Cinema

JioStar Leadership குழுவினர் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர் !!

JioHotstar South Unbound நிகழ்வினை முன்னிட்டு, JioStar Leadership குழுவினர் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர் !!

JioStar Head Entertainment Business, South Cluster, கிருஷ்ணன் குட்டி, JioStar Executive Vice President – Tamil பாலச்சந்திரன் R, மற்றும் CEO – Turmeric Media R. மகேந்திரன் ஆகியோர், இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, வரவிருக்கும் JioHotstar South Unbound என்ற முக்கிய நிகழ்வைப் பற்றி விளக்கினர்.

இந்த சந்திப்பில், நிகழ்வின் நோக்கம், தென்னிந்திய கலாசாரத்தை முன்னிறுத்தும் வகையில் அது உருவாக்கும் தாக்கம் போன்ற பல அம்சங்கள் குறித்து குழுவினர் முதல்வரிடம் பகிர்ந்தனர். மேலும், ‘Letter of Engagement’ என்ற ஒப்பந்தத்தின் முக்கிய குறிப்புகளும் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டின் திரைப்பட மற்றும் ஊடகக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து திறமைகளை உருவாக்குவது, பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பது, படைப்புத் துறையை வலுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் JioStar வழங்கும் ஆதரவை குழுவினர் உறுதிப்படுத்தினர்.

டிசம்பர் 9, 2025 அன்று சென்னை நகரில் நடைபெறும் JioHotstar South Unbound நிகழ்வு, தென்னிந்திய சினிமா மற்றும் படைப்புத் திறனைக் கொண்டாடும் முக்கிய விழாவாகும். தென்னிந்தியாவின் முன்னணி இயக்குநர்கள், படைப்பாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள திறமைகள் இந்நிகழ்வில் பங்கேற்கிறார்கள். JioHotstar இன், புதிய தென் மாநில படைப்புகள், கதைகள், இந்த நிகழ்வில் வெளியிடப்படும்.

இந்த விழாவை தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார். பாராட்டுப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பத்மபூஷண் திரு. கமல்ஹாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

தென்னிந்திய நடிகர்கள், இயக்குநர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் முன்னணி படைப்பாளர்கள் பங்கேற்கும் இந்த விழா, தென்னிந்திய கலை மற்றும் கதைக்கூறும் மரபின் தாக்கத்தை உலகுக்கு முன்னிறுத்தும் முக்கிய தருணமாக இருக்கும். மேலும், தென்னிந்திய பொழுதுபோக்கு உலகை உயர்த்த, வளர்க்க, பலப்படுத்த JioStar மேற்கொள்ளும் தொடர்ந்த பங்களிப்பையும் இது மீண்டும் வலியுறுத்துகிறது.

இயக்குநர் சுந்தர் சி வெளியிட்ட மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டர்!

செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் (Self Start Productions) சார்பில், KJ சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் மாயபிம்பம்.‌ புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

புதுமுக நடிகர் – நடிகைகள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்ப கலைஞர்களும் முழுக்க முழுக்க புதுமுகங்களே. படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி ஆகியோர் எழுதியுள்ளனர்.

2005ல் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.‌ இந்த படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர்.சி அவர்கள் வெளியிட்டு, படத்தின் ஒரு‌ பாடலையும் பார்ததுவிட்டு படக்குழுவை பாராட்டினார்.

நாகபந்தம் கிளைமேக்ஸ் : பெரும்பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்டம்!

அபிஷேக் நாமா இயக்கும் பான்-இந்தியா மிதாலஜிக்கல் ஆக்சன் படமாக உருவாகும் ‘நாகபந்தம்’  படத்தின் அதிரடி கிளைமேக்ஸ் காட்சி தற்போது ராமாநாயுடு ஸ்டூடியோவில்  படப்பிடிப்பு நடந்து வருகிறது. மிதாலஜிக்கல் படங்களில் இதுவரையிலான  முயற்சிகளில் மிகப் பெரும் அளவில், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கிளைமேக்ஸ் காட்சிகளில் ஒன்றை இந்தக் குழு உருவாக்கி வருகிறது.

