Breaking
March 7, 2026

deccanwebtv

“ஜாக்கி”திரை விமர்சனம்

மதுரை சுற்றி நடைபெறும் கிடா சண்டையை மையப்படுத்தி வந்திருக்கிற திரைப்படம் தான் ஜாக்கி இந்த படத்தில் ராமர் தனது ஆடாத காளியுடன் ஒரு கிடா சண்டைக்கு வருகிறார் அங்கு ஏற்கனவே பல ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி பெற்று வரும் காப்ரா கார்த்திக் அவரின் ஆடான காளியுடன் சண்டை பற்றிஇதனால் இருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையும் நீ பெரியவனா நான் பெரியவனா என்னும் சண்டையில் என்ன நடக்கிறது இருவரும் எப்படி மோதி கொள்கிறார் இவர்கள் இடையில் சிக்கிக் கொள்ளும் அந்த ஆடுகள் என்ன பாடுபடுகிறது என்பதுதான் ஜாக்கி படத்தின் திரைக்கதை
பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த கிடா சண்டை முழுமையாக எடுக்க வேண்டும் என இயக்குனர் மிகவும் என கேட்டிருக்கிறார் எதற்காக இரண்டு நாடுகளை வாங்கி 3 ஆண்டுகளாக இந்த படத்தின் நடிப்பவர்களுடன் பழகி நாயகனையும் வில்லனையும் ஜாக்கியாகவே உருவெடுக்க வைத்திருக்கிறார் இயக்குனர் அதற்காக அவருக்கு ஒரு பாராட்டுதல்கள்
மேலும் இந்த படத்தில் வரும் காளி என்னும் ஆடு உண்மையாகவே ஒரு கெடா சண்டையில் கலந்து வெற்றியடைந்து மெடல் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதுஅவர் கூறியிருப்பது இந்த வளர்ப்பு கிடாக்கள் தனது முதலாளியின் மனதுவத்தை அப்படியே பிரதிபலிக்கும் என்பதுதான்


மேலும் இந்த படத்தின் நாயகியாக அபு அபிராமி காதல் காட்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கிற வேறு எதற்காகவும் இல்லை
படத்தின் ஒளிப்பதிவு அந்த மண் சார்ந்த அமைப்பில் ஓரளவுக்கு எடுத்துக்காட்டு முயற்சித்து இருக்கிறார்
மேலும் இந்த படத்தின் இசையும் படத்தின் விறுவிறுப்புதுணை நிற்கிறது
ஜாக்கி திரைப்படத்தை உண்மை கதைக்களமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் ஆனாலும் படம் முழுவதும் ஆடு சண்டையாகவே இருப்பதால் கொஞ்சம் கதையில் தொய்வு தான் வருகிறது இன்னும் அந்த

சண்டையில் விறுவிறுப்பு காட்டி இருந்தால் ஆடு முட்டும் பொழுது பார்க்கும் நமக்கும் நிச்சயம் அடிபட்டிருக்கும்

“HOTSPOT 2” திரை விமர்சனம்

தயாரிப்பாளரிடம் கதை சொல்லும் அறிமுக இயக்குநரின் நான்கு பேரின் வெவ்வேறு கதைகள்சொல்லும் ‘ஹாட் ஸ்பாட்’ படத்தின் தொடர்ச்சி தான் ‘ஹாட் ஸ்பாட் 2’.முதல் பாகத்தைப் போலவே , அதே தயாரிப்பாளரிடம் அறிமுக இயக்குநர் கதை சொல்ல வருகிறார். அவரது நோக்கமும் முதல் பாகத்தின் இயக்குநருடையது தான் என்றாலும், அவர் பேச இருக்கும் விஷயம் தனிப்பட்ட ஒருவருக்கானது அல்ல, ஒரு சமூகத்திற்கானது. அது என்ன ? அதன் மூலம் மக்களுக்கு இயக்குநர் எதைபுரிய வைக்கிறார் ? என்பது தான் கதைக்களம்.
“ஹாட் ஸ்பாட் 2”.

