Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை, கோலாகலமாக நடைபெற்றது.
பிரம்மாண்டமாக நடைபெற்ற பூஜை விழாவினில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் சசிகுமார், சிம்ரன், RJ பாலாஜி, நடிகர் மணிகண்டன், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, லவ்வர் பட இயக்குநர் பிரபு ராம் வியாஸ், டிடி, ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான காதல் கதையாக உருவாகும் இப்படத்தை, “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
இந்த வருடத்தின் மெகா பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த், இப்படத்தில் நாயகனாக களமிறங்குகிறார். அவருக்கு ஜோடியாக, மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரம். இளைஞர்களின் கனவுகன்னியாக கொண்டாடப்படும் நாயகி அனஸ்வரா ராஜன் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்கிறார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றுகிறார்.
படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள பெத்தி (Peddi) படத்துக்கான பாடல் படப்பிடிப்பு, மைசூரில் ஜானி மாஸ்டர் நடன அமைப்பில், 1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் தொடங்கியது!!
குளோபல் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், முன்னணி இயக்குநர் புஜ்ஜி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கும், மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி” படம், பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. குளோபல் ஸ்டார் ராம் சரண் அசத்தலான மேக் ஓவர், வலிமையான உடல் மாற்றம், கடுமையான பயிற்சிகள் என அந்தக் கதாபாத்திரத்தை முழுமையாக வெளிப்படுத்த அவர் தனது முழு ஆற்றலையும் தந்து உழைத்து வருகிறார்.
மிகுந்த பெருமையுடன், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்க, விருத்தி சினிமாஸ், மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் & சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்க, மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் இப்படம், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் கிளிம்ப்ஸே, ராம் சரண் மேக் ஓவர் புகைப்படங்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், படக்குழு மைசூரில் குளோபல் ஸ்டார் ராம் சரண் பங்கேற்க, பிரம்மாண்டமான பாடலைக் காட்சிப்படுத்த தொடங்கியுள்ளது. பிரபல நடன அமைப்பாளர் ஜானி மாஸ்டர் நடன அமைப்பில், ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் A.R. ரஹ்மான் இசையமைத்த இந்த மாஸ் பாடல், மிகப்பெரிய அளவில், 1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் படமாக்கப்படுகிறது. ராம் சரண் தனது தனித்துவமான கவர்ச்சி மற்றும் ஆற்றல்மிகு நடன அசைவுகளால் ரசிகர்களை கவர, இந்தப் பாடல் படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகவும், ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டமாகவும் அமைய உள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை உற்சாகத்தில் இருந்தாலும், “பெத்தி” குழுவினர் தங்கள் பணியில் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது.
இந்தப் படத்தில் முன்னணி கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்க, கருநாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். மேலும் ஜகபதி பாபு (Jagapathi Babu) மற்றும் திவ்யேந்து ஷர்மா ( Divyendu Sharm) முக்கிய துணை வேடங்களில் நடிக்கின்றனர்.
பிரபல ஒளிப்பதிவாளர் R. ரத்தினவேலு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, தேசிய விருது பெற்ற நவீன் நூலி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.
பெத்தி 2026 மார்ச் 27 அன்று பான்-இந்திய ரிலீசாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கதை, இயக்கம்: புஜ்ஜி பாபு சனா வழங்குபவர்கள்: மைதிரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ் தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு இசை: A.R. ரஹ்மான் ஒளிப்பதிவு: R. ரத்தினவேலு தயாரிப்பு வடிவமைப்பு: அவிநாஷ் கொல்லா எடிட்டிங்: நவீன் நூலி நிர்வாக தயாரிப்பாளர்: V. U. பிரவீன் குமார் மார்க்கெட்டிங்: First Show மக்கள் தொடர்பு : யுவராஜ்
“கச்சி சேரா (Kachi Sera),” “ஆச கூட (“Aasa Kooda),” “சித்திர பூத்திரி (Sithira Poothiri),” “விழி வீழுது” (Vizhi Veezhudhu) போன்ற வைரல் ஹிட் சிங்கிள்களால் 21 வயதிலேயே சமூக வலைதளங்களில் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்ற சாய் அப்யங்கர், இப்போது தனது முதலாவது மலையாள சினிமா பாடலை வெளியிட்டுள்ளார். ஷேன் நிகம் ( Shane Nigam) நடிக்கும் “பல்டி” படத்தில் இடம்பெறும் “ஜாலக்காரி” பாடல் வெளியானவுடன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வினாயக் சசிகுமார் (Vinayak Sasikumar) எழுதியுள்ள இந்தப் பாடலை, சாய் அப்யங்கர் (Sai Abhyankar) தானே இசையமைத்து, சாய் மற்றும் “கூலி” படத்தின் ஹிட் பாடல் “மோனிகா” m-வைப் பாடிய சுப்லாஷினி (Subhlashini ) இணைந்து பாடியுள்ளனர். சாயின் அறிமுகப் புரமோ வீடியோ ஏற்கனவே சமூக வலைதளங்களில் 4 மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்களைத் தாண்டியுள்ளது. இப்போது “ஜாலக்காரி” அதிகாரப்பூர்வ வெளியீட்டுடன், இசை ரசிகர்கள் இதுவே அடுத்த வைரல் ஹிட் ஆகுமா என ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
பிரபல பாடகர்கள் திப்பு மற்றும் ஹரினியின் மகனான சாய், யூடியூபில் ஏற்கனவே சாதனைகளைப் படைத்துள்ளார். “கச்சி சேரா” மற்றும் “ஆச கூட” சிங்கிள்கள் மட்டும் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளன. “ஜாலக்காரி” மூலம் சாய் அப்யங்கர், மலையாளத் திரையுலகில் தனது இசை அமைப்பாளர் மற்றும் பாடகர் அறிமுகத்தை அதிகாரப்பூர்வமாகக் அறிவித்துள்ளார்.
உன்னி சிவலிங்கம் ( Unni Sivalingam) இயக்கும் “பல்டி”, எஸ்டிகே ஃப்ரேம்ஸ் மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் (Binu George Alexander) புரொடக்ஷன்ஸ் சார்பில் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் தயாரிக்கின்றனர். ஷேன் நிகம் இதுவரை நடித்த படங்களில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம், இசை, ஆக்ஷன் மற்றும் மலையாளம்–தமிழ் நட்சத்திர அணியை ஒருங்கே கொண்டு வருகிறது. இது ஷேன் நிகமின் 25வது படமாகும்.
சாய் அப்யங்கர், தற்போது மலையாள அறிமுகத்துடன், தமிழ் சினிமாவில் பல பெரிய திட்டங்களில் பணிபுரிந்து வருகிறார். அதில் லோகேஷ் கனகராஜின் “பென்ஸ்”, சூர்யா நடிக்கும் “கருப்பு”, சிலம்பரசனின் “STR 49”, அல்லு அர்ஜுன் – அட்லீ இணையும் படம் மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “டூட்” ஆகியவை அடங்கும். இருந்தாலும், “ஜாலக்காரி” என்ற பாடல், அவரது முதலாவது திரைப்பட இசை அமைப்பும், பிளேபேக் பாடகராகும் அறிமுகமாக என்றும் நினைவில் நிற்கும்.