இளம் நடிகர் விராட் கர்ணா நடிக்கும் இந்தப் படத்தை கிஷோர் அன்னபுரெட்டி,  மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்து வருகின்றனர். குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சிக்காக மட்டும் 20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது பான்-இந்தியா ரிலீசுக்காக உருவாக்கப்பட்ட மிகப்பெரும் பொருட்செலவிலான ஆக்சன் பிளாக்குகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

அபிஷேக் நாமாவின் கனவுப் படைப்பாகிய ‘நாகபந்தம்’ படத்துக்கு அவர் எழுதிய சக்திவாய்ந்த திரைக்கதை பெரும் வரவேற்பு பெறும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதுடன், கிளைமேக்ஸ் படப்பிடிப்பில் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறார். இந்த மாபெரும் கிளைமேக்ஸ் காட்சியின் மையப் பகுதியாக, புராதன கோவில் கலை வடிவத்தை, பிரதிபலிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட மகத்தான புனித வாசல் அமைப்பு இடம் பெற்றுள்ளது. இதை ஆர்ட் டைரக்டர் அசோக் குமார் மிகப் பிரம்மாண்டமாக வடிவமைத்திருக்கிறார்.

மேலும், ஆக்சன் காட்சிகளின் தரத்தையும் வலிமையையும் உயர்த்துவதற்காக தாய்லாந்தின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கெச்சா காம்பக்டீ இந்த படத்தில் இணைந்திருக்கிறார்.

நேற்று படப்பிடிப்பு தளத்தைப் பார்வையிட்ட ஊடகப்பிரமுகர்கள், அங்கு காணப்பட்ட செட் அமைப்பு மற்றும் படமாகி கொண்டிருந்த கிளைமேக்ஸ் காட்சியின் பிரம்மாண்டத்தைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினர்.

“நாகபந்தம்” படத்தில் நாபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர், மேலும் ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவு செய்கிறார், அபே இசையமைக்கிறார். கல்யாண் சக்ரவர்த்தி வசனம் எழுதியுள்ளார், சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். அசோக் குமார் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

“நாகபந்தம்” 2025 ஆம் ஆண்டில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில், பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புரமோஷன் பணிகள் விரைவில் துவங்க உள்ளன.

நடிப்பு:
விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, B.S.அவிநாஷ் மற்றும் பலர்

தொழில்நுட்பக் குழு:
கதை, திரைக்கதை, இயக்கம் – அபிஷேக் நாமா
தயாரிப்பாளர்கள் – கிஷோர் அன்னபுரெட்டி, நிஷிதா நாகிரெட்டி
ஒளிப்பதிவு – சௌந்தர்ராஜன் S
இசை – அபே, ஜுனைத் குமார்
ஆர்ட் டைரக்டர் – அசோக் குமார்
எடிட்டிங் – R.C. பிரணவ்
CEO – வாசு பொடினி

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா “அகண்டா 2: தாண்டவம்” தமிழ் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்போடு இணைந்து, தமிழ்ப் பதிப்பும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் பதிப்பின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்..,