மொத்தத்தில், Hotspot 2 என்பது அனைவருக்கும் ஏற்ற பொழுதுபோக்கு படம் அல்ல. இது குறிப்பிட்ட பார்வையாளர்களை மட்டுமே குறிவைக்கும், பெரியவர்களுக்கான (Adult-oriented) திரைப்படம். துணிச்சலான கருத்துகளை நேரடியாகக் காண விரும்பும் பார்வையாளர்களுக்கு இது ஒரு முறை பார்க்கக்கூடிய அனுபவமாக இருக்கும்; ஆனால் வலுவான கதைக்களம் மற்றும் ஆழமான திரைக்கதை எதிர்பார்ப்பவர்களுக்கு இது முழு திருப்தியை அளிக்காமல் போகலாம்.

எழுதி இயக்கியிருக்கிறார் விக்னேஷ் கார்த்திக்,
சூடான விஷயங்களை சுவைபட சொல்வதுடன், அதுல இருக்கும் இரு தரப்பினர் பக்கம் இருக்கும்
நியாயத்தை சமமாக பேசி, அனைத்து தரப்பினரையும் சிந்திக்க வைக்க முயற்சித்திருக்கிறார்

ஒரே பாணியில், ஒரு நிலையான தீர்வு சொல்லாமல் தொடர்வது பார்வையாளர்களை கொஞ்சம் சோர்வடைய வைக்கின்றன.
படம்

MGM Group of Hospitals Conducts BLS Training to Raise Cardiac Emergency Awareness

Chennai, 24 January 2026: In a landmark public health and community preparedness initiative, MGM Healthcare rolled out a city wide Basic Life Support (BLS) training programme across 77 locations on Republic Day 2026 and subsequently felicitated the trainers who played a pivotal role in delivering one of the largest coordinated community life-saving initiatives, empowering citizens with critical first-response skills and reinforcing a culture of emergency preparedness across communities.

India is witnessing an alarming rise in sudden cardiac arrests, including among younger adults. Recent data indicate that over 25% of heart attacks occur in individuals under 40, while 15–20% of sudden cardiac arrest cases affect those below 50, signalling a serious and growing public health concern. With bystander CPR rates remaining critically low, MGM Healthcare’s initiative focused on bridging the critical gap between the onset of a cardiac emergency and timely medical intervention.

“One Nation. One Skill. Infinite Lives.”, the flagship CSR initiative, successfully trained 770+ citizens in a single day across Chennai, Madurai, Visakhapatnam and select outstation districts, making it one of the largest coordinated Basic Life Support (BLS) training efforts conducted in the city and beyond. The programme covered CPR, choking response and AED awareness, with hands-on demonstrations delivered by certified clinicians and trainers from MGM Healthcare.

The training sessions were conducted across public spaces, educational institutions, corporate parks and communities in Chennai and select outstation districts. Participants received the certificate of completion at the end of training session.

As part of the initiative, MGM Healthcare also undertook an attempt to enter the Limca Book of Records for conducting BLS training sessions across the maximum number of locations in a single day.

Speaking on the initiative, Dr Senathi Nanda Kishore, Clinical Director, Senior Consultant & Clinical Lead, Anaesthesiology and Surgical ICU, MGM Healthcare, said, “Every minute matters in a medical emergency. Through this Republic Day initiative, we aimed to ensure that citizens across communities gain the confidence and skills needed to act decisively and save lives before medical help arrives.”

Commenting on the occasion, Mr. Nilesh Mundada, COO and Senior Vice President – Finance, MGM Healthcare, added, “Through sustained Basic Life Support training, MGM Healthcare is committed to building a culture of preparedness and resilience where every citizen is empowered to act as a first responder. Saving a life is not just a medical skill, but a shared civic responsibility, and by training communities at scale, we are strengthening India’s emergency preparedness beyond hospital walls.”

This initiative has reinforced its commitment by extending care beyond hospital walls and fostering sustained public health awareness through continued community engagement.

வங்காள விரிகுடா திரை விமர்சனம்

தூத்துக்குடியில் வாழும் மக்கள் செல்வாக்கு மிக்க தொழிலதிபரான குகன் சக்ரவர்த்தி ஒருநாள் தனிமையில் கடற்கரை ஓரத்தில் அமர்ந்திருக்க அங்கு அவரது முன்னாள் காதலி தற்கொலை செய்ய முயற்சி செய்கிறார். அதை தடுத்து அவளை காப்பாற்றும் குகன் தன்னைப் போலவே தன் முன்னாள் காதலின் வாழ்க்கையும் கெட்டு இருப்பதாக நினைத்து அதற்கு உதவி செய்ய கொலை செய்கிறார், அவரது முன்னாள் கணவனை கொலை செய்கிறார். திடீரென்று ஒரு நாள் இரவு இறந்து போன அந்த முன்னாள் கணவன் தொலைபேசியில் அவர்களிடம் பேசி மிரட்ட, அதிர்ச்சி அடையும் குகன் இறந்த ஒருவன் எப்படி திரும்ப போனில் வந்து பேச முடியும் என யோசிக்கிறார்.