பல்டி படத்தில் வில்லன் கதாபாத்திரம் சோடா பாபுவாக அல்போன்ஸ் புத்ரன், குமாராக ஷாந்தனு பக்யராஜ், பயிரவனாக இயக்குநர்-நடிகர் செல்வராகவன் ஆகியோரும் நடிக்கின்றனர். இதன் புரமோ வீடியோக்கள், கதாபாத்திர க்ளிம்ப்ஸ் ஆகியவை ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படத்தின் தயாரிப்பு கட்டுப்பாட்டாளராக கிஷோர் புரக்கத்திரி, முதன்மை துணை இயக்குனராக ஸ்ரீலால். துணை இயக்குனர்களாக, சபரிநாத், ராகுல் ராமகிருஷ்ணன், சாம்சன் செபாஸ்டின் மற்றும் மெல்பின் மேத்யூ பணியாற்றுகின்றனர். இப்படத்தின் கலை இயக்குனராக ஆஷிக்.S, கூடுதல் வசனகர்த்தாவாக T.D.ராமகிருஷ்ணன் மற்றும் க்ரியேடிவ் தயாரிப்பாளரக வாவா நுஜுமுதீன் பணியாற்றிகின்றனர்.
படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம் :
ஒளிப்பதிவு : அலெக்ஸ் ஜே. புலிக்கல் (RDX: Robert Dony Xavier புகழ்) எடிட்டிங் : சிவ்குமார் வி. பானிக்கர் இணை தயாரிப்பாளர் : ஷெரின் ரேச்சல் சாந்தோஷ் நிர்வாக தயாரிப்பு : சந்தீப் நாராயண் DI : கலர் பிளானெட் ஆடை : மெல்வி J ஒலி வடிவமைப்பு & மிக்ஸ் : விஷ்ணு கோவிந்த் கலை இயக்கம் : ஆஷிக் எஸ். சண்டை : ஆக்ஷன் சாந்தோஷ் & விக்கி மாஸ்டர் நடன இயக்கம் : அனுஷா இசை உரிமை : திங்க் மியூசிக் மேக்-அப்: ஜிதேஷ் பொய்யா ஸ்டில்ஸ் : சஜித் R M கலரிஸ்ட்: ஸ்ரிக் வாரியர் VFX : Accel Media, Foxdot Media தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் : பென்னி கட்டப்பண்ணா CFO : ஜோபீஷ் ஆண்டனி COO : அருண் சி தம்பி வெளியீடு: மூன்ஷாட் என்டர்டெயின்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட். பப்ளிசிட்டி டிசைன்ஸ்: வியாகி டைடில் வடிவமைப்பு : ராக்கெட் சயின்ஸ் ப்ரோமோஷன் : Snakeplant LLP மக்கள் தொடர்பு : யுவராஜ்
நடிகர் ரவி மோகன் தனது புதிய அத்தியாயமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தை என்று பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார். அதனுடன், அவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படத்தின் அறிமுகம், இயக்குனர் கார்த்தியோகியின் “BROCODE” திரைப்படம் என ரவி மோகன் ஸ்டுடியோஸின் தயாரிப்புகளை அறிவித்தனர்.
இவ்விழாவில், ரவி மோகன், கெனிஷா, சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கார்த்திக் யோகி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ கௌரி பிரியா, மணிகண்டன், கண்ணா ரவி, அர்ஜுன் அசோக், மாளவிகா மனோஜ், ரித்தீஷ், ஜெனிலியா, பேரரசு என பலர் இவ்விழாவில் கலந்துக்கொண்டனர்.
இயக்குனர், தயாரிப்பாளர் & நடிகர் ரவி மோகன் பேசும்போது,
என்னுடைய அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி இந்த தருணத்தில் நான் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.
நான் இயக்குனர் ஆகி விட்டேன். நான் இயக்குனர் ஆகினால் யோகி வைத்ததால் படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அதற்கான புரோமோவும் எடுத்துவிட்டேன். இன்று என்னுடைய இரண்டு படங்களின் பூஜையும் ஒரே நேரத்தில் நடப்பதில் மிகவும் மகிழ்ச்சி.
கார்த்தியும் நானும் ஆடம்பரத்தை விரும்பாதவர்கள். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது தாய்லாந்தில் சாலையில் அவ்வப்போது பேசிக்கொண்டே நடந்து போவோம். அப்போது எங்களுடைய மீசை, தாடி, உடைகளை பார்த்து இருவரும் அண்ணன் தம்பிகளா என்று பலர் கேட்டிருக்கிறார்கள். அந்த ப்ரோ கோட்-ம் அன்பும் வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
சினிமா… கோடிக்கணக்கான மக்களுக்கான பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு உணர்ச்சி. திரையரங்கில், யாரோ ஒருவரின் வசனமும் நடிப்பும் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும், கண்ணீர் சிந்தவும் செய்கிறது. பலரின் உழைப்பால் தான் ஒரு படம் உருவாகிறது. அந்தப் படங்களில் மக்களால் விரும்பப்பட்டவை வெற்றியை அடைகின்றன. பல நல்ல படங்கள் மக்களால் காலங்கள் கடந்தும் இன்னமும் கொண்டாடப்படுகின்றன.
ஒரு சாதாரண நபரை கூட, உலகம் கொண்டாடும் ஒரு பிரபல நட்சத்திரமாக மாற்றும் சக்தி சினிமாவுக்கே உண்டு. அதில் நானும் ஒருவன் தான்.
எனக்கு இந்த உலகத்தில் மிகவும் பிடித்தது என் ரசிகர்கள். அவர்கள் எனக்குக் கொடுத்த பரிசு – இந்த சினிமா. நடிப்பதைக் கடந்து, சினிமாவில் நான் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவது நிறைய இருக்கிறது. அது, நான் நீண்ட நாட்களாகக் கனவு காண்பதும்கூட.
அதில் ஒன்று தான் ரவி மோகன் ஸ்டுடியோஸ் – என் சொந்த தயாரிப்பு நிறுவனம். என் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படியாக, என் மனசுக்கு பிடித்த இரண்டு முக்கிய விஷயங்களை வைத்திருக்கிறேன்.
ஒன்று – இயக்குநர் கார்த்திக் யோகியின் இயக்கத்தில் நான் நடிக்கும் ப்ரோ கோட் படம். இன்னொன்று – நம்ம யோகிபாபுவை வைத்து, நான் முதன்முறையாக இயக்கவிருக்கும் மற்றொரு படம்.
முக்கியமாக உங்களிடம் சொல்ல வேண்டிய விஷயம் இன்னும் இருக்கு. ரவி மோகன் ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்டது, என்னுடைய படங்களை தயாரிப்பதற்காக மட்டுமல்ல. பலரின் கனவுகளுக்கு உயிர் கொடுக்கத்தான்.
அதில், முதல் முறையாக திரைப்படம் இயக்கவிருக்கும் புதிய இயக்குநர்கள், இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு, முன்தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
அதோடு, ஓடிடி தளங்களில் கற்பனை மற்றும் ஆவணப்படத் தொடர்கள் என பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
மேலும், சரியான முறையில், நல்ல உள்ளடக்கத்துடன் உருவாக்கப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் படங்களுக்கு ஆதரவளிக்க எப்போதும் ஒரு துணைக் கை இருக்கும். நல்ல கைத்திறமைகளுக்கு, திரை கதவுகள் திறக்கப்படும்!
புது புது பாடல்களை உருவாக்கும் சுயாதீன இசைத் திறமையாளர்களுக்கு அடையாளம் கொடுக்கவும் இதே நிறுவனம் பங்கெடுக்கிறது.
சினிமா துறையில் ஆரம்ப காலத்திலிருந்தே எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள் நடிகர்களாகவும், இயக்குநர்களாகவும். அவர்களில் பலர் ஏற்கனவே ரவி மோகன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ளனர். இன்னும் பல நண்பர்களுடன் சேர்ந்து நல்ல படங்கள் செய்ய வேண்டும்.