நடிகர் ஒய் ஜி மகேந்திரன் பேசியதாவது..,

ஹைதராபாத்தில் படம் அளவு ஒரு பிரம்மாண்ட விழாவைப் பார்த்தேன். இப்படம் முழுக்க முழுக்க கூஸ்பம்ஸ் அனுபவம் தான். என் டி ஆர் உடன் நடிக்க வேண்டும் என நிறைய ஆசைப்பட்டேன், ஆனால் இறைவன் காத்திரு கடவுள் உடன் நடிக்கலாம் என சொன்னார். அது இப்போது நடந்துள்ளது. இப்படத்தில் ஒரு துறவியாக நடித்துள்ளேன். எனக்கு இயக்குநர் போயபாடி சீனு ஒரு அற்புதமான ரோல் தந்துள்ளார். தமிழில் ஏ பி நாகராஜ் போல படம் எடுக்க ஆளில்லை என்ற ஏக்கத்தை போக்க வந்திருக்கிறார் இயக்குநர் போயபாடி ஶ்ரீனு. மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இவர் கொண்டாடப்படுவார். பாலைய்யா ஒரு நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு சக்தி, அவர் மாதிரி இப்போது எந்த ஒரு நடிகரும் இயங்க முடியாது. மைனஸ் 10 டிகிரியில் வெறும் உடலுடன் எந்த சீஜியும் இல்லாமல், ஜார்ஜியாவில் நடித்தார். இப்படம் எனக்கு மிகச்சிறந்த அனுபவம். 300 படங்கள் நடித்துள்ளேன், நான் அகண்டா படமும் செய்துள்ளேன் Both are not same. இப்படம் மொழி தாண்டிய ஒரு பான் இந்திய திரைப்படம், நம் இந்திய கலாச்சாரத்தை கொண்டாடும் படைப்பு. நீங்கள் படம் பார்த்து கொண்டாடுவீர்கள், அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். நம் ஆன்மீக உணர்வை யார் வந்து, என்ன சொன்னாலும் அழிக்க முடியாது. இது ஒரு பக்கா கமர்ஷியல் படம். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். இப்படம் எனக்கு மிகப்பெரும் பெருமை. அனைவருக்கும் நன்றி.

நடிகை விஜி சந்திரசேகர் பேசியதாவது..,

அகண்டா 2 குழுவை சென்னைக்கு வரவேற்கிறேன். ஹைதராபாத் விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை, சென்னையில் விழா நடக்கிறது என்றவுடன் நான் ஷீட்டிங்கில் இருந்து சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அகண்டா 2 படத்தில் நான் எப்படி வந்தேன் என்றே தெரியவில்லை. என்னை தேர்ந்தெடுத்து, நடிக்க வைத்த போயபாடி ஶ்ரீனு சாருக்கு நன்றி. அந்தப்படத்தில் நடித்தது சிவனின் அருள், எனக்குள் வந்த மாதிரி இருந்தது. எல்லோரும் பெரும் பாராட்டுக்களைத் தந்தனர். நான் 2,3 காட்சிகள் நடித்தாலும், இப்படத்தில் முழுமையாக வருவது போல் செய்துள்ளார். சிவன் இப்படி தான் இருப்பார் என பாலைய்யா சாரை காட்டி என் பேரக்குழந்தைகளுக்கு சொல்வேன். வெட்ட வெளியில் செருப்பு கூட இல்லாமல் அவர் உழைத்த உழைப்பை நேரில் பார்த்து பிரமித்தேன். தமன் எல்லோரையும் அதிர வைக்கும் படி ஒரு அற்புதமான இசையை தந்துள்ளார். கமர்ஷியல் தாண்டி தெய்வீகத்தை தர போயபட்டி ஶ்ரீனுவால் தான் முடியும். தமிழ் சூப்பர்ஸ்டார் ரஜினி சாரையும், தெலுங்கு சூப்பர்ஸ்டார் பாலைய்யா சாரையும் இணைத்து படம் செய்யுங்கள். அனைவரும் படம் பார்த்து கொண்டாடுங்கள் நன்றி. அகண்டா 3 யும் கண்டிப்பாக செய்யுங்கள் நன்றி.

இணை தயாரிப்பாளர் : கோடி பருச்சுரி

பத்திரிக்கை ஊடக நண்பர்களின் அன்புக்கு நன்றி. இது உண்மையாகவே ஒரு பான் இந்திய படம். நம் எல்லோரும் கொண்டாடக்கூடிய வகையில் இருக்கும். இயக்குநர் போயபாடி ஶ்ரீனுவுக்கும், பாலைய்யா சாருக்கும் என் நன்றிகள். அனைவரும் படம் பார்த்து கொண்டாடுங்கள் நன்றி.

