இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர்கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ படத்தின் டீசரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் ஒரு சுருக்கமான பார்வையுடன், படத்தின் அதிரடியான களம், உயிர்ப்புடனும் உணர்வுப்பூர்வமாகவும் காட்டப்பட்டுள்ளது. நட்சத்திர நாயகன் ரன்பீர் கபூரின் பிறந்தநாள் சிறப்பாக, டீஸர் வெளியிடப்பட்டிருப்பது, கூடுதல் உற்சாகத்தை சேர்க்கிறது. ‘அனிமல்’ என்பது ஒரு புதுமையான அதிரடியான திரை அனுபவம், இது சுவாரஸ்யமும் ஆர்வமும் இணைந்து நீங்கள் நினைத்து பார்த்திராத பயணத்திற்கு இது உங்களை அழைத்துச் செல்லும். இந்த திரில்லர் டிராமா திரைப்படத்தை பூஷன் குமார் தயாரித்துள்ளார். அனில் கபூர், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் மற்றும் திரிப்தி டிம்ரி ஆகிய நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
உங்கள் காலெண்டரில் குறித்து வைத்து கொள்ளுங்கள், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ‘அனிமல்’ திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு புதுவிதமான அனுபவத்திற்கு தயாராகுங்கள்
‘அனிமல்’ படத்தை பூஷன் குமார் மற்றும் கிரிஷன் குமாரின் டி-சீரிஸ், முராத் கெடானியின் சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வாங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
தன் பாலின ஈர்ப்பாளர்களை கருத்தை மைய்யமாக வைத்து வந்துள்ள திரைப்படம்தான் ’வாழ்வு தொடங்கும் இடம் நீதானே’ ஷார்ட் பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் இந்த திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகி உள்ளது.
நிராஞ்சனா, சுருதி பெரியசாமி முக்கிய கதாபாத்திரத்தில் மற்றும் அஸ்வத் மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்குனர் ஜெயராஜ் பழனி இயக்கத்தில் ”வாழ்வு தொடங்குமிடம் நீதானே”. தன் பாலின ஈர்ப்பாளர்களை பற்றி உணரும் படம்
தரங்கம்பாடி அருகே ஒரு ஒரு இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஷகிரா. இவரின் வீட்டிற்கு திருச்சியில் இருந்து மார்டனாக வினோதா என்ற பெண் வருகிறார்.
சினிமா எடுப்பதற்காக இந்த பகுதிக்கு வந்திருப்பதாகவும், சில நாட்கள்தங்கியிருக்க இருப்பதாகவும் கூறுகிறார் வினோதா.தனது வீட்டிலேயே தங்கிக் கொள்ளுமாறு கூறிவிடுகிறார் ஷகிராவின் தந்தை. ஷகிராவும் வினோதாவும் ஒரே அறையில் தங்குகின்றனர்.
அந்த சமயத்தில் இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. இந்த காதலை வினோதா ஷகிராவின் அப்பாவிடம் கூறுகிறார். இதனால், கோபம் கொண்ட இருவரையும் அடித்து விடுகிறார் ஷகிராவின் தந்தை.
இந்நிகழ்வால், அவசரமாக ஷகிராவிற்கு திருமண ஏற்பாடுகளை செய்கிறார். இறுதியில் ஷகிராவும் வினோதாவும் இணைந்தார்களா.? இந்த சமுதாயம் இவர்களை ஏற்றுக் கொண்டதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
நிராஞ்சனா, சுருதி பெரியசாமி இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்களாக நடித்துள்ளார்கள். வெளிநாடுகளில் இருந்த இம்மாதிரியான கலாச்சாரம், நம் நாட்டிற்கு வர ஆரம்பித்துள்ளது. அரசும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் என்று அனுமதியும் வழங்கியுள்ளது. இம்மாதிரியான தன் பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய விழிப்புணர்வு இப்போது தான் எழ ஆரம்பித்துள்ளது. அது, இன்னும் மக்கள் மனதில் சென்றடைய விழிப்புணர்வு ஒன்றே வேண்டும்.
வாழ விடுங்கள் வாழ விடுங்கள் என்று கூறுவதை விட, தங்களின் உணர்வுகளை அனைவரும் புரிந்து கொள்ளும்படியான செய்தி மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். திரைக்கதையை மிக அற்புதமாக நகர்த்தியுள்ளார் இயக்குனர்.
சுருதி மற்றும் நிரஞ்சனாவின் முத்த காட்சிகள் இப்படத்தின் மிகப்பெரிய ஹைலைட்.
இது போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து தயாரிக்கும் நீலிமா இசைக்கு பாராட்டுக்கள்.
