யுவன் சங்கர் ராஜா பாடி, இசையமைத்து, நடித்திருக்கும் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பம் -‘ மணி இன் தி பேங்க்’
இசையுலகில் திரைப்பட பாடல்களுக்கு நிகராக தற்போது இன்டிபென்டென்ட் மியூசிக்கல் ஆர்டிஸ்ட்டால் உருவாக்கப்படும் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பங்களுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடத்தில் மறைந்திருக்கும் இசை திறமையை வெளிக்கொணரும் வகையிலும், அவர்களுக்கு புத்துணர்வு அளித்து ஊக்கமளிக்கும் வகையிலும் தமிழ் திரையிசையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரும், பாடகருமான யுவன் சங்கர் ராஜா, ‘மணி இன் தி பேங்க்’ எனும் பெயரில் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘மணி இன் தி பேங்க்’ எனும் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலில் யுவன் சங்கர் ராஜா நடித்திருப்பதுடன் பாடலை எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார்.
தனது நடிப்பு திறமைக்கு தீனி போடும் வகையிலான தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் கிருஷ்ணா. அந்த வகையில் ஈவீஈஜி எண்டர்டெயின்மெண்ட், நஞ்சுண்டப்பா ரெட்டி & பிரதர்ஸ் வழங்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் துவங்கியுள்ளது.
படத்திற்கு தற்காலிகமாக ‘புரொடக்ஷன் நம்பர் 1’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த திரைப்படம் காமெடி, ஃபேண்டஸி மற்றும் திகில் ஜானரில் உருவாக இருக்கிறது. இயக்குநர் ஏ. வெங்கடேஷிடம் ஐந்து படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ள துரை. சரவணன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
படம் குறித்து தயாரிப்பாளர் நஞ்சுண்டப்பா ரெட்டி கூறுகையில், “ஓசூரில் பிசினஸ் செய்து வரும் நாங்கள் முதல்முறையாக தமிழ் சினிமாவில் ஈவீஈஜி எண்டர்டெயின்மெண்ட் என்ற கம்பெனி தொடங்கி தொடர்ந்து படங்கள் தயாரிக்க உள்ளோம். கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஆதியா பிரசாத் நடிக்கிறார். இவர் ‘நிழல்’ உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார். புதுமுக நடிகராக சந்தோஷ் இத்திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார். இவர்களோடு மாறன், இமான் அண்ணாச்சி, ஆதித்யா கதிர், சாம்ஸ், இயக்குநர் ஏ. வெங்கடேஷ் மற்றும் பலர் இத்திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். உங்களுடைய முழு ஆதரவு படத்திற்கு தர வேண்டும்” என்றார்.
தொழில்நுட்பக் குழுவினர்:
இயக்குநர்: துரை. சரவணன், தயாரிப்பு பேனர்: ஈவீஈஜி எண்டர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர்கள்: நஞ்சுண்டப்பா ரெட்டி & பிரதர்ஸ், ஒளிப்பதிவு: எஸ்.ஆர். சதீஷ் குமார் (பேராண்மை, மீகாமன்), எடிட்டர்: விஜய் வேலுக்குட்டி (வலிமை, துணிவு, மார்க் ஆண்டனி), இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த்தேவா.
கோபுரம் பிலிம்ஸ் G.N.அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் பிரம்மாண்ட தயாரிப்பில், நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம், ‘இங்க நான் தான் கிங்கு’. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மே 10 அன்று பிரமாண்டமான முறையில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வினில்….
எழுத்தாளர் எழிச்சூர் அரவிந்தன் பேசியதாவது…
கோபுரம் பிலிம்ஸ் தயாரித்த முதல் படமான ‘வெள்ளக்கார துரை’ எழுத்தாளரும் நான் தான். 10 வருடம் கழித்து அடுத்த வெற்றிப்படமான ‘இங்க நான் தான் கிங்கு’ படத்திற்கு எழுதியுள்ளேன். அன்புசெழியன் சாரிடம் கதை சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தது, உடனே எல்லாம் ஆரம்பித்துவிட்டது. என்னுடன் இக்கதைக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள் இந்த காலத்தில் ஒரு படத்திற்கு உயிர் கொடுக்கும் தயாரிப்பாளர் இன்னொரு கடவுள். கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் மற்றும் சுஷ்மிதா அன்புசெழியன் இருவருக்கும் என் நன்றிகள். அடுத்ததாக இப்படம் முழுமை பெற மிகமுக்கிய காரணமான, எனக்கு வழிகாட்டியாக இருந்த சந்தானம் சாருக்கு நன்றி. என் இயக்குநர் ஆனந்த் சார், எங்களுக்குள் எப்போதும் ஊடல்கள் இருக்கும். என் கதையை முழுமையான சினிமாவாக மாற்றியுள்ள அவருக்கு நன்றி. தம்பி ராமையா சார் அருமையாக வேலை பார்த்துள்ளார் அவருக்கும் என் நன்றிகள். பாடலில் பட்டையை கிளப்பியுள்ள இமான் சாருக்கு என் நன்றிகள். அழகான தமிழ் பேசும் ஹீரோயினுக்கு வாழ்த்துகள். இந்தப்படம் மிகப்பெரிய ஹிட்டாகும். படத்தின் நிறை குறைகளை கூறி ஆதரவு தாருங்கள், அனைவருக்கும் நன்றி.
சரிகமா நிறுவனம் சார்பில் ஆனந்த் பேசியதாவது….
கோபுரம் பிலிம்ஸ் உடன் சரிகமாவின் முதல் படம் இது. அன்புசெழியன் சாருக்கு நன்றி. இந்த சம்மருக்கு மிகப்பெரிய விருந்தாக இப்படம் இருக்கும். சந்தானம் சார் கேங் கலக்கியிருக்கிறார்கள். நல்ல பாடல்கள் தந்துள்ள இமானுக்கு நன்றி. இந்தப்படம் எல்லோரும் கொண்டாடும் படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.
நடிகர் கூல் சுரேஷ் பேசியதாவது…
இந்த படத்தில் நடித்ததற்கு நான் மிக சந்தோஷப்படுகிறேன் எனக்கு நல்ல சம்பளம் தந்தார்கள். இதற்கு முன் ‘வெள்ளக்கார துரை’ படம் செய்தேன், என்னை நன்றாக பார்த்துக் கொண்டார்கள். மிகச்சிறந்த தயாரிப்பாளர். சந்தானம் சாரை புகழ்ந்து கொண்டே இருக்கிறீர்கள் எனக் கேட்கிறார்கள் அவர் உங்களுக்கு அதிகம் வாய்ப்பு தரவில்லை என சொல்கிறார்கள் ஆனால் என் வாழ்க்கைக்கே அவர் தான் அதிகம் வாய்ப்பு தந்துள்ளார். இந்தப்படத்திற்கும் அவர் தான் வாய்ப்பு வாங்கி தந்தார். அவருக்கு என்றும் நன்றியுணர்வுடன் இருப்பேன். இப்படத்தில் இமான் சார் நல்ல பாடல்கள் தந்துள்ளார். என்னை தியேட்டருக்கு வராதே என பலர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் இந்தக்காலத்தில் நேரடியாக சென்று விளம்பரம் செய்தால் தான் படத்திற்கு கூட்டம் வரும். நான் என்னால் முடிந்ததை செய்வேன். ‘இங்க நான் தான் கிங்கு’ மிகப்பெரிய வெற்றியடையும்.
ஒளிப்பதிவாளர் ஓம் நாராயண் பேசியதாவது…
இது ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர் மூவி. அத்றகேற்றாற் போல கேமரா செய்துள்ளேன். நான் சந்தானம் சாரின் ரசிகன். அவரின் நடிப்பை ஷூட்டிங்கில் பார்த்து சிரித்து விடுவேன். இந்த படத்தில் வாய்ப்பு தந்த அன்பு சாருக்கு நன்றி. சந்தானம் மற்றும் இயக்குநருக்கு நன்றிகள்.
இயக்குநர் ஆனந்த் நாராயண் பேசியதாவது…
இதுவரையிலும் படத்திற்கு ஆதரவு தந்து வரும் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் அன்பு சார் கதை கேட்கிறார் என்றதும் அவரை நெருங்க முயற்சித்தேன். செந்தில் சார் மூலம் தான் அவரை சந்தித்தேன். ஒரு படம் செய்வதாக கதை சொன்னார்கள், உடனே ஒப்புக்கொண்டேன். எனக்காக முழு டீமையே கொடுத்தார்கள். படம் டாக்கி போர்ஷன் முடித்தவுடன் என்னைக் கூப்பிட்டு பாராட்டினார். சந்தானம் சாரை ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்திற்காக சந்தித்துள்ளேன், அவருக்கு நான் ரசிகன். இப்போது அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. முதல் நாளே என்னைக் கூப்பிட்டு பாராட்டினார். ஷூட்டிங்கில் செட்டிலேயே இருந்து என்னுடன் விவாதிப்பார். அவர் டீமுக்கு முக்கியமாக நன்றி. இமான் சார் மியூசிக் அட்டகாசமாக வந்துள்ளது. சந்தானம் சார் எமோஷன் காட்சி ஒன்று இருக்கிறது, அதில் சந்தானம் சாரா இசையா என போட்டியே இருக்கும். சந்தானம் சாருக்கு இணையாக புதுமுகம் லயா சூப்பராக நடித்துள்ளார். தம்பி ராமையா சார் அருமையாக நடித்துள்ளார். எல்லோருடைய பெஸ்ட் இந்தப்படத்தில் தந்துள்ளனர் அனைவருக்கும் என் நன்றிகள். தொழில்நுட்ப குழுவினர் அனைவருக்கும் நன்றி. கண்டிப்பாக குடும்பத்தோடு சந்தோஷமாக கொண்டாடும் படமாக இது இருக்கும், அதற்கு ரைட்டருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். மே 10 படம் பார்த்து ஆதரவு தாருங்கள்.
இயக்குநர் செல்லா அய்யாவு பேசியதாவது…
கோபுரம் பிலிம்ஸ் தயாரித்த ‘வெள்ளக்கார துரை’ படத்தில், நான் அஸிஸ்டெண்ட். தயாரிப்பாளர் அன்பு சார் சினிமாவை எவ்வளவு நேசிப்பார் என்பது தெரியும். ஒரு படம் வெற்றி பெற்றால் அதைப்பற்றி நிறைய பேசுவார். திரைத்துறையில் இருப்பவர்களுக்கு பொறுப்பு மிக அதிகம் என்பதை எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார். கொஞ்ச காலத்திற்கு பிறகு இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளார் வருடத்திற்கு நாலைந்து படங்கள் செய்ய வேண்டும். இந்தப்படம் நான் பார்த்துவிட்டேன். சந்தானம் சார் ரசிகன் நான். இந்தப்படத்தில் எல்லோரும் சிரித்து கொண்டே இருக்கலாம். அவருடன் இணைந்து விரைவில் படம் செய்வேன். படம் வெற்றிபெற வாழ்த்துகள்.
