Breaking
January 9, 2025

Cinema

தங்கலான் – உலகளாவிய அளவில் ரூபாய் 100 கோடி வசூலை நோக்கி பயணம்.

சீயான் விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் எழுத்து-இயக்கத்தில், ஸ்டூடியோ க்ரீன் K.E. ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான தங்கலான் திரைப்படம், வசூல் ரீதியில் வெற்றி அடைந்து, உலகளவில், ரூபாய் 100 கோடி வசூலை நோக்கி தற்போது நகர்ந்திருக்கிறது. தங்கலான் திரைப்படம், சீயான் விக்ரம் அவர்களுக்கு அவரது திரை வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த முதல் நாள் வசூலை கொண்டு வந்தது. ரூபாய் 26 கோடிக்கும் மேல் முதல் நாள் வசூல் செய்து சாதனை படைத்த இப்படம், தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இப்படத்தின் இரண்டாவது வாரம், தமிழ்நாட்டில் பல புதிய திரைப்படங்கள் வெளியாகி இருந்த போதிலும், வசூலில் ஸ்டெடியாக இப்படம் சென்று கொண்டிருக்கிறது. ஆந்திர மாநிலம் மற்றும் தெலங்கானாவில், பெரும் வரவேற்பை பெற்று இரண்டாவது வாரம் இப்படம் 141 தியேட்டர்கள் அதிகரித்து, தற்போது 391 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 30-ம் தேதியன்று மும்பை, டெல்லி மற்றும் அனைத்து வட மாநிலங்களில் தங்கலான் வெளியாக உள்ளது. அதன் மூலம் மேலும் பல கோடிகளை இப்படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இப்படத்திற்கு கிடைத்த வெற்றிகளினால், தயாரிப்பாளருக்கு அவரின் முதலீட்டை தாண்டி வசூல் செய்யும் என அனைவராலும் பேசப்படுகிறது. பா. ரஞ்சித் அவர்களின் சிறப்பான இயக்கத்தால், உருவான தங்கலான் திரைப்படத்தில், சீயான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், டேனியல் கால்டகிரோன், பசுபதி என பல நடிகர்கள் தங்களின் சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு சிறந்த திரைப்படமாக உருவாக்கியுள்ளனர். சீயான் விக்ரம் அவர்கள் இப்படத்திற்காக கொடுத்த உழைப்பையும், அர்ப்பணிப்பையும், ஆகச்சிறந்த நடிப்பையும் பாராட்டாத பார்வையாளர்களோ ஊடகங்களோ இல்லை. அந்த அளவு தன் மாபெரும் உழைப்பை இப்படத்திற்காக விக்ரம் அவர்கள் கொடுத்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் உருவான இப்படம், 18-ம், மற்றும் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த விளிம்புநிலை மனிதர்கள், அவர்களின் போராட்டங்கள், மேஜிக்கல் ரியலிசம் என பல புதுமையான விஷயங்களை உள்ளடக்கி, ஒரு சிறந்த காட்சி அனுபவத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. தேசிய விருது பெற்ற இசை அமைப்பாளர் G.V. பிரகாஷ் குமாரின் பாடல்களும், பின்னணி இசையும், பெரிய பலமாக அமைந்துள்ள தங்கலான், 2024-ல் ஒரு மறக்க முடியாத திரைப்படமாகவும், ரூபாய் 100 கோடியளவில் வசூல் செய்த ஒரு படமாகவும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் இருக்கும்.

விடுதலையின் கருத்தை மறுவரையறை செய்யும் விடுதலைப் பாடல்:

விடுதலையைப் புறவெளியில் தேடியலையும் மனிதன் நாள்தோறும் தன்னைத்தானே சிறைப்படுத்திக்கொள்ளும் அகவிடுதலையைப் பற்றி சிந்திக்க வேண்டுமென்ற கருப்பொருளோடு வெளியாகியுள்ளது ‘விடுதலைப் பாடல்’. ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைப்பில், மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலைத் தீபக் புளூ பாடியுள்ளார்.
தேர்வுகளின் தடைகளில் இருந்து அறிவு தேடும் விடுதலை, தோல் நிறத்தின் மதிப்பீடுகளிலிருந்து மெய்யழகு வேண்டும் விடுதலை, பொய்களின் சுமையிலிருந்து விடுபட விரும்பும் உண்மை, தொடுதிரையிலிருந்து விரல்கள் கோரும் விடுதலை என அன்றாடம் நம்மை நாமே சிறைப்படுத்திக்கொண்டு வாழ்வதைத் தகர்த்தெறிய இப்பாடல் வலியுறுத்துகிறது. இதோடு நம் நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த வீரர்களையும் போற்றுகிறது. விடுதலையின் பொருளை நாம் மறுமதிப்பீடு செய்துகொள்ள வேண்டுமென்ற ஆழமான கண்ணோட்டத்தை வலியுறுத்தும் இந்தப்பாடலை அபிநாத் சந்திரன் தயாரிக்க மதுரை குயின் மிரா பள்ளி வெளியிட்டுள்ளது.
இளைஞர்களின் துள்ளளான நடன அசைவுகளோடு உருவாகியுள்ள விடுதலைப்பாடலின் ஒளி வடிவம் பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. விரைவில் அனைத்து இசைச் சீரோடைகளிலும் இப்பாடல் வெளியிடப்படும்.

புகழ் நடிக்கும் ‘FOUR சிக்னல்’……

R.S.மணிகண்டன் மற்றும் மகேஸ்வரன்கேசவன் தயாரிப்பில் மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில் புகழ் நாயகனாக நடிக்கும் ‘FOUR சிக்னல்’

காதலும், உணர்வுகளும் கலந்த கலகலப்பான திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு தயாராகி வருகிறது

ஶ்ரீ லக்ஷ்மி சண்முகநாதம் ஃபிலிம்ஸ் மற்றும் கேசவ் புரொடக்ஷன்ஸ் பேனர்களில் R.S.மணிகண்டன் மற்றும்
மகேஸ்வரன்கேசவன் இணைந்து தயாரிக்க மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில் ‘விஜய் டிவி’ புகழ் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகும் ‘Four சிக்னல்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

அறிமுக இயக்குநரான மகேஸ்வரன்கேசவன், காதலும், உணர்வுகளும் கலந்த கலகலப்பான திரைப்படமாக ‘Four சிக்னல்’ படத்தை உருவாக்கி உள்ளார். நகரங்களில் வசிக்கும் வெகு ஜனங்கள் வெகுவாக பயன்படுத்தும் எளிய போக்குவரத்தான ஷேர் ஆட்டோவை சுற்றி இந்த கதை சுழல்கிறது.

சென்னையின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு தினமும் ஷேர் ஆட்டோவில் செல்லும் பயணிகளுக்கும் அதன் ஓட்டுநருக்கும் இடையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ள ‘Four சிக்னல்’ திரைப்படத்தை வரும் அக்டோபர் மாதம் தீபாவளிக்கு வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.

அருவி திருநாவுக்கரசு, கல்லூரி வினோத், லொள்ளு சபா சேஷு, ஷர்மிளா, விஜய் ஆதிராஜ், யூடியூபர் காத்து கருப்பு கலை உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க, A.J அலி மிர்சாக் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மனிதர்களின் அந்தரங்க உணர்வுகளையும் யதார்த்தங்களையும் உள்ளடக்கிய ரொமான்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள ‘Four சிக்னல்’ திரைப்படத்திற்கு பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு செய்ய, பிரியன் எடிட்டிங் செய்துள்ளார்.

படம் குறித்து பேசிய இயக்குநர், “எளிய மக்களின் வாழ்க்கையில் நடக்கும் தினசரி நிகழ்வுகளின் சுவாரஸ்ய தொகுப்பாக ‘Four சிக்னல்’ இருக்கும். தரமான திரைப்படங்களை எப்போதும் ஆதரிக்கும் தமிழ் ரசிகர்கள் இந்த திரைப்படத்தையும் ஆதரிப்பார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்,” என்றார்.