இதுவே எங்களின் முக்கிய நோக்கம். இது ஒரு நீண்ட பயணம். தனி ஒருவரின் உழைப்பையும் கனவையும் தாண்டி வெற்றியை அடைவதற்கு, இதில் பயணிக்கப்போகும் உங்களின் 200% பங்களிப்பும் உறுதியும் இருக்கும் என்பதே நம்பிக்கை. அதற்காகத்தான் இந்த தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எல்லாரும் பயன் அடைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
சிவராஜ் அண்ணா எனக்காக இங்கு வந்து இந்த அளவிற்கு பேசுவார் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை மிக்க நன்றி அண்ணா. நான் உங்க வீட்டிற்கு வந்தேன் நீங்கள் சாப்பாடு போட்டீர்கள் உங்கள் வீட்டு உப்பை சாப்பிட்டு இருக்கிறேன் அந்த நன்றி எனக்கு எப்போதும் இருக்கும்.
கன்னடத்தில் சிவா அண்ணன் படம் தான் சூப்பர் ஹிட் ஆகும் அவருடைய படங்களை எனது தந்தை வாங்கி தெலுங்கில் வெளியிடுவார் அப்போது இருந்தே நான் சிவா அண்ணனை பார்த்து தான் வளர்ந்தேன் அவருடன் ஒரு காட்சியில் நடித்தாலும் எனக்கு சந்தோஷம்தான்.
ரவி மோகன் ஸ்டுடியோஸ் நன்றாக வளர்ந்த பிறகு நிச்சயம் சிவகார்த்திகேயனுக்கு அவர் விருப்பப்படி வாய்ப்பு கிடைக்கும்.
இன்று இன்னொரு இன்ப அதிர்ச்சி, நான் இயக்குனராக முடியும், தயாரிப்பாளராக முடியும் என்று நம்பிக்கையோடு உன்னால் பாடலாசிரியராகவும் ஆக முடியும் என்று கெனிஷா நம்பிக்கை கொடுத்தார். அந்த நம்பிக்கையில் நான் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன். அவர் அம்மாவை பற்றி எழுத சொன்னார். ஆனால், நான் என் அம்மாவை மனதில் நினைத்து எழுதினேன். அம்மா என்பது உறவு அல்ல, உணர்வு என்று அப்போதுதான் புரிந்தது. நான் எழுதிய பாடல் வரிகளுக்கு கெனிஷாவே இசையமைத்து பாடியுள்ளார் என்றார்.
நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் பேசும்போது,
இங்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தயாரிப்பு நிறுவனம் என்பது சாதாரண விஷயம் அல்ல. நம்முடைய கனவை திரையில் கொண்டு வரக்கூடிய மிகவும் பொறுப்பு மிகுந்த விஷயம். ரவிமோகன் சரி எனக்கு அவ்வளவாக தெரியாது. நான் சார் என்று தான் கூப்பிடுவேன். சினிமா துறையில் அவர் என்னைவிட சீனியர்.
பராசக்தி படத்தின் போது தான் அவருடன் நெருங்கி பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. மிகவும் நல்ல மனிதர் நம் அவருடைய படங்களை பார்த்து அவர் இப்படித்தான் இருப்பார் என்று ஒரு எண்ணம் இருக்கும். அவர் அப்படியேதான் இருக்கிறார். இந்த விழாவிற்கு என்னை அழைத்தது மட்டுமில்லாமல் நேற்று எனக்கு போன் செய்து, நாளைக்கு நிச்சயம் வந்துருங்க ப்ரோ என்று நினைவுபடுத்தினார்.
இங்கு வந்து பார்த்த பிறகு அவருக்குள் இருக்கும் அத்தனை கனவுகளும் ஒரு நடிகராக தயாரிப்பாளராக பொறுப்பேற்று என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து இருக்கிறார். ப்ரோ கோட் படத்தின் ப்ரோ மூவி திருட்டுத்தனமாக நான் பத்து நாட்களுக்கு முன்பே பார்த்து விட்டேன். இயக்குனர் கார்த்திக் யோகி எனக்கு காண்பித்தார். எனக்கு மிகவும் பிடித்த ஜானர். அப்போதே, முதல் பாதியை காண்பித்து விட்டீர்கள், அடுத்த பாதியை எப்போது காட்டப் போகிறீர்கள் என்று கேட்டேன். அந்த அளவிற்கு மிகவும் நகைச்சுவையாக இருந்தது. ப்ரோ கோட் என்ற பெயரே சூப்பர். பெயரிலேயே அனைத்தும் வந்துவிட்டது. ரவி மோகன் ஸ்டுடியோவில் நடிகராக நீங்கள் பணியாற்றி இருக்கும் ப்ரோ கோட் படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்.
அடுத்து, யோகி பாபு சாருக்கு வாழ்த்துகள். அவருடைய நகைச்சுவைக்கு அவர் எப்போதும் எல்லை வகுத்துக் கொண்டதே கிடையாது. ஆர்டினரி மேன் உடைய வாழ்க்கை ஒரு எக்ஸ்ட்ரா ஆர்டினரி பயணமாக இருக்கும் என்பதை கூறுவது தான் இந்த படம். அதுக்கு பொருத்தமானவர் யோகி பாபு தான். ஆனால் அவரிடம் கேட்டால் குரு நான் காமெடி நடிகன் என்பார். ஆனால், அவருக்குள் ஒரு ஹீரோ இருக்கிறார் என்பதை படத்தை பார்த்தால் தெரியும்.
ஒரு நடிகர் இயக்குனர் ஆவது சாதாரண விஷயம் அல்ல. சிறு வயது முதலே சினிமாவில் பயணித்ததால் அந்த நம்பிக்கை அவருக்கு வந்திருக்கிறது. எல்லோருக்கும் இயக்குனராக வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால், எல்லோராலும் ஒரு படத்தை இயக்கி விட முடியாது. அதேபோல், எல்லா நடிகர்களுக்கும் இயக்குனராகும் தகுதி வந்து விடாது. ஆனால், ரவி மோகனுக்கு இருக்கிறது. அடுத்து கார்த்தியும் படம் இயக்குவார் என்று நம்புகிறேன். அவருக்குள்ளும் இயக்குனர் இருக்கிறார். அதேபோல், மணிகண்டனும் விரைவில் இயக்குனர் ஆகி விடுவார் என்று நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள்.
இப்படத்தின் ப்ரோமோ பார்க்கும்போது நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிகிறது. ரவி மோகன் இயக்கும் ஆர்டினரி மேன் படமும் வெற்றியடைய வாழ்த்துகள்.
அடுத்து காக்கி ஸ்குவாட். இப்படத்தின் டீசர் பார்த்தேன். நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது. கண்ணா ரவியுடைய மண்டேலா, குருதி ஆட்டம், இப்போது கூலி வரைக்கும் அவருடைய நடிப்பை பார்த்து வருகிறோம். அதேபோல் இந்த படத்திலும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
இப்படத்தின் இயக்குனர் சக்தியையும் எனக்கு தெரியும். இதற்கு முன்பு மூன்று படம் இயக்கி இருக்கிறார். எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசர் ஆகுவும் இருக்கிறார். எப்படி இரண்டு வேலைகளையும் செய்கிறார் என்று தெரியவில்லை.
இப்போது ரவி மோகன் ஸ்டுடியோ என்று இன்னொரு தயாரிப்பு நிறுவனம் வந்துவிட்டது. தைரியமாக ஒரு கதையை நம் தேர்வு செய்யலாம். நானும் அது போல ஒரு சில படங்களை அளித்துக் கொண்டிருக்கிறேன். இதுபோல இன்னும் ஒரு 15 தயாரிப்பு நிறுவனங்கள் வந்துவிட்டால், நிறைய நல்ல விஷயங்களை வெளிக்கொண்டு வர முடியும். எங்கள் மீது படும் வெளிச்சம் அதன் மீதும் பட்டால் இதுவரை மக்கள் எங்களுக்கு கொடுத்த இடத்தை நாங்கள் சரியாக பயன்படுத்தி இருக்கிறோம் என்று மகிழ்ச்சியாக இருக்கும். இந்த மூன்று படங்களும் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மூன்று படங்களின் வெற்றி விழாவிற்கும் அழையுங்கள். கண்டிப்பாக வந்து கலந்து கொள்வேன்.
