகோதரராகவே பாவித்து , அனைத்து வித ஆதரவுகளையும் வழங்கி, என் நிறை குறைகளை சுட்டிக்காட்டி என்னுடன் தொடர்ந்து பயணிப்பவர். அவருக்கு முதலில் நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரைத் தொடர்ந்து கலை இயக்குநர் துரைராஜ் அவர் மூலமாகத்தான் இந்தப் படத்தினை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்திற்காக 73 நாட்கள் படப்பிடிப்பை நடத்தினோம். அனைத்து நாட்களிலும் என்னுடன் இருந்து படப்பிடிப்புக்கு உதவிய துரைராஜுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர் குமார்- தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றி அனுபவம் பெற்ற பிறகு படத்திற்கு தயாரிப்பாளராகியிருக்கிறார். அவரிடம் கதையை சொல்லி முடித்த பிறகு, 55 நாட்கள் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நிறைவு செய்துவிடலாம் என சொன்னேன். அதற்காக ஒரு பட்ஜெட்டை அவரிடம் சொன்னேன். படத்தில் நடிக்க வேண்டிய நடிகர்கள் குறித்து ஒரு பட்டியலை அவர் என்னிடம் சொன்னார். அதைக் கேட்கும் போது 55 நாட்கள் பட்ஜெட் என்ற விசயத்தை நினைவு படுத்தினேன். அப்போது அவர் படத்தை பிரமாண்டமாக உருவாக்குவோம் என்றார். படத்திற்கு இசை யார்? என்று கேட்டபோது, யுவன் சங்கர் ராஜா என்று சொன்னார். நான் மீண்டும் அவரிடம் 55 நாட்கள் + பட்ஜெட் என்று நினைவுபடுத்தினேன். மீண்டும் அவர் படைப்பை பிரம்மாண்டமாக உருவாக்குவோம் என்றார். படத்தை விளம்பரப் படுத்துவதற்காக தனியாக படப்பிடிப்பு நடத்துவோம் என்றார். அப்போது, ‘சார் ! பெரிய நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் படத்திற்கு தானே அதை செய்வார்கள்’ என்று சொன்னபோது, நம்முடைய படமும் பிரம்மாண்டமான படம் தான் என்றார். இப்படி படம் முழுவதும் நான் சொன்ன பட்ஜெட்டை விட அவர் ஒரு பட்ஜெட்டை சொன்னார். குறிப்பாக இடைவேளை காட்சியில் நடிப்பதற்காக ஆயிரம் நபர் தேவை. குறைந்தபட்சம் எழுநூறு நபராவது வேண்டும் என்றேன். அவர் ஆயிரம் நபர்களை அழைத்து வந்து நடிக்க வைத்தார். அதேபோல் படத்தில் இரண்டாம் பகுதியில் ஒரு ஐட்டம் சாங் வைக்கலாம் என்று திட்டமிட்டு, அதற்காக ஒரு பாடலையும் உருவாக்கினோம். ஆனால் அதனை படமாக்கவில்லை. ஒருமுறை படப்பிடிப்பு தளத்திற்கு தயாரிப்பு நிர்வாகி வந்த போது அவரிடம் இது குறித்து விவரித்தேன். அப்போது அவர் அந்த ஐட்டம் சாங் பாடலுக்கு மூன்று நடிகைகளை முதன்மையாக நடனமாட வைத்து பிரம்மாண்டமாக படமாக்கலாம் என தயாரிப்பாளர் சொல்கிறார் என்ற விவரத்தை என்னிடம் சொன்னார். இப்படி படம் நெடுகிலும் தயாரிப்பாளர் படத்தின் பட்ஜெட்டை உயர்த்திக் கொண்டே சென்றார். அவருடைய சூட்சமம் எனக்கு பிடித்திருந்தது. படத்தின் பணிகள் தொடங்கும் போது இயக்குநரான என்னிடம் ஒரு பட்ஜெட்டை சொல்லிவிட்டு ஆனால் அவர் மனதில் அதைவிட பெரிய அளவில் திட்டமிட்டிருக்கிறார். அதை நோக்கி என்னையும், பட குழுவினரையும் சிறிது சிறிதாக அழைத்துச் சென்றார். இப்போது கூட இப்படத்தில் இசை வெளியீட்டு விழாவை ஆன்லைனில் நடத்துகிறோமா..! எனக் கேட்ட போது இல்லை சத்யம் தியேட்டரில் பிரம்மாண்டமாக நடத்துகிறோம் என்றார். இதை தொடர்ந்து படத்தின் வெளியீடு இருக்கிறது. அதையும் பிரம்மாண்டமாகவே செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

படத்திற்காக சண்டைக் காட்சிகளை படமாக்கும் போது நாயகனின் கதாபாத்திரத்தை தவற விட்டு விடுவோம். அவர்கள் காட்சிகளில் வேறு மாதிரியாக நடித்திருப்பார்கள். சண்டை காட்சிகளின் போது வேறு மாதிரியாக நடிப்பார்கள். அதுபோல் இல்லாமல் இந்த படத்தில் சொக்கன் கதாபாத்திரம் எப்படியோ… அவனுக்கேற்ற வகையில் சண்டை காட்சிகளை வடிவமைத்திருக்கிறோம். அந்த கதாபாத்திரத்தின் நீட்சியாகவே அனைத்து சண்டை காட்சிகளையும் உருவாக்கி இருக்கிறோம். இதற்காக சண்டை பயிற்சி இயக்குநர் மகேஷ் மேத்யூக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றிமாறன் சார் படத்தின் பணிகள் தொடங்கும்போதே சண்டைக் காட்சிகளை நன்றாக படமாக்குங்கள் என அறிவுறுத்தினார். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து அவர் படம் பார்க்கும் போது சொன்ன ஒரே விசயம் படத்தில் சண்டை காட்சிகளை நன்றாக எடுத்திருக்கிறாய், என பாராட்டினார்.

நான் இதுவரை ஐந்து திரைப்படங்களை இயக்கி இருக்கிறேன் யாருடனும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதில்லை. இந்த படத்திற்கு பிறகு ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்கான காரணத்தை வரும் மேடைகளில் விரிவாக சொல்கிறேன்.

இந்தத் திரைப்படத்தில் வடிவுக்கரசியையும் சேர்த்து ஐந்து நாயகிகள். அனைவரும் இந்த திரைப்படத்தில் அழுத்தமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஏனெனில் கதை அப்படித்தான் அமைந்திருக்கிறது.

சமுத்திரகனிக்கு தொலைபேசி மூலமாக கதை சொன்னேன். கதையைக் கேட்டதும் நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டார். அப்போதே எனக்குள் அவரிடம் உள்ள எனர்ஜி கிடைத்து விட்டது. அவர் தண்ணீர் போன்றவர். எந்த கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அதில் இயக்குநர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை துல்லியமாக உணர்ந்து நடிப்பவர்.

இந்த படத்தின் பணிகள் தொடங்கும் போது முதல் பாசிட்டிவிட்டி உன்னி முகுந்தன் தான். படத்தின் கதையை எழுதி முடித்த பிறகு இந்த கதாபாத்திரத்திற்கு உன்னி முகுந்தனிடம் கேட்கலாம் என தயாரிப்பாளர் ஆலோசனை சொன்னார். அப்போது ‘மாளிகாபுரம்’ எனும் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றிருந்தது. அவர் பல கதைகளை கேட்டு எதிலும் நடிக்காமல் நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருந்தார். அந்தத் தருணத்தில் நாங்கள் அவரை சந்தித்தோம். இந்த கதையை கேட்டு முடித்தவுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். அவரும் தனுஷின் ‘சீடன்’ படத்திற்கு பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் நடிக்கிறார். அவருக்குள்ளும் தமிழில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் அவர் வேட்டைக்கு செல்லும் புலியின் தாகத்துடன் இருந்தார்.

இந்தப் படத்தின் கதைக்கு இரு தூண்கள். அதில் ஒருவர் சசிகுமார். அவர் ஏற்று நடித்திருக்கும் ஆதி எனும் கதாபாத்திரம் தான் இப்படத்தின் மையப் புள்ளி. இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிப்பாரா? மாட்டாரா? என்ற தயக்கம் எங்களிடமிருந்தது. ஆனால் சூரியின் நட்புக்காக ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பு தளத்தில் உன்னி முகுந்தன் புலி என்றால்.. சசிகுமாரை வேட்டைக்குச் செல்லும் சிங்கம் என்று சொல்லலாம்.

சிங்கத்திற்கும், புலிக்கும் இடையே சிக்காமல் தப்ப வேண்டிய வேட்டைக்காரர் சூரி. படத்தை தொடங்கும் போது வெற்றிமாறன் சூரிக்காக நான் ஒரு அளவுகோலை உருவாக்கி இருக்கிறேன். அதனை நீயும் மீறி விடாதே, சூரியையும் மீற விடாதே என எச்சரித்தார். அதனால் படப்பிடிப்பு தளம் முழுவதும் சூரி முழுமையான அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்தார். மேலும் சூரியின் நிலைமை எனக்கு நன்றாக புரிந்தது. கையில் ஒரு கண்ணாடி கூண்டுடன் அதில் தங்க மீனை வைத்துக்கொண்டு வேகமாக ஓட வேண்டும் என்ற நிலையில் அவர் இருந்தார். அதனால் படத்தை பார்த்து பார்த்து நேர்த்தியாக செதுக்கி இருக்கிறோம்.