போயபாடி ஶ்ரீனு பேசியதாவது..,

அனைவருக்கும் வணக்கம், என் 3 படங்கள் கேமராமேனாக வின்சன் சார் செய்தார். அவர் மூலம் தமிழ் தெரிந்தாலும், அதிகம் பேசத் தெரியாது. அகண்டா தெலுங்கு மொழிக்கான படமல்ல அதே போல தான், அகண்டா 2, இது இந்துகள் மற்றும் இந்தியாவின் ஆன்மாவை, ஆன்மிகத்தை கொண்டாடும் படம். தெலுங்கு, தமிழ், என எல்லோருக்குமான படம். பாரதம் முழுக்க உள்ள அனைவரும் இப்படத்தை கொண்டாடுவார்கள். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இப்படத்தை கண்டிப்பாக அனைவரும் ரசிப்பீர்கள். தேகம், தேசம், தெய்வம் என எல்லாவற்றிக்குமான படம். ஆனால் அதை கமர்ஷியலாக தந்துள்ளோம் அனைவருக்கும் நன்றி.

நந்தமூரி பாலகிருஷ்ணா பேசியதாவது..,

என் சொந்த வீட்டுக்கு வந்தது போல உள்ளது. நான் இங்கு தான் பிறந்தேன். அகண்டா 2 விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள். என் உயிருக்கு இணையான தமிழ் நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் நன்றிகள். சென்னை என் ஜென்ம பூமி, ஆந்திரா ஆத்ம பூமி. என் அப்பா என் டி ஆரின் வாழ்க்கையெல்லாம் இங்கு தான் நடந்தது. மக்கள் திலகம் எம் ஜி ஆர், நடிகர் திலகம் சிவாஜியுடன் என் அப்பாவின் நட்பை, அன்பை மறக்க முடியாது. என் அப்பா என் டி ஆர் தமிழ் நாட்டின் மீது மிகுந்த அன்போடு இருந்தார். அகண்டா முதல் பாகம் வெளிவந்த போது இப்படம் பார்க்க ஆள் வருமா? என நினைத்தோம். ஆனால் இம்மாதிரி படம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக தர வேண்டும் என உருவாக்கினோம். அது சூப்பர் ஹிட்டானது. இம்மாதிரி படங்களை ரசிகர்கள் பார்க்கிறார்கள் என தைரியம் வந்தது, போயபாடி ஶ்ரீனுவுடன் எனக்கு நாலாவது படம். எல்லாமே சூப்பர் ஹிட். அவருடன் கதை கூட அவ்வளவாக விவாதிக்க மாட்டேன். இந்தப்படம் 130 நாட்களில் முடிந்த விட்டது. இது சீக்குவல் இல்லை, இது இந்து தர்மத்தை, கலாச்சாரத்தை போற்றும் ஒரு படைப்பு. நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி. நம் பண்பாடுகளை, சனாதான தர்மத்தை இந்த தலைமுறை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு இந்தப்படம். சனாதான தர்மத்தை சக்தியை இந்தப்படத்தில் காட்டியுள்ளோம். தர்மத்திற்காக நாம் போராட வேண்டும். என் அப்பா தான் என் தெய்வம் அவர் எல்லா வகையிலும் படம் செய்துவிட்டார், நான் ரொம்ப அதிர்ஷடசாலி. நான் திரைக்கு வந்து 50 வருடமாகிவிட்டது. அவர்கள் ஆசியில் இன்னும் ஹீரோவாக நடிக்கிறேன். 4 படம் தொடர் வெற்றி. ரசிகர்கள் இம்மாதிரி படங்களுக்கு காத்திருக்கிறார்கள். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். டிசம்பர் 5 ஆம் தேதி வருகிறது அனைவரும் படம் பாருங்கள். கொண்டாடுங்கள் நன்றி.

தயாரிப்பாளர்கள் ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா தயாரிப்பில், 14 ரீல்ஸ் ப்ளஸ் பேனரில், M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார்கள்.

இப்படத்தில் ஆதிப் பினிசெட்டி வலுவான வில்லனாக வருகிறார். சம்யுக்தா நாயகியாக நடித்துள்ளார். ஹர்ஷாலி மால்ஹோத்ராவின் சிறிய காட்சிகள் கதையின் உணர்ச்சியை மேலும் ஆழப்படுத்துவதாக அமைந்துள்ளது.