“சாலா” திரைவிமர்சனம்

சிறுவயதில் தீரன் ஏரியாவில் தாதாவாக இருக்கும் அருள்தாஸின் உயிரை ஒரு மோதலில் போது காப்பாற்றுகிறார்.உடனே தாதா அருள்தாஸ் தன் வாரிசாக கதாநாயகன் தீரனை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அருள்தாஸின் எதிரி தாதாவான சார்லஸ் வினோத் ஏலத்தில் அருள்தாஸ் நடத்தும் பார்வதி பார் உரிமையை ஏலத்தில் கைப்பற்றுகிறார். இழந்த பார்வதி பாரை மீட்டெடுப்பதே அருள்தாஸின் லட்சியமாக வாழ்ந்து வருகிறார்.கதாநாயகன் தீரன் வளர்ந்து தனது குருவிற்காக அந்த பார்வதி பாரை மீட்டெடுப்பதில் உறுதுணையாக நிற்கிறார்.பலநூறு பார்களை நடத்த வேண்டும் என்று எண்ணத்தில் இருக்கும் கதாநாயகன் தீரன்.
மதுபான கடைகளையும் பார்களையும் மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தும் நாயகி ரேஷ்மாவுக்கும் தீரனுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட, எதிரும் புதிருமாக இருக்கும் இருவருக்கும் நடக்கும் மோதல் காதலாக மாறுகிறது.இதற்கிடையே இந்த பார்வதி பாரை ஏலம் எடுப்பதில் நாயகன் தரப்புக்கும், வில்லன் தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.
பார்வதி பாரை ஏலம் எடுத்தார்களா? எடுக்கவில்லையா?ரேஷ்மாவுக்கும் தீரனுக்கும் காதல் என்ன ஆனது ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் இந்த சாலா திரைப்படத்தின் மீதிக்கதை.

சாலா திரைப்படத்தில் அறிமுக நாயகனாக தீரன் அறிமுகமாகியிருக்கிறார். ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்பு என்று முரட்டுத்தனமாக இருந்தாலும் அப்பாவித்தனமான தனது நடிப்பால் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.தன் காதலி கதாநாயகி ரேஷ்மா பாதிப்புக்கு ஆளாகும்போது பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் வரவேற்புப் பெறுகிறார்.
நாயகியாக ரேஷ்மா வெங்கடேஷுக்கு புரட்சிகரமான கதாபாத்திரம், அதை புரிந்து நடித்திருக்கிறார்.
சார்லஸ் வினோத் மற்றும் அருள்தாஸ் வழக்கமான நடிப்பு கொடுத்து கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் மிகவும் அருமையாக நடித்து இருக்கிறார்கள்..
நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீநாத் , சம்பத் ராம், யோகிராம், பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை மிகவும் சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ரவீந்திரநாத் குருவின் அற்புதமாகவும் காட்சிப்படுத்துள்ளார்.
இசையமைப்பாளர் தீசன் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறார்.
மதுப்பழக்கத்திற்கு மக்கள் எப்படியெல்லாம் அடிமையாகி இருக்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கும் இயக்குநர் மணிபால் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

சபையர் ஸ்டுடியோஸ் வெளியிடும் பிரபு தேவாவின் ‘பேட்ட ராப்’

பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய சபையர் ஸ்டுடியோஸ்

நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை சபையர் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

இயக்குநர் எஸ். ஜே. சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, கலாபவன் ஷாஜோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி.கே.தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏ. ஆர். மோகன் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார். இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோபி பி. சாம் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் மோசன் போஸ்டர், இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு வரவேற்பினை பெற்றிருக்கிறது. தற்போது இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“போகுமிடம் வெகு தூரம் இல்லை” திரை விமர்சனம்….

விமல் கருணாஸ் மற்றும் பல நடிப்பில் மைக்கேல் கே ராஜா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் போகுமிடம் வெகு தூரம் இல்லை

