மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம் ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் – ஆர். ஜே. பாலாஜி கூட்டணியில் தயாராகும் ‘புரொடக்சன் நம்பர் 3’!
‘குட் நைட்’, ‘லவ்வர்’ என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது. பெயரிடப்படாத அந்தத் திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆர் ஜே பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக போஸ்டர் மூலம் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘புரொடக்சன் நம்பர் 3’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதனை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
ஃபீல் குட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வழங்கி வரும் தயாரிப்பாளர்களும், ஃபேமிலி என்டர்டெய்னர் ஜானரிலான திரைப்படங்களை தொடர்ந்து அளித்து வரும் நடிகர் ஆர். ஜே. பாலாஜியும் இணைந்திருப்பதால், இவர்களின் கூட்டணியில் தயாராகும் புதிய திரைப்படமும் அனைத்து தரப்பு ரசிகர்களும் கவரும் வகையில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆர்.ஜே பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மட்டும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர் யோகி பாபுவின் நடிப்பில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான ‘சட்னி – சாம்பார்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் ‘மொழி’ திரைப்படம் முதலாக, அழுத்தமான அதே நேரம் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய தரமான படைப்புகளைத் தந்த இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் ‘சட்னி-சாம்பார்’ சீரிஸ் உருவாகியிருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த சீரிஸ் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
நடிகர் யோகி பாபு முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் நடிகை வாணி போஜன் இணைந்து நடித்துள்ளார். ஒரு ஒரிஜினல் வெப் சீரிஸில் யோகி பாபு நாயகனாக நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், இந்த வெப் சீரிஸ் எத்தனை சுவாரஸ்யமானதாக இருக்கும் என்பதை மிகத்தெளிவாக சொல்லும்படி அமைந்துள்ளது. போஸ்டரில் யோகி பாபு ஒரு டைனிங் டேபிளின் மையத்தில், அவரது அப்பாவி முகத்துடன் அமர்ந்திருக்கிறார், அவரைச் சுற்றிப் புன்னகை ததும்ப மற்ற நடிகர்கள் அனைவரும் அருகில் இருக்கின்றனர்.
இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தத் சீரிஸில் நிழல்கள் ரவி, மைனா நந்தினி, தீபா சங்கர், சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான R சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
‘சட்னி-சாம்பார்’ சீரிஸிற்கு பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபல சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மற்றும் இயக்குநர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிப் புகழ் பெற்ற அஜேஷ் அசோக் இந்த சீரிஸிற்கு இசையமைத்துள்ளார்.
‘சட்னி-சாம்பார்’ சீரிஸை, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகள் மூலம் புகழ் பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன் இந்த ஒரிஜினல் சீரிஸிற்கு வசனங்களை எழுதியுள்ளார். கலை இயக்கம் K கதிர் மற்றும் எடிட்டிங் பணிகளை ஜிஜேந்திரன் செய்துள்ளனர்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக்பஸ்டரான இயக்குநர் சுந்தர் சியின் “அரண்மனை 4” திரைப்படத்தை தற்போது ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது.
திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் தற்போது குடும்பத்தோடு வீட்டில் அமர்ந்தபடியே டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் “அரண்மனை 4” திரைப்படத்தை கண்டுகளிக்கலாம்.
சூப்பர்ஹிட் ஹாரர் காமெடி ஜானரில் அரண்மனை படத்தொடரின் தொடர்ச்சியாக வெளியான இந்தப் படத்தில், சுந்தர் சி உடன் நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கமர்ஷியல் எண்டர்டெய்னர்களை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவதில் மாஸ்டர் என்று அறியப்பட்ட சுந்தர் சி மீண்டும் ஹாரர் காமெடியில் ஒரு அழுத்தமான கதையுடன் இப்படத்தைத் தந்துள்ளார்.
அரண்மனை 4 முந்தைய படங்களின் கதைக்களத்திலிருந்து மாறுபட்டு, ஒரு புத்துணர்ச்சியூட்டும் புதிய கதைக்களத்தில், ரசிகர்களை ஒரு புதுமையான ஹாரர் பயணத்திற்கு அழைத்து சென்ற இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை குவித்து, திரையரங்குகளில் ப்ளாக்பஸ்டர் பெற்றது.