படத்தின் தொழில்நுட்பத் தரம் சிறப்பாக உள்ளது.ஒளிப்பதிவாளர்கள் C. ராம்பிரசாத் மற்றும் சந்தோஷ் D டெடாகே — ஒவ்வொரு ஃபிரேமிலும் பெரும் பிரம்மாண்டத்தையும், அற்புதமான உலகையும் உருவாக்குகியுள்ளனர்.இசையமைப்பாளர் தமன் S உடைய அதிரடி பின்னணி இசை — தெய்வீக தாளம் போல காட்சிகளின் தாக்கத்தை உயர்த்துகிறது. தம்மிராஜுவின் எடிட்டிங் கச்சிதமாகவும், A.S. பிரகாஷின் கலை அமைப்பு படத்தை இன்னும் பிரம்மாண்டமாக மாற்றியுள்ளது.

அகண்டா 2 – தாண்டவம் திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிப்பு :

நந்தமூரி பாலகிருஷ்ணா
சம்யுக்தா
ஆதிப் பினிசெட்டி
ஹர்ஷாலி மால்ஹோத்ரா

தொழில்நுட்பக் குழு :

எழுத்து, இயக்கம் : போயபாடி ஶ்ரீனு
தயாரிப்பாளர்கள் :ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா
பேனர் : 14 ரீல்ஸ் ப்ளஸ்
வழங்குபவர் : M. தேஜஸ்வினி நந்தமூரி
இசை : S. தமன்
ஒளிப்பதிவு : C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : கோடி பருச்சுரி
கலை : A.S. பிரகாஷ்
எடிட்டிங் : தம்மிராஜு
சண்டை அமைப்பு : ராம் – லக்ஷ்மன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன்,மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ படத்திற்கு “ஓ…!சுகுமாரி” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது !!

சமீபத்திய “ப்ரீ வெட்டிங் ஷோ ( Pre Wedding Show )” படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, இளம் நடிகர் திரு வீர், மற்றும் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெறர சம்கிராந்திகி வஸ்துன்னாம் ( Sankranthiki Vasthunnam ) படத்தில் அற்புதமாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகிய இருவரும் இணைந்து ஒரு அட்டகாசமான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தினை, அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் ( Bharat Dharshan) இயக்குகிறார். கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மகேஸ்வரா ரெட்டி மூலி (Maheswara Reddy Mooli) தயாரிக்கிறார். புரொடக்ஷன் நம்பர் 2 “ வாக இப்படம் உருவாகிறது. சிவம் பஜே ( Shivam Bhaje ) வெற்றிக்குப் பிறகு, இந்த நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.

இன்று படத்தின் தலைப்பு “ ஓ சுகுமாரி” என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள டைட்டில் அறிவிப்பு போஸ்டர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீல நிற இதயத்தை எழுதியபடி அதனை இரண்டு பாகங்களாகப் பிளக்கும் ஆரஞ்சு மின்னல் குறியீடு, பின்னணியில் பெரிய ஆலமரம், கிராம சூழல், ஓடிக்கொண்டிருக்கும் கிராமவாசிகள், இவை அனைத்தும் சேர்ந்து இப்படம் காதல், எமோசன், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட கதை என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

இந்த படத்திற்காக திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். ரசாகர் (Razakar) மற்றும் பொலிமேரா (Polimera,) போன்ற படங்களில் பணியாற்றிய C. H. குஷேந்தர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். M. M. கீரவாணியின் நெருங்கிய துணை இசையமைப்பாளராக பணியாற்றிய பரத் மஞ்சிராஜு ( Bharath Manchiraju) இப்படத்திற்கு இசையமைக்கிறார். பலகம் புகழ் திருமாலா M. திருப்பதி கலை இயக்குநராக இணைந்துள்ளார். கா படத்தின் ஸ்ரீ வரப்ரசாத் எடிட்டராக பணியாற்றுகிறார். ஸ்வயம்பு படத்தில் பணியாற்றி வரும் அனு ரெட்டி அக்கட்டி உடை வடிவமைப்பை கவனிக்கிறார். பிரபல பாடலாசிரியர் பூர்ணசாரி இந்த படத்திற்கான பாடல் வரிகளை எழுதுகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்படுகிறது.