நானும் ஒரு இன்ட்ரோவெட். யுவன் சங்கர் ராஜாவும் ஒரு இன்ட்ரோவெட். அதனால் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. இருந்தாலும் படத்தில் அவருடைய உழைப்பு பெரிதாக பேசப்படும்.

சில படங்களில் எல்லா கதாபாத்திரங்களின் கோணத்திலிருந்தும் கதை அமையும் என எதிர்பார்ப்போம். அதற்கான வாய்ப்பு கிடைக்காது. ஆனால் இந்தத் திரைப்படத்தில் எல்லா கதாபாத்திரங்களின் கோணங்களில் இருந்தும் கதை பயணிக்கும். அது போன்று கதை அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களில் ஒவ்வொருவருடைய
கோணங்களிலிருந்தும் இந்த கதையை பார்க்கலாம். இதனை அந்த வகையில் நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறோம் என நினைக்கிறேன். மூன்றாண்டு இடைவெளிகளில் நான் கற்றுக்கொண்ட சில நல்ல விசயங்களையும் இதில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இதற்காக உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ”

இயக்குநர் துரை செந்தில்குமார் – நடிகர் சூரி இணைந்து பணியாற்றும்போது ‘கருடன்’ படம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை இருந்தது.

‘அது ஒரு கனாக்காலம்’ படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குநர் பாலு மகேந்திராவிற்கு உடல் நலமில்லை. சிக்கலான காலகட்டத்தில் பாலு மகேந்திராவுடன் 60 நாள், அவருடனே தங்கி அவருடைய உடல் நலத்தை பராமரித்து மீட்டெடுத்தார். அவரிடம் அப்போது இது எப்படி உன்னால் முடிந்தது? என ஆச்சரியத்துடன் கேட்டேன். ‘நம் வீட்டில் நம் தந்தைக்கு இப்படி ஏற்பட்டால்.. என்ன செய்வோமோ.! அதைத்தான் நான் இங்கு செய்தேன்’ என்றார். இதுதான் செந்தில். படப்பிடிப்பு தளத்தில் எந்தவித சிக்கலையும் உருவாக்காமல் இயல்பாகவும் அன்பாகவும் பழகக்கூடியவர்.

விடுதலை படத்திற்கு முன்னர் இரண்டு அல்லது மூன்று முறை தான் சூரியை சந்தித்து பேசி இருக்கிறேன். விடுதலை படத்தின் பணிகள் தொடங்கும் போது தான் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு என்னிடம் தயாரிப்பாளர் குமாரை அறிமுகப்படுத்தி ‘கருடன்’ என்று ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். செந்தில் தான் இயக்கவிருக்கிறார் என என்னிடம் சொன்ன போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

செந்தில் என்னை சந்தித்து இப்படி ஒரு கதாபாத்திரம்… இப்படி ஒரு நடிகர்… என இந்தப் படத்தைப் பற்றி நிறைய விசயங்களை சொல்லிக் கொண்டே இருப்பார். அப்போது கதை விவாதத்தின் போது ஆலோசனை சொல்வது போல் இதனை இப்படி செய்து கொள்ளலாம்.. அதனை அப்படி செய்து கொள்ளலாம்.. என்று நான் சொன்னேன்.

அதன் பிறகு ஆதி கதாபாத்திரத்திற்கு சசிகுமாரை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறோம் என்று சொன்னபோது, முதலில் வியந்தேன். அவர் ஒப்புக் கொள்வாரா..! என்ற தயக்கமும் இருந்தது. ஆனால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற தகவல் கிடைத்தவுடன் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அப்போதும் அவர் சூரிக்காகத்தான் இந்த கதையை நடிக்க ஒப்பு கொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள். அப்படி சொல்வதற்கும், அதை செய்வதற்கும் ஒரு மனசு வேண்டும். இதற்காக நான் சசிக்குமாரை மனதார பாராட்டுகிறேன்.

படம் பார்த்துவிட்டேன். படத்தில் சசிகுமாருக்கு அழுத்தமான வேடம். அது அவருக்காகவே உருவாக்கப்பட்ட சிறப்பான கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது. அவர் மட்டுமல்ல அனைவரும் இந்த படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் மூலம் கதைக்கு ஒரு நம்பகத்தன்மை கிடைத்திருக்கிறது. இந்த மாயாஜாலத்தை ஏற்படுத்திய சமுத்திரக்கனிக்கும் என்னுடைய பாராட்டுக்கள். படத்தில் இடம் பெறும் சண்டைக் காட்சிகளும் சிறப்பாக இருக்கிறது. இந்த திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். படத்தின் தயாரிப்பாளர்.. இயக்குநர் செந்தில் விவரித்ததை போல் சிறந்த தயாரிப்பாளரா.. என தெரியவில்லை ஆனால் படைப்பின் மீது அக்கறை கொண்ட தயாரிப்பாளர் என்று மட்டும் தெரிய வருகிறது. அவருக்கும் இந்த படத்தின் மூலம் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்.” என்றார்.

நடிகை வடிவுக்கரசி பேசுகையில், ” இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதை தவற விட்டிருந்தால்… என்னுடைய செல்ல பிள்ளைகளை மேடையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. சூரி போன்ற திறமையான நடிகரை கண்டறிந்து வழங்கியதற்காக இயக்குநர் வெற்றி மாறனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தில் தாமதமாகத்தான் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாளை படப்பிடிப்பு என்றால் அதற்கு முதல் நாள் இரவு தான் நான் நடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டேன். பிரபஞ்சம் கொடுக்கும் அதிர்ஷ்டத்தை வேண்டாம் என்று சொல்லக்கூடாது என்பதற்காக சென்னையிலிருந்து காரில் கிளம்பி இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றேன்.

ஆலயத்தில் படபிடிப்பு நடைபெற்ற போது முதலில் இயக்குநரை சந்தித்து, இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்காக என்னை தேர்வு செய்தமைக்கு நன்றி என்றேன். இந்தத் திரைப்படத்தில் உன்னி முகுந்தனின் அப்பத்தாவாக நடித்திருக்கிறேன். அவருக்கு நண்பர் சூரி. இவர்கள் இருவருக்கும் நண்பர் சசிகுமார்.

படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகுதான் இந்தத் திரைப்படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி போன்றவர்கள் நடிக்கிறார்கள் என்பதை அறிந்து ஆச்சரியமடைந்தேன்.

இந்த திரைப்படத்தில் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவாளர் என்றவுடன் எனக்கு நிம்மதி பிறந்தது. ஏனெனில் அவர் ஒப்பனை செய்து கொள்ள விட மாட்டார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கிடைத்த ஓய்வு நேரத்தில் தான் சூரி நடித்த ‘விடுதலை’ திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்தேன். அவருடைய நடிப்பைக் கண்டு வியந்து போனேன். சில நாட்கள் கழித்து படப்பிடிப்பு தளத்தில் சூரியை சந்தித்தவுடன் அவரை கட்டிப்பிடித்து பாராட்டினேன்.

படப்பிடிப்பின் போது சூரி நடித்துக் கொண்டிருப்பார். அப்போது இயக்குநர், ‘சூரி தெரிய வேண்டாம். சொக்கன் தான் தெரிய வேண்டும்’ என்பார். அந்த அளவிற்கு இயக்குநர்.. நேர்த்தியாக கலைஞர்களிடமிருந்து வேலை வாங்கினார்.

சமீப காலங்களில் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் பணியாற்றிய திரைப்படம் இது. இதே சந்தோஷத்துடன் விரைவில் சிவகார்த்திகேயன் உடனும் ஒரு படத்தில் நடிப்பேன் என எதிர்பார்க்கிறேன்.

‘இடம் பொருள் ஏவல்’ எனும் படத்தில் பதினைந்து நாட்கள் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி உடன் நடித்திருக்கிறேன். அவர் மிகவும் இனிமையானவர்.

ஒரு திரைப்படத்தில் அனைவரும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியாகவும் பணியாற்றும்போது எங்களை அறியாமல் எங்களுடைய ஆசிகள் இந்த படத்திற்கு உண்டு. இவை ரசிகர்களிடமும் பரவி படம் வெற்றி அடையும். இதனை மேலும் வெற்றி பெற ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து இது திரைப்படத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி பேசுகையில், ”

இந்த நிகழ்வில் வடிவுக்கரசி அவர்களின் பேச்சு பிரமாதமாக இருந்தது. அவருடைய பேச்சில் ஒரு இயக்குநர் படப்பிடிப்பு தளத்தை எவ்வளவு உற்சாகமாக .. சௌகரியமாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியது.

வெற்றிமாறன் செந்தில்குமாரை பற்றி சொல்லும் போது சக மனிதர்களை நேசிக்கும் மிக இனிமையான மனிதர். நல்லவர் வல்லவர் எனக் குறிப்பிட்டார். இதனால் விரைவில் செந்தில்குமாருடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.

யாராவது ஒருவர் வெற்றி பெற்று விட்டால் அவரது தொடக்க காலகட்டத்தில் தான் முன்னேறுவதற்கு ஊக்கமளிப்பார்கள். அதன் பிறகு மறந்து விடுவார்கள். ஆனால் சூரி நடிகராக அறிமுகமாகி இந்த அளவிற்கு உயர்ந்திருப்பது பெரிய சாதனை தான்.

