Breaking
June 8, 2026

Cinema

‘எமகாதகி’ திரை விமர்சனம்

தஞ்சை மாவட்டம் அருகில் அந்த ஒரு அழகிய கிராமத்தில் மேல் ஜாதியும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் சிலர், பொருளாதாரத்தில் பின் தங்கி இருப்பவர்களை கீழ் ஜாதியும் என்று எண்ணி அவர்களை எடுபிடி வேலைக்கு வைத்துக் கொள்வது அக்கிராமத்தில் பழக்கமாக இருந்து வருகிறது.

அந்த கிராமத்தின் முன்னாள் ஊர் தலைவர் மற்றும் கோவில் தர்மகர்த்தாவாக இருந்த, தனது மகன் வேறு ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் தன்னால் அந்த கிராமத்தில் தலைநிமிர்ந்து நடக்க முடியவில்லை என்று எண்ணி வருந்தி கொண்டிருக்கிறார்.

அந்த கிராமத்தில் தலைவராக இருக்கும் ராஜூ ராஜப்பன். அவருடைய மனைவி கீதா கைலாசம். இவர்களுக்கு ஒரு மகள் கதாநாயகி ரூபா கொடுவாயூர் ஒரு மகன் சுபாஷ் ராமசாமி இருக்கிறார்கள்.

சிறு வயது முதலே அவ்வப்போது மூச்சு விடுவதில் சிரமம் இருந்து வருகிறது கதாநாயகி ரூபா கொடுவாயூர். இதனால், இவர் சுவாச மருந்தை எடுத்துக் கொண்டு வருகிறார்.

ஊர் தலைவர் ராஜூ ராஜப்பன்.
மகன் சுபாஷ் ராமசாமிக்கு திருமணம் முடிந்து அவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

ஊர் தலைவர் ராஜூ ராஜப்பன்.
மகன் சுபாஷ் ராமசாமி மற்றும் நண்பர்கள் சேர்ந்து ஊர் கோவிலில் இருக்கும் சாமியின் கிரீடத்தைத் திருடி தொழில் தொடங்கி, அந்த தொழிலும் நஷ்டத்தில் முடிந்து விடுகிறது.

இன்னும் இரு வாரத்தில் ஊர்த் திருவிழா நடைபெற இருப்பதால் ஊர் தலைவர் ராஜூ ராஜப்பன்.
மகன் சுபாஷ் ராமசாமிக்கு அவருடைய நண்பர்களும் அடமானம் வைத்த ஊர் கோவிலில் இருந்து எடுத்த சாமியின் கிரீடத்தைத் எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தநிலையில், கடும் கோபத்துடன் வீட்டிற்கு வரும் ஊர் தலைவர் ராஜூ ராஜப்பன் தனது மனைவியுடன் சண்டை போட்டு அவரை கைநீட்டி அடித்து விட
அம்மாவை எதற்காக அடித்தீர்கள்.? என்று கேள்வியெழுப்ப ஊர் தலைவர் ராஜூ ராஜப்பன் கதாநாயகி ரூபா கொடுவாயூரை அடித்து விடுகிறார்.

இதனால், மனம் உடைந்த
கதாநாயகி கதாநாயகி ருபா கொடுவாயூர் அழுது கொண்ட தனது ரூமிற்கு சென்று விடுகிறார்.

இதனை தொடர்ந்து நடு இரவில் எழுந்த அம்மா கீதா கைலாசம், தனது மகள் ரூமுக்கு செல்ல அங்கு மகள் கதாநாயகி ருபா கொடுவாயூர் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததைக் பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

கதாநாயகி ருபா கொடுவாயூர்
தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விஷயம் நம் கிராமத்திற்கு தெரிந்தால், குடும்ப கெளரவம் மற்றும் மனம் போய்விடும் மூச்சுத் திணறலால் கதாநாயகி ருபா கொடுவாயூர் இறந்து விட்டதாக குடும்பத்தினர் கூறிவிடுகின்றனர்.

கதாநாயகி ருபா கொடுவாயூர் இறந்துவிட்ட செய்தியறிந்து அந்த கிராமமே துக்கத்தில் மூழ்கி விடுகிறது.

இந்த நிலையில், இறுதி சடங்கு நடத்துவதற்காக கதாநாயகி ருபா கொடுவாயூர் உடலை கிராமத்துஇளைஞர்கள் சிலர் தூக்க முயல, இறந்த உடல் கனக்க, அவர்களால் அந்த உடலை தூக்க முடியவில்லை.

இருந்த உடல் அசைவதைக் கண்டு இளைஞர்கள் அனைவரும் பயந்து ஓடுகின்றனர்.

கதாநாயகி ருபா கொடுவாயூர் உடலை வீட்டை விட்டு வெளியே எடுத்துச் செல்ல முடியாத அளவிற்கு தடுத்து நிறுத்தும் அமானுஷ்ய சக்தி யார்? கதாநாயகி ருபா கொடுவாயூர் தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டாரா.? வேறு யாராவது கொலை செய்து தூக்கில் மாட்டி விட்டார்களா? என்பது தான் இந்த எமகாதகி திரைப்படத்தின் மீதிக்கதை

இந்த “எமகாதகி” திரைப்படத்தில் கதாநாயகனாக நரேந்திர பிரசாத், நடித்திருக்கிறார்

அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நரேந்திர பிரசாத்,
மிகவும் கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

அறிமுக நடிகராக நரேந்திர பிரசாத் மிக அருமையாக கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்ததால் நம்மால் ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது.

இந்த எமகாதகி திரைப்படத்தில் கதாநாயகியாக ரூபா கொடுவாயூர் நடித்துள்ளார்.

காதல், அழுகை, கோபம், குறும்புத்தனம் என பல காட்சிகளில் தனது முக பாவனைகளை மிக அழகான நடிப்பை கொடுத்து லீலா கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

அதிலும், பிணமாக இருக்கும் காட்சியில் அழகாகவும் அருமையாகவும் நடித்திருக்கிறார்.

கதாநாயகி ரூபா கொடுவாயூர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம், அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுபாஷ் ராமசாமியும் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜூ ராஜப்பன் ஊர் தலைவர் கதாபாத்திரத்தில் மிக அருமையாக பொருந்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுமே மிகவும் இயல்பாகவே தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்து முடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்க் இவரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் ஜெசின் ஜார்ஜின் இசையில் மூன்று பாடல்களும் அருமை பின்னணி இசை கதையோடு பயணிக்க வைத்திருக்கிறார்.

தமிழ் திரைப்பட உலகில் வித்தியாசமான கதைகளத்துடன் அனைவரும் திரும்பி பார்க்கும்படியான ஒரு படைப்பு படைத்திருக்கிறார் இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜயசீலன்.

நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் & ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ பிரம்மாண்டமாகத் துவங்கியது !!