நடிகர்கள்

திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜான்சி, விஷ்ணு ஓ லட்டு , ஆமணி, முரளிதர் கவுட், ஆனந்த், அஞ்சிமாமா, சிவானந்த், கோட்டா ஜெயராம், கவிரெட்டி ஶ்ரீனிவாஸ், சரண்யா.

தொழில் நுட்பக் குழு

தயாரிப்பாளர் – மகேஸ்வரா ரெட்டி மூலி
இயக்குநர் – பரத் தர்ஷன்
ஒளிப்பதிவு – C.H. குஷேந்தர்
இசையமைப்பாளர் – பரத் மஞ்சிராஜு
கலை இயக்குநர் – திருமலா M. திருப்பதி
எடிட்டர் – ஸ்ரீ வரபிரசாத்
உடை வடிவமைப்பாளர் – – அனு ரெட்டி அக்கட்டி
பாடலாசிரியர் – பூர்ணசாரி
மக்கள் தொடர்பு – யுவராஜ்
மார்க்கெட்டிங் – ஹேஷ்டேக் மீடியா

அம்மாவுடன் இணைந்து ‘வா வாத்தியார்’ பட பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன் !!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”.

இப்படத்தின் வெளியீட்டு வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்திலிருந்து டீசர், பாடல்கள், ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை உற்சாப்படுத்தி வருகிறது.

இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் சேர்ந்து பாடிய பாடல் வீடியோ வைரலாகி வருகிறது.

புரட்சித் தலைவர் எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலான ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை தனது அம்மாவுடன் சேர்ந்து ரீமிக்ஸ் செய்து பாடிய பாடல் தான் இப்போது இணையம் முழுக்க பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த வீடியோவில் நடிகர் கார்த்தி சந்தோஷ் நாரயாணனின் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டியும் “வாவ் சூப்பர்” என பதிவிட்டுள்ளார். மேலும் திரைத்துறை பிரபலங்கள் நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், பாடகர் விஜய் ஏசுதாஸ் உட்பட பலரும் வீடியோ பார்த்து வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

இப்படத்தில் நடிகர் கார்த்தி எம் ஜி ஆர் ரசிகராக நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து, இந்த வீடியோ வெளியாகி உள்ளதால், இப்பாடலின் ரீமிக்ஸ் வடிவம் இப்படத்தில் இடம்பெறுகிறதா ? இப்பாடலை வெளியிடுங்கள் என ரசிகர்கள் ஆவலோடு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இப்படம் அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து வித்தியாசமான களங்களில், அழகான படைப்புகளை வழங்கி அசத்தி வரும் நடிகர் கார்த்தி மற்றும் தனித்துவமான இயக்குநரான நலன் குமாரசாமி ஆகிய இருவரும் இணைகிறார்கள் என்றவுடனே, படத்தின் மீது பலமடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த கூட்டணியின் மாயாஜாலத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்த்ராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், பி எல் தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்.

பெரும் பொருட்செலவில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.

படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகவுள்ளது.

‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது

ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ படத்தின், மிக முக்கியமான சண்டைக் காட்சி, பிரம்மாண்ட செட்டில், பாலிவுட்டின் பிரபல ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் படமாகிறது !!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புஜ்ஜி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கத்தில் உருவாகும், கிராமத்து பின்னணியிலான ஆக்சன் டிராமா திரைப்படமான “பெத்தி” படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ஸ் ரசிகர்களிடம் அபார வரவேற்பைப் பெற்றுள்ளது. வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் விருத்தி சினிமாஸ் சார்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பிரமாண்டமாக வழங்கும் இந்தப் படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. நடிகை ஜான்வி கபூர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

தற்போது ராம் சரண் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் பங்கேற்க ஒரு முக்கியமான, அதிரடி நிறைந்த ஃபைட் சீன் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவர் என்ற முறையில் கருநாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார் அவர்களும் இந்த படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். ஹைதராபாத் அலுமினியம் பேக்டரியில், கலை இயக்குநர் அவிநாஷ் கொல்லா அமைத்துள்ள மிகப்பெரிய செட்டில் இந்த ஆக்சன் காட்சிகள் படமாகி வருகிறது.