தம்பி ராமையா பேசியதாவது…
‘இங்க நான் தான் கிங்கு’, குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். இப்போது படங்கள் நிறைய விவாதிக்கப்படுகிறது. மலையாள படங்கள் பற்றி சொல்கிறார்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் தாய் தமிழ் சினிமா தான். முன்பெல்லாம் தயாரிப்பு தரப்பில் கதை இலாகா இருக்கும். ஒரு கதை தயாராக பல அடுக்குகள் இருக்கும் தேவரய்யா ஆரம்பித்து ஆர் பி சௌத்திரி வரை கதையை தேர்ந்தெடுத்து தயாரிப்பதில் மிகுந்த கவனம் இருக்கும். அது போல் கோபுரம் பிலிம்ஸ் தேர்ந்தெடுத்து படம் செய்கிறார்கள். அன்புசெழியன் சார் தனது மகளை இந்த துறைக்கு கூட்டி வந்துள்ளார். தெளிவானவராக இருக்கிறார், வாழ்த்துகள் மகளே. இப்படம் காம வாடை இல்லாத காமெடிப்படம். நல்ல கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். அன்பு தம்பி இமான் பெரிய அளவில் சிறப்பான பாடல்கள் தந்துள்ளார். சந்தானத்தின் வெற்றிக்கு காரணம் அவர் மனது தான். அவர் நிஜ ஹீரோ. தன் பழைய நண்பர்களை வைத்து காப்பாற்றுவது மிகப்பெரிய விஷயம். ஒரு காட்சியை கடைசி ரசிகன் வரை ரசிக்க வெண்டும் என்பதில் கடும் முயற்சி செய்வார் சந்தானம். அவருடன் பயணிப்பது மிகுந்த சந்தோஷம். லியா அறிமுக நடிகை என்ற தயக்கம் இல்லாமல் எங்களுக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார், நல்ல எதிர்காலம் உள்ளது வாழ்த்துகள். இப்படத்தில் முழு நீள காமெடி பாத்திரம் செய்துள்ளேன். அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். மே 10 அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள், நன்றி.
நடிகை பிரியாலயா பேசியதாவது…
இந்த நாள் எனக்கு மிக முக்கியமான நாள். என் முதல் பட மேடை, கடவுளுக்கும் என் அப்பா அம்மாவுக்கும் நன்றி. என் தயாரிப்பாளர் அன்பு சார், சுஷ்மிதா மேடம் இருவருக்கும் நன்றி. எப்போதும் ஆதரவாக என்னை விசாரித்து பார்த்துக்கொண்டார்கள். கோபுரம் பிலிம்ஸில் என் முதல் படம் செய்ததை பெருமையாக நினைக்கிறேன். எல்லோருக்கும் பிடித்த சந்தானம் சார், அவருடன் பழகிய யாருக்கும் அவரை பிடிக்காமல் போகாது. அவ்வளவு எளிமையானவர். முதலில் செட்டில் என்னுடன் இங்கிலீஷில் பேசினார். அவருக்கு நான் தமிழ் என்பது தெரியாது, நான் சொன்ன பிறகு ஜாலியாக பேசினார் அவருடன் நடித்தது மகிழ்ச்சி. கேப்டன் கூல் ஆனந்த் சார் ஜாலியாக பேசி வேலை வாங்கி விடுவார். தம்பி ராமையா சாரின் எனர்ஜி பிரமிப்பாக இருக்கும். அவர் தமிழுக்கு ரசிகை நான். இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். மியூசிக் தான் படத்தின் ஆன்மா. இமான் சாருக்கு என் நன்றிகள். படம் பார்த்து ஆதரவு தாருங்கள்.
இசையமைப்பாளர் இமான் பேசியதாவது…
கோபுரம் பிலிம்ஸில் ‘வெள்ளக்கார துரை’ படம் செய்துள்ளேன். ஒரு இடைவேளைக்குப் பிறகு அன்புசெழியன் சாருடன் இணைகிறேன். என் மீது அவருக்கு தனித்த அன்பு இருக்கிறது. அவர் எல்லாப் படத்திலும் என் இசை இருக்க வேண்டுமென நினைப்பார். அவருக்கு என் நன்றிகள். இப்படம் மூலம் அறிமுகமாகும் சுஷ்மிதாவிற்கு வாழ்த்துக்கள். சந்தானம் சார் காமெடி தான் என் வீட்டில் ஓடிக்கொண்டே இருக்கும், அவருடன் வேலை பார்க்க வேண்டுமென பல காலமாக ஆசைப்பட்டேன், அது இந்தப்படத்தில் அமைந்தது மகிழ்ச்சி. ஒரு ஹீரோயினுக்கு ஒரு வெற்றிப்பாடல் அமைந்தால் அது மிகப்பெரிய விளம்பரமாக இருக்கும் ‘மாயோன்…’ பாடல் லயாவுக்கு மிக அருமையான பாடலாக அமைந்துள்ளது. சந்தானம் சாரும் கலக்கியுள்ளார். இப்படத்தில் மூன்று பாடல்கள். ‘மாயோன்…’ எனக்கு நெருக்கமான பாடல், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பாடியுள்ளார், அவருக்கு நன்றி. இந்தப்படத்தில் காமெடியைத் தாண்டி எமோஷனல் காட்சிகளிலும் சந்தானம் அசத்தியுள்ளார். இசையில் பல காட்சிகள் சவாலாக இருந்தன. மிக மகிழ்ச்சியாகவும் இருந்தது.
சுஷ்மிதா அன்புசெழியன் பேசியதாவது…
என்னை தயாரிப்பாளராக்கிய அப்பாவுக்கு நன்றி. நான் படம் பார்த்து விட்டேன். குடும்பத்தோடு என்ஜாய் செய்து பார்க்கும் படமாக இருக்கும். சந்தானம் சார் கலக்கியிருகிறார். லயா அருமையாக நடித்துள்ளார். ஒரு கலக்கலான விருந்தாக இப்படம் இருக்கும்.
தயாரிப்பாளர் அன்புசெழியன் பேசியதாவது…
சந்தானம் சாரை வைத்து ஒரு படம் செய்ய ஆசைப்பட்டேன். கொஞ்ச காலம் தயாரிப்பில் இல்லை. இந்தக்கதை வந்த போது சந்தானம் சரியாக இருப்பார் எனத் தோன்றியது. அவர் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார். என்னுடைய பார்ட்னராக சரிகமா ஆனந்த் இணைந்துள்ளார், அவருக்கு நன்றி. தம்பி ராமையா சார், நாயகி லயா, கூல் சுரேஷ் எல்லோருக்கும் வாழ்த்துகள். இமான் சார் அருமையான பாடல்கள் தந்துள்ளார். சந்தானம் சார் இந்தப்படத்திற்காக ஸ்பெஷலாக உழைத்து தந்தார், நன்றி. செல்லா இந்தப்படத்திற்காக எனக்காக வந்து உழைத்து தந்தார் அவருக்கு என் நன்றிகள். அவருடன் படம் செய்ய பேசிக்கொண்டிருக்கிறேன். அடுத்தடுத்து இன்னும் நிறைய படம் செய்யவுள்ளேன், உங்கள் ஆதரவைத் தாருங்கள். முதன் முதலாக தனது எக்ஸ் தளத்தில் இப்படத்தைப் பற்றி பதிவிட்டு எங்களுக்கு ஆதரவு தந்த உலக நாயகன் கமலஹாசன் சாருக்கு நன்றி. என் மகள் சுஷ்மிதா இப்படம் மூலம் திரைத்துறைக்கு வந்துள்ளார் அவருக்கு ஆதரவு தாருங்கள். படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி.
நடிகர் சந்தானம் பேசியதாவது…
‘இங்க நான் தான் கிங்கு’ படத்தில் ஹீரோ என்னவோ நான் தான் ஆனால் கிங்கு அன்புசெழியன் சார் தான். தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ அவர் தான். அவர் ஆபிஸுக்கு வராத ஹீரோவே இல்லை. அவரிடம் நானே காசு கேட்டுதான் போனேன், என்னை அவருக்கு பிடித்தது, வீடு வாங்க காசு கேட்டுப்போனேன், ஆனால் அப்படி செய்யாதீர்கள், படத்திற்கு அட்வான்ஸ் தருகிறேன், படம் செய்யலாம் என்றார். அவர் மனதளவில் மிக நல்ல மனிதர். என்னுடன் எப்போதும் ஜாலியாக பேசுவார். அவர் என்னிடம் இந்தப்படம் செய்யலாம் என்றார், எனக்கும் பிடித்திருந்தது என்றவுடன் உடனே செய்யலாம் என்றார். அவருடன் இணைந்து படம் செய்தது சந்தோஷம். படம் பார்க்க வருபவர்கள் சிரித்துவிட்டு போக வேண்டும் என்றார், தயாரிப்பாளராக இல்லாமல் தியேட்டர் ஓனராக இப்படத்தை எடுத்துள்ளார். சுஷ்மிதா என் படம் மூலம் தயாரிப்பாளராக வந்துள்ளார், வாழ்த்துகள். இமான் இதுவரை என் படத்தில் இல்லாத கலரில் எனக்கு மிக வித்தியாசமான இசையை தந்துள்ளார், நன்றி. இயக்குநர் ஆனந்த் அருமையாக படத்தை எடுத்துள்ளார். தம்பி ராமையா சார் மாதிரி இண்டலிஜண்ட் பார்க்க முடியாது, அவருடன் பேசும்போது பிரமிப்பாக இருக்கும். அவர் இப்படத்தில் அருமையான பாத்திரம் செய்துள்ளார். ஹீரோயின் லயா நம்ம சேலத்துப் பெண், அவரை பாலிவுட் என நினைத்தேன் நன்றாக நடித்துள்ளார். என் படத்தில் எப்போதும் இருக்கும் மாறன், சேஷு, கூல் சுரேஷ், மனோபாலா என நிறைய பேர் இதிலும் இருக்கிறார்கள். ‘கட்டா குஸ்தி’ படம் ஹிட் தந்துவிட்டு இப்படத்தில் வந்து எங்களுக்காக உழைத்து தந்த செல்லா அய்யாவு சாருக்கு நன்றிகள். 90 கிட்ஸ் 2K கிட்ஸ் லைஃப் எப்படி இருக்கும் என்பது தான் இந்தப்படம். எல்லோரும் ரசிக்கும்படியான மேஜிக்காக இப்படம் இருக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி.
தம்பி ராமையா, சேஷு, முனீஷ்காந்த், கூல் சுரேஷ், பால சரவணன், விவேக் பிரசன்னா, மாறன், சுவாமிநாதன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது.
சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். D. இமானின் இசையில் பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. கதை, திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியுள்ளார். பல்வேறு வெற்றி படங்களுக்கு இவர் எழுத்தாளராக பங்காற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு – ஓம் நாராயண், எடிட்டிங் – எம். தியாகராஜன், கலை – எம். சக்தி வெங்கட்ராஜ், ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல், பிரமாண்டமான பாடல் காட்சிகளுக்கு நடனம் அமைத்து இயக்கியுள்ளனர் கல்யாண் – பாபா பாஸ்கர்.
‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்கியுள்ளார். கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரித்துள்ளார். மே 10 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, போர் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களில் அசத்தி வருகிறார். விரைவில் அவரது நடிப்பில், மௌனகுரு சாந்தகுமார் இயக்கத்தில், ரசவாதி படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தனக்கு ஆதரவாக, தனக்கு ஊக்கமளித்துவரும் பத்திரிக்கை ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வினில்
நடிகர் அர்ஜூன் தாஸ் பேசும்பொழுது…. என்னுடைய இந்தத் திரைப்பயணத்தில் நீங்கள் எனக்கு மிகப்பெரும் உந்துதலாக இருந்துள்ளீர்கள், என் குரலைக் குறிப்பிட்டு பாராட்டி, தனித்தனியாக நான் செய்த எல்லாப்பாத்திரங்களின் நிறை குறைகளை பகிர்ந்து, எனக்கு பெரும் ஊக்கமாக இருந்துள்ளீர்கள். என் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் நீங்கள் தான் அதற்காக உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய இந்தப்பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்த அனைத்து இயக்குநர்களும் எனக்காக சிறப்பான பாத்திரங்கள் தந்துள்ளார்கள். அதற்குக் காரணமும் நீங்கள் தான் அதற்கும் நன்றி என்றார்.