நான் கல்லூரியில் படிக்கும்போது சந்தோஷ் சுப்பிரமணியம் படம் வந்தது, ஜெனிலியாவை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்று ஜெனிலியா மற்றும் ரவி மோகனின் நடிப்பை பார்த்ததும் கல்லூரி நாட்கள் நினைவிற்கு வந்தது. இருவரும் மீண்டும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும்.
ரவி மோகன் தயாரிப்பில் அல்லது இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். தயாரிப்பில் அவரை விட நான் சீனியர். ஆகையால் ரவி மோகன் சார் உங்களுக்கு எப்போது சந்தேகம் வந்தாலும் என்னிடம் தாராளமாக கலந்து கொள்ளலாம்.
பராசக்தி படத்தில் நானும் ரவி மோகன் சாரும் நடித்ததை பற்றி கூறுவதற்கு நிறைய இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பம் வரும்போது கூறுகிறேன்.
சிவராஜ் சாரை எங்க பார்த்ததில் மகிழ்ச்சி என்றார்.
நடிகர் டாக்டர் சிவராஜ் பேசும்போது,
ஜெயம் படத்தில் இருந்து எப்போது வரைக்கும் ரவி மோகனின் வளர்ச்சி அற்புதமான வளர்ச்சியாக இருக்கிறது. அவரை எனக்கு அவ்வளவாக பழக்கம் இல்லை ஆனாலும் அவர் படங்களை நான் பார்த்திருக்கிறேன் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக செய்வார். குறிப்பாக சகலகலா வல்லவன் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் சென்னை என்னுடைய ஊர். எனக்கு எப்போதும் சென்னை வருவது பிடிக்கும்.
சேகர் மற்றும் விஜய் பிரசாத் இருவரும் என்னுடைய பால்ய நண்பர்கள். 45 வருடங்களாக நாங்கள் நண்பர்கள். அவர்களுடன் இங்கு வந்திருக்கிறேன்.
ஆர்டினரி மேன் என்று இப்படத்திற்கு அழகாக பெயர் வைத்திருக்கிறார்கள். சுருக்கமாக ஓம் என்று அழைக்கப்படும் இப்படம் நிச்சயம் மாபெரும் வெற்றி அடையும். ஏனென்றால், ஓம் என்றாலே நேர்மறையான அதிர்வலைகள் தான் அங்கு இருக்கும்.
ரவி மோகனுடன் நான் இணைந்து நடித்தால், அண்ணனாகவோ நண்பனாகவும் மெதுவாக இருந்தாலும் நேர்மறையான கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பேன்.
ரவி மோகனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். கார்த்திக் சாருக்கு நன்றி என்றார்.
நடிகர் கார்த்தி பேசும் போது,
என் நண்பன் ரவி தயாரிப்பாளராக ஆகும்போது ஒரு நண்பனாக நான் சில விஷயங்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இங்கு வந்து பார்க்கும்போது தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் தயாரிப்பு நிறுவனத்தை இவ்ளோ பெரிய விழாவாக நடத்தியதில்லை.
அதுமட்டுமில்லாமல், அவர் ஏன் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என்று கூறிய போது மிகவும் பெருமையாக இருந்தது. இப்போது தன்னை கை கொடுத்து தூக்கி விட மாட்டார்களா என்று பல திறமையான இயக்குனர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரவிக்கு அப்பா இருந்தார், அண்ணன் இருந்தார். ஆனால், அனைவருக்கும் நான் இருக்கிறேன் என்று ரவி கூறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
மேலும், எனக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. ப்ரோ கோட் என்பதை கேட்கும் போது புதுசாக இருக்கிறது. ஆர்வமாக இருக்கிறது.
ரவியை நான் முதன்முதலாக பார்த்தது எப்போது என்று கூற ஆசைப்படுகிறேன். நான் சினிமாவுக்கு வரும்போது சண்டை பயிற்சி வகுப்பிற்கு சென்றேன் அங்கு தான் ரவி அண்ணனை சந்தித்தேன். சாதாரணமாக நாங்கள் மூன்று அடியில் குதித்தால் ரவி அண்ணன் 10 அடியில் குதிப்பார். ஐயையோ! சினிமா என்றால் இப்படித்தான் இருக்குமோ என்று பயந்தேன். பிறகு எங்களை அழைத்து சென்று ஜூஸ் வாங்கி கொடுப்பார். காசு கொடுத்தால், நீங்க எல்லாம் சின்ன பசங்க காசு குடுக்க கூடாது என்று அவரே கொடுப்பார். சிறிது காலத்திற்கு பிறகு தான் அவர் என்னைவிட சின்ன பையன் என்று தெரிந்தது. அதன் பிறகு அண்ணா என்று கூப்பிட்டால் அடி விழும் என்று ரவி என்று கூப்பிட ஆரம்பித்தேன். பிறகு அவருடைய முதல் படத்தை பார்த்த பிறகு அவருடைய உடைகள் போன்று எல்லா விஷயங்களையும் பேசுவோம். அப்படித்தான் எங்களுடைய நட்பு ஆரம்பித்தது.
பொன்னியின் செல்வன் படத்தில் ரவியை பார்த்து நான் மிகவும் மகிழ்ந்தேன். ஏனென்றால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டிலேயே ராஜாவாக நடிக்கப் போவது யார் என்ற ஒரு கேள்வி இருந்தது. தாய்லாந்தில் படப்பிடிப்பில் அவர் ராஜாவாக உக்காந்திருந்ததை பார்த்தபோது ராஜாவுக்கு உரிய அனைத்து லட்சணங்களும் அவரிடம் இருந்தது. அதைவிட அவரிடம் எனக்கு பிடித்த விஷயம் என்றால் மனதால் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் ரவி. அதை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது.
இரவு உனது நேரத்தில் எனக்கு ஒரு கதையை சொன்னார். அதை கேட்டதும் ஜிம் கேரி அளவிற்கு இருந்தது அவருடைய ஒரு பக்கம் மட்டும் தான் நமக்கு தெரியும். ராஜா அண்ணா கூட திரையில் இன்னும் அதை காட்ட வில்லை, யோகி பாபுவை வைத்து இயக்கும் படத்தில் அதை பார்க்கலாம் என்று நினைக்கிறேன். ரவி எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார் என்று தான் நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவருக்குள் சீரியஸ் ஆன ஒரு மனிதர் இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. உலக சினிமா அனைத்தையும் அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டே இருப்பார். அவருக்கு படத்தொகுப்பும் மிக நன்றாக தெரியும். அதாவது ஒருவன் படிக்காதது போன்று இருக்கும். ஆனால், நல்ல மார்க் எடுப்பதை நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா?! அது போல் தான் ரவியும், என்றார்.
இயக்குனர் ராஜா மோகன் பேசும்போது,
ரவியுடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு 17 வயது இருக்கும் போது அவனுக்கு 11 வயது அப்போது பரதநாட்டியம் 5 மணி நேரம் தொடர்ச்சியாக அரங்கேற்றம் செய்தான். அப்போது இவ்வளவு வருடமாக மிரட்டி உருட்டி கொண்டிருந்து அவனை அண்ணார்ந்து பார்த்தேன். அதேபோல் இன்றும் அண்ணார்ந்து பார்க்கிறேன்.