காமெடியனாக இருக்கும்போது ஒரு காட்சியை கொடுத்தால்.. அதை அவருடைய கோணத்தில் உள்வாங்கி எப்படி திரையில் தோன்றி சிரிக்க வைப்பது என யோசித்து.. அந்தக் காட்சியின் ஏற்ற இறக்கங்களை கணித்து அதன் பிறகு இயக்குநருடன் பேசி நடிப்பது என்பது ஒவ்வொருவரும் பயன்படுத்தும் ஒரு உத்தி. நானும், சூரியும் ஒரு சில படங்களில் மட்டும் தான் இணைந்து நடித்திருக்கிறோம்.

ஒரு படத்தில் காமெடிக்காக மட்டுமே யோசித்து நடித்த நடிகர்.. அதில் பெற்ற பயிற்சியை மனதில் வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு கதையின் நாயகனாக நடிக்க வேண்டும் என விரும்புகிறார்..இதற்காக சூரியை பாராட்டுகிறேன். விடுதலை படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஒரு படம் நடித்திருக்கிறார். தொடர்ந்து அவர் பல உயரங்களை தொடுவார். இதற்கு இந்த படத்தின் முன்னோட்டத்தில் இடம் பிடித்த இயற்கையும் கடவுளும் அவருக்கு துணையாக இருக்கும் என்ற வசனங்களே சான்று. அவருடைய அடுத்தடுத்த படங்களும் அதற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. சூரியைப் பார்த்து மிகவும் நான் ரசிக்கிறேன். நம் மண்ணுக்கேற்ற முகம். கருப்பான அழகன். மேலும் மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன். ” என்றார்.

சிவகார்த்திகேயன் பேசுகையில்,

” படத்தின் முன்னோட்டம், பாடல் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக இருந்தது. இப்படத்தின் இயக்குநர் துரை செந்தில் குமாருடன் ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘காக்கிச்சட்டை’ ஆகிய படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் ஒரு புன்னகையுடன் தான் வேலை செய்வார். யாரையாவது திட்ட வேண்டும் என்றாலும் கூட சிரித்துக் கொண்டே தான் திட்டுவார். அவரின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் கருடன் திரைப்படம் வெற்றி படமாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

அவர் என்னை சந்தித்து முதல் முதலாக கதையை சொன்ன போது.. நான் உதவி இயக்குநராக பணியாற்றியதால் … என்னிடமிருந்த சில கதைகளை அவரிடம் சொல்லி இருக்கிறேன். வேறு யாரிடமும் கதையை சொல்லவில்லை. ஏனெனில் அவருடன் பேசும்போது ஒரு சௌகரியமான சூழலை ஏற்படுத்தி தருவார். வடிவுக்கரசி அம்மா குறிப்பிட்டது போல் எப்போதும் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதில் செந்தில் குமார் கவனமாக இருப்பார். அந்த விசயத்தில் அவரை யாராலும் வெல்ல முடியாது.

படத்தின் தயாரிப்பாளர் குமார் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் படப்பிடிப்பின் போது தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர். அப்போதே அவர் படப்பிடிப்பு பணிகள் எதிலும் தாமதம் ஏற்படக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார். சிக்கனமாக செலவு செய்வார். தயாரிப்பாளர் வேறு ஒருவர் என்ற போதே அவர் சிக்கனமாக செலவு செய்தார் என்றால்.. இப்போது அவரே தயாரிப்பாளர் என்பதால், இந்த படத்திலும் நல்ல முறையில் தயாரித்திருப்பார்.. இந்த படம் வெற்றி அடைந்து மேலும் அவர் படங்களை தயாரிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக சூரியை வைத்து அவர் மேலும் பல படங்களை தயாரிக்க வேண்டும்.

சூரி – உண்மையிலேயே எனக்கு அண்ணன் தான். அவரை எப்போதும் ஆத்மார்த்தமாக அண்ணன் என்றுதான் அழைப்பேன். அவரும் என்னை எப்போதும் ஆத்மார்த்தமாக தம்பி என்று தான் அழைப்பார். இது சினிமாவை கடந்த நட்பு.

சூரியை முதன்முதலாக கதையின் நாயகனாக நீங்கள் நடிக்கலாம் என்று சொல்லி, அதற்காக அவரிடம் கதையும் சொன்னது நான்தான். ‘சீம ராஜா’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது கிடைத்த இடைவெளியில் நீங்கள் ஏன் கதையின் நாயகனாக நடிக்க கூடாது? என கேட்டேன். அப்போது அதற்கு சிரித்துக் கொண்டே மறுப்பு தெரிவித்தார்.

அதன் பிறகு ஒரு நாள் என்னை சந்தித்து ‘தம்பி! வெற்றிமாறன் இயக்கத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறேன்’ என்றார். உடனே வாழ்த்துக்கள் தெரிவித்தேன். வெற்றிமாறன் படத்தில் நடித்தால்… உங்களது திரையுலக பயணத்திலேயே பெரிய திருப்புமுனை ஏற்பட்டுவிடும். பேசாமல் நடித்து விடுங்கள் என்று சொன்னேன். அப்போது படத்தின் கதை என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால் சூரியின் நடிப்பு திறமை பற்றி எனக்கு நன்றாக தெரியும். ஏனெனில் அவருடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அவருடன் நிறைய நேரம் செலவழித்து இருக்கிறேன்.

காமெடியாக நடிக்கும் ஒருவரால் நிச்சயமாக உணர்வுபூர்வமாக நடிக்க முடியும். இதனால் காமெடியாக நடிக்கும் நடிகர்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். இதற்கு சிறந்த உதாரணம் சூரி அண்ணன்.

வெற்றிமாறன் அண்ணன் சூரிக்கு ‘விடுதலை’ படத்தின் மூலம் புதிய அடையாளத்தை கொடுத்திருக்கிறார். நாங்கள் தயாரித்திருக்கும் கொட்டுகாளி படத்தில், சிறிதளவு கூட குறையாமல் அதற்கு ஒரு படி மேலே தான் சூரியை பயன்படுத்தி இருக்கிறோம் என நான் நம்புகிறேன்.

இந்த கருடன் திரைப்படத்தில் சூரி ஆக்சன் காட்சிகளில் அதிரடியாக நடித்திருக்கிறார். அவர் ஆக்சன் காட்சிகளில் நடிப்பது புதிதல்ல. ஏனெனில் எப்போதும் அவர் உடற்பயிற்சி உடற்பயிற்சி என அந்த மனநிலையில் தான் இருப்பார். அதனால் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதற்கு அவர் எப்போதோ தன்னை தயார் படுத்திக் கொண்டு விட்டார். இப்போது அவரை தேடி அதற்கான கதைகள் வந்து கொண்டிருக்கிறது. இப்போது நடிகர் சூரி ‘இனி ஹீரோவாகத்தான் நடிப்பேன்’ என்பதில் தெளிவாக இருக்கிறார். நிறைய நேரம் இன்ஸ்டாகிராமில் தனக்கான கதாநாயகியைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

நானும் சூரியைப் போல் சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான வாய்ப்பு விரைவில் சாத்தியமாகும் என நம்புகிறேன்.

‘கருடன்’ திரைப்படம் மே 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ரசிக்கும் வகையிலான ரூரல் என்டர்டெய்ன்மென்ட் திரைப்படமாக இது இருக்கும் ” என்றார்.

நடிகர் சூரி பேசுகையில்,

”இந்த தம்பிக்காக வாழ்த்த வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், அனைத்து அண்ணன்களுக்கும், தம்பிகளுக்கும் நன்றி. இதுபோன்றதொரு மேடை மீண்டும் அமையுமா? என தெரியாது எனக்கு அமைந்திருக்கிறது. இதுவே பதட்டமாக இருக்கிறது. இந்த மேடை இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதையாக கருதுகிறேன்.

விடுதலைக்கு முன் – விடுதலைக்கு பின் என இந்த சூரியின் வாழ்க்கையை மாற்றி அமைத்த இயக்குநர் வெற்றிமாறனுக்கு இந்த நேரத்திலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் கதையின் நாயகனாக எனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்று உரிமையுடன் நிற்கிறேன் என்றால்… பெருமிதத்துடன் இந்த மேடையில் நிற்கிறேன் என்றால்.. அதற்குக் காரணம் வெற்றி அண்ணன் தான். விடுதலை படத்தில் நடித்த போது கிடைத்த அனுபவங்களால் தான் இந்த கருடன் படமே உருவானது. அதுதான் உண்மை.

இந்தியாவின் எங்கு சென்று டீ குடித்தாலும் அங்கு கிடைக்கும் பேப்பரில் சேது மாமாவின் முகம் இருக்கிறது. ரூபாய் நோட்டில் எத்தனை மொழி இருக்கிறதோ.. அத்தனை மொழிகளிலும் சேது மாமா நடித்திருக்கிறார். இவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.