1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்பட பூஜை !!

100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம்!!

தமிழ் திரையுலகின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ் (பி) லிமிடட் நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பில் கமர்ஷியல் கிங் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.

1 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில், படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, இப்படத்தின் பூஜை, தமிழ் சினிமா இதுவரை கண்டிராத வகையில், மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் … உட்படப் பல முன்னணி பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் (Vels Film International Limited) நிறுவனத்தின் டாக்டர் ஐசரி கே. கணேஷ், மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் (Ivy Entertainment) இணைந்து, முதல் பாகத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமாக, இப்படத்தை 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறார்கள்.

தனது தனித்துவமான காமெடி எண்டர்டெயினர் படங்கள் மூலம், திரையுலகைச் செழிக்க வைப்பதுடன், ரசிகர்களைத் தொடர்ந்து மகிழ்வித்து வரும் கமர்ஷியல் கிங் இயக்குநர் சுந்தர் சி. இப்படத்தை இயக்குகிறார். இப்படம் அழுத்தமான கதையுடன், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காமெடி எண்டர்டெயினராக உருவாகவுள்ளது. இயக்குநர் சுந்தர் சி, நயன்தாரா இருவரும் முதல்முறையாக இணைந்திருப்பது, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் துனியா விஜய், ரெஜினா கஸண்ட்ரா, யோகிபாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், இனியா, மைனா நந்தினி ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். தொழில் நுட்ப குழுவில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு, ஃபென்னி ஆலிவர் எடிட்டிங், வெங்கட் ராகவன் வசனம், கலை இயக்கம் பொன்ராஜ், சண்டைப்பயிற்சி ராஜசேகர் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

பரபரப்பான ஆக்சன், வலுவான கதைக்களம், நகைச்சுவை கலந்து ஒரு அற்புதமான திரை அனுபவமாக இப்படம் உருவாகவுள்ளது.

’கிங்ஸ்டன்’ திரை விமர்சனம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் அந்த கிராம மக்களால், கடலுக்குள் சென்று மீன்பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் என்ன காரணம், என்றால் பேராசை பிடித்த ஒருவரின் அமானுஷ்ய ஆன்மா அந்த கடல் முழுவதையும் ஆக்கிரமித்து அங்கு மீன் பிடிக்க வருபவர்களை கொன்று குவிப்பது வருகிறது.

அதனால், அந்த கிராமத்திலுள்ள மக்கள் சுமார் 40 ஆண்டுகளாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதோடு, கிடைக்கும் வேலைகளை இந்த கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.

அதில் சில இளைஞர்கள் மட்டும் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த இளைஞர்களில் ஒருவரான கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார் கொஞ்ச நாட்கள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டாலும், அதன் உண்மையான பின்னணி என்னவென்று தெரிந்ததும் அதில் இருந்து விலகுவதோடு, தனது கிராம மக்கள் இழந்த வாழ்வாதாரதை மீட்டுக் கொடுக்க முடிவு செய்கிறார்.

அதன்படி, மர்மம் சூழ்ந்த அந்த கடலுக்குள் சென்று அமானுஷ்ய ஆத்மாவின் பிரச்சனையை தீர்க்க நினைக்கும் கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமார், தனது நண்பர்களுடன் கடலுக்குள் செல்ல, கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமாரும் மற்றும் நண்பர்களும் உயிருடன் திரும்பி கரைக்கு உயிருடன் வந்தார்களா? உயிருடன் வரவில்லையா?, என்பதுதான் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த கிங்ஸ்டன் திரைப்படத்தில் கதையின் நாயகனாக ஜிவி பிரகாஷ் குமார் நடித்திருக்கிறார்.

மீனவ கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், தோற்றம் மற்றும் நடிப்பு இரண்டிலும் மிக அருமையாக நடித்திருக்கிறார்.

இந்த கிங்ஸ்டன் திரைப்படத்தில் கதாநாயகியாக திவ்யபாரதி நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் திவ்ய பாரதிக்கு திரைப்படத்தில் பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும், திவ்ய பாரதி சில காட்சிகளில் திணிப்பதற்காகவே திரைப்படத்தில் திணித்திருக்கிறார்கள்.

அழகம்பெருமாள், சேத்தன், குமரவேல், வில்லனாக நடித்திருக்கும் சாபுமோன் அப்துசாமத், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன். பி.ஏ, பிரவீன், பயர் கார்த்திக் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை மிகவும் சிறப்பாக சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய், ஒளிப்பதிவு மூலம் கடலின் அழகு, மற்றும் ஆபத்து மற்றும் பிரமாண்டம் என அனைத்தையும் திரையில் மிக அருமையான காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்,இசையில் பாடல்கள் பின்னணி இசை மிக அருமையாக அமைந்திருக்கிறது.

கடலில் நடக்கும் திகில் கதையை மிகவும் ஃபேண்டஸியாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அழுத்தமான கதை மற்றும் மிக அருமையான திரைக்கதை இல்லாததால், அவருடைய ஃபேண்டஸி மற்றும் திகில் யோசனைகள் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடையே எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தவில்லை

‘நிறம் மாறும் உலகில்’ திரைவிமர்சனம்

தனது பிறந்தநாள் விழாவில் தன் தாயுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறும் லவ்லின் சந்திரசேகர் ரயிலில் பயணிக்கும் போது டிடிஆர் ஆன யோகி பாபுவை சந்திக்கும்போது லவ்லின் சந்திரசேகரின் நிலைமையை புரிந்துக்கொள்ளும் யோகி பாபு, தாய் என்பவர் எவ்வளவு முக்கியம் என்பதை லவ்லின் சந்திரசேகருக்கு உணர்த்தும் வகையில் நான்கு கதைகள் கூறுகிறார்.

தாய் கனிகா இறந்த துக்கத்தில் தாய் பாசத்திற்காக ஏங்கும் மும்பை தாதா, நட்டி நடராஜ் குழந்தைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கினாலும் கடைசி காலத்தில் பசியோடு இறக்கும் தாய், தந்தை பாரதிராஜா வடிவுக்கரசி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தன் தாயை காப்பாற்ற முடியவில்லை மகன் ரியோ ராஜ் சோகம், தாய் ஆதிரா என்ற உறவுக்காக எதை வேண்டுமானாலும் தூக்கி எரிய தயாராக இருக்கும் ஆதரவற்ற இளைஞன், சாண்டி, துளசி என நான்கு விதமான நல்ல கதைகளும், அதில் பயணித்த கதாபாத்திரங்களின் தாய் மீதான பாசப் போராட்டம் தான்

லவ்லின் சந்திரசேகரிடம் யோகி பாபு கூறும் அந்த நான்கு கதைகளுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை ’தாய்’ என்ற உறவு மட்டுமேதான் என அனைவரும் கொடுத்த கதாபாத்திரங்களை உணர்ந்து நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

இவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ்காந்த், காவியா அறிவுமணி, அய்ரா கிருஷ்ணன், முல்லை அரசி, மைக் கோபி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், சுரேஷ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி என அனைத்து கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு மிகச் சிறப்பான நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் மல்லிகா அர்ஜுனன் மற்றும் மணிகண்ட ராஜு ஆகியோரது ஒளிப்பதிவு மூலம் நான்கு கதையிலும் மிக நேர்த்தியான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தேவ் பிரகாஷ் ரீகனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.