மேலும் பத்திரிக்கையாளர்களுடன் உரையாடியவர், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
லோகேஷ் இயக்கும் எல்லாப்படத்திலும் நீங்கள் இருப்பீர்கள், ரஜினி சாரை வைத்து லோகேஷ் இயக்கும் புதிய படத்தில் நீங்கள் இருக்கிறீர்களா ? லியோவிலேயே நான் இல்லையே சார், லோகேஷ் எப்போதும் எனக்கு சிறந்த நண்பர் தான், அவர் அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் ஆனால் இப்போதைக்கு அப்டேட் எதுவும் இல்லை. ரஜினி சார் படத்தில் இருக்கிறேனா? என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்.
நீங்கள் முன்பு டப்பிங் செய்து கொண்டிருந்தீர்கள் ? இப்போது டப்பிங்கை தொடர்கிறீர்களா ? இப்போதைக்கு நான் வாய்ஸ் டப்பிங், எதுவும் செய்யவில்லை. நடிப்பு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதில் கவனம் செலுத்தி வருகிறேன், ஆனால் லோகேஷ் ஏதாவது காட்சிக்காக கூப்பிட்டால் மறுக்க முடியாது, கண்டிப்பாக செய்வேன்.
வில்லனாக புகழ் பெற்றீர்கள், இப்போது ஹீரோ ஆகிவிட்டீர்கள் மீண்டும் வில்லனாக கூப்பிட்டால் நடிப்பீர்களா ? இப்போதைக்கு நான் வில்லன் இல்லை. நடிப்பில் வில்லன் என இப்போதைக்கு எதுவுமே வரவில்லை. தொடர்ந்து பல படங்கள் மெயின் பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. லோகேஷ் கூப்பிட்டால் வில்லனாகத்தான் கூப்பிடுவார், அவர் கூப்பிட்டால் கண்டிப்பாக செய்வேன்.
பல நல்ல இயக்குநர்களோடு வேலை பார்த்துள்ளீர்கள், எப்படி அவர்களை தேர்ந்தெடுக்கிறீர்கள்? நானாக தேர்ந்தெடுத்து எந்த இயக்குநருடனும் வேலை பார்க்கவில்லை. வசந்தபாலன் சார் முதல், அவர்களாக கூப்பிடுகிறார்கள் நான் நடிக்கிறேன் அவ்வளவு தான். எனக்கு மிகச்சிறந்த இயக்குநர்கள் அமைந்தது என் பாக்கியம். இப்போது தான், நிறைய கதைகள் கேட்டு வருகிறேன், எனக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து எல்லோரையும் மகிழ்விப்பேன்.
ரசவாதி எப்படி வந்துள்ளது ? சாந்த குமாருடன் வேலை பார்த்தது குறித்து கூறுங்கள் ? இயக்குநர் சாந்தகுமார் உடன் வேலை பார்த்தது அட்டகாச அனுபவம். மௌனகுரு எனக்கு பிடித்த படம். அவர் கூப்பிட்ட போது சந்தோசமாக இருந்தது. கதை எனக்கு பிடித்திருந்தது. அவர் படத்தில் நடிப்பது உண்மையில் எனக்கு பெருமை. படத்தைப் பொறுத்தவரையில் ஒரு டாக்டர் ஓய்வுக்காக ஒரு இடத்திற்கு செல்கிறார், அங்கு என்ன நடக்கிறது என்பது தான் கதை. இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது. படம் பார்த்து நீங்கள் சொல்லுங்கள்.
லோகேஷிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டதாக ஒரு பேட்டியில் கூறினீர்கள், இயக்குநர் ஆகும் எண்ணம் இருக்கிறதா? கமல் சாரை அவர் நடிப்பதை நேரில் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை. விக்ரமில் நான் இருப்பது எனக்கு தெரியாது, அதனால் உதவி இயக்குநராக வேலை பார்த்தால் அவரைப் பார்க்கலாம், அதனால் தான் லோகேஷிடம் கேட்டேன். ஆனால் அவர் என்னை நடிக்க வைத்தார், கமல் சார் நடிப்பதை நேரில் பார்த்தேன். இயக்குநர் ஆகும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை.
தொடர்ந்து நெகடிவ் அல்லது ஆக்சன் கதாப்பாத்திரங்களாக செய்கிறீர்களே, ரொமான்ஸ் எப்போது ? ரசவாதி படத்தில் ரொமான்ஸ் நிறைய இருக்கிறது. நானும் ரொமான்ஸ் செய்துள்ளேன், அடுத்து மதுமிதா மேடம் படத்திலும் ரொமான்ஸ் இருக்கிறது, பார்த்து விட்டு சொல்லுங்கள்.
வில்லனாக வந்து ஹீரோவாக வளர்ந்துள்ளீர்கள் எப்படி இருக்கிறது இந்த அனுபவம் ? நான் வளர்ந்திருக்கிறேனா எனத் தெரியவில்லை. துபாயில் தியேட்டரில் தமிழ்ப்படம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு இங்கு வந்து, திரையில் நடிக்க முயற்சித்தேன். உங்கள் ஆதரவால் தான் எனக்கு வாய்ப்புகள் வருகிறது. எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்து வருகிறேன் என நினைக்கிறேன் அவ்வளவு தான். நான் பெரிதாக வளர்ந்ததாக நினைக்கவில்லை. இப்போது தான் என் பயணம் ஆரம்பித்துள்ளது. இன்னும் திரைப்பயணத்தில் நிறைய சாதிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
திரைத்துறையில் ஆரம்ப காலகட்டங்களில் கஷ்டபட்டிருக்கிறீர்களா ? நானும் நிறைய ரிஜக்சனை சந்தித்துள்ளேன். நிறைய பேர் என் வாய்ஸ் எனக்கு மைனஸ் என சொல்லியிருக்கிறார்கள், இப்போது அது ப்ளஸாக மாறியுள்ளது. இது எல்லார் வாழ்விலும் நடக்கும், திரைத்துறை அப்படித்தான். ஒவ்வொரு நாளும் திரைத்துறையில் நிறைய கற்றுக்கொண்டு வருகிறேன்.
நடிகராக இருப்பது மகிழ்ச்சியா ? இல்லை வேறு துறையில் விருப்பம் உள்ளதா? நடிகராக இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. திரைத்துறையில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது, கண்டிப்பாக இது தான் எனக்கு சந்தோசம்.
ஏன் உங்கள் படங்கள் அதிகம் வருவதில்லை ? ஒரு நேரத்தில் ஒரு படம் தான் செய்கிறேன் அது என் பழக்கம். கடந்த வருடம் நிறைய நடித்திருக்கிறேன். இந்த வருடம் நிறையப் படங்கள் தொடர்ந்து வரும்.
உங்கள் நண்பர் லோகேஷ் நடிகர் ஆகிவிட்டாரே? தொடர்ந்து நடிப்பாரா ? அந்த ஆல்பம் சாங் வரும் முன்னரே என்னிடம் காட்டினார். உண்மைய சொல்லு மச்சி, எப்படி இருக்கிறது எனக்கேட்டார். நடிப்பதில் அவர் நெர்வஸாக இருந்தார். மாஸ்டரில் நடிக்கவே அவர் நிறையத் தயங்கினார். தொடர்ந்து நடிப்பது பற்றி அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். ஆனால் அவர் நடிப்பாரா எனத் தெரியவில்லை. நடித்தால் எனக்கு மகிழ்ச்சி.
லோகேஷ் பற்றி அதிகம் பேசுகிறீர்களே ஏன்? அவரிடம் தான் இந்த என் நடிப்பு ஜர்னி ஆரம்பித்தது. கைதி தான் நான் இந்த மேடையில் இருக்கக் காரணம், அவர் எனக்கு நிறைய வாய்ப்புகள் தந்துள்ளார். அவர் எனக்கு மிகச்சிறந்த மெண்டார். எனக்கு வாய்ப்பு தரும் இயக்குநர்கள் தான் என் மெண்டார். விக்னேஷ் சாரும் என் மெண்டார் தான். லோகேஷுடன் அதிகம் வேலை செய்ததால் அவரைப் பற்றி அதிகம் சொல்கிறேன். என் திரைப்பயணம் முழுக்க அவர் இருக்கிறார் என்பது தான் காரணம்.
கைதி 2 வருகிறதா ? கைதி 2 இருக்கிறது என லோகேஷும் சொல்லியிருக்கிறார். கார்த்தி சாரும் சொல்லியிருக்கிறார். விக்ரமில் உயிருடன் வந்ததால் நான் இருப்பேன் என நினைக்கிறேன்.
என்ன மாதிரியான பாத்திரங்கள் நடிக்க ஆசை ? எனக்கு அப்படி வித்தியாசமாக எந்த ஆசையும் இல்லை. வரும் கதாப்பாத்திரங்களில் எனக்கு செட் ஆகும் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் அவ்வளவு தான்.
உங்களுடைய அடுத்தடுத்த படங்கள் பற்றி? மதுமிதா மேடம் உடன் ஒரு படம் செய்கிறேன். அதற்கடுத்து, விஷால் வெங்கட்டுடன் ஒரு படம் செய்கிறேன். இன்னும் சில படங்கள் பேச்சு வார்த்தையில் இருக்கிறது. இப்போது ரசவாதம் வெளியாகவுள்ளது. படம் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.
பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜோதிகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் இந்தி திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வை திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இயக்குநர் துஷார் ஹிர நந்தானி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், ஜோதிகா, ஆலயா எஃப், சரத் கெல்கர், ஜமீல் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரதம் மேத்தா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆனந்த் மிலிந்த், தனிஷ் பக்ஷி, சாஸெட் -பரம்பரா மற்றும் வேத் சர்மா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். பார்வை திறன் சவாலுள்ள மாற்றுத்திறனாளி தொழிலதிபரான ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை டி சீரிஸ் மற்றும் சாக் இன் சீஸ் பிலிம் புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், கிருஷ்ணகுமார் மற்றும் நிதி பார்மர் ஹிராநந்தானி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை விமான நிலையத்தில் உள்ள பிவிஆர் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது ஜோதிகா, இயக்குநர் துஷார் ஹிராநந்தானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடிகை ஜோதிகா பேசுகையில், ” ஸ்ரீகாந்த் திரைப்படம் மிகவும் இன்ஸ்பிரேஷனான ஸ்டோரி. துணிச்சலாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நானும் பங்களிப்பு செய்ததற்காக பெருமிதம் கொள்கிறேன்.
என்னுடைய திரையுலகப் பயணத்தில் இந்த திரைப்படம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீகாந்த் பொல்லாவின் கதை கேட்டதும் எனக்கு வியப்பு ஏற்பட்டது. அவரை நேரில் சந்தித்து பேசியதும், அவரது வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை கேட்ட பிறகு வாழ்க்கை பற்றிய எனது பார்வை முற்றாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக பார்வைத்திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்த என்னுடைய பார்வை மாறிவிட்டது. அவர்கள் எவ்வளவு திறமை வாய்ந்தவர்கள் என்பதையும் .. பொதுவெளியில் அவர்கள் அவர்களை எப்படி நாம் நடத்துகிறோம் என்பதையும் குறித்தும் பல வினாக்களை என்னுள் எழுப்பியது.