கதையெல்லாம் எழுதி முடித்த பிறகு இந்த வேடத்திற்கு சசிகுமார் தான் பொருத்தமாக இருப்பார் என இயக்குநர் சொன்னவுடன் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி. ஆனால் அவரிடம் இதை எப்படி கேட்பது என்று தான் தயக்கம் இருந்தது. அப்போது நான் தான் அவரிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று சொன்னேன். ‘பழக்க வழக்கத்திற்காக மதுரைக்காரன் கொலை கூட செய்வான்’ என்று விளையாட்டாக சொன்னேன். உடனே அந்த பொறுப்பை என்னிடமே கொடுத்து விட்டார்கள். அதன் பிறகு இயக்குநர் சரவணனிடம் பேசினோம். அவர்தான் சசிகுமாரிடம் பேசினார். அதன் பிறகு என்னிடம் ‘உனக்காக சசிகுமார் நடிக்க தயார்’ என்ற விவரத்தை சொன்னார். அதன் பிறகு சசிகுமார் இயக்குநரிடம் கதை கேட்டார். கேட்டதும் நடிக்கவும் ஒப்புக்கொண்டார். இதற்காக சசிகுமார் அண்ணனுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தம்பி சிவகார்த்திகேயன் சினிமாவை கடந்து என்னுடைய சிறந்த நண்பர் என்னுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் சிவகார்த்திகேயனை பிடிக்கும். விடுதலைப் படத்தில் கதையின் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் முதலில் என்னுடைய மனைவியிடமும் அதன் பிறகு தம்பி சிவகார்த்திகேயன் இடம் தான் பகிர்ந்து கொண்டேன். கேட்டவுடன் தம்பி மிகவும் சந்தோசமடைந்தார். இந்த வாய்ப்பு என்பது அனைவருக்கும் கிடைக்காது. உங்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் நடித்த பிறகு உங்களுடைய தோற்றமே மாறிவிடும் என்று நம்பிக்கை கொடுத்தார். அத்துடன் நிற்காமல் ‘கொட்டுக்காளி’ படத்தைக் கொடுத்து நீங்கள் கதையின் நாயகனாகவே தொடருங்கள் என்று சொல்லி இருக்கிறார். அந்தப் படம் இன்று உலக நாடுகள் முழுவதும் சுற்றிக்கொண்டு இருக்கிறது.

கொட்டுக்காளி படத்தைப் பற்றி இயக்குநர் வெற்றிமாறன் அண்ணனிடம் சொன்னேன். அவர்தான் வினோத் அற்புதமான இயக்குநர். இந்தியாவில் தலை சிறந்த இயக்குநராக வருவார். அவரை தவற விட்டு விடாதே என்றார்.

விடுதலை படத்திற்குப் பிறகு வேறு இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்தால் அவர்கள் எப்படி இயக்குவார்கள் என்பது எனக்கு நிச்சயமாக தெரியாது. என்னை அவர்கள் கதாநாயகனை தான் பார்ப்பார்கள். தனுஷ் சார் ஒரு படத்தில் ‘என்னையெல்லாம் பார்த்த உடனே பிடிக்காது. பார்க்கத்தான் பார்க்கத்தான் பிடிக்கும்’ என்று சொல்லி இருப்பார். ஆனால் என்னை ‘பார்க்க பார்க்க பார்க்க பார்க்க தான் பிடிக்கும்’ ஆனால் நான்கு படத்தை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார், வெற்றிமாறன் கேட்டுக்கொண்டதற்காக படப்பிடிப்பு தளத்தில் வருகை தந்து பணியாற்றினார். படப்பிடிப்பின் போது அவருடைய நேர்த்தியான உழைப்பு எனக்கு பிடித்திருந்தது. அதனால் அவரது இயக்கத்தில் நடிக்க சம்மதித்தேன். அதேபோல் படப்பிடிப்பு தளத்திலும் என்னை சௌகரியமாக பணியாற்ற அனுமதி அளித்தார் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.

இறுதிக்கட்ட பணிகளை துவக்கிய “வானவன்” படக்குழு !!

‘ஈடன் ஃபிளிக்ஸ்’ குழுவினர் தயாரிப்பில், இயக்குநர் சஜின் கே சுரேந்திரன் இயக்கத்தில், யோகிபாபு,
ரமேஷ் திலக் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் வானவன் படத்தின் முழுப்படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் படக்குழு தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகளைத் துவக்கியுள்ளது.

யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, Master ஷக்தி ரித்விக் ( பிகில், மாஸ்டர்) , ‘லவ் டுடே’ பிராத்தனா நாதன் & கல்கி ராஜா ஆகியோர் இணைந்து நடிக்கும் மல்டி ஸ்டாரர் திரைப்படமாக வானவன் உருவாகி வருகிறது.

யோகி பாபுவின் நகைச்சுவையுடன் Feel Good, Fantasy ஜானரில், குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் கொண்டாடும் வகையில் அசத்தலான காமெடியுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த சஜின் கே சுரேந்திரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், இதற்கு முன் மலையாளத்தின் முதல் வெப் சீரிஸான மாஸ்குரேட் சீரிஸை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பவி கே பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார் (அசோக வனமாலோ அர்ஜுனா கல்யாணம் மற்றும் ரெஜினா புகழ்), அறிமுக எழுத்தாளர் ஹரிஹரன் எழுத்தும் மற்றும் ஃபின் ஜார்ஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மற்றும் பாடலாசிரியர் கார்த்திக் நேதா வெற்றிக்கூட்டணி இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள், மதுரை மற்றும் சென்னையின் கிராமப்புறங்களைச் சுற்றி படம்பிடிக்கப்பட்டுள்ளது. EDENFLICKS PRODUCTIONS பேனரின் கீழ் அமெரிக்க தொழிலதிபர் தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான சாய் பல்லவி நடித்த கார்கி படத்தின் தயாரிப்பாளர் தாமஸ் இணைந்து தயாரித்தார் என்பது குறிப்பிடதக்கது.

விரைவில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

கருணாஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘ஆதார்’ படம் மலையாளத்தில் உருவாகிறது!

பல சர்வதேச விருதுகளை வென்று, ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பையும் பெற்ற, வெண்ணிலா கிரியேஷன்ஸ் பி. சசிகுமார் தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில், கருணாஸ் நடிப்பில் வெளியாகி, 2022 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த ஊடகத்தின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய ‘ஆதார்’ திரைப்படம் மலையாளத்தில் உருவாகிறது. இப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் மலையாளத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். தமிழில் உருவான ‘ஆதார்’ திரைப்படத்தில் அருண்பாண்டியன் நடித்த அழுத்தமான ரைட்டர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான திலீஷ் போத்தன் நடிக்கவிருக்கிறார்.

கருணாஸ் நடிப்பில் வெளியான ‘திண்டுக்கல் சாரதி’ எனும் வெற்றி பெற்ற படத்திற்கு திரைக்கதை & வசனம் எழுதியவர். ஜீவா- நயன்தாரா நடிப்பில் வெளியான ‘திருநாள்’, கருணாஸ் நடிப்பில் வெளியான ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ மற்றும் ‘ஆதார்’ ஆகிய திரைப்படத்தை இயக்கியவர் ராம்நாத் பழனிகுமார். இவரது திரைப்படங்களில் கதை சொல்லும் பாணி வித்தியாசமாக இருப்பதுடன் எளிய மனிதர்களின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகி இருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் கருணாஸ், அருண் பாண்டியன், பிரபாகர், உமா ரியாஸ் கான், ரித்விகா, இனியா, திலீபன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஆதார்’. இந்தத் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது.

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கும்ப்ளாங்கி நைட்ஸ்’, ‘ஜோஜி’, அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிரேமலு’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர் – ‘மகேஷிண்டே பிரதிகாரம்’, ‘ஜோஜி’ ஆகிய வெற்றி பெற்ற படத்தை இயக்கிய இயக்குநர் – அறுபதிற்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்து நட்சத்திர நடிகராகவும் வலம் வரும் திலீஷ் போத்தன்.. ‘ஆதார்’ படத்தின் தமிழ் பதிப்பில் அருண் பாண்டியன் நடித்த அழுத்தமான ரைட்டர் வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

‘ஆதார்’ திரைப்படத்தின் மலையாள ரீமேக்கில் திலீஷ் போத்தன் முக்கிய வேடத்தில் நடிப்பதால்.. இந்த திரைப்படம் மலையாள மொழியிலும் பெரிய வெற்றியை பெறும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

“மிராய்” மூலம் மீண்டும் திரையில், மின்னும் வைரமாக வருகிறான், கருப்பு வாள் வீரன் – வெல்கம் பேக் ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு!!

எட்டு வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தெலுங்கு சினிமாவின் கவர்ச்சிமுகு, இளம் நட்சத்திர நடிகர், ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு வெள்ளித் திரைக்கு மீண்டும் திரும்புகிறார். சூப்பர் ஹீரோவின் பிரபஞ்சமான மிராய் உலகில் ‘தி பிளாக் வாள்’ எனும் வாள் வீரனாக அவதாரமெடுக்கிறார். இப்படத்தில் சூப்பர் யோதாவாக தேஜா சஜ்ஜா நடிக்கிறார். பிரபல படைப்பாளி கார்த்திக் கட்டமனேனி இப்படத்தை இயக்குகிறார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டிஜி விஸ்வ பிரசாத் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இணையற்ற உற்சாகம் நிறைந்த இந்த சூப்பர் ஹீரோ பிரபஞ்சத்தில், மனோஜ் அறிமுகமாகிறார்.