நான்கு கதைகளையும் தாய் செண்டிமெண்டோடு சொன்னது தவறில்லை, ஆனால் நான்கு கதைகளிலும் அளவுக்கு அதிகமான சோகத்தை கொடுத்திருப்பது தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை இருந்தாலும் மிக அருமையாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரிட்டோ ஜே.பி.

பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் புதிய படம்

BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!

BV Frames நிறுவனம் சார்பில், பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், புதுமையான கதைக்களத்தில் உருவாகும், புதிய படத்தின் படப்பிடிப்பு, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.

முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இந்த புதிய திரைப்படத்திற்கு, தனது பாராட்டுக்களை தெரிவித்து, படக்குழுவினரை வாழ்த்தினார்.

இப்படத்தின் துவக்க விழாவில், தயாரிப்பாளர் தனஞ்செயன் கிளாப் போர்டு அடித்து இயக்குநர் சசி, கேமராவை ஆன் செய்து படக்குழுவிற்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸிடம் சர்கார் மற்றும் தர்பார் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய, பாபு விஜய் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மிக முக்கிய சமூக பிரச்சனை ஒன்றை, காதலும் திரில்லரும் கலந்து, கமர்ஷியல் அம்சங்களுடன் ரசிகர்கள் விரும்பும் படைப்பாக உருவாக்கவுள்ளார்.

பிரபஞ்சம் அடுத்தடுத்து ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம், ஒருவன் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்படும் ஆச்சரிய மாற்றங்கள், அதிர்வுகள் தான் இக்கதையின் மையம். நம் நாட்டில் நிகழ்கின்ற, தொடர்ந்து நிகழப்போகிற ஒரு பெரும் ஆபத்தினை பற்றி, இப்படம் பேசவுள்ளது. காதலும் களவும் என்ற அன்பின் ஐந்திணையைக் கொண்டு அழகான வாழ்வியல் படமாக இப்படம் உருவாகவுள்ளது.

இப்படத்தில் முன்னணி நட்சத்திரம் ஜெய் நாயகனாக நடிக்கிறார். மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, கேஜிஎஃப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இயக்குநர் பாபு விஜய் தயாரித்து, இயக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் டார்லிங் ரிச்சர்ட்சன், கலை இயக்கம் S கண்ணன், தயாரிப்பு மேற்பார்வை V. சிவராமன், உடை வடிவமைப்பு கமலி S மற்றும் P. செல்வம், மேக்கப் அப்துல் ரசாக் மற்றும் அப்துல் ரஷீத், ஸ்டண்ட் மாஸ்டர் முரளி.G ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், நெல்லூர் போன்ற இடங்களில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் பங்குபெறும் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூரவமாக வெளியாக இருக்கிறது.

பைரதி ரணகாளின் அதிரடி பயணம் SunNXT-ல்

பைரதி ரணகாளின் அதிரடி பயணம் SunNXT-ல் தொடங்கியது! தமிழ் & மலையாளத்தில் பாருங்கள்!

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில், “பைரதி ரணகல்” திரைப்படம், SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது !!

“பைரதி ரணகல்” திரைப்படம், SUN NXT தளத்தில், தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் ஸ்ட்ரீமாகிறது !!

கீதா பிக்சர்ஸ் சார்பில், தயாரிப்பாளர் கீதா சிவராஜ்குமார் தயாரிப்பில், இயக்குநர் நாரதன் இயக்கத்தில், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில், வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற , ஆக்சன் அதிரடி திரைப்படமான “பைரதி ரணகல்” படம், இப்போது தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.

பிரம்மாண்ட வெற்றி பெற்ற மஃப்டி படத்தின் ப்ரீக்குவலாக உருவான படம் தான் “பைரதி ரணகல்”. இப்படம் தான் தமிழில் சிலம்பரசன் டி ஆர் நடிப்பில் “பத்து தல” படமாக வெளியானது என்பது குறிப்பிடதக்கது.

மஃப்டி படத்தில், பைரதி ரணகல் எனும் டான் கதாப்பத்திரத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவாராஜ்குமார் நடித்திருந்தார். இந்தக் கதாப்பத்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து, அந்த கதாப்பாத்திரத்தின் முன் கதையை மையமாக வைத்து உருவான படம் தான் “பைரதி ரணகல்”.

ஒரு சாதாரண வழக்கறிஞராக இருந்த பைரதி ரணகல், எப்படி நாடே திரும்பிப் பார்க்கும் டானாக மாறுகிறான் என்பது தான் இப்படத்தின் கதை. அதிரடி ஆக்சன் படமாக, கமர்ஷியல் அம்சங்களுடன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகியிருந்த இப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நடிகர் சிவராஜ்குமார், முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், ராகுல் போஸ், ருக்மணி வசந்த், அவினாஷ், சாயா சிங், தேவராஜ், ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். நவீன் குமார் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக ஆகாஷ் ஹிரேமத் பணியாற்றியுள்ளார்.

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாரட்டுக்களைக் குவித்த இப்படம், கன்னட மொழியில், திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, ஓடிடி வெளியீட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது தமிழ் மற்றும் மலையாளம் ரசிகர்கள் ரசிக்கும் வகையில், இப்படம் SUN NXT ஓடிடி தளத்தில் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் ஸ்ட்ரீமாகி வருகிறது.

“பைரதி ரணகல்” திரைப்படத்தை SUN NXT தளத்தின் மூலம் அனைவரும் பார்த்து ரசியுங்கள்!!

SUN NXT என்பது Sun TV Network-ன் OTT தளமாகும், இதில் 4000+ தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடதிரைப்படங்கள், 30+ நேரடி தொலைக்காட்சி சேனல்கள், மற்றும் பெரும் தொகையான பிராந்திய தொலைக்காட்சிநிகழ்ச்சிகள், இசை வீடியோக்கள் மற்றும் சிறப்புஉள்ளடக்கங்கள் உள்ளன.

முடியாத அளவிலான பொழுதுபோக்கை அனுபவிக்க SUN NXT-ஐ இப்போது பதிவிறக்குங்கள்:
Android: http://bit.ly/SunNxtAdroid
iOS: இந்தியா – http://bit.ly/sunNXT
உலகின் பிற பகுதிகள் – http://bit.ly/ussunnxt
அல்லது பார்வையிடவும்: https://www.sunnxt.com

Y S R பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ரியோ ராஜின் ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

‘ஸ்வீட்ஹார்ட் ‘ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார்.

எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் பொன் ராம், தேசிங் பெரியசாமி, சுரேஷ், கார்த்திக் வேணுகோபாலன், ஹரிஹரன் ராம்‌, கலையரசன் தங்கவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசுகையில், ” என் தலைவன் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக அவருக்கும் , இயக்குநருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாம் நம்முடைய மனைவிக்கு லவ் யூ என்று சொல்கிறோமோ… இல்லையோ.. ‘ஸ்வீட் ஹார்ட் ‘என்று சொல்லாமல் கடக்க முடியாது.

ஒரு திரைப்படத்தில் கவுண்டமணி அண்ணன் , ” ஏண்டா அந்த கேள்வியை என்ன பார்த்து கேட்ட?’ என ஒரு டயலாக் பேசுவார். அதே போல் இந்தப் படத்தில் அது போன்ற கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று இயக்குநருக்கு எப்படி தோன்றியது? என்று தெரியவில்லை. இந்த படத்தில் நான் ஒரு சிறப்பான வேடத்தில் நடித்திருக்கிறேன்.

கடின உழைப்பு எப்போதும் தோல்வி அடையாது என சொல்வார்கள். அதற்கு எப்போதும் உதாரணம் ரியோ ராஜ் தான். அவன் நடித்த இந்தப் படமும் ஹிட்டாகும். அடுத்த படமும் ஹிட்டாகும். அவருடைய பயணம் இனி வெற்றி தான்.

பொதுவாக காதலை சொல்ல வேண்டும் என்றால் இளையராஜா.. ஏ ஆர் ரகுமான் ஆகியோரின் பாடல்களை சொல்லித்தான் காதலைச் சொல்வார்கள். ஆனால் நான் என் வாழ்க்கையில் யுவன் சங்கர் ராஜாவின் பாடலை தான் காதலுக்காக சொன்னேன். இதற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

இயக்குநர் தேசிங் பெரியசாமி பேசுகையில், ” ஸ்வீட்ஹார்ட் என்ற இந்த படத்தின் டைட்டில் நன்றாக இருக்கிறது. இந்த படத்தைப் பற்றிய அறிவிப்பு தொடர்பாக வெளியான காணொளி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்திற்கான போஸ்டரில் நான்கு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வடிவமைத்திருப்பது சிறப்பாக இருக்கிறது . ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற என்னுடைய படத்திலும் இதே போல் தான் போஸ்டரை வடிவமைத்திருப்பேன். அதை பார்ப்பது போல் இருக்கிறது. படத்தின் முன்னோட்டம் தரமான பொழுதுபோக்காக இருந்தது. ரியோவின் தோற்றம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அது‌ நம் மண்ணின் தோற்றம். இந்த படத்தின் டிரைலரில் நல்லதொரு ‘வைப்’ ( Vibe) இருக்கிறது படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் இளன் பேசுகையில், ” யுவன் சாரை சந்தித்த பிறகு தான் என் வாழ்க்கையில் மாற்றம் நிகழ்ந்தது. இந்தப் படத்தை பற்றி எதுவும் தெரியாது. நண்பர்களிடம் ‘பியார் பிரேமா காதல்’ போல் இருக்குமா? என கேட்டேன். அதற்கு அவர் பணிவாக ‘இருக்கலாம்’ என்று சொன்னார். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு படம் சிறப்பாக இருக்கிறது. படத்தின் முன்னோட்டம் இளம் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. இப்படத்தில் உள்ள ‘ஆஸம் கிஸா..’ என்ற பாடல் வேற லெவலில் உள்ளது. யுவன் சங்கர் ராஜாவிற்கு ‘மார்டன் மாஸ்டரோ’, ‘கிங் ‘ என பல பெயர்கள் இருந்தாலும் அவருடன் பழகிய அனைவருக்கும் தெரிந்த ஒரே வார்த்தை தான் இந்த படத்தின் டைட்டில் அவர் ஒரு ஸ்வீட்ஹார்ட்.
இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் பொன் ராம் பேசுகையில், ” யுவனுடன் இணைந்து பாடல் கம்போசிங் செய்வது ஜாலியான அனுபவமாக இருக்கும். முதலில் அவரிடமிருந்து எப்படி பாடல்களை பெறுவது என்பதில் தயக்கம் இருந்தது. ஆனால் அவருடன் பத்து நிமிடம் பழகியவுடன் அவர் ஒரு ஸ்வீட் ஹார்ட் என்பதை தெரிந்து கொண்டேன்.

ரியோ நன்றாக நடிக்கிறார். அவரிடம் ஒரே ஒரு கோரிக்கையை வைக்கிறேன் பி & சி ரசிகர்களுக்காக ஒரு படத்தில் நடிக்க வேண்டும். ஏனெனில் பி & சி என்பது மிகவும் பவர்ஃபுல் மீடியம். அவர்களுக்காக ஒரு படத்தில் நடித்தால் உங்கள் வளர்ச்சி மேலும் சிறப்பாக இருக்கும்.

திரையில் ரியோவுக்கும் , கோபிகாவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. இது இளம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

இந்தப் படத்தில் இருக்கும் ‘கிஸா’ சாங் எனக்கு மிகவும் பிடிக்கும். மார்ச் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படம் ஸ்யூர் ஹிட். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

புது இயக்குநர்களுக்கு யுவன் சங்கர் ராஜா வாய்ப்பளிப்பதை நான் வரவேற்கிறேன். புது இயக்குநர்களை அறிமுகப்படுத்துவது என்பது சாதாரண விசயம் அல்ல. இதற்கு நம்பிக்கை அதிகம் வேண்டும். இதற்காகவும் யுவன் சங்கர் ராஜாவிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

திங்க் மியூசிக் சந்தோஷ் பேசுகையில், ” யுவன் சங்கர் ராஜாவின் தயாரிக்கும் திரைப்படத்தில் திங்க் மியூசிக் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். அழகான பீல் குட் ரொமான்டிக் திரைப்படம்.
இந்தப் படத்தில் பணியாற்றிய இயக்குநர் உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இந்த படம் வெளியான பிறகு படத்தில் இடம் பெற்ற பாடல்கள் நிறைய ரசிகர்களைக் கவரும். இந்த படத்தின் இசையில் ஒரு இன்ப அதிர்ச்சி உள்ளது. யுவன் சங்கர் ராஜா லைவ் கான்சர்ட்டிற்காக ஒரு பாடலை உருவாக்கியிருந்தார். யுவனின் ரசிகர்களுக்கு அந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். அந்தப் பாடல் இந்த படத்தில் இடம் பிடித்திருக்கிறது ” என்றார்.