அமரர் ஊர்தி ஓட்டுனரான விமல், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனது தாத்தாவை துணைக்கு வைத்து விட்டு மருத்துவ செலவிற்காக -சென்னையில் இறந்தவரின் சடலத்தை ஏற்றுக் கொண்டு திருநெல்வேலிக்கு பயணிக்கிறார்.வழியில் கூத்து கலைஞர் கருணாஸ் தன்னை செல்லும் வழியில் இறங்கி விடுமாறு கேட்க, மனதளவில் பிடிக்காமல் துணைக்காக ஏற்றுக்கொள்கிறார்.
இருவரும் பயணிக்க வழியில் ஒரு காதல் ஜோடியும் வண்டியை நிறுத்தி ஏறிக்கொள்ள இந்த இருவர் மற்றும் கருணாஸ்னால் பல விதத்தில் பல பிரச்சனைகள் கதாநாயகன் விமலுக்கு வருகிறது.
இந்த காதல் ஜோடிகளால் வந்த பிரச்சனை என்ன? அமரர் ஊர்தியில் உள்ள சடலத்தை ஒப்படைத்தாரா? ஒப்படைக்கவில்லையா? என்பதுதான் போகுமிடம் வெகு தூரம் இல்லை திரைப்படத்தின் மீதிக்கதை.
அமரர் ஊர்தி ஓட்டுனர் குமார் கதாபாத்திரத்தில் மிகவும் கனத்த முகத்துடனும் தன்னுடன் பயணித்த கருணாஸ் இறந்த பிறகு மிகவும் நினைத்து வேதனைப்படும் காட்சிகளிலும் அருமையாக தன்னை மறந்து நடித்துள்ளார்.எப்பொழுதும் பார்க்கும் விமலாக இல்லாமல் புது மாதிரியான விமலாக நடித்திருக்கிறார்.
மற்றொரு கதையின் நாயகனாக கருணாஸ் நடித்துள்ளார்.
கூத்துக் கலைஞர் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாகவும் கூத்துக் கலைஞரின் நடை உடை பாவனை அனைத்தையும் ஏற்று கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அற்புதமாக நடித்து இருக்கிறார்.
நம்மளால் ஏற்பட்ட தவறுக்கு நாம் தான் பரிகாரம் செய்ய வேண்டும் என கருணாஸ் எடுக்க முடிவு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை தூக்கி வாரி போட்டு விட்டது.
விமல் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மேரி ரிக்கெட்ஸ், அருமையாக நடித்துள்ளார்.
தீபா சங்கர், ஆடுகளம் நரேன், பவன், சார்லஸ் வினோத், அருள்தாஸ், வேல ராமமூர்த்தி, மனோஜ்குமார் அனைத்து கதாபாத்திரங்களும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் டெமில் சேவியர் எட்வர்ட்ஸ். மிகச்சிறந்த ஒளிப்பதிவை கொடுத்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இசை உயிரோட்டமாக உள்ளது.
ஒரு அமரர் ஊர்தி ஓட்டுனரின் ஒரு நாள் வாழ்க்கையை வைத்து, அதை சுற்றிய பல சுவாரஸ்யமான காட்சிகளும் அந்த ஒரு நாள் வாழ்க்கையின் அனுபவங்களையும் படமாக்க முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மைக்கேல் கே ராஜா. இந்த அமரர் ஊர்தியில் பயணிக்கும் இரண்டு கதாபாத்திரங்களை மையமாக வைத்து யோசித்த கதை அருமை, அதன் திரை கதையை இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு சுவாரஸ்யமாக அமைத்திருந்தால், அந்த மனிதர்களின் வாழ்க்கையை சுவாரசியமாக கொடுத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
மொத்தத்தில் போகும் இடம் வெகு தூரம் இல்லை விமலின் திரை வாழ்க்கைக்கு நிச்சயம் ஒரு மயில் கல்லாக இருக்கும்

“வரம் ” சினிமாஸ் தயாரிப்பில் நடிகர் ரஞ்சித், மெகாலி மீனாட்சி விட்டல் ராவ்

“வரம் ” சினிமாஸ் தயாரிப்பில் நடிகர் ரஞ்சித், மெகாலி மீனாட்சி விட்டல் ராவ் நடித்துள்ள இறுதி முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவுற்றது..!!

வரம் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இறுதி முயற்சி திரைப்படத்தினை இயக்குனர் நடிகர் திரு ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் உதவியாளர் வெங்கட் ஜனா எழுதி இயக்கி உள்ளார்..

இறுதி முயற்சி திரைப்படம் இனிதே நிறைவு பெற்றதை கொண்டாட படக்குழுவினர் மனநலம் குன்றிய சிறுவர்கள் பள்ளிக்கூடத்திற்க்கு சென்று அங்கு படிக்கும் சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி அவர்களை சந்தோஷ படுத்தி அந்த மனநலம் குன்றிய சிறுவர்களின் அன்பையும் ஆசியையும் பெற்று வந்தனர்…

இந்த இறுதி முயற்சி திரைப்படம் சாதாரண பெட்டி கடை வைத்திருப்பவர் முதல் பல கோடிகளில் வணிகம் செய்யும் பெரும் தொழில் அதிபர்களும் சந்திக்கும் ஒரு பிரச்சினையை நெஞ்சத்தை பதை பதைக்க வைக்கும் வகையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் திரைக்கதை அமைத்து அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்தினருடன் ரசித்து பார்க்கும் விதமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இறுதி முயற்சி திரைப்படம் உருவாகியுள்ளது..