மனோஜ் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர்கள் மஞ்சு மனோஜின் “தி பிளாக் வாள்” கதாப்பாத்திரத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் மனோஜ் மஞ்சு இதுவரை திரையில் கண்டிராத தீவிரமான மற்றும் சக்திவாய்ந்த அவதாரத்தில், ஒரு விசித்திரமான ஆயுதத்துடன், வெட்டவெளி நிலப்பரப்பின் பின்னணியில் தோற்றமளிக்கிறார். ஸ்டைலுடன் வித்தியாசமான கலவையில் தோற்றமளிக்கும் அவரது கதாபாத்திர லுக், பார்க்கும்போதே நம்மை மயக்குகிறது. கருப்பு வாள் வீரனாக மின்னுகிறார் மனோஜ். போனிடெயில் மற்றும் ஸ்டைலான தாடியுடன் நீண்ட கூந்தலைக் கொண்ட மனோஜ், அறிமுகக் காட்சியில் லாங் கோட் அணிந்து மிக நாகரீகமாகத் தோன்றுகிறார், அதைத் தொடர்ந்து டி-ஷர்ட்டுடன் பிளேசரில் மற்றொரு அதிரடி-சீக்வென்ஸில் தொடர்ந்து காட்சியளிக்கிறார் இது அவரது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

ஒரு நடிகராக அவருடைய பன்முகத் திறமையையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் இந்தப் பாத்திரம், படத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது. அவரது கதாபாத்திரம் பார்வையாளர்களிடம் பெரும் தாக்கத்தை உருவாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு கூறுகையில்.., “இத்தகைய சக்தி வாய்ந்த மற்றும் புதிரான கதாபாத்திரத்துடன் மீண்டும் இண்டஸ்ட்ரிக்கு வருவது சவாலாகவும், உற்சாகமாகவும் இருந்தது. “கருப்பு வாள் வீரன் என்பது வலிமை மற்றும் நெகிழ்ச்சியுடன் கூடிய ஒரு அழுத்தமான பாத்திரம். நான் மீண்டும் திரைக்கு திரும்பி வருவதற்கு பொறுமையாக காத்திருந்த எனது ரசிகர்களுடன் இந்த பயணத்தை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.”

பிரமிக்க வைக்கும் கதைகள் நிறைந்த உலகின் பின்னணியில் அமைக்கப்பட்ட இப்படம், பாரம்பரிய வீரம் மற்றும் நவீன கதை சொல்லல் ஆகியவற்றின் கலவையாக உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை கவரும் விதத்தில் இருக்கும். இது அசோகரின் 9 அறியப்படாத புத்தகங்களின் ரகசியங்களை ஆராய்கிறது, வரலாறு மற்றும் புராணங்களின் அடிப்படையில் ஒரு காவியக் கதையாக அசத்தவுள்ளது.

முன்னதாக, சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைக் குவித்தது, இப்போது ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சுவின் பிறந்தநாளில் அவரது கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு வரவேற்பைக் குவித்து வருகிறது. மனோஜ் தெலுங்கு சினிமாவுக்கு மட்டும் மீண்டும் திரும்பவில்லை, அதைத்தாண்டி மீண்டும் ஒரு பெரும் நடிகனாக திரைத்துறைக்கு சவால் விடும் பாத்திரத்தில் அசத்தவுள்ளார்.

தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக ரித்திகா நாயக் நடிக்கிறார். இப்படத்திற்கு கார்த்திக் கட்டமனேனி திரைக்கதையை எழுதியுள்ளார், அவருடன் இணைந்து மணிபாபு கரணம் வசனம் எழுதியுள்ளார். கௌரா ஹரி இசையமைத்துள்ளார். இப்படத்தின் கலை இயக்குநராக ஸ்ரீ நாகேந்திரா தங்காவும், இணை தயாரிப்பாளராக விவேக் குச்சிபோட்லாவும் பணியாற்றுகிறார்கள். கிருத்தி பிரசாத் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும், சுஜித் குமார் கொல்லி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

மிராய் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளில் அடுத்த கோடையில் ஏப்ரல் 18 ஆம் தேதி 2டி மற்றும் 3டி பதிப்புகளில் வெளியிடப்படும்.

தொழில்நுட்பக் குழு:
இயக்கம் : கார்த்திக் காட்டம்நேனி தயாரிப்பாளர்: டிஜி விஸ்வ பிரசாத்
பேனர்: பீப்பிள் மீடியா பேக்டரி
இணை தயாரிப்பாளர்: விவேக் குச்சிபோட்லா கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: கிருத்தி பிரசாத் நிர்வாக தயாரிப்பாளர்: சுஜித் குமார் கொல்லி இசை: கவுரா ஹரி
கலை இயக்குனர்: ஸ்ரீ நாகேந்திர தங்காலா எழுத்தாளர்: மணிபாபு கரணம்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டி !!

பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” ( all we imagine as light ) திரைப்படம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, கேன்ஸ் திரை விழாவில் முதன்மைப் போட்டிப் பிரிவில், cannes palme d or 2024 விருதுக்காக போட்டியிடும் முதல் இந்தியத் திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. உலகளவில் பிரபலமான பெரும் படைப்பாளிகளான பிரான்ஸ் ஃபோர்டு கப்போலா மற்றும் டேவிட் ரோஹன் ஆகியோரின் படைப்புகளுடன் இப்படம் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடதக்கது.

இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம் என விருது பெற்ற நடிகர்களுடன் கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, பிருந்தா மாஸ்டரின் தமிழ் படமான தக்ஸ் திரைப்படத்தில், ஹிருது ஹாருன் நாயகனாக நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி நடிப்பில், சந்தோஷ் சிவன் இயக்கிய மும்பைக்கார் படத்திலும், அமேசான் வெப் சீரிஸ் க்ராஷ் கோர்ஸிலிம் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்போது பாயல் கபாடியாவின் இயக்கத்தில், இவரது நடிப்பில் உருவாகியுள்ள “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” படத்தின் டிரெய்லர், சர்வதேச அரங்கில் பெரும் பாராட்டுக்களைக் குவித்து கவனம் ஈர்த்து வருகிறது.

தற்போது ஹிருது ஹாரூன் வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு தமிழ் படத்திலும், கப்பேலா புகழ் மலையாள இயக்குநர் முஸ்தபா இயக்கத்தில் ஒரு படத்திலும், நடித்து முடித்துள்ளார்.

வரும் மே 25 ஆம் தேதி கேன்ஸ் விருது அறிவிக்கப்படவுள்ளது. உலகம் முழுக்க திரையுலக படைப்பாளிகளால் கொண்டாடப்படும் கேன்ஸ் விருதான cannes palme d or 2024 விருதுக்காக இந்த முறை ஒரு இந்தியப்படம் கலந்துகொள்வதால், இந்தியா முழுக்க படைப்பாளிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ‘உப்பு புளி காரம்’  சீரிஸை, மே 30 முதல் ஸ்ட்ரீம் செய்கிறது !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த அதிரடி ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் ‘உப்பு புளி காரம்’  சீரிஸை வரும் மே 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கொண்டாடும் கலகலப்பான மற்றும் துடிப்பான ‘குடும்பப் பாட்டு’ எனும் அழகான தீம் பாடலுடன் இந்த சீரிஸ் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வண்ணமயமான காட்சிகள் மற்றும் நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பில், ஒரு மகிழ்ச்சியான மற்றும் இளமை நிறைந்த குடும்ப பொழுதுபோக்கை இந்த சீரிஸ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அற்புதமான பாடல் இப்போது சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

கனா காணும் காலங்கள் மற்றும் ஹார்ட் பீட் சீரிஸ்கள் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது போல, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸான ‘உப்பு புளி காரம்’ சீரிஸானது, காதல், காமெடி, ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் பல அதிரடி திருப்பங்களுடன் அட்டகாசமான பொழுதுபோக்கை வழங்கும்.

‘உப்பு புளி காரம்’ ஒரு வயதான அழகான தம்பதிகள் மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகள் என அவர்களின் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை சுற்றி பின்னப்பட்ட அழகான கதையாகும்.

இந்த சீரிஸில் நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா, தீபக் பரமேஷ் மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இடம்பெற்றுள்ளது.

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, M ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். ஷேக் இசையமைக்க, பார்த்திபன் மற்றும் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது.  மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

‘இந்தியன் 2’ புரமோசன் பணிகளை பிரமாண்டமாகத் துவக்கியது லைகா நிறுவனம்!

இந்தியா முழுக்க எதிர்பார்ப்பைக் குவித்து, கோடிக்கணக்கானோர் பார்த்துக்கொண்டிருந்த நேற்றைய சிஎஸ்கே Vs ஆர்சிபி போட்டியின் ஆரம்ப கட்ட புரமோசன் நிகழ்ச்சியில், உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டு ‘இந்தியன் 2’ குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர்.

உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் ‘இந்தியன் 2.’ ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரன் & ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ இணைந்து தயாரிக்க, பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் Intro வீடியோ வெளியிடப்பட்டு வரவேற்பைக் குவித்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது எனவும் மேலும் இப்படம் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது என்பதையும் உறுதி செய்தனர்.