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பேசுகையில், ” ஸ்வினீத் நான் பார்த்து பழகிய நபர்களில் பாசிட்டிவானவர். ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’வில் இவருடைய பங்களிப்பு அதிகம். இவரைப் போன்ற ஒருவர் நம்முடன் இருக்கும்போது நாம் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். இந்தப் படத்தின் கதையை ஒரு பயணத்தின் போது எங்களிடம் சொன்னார். சிரித்து சிரித்து வயிறு புண்ணானது.

அவர் அனைவருக்கும் மரியாதை அளிப்பவர். அவர் இன்னும் கூடுதல் உயரத்திற்கு செல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும். இப்படி ஒரு இளம் குழுவினரை அறிமுகப்படுத்தும் யுவன் சங்கர் ராஜாவிற்கும் என்னுடைய வாழ்த்துக்களும், நன்றிகளும்.

என் முதல் ஹீரோ ரியோ ராஜ். ஸ்வீட்ஹார்ட் படத்தைப் பற்றி தொடர்ந்து நல்ல விதமாக கேள்விப்படுகிறேன். அவருக்கும் இந்த படம் பெரிய வெற்றியை வழங்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றார்.

இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் பேசுகையில், ” முதல் படம். முதல் மேடை. நிறைய பேர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

‘ஜோ’ படத்தின் பணிகள் நடைபெற்ற தருணத்திலேயே ரியோ ராஜிடம் இப்படத்தின் கதையை சொல்லிவிட்டேன். அவரும் அடுத்த படம் இதுதான் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ‘ஜோ’ படம் ஹிட்டான பிறகு ஏராளமான தயாரிப்பு நிறுவனங்கள் அவரை அணுகியது. அவர் ஏற்கனவே என்னிடம் சொன்ன வார்த்தைக்காக இந்த :ஸ்வீட்ஹார்ட்’ படத்தினை நிறைவு செய்து தந்திருக்கிறார். இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கோபிகா ரமேஷ், அருணாச்சலேஸ்வரன், ஃபௌசியா, சுரேஷ் சக்கரவர்த்தி, ரஞ்சி பணிக்கர், ரிது , கவிதா, மைதிலி, காயத்ரி, காத்தாடி ராமமூர்த்தி, துளசி மேடம் என இப்படத்தில் நடித்த அனைவருக்கும் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தில் படப்பிடிப்பை 34 நாட்களில் நிறைவு செய்தோம். இதற்காக முழு ஒத்துழைப்பை வழங்கிய ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம், 25 வது படத்தில் பணியாற்றும் கலை இயக்குநர் சிவசங்கர், படத்தொகுப்பாளர் தமிழரசன் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தின் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர். அனைவரும் சொல்வது போல் நானும் யுவனின் பாடல்களை கேட்டு தான் வளர்ந்தேன். நானும் அவருடைய மிகப்பெரிய ரசிகன். என்றாவது ஒருநாள் அவரை நேரில் சந்தித்து விட மாட்டோமா..! என்ற ஏக்கத்துடன் இருந்திருக்கிறேன். அவருடைய இசை மற்றும் தயாரிப்பில் நான் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன் என்றால்… அதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக ஒரு படத்திற்கு இயக்குநரை தான் கேப்டன் என்று சொல்வார்கள். ஆனால் இந்த படத்தை பொறுத்தவரை யுவன் சங்கர் ராஜா தான் கேப்டன். இந்த படத்தின் மூலம் என்னை போல் நிறைய பேர் அறிமுகமாகி இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் ரெடின் கிங்ஸ்லி விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் சிக்கலான சூழலில் அந்த கேரக்டர் திரையில் தோன்றும். அவரும் அதை புரிந்து கொண்டு நன்றாக நடித்திருக்கிறார். ” என்றார்.

நடிகை கோபிகா ரமேஷ் பேசுகையில், ” ஸ்வீட்ஹார்ட் எனக்கு மிகப் ஸ்பெஷலான படம். இது என்னுடைய முதல் தமிழ் படம். தமிழ் பெண்ணாக இல்லை என்றாலும் தமிழ் ரசிகர்கள் என் மீது செலுத்தும் அன்பிற்கு நன்றி.

மலையாளத்தில் உள்ளவர்களுக்கும் யுவன் சங்கர் ராஜா தான் ஃபேவரிட். எங்கள் வாழ்க்கையில் வலிகளை மறக்கச் செய்தவர் யுவன். அவர் தயாரிக்கும் இந்த படத்தில் நடித்திருப்பதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன்.

மனு என்ற கதாபாத்திரத்திற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்திற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதியன்று தேர்வானேன். இந்த ஒரு வருடத்தில் படக் குழுவினருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.

ரியோ ராஜ் திறமையானவர். சௌகரியமான சக நடிகர். அவருக்கும் வரிசையாக வெற்றிகள் காத்திருக்கிறது. இதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்வீட்ஹார்ட் திரைப்படம் மார்ச் 14ஆம் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’: என்றார்.

நடிகர் ரியோ ராஜ் பேசுகையில், ” இந்த மேடையில் பேசிய அனைவரும் யுவனின் ரசிகர்கள் தான். அனைவருக்கும் யுவனை மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக அவரை பிடிக்கும்.

‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அவருடைய இசையை எட்டாவது படிக்கும் போது கேட்டு ரசித்தேன். அப்போது ஆடியோ கேசட் இருந்தது. அதன் பிறகு சிடி வந்தது. அதன் பிறகு கம்ப்யூட்டரில் ப்ளே லிஸ்ட் வந்த போதும் கூட அவருடைய பாடல்கள்தான் முதலில் இருக்கும். என்னுடைய தொகுப்பாளர் பணியிலும் கூட ‘சென்னை 28 ‘படத்தில் ஜெய் கதாபாத்திரத்திற்காக யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பயன்படுத்திக்கொண்டேன். தற்போது இந்தப் படத்தில் எனக்காக யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இதற்காக அவருக்கு மகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்வீட்ஹார்ட் மார்ச் 14ஆம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இது ஒரு கம்ப்ளீட் ரொமான்டிக் டிராமா. யுவன் சங்கர் ராஜாவின் இசையை ரசித்து அனுபவிக்கலாம்.

இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் மீது நான் வைத்த நம்பிக்கையை அவர் காப்பாற்றி இருக்கிறார். அவர் சினிமாவை மிகவும் நேசிக்கக் கூடியவர். ‘இவர் என் மாணவர்’ என பெருமையாக சொல்வேன்.

இங்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றி நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘ஸ்வீட்ஹார்ட்’ அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய படமாக இருக்கும். இந்த திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி பிராண்ட் அம்பாசிடராக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் பாடல் ஒன்றையும் எழுதி இருக்கிறேன். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர்- இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில், ” மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி.