புதுப்பேட்டை படத்தில் ஒரு வசனம் வரும் அது போல, இவ்வளவு திறமைகளையும் வைத்துக் கொண்டு தான் என்னிடம் இத்தனை வருடம் நடித்துக் கொண்டிருந்தாயா?! என்று தான் கேட்கத் தோன்றுகிறது. முதல் படத்தில் இருந்து எப்போது வரை நான் சொன்னதை கேட்டு இயக்குனரின் நடிகராக இருந்திருக்கிறான். இப்போது இயக்குனராக நிச்சயம் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது. இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் ரவி நன்றாக இருக்க வேண்டும் என்று தான் மனதார நினைக்கிறார்கள். இவ்வளவு பேரை அவன் சம்பாதித்து வைத்திருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
பாடகி கெனிஷா பேசும் போது,
அனைவருக்கும் வணக்கம், நான் ஒரு பாடகி, இசை தயாரிப்பாளர், ஆன்மீக சிகிச்சையாளர் தற்போது “ரவி மோகன் ஸ்டுடியோஸ்”-ன் பங்குதாரர். இந்த வாய்ப்பை வழங்கிய திரு.ரவி மோகன் அவர்களுக்கு நன்றி. கடவுளுக்கும் பிரபஞ்சத்துக்கும் நன்றி. அம்மா, அப்பா மற்றும் ராஜா அண்ணா அவர்களுக்கு நன்றி. நான் நீண்ட காலமாக தனிமையில் இருந்தேன். இப்போது ரவி அவர்களின் மூலம் இப்படி அழகான மனிதர்கள் கிடைத்துள்ளார்கள்.
நான் மிகவும் கடினமான சூழலில் இருந்து வந்த ஒருவர், ரவி அவர்கள் மிகவும் சிறப்பான ஒரு சூழலில் இருந்து வந்தவர். நாங்கள் இருவரும் இணைந்து, ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை பெரிய அளவில் பிரபலமாக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். எங்களின் கனவும் அது தான். எங்களுடைய குழு இல்லாமல் இன்றைய நாள் சாத்தியம் ஆகிருக்காது.
ரவி அவர்களை பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் வாழ்கையில் மிகவும் கடினமான சூழ்நிலையை கடந்து வந்து இருக்கிறார். அவருக்கு என்ன சோகம் இருந்தாலும், வலி இருந்தாலும் வெளியில் அதை காட்டிக்கொள்ளாமல் மற்றவரிடம் பழகுவார். அது சரி தான். ஆனால், நீங்கள் யார் உங்களிடம் வந்தாலும், அவர் இருளில் இருந்தாலும் நீங்கள் அவர் வாழ்கையை வெளிச்சமாக மாற்றி விடுகிறீர்கள். இப்போது என்னிடம் 7 முழு ஸ்கிரிப்ட் உள்ளது. அவ்வளவு திறமையான நீங்கள், உங்களின் அனைத்து திறமைகளையும் இந்த உலகம் பார்க வேண்டும். எனக்கு மிகப் பெரும் பேராசை உள்ளது. என்னவென்றால், இந்த உலகத்திலுள்ள அத்தனை மனிதரும் உங்களுள் இருக்கும் கடவுளை பார்க வேண்டும். அந்த கடவுளை நான் பார்த்து விட்டேன். வெற்றிக்கான நாட்கள் குறைவாக தான் உள்ளது. அதற்காக நீங்கள் அதிக உழைப்பை கொடுத்துள்ளீர்கள்.
நீங்கள் ஒருநாள் வரலக்ஷ்மி அம்மாவுடன் இருந்தால் தெரியும், ரவி மோகன் அவர்கள் என் இவ்வளவு சிறந்த மனிதராக இருக்கிறார் என்று. இப்படி பட்ட ஒருவரை கொடுத்ததற்கு நன்றி அம்மா. இங்கு வருகை தந்திருக்கும் அனைவர்க்கும் நன்றி, என்றார்.
நடிகர் யோகி பாபு பேசும்போது
கோமாளி படத்தில் பணியாற்றும்போது ரவி நான் படம் இயக்கினால் நீங்கள் தான் ஹீரோ என்று கூறினார். ஆறு வருடம் கழித்தும் அதை மறக்காமல் இன்று நிறைவேற்றி இருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி என்றார்.
இயக்குனர் கார்த்திக் யோகி பேசும்போது,
இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. மிகவும் மகிழ்ச்சியான தருணம். ஏனென்றால், தேதியும் கொடுத்து, காசும் கொடுத்து, படமும் கொடுத்து தயாரிப்பது என்பதை நான் ஆசீர்வாதமாக நினைக்கிறேன். முதலில் இந்த கதையை அண்ணா நம்பினார். பிறகு இத்தனை பேர் இந்த கதையை நம்பி இந்த படத்திற்காக வந்தது மிகவும் மகிழ்ச்சி. நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பட குழுவினர் அனைவருக்கும் மிக்க நன்றி. மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அந்த பொறுப்பை உணர்ந்து இப்படத்தை மாபெரும் வெற்றி படமாக உருவாக்க எல்லாவித முயற்சிகளையும் எடுப்பேன் என்றார்.
இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்.ஜே சூர்யா பேசும்போது,
முதலில் ரவி மோகன் சார் கதை கேட்க சொன்னார் கார்த்திக் சார் வந்து கதை சொன்னார் கதை கேட்டதுமே பிடித்து விட்டது. இப்போது வரும் படங்களில் குடும்பத்துடன் சந்தோஷமாக பார்க்கக்கூடிய காதலோடு நகைச்சுவையோடு உணர்வு பூர்வமான பயணத்தை இன்றைய சினிமா இழந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட அம்சத்தில் இந்த படம் வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. ப்ரோ கோட் என்கிற விஷயம் உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும். ரவி மோகன் சார் ஸ்டுடியோஸ் முழுக்க முழுக்க பொழுதுபோக்கான திரைப்படமாக உருவாகி இருக்கிறது. அதிலும் முதல் படமாக இது வருவது நல்ல விஷயம். கதை கேட்டதும் பிடித்திருந்தால் உள்ளே குதித்து விடுவேன். கதைப் பிடித்து இருக்கிறது என்று ரவிசாரிடம் கூறினேன் அதன் பிறகு ஒவ்வொரு வேலையாக ஆரம்பித்து இன்று பூஜை வரை வந்திருக்கிறது. பெரிய நடிப்பு பட்டாளங்கள் இப்படத்தில் இருக்கிறார்கள் என்றார்.
ரித்தீஷ் தேஷ்முக் பேசும்போது,
என்னுடைய கல்யாணத்திற்கு ரவி மோகன் மற்றும் ராஜா மோகன் அவர்கள் கொடுத்த வரதட்சணை தான் சந்தோஷ் சுப்பிரமணியம். ஏறத்தாழ 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து இயக்குனராக அறிமுகம் ஆவதில் மகிழ்ச்சி மற்றும் அவருடைய எல்லா படங்களும் வெற்றி அடைய வாழ்த்துகள். மேலும் ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ, சிங்கம் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சிங்கம் போல் வெற்றி பெற்று கர்ஜிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.
நடிகை ஜெனிலியா ரித்தேஷ் பேசும்போது,
சந்தோஷ் சுப்ரமணிய படத்தில் பார்த்த ரவியை, இன்று தயாரிப்பாளராக இயக்குனராக பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் எப்போதும் அன்பாக ஆத்மார்த்தமாக பழகக் கூடியவர். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் பேசும்போது,
இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த ரவி மோகன் சாருக்கு நன்றி. ரவி மோகன் ஸ்டுடியோஸ் இன் முதல் படம் மட்டுமல்ல, இனி வரும் அடுத்தடுத்த எல்லா படங்களும் வெற்றியாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அதற்காக எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் நாங்கள் செய்வோம். இப்படத்தில் பிரம்மோ படப்பிடிப்பிற்காக எஸ்.ஜே சூர்யாவை பார்த்தபோது மிகவும் வியந்தேன். படப்பிடிப்பில் அவருடைய கதாபாத்திரத்தை பார்த்து சிரித்துக் கொண்டே இருப்பேன். எஸ் ஜே சூர்யா சாரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.