இந்தத் திரைப்படம் பலருக்கும் அவர்களது அகக்கண்களை திறந்து விடும் படைப்பாக இருக்கும். இந்தப் படம் வெளியான பிறகு பார்வைத்திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளை பற்றி நாம் கொண்டிருக்கும் பார்வையில் நிச்சயம் மாற்றம் ஏற்படும்.
இந்த திரைப்படத்தில் நான் ஆசிரியை வேடத்தில் நடித்திருக்கிறேன். ‘ காக்க காக்க”, ‘ராட்சசி’ அதன் பிறகு ‘ஸ்ரீகாந்த்’ எனும் இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக ஆசிரியையாக நடித்திருக்கிறேன்.
பாலிவுட் திரையுலகில் நான் நடிக்கும் மூன்றாவது இந்தி திரைப்படம் இது.
இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் இனிமையானது. அற்புதமானது. பணியாற்றுவதற்கு மொழிகள் தடையில்லை. மலையாள திரையுலகமாக இருந்தாலும்.. தமிழ் திரையுலகமாக இருந்தாலும்.. பாலிவுட் திரையுலகமாக இருந்தாலும்.. திறமையான கலைஞர்களுடன் தான் பணியாற்றியிருக்கிறேன். இந்த திரைப்படத்தை டி சிரீஸ் நிறுவனமும் , நிதி ஹிராநந்தனியும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். துஷார் ஹிராநந்தனி இயக்கியிருக்கிறார். மே பத்தாம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் துஷார் ஹிராநந்தானி பேசுகையில், ” ஸ்ரீகாந்த் பொல்லாவின் சுயசரிதையை திரைப்படமாக உருவாக்குவதற்காக ஹைதராபாத்தில் அவரை சந்தித்தேன். மூன்று நாட்கள் அவருடன் செலவழித்தேன். நிறைய விசயங்கள் குறித்து விவாதித்தோம். அதன் போது அவர் திரைப்படத்தை உருவாக்குவதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். ” என்றார்.
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் சாகர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் பாபின், இணை தயாரிப்பாளர் தீபக், இயக்குநர் இளன், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ், நாயகன் கவின், நடிகைகள் அதிதி பொஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன், நடிகர்கள் ‘ராஜா ராணி’ பாண்டியன், தீப்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் இளன் பேசுகையில், ‘ எனக்கு’ மிகவும் எமோஷனலான தருணம் இது. நம் எல்லோரிடத்திலும் கனவு ஒன்று இருக்கும். ஒரு வீடு வாங்க வேண்டும்… ஒரு கார் வாங்க வேண்டும்… கடை ஒன்றை திறந்து வியாபாரம் செய்ய வேண்டும்.. என ஏதாவது ஒரு கனவு இருக்கும் தானே.. அந்த கனவை நோக்கி பயணிக்கிற அனைவருமே ஸ்டார் தான். இதைத்தான் இந்த படம் சொல்கிறது. அந்தப் பயணத்தில் நாம் யாரையும் காயப்படுத்தி விடக் கூடாது. அன்புடன்.. அந்த கனவை விட்டுக் கொடுக்காமல்… பிடிவாதமான மனதுடன்.. அந்தப் பயணம் இருந்து கொண்டே இருக்கும் அல்லவா..! அதைத்தான் இந்த படம் பேசுகிறது.
1980 களில் ஒரு பையன்.. அவனுக்கு 20 வயது இருக்கும். பெரிய நடிகராக வேண்டும் என்ற கனவுடன் மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார். எண்பது 90 ஆகிறது. 2000 ஆகிறது. 2010யும் கடக்கிறது. கடந்து போகிறது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேல் இந்த பயணம் தொடர்கிறது. இப்போது அவருக்கு 55 வயதாகிறது. இந்த வயதில் அவருக்கு ‘ராஜா ராணி’ எனும் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. பல வருஷமாக தேக்கி வைத்திருந்த அவருடைய கனவு நனவாகிறது. திரையரங்கில் அவருடைய நடிப்பிற்கு ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். அவர்தான் என்னுடைய அப்பா ‘ராஜா ராணி’ பாண்டியன்.
இந்தப் படத்தை அவருக்காக அர்ப்பணிப்பதைத் தான் நான் விரும்புகிறேன். இந்தப் படத்திற்கு இன்ஸ்பிரேஷன்.. என்னுடைய அப்பா தான். அவருடைய இந்த பயணத்தில் ஏராளமான அனுபவங்களை சந்தித்திருப்பார். அவமானங்களை எதிர்கொண்டிருப்பார்.
ஒரு முறை என் அப்பா என்னிடம், ‘இந்த முகத்தை வைத்துக்கொண்டு எப்படி நடிக்க வந்தாய்?’ என ஒருவர் கேட்டுவிட்டதாக வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார். அந்த நபர் கேட்ட அந்த கேள்விதான் என் அப்பாவிற்கு மிகப்பெரிய மோட்டிவேஷனாக இருந்திருக்கிறது. ஒருத்தர் முகத்துக்கு நேராக இப்படி கேட்டுவிட்டாரே..! என்ற ஒரே காரணத்திற்காக, எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற உறுதி அவர் மனதில் ஏற்பட்டு விட்டது. அந்த மனவுறுதியை விவரிப்பதுதான் இந்த ஸ்டார் திரைப்படம்.
ஒரு கனவை நாம் எப்போதும் தனியாக வென்று விட முடியாது. அதற்கு ஆதரவளிக்க நிறைய பேர் தேவை. உதவி செய்வதற்கும் ஆட்கள் தேவை. அதைவிட மற்றவர்களின் ஆசியும் முக்கியம். இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் கவின், ‘காசு இல்ல சார்..!’ என டயலாக் பேசுவார். அது எங்க அப்பா வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவம். அதன் போது எங்க அம்மா தான் அவருக்கு ஆதரவாக இருந்து அவரையும் பார்த்துக் கொண்டார். எங்களையும் பார்த்துக் கொண்டார். எங்களை பொறுத்தவரை அவரும் ஒரு ஸ்டார் தான்.
அடிப்படையில் நம்மை சுற்றி ஏராளமான ஸ்டார்கள் இருக்கிறார்கள். இவர்களை நினைவுபடுத்தும் வகையில் தான் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது.
இதனால் இந்த திரைப்படத்திற்கு அனைவரும் அவர்கள் குடும்பத்தினருடனும், காதலருடனும், நண்பர்களுடனும், உறவுகளுடனும் வருகை தந்து ரசிக்கும் ஒரு அழகான படமாக ‘ஸ்டார்’ இருக்கும் என நான் நம்புகிறேன்.
தயாரிப்பாளர் சாகரிடம் இந்த கதையை சொல்லிவிட்டு இரண்டு நாட்களில் பதிலை சொல்லி விடுங்கள் என நிபந்தனை விதித்தேன். அவர் ஒரே நாளில் இந்த படத்தை தயாரிக்கிறேன் என பதிலளித்தார். அந்தத் தருணத்தில் அவர் எடுத்த விரைவான முடிவு தான் இன்று வரை எனக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு தருணத்திலும் அவர் எடுக்கும் வேகமான முடிவு இப்படத்தை நேர்த்தியாக உருவாக்குவதற்கும் உதவி இருக்கிறது.
அவர் மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்காக பொறுப்பேற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் தங்களது பணியை முழு அர்ப்பணிப்புடன் செய்து ஒத்துழைப்பு வழங்கினர். அனைவரும் தங்களின் மனமார்ந்த பங்களிப்பை இப்படத்திற்காக அளித்துள்ளனர். இதற்காக இந்த தருணத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படத்தை நான் ஒரு அழகான காதல் கதையாக தான் பார்க்கிறேன். லவ் என்றதும் ஒரு அப்பாவின் அன்பு… ஒரு அம்மாவின் அன்பு… ஒரு நண்பனின் அன்பு… ஒரு மனைவியின் அன்பு… ஒரு காதலியின் அன்பு… என ஏகப்பட்ட அன்பு இப்படத்தில் இருக்கிறது.
இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக யுவன் தற்போது துபாயில் இருக்கிறார். நான் என்ன கேட்டாலும் எனக்காக அவர் செய்வார். அவர் என்ன கேட்டாலும் அவருக்காக நான் செய்வேன். அந்த அளவிற்கு எங்களுக்குள் நட்பு இருக்கிறது. எனக்கு அவர் ஒரு சகோதரர்.. நலம் விரும்பி.. நண்பன்.. ஆன்மீக வழிகாட்டி.. இப்படி அவரைப் பற்றி பட்டியலிட்டு கொண்டே செல்லலாம். இந்த உலகத்தில் எனக்குப் பிடித்தமானவர்களின் பட்டியலில் யுவன் முதலிடத்தில் இருக்கிறார். அவரைப் போல ஒருவரை என் வாழ்க்கையில் சந்தித்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன். அவர் எப்போதும் அன்பாகவும், இனிமையாகவும், எளிமையாகவும் பழகக்கூடியவர்.
இவரைத் தொடர்ந்து கவின். ஸ்டார் ஆகி இருக்கும் கவினை, ‘டாடா’ படத்திற்கு பிறகு தான் அவரை சந்திக்கிறேன். இப்படத்தின் கதையை அவரிடம் சொல்லும் போது, முழு கதையும் கேட்டுவிட்டு… ‘இந்த கதையில் வரும் பல சம்பவங்கள் என் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது’ என்றார். படத்தின் கதை தான் கவினை நாயகனாக தேர்ந்தெடுத்திருக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் கவின் நடிக்கும் போது எங்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருப்பார். ஒரு நடிகராக என்னை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பட குழுவினரையும் தன் நேர்த்தியான நடிப்பால் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருப்பார். இதற்கு சாட்சி படத்தின் முன்னோட்டம். இதற்காக கவினுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு சிறிய அளவிலான எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகள் இருக்கிறது. அதை படம் பார்த்த ரசிகர்கள்.. மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அன்பாக வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார் .
தயாரிப்பாளர் சாகர் பேசுகையில், ” இயக்குநர் இளன், ‘ஸ்டார்’ படத்தின் கதையை சொல்வதற்கு முன்பே அவருடன் தொடர்பில் இருந்தேன். அப்போது காணொளி மூலமாக ஒரு கதையை என்னிடம் சொல்லி இருக்கிறார். அவர் கதை சொல்லும் விதம்.. அதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளும் பாணி.. இதெல்லாம் எனக்குப் பிடித்திருந்தது. இது தொடர்பாக எஸ்கியுடிவ் ப்ரொடியூசர் வினோத்திடம் இளனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனச் சொன்னேன்.
சிறிது நாள் கழித்து என்னை சந்தித்து ஸ்டார் திரைப்படத்தை உருவாக்கலாமா? என கேட்டார். அவர் இந்த படத்தின் கதையை முழுவதுமாக விவரித்தார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. யார் ஹீரோ? என கேட்டேன். அவர் கவின் என்று சொன்னார். அப்போது ‘டாடா’ படம் வெளியாகி வெற்றி பெற்றிருந்த தருணம். ‘டாடா’ படத்தை பார்க்கும் போதே தமிழ் திரையுலகத்திற்கு நம்பிக்கையான ஒரு நடிகர் கிடைத்திருக்கிறார் என மகிழ்ச்சி அடைந்தேன். இளனும் கவின்தான் நாயகன் என்று சொன்னவுடன் நான் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டேன்.