இந்தப் படத்தின் பணிகள் எப்படி நடைபெற்றது என்றால்.. முதலில் ஒரு இன்ட்ரோ வீடியோ ஒன்றை வெளியிட்டோம். அதில் எனக்கு எதுவும் தெரியாது ஆனால் படத்தின் பணிகள் முடிவடைந்திருக்கும். ஆனால் உண்மையில் இதுதான் நடந்தது. நான் டூர் போய்விட்டு வருவதற்குள் படத்தை நிறைவு செய்திருந்தார்கள். அதன்பிறகு படத்தை பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. அதன் பிறகு தான் எனக்கு உற்சாகம் ஏற்பட்டது. அதன் பிறகு இரண்டு பாடல்களை இணைத்தோம். அதன் பிறகு இன்றைக்கு ஸ்வீட்ஹார்ட் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது. இது இயக்குநர் ஸ்வினீத்தின் கனவு. இவரைப் போன்ற ஏராளமான புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. மார்ச் 14ஆம் தேதி வெளியாகும் ‘ஸ்வீட்ஹார்ட்: படத்தை பார்க்க திரையரங்குகளில் சந்திப்போம் ” என்றார்.

L2 : எம்புரான் ‘ படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர் ஜெரோம் ஃப்ளின்

மோகன்லால் நடிக்கும் ‘L2 : எம்புரான்’ படத்தில் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ பட நடிகர்

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ L 2: எம்புரான்’ எனும் திரைப்படத்தில்
‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ மற்றும் ‘ஜான் விக் சாப்டர் 3 ‘ போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜெரோம் ஃபிளின் நடித்திருக்கிறார் என படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குநரும், நடிகருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ‘L 2 எம்புரான் ‘ எனும் திரைப்படத்தில் மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாறன், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் , சுராஜ் வெஞ்சரமூடு, சானியா ஐயப்பன், கிஷோர் ,சாய்குமார், சச்சின் கடேக்கர் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஹாலிவுட்டில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்ற ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ பட புகழ் நடிகர் ஜெரோம் ஃப்ளின்- இப்படத்தில் இடம்பெறும் போரிஸ் ஆலிவர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தீபக் தேவ் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் ஆசிர்வாத் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சுபாஷ்கரன் மற்றும் ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் படத்தில் போரிஸ் ஆலிவர் எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹாலிவுட் நடிகர் ஜெரோம் ஃப்ளின் படத்தைப் பற்றி தன்னுடைய அனுபவங்களை பிரத்யேக காணொளி மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், ” நான் இந்த திரைப்படத்தில் போரீஸ் ஆலிவர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் கிடைத்த அனுபவத்தை விட இந்திய திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. இந்திய கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாத அனுபவத்தை வழங்கி இருக்கிறது.

என்னுடைய வாழ்க்கையில் இந்தியா மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. என்னுடைய இளமைக் காலத்தில் இந்தியாவிற்கு ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறேன். அந்த பயணமும், அதன் மூலம் கிடைத்த அனுபவமும் என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது. அதன் பிறகு இந்த கலை உலக வாழ்க்கையை தேர்வு செய்தேன். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி சொல்வதை விட, குரேஷியின் பயணத்தில் என்னுடைய கதாபாத்திரம் முக்கியமானது. அதனை ரசித்து நடித்திருக்கிறேன். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

” கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிப்பில், பிரபல இயக்குனர் K. ரங்கராஜ் இயக்கத்தில், ஸ்ரீகாந்த், புஜிதா பொன்னாடா நடிப்பில் ஒரு அழகான காதல் படமாக உருவாகியுள்ள படம் ” கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ” வரும் மார்ச் 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் செய் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திரைபிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்து கொண்டு, படம் பற்றிய தங்கள் கருத்துக்களை, பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது…

35 வருடங்களுக்கு முன் நான் உதவி இயக்குநர், அப்போதே .ரங்கராஜ் சாரிடம் வேலை செய்ய வேண்டும் என ஆசை, ராம்தாஸ் சார் உதவியுடன் அவர் படத்தில் வேலை செய்தேன். என்னை கண்டிப்பானவர் என சொல்வார்கள் ஆனால் அவர் படு பயங்கர கண்டிப்பானவர், அவரிடம் தான் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். பல அற்புதமான படங்களை உருவாக்கியவர். அவர் மீண்டும் படம் இயக்குவது மிகுந்த மகிழ்ச்சி. அவர் மாணவன் நான், நிறைய நடிகர்களை இணைத்துள்ளார். ஸ்ரீகாந்த் இன்னும் க்யூட்டாக இருக்கிறார். கண்டிப்பாக இந்தப்படம் ஜெயிக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நடிகை சச்சு பேசியதாவது….

இங்கு எல்லோரும் எனக்கு ஜூனியர்கள், 70 வருட சீனியர் நான். சினிமா தான் என் குடும்பம். ரங்கராஜ் சாரின் நெஞ்சமெல்லாம் நீயே படத்தை மறக்க முடியாது. என்னை இந்த படத்திற்கு ஞாபகம் வைத்து அழைத்தது மகிழ்ச்சி. ஃபாரின் எல்லாம் போகாமல், இந்தப்படத்தை மிக அட்டகாசமாக எடுத்துள்ளார். இந்த மாதிரி படங்களை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும். நிறைய வித்தியாசமான படங்கள் வர வேண்டும். நான் பூஜிதா பாட்டியாக நடித்துள்ளேன். படம் அழகாக வந்துள்ளது. இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. படத்தை நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும். நன்றி.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது…

இயக்குநர் ரங்கராஜ் சார் மிக அற்புதமான இயக்குநர். பல அருமையான படங்களை தந்தவர். மிக அழகான தமிழில் டைட்டில் வைத்து படமெடுக்கக் கூடியவர். அவரது இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். இப்ப வரும் நிறைய படத்தில் பாவடையை பிச்சு, பிச்சு, பலரை ஆட வைக்கிறார்கள். விரசம் வேண்டாம். இப்போது இரண்டு படங்கள் வெளியாகி ஒரு படம் நன்றாக போகிறது, இன்னொரு படம் மிக நன்றாக போகிறது. ஒரு படத்தில் நாயகனும் நாயகியும் ஓட்டலில் சந்திக்கிறார்கள், நாயகி பிராந்தி ஊற்றித் தருகிறார், இப்படி தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கும் விதமாக படத்தை எடுத்துள்ளார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், மக்களுக்கு தான் உங்கள் மேல் கோபம். எப்படி இப்படியெல்லாம் படம் எடுக்கலாம், இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கலாச்சாரத்தை நல்லபடியாக காட்டும் இந்த படம் வெற்றி பெறட்டும் அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் சத்யா பேசியதாவது…