அசாமிய நாட்டுப்புறக் கதைகளில் அடிக்கடி குறிப்பிடப்படும் ஒரு ஆவியை அடிப்படையாகக் கொண்டு அரண்மனை 4 படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பாக் எனப்படும் நீர் ஆவியைப் பற்றியது, இது தண்ணீரில் வசிக்கும் மற்றும் அது தொடர்பு கொள்ளும் எந்த மனிதனின் வடிவத்தையும் எடுக்க முடியும். திரில்லர் மற்றும் ஹாரர் ரசிகர்களுக்கு ஒரு அருமையான விருந்தாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா மற்றும் ராஷி கண்ணா உடன், யோகி பாபு, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், கோவை சரளா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்க, E கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு எடிட்டிங் பணிகளை ஃபெனி ஆலிவர் மற்றும் சண்டைக்காட்சிகளை ராஜசேகர் செய்துள்ளார்.
சுந்த சி உடைய வழக்கமான கமர்ஷியல் அம்சங்களுடன், குடும்பத்தோடு பார்த்து மகிழும் இந்த ஹாரர் காமெடித் திரைப்படத்தை தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுகளிக்கலாம்.
விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரிப்பில் எல்மா பிக்சர்ஸ் என் எத்தில்ராஜ் வெளியீட்டில் ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிப்பில் ஜூன் 7 அன்று உலகெங்கும் வெளியான ‘ஹரா’, திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.
திரைக்கு வந்து இரண்டு வாரங்களுக்கு பிறகும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘ஹரா’, அனைத்து தரப்பு ரசிகர்களை குறிப்பாக பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினரை ஈர்த்து வருகிறது. இதன் மூலம் இன்றும் அவர் ‘வெள்ளி விழா நாயகன்’ தான் என்பதை மோகன் நிரூபித்துள்ளார்.
தொடக்கத்தில் தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான ‘ஹரா’, ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து இன்னும் அதிகமான திரைகளில் திரையிடப்பட்டது. இது தவிர மலேசியா, ஐரோப்பா, லண்டன் மற்றும் இலங்கை உள்ளிட்ட பகுதிகளிலும் இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பதினான்கு வருடங்களுக்கு பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் கொடுத்துள்ள ரீ-என்ட்ரியை ரசிகர்கள் கொண்டாடி வருவதோடு, திரைப்படத்தின் உள்ளடக்கத்திற்காகவும் அது கூறும் கருத்துக்காகவும் ‘ஹரா’ படக்குழுவினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, தந்தை-மகள் பாசப்பிணைப்பு காட்சிகள் அவர்களை கவர்ந்துள்ளன.
இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள இப்படத்தின் தயாரிப்பாளர் கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் விநியோகஸ்தர் எல்மா பிக்சர்ஸ் என் எத்தில்ராஜ் இன்று சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இவர்கள் இருவரும் கோவையை சேர்ந்தவர்கள். அன்றைய காலகட்டத்தில் கோவை தம்பி தயாரிப்பில் பல்வேறு வெற்றி படங்களில் மோகன் நடித்தது நினைவிருக்கலாம். தற்போது ‘ஹரா’ வெற்றியின் மூலம் கோயம்புத்தூருக்கும் மோகனுக்கும் உள்ள பந்தம் தொடர்கிறது. ‘ஹரா’ வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்தை தயாரிப்பாளர் மோகன்ராஜ் விரைவில் அறிவிக்க உள்ளார்.
‘ஹரா’ திரைப்படத்தில் மோகன் ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடித்துள்ளார். உலகெங்கும் உள்ள மக்கள் பார்க்க வேண்டிய யூனிவர்சல் சப்ஜெக்டாக உருவாகியுள்ள ‘ஹரா’ திரைப்படத்தில் ‘காலங்களில் அவள் வசந்தம்’ புகழ் கௌஷிக் மற்றும் ‘பவுடர்’ நாயகி அனித்ரா நாயர் மற்றொரு ஜோடியாக நடித்துள்ளனர்.
பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஐபிசி சட்டங்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் ‘ஹரா’ திரைப்படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரித்துள்ளார்.
‘ஹரா’ திரைப்படத்தில் யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ் மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். இசை: ரஷாந்த் அர்வின், ஒளிப்பதிவு: பிரகத் முனியசாமி, மனோ பிரபாகரன், மோகன் குமார், விஜய் ஶ்ரீ ஜி, படத்தொகுப்பு: குணா, சண்டை பயிற்சி: விஜய் ஸ்ரீ ஜி .
இந்தியத் திரையுலகில் பல சாதனைகளை நிகழ்த்திய வரலாற்று ஆளுமைகளான AR ரஹ்மானும், பிரபு தேவாவும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படத்தினை, தங்களது பெருமை மிகு, முதல் படைப்பாக Behindwoods நிறுவனம் தயாரித்து வருகிறது.
Behindwoods நிறுவனம் #ARRPD6 என்ற தற்காலிக பெயரில் இப்படத்தைத் துவக்கியது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்குமென ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், ‘மூன் வாக்’ எனும் அட்டகாசமான தலைப்பை, Behindwoods நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு இசைப்புயல் AR ரஹ்மான், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபு தேவா இணைகிறார்கள் என்ற நிலையில், இருவரையும் போற்றும் வகையிலும், அவர்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும் வகையிலும் ‘மூன் வாக்’ தலைப்பு அமைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் இப்படத்தில், நடிகர்கள் பிரபு தேவா, யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடிக்கிறார்கள்.
இசைப்புயல் AR ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைவரையும் மயக்கும் வகையில் தயாராகி வருகிறது. இப்படத்தின் ஆல்பம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும்.
இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படம் மிகவும் சிறப்பாக உருவாகி வருகிறது. அனைத்து பொழுது போக்கு அம்சங்களுடன், நகைச்சுவை கலந்த அட்டகாசமான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் இருக்கும். இப்படத்தை அடுத்த ஆண்டு 2025-ல் பான்-இந்திய படமாகத் திரைக்குக் கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
Behindwoods வழங்கும் இந்தத் திரைப்படத்தை, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலருமான (CEO) மனோஜ் NS இயக்கி வருகிறார்.மனோஜ் NS, திவ்யா மனோஜ் மற்றும் பிரவீன் இலக் தயாரித்து வருகின்றனர். அனூப் VS ஒளிப்பதிவிற்கும், ஷானு முரளிதரன் தயாரிப்பு வடிவமைப்பிற்கும், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா எடிட்டிங்கிற்கும் பொறுப்பு ஏற்று உள்ளனர்.
‘தியா’ புகழ் நடிகர் பிருத்வி அம்பர்- ‘ரதாவரா’ இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா கூட்டணியில் ‘சௌகிதார்’ எனும் புதிய திரைப்படம் தயாராகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ‘ரோரிங் ஸ்டார்’ ஸ்ரீ முரளி வெளியிட்டார்.
‘தியா’ புகழ் நடிகர் பிருத்வி அம்பர் மற்றும் ‘ரதாவரா’ படத்தின் இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா ஆகிய இருவரும் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘சௌகிதார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிருத்வி அம்பர் ‘சௌகிதார்’ வேடத்தில் நடிக்கிறார். ‘சௌகிதார்’ எனும் படத்தின் தலைப்பை சிவப்பு வண்ண எழுத்துகளில் படக்குழுவினர் வெளியிட்டனர். ‘ரோரிங் ஸ்டார்’ ஸ்ரீ முரளி – இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பாவின் ஆறாவது படைப்பான ‘சௌகிதார்’ படத்தின் தலைப்பை வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். ‘சௌகிதார்’ – ஒரு பன்மொழி திரைப்படம். கன்னடத்தில் y மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் இந்த திரைப்படம் தயாராகிறது.