இந்தியன் 2 படம் குறித்த இந்த அடுத்தடுத்த அப்டேட்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“போகுமிடம் வெகு தூரமில்லை” பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Shark 9 pictures சார்பில் சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”. விரைவில் திரைக்கு வரவிருக்கும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

தயாரிப்பாளர் சிவா கில்லாரி பேசியதாவது..
நான் தெலுங்குக்காரன் ஆனால் உங்கள் முன் தமிழில் தான் பேசப்போகிறேன், எங்கள் அழைப்பை ஏற்று வந்த திரைப்பிரபலங்களுக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தின் பாடல், டிரெய்லர் எல்லாம் பார்த்தீர்கள், இந்தப்படத்திற்கு முன் வேறொரு படம் செய்வதாக இருந்தேன், அப்போது தான் இந்தக்கதை வந்தது. இன்னும் பல கதைகள் கேட்டு முடிவு பண்ணலாம் என்ற முடிவிலிருந்தேன். அப்போது நான் நியூசிலாந்திலிருந்தேன் காலை 5 மணிக்குக் கதை சொல்ல வரச்சொன்னேன் ஆனால் மைக்கேல் 4 மணிக்கே வந்தார். அவர் கதையை விட அவர் அர்ப்பணிப்பு எனக்குப் பிடித்து விட்டது. அவருக்காகத் தான் இந்தப்படம் செய்தேன். அப்போது கொரோனா வந்து எங்கள் கனவுகளைத் தகர்த்துப் போட்டது. கொரோனா முடிந்த பிறகு மீண்டும் ஆரம்பித்தோம். எனக்கு சினிமா தெரியாது முற்றிலும் புதிது. வியாபாரம் தெரியாது ஆனால் அதில் கருணாஸ் அண்ணா, டிஃபெண்டர் பிரதர்ஸ், ரகுநந்தன் மூவரும் சப்போர்ட் செய்ததால் தான் இந்தப்படம் செய்ய முடிந்தது. இது மிக எமோசனலான படம். 12த் பெயில் படம் பார்த்த போது அழுதேன் அதே போல் இந்தப்படம் பார்த்த போதும் அழுகை வந்துவிட்டது. கருணாஸ் அண்ணா குழந்தையாக மாறி நடித்திருக்கிறார். விமல் சார் எனக்காக நிறைய வசதிகளைக் குறைத்துக் கொண்டு நடித்தார். ஒரு நாள் கூட அவர் லேட்டாக வந்ததில்லை. அவருக்கு நன்றி. இந்தப்படத்தில் உழைத்த அனைவரும் தங்கள் படம் போல வேலை பார்த்தார்கள். இது குடும்பங்களோடு பார்த்து மகிழும் படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி. குடும்பத்தோடு பார்க்கும் நல்ல படங்களை இந்த கம்பெனி எடுக்கிறார்கள் என அனைவரும் சொல்ல வேண்டும் அது தான் என் நோக்கம். இந்த இயக்குநர் இந்தக்கதைக்காக 10 வருடங்கள் உழைத்துள்ளார் அவருக்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் ரகுநந்தன் பேசியதாவது..
எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. மைக்கேல் கதை சொன்ன போதே எனக்குக் கண்களில் கண்ணீர் வந்தது. அயோத்தி சிறந்த படமாக இருக்கும் என இதே மேடையில் சொன்னேன் அதே போல் இந்தப்படமும் மிக எமோஷலான படமாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். இந்தப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு நல்ல இயக்குநர் கிடைத்துள்ளார். விமலுடன் நாலாவது படம் மிக அருமையாக நடித்துள்ளார். கருணாஸ் எல்லோரையும் அழ வைத்துவிடுவார். இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பேரிய வெற்றிப்படமாக இருக்கும். விஷுவலும் பாடலும் செம்மையாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.

கதை நாயகி மேரி ரிக்கெட்ஸ் பேசியதாவது…
எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது. கருணாஸ் சார் நிறைய ஒத்துழைப்பு தந்தார். விமல் சார் நிறையச் சொல்லித் தந்தார். ஒரு அற்புதமான படம். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

ஜே பேபி இயக்குநர் சுரேஷ் மாரி பேசியதாவது..
சினிமாவை நேசிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். போகுமிடம் வெகு தூரமில்லை கதையை நான் படித்திருக்கிறேன். ஜே பேபி படத்தில் மைக்கேல் நிறைய வேலை பார்த்திருக்கிறார் அந்தப்படத்தை எல்லோரும் ரசிக்க அவரும் ஒரு காரணம். மைக்கேல் மிகக் கோபக்காரர். ஆனால் குழந்தை மனம் கொண்டவர். தான் நினைத்ததைத் திரையில் கொண்டு வர வேண்டுமென அடம்பிடிப்பார். நல்ல படைப்பாளி. இந்தப்படம் எல்லோருக்கும் திருப்புமுனையாக இருக்கும். படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி

இயக்குநர் SR பிரபாகரன் பேசியதாவது..
போகுமிடம் வெகு தூரமில்லை தயாரிப்பாளருக்கு முதல் நன்றி. நல்ல கதைகளைத் தொடர்ந்து செய்வேன் எனச் சொன்ன அவர் மனதிற்கு நன்றி. படத்தின் நாயகன் விமல் எனக்கு நெருங்கிய நண்பர், விலங்கு மூலம் மீண்டும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளார். அவர் அடுத்தடுத்த படங்கள் நல்ல எதிர்பார்ப்பில் உள்ளது. இந்தப்படம் மிக எதார்த்தமாக இருக்கிறது எல்லோருக்கும் பிடித்த படமாக இது இருக்கும். மைக்கேல் பற்றி அனைவரும் பேசும்போதே அவரது திறமை தெரிகிறது வாழ்த்துக்கள். கருணாஸ் அண்ணன் உடன் ஏதாவது ஒரு படத்தில் வேலை பார்க்க ஆசை அது தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. அவரது கெட்டப்பே வித்தியாசமாக இருக்கிறது. அவருக்கும் இப்படம் பெயர் சொல்லும் படமாக இருக்கும். ரகுநந்தன் இளையராஜா போல தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் சிறப்பாக உள்ளது. படத்திற்குப் பத்திரிக்கையாளர்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது..
ஜே பேபி இயக்குநருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அந்தப்படம் மிக அழகாக இருந்தது. அதே போல் போகுமிடம் வெகுதூரமில்லை படமும் இருக்கும். இந்தப்படத்திற்கு என்னை அழைத்தது கோகுல் தான். என்னை ஏன் நடிக்கக் கூப்பிடவில்லை எனக் கேட்டேன், இரண்டே கேரக்டர் தான் என்று சொல்லி விட்டார். பிணமாக நடிக்கக் கூப்பிட்டிருந்தாலும் பாடி லாங்க்வேஜ் காட்டி நடித்திருப்பேன், அடுத்த படத்தில் மறந்து விடாதீர்கள். தயாரிப்பாளர் தமிழ் தெரியவில்லை என்றார் தமிழில் நீங்கள் போகுமிடம் நிறைய இருக்கிறது வாழ்த்துக்கள். என் அன்பு மாப்பிள்ளை விமலுக்கு வாழ்த்துக்கள். இயக்குநர் அவர் இந்தப்படத்திற்கே சம்பந்தமே இல்லாதவர் போல் அமைதியாக இருக்கிறார் வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் அருள் தாஸ் பேசியதாவது..
இந்தப்படத்தில் எனக்கு மிகவும் சின்ன ரோல், மைக்கேல் எனக்குப் பெரிதாக அறிமுகமில்லை ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் பார்த்தேன் அருமையான இயக்குநர். ஆர்டிஸ்டிடம் எப்படி வேலை வாங்க வேண்டுமென்று தெரிந்தவர். தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநராக வருவார். தமிழில் டிராவலிங் படங்கள் வருவது அரிது, ஏனென்றால் பல இடங்களுக்குச் சென்று எடுப்பதே கஷ்டம் ஆனால் அந்த ஜானரில் அருமையாக இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள். படம் மிகச்சிறந்த ஃபீல் குட் படமாக இருக்கும். விமலுக்கும், கருணாஸுக்கும் இப்படம் திருப்புமுனையாக இருக்கும். எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ். இந்தப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் தினகரன் பேசியதாவது…
மைக்கேல் எனக்கு நெருங்கிய நண்பர். 2015ல் எனக்கு அறிமுகமானவர். அப்போது இப்படத்திற்காக பைலட் பண்ணியிருந்தார் அதைப்பார்த்த போது பிரமிப்பாக இருந்தது. எந்த அனுபவமும் இல்லாமல் எப்படி இப்படி எடுக்க முடியும் எனப் பிரமிப்பாக இருந்தது. ஆடியன்ஸை எப்படி எங்கேஜ் பண்ணுவது என்பதை அவரது திரைக்கதையில் அத்தனை நுணுக்கமாக வைத்திருந்தார். நான் வாய்ப்பு தேடிப் போகும் இடங்களில் எல்லாம் இவரைப்பற்றிச் சொல்லியிருக்கிறேன். இந்தப்படம் பலமுறை நின்று நின்று ஆரம்பித்தது. ஆனால் நம்பிக்கை குறையாமல் இருப்பார். ஜே பேபி படத்தில் நானும் மைக்கேலும் வேலை பார்த்தோம். அப்போதும் அவரை பார்த்துப் பிரமிப்பாக இருக்கும். இந்தப்படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படைப்பாக இருக்கும். மிக முக்கியமான விசயத்தை இந்தப்படம் பேசுகிறது. இந்தப்படம் வெற்றிபெறவும் மைக்கேலுக்கும் என் வாழ்த்துக்கள். கருணாஸ் அண்ணன், விமல் இருவருக்கும் என் வாழ்த்துக்கள். நன்றி.