இந்த இசை விழாவிற்கு வந்த காரணம் என் நண்பர் ஆர் கே சுந்தருக்காகத் தான், அவரும் நானும் மிக நல்ல நண்பர்கள். அவர் இயக்குனர் K.ரங்கராஜ் உடன் இணைந்தது மகிழ்ச்சி. என் சின்ன வயதில், உதயகீதம் படத்தை தியேட்டரில் பார்த்திருக்கிறேன். ஒரு வருடம் ஓடிய படம். அதே போல இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். ஒளிப்பதிவாளரும் என் நண்பர், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

இசையமைப்பாளர் ஆர் கே சுந்தர் பேசியதாவது…

K.ரங்கராஜ் உடன் இந்தப்படத்தில் இணைந்தது மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர் தாமோதரன் தான் இந்த வாய்ப்பை வாங்கித் தந்தார். இளையராஜா சார் உடன், K.ரங்கராஜ் சார் இணைந்த அத்தனை படங்களும் ஹிட். எனக்கு இந்தப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இப்படத்தில் என்னுடன் வேலை பார்த்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றி. ரங்கராஜ் சார் வெட்டு குத்து இரத்தம் இல்லாமல் அவர் பாணியில் மிக அழகான படத்தை தந்துள்ளார். படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவருக்கும் நன்றி.

கதாநாயகி பூஜிதா பொன்னாடா பேசியதாவது…

இது என் முதல் தமிழ் மேடை, பல திரை பிரபலங்களுடன் இருப்பது மிக மகிழ்ச்சி. இந்தப்படம் மிக மிக அற்புதமாக வந்துள்ளது, அனைவரும் சிரித்து மகிழும்படியான காமெடி எண்டர்டெயினர் படம். ரங்கராஜ் சார் மிக கண்டிப்பாக இருப்பார், ஆனால் அழகாக படத்தை எடுத்துள்ளார். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.

நடிகர் ஸ்ரீகாந்த் பேசியதாவது..

திரையுலகில் 25 வருடம் நிறைபு செய்துள்ளேன் நீங்கள் எப்போதும் ஆதரவு தந்துள்ளீர்கள் அனைவருக்கும் நன்றி. மேடையில் இருந்த சத்யா சாரின் பூ படம் செய்துள்ளேன், இளையராஜாவிடமும் வேலை செய்துள்ளேன், இப்போது ரங்கராஜ் சாரிடமும் வேலை செய்து விட்டேன் அனைவரிடமும் வேலை செய்தது மகிழ்ச்சி. ஷீட்ங்கில் மிக மிக கண்டிப்புடன் இருப்பார், அவர் படைப்பில் நான் இருந்தது மகிழ்ச்சி. சினிமா தவிர எனக்கு எதுவும் தெரியாது. கடைசி வரை சினிமாவில் இருக்கத் தான் ஆசைப் படுகிறேன், படத்தில் தம்மு தண்ணி, ஆடை பற்றி எல்லாம் நாம் பேசக் கூடாது, அது அவரவர் விருப்பம். எது பிடிக்கும் எது பிடிக்காது என மக்கள் முடிவு செய்யட்டும். எனக்குப் பிடித்த படம் சதுரங்கம் அந்தப் படத்தை எப்படியோ கொன்று விட்டார்கள், ஆனால் 12 வருடம் கழித்து ஒரு படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெறுகிறது, இதுதான் சினிமா. ஒவ்வொரு பக்கமும் இருந்து சினிமாவை அழிக்கிறார்கள். எல்லோரும் இணைந்து முதலில் சினிமாவை காப்பாற்ற வேண்டும். சினிமா தான் என் குடும்பம், இன்னும் நான் சினிமாவில் இருக்கிறதை பெருமையாக நினைக்கிறேன். ரங்கராஜ் சார் படத்தில் இருப்பது பெருமை. நீங்கள் தந்து வரும் அன்புக்கு நன்றி.

இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது..

ஸ்ரீகாந்த் பேசி இப்போது தான் கேட்கிறேன், அதிரடியாக கலக்குகிறார், இதே போல் சினிமாவில் இருந்தால் அவர் தான் சூப்பர் ஸ்டார். இந்த விழாவிற்கு வந்த காரணம் ரங்கரஜான் சார் தான். 35 வருட பழக்கம் அவர் கண்டிப்பானவர் என்கிறார்கள், ஆனால் என்னிடம் எப்போதும் சிரித்து பேசுவார். மிக அமைதியான மனிதர். பாடல்கள் பார்த்தேன் கலர்புல்லாக மிக அழகாக எடுத்துள்ளார். கட்டுமானத்தை சரியாக செய்யாமல் சினிமா நல்லா இல்லை என சொல்லி வருகிறார்கள், பணம் போடுபவரை மதிக்க வேண்டும், அவரிடம் கண்ட்ரோல் இருக்க வேண்டும், ரங்கராஜ் சாரின் திட்டமிடல் மிகச்சரியாக இருக்கும், எடுக்க வேண்டியதை மிகக் கச்சிதமாக எடுத்து விடுவார். ரங்கராஜ் சார் போன்ற ஆளுமைக்கு ஆதரவு தர வேண்டியது நம் கடமை. எல்லோருக்கும் வாழ்க்கை தரும் படமாக இப்படம் இருக்கும்.

தமிழ் நாட்டில் தமிழர்களுக்காக படம் பண்ண முடியாமல், பான் இந்தியா படம் செய்தால் எப்படி சரியாகும், பான் இந்தியா என சொல்லி, இந்தி, தெலுங்கு ஆட்களைச் சேர்த்து அதை இங்கு திணித்து, படமாக தந்தால் படம் வெற்றி பெற்று விடுமா? எந்த மொழியை இங்கு திணித்தாலும், தமிழை அழிக்க முடியாது. நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படம் எடுங்கள்

ஒடிடிக்காக படம் எடுக்காதீர்கள், அதில் நமக்கு லாபம் இல்லை, இப்போது தமிழ் சினிமா நல்ல வளர்ச்சியை நோக்கிப் போகிறது. இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் K.ரங்கராஜ் பேசியதாவது…

எங்களை இன்று வாழ்த்த வந்திருக்கும் கே எஸ் ரவிக்குமார், ஆர் கே செல்வமணி உட்பட அனைவருக்கும் நன்றி. ஸ்ரீகாந்த் முதல் சிங்கம்புலி, ரமேஷ் கண்ணா, சச்சு, சாம்ஸ் புஜிதா என அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து இந்தப்படத்தை உருவாக்க உதவினார்கள். நான் பத்திரிக்கையாளானாக இருந்து திரைக்கு வந்தவன் உங்களின் அன்பான ஆதரவை இந்தப்படத்திற்கு தர வேண்டும் நன்றி என்றார்.