‘சௌகிதார்’ எனும் தலைப்பை வைத்து இந்த திரைப்படம் மாஸான படம் என நினைத்து விடாதீர்கள். உண்மையில் இது ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் புதிய கதையுடன் களம் காண்கிறார். ‘அனே பாடகி ‘ படத்தில் நகைச்சுவை, ‘ரதாவரா’ படத்தில் வழிப்பாட்டு கருப்பொருள், ‘தாரகாசுர’ திரைப்படத்தில் தனித்துவமான கதை களம், ‘ரெட் காலர்’ எனும் திரைப்படத்தில் க்ரைம் திரில்லர், ‘கௌஸ்தி’ திரைப்படத்தில் கடலோர பின்னணி.. என வித்தியாசமாக வடிவமைத்து ரசிகர்களிடம் பிரபலமானவர்.
பிருத்வி அம்பர் மற்றும் சந்திரசேகர் பாண்டியப்பா கூட்டணியில் தயாராகும் இந்த திரைப்படத்தை வித்யா சேகர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கல்லஹள்ளி சந்திரசேகர் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு சச்சின் பஸ்ரூர் இசையமைக்க, பாடலாசிரியர்கள் வி. நாகேந்திர பிரசாத் மற்றும் பிரமோத் மறவந்தே ஆகியோர் பாடல்களை எழுதுகிறார்கள். படத்தில் இடம்பெறும் ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை விரைவில் படக் குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
‘அனே பாடகி’ படத்தின் மூலம் சாண்டல்வுட்டில் அறிமுகமான இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா ‘ரதாவரா’ படத்தின் மூலம் புகழ்பெற்றார். இந்த வெற்றிகளை தொடர்ந்து அவர் பாலிவுட்டிலும் அறிமுகமானார். கிஷோர் நடித்த ‘ரெட் காலர்’ எனும் அதிரடி திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை நிறைவு செய்ததும் குருதத் கனிகா இயக்கிய ‘கரவாளி’ எனும் திரைப்படத்திற்கும் சந்திரசேகர் பாண்டியப்பா கதை எழுதியிருக்கிறார்.
இந்தியாவின், இந்த ஆண்டின் மிகப் பெரிய படத்தின் எதிர்பார்ப்புமிக்க பாடல் – பிரபாஸ் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் ஆகியோர் இணைந்து கலக்கும் “கல்கி 2898 கி.பி” திரைப்படத்தின் “பைரவா ஆன்தம்”
மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில், பெரும் காத்திருப்பிற்கு பிறகு “கல்கி 2898 கி.பி.” படத்திலிருந்து, தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக, “பைரவா ஆன்தம்” பாடலை வெளியிட்டுள்ளனர்.
உலகளாவிய பிரபலங்களாக திகழும் பிரபாஸ் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் ஆகியோர் இணைந்து கலக்கும் இந்தப் பாடல், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கல்கி 2898 கிபி திரைப்படம், திரையுலகின் மாயாஜாலம் எனலாம், இது இந்திய நாட்டின் முன்னணி நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பில், காமிக்-கான் சான் டியாகோவில் முத்திரை பதித்த முதல் இந்தியத் திரைப்படமாகும், இது அனிமேஷன் முறையில் முன்னுரை வீடியோ தொகுப்பு கொண்ட முதல் இந்தியத் திரைப்படம் மற்றும் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் 4 டன் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’யையும் காட்சிப்படுத்தி இதுவரையிலான திரை வரலாற்றில், பல புதுமைகளை நிகழ்த்திய படைப்பாக திகழ்கிறது இப்படம்.
எதிர்கால உலகில், காசியின் இருண்ட பக்கத்தில் அமைக்கப்பட்ட மியூசிக் வீடியோ ஒரு காட்சி அற்புதமாக அமைந்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், குமாரின் பாடல் வரிகளில், தில்ஜித் டோசன்ஜ் மற்றும் விஜய்நரேன் பாடிய இப்பாடல், படத்தில் பிரபாஸின் பைரவா கதாபாத்திரத்தின் சரியான அறிமுகமாக அமைந்துள்ளது. போனி வர்மாவின் நடன அமைப்பில், தில்ஜித் மற்றும் பிரபாஸின் தனித்துவமான நடன அசைவுகளும், அற்புதமான காட்சியமைப்புகளும் கலந்து ரசிகர்களை மெய்மறக்க செய்கிறது!!