அதை யார் அது என்ன என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்கும் குகன் அதை கண்டறிந்தாரா? அவர்கள் யார் இவரை மிரட்டுகிறார் அதிலிருந்து அவர் எவ்வாறு மீண்டு வருகிறார்? என்பதுதான் வங்காள விரிகுடாபடத்தின் திரைக்கதை

இந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் பாடல்கள் இசை என 24 கிராப்டுகளையும் இவர் ஒருத்தரை கையாண்டு இந்த படத்தை எடுத்திருக்கிறார்

மனைவி மற்றும் முன்னாள் காதலி பாடல்கள் மற்றும்
காதல் காட்சிகளுக்கு மட்டும் பயன்படுத்தாமல், கதைக்கு
கதாபாத்திரங்
களாக பயணித்திருக்
கின்றனர்கள்.


வறுமையில் பிறந்து மிகப்பெரிய கோடீஸ்வரராகிய ஊருக்கே வாரி வழங்கும் வள்ளலாக மாறி இருக்கும் குகன் இந்த படத்தில் திரைக்கதையை இது பேய் படமாமுயற்சி செய்து இரண்டு பரிமாணங்களில் எடுத்து இருக்கிறார்
கிளைமாக்ஸ் இல் தான் செய்யும் அனைத்து தவறுகளையும் அப்துல் கலாம் அவர்களின் பெயரை வைத்து திருந்துவது தான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட் ஒரே நபர் அனைத்து கிராப்டுகளையும் கையாண்டால் படம் இப்படி தான் வரும் என்பது வங்காள விரிகுடா படம் மூலம் நிறுபனம் ஆகிறது

மாயபிம்பம் : A 2005 Love Story திரைப்படம் ஊடகங்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் இருந்து வலுவான பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.

சென்னை, 22 ஜனவரி 2026:
மாயபிம்பம் : A 2005 Love Story திரைப்படம் அதன் பல அடுக்குகளைக் கொண்ட கதைக்களம், திரைக்கதை மற்றும் நடிகர்களின் நடிப்புகளுக்காக பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் இருந்து வலுவான பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.

கே. பாக்யராஜ், அமீர், ராம் மற்றும் அகத்தியன் உள்ளிட்ட பல முன்னணி திரையுலகப் பிரமுகர்களிடமிருந்து இப்படம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. மேலும், ஜனவரி 19, திங்கட்கிழமை பிரசாத் லேப்ஸ்-இல் நடைபெற்ற சிறப்பு பத்திரிகை காட்சி மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றதுடன், பல தரப்புகளில் இருந்து பரவலான நேர்மறை கருத்துகள் கிடைத்துள்ளன.
இப்படத்தைச் சுற்றியுள்ள பரபரப்பிற்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்களின் ஆதரவு. ஒரு சிறப்பு காட்சியில் திரைப்படத்தைப் பார்த்த பின்னர், இயக்குநர் கே.ஜே. சுரேந்தர் அவர்களின் முதல் திரைப்படம் வெளியாவதற்கும் முன்பே, அவரது அடுத்த திரைப்படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டு, அதற்கான ஒப்பந்தமும் (agreement) இடப்பட்டது, திரையுலகில் மிகவும் அபூர்வமான மற்றும் பாராட்டத்தக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது..

பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கு பகிரப்பட்ட பிரத்யேக வீடியோவில், டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்கள் கூறியதாவது:
“புதிய நடிகர்கள் மற்றும் புதிய தொழில்நுட்ப குழு என்பதால், ஆரம்பத்தில் நான் சற்று சந்தேகத்துடன் இருந்தேன். ஆனால் திரைப்படம் நகர்ந்தபோது, முழுமையாக அதில் ஈடுபட்டு விட்டேன்.”
அவர் மேலும் கூறியதாவது:
“இந்த திரைப்படம் என் இளமை கால நினைவுகளை மீட்டெடுத்தது. நான் திரைப்படங்களைப் பார்க்கும்போது — நான் தயாரித்த திரைப்படங்களிலும் கூட — அரிதாகவே சிரிப்பேன். ஆனால் இந்த திரைப்படத்தின் முதல் பாதியில் பல தருணங்களில் மனதார சிரித்தேன்.”
திரைப்படத்தின் உணர்ச்சி தாக்கத்தை விளக்கி அவர் கூறியதாவது:
“இதற்கு முற்றிலும் மாறாக, இரண்டாம் பாதி மிகப் பெரிய உணர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தியது. கிளைமாக்ஸைப் பற்றி நினைத்தாலே இன்னும் உடலில் மயிர்க்கூச்செறி வருகிறது. இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட நான், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ், கே.ஜே. சுரேந்தர் அவர்களின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளேன்.”
முதல் முறையாக திரைப்படம் எழுத, தயாரிக்க மற்றும் இயக்கும் கே.ஜே. சுரேந்தர் அவர்களால் எழுதப்பட்டு, தயாரிக்கப்பட்டு, இயக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை அமைத்துள்ளார் நந்தா, எடிட்டிங் செய்துள்ளார் வினோத் சிவகுமார். இப்படத்தில் ஆகாஷ் நாகராஜன், ஜனகி ஸ்ரீநிவாசன், எஸ். ஹரி கிருஷ்ணா, ராஜேஷ் பாலா மற்றும் எம். அருண் குமார் ஆகிய புதிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
இத்தகைய ஒரு நடவடிக்கை திரையுலகில் மிகவும் அரிதான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு இயக்குநரின் முதல் திரைப்படம் வெளியாவதற்கும் முன்பே, டாக்டர் ஐசரி கே. கணேஷ் போன்ற உயர்ந்த அந்தஸ்துடைய தயாரிப்பாளர் அவரின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க முன்வருவது, மாயபிம்பம் : A 2005 Love Story திரைப்படத்தைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தியுள்ளது.

ZEE5-ல் மீண்டும் ஒரு வலுவான கதையுடன் சமுத்திரகனி! “தடயம்” – விரைவில் டிஜிட்டல் வெளியீடு

இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 தமிழின் பிராந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தனது அடுத்த படைப்பான “தடயம்” படைப்பின் அறிவிப்பை, இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் ஒரு முக்கிய படைப்புடன் வருகிறார். “தடயம்” எனும் இந்த புதிய படைப்பு, விரைவில் ZEE5-ல் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில், அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகியுள்ள “தடயம்”, சமுத்திரகனியின் வலுவான நடிப்புத் திறனை மையமாகக் கொண்டு உருவான ஒரு தீவிரமான கதையம்சம் கொண்ட படைப்பாக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இதற்கு முன்னதாக, சமுத்திரகனி இயக்கி நடித்த “விநோதய சித்தம்” திரைப்படம் ZEE5-ல் வெளியானபோது, விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்தப் படம், வாழ்க்கை–மரணம், நேரம், மனித உறவுகள் போன்ற ஆழமான கருத்துகளை எளிய முறையில், தாக்கம் கொண்ட திரைக்கதையில் சொல்லி, ZEE5-யின் முக்கியமான தமிழ் படைப்புகளில் ஒன்றாக மாறியது.

அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, “தடயம்” திரைப்படமும் ZEE5 தமிழ் ரசிகர்களுக்கு ஒரு நினைவில் நிற்கும் அனுபவமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது. கதையின் விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படாத நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் இப்படம் காவல்துறை பின்னணியில் ஒரு அழுத்தமான திரில்லராக இருக்கும் ஆவலைத் தூண்டுகிறது.

தமிழ் ரசிகர்கள் ஒரு புதிய பயணத்திற்கு தயாராகுங்கள். சமுத்திரகனி நடிப்பில் “தடயம்” – விரைவில் ZEE5-ல் மட்டும்.

“காந்தி டாக்ஸ்” டீசர் வெளியீடு: ஜனவரியில் திரையரங்குகளை ஆட்கொள்ளப் போகும் மௌனம் !!