ரஞ்சித் மெகாலி மீனாட்சி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, விட்டல் ராவ் கதிரவன் புதுப்பேட்டை சுரேஷ் இன்னும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளார்…

எழுத்து இயக்கம் வெங்கட் ஜனா, எடிட்டிங் வடிவேல் விமல் ராஜ், ஒளிப்பதிவு சூர்யா காந்தி, இசை சுனில் லாசர், கலை பாபு M பிரபாகர், பாடலாசிரியர் மஷீக் ரஹ்மான், பாடகர் அரவிந்த் கார்ணீஸ் , ஸ்டில்ஸ் மணிவண்ணன், டிசைன் ரெட்டாட் பவன், மக்கள் தொடர்பு வேலு..

இறுதி முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற‌ நிலையில், இறுதி கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வர , விரைவில் படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் வெளியீடு பற்றிய அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது….

சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய திரைப்படம்

வீனஸ் பிக்சர்ஸ் திரு கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் நான்கு தலைமுறைகளாக திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், குடும்பத்துடன் ரசிக்கும் படங்களை இயக்குவதில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.

1950கள் முதல் மக்கள் திலகம் எம் ஜி ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், அஜித் குமார், தனுஷ் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்த வெற்றி படங்களை தயாரித்துள்ள பாரம்பரியமிக்க இந்த குடும்பம் முதல் முறையாக இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் கைகோர்ப்பதில் பெருமை கொள்கிறது. இத்திரைப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்

கதைக்கு முக்கியத்துவம் கொண்ட, ஆறு முதல் அறுபது வரை அனைத்து தரப்பினரும் கண்டு களிக்கும் வகையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சமீபத்தில் தேசிய விருது வென்ற நித்யா மேனன் நாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் நித்யா மேனன் விரைவில் பங்கேற்கிறார்.

இந்த திரைப்படத்தின் பெயர், இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்

விஸ்வம்பரா படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக்

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, யுவி கிரியேஷன்ஸ் இணையும் விஸ்வம்பரா படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது !!

ப்ரீ-லுக் போஸ்டர் பெரும் வரவேற்பைக் குவித்த நிலையில், மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் கிரேஸி சோஷியோ-ஃபேண்டஸி என்டர்டெய்னர் “விஸ்வம்பரா” படத்தின் தயாரிப்பாளர்கள், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக்கில் மாய புராணகதைகளை ஞாபகப்படுத்தும் பின்னணியில், சிறப்பு சக்திகள் மிகுந்த திரிசூலத்தினை ஏந்தியபடி காட்சியளிக்கிறார் சிரஞ்சீவி. இடி மின்னல் பரவ, தெய்வீக கதிரலை சுற்றிலும் பாய்கிறது.

சிரஞ்சீவி மிக இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் லேசான தாடியுடன் தோற்றமளிக்கிறார், திரிசூலத்தினை கையில் பிடித்தபடி, மிரட்டலான லுக்கில் அசத்துகிறார். இந்த கண்கவர் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

பிளாக்பஸ்டர் “பிம்பிசாரா” திரைப்படத்தை வழங்கிய இயக்குநர் வசிஷ்டா, தனது அபிமான நட்சத்திரமான சிரஞ்சீவியுடன் இணைந்து, “விஸ்வம்பரா” திரைப்படத்தை பிரம்மாண்ட படைப்பாக உருவாக்குகிறார். சிறந்த விஎஃப்எக்ஸ், அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் ரசிகர்கள் ஆச்சர்யம் கொள்ளும் வகையில், ஒரு உலகத்தை உருவாக்கியுள்ளார்.

பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் இப்படத்தினை தயாரிக்கிறது. முன்னணி நட்சத்திர நடிகர்கள் பங்கேற்க உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்றுள்ளனர். நடிகை திரிஷா கிருஷ்ணன் மற்றும் ஆஷிகா ரங்கநாத் முன்னணி கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர், குணால் கபூர் ஒரு சக்திவாய்ந்த கேரக்டரில் நடிக்கின்றார்.

விக்ரம், வம்சி, பிரமோத் ஆகியோர் இணைந்து பெரும் பொருட்செலவில், இந்த ஃபேண்டஸி ஆக்‌ஷன் அட்வென்சர் திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். சமீபத்தில் ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார், பிரபல லென்ஸ்மேன் சோட்டா K நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார்.

விஸ்வம்பரா 2025 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நடிகர்கள்: மெகாஸ்டார் சிரஞ்சீவி, த்ரிஷா கிருஷ்ணன், ஆஷிகா ரங்கநாத், குணால் கபூர்

நடிப்பு : மெகா ஸ்டார் சிரஞ்சீவி

தொழில்நுட்பக் குழு:
எழுத்தாளர் மற்றும் இயக்குநர்: வசிஷ்டா தயாரிப்பாளர்கள்: விக்ரம், வம்சி, பிரமோத் பேனர்: UV கிரியேஷன்ஸ்
இசை: எம்.எம்.கீரவாணி
ஒளிப்பதிவு : சோட்டா கே நாயுடு
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஏ.எஸ்.பிரகாஷ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

இயக்குநராக மீண்டும் களம் இறங்கும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்

‘கே ஜி எஃப்’ , ‘ சலார்’ போன்ற பிரம்மாண்டமான வெற்றி படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ‘வீர சந்திரஹாசா’ எனும் திரைப்படத்தினை இயக்குகிறார். இதன் மூலம் மீண்டும் அவர் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார். இது அவரது இயக்கத்தில் உருவாகும் ஆறாவது திரைப்படமாகும். அத்துடன் இந்த திரைப்படம் அவரது கலையுலக பயணத்தில் முக்கிய அடையாளமாகவும் இருக்கும்.

இயக்குநர் ரவி பஸ்ரூரின் திரைப்படங்கள் அவற்றின் புதுமையான மற்றும் யதார்த்தமான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றவை. மேலும் அவரது இயக்கத்தில் உருவாகும் ‘வீர சந்திரஹாசா’ – பாரம்பரியத்தை குறிப்பிடத்தக்க வகையில் அதன் எல்லைகளை மேலும் விரிவடைய செய்யும் என்கிறார்.

‘வீர சந்திரஹாசா’வை வேறு படைப்புகளிலிருந்து வித்தியாசப்படுத்துவது கர்நாடகாவின் பழைமையான மற்றும் மரியாதைக்குரிய கலை வடிவமான யக்ஷகானாவின் அற்புதமான விளக்க படைப்பாகும். பன்னிரண்டு ஆண்டுகளாக ரவி பஸ்ரூர் யக்ஷகானாவை வெள்ளி திரைக்கு கொண்டுவர வேண்டும் என்ற கனவினை கொண்டிருந்தார்.

இந்த திரைப்படம் அந்த லட்சியத்தின் பலனை பிரதிபலிக்கிறது. இந்த முயற்சி படைப்பு ரீதியிலான பாய்ச்சல் மட்டுமல்ல… ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார மைல்கல் என்றும் சொல்லலாம். இந்த படைப்பில் கணிசமான வளங்களை முதலீடு செய்வதன் மூலம், இந்த செழுமை மிக்க கலை வடிவத்தை பாதுகாத்து கொண்டாடுவதற்கு இயக்குநரான ரவி பஸ்ரூர் மிகுந்த துணிச்சலையும், அர்ப்பணிப்பையும் வழங்கி உள்ளார்.

யக்ஷகானாவை சினிமா மொழியில் மாற்றியமைக்கும் முயற்சி என்பது துணிச்சலானது மற்றும் பாராட்டுக்குரியது. இதற்கு நிதி முதலீடு மட்டுமல்ல… கலை வடிவத்தின் நுணுக்கங்களை பற்றிய ஆழமான புரிதலையும், அதன் அதிர்வை திரையில் மொழிபெயர்க்கும் திறனும் தேவை. இத்தகைய முயற்சி சவால்கள் நிறைந்தது. ஆனால் இது உலகளாவிய தளத்தில் யக்ஷகானா மற்றும் பிற பாரம்பரிய கலை வடிவங்களின் பரந்துபட்ட பாராட்டிற்கு வழி வகுக்கிறது.

புதிய மற்றும் ஆக்கபூர்வமான வழிகளில் அவர்களின் கலாச்சார பாரம்பரியத்தை ஆராயவும், வெளிப்படுத்தவும், மற்றவர்களை ஊக்குவிக்கவும் அக்கலையின் புதுமை மற்றும் ஆற்றலுக்காக.. இந்த அற்புதமான அணுகுமுறையுடன் தொடங்கப்பட இருக்கும் ‘வீர சந்திரஹாசா’ கொண்டாடப்பட வேண்டும்.