அவர் சொன்னது போல் எனக்கு இரண்டு நாள் தான் டைம் கொடுத்தார். அவருக்கு வேறு திசைகளில் இருந்து அழுத்தம் இருந்ததை உணர முடிந்தது. அப்போது இந்த படத்தின் கதை மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இளன்+ கவின் காம்பினேஷன் மீதும் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
அண்மையில் இந்தத் திரைப்படத்தை பார்த்தேன். கதையை உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறார். எல்லா பிரிவினரும் அன்பாக ஒன்றிணைந்து உருவாக்கிய படைப்பு இந்த ஸ்டார். இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
பட தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ் பேசுகையில், ” லவ் டுடே படத்தின் முன்னோட்டத்தை ஒரு வாரத்தில் நிறைவு செய்து விட்டேன். ஆனால் இந்தப் படத்தின் முன்னோட்டத்திற்கு இருபது நாள் எடுத்துக் கொண்டேன். இளனின் திரைக்கதையை முழுவதுமாக படித்து விட்டேன். படத்தையும் பார்த்து விட்டேன். கவினின் அற்புதமான நடிப்பை பார்த்து வியந்து விட்டேன். இந்த கூட்டணியுடன் பணியாற்றும் போது எனக்கு பொறுப்புணர்வு அதிகம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். முன்னோட்டத்தை பத்து நாட்களில் முடித்து விட்டேன். இருந்தாலும் அதன் மீது எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இளனுக்கு போன் செய்து, ‘எனக்கு இன்னும் ஒரு ஐந்து அல்லது ஆறு நாட்கள் கொடுங்கள் எனக்கு முழு திருப்தி இல்லை’ என்று சொன்னேன். என் மேல் எனக்கு நம்பிக்கை இல்லாமல் போனதுக்கு காரணம் இவர்கள்தான். அந்த அளவிற்கு படத்தின் கதை, திரைக்கதை, நடிப்பு என அனைத்து அம்சங்களும் நேர்த்தியாக இருந்தது.
படத்தின் முன்னோட்டத்தை நிறைவு செய்தவுடன் எனக்கு ஒரு விசயம் தோன்றியது. திறமையான சமையல் கலை நிபுணராக இருந்தாலும்.. நல்ல இன்கிரிடியன்ஸ் இருந்தால்தான் நல்ல உணவை தயாரிக்க முடியும். அதுபோல் இந்த படத்தின் முன்னோட்டம் பேசப்படுவதற்கு இவர்கள் வழங்கிய கன்டென்ட் தான் காரணம். இதற்காக இயக்குநர் இளன், நடிகர் கவின் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகை அதிதி பொஹங்கர் பேசுகையில், ” இயக்குநர் இளன் திறமையானவர். வசனத்தையும்… வசனத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதையும் .. அதனுடன் உணர்வுபூர்வமாக எப்படி நடிக்க வேண்டியதையும் தெளிவாக குறிப்பிடுவார். இந்தப் படத்தில் சுரபி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் மேடை நாடகத்திலிருந்து வந்திருக்கிறேன். ஒத்திகை முக்கியம் என்பதை நன்கறிவேன். படப்பிடிப்பு தளத்தில் பட குழுவினருடன் பழகிய தருணங்கள் மறக்க இயலாதவை. படக்குழுவினர் அனைவரும் நட்புடன் பழகினர். கவின் ஒரு சக நடிகராக இருந்தாலும்.. மிகத்திறமையானவர். மே பத்தாம் தேதி ஸ்டார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில், ” இன்று எனக்கு மிகவும் ஸ்பெஷலான நாள். நான் நடித்த முதல் திரைப்படம் வெளியாகிறது. ஓராண்டிற்கு முன் யாராவது என்னை சந்தித்து, ‘நீங்கள் தரமான படத்தில் முதன்மையான வேடத்தில் நடிப்பீர்கள்’ என்று சொன்னால் ..நான் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் அது இன்று சாத்தியமாகி இருக்கிறது. இதற்காக என்னுடைய பெற்றோருக்கும், வாய்ப்பு அளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கும், ஸ்டார் பட குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்தின் நடித்தவுடன் எனக்கு ஓரளவு மன திருப்தி ஏற்பட்டிருக்கிறது. நான் இயக்குநர் இளனின் வழிகாட்டுதலின்படி தான் நடிகை ஆகியிருக்கிறேன். இந்தப் படம் வெளியான பிறகு கவினுக்கு ரசிகர்களின் கூட்டம் அதிகரிக்கும். அவர் பெரிய ஸ்டாராகி விடுவார்.
படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் போதெல்லாம் படக்குழுவினரிடம் இருக்கும் பாசிட்டிவிட்டி… என்னை வியப்படையச் செய்தது. இதனால்தான் படங்களை உணர்வு பூர்வமாக உருவாக்க முடிகிறதோ..! என்றும் எண்ணி இருக்கிறேன். இந்தப் படத்திலும் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பை வழங்கி இருக்கின்றனர். அதனால் இந்த படம் நிச்சயமாக பெரிய வெற்றியைப் பெறும். ” என்றார்.
இயக்குநரின் தந்தையும், நடிகருமான ‘ராஜா ராணி’ பாண்டியன் பேசுகையில், ” என்னை திரைத்துறைக்கு கைபிடித்து அழைத்து வந்து ஸ்டில்ஸ் ரவிக்கு முதல் வணக்கம். இளன் – ‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை எண்ணற்றோன் கொல் எனும் சொல்’ எனும் வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப என்னை உயர்த்தி விட்டார். இளன் சிறிய வயதிலேயே பேன்சி டிரஸ் காம்பெடிஷனில் கலந்து கொள்வான். அதற்கு நான் அவனை அழைத்துக் கொண்டு செல்வேன். நடிகை நளினி இதை பார்த்து என்னிடம், ‘உன் ஆசை எல்லாம் உன் மகன் மூலமாக தீர்த்துக் கொள்கிறாயா? ‘ என கிண்டலுடன் கேட்பார். அவன் வீரசிவாஜி வேடம் அடைந்திருந்த போது, தலை வலிக்கிறது என்றான். நான் அவருடைய கிரீடத்தை தாங்கிப் பிடிக்க.. உடனே, ‘மேடையில் நீங்கள் வந்து தாங்கி பிடிப்பீர்களா?’ என கேட்டுவிட்டு கையை எடுத்து விட சொன்னார். அந்த அளவிற்கு அவனை நான் தயார்படுத்திருந்தேன். அவனும் தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தான்.
நடிப்பை தொடர்ந்தாலும் கல்வி விசயத்தில் நான் உறுதி காட்டியதால் அவன் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் முடித்த பிறகு தான் என்னை வைத்து குறும்படம் ஒன்றை இயக்கினான்.
படிப்பை முடித்த பிறகு தான் இந்தத் துறையில் வரவேண்டும் என நிபந்தனை விதித்திருந்தேன். அதனையும் ஏற்றுக் கொண்டான். அத்துடன் பட்டதாரியான பிறகு வேலை தேடுவதற்கு நான்கு ஆண்டுகள் ஆகலாம். அதன் போது எனக்கு சோறு போடுவீர்களா! என கேட்டார். போடுவோம் என்றேன். அது போல் நினைத்து எனக்கு இரண்டு ஆண்டுகள் சோறு போடுங்கள். நான் இயக்குநராகி காட்டுகிறேன் என்றார். ஆனால் ஒரே வருடத்தில் இயக்குநராகி விட்டார்.
இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால்.. பெற்றோர்கள் பிள்ளைகளின் விருப்பத்தை உணர்ந்து அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அந்த வகையில் நான் அவருக்கு வாய்ப்பு அளித்தேன் அதனை அவர் பயன்படுத்தி இயக்குநராகிவிட்டார். இதை மறுத்து என்னுடைய கருத்தை மட்டுமே திணித்துக் கொண்டிருந்தால்.. அவருடைய வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கும்.
எல்லோரும் சினிமாவை நோக்கி வருகிறார்கள். பலரும் தொழிலதிபராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். சிலர் டாக்டராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதில் இலக்கை நோக்கி பயணிப்பவர் பலர். ஆனால் சென்றடைபவர் சிலர்தான். கடைசி வரை அந்த நோக்கத்தில் இருந்து விலகாமல் பயணிப்பவர்கள் தான் சென்றடைகிறார்கள். என்னுடைய மகன் இந்த துறையில் இயக்குநராக வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி தான்.
நான் இன்று இந்த நிலைமையில் இருப்பதற்கும் ஸ்டில்ஸ் ரவியின் தொழில் பக்தி தான் காரணம். அவர் ஒவ்வொரு நிமிடமும் தொழிலில் அக்கறை காட்டுபவர். அவரிடம் உதவியாளராக பணியாற்றிய போதும் நடிக்க வேண்டும் என்று என்னுள் இருந்த ஆர்வத்தை கைவிடவில்லை. இதனால் அவரிடம் பலமுறை திட்டு வாங்கியிருக்கிறேன். பிறகு அவரை சமாதானப்படுத்தி அவரிடம் தொடர்ந்து பணியாற்றி இருக்கிறேன்.
‘ராஜா ராணி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதும் பல நெருக்கடிகளை எதிர் கொண்டேன். ஆனால் நல்ல கதாபாத்திரம் என்பதால் அனைத்தையும் துறந்து விட்டு, அதில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தேன். இந்தப் படத்தில் நடித்ததற்காக சம்பளத்தை வாங்கிய போது.. காசாளர் நம்பிக்கையுடன் நீங்கள் நல்லா வருவீர்கள.! என்று சொன்னார். இந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில் நான் கலந்து கொண்டேன். அந்த விழாவில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த யூகி சேது தான், ‘பந்தா’ பாண்டியாக இருந்த என்னை என்னை ‘ராஜா ராணி’ பாண்டியன் என மாற்றினார். இதற்காக யூகி சேதுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒருவர் செய்த உதவியை நன்றி மறக்காமல் காலம் முழுதும் நினைத்துக் கொண்டே இருந்தால் நாம் முன்னேறி விடுவோம். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும், வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி.” என்றார்.
நடிகர் கவின் பேசுகையில், ” டாடாவிற்கு பிறகு ஸ்டார். இயக்குநர் இளன் கதை சொல்ல வரும்போது அவருடன் எதனையும் எடுத்துக் கொண்டு வரவில்லை. பொதுவாக கதை சொல்ல வரும் இயக்குநர்கள் தங்களது கைகளில் லேப்டாப்… ஒன்லைன் ஆர்டர்.. ஸ்கிரிப்ட் புக்.. என ஏதாவது ஒன்றை கையில் வைத்திருப்பார்கள். மூன்று மணி நேரம் பொறுமையாக.. விரிவாக கதையை சொன்னார். அவர் இதயத்தில் இருந்து கதையை சொல்கிறார் என்று கதையை கேட்டு முடிந்த பிறகு தான் தெரிந்தது. அவர் சொன்ன கதையில் ஜீவன் இயல்பாகவே இருந்தது. பெரிதாக எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன்.
படத்தின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை.. என்னை தேடி வந்து கதை சொன்ன பிறகு வைத்த நம்பிக்கை.. என அனைத்தையும் காப்பாற்றி இருக்கிறேன் என நினைக்கிறேன்.