பாலிவுட் ஸ்டார் விக்கி கௌஷலின் தந்தை மற்றும் தங்கல் போன்ற பல படங்களுக்காக பிரபலமான ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் இந்த அதிரடி சண்டைக்காட்சிகளை மேற்பார்வை செய்கிறார். ஸ்டண்ட் மாஸ்டராக நவகாந்த் பணியாற்றுகிறார். இந்த சீன் படத்தின் சிறப்புகளில் ஒன்றாக இருப்பதால், மிக பிரமாண்டமாக எடுக்கப்படுகிறது.

பெர்பெக்சனுக்கு பெயர் பெற்ற இயக்குநர் புஜ்ஜி பாபு சனா ஒவ்வொரு ஆக்சன் காட்சியையும் மிக அதிக கவனத்துடன், தனித்துவமான அணுகுமுறைகளில் வடிவமைத்து வருகிறார்.

பெத்தி படத்திற்கு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் “சிக்கிரி சிக்கிரி ” பாடல் 110 மில்லியன் பார்வைகளை கடந்து உலகம் முழுவதும் அதிரடி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வருடத்தின் மிகப் பெரிய சார்ட் பஸ்டர்களில் ஒன்றாகவும் வெற்றியடைந்துள்ளது.

கருநாடக சக்கரவர்த்தி சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, R ரத்னவேலு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி எடிட்டராக பணிபுரிகிறார்.

“பெத்தி” படம் வரும் 2026 மார்ச் 27 அன்று பான் இந்திய அளவில் மிகப் பிரமாண்டமாக திரையிடப்பட உள்ளது.

நடிகர்கள் :
குளோபல் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா

தொழில்நுட்பக் குழு :
இயக்கம், திரைக்கதை: புஜ்ஜி பாபு சனா
வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்
தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு
இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா
இசை: A.R. ரஹ்மான்
ஒளிப்பதிவு: R. ரத்னவேலு
கலை இயக்கம்: அவிநாஷ் கொள்ள
படத்தொகுப்பு: நவீன் நூலி
நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார்
மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ
மக்கள் தொடர்பு : யுவராஜ்.

‘சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு & L.K அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சிறை. இப்படத்தை அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். முற்றிலும் மாறுபட்ட களத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. மற்றும் இப்படத்தின் சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் சந்தித்த உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து இந்த கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் மன்னிச்சிரு என்று தொடங்கும் பாடல் இன்று வெளியானது.

இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் வேலூரில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் நாயகன் விக்ரம் பிரபு நாயகி அனந்தாவும் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் அவர்களே  இந்த பாடல் வரிகளையும் எழுதியுள்ளார்.

சத்ய பிரகாஷ் மற்றும் ஆனந்தி ஜோஷி இப்பாடலை பாடியிருக்கிறார்கள்

Link : https://www.youtube.com/watch?v=cIONySd4aC0

“ரஜினி கேங்க்” திரை விமர்சனம்

ரஜினி கிஷனும்,த்விவிகாவும் இருவரும் ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்ளுகிறார்கள். அவர்களுக்கு முனீஷ்காந்த் தனது காரில் லிப்ட் கொடுக்கிறார்.வழியில் திருடனான கல்கியும் அந்த காரில்ஏறிக்கொண்டு பயணிக்கிறார்.பயணிக்கும் போது இவர்கள், ஏதோ ஒரு இடத்திற்கு சென்று விடுகிறார்கள்.பல்வேறு தரப்பினர், பலகாரணங்களுக்காக இவர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே, ரஜினி கிஷன் – த்வ்விவிகாவுக்கு திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு படம் திடீரென்று வேறு ஒரு ஜானரில் பயணிக்க தொடங்குகிறது. அது என்ன ஜானர் ?, என்பதை தான் படத்தின் மீதிக்கதைக்களம்.

நாயகனாக நடித்திருக்கிறார் அறிமுக நடிகர் ரஜினி கிஷன், காமெடி ஜானர் படத்திற்கு பொருந்தும் முகம். நாயகியாக நடித்திருக்கிறார் த்விவிகா, காமெடி மற்றும் காதல் பாடல்கள் என அளவாக நடித்திருக்கிறார்.