இப்பட குழு அனைவருக்கும் நன்றி . இங்கு வந்திருக்கும் பத்திரிக்கை மற்றும் மீடியா அனைவருக்கும் நன்றி . எனக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கும் நன்றி என்றார்.
நடிகை மாளவிகா மனோஜ் பேசும்போது
அனைவருக்கும் வணக்கம். இப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சாருக்கு நன்றி, ரவி மோகன் சார் அவர்களுக்கும் மிக்க நன்றி. இப்படம் மிகப் பெரிய வெற்றியடையும் என்ற நம்புகிறேன் என்றார்.
அர்ஜுன் அசோக் பேசும்போது
மிகப்பெரிய தருணம் இது. இந்த வாய்ப்பைக் கொடுத்து ரவி மோகன் சார் அவர்களுக்கு நன்றி. எஸ் ஜே சூர்யா சார் கார்த்திக் அனைவருக்கும் நன்றி மிகப்பெரிய பொறுப்பு இது. இப்படம் வெற்றி பெற சிறப்பாக பணியாற்றுவேன் என்றார்.
ஸ்ரீ கௌரி பிரியா பேசும் போது,
இந்த அரங்கத்திற்கு வந்த உடனே மிகவும் நேர்மறையான அதிர்வலைகள் உணர்ந்தேன். ரவி மோகன் சார் ஸ்டுடியோவில் பணியாற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள். ரவி மோகன் சார், உங்களுடன் ஜோடியாக இப்படத்தில் நடிக்கிறேன். இதை நான் மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு மிக்க நன்றி. நம் அனைவரும் சேர்ந்து தட்றோம், கலக்குறோம், தூக்குறோம் என்றார்.
நடிகர் கண்ணா ரவி பேசும்போது,
சக்தி சாருக்கு மிகவும் நன்றி ஏனென்றால் நான் எவ்வளவு பெரிய விழாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் பார்த்து ரசித்து பணியாற்றிய அனைத்து நடிகர்களும் முன்னிலையில் நான் செய்த ஒரு சிறிய புரோமோ இன்று வெளியாவதில் மிகவும் மகிழ்ச்சி.
ரவி அண்ணா ஒவ்வொரு படத்திலும் அவருடைய கதாபாத்திரம் நல்லவராகவே இருக்கும். கார்த்தி சார் கூறியது போல அவர் மிகவும் நல்ல மனிதர். அதை நான் ஒரு சில நிமிடங்களிலேயே உணர்ந்து கொண்டேன். என்னுடைய குடும்பமே அவருடைய ரசிகர்கள் தான். முக்கியமாக என்னுடைய அப்பா அம்மா ரவி படம் வந்திருக்கு வா பார்க்கலாம் என்று கூப்பிடுவார்கள். அவர் நல்ல நடிகர், சமூக பொறுப்பு மிகுந்த மனிதர். அவர் ஒரு படம் எடுக்கும் போது சமூகத்தை சார்ந்தது தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த படத்தில் என்னுடைய பங்கும் இருப்பதில் மகிழ்ச்சி என்றார்.
இயக்குனர் சக்திவேல் பெரியசாமி பேசும் போது,
நான் ஷியாம் மற்றும் ரவி சார் மூவரும் ஒன்றாக பயணித்துக் கொண்டிருக்கிறோம் அப்போது ஒரு நாள் நான் ஒரு கதை சுருக்கத்தை அனுப்பினேன் அதை படித்துவிட்டு நிச்சயம் செய்யலாம் என்றார். என் மீது நம்பிக்கை வைத்து படத்தை கொடுத்ததற்கு நன்றி. நான் கொடுத்த கதை சுருக்கத்தை விட படம் மிகவும் நன்றாகவே வரும். அதே போல் ஆர்டினரி மேன், ப்ரோ கோட் குழுவினருக்கும் நன்றி, ஏனென்றால், மூன்று படத்தில் இணைந்து நானும் பணியாற்ற போகிறேன். எல்லோருக்கும் நன்றி என்றார்.
RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் படமான “ரைட்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
நட்டி, அருண் பாண்டியன் கூட்டணியில் வெளியாகியிருக்கும் “ரைட்” படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
எளிய மக்களுக்கு பிரச்சனை என்றால் காவல்நிலையத்தில் உதவி கேட்பார்கள். அந்த காவல் நிலையத்திற்கே ஒரு பிரச்சனை என்றால் என்னவாகும்?, இது தான் இப்படத்தின் மையம்.
ஜில்லா புலி படங்களில் அசோஷியேட் இயக்குநராக பணிபுரிந்துள்ள சுப்ரமணியன் ரமேஷ்குமார் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பரபரப்பான சம்பவங்களை கோர்த்து, விறுவிறுப்பான திரைக்கதையில், அசத்தலான கமர்ஷியல் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் கால் பதித்திருக்கும் RTS Film Factory நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை, தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், ஷியாமளா பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் நட்டி, அருண் பாண்டியன் இணைந்து, முதன்முறையாக முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பிக்பாஸ் அக்ஷரா ரெட்டி, வினோதினி, மூணாறு ரமேஷ், டைகர் தங்கதுரை, உதய் மகேஷ், முத்துராமன், வில்லனாக ரோஷன் உதயகுமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வீரம் படப்புகழ் குழந்தை நட்சத்திரம் யுவினா பார்தவி இப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார், அனுபமா குமாரின் மகன் ஆதித்யா ஷிவக் புதுமுகமாக அறிமுகாகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.
விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம் தயாரிப்பு நிறுவனம் – RTS Film Factory தயாரிப்பாளர்கள் – திருமால் லட்சுமணன், ஷியாமளா எழுத்து, இயக்கம் – சுப்ரமணியன் ரமேஷ்குமார் இசை – குணா பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு – M பத்மேஷ் எடிட்டிங் – நாகூரான் ராமசந்திரன் கலை – தாமு ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல் நடனம் – ராதிகா மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
சுதந்திர தின சிறப்பு முன்னோட்டம் : ஜான் ஆப்ரஹாம் நடிப்பில், ‘டெஹ்ரான்’ திரைப்படம் – பாந்த்ரா -வோர்லி கடல் பாலத்தில், மாபெரும் புரஜெக்சஷனில் இடம் பிடித்துள்ளது!!
சுதந்திர தின ஒளி விழா: ஜான் ஆப்ரஹாம் ‘டெஹ்ரான்’ பட விளம்பரம் பாந்த்ரா-வோர்லி கடல் பாலத்தில் மின்னியது !!
சுதந்திர தினத்தை முன்னிட்டு, மும்பையின் புகழ்பெற்ற பாந்த்ரா-வோர்லி கடல் பாலம் (Bandra Worli Sea Link) ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவான பெரும் எதிர்பார்ப்புமிக்க திரில்லர் படமான ‘டெஹ்ரான்’ திரைப்படத்தின் மாபெரும் விளம்பர மேடையாக மாறியது. ZEE5-இல் வெளியாகும் முன்பு, பாலம் முழுவதும் ஒளிர்ந்த திரைப்படத்தின் கண்கவர் போஸ்டர், பயணிகள் மற்றும் பாதசாரிகளின் பார்வையை கவர்ந்து, அனைவரும் தங்கள் மொபைலில் அந்த தருணத்தை படம் பிடிக்க வைக்கும், உற்சாக தருணமாக மாறியது.