வீடியோ பாடலைக் காண. – https://www.youtube.com/watch?v=5UfGZFrXKig
கல்கி 2898 கிபி படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உட்பட இந்தியாவின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றுள்ளனர். வைஜெயந்தி மூவீஸ் தயாரித்துள்ள இப்படம் 2024 ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தென்னிந்தியாவின் முன்னணி ஜூவல்லரி நிறுவனங்களில் ஒன்றாக ஏ.வி.ஆர். ஸ்வர்ணமஹால் ஜூவல்லரி “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” நகை டிசைன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிகழிச்சியில் கலந்து கொண்ட நடிகை ப்ரீத்தி முகுந்தன் “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” நகைகள் அறிமுகம் செய்தார். இவ்விழா சென்னை அண்ணா நகரில் உள்ள ஏ.வி.ஆர். ஸ்வர்ண மஹால் ஜூவல்லரியில் கோலாகலமாக நடைபெற்றது.
நகை அறிமுகம்குறித்து இயக்குனர் திரு AVR சித்தாந்த் கூறியதாவது:-
எங்களின் முந்தய குமரி கண்டம் கலெக்ஷனை பெரும் வெற்றியாக்கிய வாடிக்கையாளர்களுக்கு நன்றி. அதன் தொடர்ச்சியாகப் புதியதோர் உலகிற்கு நாங்கள் உங்களை அழைத்துச்செல்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். குமரிக்கண்டம் என்றாலே, தொன்மையான, அழியாத ஒரு பாரம்பரியத்தைக் குறிக்கும். அதனை மையமாகக் கொண்டு, “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” நகைகள், நம் முன்னோர்களின் கலைநுணுக்கத்தை, நவீன சாயலில் வழங்கும் ஒரு முயற்சியாகும். ஒவ்வொரு நகையும், அந்தத் தொன்மையான பரம்பரை மாறாமல், புதியதோர் அழகில் உருவாக்கப்பட்டுள்ளது.
நம் பாரம்பரியம் போற்றும் வகையில் அற்புத கலைநுணுக்கங்களோடு, உங்கள் வீட்டு இளவரசிக்கான, திருமண வைபவத்திற்கு ஏற்ற ஆயிரக்கணக்கான நகைகள் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது! கற்பனையை மிஞ்சிய குமரிக்கண்டத்து பொற் சிற்பி நெய்த திருவாபரணங்கள் இங்குக் கிடைக்கும்.
இந்தக் குமரிக்கண்டம் கலெக்ஷனின் சிறப்பு என்னவெனில், இது முந்தைய கலெக்ஷனைவிட அதிக பரிசோதனைகளை எதிர்கொண்டு, அவற்றில் தோன்றிய பல புதுமைகளைச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. இவை, உங்கள் பார்வைக்கு மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கை முறைமைகளில் ஒரு முக்கியமான பங்காக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.மேலும் சிறப்பம்சமாக எங்களது அனைத்து ஷோரூம்களிலும் குமரிக்கண்டத்து உலகின் வழி எம்பெருமானின் வைபவத்துடன் கூடிய உற்சவ தரிசனம் நடைபெறுகிறது. அதனையும் வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம் என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய நடிகை ப்ரீத்தி முகுந்தன்:-
ஏ.வி.ஆர்.ஸ்வர்ண மஹாலுடன் இரண்டாண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளேன் “குமரிக்கண்டம் கலெக்ஷன் 1.0” நகைகளை நான் தான் அறிமுகம் செய்தேன், நமது வரலாற்றையும் பாரம்பரியத்தையும் நகைகள் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் அருமையான விஷயம் “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” அறிமுகப்படுத்துவதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.இந்த அழகிய கலெக்ஷனை உங்கள் கண்களால் பார்க்க, உங்கள் இதயத்தில் உணர, ஏ.வி.ஆர். ஸ்வர்ண மஹால் ஜூவெல்லருக்கு வருகை தாருங்கள்.