படத்தின் இணை தயாரிப்பாளர் தீபக் வெளிநாட்டில் தான் இருப்பார். ஆனால் படப்பிடிப்பு பணிகளை நேர்த்தியாக அங்கிருந்தே ஒருங்கிணைத்து விடுவார்.
இந்தப் படத்தின் கதையை கேட்டு முடித்தவுடன் மிகவும் பொறுமை தேவை என்பதை உணர்ந்தேன். படைப்பும் பெரிது. அதற்கான உழைப்பும் நேரமும் அதிகம். அனைவரும் இதனைப் புரிந்து கொண்டு பொறுமையாக இருந்து பணியாற்றியதற்காக இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் விக்ரம் பிரபுவுடன் இணைந்து ‘ஷத்ரியன்’ என்றொரு படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தில் யுவன் இசையில் எனக்கொரு பாடல் காட்சியும் இருந்தது. அது படமாக்கப்பட்டது. பிறகு படத்தொகுப்பில் நீக்கப்பட்டது. நான் நடித்த முதல் படம். அதில் பாடல் காட்சி நீக்கப்பட்டதால்.. மனதில் வலி இருந்தது. யுவனை நேரில் சந்திக்கும் போது இதைப்பற்றி விவரித்தேன்.
பொதுவாக ஆறுதலுக்காக சொல்வார்கள் அல்லவா… ‘இன்று நடக்கவில்லை என்றால், நாளை இதைவிட பெரிதாக நடக்கும் என்று’… அதைப் பற்றிய தவறான புரிதல் எனக்குள் இருந்தது. ஆனால் அந்த வார்த்தைகள் எல்லாம் உண்மைதான் என்பது இப்படத்தில் தெரிந்து கொண்டேன். யுவன் சங்கர் ராஜா இசை என்றவுடன் என்னுடைய ஆசையும், கனவும் நிறைவேறிவிட்டது. இந்த படத்திற்காகவே யுவன் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். அதை நீங்கள் முன்னோட்டத்திலேயே பார்த்து ரசித்திருக்கலாம். படம் பார்க்கும்போதும் அவருடைய உழைப்பு உங்களுக்கு தெரிய வரும் என நினைக்கிறேன்.
எழில் அரசு தான் ஒளிப்பதிவு என்றவுடன்.. எனக்கு முழு நம்பிக்கை வந்து விட்டது. ஏனென்றால் ‘டாடா’ படத்திற்கு அவர்தான் ஒளிப்பதிவாளர்.
படத்தின் கதை யதார்த்தமாக இருக்கும். அதில் இடம்பெறும் சின்ன சின்ன சண்டை காட்சிகளும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக சண்டை பயிற்சி இயக்குநர் விக்கி மாஸ்டர் கடினமாக உழைத்திருக்கிறார்.
எனக்கு டான்ஸ் மாஸ்டர் என்றால் பயம் தான். எனக்கு நடிப்பின் மீது இருக்கும் நம்பிக்கை… நடனத்தின் மீது இல்லை. நிறைய ஒத்திகையை பார்ப்பேன். இந்தப் படத்தில் மூன்று டான்ஸ் மாஸ்டர்களும் எனக்காக பொறுமையுடன் சொல்லிக் கொடுத்து நடனமாட வைத்தார்கள்.
லால் மற்றும் கீதா கைலாசம் இருவரும் நடித்திருக்கும் காட்சிகள் உயிரோட்டமாக இருக்கும். அதில் அவர்களின் அனுபவிக்க நடிப்பு மேலும் யதார்த்தமாகவும், அழகாகவும் இருக்கும். இது ரசிகர்களிடமும் சரியாக பிரதிபலிக்கும் என நம்புகிறேன்.
படத்தில் நடித்த சக நடிகைகளான பிரீத்தி மற்றும் அதிதிக்கும் நன்றி. உடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் நடித்த அனைவரும் திரையுலகத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. ஏனெனில் நல்ல கன்டென்ட் இருந்தால் அந்தப் படத்திற்கு நீங்கள் அபரிமிதமான ஆதரவை தருவீர்கள். இதற்கு ‘டாடா’ உட்பட பல படங்களை உதாரணமாக சொல்லலாம்.
இவற்றையெல்லாம் கடந்து ஒரே ஒரு சிறிய விசயத்தை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ‘சினிமாவை வைத்து சினிமா எடுத்தால் ஒடாது’ என பொதுவாக சொல்வார்கள். இது எந்த அளவிற்கு உண்மை என எனக்குத் தெரியவில்லை. படம் நன்றாக இருந்தால் ஓடும். ஓடியிருக்கிறது. ஆனால் இது போன்ற விசயம் எப்படி உருவாகிறது என தெரியவில்லை. ஒருவேளை ஒட்டுமொத்த சதவீதத்தின் அடிப்படையில் சொல்லி இருக்கலாம் என நினைக்கிறேன்.
இந்தப் படத்திற்கும் அது நடந்தது. தயாரிப்பாளர் சாகரிடம் கதை செல்வதற்கு முன் சிலர் இந்த விசயத்தை சொன்னார்கள். அதுவரைக்கும் நான் மிகவும் நம்பிக்கையாக தான் இருந்தேன். தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகரும் கதையைக் கேட்டு விட்டு .. இது போன்ற கருத்தை சொல்லி விடுவாரோ..! என பயந்தேன். ஆனால் இந்த படத்தை தயாரிக்க ஒரே நாளில் அவர் ஒப்புக்கொண்டவுடன் எனக்கு இருந்த பயம் விலகி, நம்பிக்கை அதிகரித்து விட்டது. கலையை கலையாக பார்க்கிற.. அதை மிகவும் நேசிக்கிற.. பட குழு மீது தயாரிப்பாளர் நம்பிக்கை வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கை தான் இந்த படத்தை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது என நினைக்கிறேன். அந்த விசயங்களை எல்லாம் கடந்து இந்த படைப்பின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைதான் வெற்றியை தரும் என நம்புகிறேன்.
ரசிகர்கள் மீதும் பெரும் நம்பிக்கை இருக்கிறது. தயாரிப்பாளர்களின் முதலீட்டிற்கும், ரசிகர்களின் முதலீட்டிற்கும் நியாயமாக உழைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய குரு எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். இதற்காகவே ஒட்டுமொத்த பட குழுவும் நம்பிக்கையுடன் பணியாற்றியிருக்கிறது.
இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல முறையில் ஓடி.. சினிமாவைப் பற்றி சினிமா எடுத்தால் ஓடும் என்கிற பட்டியலில் இந்த திரைப்படம் இடம் பெறும். இதை நான் ஆத்மார்த்தமாக நம்புகிறேன். ” என்றார்
‘Golden studios’ சார்பில் தயாரிப்பாளர் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. மாறுபட்ட களத்தில் பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி சமூக அக்கறையுடன், கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் சாய் தன்ஷிகா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ருத்வீர் வதன், மைம் கோபி, ரித்விகா, இந்திரஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, திரைப்பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர் கே ராஜன், இயக்குநர் ஆர் வி உதயகுமார், யூகி சேது பாடலாசிரியர் சினேகன், ரோபோ சங்கர், நடிகர் சந்தோஷ் பிரதாப் உட்பட பல திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
தயாரிப்பாளர் கோமதி பேசியதாவது… இந்த விழாவிற்கு எங்களை வாழ்த்த வந்திருக்கும் ஆளுமைகள் அனைவருக்கும் நன்றிகள். இது என் முதல் படம். எனக்கு மட்டுமல்ல, ஹீரோ, மியூசிக் டைரக்டர் என எல்லோருக்கும் இது முதல் படம். அனைவரும் கடுமையாக உழைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். உங்கள் ஆதரவைத் தர வேண்டும் நன்றி.
நடிகர், இயக்குநர் யூகி சேது பேசியதாவது… நான் ஒரு படம் செய்துள்ளேன் அப்படத்தின் எல்லா பாடலுக்கும் ராதிகா தான் டான்ஸ் மாஸ்டர். இந்தப்படத்திற்குச் சரியான தலைப்பு பிடித்திருக்கிறார்கள். எல்லா மொழிக்கும் பொருந்துகிற மாதிரியான தலைப்பு. ராதிகா மாஸ்டரிடம் ஒரு மறைமுக திறமை இருக்கிறது. எந்த நடிகரும் அவரை வணங்கித் தான் ஷாட்டுக்கு போகிறார்கள், இயக்குநருக்குக் கூட அந்த மரியாதை இல்லை. ஒரு தலைமைப்பண்பு இயல்பிலேயே அவருக்கு வந்துவிடுகிறது. அதிலும் இப்படத்தில் அவர் மகன் தீபக்கை இசை அமைப்பாளராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள். 2024 சினிமாவுக்கு மிகக் கடினமான காலம். போட்டிகள் மிகப் பெரிதாக உள்ளது. உலகளவில் எடுக்கப்படும் சினிமாக்களில் 10 சதவீதம் தான் வெற்றி பெறுகிறது. உலகத்தில் படமெடுக்க மிகவும் கடினமான நாடு இந்தியா அதிலும் தமிழ்நாடு இன்னும் கடினமானதாக இருக்கிறது. இன்டர்வெல் விடும் பழக்கம் உலகிலேயே இங்கு மட்டும் தான் இருக்கிறது. ராதிகா அதையெல்லாம் எதிர்கொண்டு சாதித்துள்ளார். சிறிய படங்கள் சின்ன நட்டம், பெரிய படங்கள் ஏதாவது ஒன்று செய்து சமாளித்து விடுவார்கள், ஆனால் மிடில்கிளாஸ் மாதிரி மீடியம் பட்ஜெட் படங்கள் மாட்டிக்கொள்கிறது. அதைத்தாண்டி படமெடுத்துள்ளார் ராதிகா. டான்ஸ் மாஸ்டர் சாந்தி, ராதிகா இருவரையும் 25 வருடங்களாக தெரியும். மிகத்திறமையானவர்கள் இவர்கள் கண்டிப்பாக இன்னும் பெரிதாக ஜெயிக்க வேண்டும். தயாரிப்பாளர் கோமதி, என் அம்மா பெயர் அவருக்கும் என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது… வாழ்த்த வந்துள்ள அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள். இது என் குடும்பத்துப் படம். ராதிகா என் உயிர் நண்பனின் மகள். அவரை குழந்தையாகப் பார்த்திருக்கிறேன். இவர் வளர்ந்து பெரிய பெரிய ஹீரோக்களை ஆட வைப்பார் என நினைக்கவில்லை. மிகப்பெரிய உழைப்பாளி. அந்த திறமையில் தான் எழுத்து இயக்கத்தையும் செய்துள்ளார். டிரெய்லர் பார்த்தேன், எந்த குறையும் இல்லாமல் மிக நன்றாக உள்ளது. வெற்றி பெறுவதற்கான அறிகுறிகள் இருக்கிறது. தன்ஷிகா நன்றாக நடித்துள்ளார். படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும். இன்று சினிமா இருக்கும் நிலையில், ஒரு படத்தை வெளியீடு வரை இவர்கள் கொண்டு வந்ததே மிகப்பெரிய சாதனை. இந்தப்படம் வெற்றி பெற்றால், இன்னும் பல சிறு முதலீட்டுப் படங்கள் வரும். அதற்காகவே இப்படம் வெற்றி பெற வேண்டும். இசையமைப்பாளர் தீபக் பெரிய அளவில் வெற்றிபெற வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இயக்குநர் சங்க தலைவர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது… படத்தில் எல்லாமே மிக நன்றாக உள்ளது. ஒரு கிளாஸ் இயக்குநர் உருவாக்கியது போல மிக நன்றாக வந்துள்ளது. ராதிகா மிகவும் சிம்பிள், நல்ல திறமைசாலி. இப்ப சினிமா டிரெண்ட் மாறியிருக்கு. இயக்குநர்கள் நடிக்கிறார்கள், டான்ஸ் மாஸ்டர், நடிகர்கள் இயக்குகிறார்கள், ஆனால் எல்லோரையும் வரவேற்பது தான் சினிமா. மேக்கிங் ஸ்டைல் தெரியாமலே இப்போது படம் எடுக்கிறார்கள் அது சில நேரம் ஹிட் ஆவதால் அதை சரி என நான் சொல்ல முடியாது. எந்த இடத்தில் எந்த ஷாட் வைக்க வேணும் எங்கு இண்டர்வெல் விட வேண்டும் என்பதை உதவி இயக்குநர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இப்போது போதைப்பொருள் தான் டிரெண்ட். அதை வைத்து நாம் சம்பாதிக்கிறோம். பெரிய ஹிரோக்கள் இப்போது கதையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை காம்பினேசன் சரியாக அமைந்தால் போதும் என நினைக்கிறார்கள். சிவாஜி சார் காலத்தில் இப்படியா இருந்தது ?. எல்லா புராணங்களையும் அவர் வழியில் தான் பார்த்திருக்கிறோம் அது தான் டிரெண்ட். ராதிகா உன்னை எல்லாரும் குழப்புவார்கள். அதைப் பற்றி நினைக்காதீர்கள் இன்றைய காலத்திற்குத் தேவையான கதையை எடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள். ருத்விக் மிகக் கட்டுக்கோப்பான உடற்கட்டுடன் இருக்கிறார் அவரை நான் ஹீரோவாக்க நினைத்தேன் அதற்குள் ஹீரோவாகி விட்டார். வாழ்த்துக்கள். தன்ஷிகா நடிப்பு பிரமாதமாக உள்ளது. நல்ல ஆக்சன், கிளாமர் என எல்லாம் அவருக்குச் சிறப்பாக வருகிறது. ராதிகா மிகவும் திறமையாகப் படத்தை மேக்கிங் செய்துள்ளார். தயாரிப்பாளர் கோமதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், தம்பி தீபக் பெரிய இசையமைப்பாளராக வாழ்த்துக்கள். அவர் அப்பா என் படங்களுக்கு வயலின் வாசித்துள்ளார். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது… இத்திரைப்படத்தில் என் பெண்ணுக்கு நல்ல வாய்ப்பு வழங்கிய, ராதிகா மாஸ்டருக்கு நன்றி. ராதிகா மாஸ்டரின் திறமைக்கு இனி ஃபுரூஃபாக இந்தப்படம் இருக்கும், வாழ்த்துக்கள். பெண்களை ஆண்கள் தடுக்கிறார்கள் எனச் சொன்னார்கள், பெண்களுக்கு வாய்ப்பு தந்து அழகு பார்ப்பது ஆண்கள் தான் என்பதை இங்கு சொல்லிக்கொள்கிறேன். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.
பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது.. இந்த மேடையை மிக உணர்வுப்பூர்வமான மேடையாகப் பார்க்கிறேன். பேசுபவர்கள் அனைவரும் முழு மனதோடு வாழ்த்திப் பேசுகிறார்கள் அதற்குக் காரணம் ராதிகா மாஸ்டர் தான். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் அன்பை மட்டுமே பரப்பியிருக்கிறார். அந்த அன்பு தான் இங்கு பிரதிபலிக்கிறது. பெண்களின் ஆசை நிறைவேறத் துணையாய் நிற்பது தான் சிறந்த ஆணின் பண்பு ஆகும். அது போல் தான் ராதிகா மாஸ்டரின் கணவர் இருக்கிறார். ராதிகா மாண்டரின் போராட்டம் எனக்குத் தெரியும் அவரின் விடாமுயற்சி தான் அவரை இன்று இயக்குநராக்கியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு எனும் களத்தில் இந்தப்படம் அமைந்துள்ளது. ராதிகா மாஸ்டர் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நடிகர் மைம் கோபி பேசியதாவது… ராதிகாவை நான் என் தங்கையாக மட்டுமே பார்க்கிறேன். நிறையப்படங்களில் நான் வேலை பார்த்துள்ளேன் அவ்வளவு அன்பாக பழகுவார். என்னையும் ஆட வைத்துள்ளார் எனக்கே பிடிக்கவில்லை ஆனாலும் ஆட வைத்துள்ளார். எனக்குக் கதை தெரியாது எதுவுமே தெரியாது அவருக்காக மட்டுமே, அவர் சொன்னதை அப்படியே செய்தேன். அவர் இன்னும் எத்தனை படம் எடுத்தாலும் நடிப்பேன். ராதிகா வெற்றி பெற வாழ்த்துக்கள். தம்பி தீபக்கிற்கு என் வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது… ரொம்ப சந்தோஷமாக உள்ளது. ராதிகா மாஸ்டரின் முதல் பைலட்டில் நான் தான் நடித்தேன். அப்போதிலிருந்து அவரைத் தெரியும். நிறையப் போராடி இப்படத்தைக் கொண்டு வந்துள்ளார். இங்குள்ள அனைவருடனும் நான் ஒரு வகையில் வேலை பார்த்துள்ளேன். மகிழ்ச்சி. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது படத்தில் வேலை பார்த்துள்ள அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.
நடன இயக்குநர் மெட்டி ஒலி சாந்தி பேசியதாவது… எல்லோருக்கும் வணக்கம். மிக பெருமையாக இருக்கிறது. கோமதி மேடத்திற்கு நன்றி. சினிமா இன்ட்ஸ்ட்ரி முதலில் வேறு மாதிரி இருந்தது. எல்லா மொழி படங்களும் இங்கு தான் தயாரானது. இப்போது அந்தந்த மொழி படங்கள் அங்கேயே தயாராகிறது, அதனால் இங்குள்ளவர்களுக்கு வேலை இல்லை. கோமதி மேடம் இன்னும் நிறையப் படங்கள் தயாரிக்க வேண்டும். கணவர்கள் நினைத்தால் மட்டுமே ஒரு பெண் சாதிக்க முடியும். தங்கள் மனைவிகளின் கனவிற்குத் துணையாக இருக்கும் கணவர்களுக்கு நன்றி. தீபக் அவனைச் சிறு குழந்தையாகப் பார்த்துள்ளேன், கீபோர்ட் வைத்து விளையாடிக்கொண்டிருப்பான், இப்போது இசையமைப்பாளர், என் பிள்ளையாகத் தான் அவனை நினைக்கிறேன் பெருமையாக உள்ளது. ராதிகா அவள் எனக்கு தங்கை, தோழி, போட்டியாளர் எல்லாம் தான். நாங்கள் இணை பிரியா தோழிகள் அத்தனை அன்பானவள். அவளுக்காகத் தான் அனைவரும் வந்துள்ளார்கள். இப்படம் 100 நாள் ஓடி பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். தன்ஷிகா மிகச்சிறந்த நடிகை அவர் இன்னும் பெரிய வெற்றியைக் குவிக்க வாழ்த்துக்கள்.
நடிகை இந்திரஜா சங்கர் பேசியதாவது… எல்லா பெரியவர்களுக்கும் என் நன்றிகள். ராதிகா மாஸ்டருக்கு என் நன்றிகள். கல்யாணத்திற்குப் பிறகு நான் பங்கு பெறும் முதல் நிகழ்ச்சி இது. ராதிகா மாஸ்டரின் முதல் படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. தன்ஷிகா மேடத்திற்கு நன்றி, என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். படக்குழு அனைவருக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகை சாய் தன்ஷிகா பேசியதாவது… இந்த மேடை மிக முக்கியமான மேடை. ராதிகா மாஸ்டர் அதற்கு மிக முக்கிய காரணம். எத்தனையோ மேடைகளில் பிரபலங்கள் பேசிவிட்டு உடனே கிளம்புவதைப் பார்த்துள்ளேன், இந்த மேடையில் அனைவரும் மனதார வாழ்த்திவிட்டுக் காத்திருக்கிறார்கள். ராதிகா மாஸ்டரின் மீதான அன்பு தான் காரணம். இந்தப்படம் அவரது ஃபிரண்ட்ஷிப்பிற்காக மட்டுமே செய்த படம். ராதிகா எங்கு பார்த்தாலும் என்னைப்பற்றிப் பேசுவார். ஊக்கம் தந்து கொண்டே இருப்பார். அவர் மனதிற்கு இந்தப்படம் பெரிய வெற்றி பெறும். பெண்கள் முன்னேறத் தடையாக இருப்பது ஆண்கள் என சொல்லிக்கொண்டே இருப்பார்கள் ஆனால் எனக்கு என் பயணத்திற்கு ஆண்கள் தான் நிறைய உதவியுள்ளார்கள். என் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் உள்ளார். இனிமே சினிமா வாய்ப்பு வருமா என நினைத்த காலத்தில் வந்த வாய்ப்பு தான் இந்தப்படம். ராதிகா மாஸ்டர் எப்போதும் எனக்கு டார்லிங் தான். அவர் இயக்குநர் ஆவார் என்றே நினைக்கவில்லை. அவர் கதை சொன்ன போதே ரொம்ப பிடித்தது. அட்டகாசமாக இயக்கியிருக்கிறார். தீபக் ஐந்து வருடம் முன் சின்னப்பையானாக இருந்தார் இப்போது என் படத்திற்கே இசையமைக்கிறார். பெண்களின் பாதுகாப்பைப் பற்றிப் பேசுகிறது இந்தப்படம். ராதிகா மாஸ்டரின் உழைப்பிற்கு இந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இங்கு வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் நன்றிகள். எல்லோருக்கும் நன்றிகள்.