உன்னை நான் சந்தித்தேன்,உதயகீதம் ,உயிரே உனக்காக, நினைவே ஒரு சங்கீதம் போன்ற சில்வர் ஜூப்ளீ திரைப்படங்களை இயக்கிய வெற்றி இயக்குனர் K.ரங்கராஜ் இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். வாழ்க்கையில் பணம் மட்டும் பிரதாணமல்ல என்பதை உணர்த்தும் வகையில் வித்தியாமாக இருவேறு கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க, கதாநாயகியாக புஜிதா பொன்னாடா நடித்துள்ளார். இரண்டாவது நாயகனாக பரதன் நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக நிமி இமானுவேல் நடித்துள்ளார். மற்றும் பார்கவ் , நம்பிராஜன், கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன், மாஸ்டர் விஷ்னவா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் மை இண்டியா மாணிக்கம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வசனம் – PNC கிருஷ்ணா
ஒளிப்பதிவு – தாமோதரன்.T
இசை – R.K.சுந்தர்
எடிட்டிங் – கே.கே
பாடல்கள் – காதல் மதி
கலை – விஜய் ஆனந்த்
நடனம் – சந்துரு
ஸ்டண்ட் – ஆக்ஷன் பிரகாஷ்
ஸ்டில்ஸ் – தேனி சீனு
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – MY INDIA மாணிக்கம்
கதை, திரைக்கதையமைத்து இயக்கியுள்ளார் – K.ரங்கராஜ்

நானியின் நடிப்பில் கிரைம் வித் ஆக்சன் திரில்லர் ‘ HIT – தி தேர்ட் கேஸ் ‘

நேச்சுரல் ஸ்டார் நானியின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரைம் வித் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘ HIT – தி தேர்ட் கேஸ் ‘ பெரும் பரபரப்பையும் அதிர்வையும் ஏற்படுத்தி வருகிறது. தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குநர் டாக்டர் சைலேஷ் கோலானு இயக்கியுள்ள இந்த திரைப்படம் வெற்றிபெற்ற HIT எனும் திரைப்படத்தின் மூன்றாவது பாகமாகும். இந்தத் திரைப்படம் இதற்கும் முன் கவர்ச்சிகரமான காட்சிகளாலும், கண்ணை கவரும் போஸ்டர்களாலும் பார்வையாளர்களிடத்தில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. வால் போஸ்டர் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்தி திபிர்னேனி மற்றும் நானியின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான யுனாானிமஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் ‘சர்க்காரின் லத்தி’ எனும் பெயரில் டீசர் ஒன்று.. நானியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.

கதைக்களம் – ஒரே மாதிரியாக நிகழும் கொலை குற்ற சம்பவங்களை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை வழக்கு காவல்துறையினரை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. அவர்களின் இடைவிடாத முயற்சிகள் இருந்த போதிலும்.. அவர்களால் இந்த கொலை வழக்கை தீர்க்கவோ அல்லது குற்றவாளியை பிடிக்கவோ முடியவில்லை. இதன் இறுதி முயற்சியாக.. அவர்கள் அர்ஜுன் சர்க்காரிடம் இந்த வழக்கை ஒப்படைக்கிறார்கள். அர்ஜுன் சர்க்கார் என்பது குற்றவாளிகளின் முதுகெலும்பை நடுநடுங்க வைக்கும் பெயர்.

அர்ஜுன் சர்க்காராக நானியின் சித்தரிப்பு கொடூரமாக இருக்கிறது. அவரது கதாபாத்திரத்தில் வடிகட்ட இயலாத தீவிரத்தை கொண்டு வருகிறார். அவர் தவிர்க்க முடியாதவர் போலவே பயமுறுத்தும் ஒரு கதாபாத்திரத்தையும் உருவாக்குகிறார். அவரது மிரட்டும் சைகைகள் முதல் வெடிக்கும் கோபம் வரை நாணியின் அர்ஜுன் சர்க்கார் ஆக்ரோசத்தின் சூறாவளி.

ஒரு குற்றவாளியின் வயிற்றில் கத்தியை குத்தி, அதை மேலே நோக்கி உயர்த்தும் போது… கொடூரமான காட்சியில் ரத்தம் கூரையில் தெறிக்கிறது. இந்த தருணம்- கதாபாத்திரத்தின் அடக்க முடியாத மூர்க்கத்தனத்திற்கு ஒரு சிலிர்க்க வைக்கும் சான்றாகும்.

இயக்குநர் சைலேஷ் கோலானு ஒப்பற்ற கதை சொல்லல் மற்றும் காட்சி மொழியாக விவரிப்பதால் ..’ HIT தி தேர்ட் கேஸ்’ படத்தின் மூன்றாவது பாகத்தை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்கிறார். நானி தனது ஆற்றல் வாய்ந்த நடிப்பால் கதையை மேம்படுத்துவதுடன் அதன் ஆழத்தையும், தீவிரத்தையும் நடிப்பால் உணர்த்துகிறார். வழக்கமான பிம்பங்களை அந்த கதாபாத்திரம் உடைக்கிறது. நானியின் மாற்றமும் ரசிக்கத்தக்கது மற்றும் மறக்க இயலாதது.

கிரைம் வித் ஆக்சன் திரில்லரான இந்த திரைப்படத்திற்கு ஏற்ற வகையில் பார்வையாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில் சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவருடன் பின்னணி இசை மூலம் பதற்றத்தை அதிகரிக்க மிக்கி ஜே. மேயர் இணைந்திருக்கிறார். வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்தி திபிர்னேனி மற்றும் நானி ஆகியரோல் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்தின் தயாரிப்பின் தரம் சர்வதேச அளவிலானது. படத்தின் படத்தொகுப்பு பணிகளை கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் கையாள, தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை ஸ்ரீ நாகேந்திர தங்கலா கவனிக்கிறார்.

ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் ‘HIT : தி தேர்ட் கேஸ்’ – 2025 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

துடிப்பான மற்றும் வழக்கத்திற்கு மாறான கதைக்களம் – நானியின் அற்புதமான நடிப்பு – ஆகியவை இணைந்து ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம்… கிரைம் வித் ஆக்சன் திரில்லர் படங்களின் எல்லையை மறு வரையறை செய்வதாகவும், பார்வையாளர்களை மேலும் உற்சாகப்படுத்தும் என்றும் உறுதியளிக்கிறது.

நடிகர்கள் :
நானி , ஸ்ரீநிதி ஷெட்டி

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : டாக்டர் சைலேஷ் கோலானு
தயாரிப்பாளர் : பிரசாந்தி திபிர்னேனி
தயாரிப்பு நிறுவனம் : வால் போஸ்டர் சினிமா & யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்
ஒளிப்பதிவு : சானு ஜான் வர்கீஸ்
இசை : மிக்கி ஜே. மேயர்
படத்தொகுப்பு : கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர்
தயாரிப்பு வடிவமைப்பு : ஸ்ரீ நாகேந்திர தங்கலா
நிர்வாக தயாரிப்பு : எஸ் வெங்கட ரத்தினம் (வெங்கட் )
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