ஏ.வி.ஆர். ஸ்வர்ணமஹால் குறித்து
ஏ.வி.ஆர். ஸ்வர்ணமஹால் ஜூவல்லரி சேலத்தில் ஸ்வர்ணபுரி, கடைவீதி – 2 கிளைகள், சென்னை, புதுச்சேரி, தாரமங்கலம், மேட்டூர், ஈரோடு, ராசிபுரம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, அரூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர்-ஜெயநகர், டிக்கென்சன் ரோடு மற்றும் மல்லேஸ்வரம் ஆகிய இடங்களில் பரிசுத்தமே எங்கள் பாரம்பரியம் என்ற கொள்கையோடு செயல்பட்டு வருகின்றன.
~ ZEE5 ஒரிஜினல் தெலுங்கு சீரிஸான ”பருவு” தற்போது ZEE5 இல் ஸ்ட்ரீமாகிறது. மேலும் இந்த சீரிஸ் தமிழ் மொழியிலும் ஸ்ட்ரீமாகிறது ~
சித்தார்த் நாயுடு மற்றும் வட்லபதி ராஜசேகர் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்த சீரிஸை, சுஷ்மிதா கொனிடேலா தயாரித்துள்ளார். பவன் சதினேனி ஷோ ரன்னராக பணியாற்றியுள்ளார். பருவு சீரிஸில் நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா, நாகபாபு மற்றும் பிரனீதா பட்நாயக் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ZEE5 ஒரிஜினல் தெலுங்கு க்ரைம் த்ரில்லர் சீரிஸான ”பருவு” சீரிஸை பெருமையுடன் அறிவித்துள்ளது. ஷோ ரன்னராக பவன் சதினேனி பணியாற்ற, நம்பிக்கைக்குரிய அறிமுக இயக்குநர்களான சித்தார்த் நாயுடு மற்றும் வட்லபதி ராஜசேகர் ஆகியோர் இந்த சீரிஸை இயக்கியுள்ளனர். சுஷ்மிதா கொனிடேலா தயாரித்துள்ள இந்த சீரிஸை, தலைசிறந்த எழுத்தாளரான சித்தார்த் நாயுடு எழுதியுள்ளார். இந்த பரபரப்பான திரில்லர் சீரிஸில் நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா, நாகபாபு மற்றும் பிரனீதா பட்நாயக் ஆகியோர் நடித்துள்ளனர். கவுரவக் கொலைகளுக்குப் பலியாகிவிடுமோ என்ற அச்சத்தில், ஒரு தம்பதியினர் தங்களையும் தங்கள் காதலையும் காத்துக் கொள்ளப் போராடுகிறார்கள், சதிகளைத் தாண்டி அவர்கள் வெற்றி பெறுவார்களா, அல்லது சாதி வேறுபாடுகள் அவர்களைப் பிரிக்குமா? பாரம்பரியத்தைக் கடக்கும் உலகில், குடும்பங்கள் தங்கள் ஜாதியைக் காப்பாற்ற முனைந்தால் என்னவாகும் என்பது தான் இந்த சீரிஸின் கதை . ZEE5 இல் “பருவு” பிரத்தியேகமாகத் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் ஸ்ட்ரீமாகிறது. அன்பு, விசுவாசம் மற்றும் மரியாதையைப் பாதுகாக்க ஒருவர் எவ்வளவு தூரத்துக்குச் செல்வார்கள் என்பதைப் பற்றியும், மனிதர்களின் தெரியாத பக்கங்களை இந்த சீரிஸ் வெளிச்சமிட்டுக் காட்டும். ZEE5 இல் முதல் எபிஸோடை இலவசமாகப் பாருங்கள்.
காட்டுத்தனமான சாதி அரசியலால் ஆளப்படும் உலகில், சண்டையிடும் சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வதன் மூலம் சமூக விதிமுறைகளை மீறத் துணியும் ஒரு ஜோடியின் கதையைச் சொல்கிறது பருவு. அவர்களது குடும்பத்தினரால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அந்த ஜோடி, குடும்பத்தில் ஏற்படும் ஒரு மரணம் காரணமாக ஒரு நாள் தங்கள் ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களைப் பிரிக்கும் நோக்கில் ஒரு மோசமான திட்டம் தீட்டப்பட்டுள்ளதை அறியும் இந்த ஜோடி, உயிர்வாழ்வதற்கான போராட்டத்தில், அந்த திட்டத்தைத் தோற்கடிக்க நினைக்கும்போது, அவர்கள் வேட்டையாடப்படும் ஒரு நரகத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். பாரம்பரியம், கலாச்சாரம், ஜாதிய அடுக்குகள், குடும்ப மரியாதை என சமூகத்தின் பல அடுக்குகளைத் தாண்டி, தங்களின் காதலில் அவர்கள் வெற்றி பெற முடிந்ததா? என்பதை, இந்த சீரிஸ் பல பரபரப்பான திருப்பங்களுடன், பார்வையாளர்களைக் கவரும் வகையில் சொல்கிறது.