இந்த அபூர்வமான புரஜெக்சன், சுதந்திர தின வாரத்தின் தேசப்பற்று உணர்வையும், உளவு திரில்லர் திரைப்படத்தின் அதிரடி துடிப்பையும் ஒருங்கிணைத்தது. இரவின் இருளில் ஒளிர்ந்த கடல் பாலம், தேசப்பற்று மற்றும் சினிமா காட்சியின் கலவையாக, ஒரே நேரத்தில் கொண்டாட்டத்தையும் உற்சாக அனுபவத்தையும் அளித்தது. இந்நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்ற ஜான் ஆப்ரஹாம், இதை “பெருமையும் மறக்க முடியாத தருணமும்” என்று விவரித்து, டெஹ்ரான்-படத்தில் பங்கேற்றது ஒரு அற்புதமான பயணமாக இருந்தது என்றார்.
இப்போது ZEE5-இல் ஸ்ட்ரீம் ஆகும் டெஹ்ரான், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான உலகளாவிய பதற்றத்தை மையமாகக் கொண்ட, இந்தியா அந்த மோதலில் சிக்கிக்கொள்வதைப் பதிவு செய்யும் ஒரு திகில் நிறைந்த பொலிட்டிக்கல் திரில்லர் படமாகும். மாடோக் பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் கோபாலன் இயக்கியுள்ள இப்படத்தில், மனுஷி சில்லர், நீரு பஜ்வா, மதுரிமா துலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விசுவாசம், பொறுமை, அதிரடி, மர்மம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் டெஹ்ரான், சுதந்திர தினத்திற்கு ஏற்ற, பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் ஒரு அட்டகாசமான படம்.
படம் குறித்து நடிகர் ஜான் ஆப்ரஹாம் கூறியதாவது…, “டெஹ்ரான் திரைப்படத்தில் பங்கேற்றது ஒரு அபாரமான அனுபவம். நான் கடந்த ஆண்டுகளில் நடித்த திரைப்படங்களைக் கவனித்தால், நாட்டின் மீது எனக்கு இருக்கும் பற்று தெளிவாக தெரியும் — அது திரையில் நான் செய்வதில் பெரும்பாலும் பிரதிபலிக்கும். ஜியோ பாலிட்டிக்ஸ் மீது உள்ள ஆர்வம், இந்தக் கதையின் மீது எனக்கு உடனடியாக ஈர்ப்பை ஏற்படுத்தியது. சுஷ்மா ஸ்வராஜ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபாரின் சர்வீஸ் நிபுணர்களுடன் கலந்துரையாடிய அனுபவம், ஒரே நேரத்தில் ஊக்கமூட்டுவதும், உற்சாகம் அளிப்பதாகவும் இருந்தது. டெஹ்ரான் போஸ்டர் பாந்த்ரா-வோர்லி கடல் பாலத்தில் ஒளிர்வதை காண்பது பெருமையும் மறக்க முடியாத தருணமுமாகும். இப்படத்திற்கு ZEE5 இவ்வளவு வலுவான தளத்தை வழங்கியதில் மகிழ்ச்சி. சுதந்திர தின வார இறுதியில் இப்படம் வெளியாகுவது, தேசப்பற்று உணர்வுடன் கூடிய, ஒரு அதிரடி கதைக்குள் பார்வையாளர்களை அழைக்கும் சிறந்த தருணம்.”
இந்த சுதந்திர தினத்திற்கு சிறந்த பார்வை அனுபவமாக டெஹ்ரான் தற்போது ZEE5-இல் ஸ்ட்ரீமாகி வருகிறது.
சென்னை, — தமிழ் திரைப்படங்களை உலகளவில் பரப்பியதில் முக்கிய பங்கு வகிக்கும் அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர் வித்துர்ஸ், தனது நீண்டகால துணைவி லிஷாவுடன் திருமணம் செய்து கொண்டார்.
சென்னையில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான திருமண வரவேற்பு விழா, தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களை ஒன்றிணைத்த ஒரு பிரமுகமான நிகழ்வாக அமைந்தது. நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த விழா, மறக்க முடியாத ஒரு தருணமாக இருந்தது.
வித்துர்ஸ் மற்றும் அவரது நிறுவனம் அகிம்சா என்டர்டெயின்மென்ட், கடந்த சில ஆண்டுகளில் தமிழ் திரைப்படங்களை இங்கிலாந்து, ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு சந்தைகளுக்கு வெற்றிகரமாக கொண்டு சென்றுள்ளது. புதிய முயற்சிகள், தரமான விநியோகம், புதுமுக இயக்குநர்களுக்கு ஆதரவு ஆகியவற்றின் மூலம், நிறுவனம் உலகளாவிய தமிழ் சினிமா வட்டாரத்தில் நம்பிக்கையான பெயராக திகழ்கிறது.
வித்துர்ஸ் மற்றும் லிஷா தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் இந்த நேரத்தில், அகிம்சா என்டர்டெயின்மென்ட் தமிழ் சினிமாவின் சர்வதேச செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து செயல்படும்.
Origin Studios சார்பில் கண்ணதாசன் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார் இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. Production NO 1 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ராஜ்குமார் ரங்கசாமி இப்படத்தை இயக்குகிறார்.
எல்.ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார். இவர் பொறியாளன், சட்டம் என் கையில் படத்திற்கு இசையமைத்தவர்.
குட் நைட், லவ்வர் , டூரிஸ்ட் ஃபேமிலி, போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த பரத் இப்படத்துக்கு எடிட்டிங் செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ராஜ்குமார் ரங்கசாமி கூறியதாவது:
இந்த உலகில் காதலும் அன்பும் அதன் இயல்பு தன்மையை மாற்றாமல் இருப்பதை நாம் ஒப்புக் கொள்ளும் அதே வேளையில் அவற்றின் வடிவம் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருப்பதை நாம் மறுக்க இயலாது.
90s கிட்ஸ், 2K கிட்ஸ் .. வரிசையில் இன்றைய இளைஞர்களை ஜெனரேஷன் ஆல்ஃபா என்று சொல்கிறார்கள்..
இவர்கள் 21 ஆம் நூற்றாண்டில் முழுமையாகப் பிறந்த முதல் தலைமுறை மற்றும் COVID-19 தொற்றுநோய் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அதிகரித்து வரும் ஆதிக்கத்தால் வடிவமைக்கப்பட்ட குழந்தைப் பருவத்தை அனுபவித்தவர்கள். எல்லா தருணங்களிலும் CELEBRETING MINDSET – ல் இருக்ககூடியது இந்த ஜென் தறைமுறை. இவர்கள் மிகவும் அட்வான்சாக யோசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சகிப்புத்தன்மை, வெறுப்புணர்வு மேலோங்கி இருக்கும் இந்த சூழலில் உறவுகள் என்பது வேர்களில் இருந்து கற்றுக் கொள்ளப்படாமல் அதை விட்டு விலகிய நிலையில் இன்றைய இளம் தலைமுறையினர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
இன்னொருவர் கருத்தை ஒத்து கொள்வதை தாண்டி அதை கேட்க கூட யாரும் தயாராக இருப்பதில்லை. ஆனால் அடிப்படையான ஒன்றை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எந்த தறைமுறையாயிருப்பினும் அதன் ரூட் அதாவது வேர் என்பது முக்கியம். வேர்களை விட்டு விலகாத ஒரு வாழ்க்கை வேண்டும். அதுவே அடுத்த தறைமுறையினரின் மீட்சியாக இருக்கும். சிந்தனைகளிலும், தொழில்நுட்பத்திலும் மிகவும் அட்வான்சாக வாழ்ந்து வரும் இன்றைய இளம் தலைமுறையினர் காலம் காலமாக இருந்து வரும் மனிதர்களின் இயல்பான சில நல்ல விஷயங்களை கற்று கொள்ளாமல், கற்று கொடுக்க படாமல் இருப்பதை மனதில் கொண்டு அதை கருவாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது.