சத்தமாய் பேசும் திரையுலகில் மௌனத்தைத் துணிச்சலுடன் தேர்ந்தெடுத்த Zee Studios “காந்தி டாக்ஸ்” டீசர் வெளியீடு !

அதிரடியான வசனங்களும் சத்தமுள்ள காட்சிகளும் நிரம்பிய இன்றைய திரை உலகில், “காந்தி டாக்ஸ்” படத்தின் டீசர் ஒரு துணிச்சலான மாற்றமாக வந்துள்ளது. ஒரு வசனம் கூட இல்லாமல், முழுக்க முழுக்க மௌனம், உணர்வு மற்றும் தாக்கம் கொண்ட காட்சிகள் மூலம் பார்வையாளரை கட்டிப் போடும், ஒரு வித்தியாசமான அனுபவமாக இந்த டீசர் உருவாகியுள்ளது.

வார்த்தைகள் இல்லாத போதிலும், இந்த டீசர் நம்முள் பல கேள்விகளை எழுப்புகிறது. தீவிரமான காட்சிகளும், மௌன இடைவெளிகளும், நம்முள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, “காந்தி உண்மையில் என்ன பேசப் போகிறார்?” என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. சொல்லப்படாத விஷயங்களின் பாரம் மௌனத்தின் மூலம் வலுவாக உணர்த்தப்படுகிறது.

நடிகர்கள் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகிய அபூர்வமான நடிகர் குழு வார்த்தைகள் இன்றியே உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறமையை டீசரில் நிரூபித்துள்ளனர்.

கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், இப்படத்திற்கு, இசை ஜாம்பவான் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இசையே கதையின் குரலாக மாறி, ஒவ்வொரு மௌனத்தையும், பதற்றத்தையும், சொல்லப்படாத எண்ணங்களையும் உணர்ச்சிபூர்வமாக உயர்த்துகிறது.

Zee Studios வழங்க, Kyoorius Digital Pvt Ltd, Pincmoon Meta Studios மற்றும் Movie Mill Entertainment இணைந்து தயாரிக்கும் காந்தி டாக்ஸ், திரை மொழியின் வழக்கமான விதிகளை உடைக்கும், மௌனத்தை ஒரு சக்திவாய்ந்த கதையாக்கமாக மாற்றும் வித்தியாசமான திரையரங்கு அனுபவமாக இருக்கும்.

2026 ஜனவரி 30 அன்று “காந்தி டாக்ஸ்” திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

youtu.be/Dv3qq4-TSv8

சுந்தர் சி, விஷால், ஹிப்ஹாப் தமிழா கூட்டணியில் புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் – புருஷன் !

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான சுந்தர் சி – விஷால் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. “புருஷன்” என தலைப்பிடப்பட்ட இந்த புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழ் திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“புருஷன்” திரைப்படத்தை Benzz Media Pvt Ltd சார்பில் A.C.S.அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் இணைந்து, பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இப்படத்தை சுந்தர் சி இயக்க, விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது, திரைப்பட வர்த்தக வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இந்த படம், சுந்தர் சி – விஷால் கூட்டணி இணையும் நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சுந்தர் சி – விஷால் – ஹிப்ஹாப் தமிழா கூட்டணி, முன்னதாக வெளியான “ஆம்பள” திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இணைவது, ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திரைக்கதை மற்றும் வசனம் – வெங்கட் ராகவன்.

சமீபத்தில் வெளியான “புருஷன்” படத்தின் அறிவிப்பு வீடியோ, அதிரடி மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் ரசிகர்களை கவர்ந்து, சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. குறுகிய நேர வீடியோவிலேயே, சுந்தர் சி-யின் தனித்துவமான கமர்ஷியல் பாணி வெளிப்பட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

இப்படத்தில் நாயகியாக தமன்னா நடிக்க, பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். “கமர்ஷியல் கிங்” சுந்தர் சி-யின் முத்திரையுடன், குடும்பத்தோடு ரசித்து கொண்டாடும் ஒரு முழுமையான கமர்ஷியல் எண்டர்டெயினராக புருஷன் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், நடிகர்–நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழு பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஜி.வி. பிரகாஷ் குரலில் சிவனின் மகிமை போற்றும் – திருவாசகத்தின் முதல் பாடல் வெளியானது !!