ZEE5 இல் “பருவு” இன்றிலிருந்து தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமாகிறது. ZEE5 இல் முதல் எபிஸோடை இலவசமாகப் பார்க்கலாம்.
”‘கண்ணப்பா’ காவியம் உருவாவதற்கு காரணம் சிவபெருமான் தான்” – டீசர் வெளியீட்டு விழாவில் டாக்டர்.மோகன் பாபு நெகிழ்ச்சி
விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திட்டமான ‘கண்ணப்பா’ படத்தை ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தை பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான டாக்டர்.மோகன் பாபு தயாரிக்க, முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நாயகனான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடிக்க, மோகன் லால், பிரபாஷ், அக்ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று (ஜூன் 14) பிரமாண்டமாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் டாக்டர்.மோகன் பாபு பேசுகையில், “’கண்ணப்பா’ எந்த தலைமுறையினருக்கும் புதியவர். மகா கவி துர்ஜதி இதை எப்படி பக்தி சிரத்தையுடன் எழுதினார்?, ஸ்ரீகாளஹஸ்தியின் முக்கியத்துவம் என்ன? என்பதை இந்த படத்தில் காட்டியுள்ளோம். மிகுந்த முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்திய சினிமாவின் மிகப்பெரிய காவியமாக உருவாகியுள்ள இப்படத்தில் இந்தியாவின் நான்கு மூலைகளிலிருந்தும் பெரிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பரமேஸ்வராவின் கட்டளையின் பேரில், கண்ணப்பாவிற்காக நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம். மேலும் பிரபாஸுக்காக எழுதப்பட்ட கதையாகவும் இதை கிருஷ்ணம் ராஜு கொடுத்திருக்கிறார். இந்த மாபெரும் காவிய படைப்பின் தயாரிப்பாளராக நான் இருந்தாலும், இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் ‘கண்ணப்பா’-வின் காவியத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள், அவர்கள் அனைவருக்கும் உங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
நாயகன் விஷ்ணு மஞ்சு பேசுகையில், “’கண்ணப்பா’ படம் முதல் நாளிலிருந்து இன்று வரை ஒவ்வொரு ரசிகர்களின் தோளிலும் படமாகி வருகிறது. சமூக வலைதளங்களில் ரசிகர்களின் ஆதரவைப் பார்த்தேன். அதனால் தான் அவர்களில் சிலரை இங்கு அழைத்தேன். 2014 ஆம் ஆண்டு கண்ணப்பாவின் பயணம் தொடங்கியது. 2015-ல் நான் கண்ணப்பாவை தொடங்கும் போது, என் கடவுள், என் அப்பா மோகன்பாபு, வின்னி, அண்ணன் வினய் ஆகியோர் கொடுத்த ஊக்கத்தால் தான் என்னை முழுவதுமாக நம்பி கண்ணப்பாவை திரைக்குக் கொண்டு வர முடிந்தது.
படம் தொடங்க நினைத்த போது அதற்கான சரியான குழு எனக்கு அமையவில்லை என்றாலும், சிவபெருமான் அனுமதி அளித்ததால் படத்தை தொடங்குவதற்கான அனைத்தையும் நான் தயார் செய்தேன், அதற்கு காரணம் கண்ணப்பாவின் ஆசீர்வாதமும் கூட. இதை ஒரு புராணக்கதை என்று மட்டுமே பார்க்க கூடாது. 14 ஆம் நூற்றாண்டில் நாயனார்களைப் பற்றி கவிஞர் துர்ஜதி எழுதினார். கண்ணப்பா ஒன்பாதவது நாயனார். இது 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தை பிகானர் பல்கலைக்கழகத்தில் கண்டோம். அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு, அதை மிகவும் கவனமாகப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு பயணிக்கிறேன். கண்ணப்பா என் குழந்தை மாதிரி. ஏன் இத்தனை கலைஞர்களை இந்தப் படத்துக்குத் தேர்வு செய்தார்கள் என்பது படத்தை பார்த்த பிறகுதான் அனைவருக்கும் புரியும். இனிமேல், ஜூலை முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கண்ணப்பாவிடம் இருந்து அப்டேட்கள் வரும். இது என் பார்வையில் எழுதப்பட்ட ‘கண்ணப்பா’, அதனால் தான் கண்ணப்ப உலகத்துக்கு எல்லாரையும் அழைத்தோம். நான் இரண்டாம் நூற்றாண்டின் கதையைச் சொல்கிறேன், அந்தக் காலகட்டத்திற்கு ஏற்றவாறு படத்தை நியூசிலாந்தில் படமாக்கினோம். பட்ஜெட் பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை, வரலாற்றில் இடம்பிடிக்கும் ஒரு திரைப்படத்தை உருவாக்குகிறோம் என்ற நம்பிக்கையுடன் படத்தை தயாரித்து வருகிறோம். ப்ரீத்தி முகுந்தன் நெமாலியாக நடிக்கிறார். கண்ணப்பாவை உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஹர ஹர மகாதேவ்.” என்றார்.
இயக்குநர் முகேஷ் குமார் சிங் பேசுகையில், ”கண்ணப்பா படத்தில் எனது பலம் எனது கலைஞர்களிடம் உள்ளது. விஷ்ணுவின் நடிப்பு மற்றும் அவர் பட்ட கஷ்டங்கள் பற்றி அதிகம் சொல்ல முடியாது. கடும் குளிரிலும் ஒட்டுமொத்த குழுவும் கடுமையாக உழைத்தோம். விஷ்ணு சார், சரத்குமார். அய்யா மோகன்பாபு சார் மிகவும் பிரமாதமாக செயல்பட்டார்கள். நான் எதிர்பார்த்ததை விட படம் மிகச்சிறப்பாக வந்திருப்பதற்கு காரணம் கடவுளிடம் நான் பிரார்த்தனை செய்ததாக இருந்தாலும், கண்ணப்பா எதையும் கேட்காமல் கடவுளுக்காக தன்னை எப்படி அர்ப்பணித்தார் என்பதை இந்த படத்தில் மிக பிரமாண்டமான முறையில் சொல்லியிருக்கிறோம்.” என்றார்.
நடிகர் சரத்குமார் பேசுகையில், “’கண்ணப்பா’ வெறும் திரைப்படம் அல்ல, இது நமது வரலாறு. ஒவ்வொருவரும் அவரவர் வேடங்களில் வாழ்ந்தனர். இப்போதும் அந்த வேடங்களில் நாங்கள் இருக்கிறோம். அனைவரும் வரலாற்றை மறந்து விடுகிறார்கள். நம் வரலாற்றை நாம் சொல்ல வேண்டும். அனைவரும் கண்ணப்பாவைப் பார்க்க வேண்டும்.” என்றார்.
நடிகை மதுபாலா பேசுகையில், “கண்ணப்பா போன்ற படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். எனக்கு இதுபோன்ற நல்ல வாய்ப்பை வழங்கிய மோகன் பாபுவுக்கும், விஷ்ணுவுக்கும் நன்றி. விஷ்ணு மஞ்சுவுக்கு படத் தயாரிப்பில் அறிவு அதிகம். விஷ்ணு போன்ற ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு பிரமாண்டமான காவியத் திரைப்படத்தை எடுக்க முடியும். ஒரு பெரிய யாகத்தில் பங்கேற்பது போல் உணர்ந்தேன்.” என்றார்.
நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில், “’கண்ணப்பா’ படத்தில் வாய்ப்பு கொடுத்த மோகன் பாபு, விஷ்ணு, முகேஷ் சிங் ஆகியோருக்கு நன்றி. இந்தப் படத்திற்காக அனைவரும் தங்களால் இயன்றதை கொடுத்துள்ளனர். படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.