அலட்டி கொள்ளாத, உறவுகள் இன்றி வாழும் ஒருவன்.., குடும்பம், பெற்றோர் என்று சார்ந்திருக்கும் ஒரு இளம் பெண் இவர்கள் இருவருக்கும் இடையே மலரும் உறவு எப்படி செல்கிறது என்பதே இப்படத்தின் கதை.
96 படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் ஜோடியாக நடிக்கிறார்கள். இயக்குனர் கே பாக்யராஜ் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். இவர்களுடன் கிங்ஸ்லி, டி எஸ் ஆர், ஒளிப்பதிவாளர் ராஜூமேனன் மகள் சரஸ்வதி மேனன், இயக்குனர் சாய் ரமணி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, பொள்ளாச்சி, நாமக்கல் மற்றும் கோவா போன்ற இடங்களில் நடந்திருக்கிறது. இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த ஆண்டு படம் திரைக்கு வர உள்ளது.
பட தயாரிப்பாளர் கண்ணதாசன் கூறியதாவது: இயக்குனராக வேண்டும் என்ற எண்ணத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தேன். இந்நிலையில் எனது நண்பர் ராஜ்குமார் ரங்கசாமி இந்த கதையை என்னிடம் கூறினார். இந்த காலகட்டத்திற்கு ஏற்ப சரியான கதையாகவும், சொல்ல வேண்டிய கதையாகவும் இருந்ததால் அதனை தயாரிக்க முடிவு செய்தேன். இப்படத்தை அடுத்து தொடர்ந்து படங்கள் தயாரிக்க எங்களது நிறுவனம் திட்டமிட்டுள்ளது
அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் விமல் நடிக்கும், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது!!
அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்சன் பிரைவேட் லிமிட் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், நடிகர் விமல் நாயகனாக நடிக்க, எல்சன் எல்தோஸ் மற்றும் இரட்டை இயக்குநர்கள் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், கிராமப்புற பின்னணியில், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினராக உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு, முழுமையாக நிறைவடைந்துள்ளது.
சமீபத்தில் காரைக்குடியில் பிரம்மாண்ட பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், படத்தை ஆரம்பித்த வேகத்தில் 45 நாட்களில் ஒரே கட்டமாக, படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளது படக்குழு.
மலையாளத் திரையுலகில் சமீபத்தில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற “ககனச்சாரி, பொன்மேன்” படங்கள் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ள அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்சன் பிரைவேட் லிமிட் நிறுவனம், இந்த புதிய படம் மூலம், தமிழ் திரையுலகில் கால்பதித்துள்ளனர். தயாரிப்பாளர் விநாயகா அஜித் இப்படத்தை, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் கதாநாயகனாக விமல் மற்றும் கதாநாயகியாக முல்லை அரசி நடிக்க, விடுதலை சேத்தன், பருத்திவீரன் சரவணன் உட்பட மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து, நடித்துள்ளனர்.
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை, குடும்பங்களோடு அனைவரும் கொண்டாடும் வகையில், ஒரு அசத்தலான காமெடி எண்டர்டெயினராக இப்படத்தை, அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்கி வருகின்றனர்.
எழுத்தாளர் பாசில் ஜார்ஜ் மற்றும் ஆகாஷ் வி பால் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்கள். திரைக்கதையை சுதி கிருஷ்ணா அமைத்துள்ளார். பார்க்கிங் வெற்றிப்பட ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரான்சிஸ் நெல்சன் சேவியர் மற்றும் மருது பெரியசாமி வசனம் எழுதியுள்ளனர். எடிட்டிங் மதன், கலை இயக்கம் ராஜ்கமல், ஸ்டண்ட் தினேஷ் காசி, எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் ரஞ்சித் கருணாகரன் ஆகியோர், தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரடக்சன் பணிகளைத் துவக்கியுள்ளது படக்குழு. விரைவில் ஃபர்ஸ்ட் லுக் டீசர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
விஷாரத் க்ரியேஷன்ஸ் வழங்கும், இயக்குநர் அனில் V.நாகேந்திரன் இயக்கத்தில் சமுத்திரகனி, பரத் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, தமிழகம் மற்றும் கேரள மண்ணில், அடக்குமுறைக்கான போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில், அருமையான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வீர வணக்கம்”.
சக மனிதனைக் கொடுமைப்படுத்தும், ஜாதிய அடக்குமுறை இன்றும் நாடு முழுவதும் நடந்து வருகிறது. ஆனால் இன்றைய நிலைமையை விட மோசமான முற்காலத்தில் நீதிக்கான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய ஆளுமைகளைப் போற்றும், அவர்களின் வரலாற்றைப் பேசும் படமாக உருவாகியுள்ள “வீர வணக்கம்” திரைப்படத்தின் டிரெய்லரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்திருமாவளவன் அவர்கள், நேற்று வெளியிட்டார். இந்த டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இன்றைய தமிழகத்தின் ஒரு கிராமத்தில், வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்குமான ஒரு அழகான நட்பு, ஜாதிய மனோபாவத்தால் சிதைக்கப்படுகிறது. அதை தடுக்கும் ஒரு பெரிய மனிதரின் வழியே, தமிழகத்திலும், கேரளத்திலும் உண்மையில் வாழ்ந்து நீதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய ஆளுமையான P கிருஷ்ணபிள்ளை அவர்களின் வரலாற்றின் கதையை இப்படம் சொல்கிறது.
தந்தை பெரியாரின் முற்போக்கு சிந்தனையையும், திராவிட சித்தாந்தத்தையும் பேசுவதோடு, தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் உள்ள பண்பாட்டுத் தொடர்பை அன்பை, அழகாக பேசும் ஒரு படைப்பாக, காதல், சண்டைக்காட்சிகள், சஸ்பென்ஸ் நிறைந்த கமர்ஷியல் படமாக இப்படத்தைத் தயாரித்து, இயக்கியுள்ளார் இயக்குநர் அனில் V.நாகேந்திரன்.
இப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிகர் சமுத்திரகனி நடித்துள்ளார். நடிகர் பரத் இதுவரை ஏற்றிராத, கிராமத்து பெரிய மனிதர் பாத்திரத்தில் நடித்துள்ளார். ரித்தேஷ், பிரேம் குமார், ரமேஷ் பிஷாரடி, சுரபி லட்சுமி, பி.கே. மேதினி, ஆதர்ஷ், சித்தாங்கனா, ஐஸ்விகா, அரிஸ்டோ சுரேஷ், சித்திக் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு M K அர்ஜுனன், பெரும்பாவூர் G. ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், C.J.குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் இசையமைத்துள்ளனர். இப்படத்தில் பழம்பெரும் தமிழ்ப் பின்னணிப் பாடகர் T.M. சௌந்தர்ராஜன் அவர்களின் மகன் TMS செல்வகுமார் ஒரு அருமையான பாடல் பாடியுள்ளார்.
இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்
எழுத்து, இயக்கம் – அனில் V.நாகேந்திரன் இசை – M K அர்ஜுனன், பெரும்பாவூர் G. ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், C.J.குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் ஒளிப்பதிவு – கவியரசு, சினு சித்தார்த் எடிட்டிங் – பி. அஜித் குமார், அப்பு பட்டத்திரி கலை இயக்கம் – கே. கிருஷ்ணன் குட்டி இணை இயக்கம் – கே. ஜி. ராம் குமார் ஒப்பனை – பட்டணம் ரஷீத் சண்டைப் பயிற்சி – மாஃபியா சசி பாடல்கள் நவீன் பாரதி, உடைகள் – இந்திரன்ஸ் ஜெயன், ஜி.பழனி சவுண்ட் டிசைன் – என். ஹரி குமார் மக்கள் தொடர்பு – குணா, சதீஷ், சிவா (AIM)