நாயகன் ருத்விக் பேசியதாவது… சின்ன வயதிலிருந்து நடிகனாக வேண்டும் என்பது தான் ஆசை. தியேட்டருக்கு வரும் மக்கள் 2 மணி நேரம் எல்லாத்தையும் மறந்து விடுவார்கள் அது தான் சினிமா மேஜிக். கிரியேட்டருக்கான மரியாதை அது தான். ராதிகா மேடம் இது தான் கதை, இது தான் பாத்திரம், நீ தியேட்டர் ஆர்டிஸ்ட் தானே, உனக்கு வருவதைச் செய் என்று ஊக்கம் தந்தார். மைம் கோபி சார், தன்ஷிகா மேடம் நடிப்பைப் பிரமித்துப் பார்த்தேன். அவர்களிடம் இருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். ராதிகா மேடம் என்னை ஒரு மகன் போலவே பார்த்துக் கொண்டார்கள். அவர் தந்த ஊக்கம் தான் எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தைத் தந்தது. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது… ராதிகாவை நான் வாடி போடி என்றுதான் கூப்பிடுவேன். அவள் எனக்கு அந்தளவு நெருங்கிய தோழி. நானும் அவளும் சினிமாவில் அஸிஸ்டெண்டாக இருந்த காலத்தில் இருந்து தெரியும். நான் படம் செய்ய ஆரம்பித்த போது, அவளைத்தான் முதலில் கூப்பிட்டேன் ஆனால் வர மாட்டேன் என்றாள், முதல் மூணு படத்திற்கும் கூப்பிட்டேன் வரவில்லை ஆனால் அவளே ஒரு நாள் கூப்பிட்டு நான் ரெடி சார் எனச் சொன்னாள். அவளுக்கு நம்பிக்கை வந்த பிறகு என்னிடம் வந்து மாஸ்டராக பணியாற்றினாள். சினிமாவில் பல காலம் ஒரு சிலர் மட்டுமே நண்பர்களாக இருப்பார்கள், நான் 300 பேருக்கு மேல் அறிமுகப்படுத்தியுள்ளேன். ஆனால் என் பிறந்த நாளுக்கு முதல் ஆளாக ராதிகா தான் போன் செய்வாள். அத்தனை சிறந்த நட்பு, அவள் படமெடுத்திருக்கிறேன் என்று சொன்ன போது நம்பவில்லை, படத்தில் ஜெயிச்சிட்டியா என கேட்கும்போது, முயற்சிக்கொண்டிருப்பேன் என வசனம் வருகிறது. அது தான் முக்கியம் முயற்சித்துக்கொண்டே இருக்க வேண்டும் அது தான் சினிமா. அதே மாதிரி நீயும் சினிமாவில் இரு. நான் சினிமா பற்றி கருத்து சொல்ல மாட்டேன். படமெடுத்து விட்டாய் இனி பத்திரிக்கையாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். ராதிகா 30 மார்க் எடுத்திருந்தால் 50 மார்க் கொடுங்கள் அதை மட்டும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். தீபக் இசையமைப்பாளர் சின்ன பையன், பாடல் சூப்பர் என்று சொல்ல மாட்டேன் நன்றாக வந்துள்ளது வாழ்த்துகள். சாய் தன்ஷிகா மிகச்சிறந்த நடிகை அவரை என் படத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன், வருங்காலத்தில் அவருக்காகக் கதை எழுதுவேன். சினிமா என்பது என்னைப்பொறுத்தவரை கடவுள் மாதிரி அதை நாம் வணங்குவோம். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
இசையமைப்பாளர் தீபக் பேசியதாவது… இது எனக்கு முதல் வாய்ப்பு, தயாரிப்பாளர் கோமதி மேடத்திற்கு நன்றி. மிஷ்கின் சார் உங்கள் அறிவுரையைக் கண்டிப்பாகப் பின்பற்றுவேன். தன்ஷிகா மேடத்திற்கு நன்றி. இப்படத்தில் என் உடன் பணிபுரிந்த குழுவினருக்கு நன்றி. இசை சொல்லித் தந்த என் அப்பாவிற்கு நன்றி.
இயக்குநர் ராதிகா பேசியதாவது… என்னை இன்று வரை தோழியாக மதித்து, எனக்கு வாய்ப்பளித்த மிஷ்கின் சாருக்கு என் நன்றிகள். நான் இங்கு நிற்கக் காரணம் அவர் தான். எனக்கே என் திறமையைச் சுட்டிக்காட்டியவர் அவர் தான். அவருக்கு நன்றி. ராஜன் அப்பா என் அப்பாவின் தோழர் இன்று வரை என்னை மகளாகத்தான் பார்த்துக் கொள்கிறார். இப்படத்திற்காக என்னுடன் துணை நின்ற ஜேசன் மற்றும் எடிட்டர் கமலக்கண்ணனுக்கு நன்றிகள். என் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. சாய் தன்ஷிகா ஆக்டிங் பத்தி எல்லோருக்கும் தெரியும் ஆனால் இந்தப்படத்தில் அவர் மனசாட்சிக்கு எவ்வளவு பயப்படுகிறார் அடுத்தவருக்காக எத்தனை இறங்கி வருவார் எனப் பார்த்தேன். மிகச்சிறந்த மனித நேயம் கொண்டவர். படத்தில் அடிபட்டு ரத்தம் வந்த போது கூட பதறாமல் இருந்தார், நாங்கள் தான் பதறினோம். அவரை வைத்து இன்னும் 100 படம் என்றாலும் செய்வேன். என் மகன் இசையமைப்பாளர் அவன் பிள்ளையாகக் கிடைத்தது எனக்குத் தான் பெருமை. எங்களை வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
‘உறியடி’, ‘உறியடி 2’, ‘ஃபைட் கிளப்’ என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை வழங்கிய பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எலக்சன்’ திரைப்படம், மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.
‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ‘அயோத்தி’ புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. மேலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எலக்சன்’ தொடர்பான பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் மக்களவை தேர்தல் கால தருணத்தில் வெளியிடப்பட்டதாலும், இப்படத்தின் மையக்கருவை பிரதிபலிக்கும் வகையில் பாடல் இடம் பெற்றதாலும், வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. அத்துடன் இப்படத்தின் வெளியீடு குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் எதிர்வரும் மே மாதம் 17ஆம் தேதியன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
விஜய்குமார்- தமிழ்- ரீல் குட் பிலிம்ஸ் கூட்டணியில் தயாராகி இருக்கும் ‘எலக்சன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில்.. படத்தில் இடம்பெற்ற பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோ, படத்தின் டிரைலர் மற்றும் ஸ்னீக் பிக் ஆகியவை தொடர்ந்து வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களில் ஒன்றான, இயக்குநர் சிதம்பரத்தின் சர்வைவல் த்ரில்லரான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படத்தை, வரும் மே 5 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.
தமிழ்நாட்டின் கொடைக்கானல் சுற்றுலா பகுதியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம், மொழிகள் தாண்டி அனைத்து பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்தது. உலகெங்கிலும் பரவலாக ரசிக்கப்பட்ட இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 200 + கோடிகளை வசூலித்துள்ளது.
ஒரு சர்வைவல் படத்திற்கான கச்சிதமான திரைக்கதையுடன், நட்பின் வலிமையைப் பேசிய மஞ்சும்மெல் பாய்ஸ் தமிழ் ரசிகர்களின் இதயங்களை வென்றது, இன்றுவரை தமிழில் வெற்றிபெற்ற மிகப்பெரிய மலையாள படமாக இப்படம் சாதனை புரிந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்திற்கு தங்கள் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர். சிஎஸ்கே வீரர்களுடன் ‘தல’ எம்எஸ் தோனி ரசிகர்கள் மத்தியில் இப்படத்தைப் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவைச் சேர்ந்த இளைஞர் குழுவினர் தமிழ்நாட்டின் கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்கிறார்கள். அந்தப் பயணத்தின் போது, குணா குகையைப் பார்வையிடுகிறார்கள், அப்போது ஒருவர் தவறி குகைக்குள் விழுந்துவிட நண்பனைக் காப்பாற்றப் போராடுகிறார்கள், அவர்கள் நண்பனைக் காப்பாற்றினார்களா? என்பது தான் மஞ்சும்மேல் பாய்ஸ் படம். மனித மன உறுதி, சகிப்புத்தன்மை மற்றும் நட்பின் பெருமையை அழகாக எடுத்துக்காட்டுகிறது இப்படம்.
சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி மற்றும் ஜீன் பால் லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு, சுஷின் ஷியாம் இசையமைக்க, ஷைஜு காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பாபு ஷாஹிர், சௌபின் ஷாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்திற்கு விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
வரும் மே 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படத்தைக் கண்டுகளியுங்கள்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முன்னதாக ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றி அமைத்துள்ளது. ரசிகர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது, மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.
• A stupendous concert by Grammy-winning violinist duo Ganesh-Kumaresh adds flavour
• A series of books were launched by renowned lyricist Sameer Anjaan
Hyderabad, 29 April 2024: Heartfulness inaugurated an eight-day Bhandara on the occasion of Pujya Babuji Maharaj’s 125th birth anniversary at Kanha Shanti Vanam – the headquarters of Heartfulness in the outskirts of Hyderabad. The inauguration was graced by Guests of Honour Former President of India Shri Ramnath Kovind and Former Chief Justice of India Shri N. V. Ramana. The event was marked by a mass meditation with the participation of the former President and former Chief Justice joining in and being led by Rev. Daaji – Guide of Heartfulness and President of Shri Ram Chandra Mission. A spectacular performance by the ace violinist duo Ganesh-Kumareshadded to the spiritual bliss. The ‘awesome-twosome’ violinist brothers were accompanied by Shri Kulur Jayachandra Rao on Mridangam and Shri Trichy Krishnaswamy on Ghatam. Renowned lyricist Shri Sameer Anjaan was also graced the event presenting a song composed by him for Rev. Daaji. Over 50,000 participants turned up at the venue whilemany more joined virtually from around the world.
Former President of India Shri Ramnath Kovind ji said, “On this auspicious occasion of 125th birth anniversary of Pujya Babuji Maharaj, I pray that his blessings shower in each one of us, and guide us through wisdom and compassion. I believe each one of us has been sent here with a purpose. Let each one of us make our presence here in our lifetimes treading the path through integrity and the Heartful attitude to achieve that purpose.”
“I am very honoured to be here and extend my heart-felt congratulations to Rev. Daaji in carrying forward the mission of the early Masters of Shri Ram Chandra Mission. On the auspicious occasion of the 125th birth anniversary of Pujya Babuji Maharaj, may each one of us vow to strive to imbibe the qualities of Babuji Maharaj – of compassion, of humility and equanimity,” added Former Chief Justice of India Shri N. V. Ramana.
Rev. Daaji – Guide of Heartfulness and President of Shri Ram Chandra Mission said, “It is in the constant remembrance of the Guru that keeps us from straying away from the right path. In our Gurus, we must seek refuge as they are the sure shot way to reach the Divine. Music through the Raagas has the power to bring us closer to the Divine. Pujya Babuji Maharaj continues to inspire each one of us today. There is not a day when his inspiration does not touch me. To add to it, a soulful recitation by Ganesh-Kumaresh, as this surely helps us delve deeper.”
The event was also marked by the release of a series of booksby Former President of India Shri Ramnath Kovind, Former Chief Justice of India Shri M. V. Ramana and Rev. Daaji – Guide of Heartfulness and President of Shri Ram Chandra Mission jointly. The books are Spiritual Anatomy (Hindi & Gujarati – Hard Bound) and The Wisdom Bridge (Kannada &Gujarati – Hard Bound) – the bestsellersby Rev. Daaji. Other books released were Whispers from the Brighter World – 4 Volumes 1945-1955 (Tamil – HardBound); In the Light Awakening (English – Soft Bound); Mudras (English & Hindi – Hard Bound); The Eternal Eye (Kannada – Soft Bound); Yearning of the Heart – (Volume 2 Kannada – Hard Bound); Yearning of the Heart – Volume 1 (Gujarati – Hard Bound); The Authentic Yoga (Marathi – Hard Bound); Complete Works of Ram Chandra – Volume 1 (Thai – Hard Bound); and Voice Real – Volume 1 – Ebook (Simplified Chinese & Traditional Chinese) authored by Rev. Daaji and others.
Renowned lyricist Shri Samir Anjaan ji spoke out his thoughts on the auspicious occasion. He said, “Surrender is the only way to achievement. This is my second meeting with Daaji and I cannot thank him enough for the wonderful opportunity to be here and witness for myself the paradise he has made.” He even composed a beautiful poem dedicated to Rev. Daaji and presented the same at the bhandara touching the souls of thousands of audiences.
Pujya Babuji Maharaj was the second in the lineage of the Masters of Shri Ram Chandra Mission. Regarded as the greatest spiritual scientists of the modern millennia, his profound influence extends beyond the boundaries of individual spiritual journeys, as he believed that India has always been the cradle of spirituality, and it is spirituality itself that possesses the potential to unite the entire world.