கவிஞர் சினேகன் பேசியதாவது..
கோகுல கிருஷ்ணன் மற்றும் தாமோதரன் இருவருக்காகவும் தான் நான் வந்தேன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். போகுமிடம் வெகுதூரமில்லை, படத்தின் தலைப்பே மிகப்பெரிய வாழ்வியல் தத்துவத்தை அழகாகச் சொல்கிறது அது எனக்கு மிகவும் பிடித்தது. தமிழ் தெரியாது எனச் சொல்லிவிட்டு தமிழில் பேசிய, தமிழில் படம் தயாரித்துள்ள தயாரிப்பாளருக்கு நன்றி. நியூசிலாந்தில் அவர் பார்லிமெண்டில் போட்டியிட்டவர், நல்ல படங்கள் தொடர்ந்து செய்வேன் எனச் சொல்லும் அவர் மனது மிகச்சிறப்பானது. ஒரு இயக்குநருக்கான தயாரிப்பாளராக இருக்கிறார் அதற்காகவே அவருக்கு வாழ்த்துக்கள். கருணாஸ் அண்ணா பல தளங்களில் தன்னை நிரூபித்துவிட்டவர், விமல் அவர்களும் இந்தப்படம் மூலம் பெரிய வெற்றியைப் பெறுவார். மிகச்சிறந்த மெலடிகள் தரும் ரகுநந்தன் இன்னும் பெரிய இடம் செல்வார். விமலுக்கும் ரகுநந்தனுக்கும் பெரிய உயரத்தை இந்தப்படம் தரும். ஒரு நேர்த்தியான படைப்பு, ஒரு ஷாட்டில் தெரிந்துவிடும் டிரெய்லரிலேயே அத்தனை பிரமிப்பாகத் தெரிந்து விடுகிறார் அவருக்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.

இயக்குநர் செந்தில்நாதன் பேசியதாவது..
தயாரிப்பாளர் இயக்குநரின் 15 வருடப் போராட்டம் என்றார். இது எல்லோருடைய வாழ்க்கையிலும் நடப்பது தான். எனக்கும் 15 வருடப் போராட்டத்திற்கு பிறகுதான் பூந்தோட்ட காவல்காரன் வாய்ப்பு கிடைத்தது. உங்கள் அர்ப்பணிப்பிற்கு இந்தப்படம் பெரிய வெற்றியைத் தரும். கேமரா, மியூசிக், எடிட்டிங், ஆர்ட் என எல்லாமே அற்புதமாக இருக்கிறது. கருணாஸ், விமல் இருவரும் அசத்தியிருக்கிறார்கள். எல்லோருக்கும் மிகப்பெரிய வெற்றியை இந்தப்படம் தரும் வாழ்த்துக்கள். தாமோதரன் நிறைய ஆதரவு தந்ததாகத் தயாரிப்பாளர் சொன்னார், என் விட்டிலருகே தான் அவர் இருக்கிறார் வாழ்த்துக்கள். மைக்கேலுக்கு இந்தப்படம் இன்னும் நிறைய வாய்ப்புகள் வரட்டும் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் PL தேனப்பன் பேசியதாவது…
இயக்குநர் மைக்கேல் முதலில் என்னிடம் தான் கதையைச் சொன்னார். எனக்கு மிகவும் பிடித்த கதை. நானே பலருக்குச் சொல்லியிருக்கிறேன். நான் தயாரிக்க வேண்டிய படம். ஒரு சில காரணங்களால் முடியவில்லை. கருணாஸிடம் சொன்னேன் அவர் மூலம் இந்தப்படம் ஆரம்பமாகியுள்ளது. இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். இந்த படத்தின் க்ளைமாக்ஸ் யாருமே எதிர்பார்க்காத படி இருக்கும். அத்தனை அற்புதமான படமாக இருக்கும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நன்றி.

இயக்குநர் மைக்கேல் K ராஜா பேசியதாவது..
இது எனது முதல் மேடை, இந்தக்கதையை வைத்துக்கொண்டு 10 வருடம் சுற்றியிருக்கிறேன். அதற்கு முன்னால் இன்னும் பல கதைகளோடு சுற்றியுள்ளேன். போகுமிடம் வெகு தூரமில்லை ஆனால் இந்த இடத்திற்கு வர வெகு தூரம் பயணித்துள்ளேன். தயாரிப்பாளர் பற்றிச் சொல்ல வேண்டும், அவர் குழந்தை மாதிரி. கதை கேட்டவுடன் செய்யலாம் என்றார் நான் எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் கொரோனா வந்து 3 வருடத்தைத் தின்றுவிட்டது. அப்புறம் மீண்டும் எனக்கு இப்போதைய சூழ்நிலையில் படம் செய்யும் ஐடியா இல்லை ஆனால் உனக்காகத் தயாரிக்கிறேன் என்றார். அந்த வார்த்தையில் தான் இங்கு வந்துள்ளோம். நான் துவளும்போதெல்லாம் இந்தக்கதையைக் கேட்டு செம்மையாய் இருக்கு என சிலர் சொல்லும் வார்த்தை தான் ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஊக்கம் . அது போல் இந்தக்கதையைக் கேட்ட அனைவரும் ஊக்கம் தந்துள்ளார்கள். தேனப்பன் சார் மூலம் கருணாஸ் சாரை சந்தித்து கதை சொன்னேன், நாமே பண்ணலாம் என ஊக்கம் தந்தார். திறமை மட்டும் தான் சினிமாவில் உங்களைக் கொண்டு சேர்க்கும். அதில் நம்பிக்கையாக இருங்கள் ஜெயிப்பீர்கள். கேமராமேன் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார். எடிட்டருடன் பயங்கர சண்டை போட்டுள்ளேன் ஆனால் அவர் எடிட்டிங் தான் படமே அதற்காக நன்றி. விமல் சார் பற்றிச் சொல்ல வேண்டும், அவரைப்பற்றி நிறையச் சொன்னார்கள் கொஞ்சம் பயமாக இருந்தது ஆனால் ஷீட்டிங்கில் 7 மணிக்குச் சொன்னால் மேக்கப்போடு வந்து நிற்பார். அத்தனை அர்ப்பணிப்போடு இருந்தார். இந்தப்படத்தில் டயலாக் இல்லாமல் வெறும் முக பாவனைகளில் நடிக்க வேண்டும், அசத்தியிருக்கிறார். இந்தக்கதைக்களமே புதிது ஆனால் இதை நம்பி எடுத்தது மிகப்பெரிய விசயம், தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். படம் நன்றாக வர வேண்டுமென என்னுடன் உழைத்த என் குழுவினர் அனைவருக்கும் நன்றிகள். படம் பாருங்கள் அற்புதமான அனுபவமாக இருக்கும் நன்றி.

நடிகர் கருணாஸ் பேசியதாவது..
இயக்குநர் ஆணித்தரமாக அழுத்தமாகப் பேசக் காரணம் அவரது திறமை தான். அத்தனை சிறப்பாகப் படம் எடுத்துள்ளார். தயாரிப்பாளர் சிவா மிக நல்ல மனம் கொண்டவர். நியூசிலாந்து போய் சாதித்துக் காட்டிய இந்தியன். 24 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் யாரிடமும் நான் போய் வாய்ப்பு கேட்டதில்லை. சினிமா உலகம் யாரையும் மதிக்காது, நமக்கான வாய்ப்புக்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். திரைத்துறை என்பது மிகப்பெரிய பயணம். மைக்கேல் இந்தக்கதை இப்படி தான் வரவேண்டுமெனப் பிடிவாதமாக எடுத்துக் காட்டியுள்ளார். என்னையும் விமலையும் வித்தியாசமாகக் காட்டியுள்ளார். அவருடன் எனக்கு இது தான் முதல் படம், நான் ஒரு ஹீரோவுடன் நடித்த எல்லாப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்தக்கதையைக் கேட்டு இந்தப்படம் நடித்தால் நாம் இறந்த பிறகு பேர் சொல்லிக்கொள்ளும் படமாக இருக்குமென என் குடும்பத்தினரிடம் சொன்னேன். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த வாய்ப்பு என் கையை விட்டுப் போனது, ஆனால் நாம் நடிக்கனும் எழுதியிருந்தால் அது நடக்கும் அப்படிதான் இப்போது நடந்துள்ளது. மகிழ்ச்சி. இந்தப்படத்திற்காக உண்மையாக உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் நன்றி.

நடிகர் விமல் பேசியதாவது..
எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. தாமோதரன் மற்றும் கோகுல் தான் இந்தப்படத்தில் நான் நடிக்கக் காரணம் நன்றி. இயக்குநர் கதை சொல்லிப் பிடித்த பிறகு தான், தயாரிப்பாளரிடம் பேசினேன். வெள்ளை மனத்துக்காரர் கொடுத்த வாய்ப்பை காப்பாற்ற வேண்டுமென நினைப்பார். இந்த மேடையில் நாங்கள் எல்லோரும் இருக்க அவர் தான் காரணம். நான் நிறையப் புதுமுக இயக்குநர்களோடு வேலை பார்த்திருக்கிறேன் அவர்கள் எல்லோரும் பெரிய இயக்குநர்களாக இருக்கிறார்கள் அதே போல் மைக்கேலும் பெரிய இயக்குநராக வர வாழ்த்துக்கள். எப்போதும் முதல் படத்தில் அவர்களின் வாழ்வின் ஜீவன் இருக்கும் இந்தப்படத்திலும் இருக்கிறது. இசையமைப்பாளர் ரகுநந்தனோடு நாலாவது படம் இதுவும் வித்தியாசமாக இருக்கும். கருணாஸ் அண்ணனும் நானும் 15 வருடப் பழக்கம் ஆனால் இந்தப்படத்தில் தான் ஒன்று சேர்ந்துள்ளோம். இது மாதிரியான படம் செய்ததில்லை மிக அழுத்தமான பாத்திரம், மெனக்கெட்டு உழைத்துள்ளோம். எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள்.

தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்களில் இருந்து மாறுபட்டு ஒரு வித்தியாசமான களத்தில், மனதில் புன்னகை வர வைக்கும், வாழ்க்கை அனுபவங்களுடன், அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர்மைக்கேல் K ராஜா.

இதுவரையிலான திரைப்பயணத்தில் தான் ஏற்றிராத வித்தியாசமான பாத்திரத்தில் நாயகனாக விமல் நடித்துள்ளார். கருணாஸ் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள்

இயக்குநர்: மைக்கேல் K ராஜா
தயாரிப்பாளர்: சிவா கில்லாரி (Shark 9 pictures)
இசையமைப்பாளர்: N.R.ரகுநந்தன்
ஒளிப்பதிவாளர்: டெமில் சேவியர் எட்வர்ட்ஸ்
தொகுப்பாளர்: M.தியாகராஜன்
கலை இயக்குநர்: சுரேந்தர்
ஸ்டண்ட் டைரக்டர்: மெட்ரோ மகேஷ்
நடன மாஸ்டர்: ரிச்சி ரிச்சர்ட்சன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : ராகேஷ் ராகவன்
நிர்வாக தயாரிப்பாளர்: வெங்கி மகி
மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா (AIM)

கல்கி 2898 கிபி படத்தின் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது.

கல்கி 2898 கிபி படத்தின் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது. 5வது சூப்பர் ஸ்டார் & பைரவாவின் நம்பகமான நண்பரான புஜ்ஜி 22 மே 2024 ல் அறிமுகமாகிறார் !!

கல்கி 2898 கி.பி., படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உட்சகட்டத்தை எட்டியுள்ளது. கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பரான புஜ்ஜியின் அறிமுகம் மே 22, 2024 அன்று வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது

‘From Skratch EP4: Building A Superstar’ என்ற தலைப்பிலான கண்கவர் திரைக்குப் பின்னால் நம்மை ஒரு அசாத்தியமான காட்சி அனுபவத்திற்குள் கூட்டிச் செல்கிறார் இயக்குனர் நாக் அஷ்வின். 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்த பயணம் நம்மை வியக்க வைக்கிறது. “சூப்பர் ஹீரோ”, “பைரவாவின் சிறந்த நண்பன், ” புஜ்ஜி” என பில்ட் அப்கள், நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தைத் தூண்டுகிறது.

இது குறித்தான வீடியோ லிங்க்

2 நிமிட 22 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, கேரேஜ் அமைப்பிலான செட்டிங்கில், பிரபாஸுடனான சந்திப்பு காட்சிகளைக் காட்டுகிறது, இது மே 22 ஆம் தேதி வெளியாகவுள்ள புஜ்ஜியின் பிரமாண்ட அறிமுகத்திற்கான ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கிறது.

சமீபத்தில் 2898 கி.பி கல்கியின் சாம்ராஜ்யத்தில் அமிதாப் பச்சனின் அஸ்வத்தாமாவின் தோற்றம், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளை ஒருங்கிணைத்து உண்மையான பான்-இந்திய டீஸராகக் அசத்தலால வெளியாகியுள்ளது இந்த டீசர்.

அற்புதமான படைப்பாளி நாக் அஸ்வின் இயக்கத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி போன்ற இந்தியளவிலான முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில், வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், கல்கி 2898 AD இந்த ஆண்டின் மிக முக்கிய படைப்பாக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இப்படம் ஜூன் 27, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

“இங்க நான் தான் கிங்கு” திரைவிமர்சனம்

தாய் தந்தை இழந்து அனாதையான கதாநாயகன் சந்தானம் சென்னையில் உள்ள தனியார் மேட்ரிமோனி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.தனக்கு திருமணம் நடக்க வேண்டும் என்றால் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்பதற்காக தனது நண்பரிடம் கடன் வாங்கி கதாநாயகன் சந்தானம், ஒரு மிகப்பெரிய குடியிருப்பில் ப்ளாட் ஒன்றை வாங்குகிறார்.யார் இந்த 25 லட்சம் ரூபாய் கடனை யார் தருகிறார்களோ அவர்களது மகளை திருமணம் செய்து கொள்வதென்று முடிவெடுத்து பெண் தேடும் படலத்தை ஆரம்பிக்கிறார்.பெண் தேடும் படலத்தில் இருக்கும் போது புரோக்கர் மனோபாலா மூலமாக கதாநாயகன் சந்தானத்திற்கு இரத்தினபுரம் ஜமீனின் பெண் சம்மந்தம் கிடைக்க ஜமீன் குடும்பத்தால் கதாநாயகன் சந்தானத்தின் 25 லட்சம் ரூபாய் கடன் பிரச்சனை தீர்ந்து விடும் என்று எண்ணுகிறார்.

இரத்தினபுரம் ஊரில் உள்ள அனைவரும் கதாநாயகன் சந்தானத்தை மிகப்பெரிய அளவில் ராஜ மரியாதையோடு அவரை வரவேற்று கதாநாயகன் சந்தானத்திற்கு மிகப்பெரிய அளவில் மரியாதை செய்கின்றனர்.இரத்தினபுரம் ஜமீனுக்கு தம்பி ராமையாவுக்கு ஒரு மகன் பால சரவணன் ஒரு மகள் கதாநாயகி ப்ரியாலயா குடும்பமாக இருந்து வருகிறார்கள்.அந்த ஜமீன் தம்பி ராமையாவின் மகள் கதாநாயகி ப்ரியாலயாவின் தாலி கட்டிய மறுகணம் தான் கதாநாயகன் சந்தானத்திற்கு தெரிகிறது ஜமீன் பங்களா மீதே பல கோடிகளுக்கு கடன் இருக்கிறது என்று. அதற்காக திருமணம் முடிந்ததும் ஜமீன் பங்களாவை வாங்கிய கடனுக்காக பேங்க் அதிகாரிகள் சீல் வைத்து விடுகிறார்கள்.இதனை அறிந்து மனம் உடைந்த கதாநாயகன் சந்தானம். வேறு வழி இல்லாமல், தனது மனைவி கதாநாயகி ப்ரியாலயா, மாமனார் தம்பி ராமையாவையும் பால சரவணனை அழைத்துக் கொண்டு சென்னை திரும்புகிறார்.

தன் மனைவி கதாநாயகி ப்ரியாலயாவிடம் வேண்டா வெறுப்புடன் வாழ்ந்து வரும் கதாநாயகன் சந்தானம், இவர்களை வைத்துக் கொண்டு இவர்களை எப்படி சமாளிக்கிறார்.நண்பர்களிடம் வாங்கிய 25 லட்ச ரூபாய் கடனை பிரச்சனையை சமாளித்தாரா? சமாளிக்க வில்லையா? என்பதுதான் மீதிக்கதை.

கதாநாயகன் சந்தானம், தான் தமிழ் திரைப்பட உலகில் ஒரு காமெடி கிங் மேக்கர் என மீண்டும் இந்த இங்கு நான் தான் கிடங்கு திரைப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்.தன் மாமனார் தம்பி ராமையாவை கலாய்க்கும் இடங்கள் அனைத்தும் திரைப்படத்தின் காமெடி ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

அறிமுக கதாநாயகியாக நடித்திருக்கும் ப்ரியாலயா அழகான நடிப்பை அளவாகவே கொடுத்து ஒவ்வொரு காட்சிக்கு கொடுத்திருக்கிறார்.

ஜமீனாக நடித்திருக்கும் தம்பி ராமையா, அவருடைய அனுபவ மிக அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இரண்டு கதாபாத்திரத்தில் வரும் விவேக் பிரசன்னாவின் மிகவும் அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.அதுவும் தீவிரவாதியாக வரும் விவேக் பிரசன்னா இறந்து நடித்த காட்சிகளில் அருமையான நடிப்பை கொடுத்து அசர வைத்திருக்கிறார்.

மனோபாலாவின் நடிப்பு திரைப்படத்தின், காமெடி காட்சிகளுக்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

முனிஷ்காந்த், பாலசரவணன், லொள்ளு சபா மாறன், லொள்ளு சபா சுவாமிநாதன், கூல் சுரேஷ் லொள்ளு சபா சேஷு, என திரைப்படத்தின் மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் மிக சிறப்பான நடிப்பைக் கொடுத்திருந்தனர்.

ஒளிப்பதிவாளர் ஓம் நாராயண ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு கை கொடுத்திருக்கிறது.

இசையமைப்பாளர் இமானின் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

தீவிரவாதிகளின் காட்சிகள் அனைத்தும் இந்த திரைப்படத்திற்கு எந்த ஒரு இடத்திலும் சப்போர்ட் இல்லாமல் தனியாக இருப்பதால் திரைப்படத்தில் அது ஒரு மிகப்பெரிய குறையாக அமைந்திருக்கிறது.

இந்த இங்கு நான் தான் கிடங்கு திரைப்படத்தில் என்னதான் சில குறைகள் இருந்தாலும் காமெடி கலாட்டாகளில் திரையரங்கம் முழுவதும் மக்களின் சிரிப்பு அலை அதிர வைத்திருப்பதால் பல குறைகள் அனைத்தும் நிறைவாக இருக்கிறது.

இங்கு நான் தான் கிங்,கிங்கின் கர்ஜனை இன்னும் பலமாக இருந்திருக்கலாம்