தமிழ் ஆன்மிக இலக்கிய உலகின் உச்ச சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படும் திருவாசகம், இப்போது சமகால இசை வடிவில் புதிய உயிர் பெற்றுள்ளது. இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஜி.வி. பிரகாஷ் குமார் குரலும் இசையும் இணைந்து உருவான திருவாசகத்தின் முதல் பாடல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி, ஆன்மிக இசை ரசிகர்களிடையே ஆழ்ந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜி.வி. பிரகாஷ் இசை நிகழ்ச்சியாக வழங்கியபோது, அந்த மேடை முழுவதும் ஒரு தெய்வீக அமைதி சூழ்ந்ததாக பேசப்பட்டது. அந்த ஒரே நிகழ்விலேயே, திருவாசக இசை முயற்சியின் ஆழமும் ஆன்மிக வலிமையும் வெளிப்பட்டது.

ஜி.வி. பிரகாஷின் YouTube சேனலில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ள இந்த முதல் பாடல், சிவனின் மகிமையை போற்றும் சொற்களாலும், திருவாசகத்தின் ஆத்மார்த்தமான பக்தி உணர்வாலும் நிரம்பியுள்ளது. ஆதியும் அந்தமும் இல்லாத சிவன், கருணை வடிவமாகவும், ருத்ர ரூபமாகவும், யோகி வடிவமாகவும் தோன்றும் பல்வேறு நிலைகளை இசை வழியாகக் காட்சிப்படுத்துகிறது. அந்த வரிகளில் ஒலிக்கும் சிவபக்தி, ஜி.வி. பிரகாஷின் குரலால் இன்னும் ஆழமாக மனதிற்குள் இறங்குகிறது. அவரது குரலில் இருக்கும் வலிமை, பக்தி, பணிவு – அனைத்தும் சேர்ந்து, திருவாசகத்தின் தத்துவத்தை இசையின் உன்னத அனுபவமாக மாற்றுகிறது.

திரைப்பட இசை உலகில் தனித்த அடையாளம் பதித்த ஜி.வி. பிரகாஷ், பாரம்பரியமும் நவீனமும் இணையும் இசை பற்றிய தேடல் கொண்டவர். அந்த தேடலின் ஒரு முக்கியமான கட்டமாகவே இந்த திருவாசக இசை முயற்சி பார்க்கப்படுகிறது. பாரம்பரிய ஆன்மிக இலக்கியத்தை இன்றைய தலைமுறைக்கு எளிதாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன், இசை வடிவமைப்பில் நவீன ஒலியமைப்பையும், பாரம்பரிய பக்தி சுவையையும் நுட்பமாக இணைத்துள்ளார்.

திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்குவது ஜி.வி. பிரகாஷின் நீண்ட நாள் கனவு. அதன் முதல் படியாக வெளியாகியுள்ள இந்தப் பாடல், அந்த கனவு சரியான பாதையில் தொடங்கியிருப்பதை உறுதிப்படுத்துகிறது. சிவனின் பல வடிவங்களையும், மனித மனத்தின் தவிப்பையும், இறைவனிடம் நம்மை சரணடைய வைக்கும் இசை அனுபவமாக மாற்றியுள்ள இந்த முயற்சி, தமிழ் ஆன்மிக இசையில் ஒரு முக்கியமான அடையாளமாக நிலைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஜி.வி. பிரகாஷ் குரலில், சிவனின் மகிமையை ஒலிக்கும் இந்த திருவாசகத்தின் முதல் பாடல், கேட்பவரை ஒரு தெய்வீக பயணத்துக்கே அழைத்துச் செல்கிறது.

பாடலின் லிங்க் – https://youtu.be/VopbJrlnmJc

பாலிவுட்டில் கால் பதித்த இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் (Hesham Abdul Wahab )!!

தென் இந்தியாவிலிருந்து பாலிவுட் வரை –ஹேஷம் அப்துல் வஹாப் (Hesham Abdul Wahab ) இசைப் பயணத்தின் புதிய அத்தியாயம்!!