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே காதலுக்கு ஜாதி, மதம் பேதம் மட்டும் இல்லை பாலின பேதமும் கிடையாது
ராகவா லாரன்ஸ்,கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார்,மற்றும் பலர் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் சந்திரமுகி 2
மிகப்பெரிய தொழிலதிபரான சுரேஷ் மேனன், ராதிகா சரத்குமார் குடும்பத்தில் உள்ள பேக்டரி தீப்பெடுத்து எரிந்து விடுகிறது.இப்படி அவர்கள் குடும்பத்தில் அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது.நடக்கும் பிரச்சினைகளுக்கு முற்றும் புள்ளி வைக்க வேண்டும் என்றால் குடும்பத்தில் உள்ள அனைவரும் உங்களது குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் மட்டுமே பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என குடும்ப ஜோதிடர் சொல்ல, குடும்பத்தில் உள்ள அனைவரும் குலதெய்வம் கோவில் உள்ள ஊருக்கு செல்கிறார்கள்.அங்கு தங்குவதற்கான சந்திரமுகி இருக்கும் அந்த பங்களாவை குத்தகைக்கு எடுத்து அனைவரும் தங்குகிறார்கள்.இவர்களுடன் ராதிகா மகளின் இரண்டு குழந்தைகளும் வரவேண்டும் என ஜோதிடர் கூற அந்த இரண்டு குழந்தைகளுக்கும் பாதுகாவலராக இருக்கும் கதாநாயகன் ராகவா லாரன்ஸ் அதே சந்திரமுகி பங்களாவில் வந்து தங்குகிறார்கள்.இந்நிலையில் குலதெய்வ கோவில் பராமரிப்பு இல்லாமல் அடர்ந்த காடு போல் சுத்தம் செய்யாமல் இருக்கிறது.தங்களது குலதெய்வ கோவிலில் சுத்தம் செய்வதற்காக ஒருவர் மூலம் 20 பேர் கொண்ட நபர்கள் சுத்தம் செய்ய செல்கிறார்கள்.அங்கு கோவில் சுத்தம் செய்து கொண்டிருந்தவர்களில் இரண்டு பேர் மட்டும் மர்மமான முறையில் இறந்து விடுகிறார்கள்.அதே சமயம் சந்திரமுகியின் ஆத்மா ராதிகாவின் மகளான லட்சுமி மேனன் உடலுக்குள் புகுந்து விடுகிறது.இதையடுத்து இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் பலவிதமான பிரச்சனைகள் நடக்கிறது.
இறுதியில் சந்திரமுகியின் ஆத்மா லட்சுமி மேனனை விட்டு சென்றதா? செல்லவில்லையா? சந்திரமுகியின் ஆத்மா ராதிகா குடும்பத்தை என்ன செய்தது? குல தெய்வ கோவிலில் ராதிகாவின் குடும்பத்தினர் வழிபாடு செய்தார்களா? வழிபாடு செய்யவில்லையா? என்பதுதான் இந்த சந்திரமுகி 2 திரைப்படத்தின் மீதிக்கதை.
ராகவா லாரன்ஸ் வேட்டையன் கதாப்பத்திரத்தில் வீரத்தையும், பாண்டியன் கதாப்பத்திரத்தில் காமெடியையும் தனக்கே உரிய பாணியில் நடனம், ரொமான்ஸ் என அருமையாக நடிப்பில் கலக்கி இருக்கிறார்.
சந்திரமுகியாக வரும் கதாநாயகி கங்கனா ரனாவத் நடனம், பயம் என அனைத்திலும் ஸ்கோர் செய்து அழகு தேவதையாக ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.
லட்சுமி மேனன் பாவமாக வந்து சந்திரமுகியின் ஆத்மா தன்து உடம்பில் புகுந்தவுடன் ஆக்ரோஷமான நடிப்பையும் வெளிப்படுத்தி அசர வைத்து இருக்கிறார்.
பணிப்பெண்ணாக வரும் மகிமா நம்பியார் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
ராதிகா சரத்குமார் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.
சிருஷ்டி டாங்கே, ரவி மரியா, விக்னேஷ், ராவ் ரமேஸ், Y.G மகேந்திரன், சாய் ஐயப்பன், சத்ரூ, கார்த்திக் சீனிவாசன், C.ரங்கநாதன், தேவி, பாவனா, பேபி மானஸ்வி, மாஸ்டர் சஞ்ஜீவ், மாஸ்டர் தர்சித், பேபி தீக்ஷா உள்ளிட்ட அனைவரும் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
வடிவேலு தான் பயந்து ரசிகர்களுக்கு சிரிப்பை கொடுத்து இருக்கிறார். திரைப்படத்திற்கு பெரிய பலம் வடிவேலுவின் நடிப்பு.
ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு அருமையாக அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் ஆஸ்கர் நாயகன் எம் எம் கீரவாணியின் இசை மற்றும் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.
சந்திரமுகி முதல் பாகத்தில் இருந்த அரண்மனையில் ராதிகா மற்றும் குடும்பத்தினர் சென்ற பிறகு சந்திரமுகி ஆத்மாவால் ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பி.வாசு.