முனீஷ்காந்த் காமெடி என்ற பெயரில் ஒரே மாதிரியான ரியாக்‌ஷனை கொடுத்து சலிப்படைய செய்கிறார்.

கூல் சுரேஷ், மொட்டை ராஜேந்திரன், கல்கி ஆகியோர்வரும் காட்சிகளிலும் காமெடி நெடி குறைவ இருக்கிறது.

காட்சிகளின் நீளத்தில் கூடுதல் கவனம் செலுத்திகுறைத்து
இருக்கலாம்.

எழுதி இயக்கியிருக்கிறார் எம்.எஸ்.ரமேஷ் பாரதி, பார்வையாளர்கள்

எந்தவித லாஜிக்கையும் பார்க்காமல் சிரிக்க வேண்டும் என்பதில் அதிகம் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர் .

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ அம் கேம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதிரடி அவதாரத்தில், துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான ஃபர்ஸ்ட்லுக்கை, படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் (Jom Varghese) Wayfarer Films  சார்பில்  பெரும் பொருட்செலவில் தயாரிக்கும்  இப்படத்தை, நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath) இயக்குகிறார்.  

இந்தப் படத்தின் கதையை சஜீர் பாபா (Sajeer Baba) , இஸ்மாயில் அபூபக்கர் (Ismail Aboobacker), பிலால் மொய்து (Bilal Moidu ) எழுத, வசனங்களை – ஆதர்ஷ் சுகுமாரன் (Adarsh Sukumaran) , ஷஹபாஸ் ரசீத் (Shahabas Rasheed) ஆகியோர் எழுதியுள்ளனர்

‘RDX’ படத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்தின் அடுத்த முயற்சியாக உருவாகும் இந்த படத்துக்கான மற்ற நடிகர்களின் போஸ்டர்கள் முன்பே வெளியிடப்பட்டிருந்தன. இப்போது துல்கர் சல்மானின் ஃபர்ஸ்ட் லுக்  வெளியாகியிருப்பது, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில்  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றாக இப்படம் திகழ்கிறது.

பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இந்த அதிரடி திரில்லர்  திரைப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படம் துல்கர் சல்மானின் 40வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண்டனி வர்கீஸ், தமிழின் முன்னணி இயக்குநர்  மிஷ்கின், கதிர், பார்த் திவாரி  மற்றும் தமிழ் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளை, கபாலி, KGF, கைதி, விக்ரம், லியோ, சலார் போன்ற பான்–இந்தியா படங்களில் பணியாற்றிய அன்பறிவு மாஸ்டர்ஸ் வடிவமைக்கின்றனர். ‘RDX’ படத்தின் பிரமாண்டமான ஆக்சன் வெற்றிக்கு பிறகு, நஹாஸ் மற்றும் அன்பறிவு கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றுவதால் இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு  ஏற்பட்டுள்ளது.

தொழில் நுட்ப குழு விபரம்

ஒளிப்பதிவு – ஜிம்ஷி காலித்
இசை – ஜேக்ஸ் பெஜாய்
படத்தொகுப்பு – சமன் சக்கோ
தயாரிப்பு வடிவமைப்பாளர் – அஜயன் சாலிசேரி
ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர
ஆடை – மாஷர் ஹம்சா
புரொடக்ஷன் கன்ட்ரோலர் – தீபக் பரமேஸ்வரன்
இணை இயக்குநர் – ரோஹித் சந்திரசேகர்,
பாடல் வரிகள் – மனு மஞ்சித் , விநாயக் சசிகுமார்
VFX –  . தௌஃபீக் (எக்வொயிட்) (Taufeeq – Eggwhite)
போஸ்டர் டிசைன் – டென் பாயிண்ட்
சவுண்ட் டிசைன் – சிங்க் சினிமா
சவுண்ட் மிக்ஸிங் – கண்ணன் கணபத்
ஸ்டில்ஸ் – எஸ்.பி.கே
மக்கள் தொடர்பு – யுவராஜ்