தென் இந்திய சினிமாவில் தனது தனித்துவமான இசையால் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் (Hesham Abdul Wahab) பாலிவுட் திரையுலகில் கால்பதித்திருக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி (Sanjay Leela Bhansali) தயாரிக்கும் “தோ திவானே ஷெகர் மெய்ன்” (Do Deewane Sheher Mein) திரைப்படத்தின் மூலம், ஹேஷாம் இந்தி திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.இது தென் இந்திய திரைப்பட உலகுக்கே பெருமை சேர்க்கும் தருணமாக அமைந்துள்ளது. இசைக்காக அறியப்படும் ஒரு படைப்பாளி, பல மொழித் திரையுலகுகளை வெற்றிகரமாக கடந்து, இந்தியாவின் மிகப்பெரிய சினிமா தளமான பாலிவுட்டில் அறிமுகமாகுவது குறிப்பிடத்தக்கது.

“தோ திவானே ஷெகர் மெய்ன்” Do Deewane Sheher Mein படத்தை ரவி உத்யாவர் Ravi Udyawar இயக்கியுள்ளார். பாலிவுட் பிரபல இசையமைப்பாளர் ஜோடி சச்சின் – ஜிகர் (Sachin–Jigar ) உடன் இணைந்து இப்படத்தில் ஒரு பாடலுக்கு ஹேஷம் இசையமைத்துள்ளார். ஹேஷம் இசையமைத்த பாடலை ஜூபின் நௌடியல் Jubin Nautiyal மற்றும் நீதி மோகன் Neeti Mohan பாடியுள்ளனர்; பாடல் வரிகளை அபிருச்சி Abhiruchi எழுதியுள்ளார்.

இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப், மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் பல வெற்றிப்படங்களைத் தந்தவர். குறிப்பாக தெலுங்கு சினிமாவில், குஷி, ஹாய் நானா வெற்றிப்படங்களைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான கேர்ள்ஃபிரண்ட் திரைப்படத்தின் தனித்துவமான இசை அவருக்கு மகுடம் சூட்டியது. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் Million Dollar Studios தயாரித்த ஒன்ஸ் மோர் திரைப்படமும் , சூரி நடித்த மாமன் படமும் தமிழ் திரையுலகில் அவருக்கு பெரும் பாராட்டுகளை பெற்றுத்தந்தது.

தற்போது ஹேஷம் அப்துல் வஹாப் பல பிரம்மாண்ட படைப்புகளில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். தெலுங்கில் ஆதித்யா ஹாசன் (Adithya Haasan) இயக்கும் பிரம்மாண்ட படம், ஹாய் நானா இயக்குநர் சௌர்யுவ்(Shouryuv) உடன் ஒரு புதிய படம், மேலும் “ஹிட்” படத்தின் இயக்குநர் சைலேஷ் கோலனு (Sailesh Kolanu) உடன் ஒரு திரைப்படத்திலும் பணியாற்றி வருகிறார். மேலும் தமிழில் அர்ஜூன் தாஸ் நடித்துவரும் சூப்பர்ஹீரோ திரைப்படம் , அவரது அடுத்த தமிழ் வெளியீடாக உருவாகி வருகிறது. இதனுடன், பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகும் மேட் இன் கொரியா (Made in Korea) — Netflix நிறுவனம் தயாரிக்கும் முதல் இந்தோ–கொரியன் முழுநீள திரைப்படம் இது.சர்வதேச அளவில் கவனம் பெறும் ஒரு முக்கியமான இந்தியா–தென் கொரியா கூட்டுத் தயாரிப்பாக இந்த படம் உருவாகி வருகிறது.

இதற்கிடையில், ஹேஷம் கன்னட திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். கணேஷ் (Golden Star Ganesh) நடித்துவரும் படத்திற்கு இசையமைத்துள்ளார். மலையாளத்தில், விரைவில் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் மதுவிது திரைப்படத்திற்கும் ஹேஷம் இசையமைத்துள்ளார்.

ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கும் முதல் பாலிவுட் படமான “தோ திவானே ஷெகர் மெய்ன்” (Do Deewane Sheher Mein) படத்தை, ஜீ ஸ்டூடியோஸ் (Zee Studios),ரேங்க்கார்ப் மீடியா (Rankcorp Media), பன்சாலி புரொடக்‌ஷன்ஸ் (Bhansali Productions), மற்றும் ரவி உத்யாவர் ஃபிலிம்ஸ் (Ravi Udyawar Films ) இணைந்து தயாரித்துளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது