Breaking
January 10, 2025

deccanwebtv

“டிமான்டி காலனி 2” ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது !!




இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல், சமீபத்தில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான, “டிமான்டி காலனி 2” திரைப்படம், வெளியான வேகத்தில், 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது. ரசிகர்களின் பெரும் வரவேற்பில், டிஜிட்டல் பிரீமியரில் இப்படம் பல புதிய வரலாற்றைப் படைத்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியாகி பெரும் வெற்றி பெற்ற, இதன் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இந்த இரண்டாம் பாகம், ஹாரர் அனுபவத்தின் புதிய கட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. மிகச்சிறந்த படைப்பாளி அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்டி காலனி 2’ முதல் படம் விட்ட இடத்திலேயே தொடங்குகிறது. ரசிகர்களைத் திகிலின் உச்சத்திற்குக் கூட்டிச் செல்லும் இப்படத்தை, இப்போது உங்கள் வீட்டுத் திரைகளில், பரவசத்துடன் ZEE5 இல் கண்டுகளியுங்கள்.

முதல் பாகத்தின் கதைக்களம், ஸ்ரீனிவாசன், விமல், ராகவன் மற்றும் சஜித் ஆகிய நான்கு நண்பர்களைச் சுற்றி வருகிறது. 19 ஆம் நூற்றாண்டில் பணக்கார போர்த்துகீசிய தொழிலதிபர் ஜான் டிமான்டி என்பவருக்குச் சொந்தமான ஒரு வீடு, அவர் அனுபவித்த தனிப்பட்ட சோகங்களிலிருந்து உருவாகும் சாபங்கள் மற்றும் அமானுஷ்யங்களால் புனைவுகள் சூழ்ந்த திகில் ஸ்தலமாக இருக்கிறது. இப்படம் பேய் நம்பிக்கையைத் தாண்டி, இயற்கைக்கு அப்பாற்பட்ட பழிவாங்கும் ஒரு கதைக்களத்திற்குள் நம்மை ஆழமாக இழுத்துச் செல்கிறது, தங்களின் சாபத்திலிருந்து தப்பிக்க நண்பர்கள் ஒரு வழியைத் தீவிரமாகத் தேடுகிறார்கள் – அவர்கள் அறியாமல் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அழைத்த சாபத்தைத் தவிர்க்க முடியாதது என்பதை உணர மட்டுமே முடிகிறது. இந்த இரண்டாம் பாகம் அந்த உலகிற்குள் நம்மை இன்னும் இன்னும் ஆழமாக இழுத்துச் செல்கிறது.

“டிமான்டி காலனி 2” படத்தின் இந்த வெற்றி குறித்து இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறுகையில்..,
“ ZEE5 இல் உலக டிஜிட்டல் பிரீமியரில் டிமான்டி காலனி 2க்கு கிடைத்த அபாரமான வரவேற்பைக் கண்டு மெய்சிலிர்த்துவிட்டேன்! வெளியான வேகத்தில் இப்படம் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது, அருள்நிதி மற்றும் ப்ரியா பவானி சங்கரின் மிகச்சிறப்பான நடிப்பு கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களின் உழைப்பு இப்போது கொண்டாடப்படுவது மகிழ்ச்சி. இது வெறும் ஆரம்பம் தான், ரசிகர்களின் உற்சாக வரவேற்பில் இன்னும் பல சாதனைகளை படைப்பதைக் காண ஆவலோடு உள்ளேன்.

நடிகர் அருள்நிதி கூறுகையில்,
“ஒரு அற்புதமான திரையரங்க வெற்றிக்குப் பிறகு, டிமான்டி காலனி 2 அதன் உலக டிஜிட்டல் பிரீமியர் மூலம், இன்னும் பரந்த பார்வையாளர்களைச் சென்றடைவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இப்போது ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்த அபாரமான பயணத்தில் எங்களுடன் இணைந்து உழைத்த அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன். எங்கள் படம் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை எப்படிக் கவருகிறது, என்பதைப் பார்க்க ஆவலோடு உள்ளேன், ரசிகர்களிடமிருந்து கிடைத்து வரும் அதீத அன்பும், வாழ்த்துக்களும் உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி தருகிறது. அனைவருக்கும் நன்றி.

அசத்தலான ஹாரர் திரில்லர் அனுபவமான ‘டிமான்டி காலனி 2’ திரைப்படத்தை, ZEE5 இல் தவறவிடாதீர்கள் !!

ZEE5 பற்றி
ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்குப் பன்மொழியில் கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்திலிருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள் கொண்ட ஒரு பெரும் திரை நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்க்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது. பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு 12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5 வழங்குகிறது.

மேலும் சமூகவலைதளங்களில் ZEE5 ஐ தொடர :
Facebook – https://www.facebook.com/ZEE5
Twitter – https://twitter.com/ZEE5India
Instagram – https://www.instagram.com/zee5/

Northern Uni Set To Launch End-to-End Student-Led Satellite Project

  1. The soon to be launched Satellite will carry an array of sophisticated instruments designed to
    study the Space atmosphere and demonstrate communication technologies.
  2. This also marks the first student-led Satellite Technology project for the Government School

students of Jaffna region in Sri Lanka.

Chennai, 3rd October 2024: In commemoration of World Space Week, Northern Uni today signed a
strategic MoU with Space Kidz India to launch a collaborative student-led satellite project, marking a
monumental step in space education for the northern region of Sri Lanka. The MoU was signed in the
city in the presence of Dr. Prafulla Kumar Jain, Director – InSpace Ahmedabad, Mr. Indy
Pathmanathan, Chairman – SLIIT Northern Uni, Dr. Srimathy Kesan, Founder & CEO – SpaceKidz India,
Ms. Alma Okpalefe, Executive Director – World Space Week Association and Dr. Saranya Jaikumar,
Educational Psychologist, symbolizing the region’s first foray into space technology. This ambitious
project will bring together students from both Northern Uni and Government schools in Jaffna, along
with students from India, to jointly design, develop, and launch a satellite. The satellite will carry
sophisticated instruments aimed at studying the space atmosphere and demonstrating cutting-edge
communication technologies.
This collaborative effort helmed by Northern Uni is expected to yield invaluable data for scientific
research while showcasing the technological prowess of student innovators from both nations. This
project also offers students a firsthand exposure to satellite technology and also the chance to
participate in groundbreaking research that has the potential to contribute innovative solutions to
global challenges. The initiative will equip students with essential skills in satellite development, data
analysis, and communication technologies, preparing them for future careers in the STEM (Science,
Technology, Engineering, and Mathematics) fields. By engaging in this landmark project, students from
both countries will play a role in advancing space research and promoting technological innovation that
benefits society.
Commenting on the occasion, Mr. Indy Pathmanathan, Chairman SLIIT Northern Uni, said, “This
initiative is a giant leap for both Sri Lanka and India in cultivating a culture of scientific collaboration and
mutual innovation. Our students, the future citizens of both nations, will gain unparalleled exposure to
the intricacies of satellite technology. What excites me most is the way this project fosters cross-border
collaboration among students from different backgrounds, cultures, and educational systems. They will
not only develop advanced skills in science and engineering but also learn the value of teamwork and
shared goals. Through this project, we are building not just a satellite, but a future where innovation
knows no borders.”
Adding to this Dr. Srimathy Kesan, Founder and CEO of Space Kidz India, said, “This project represents a
shared vision for both India and Sri Lanka—one that sees education, technology, and space exploration
as tools for uniting people and pushing the boundaries of what’s possible. By engaging students from

both countries, we are planting the seeds of a future generation that will work collaboratively on global
challenges. These young minds will become the torchbearers of scientific progress, and their
participation in building and launching this satellite is just the beginning. Space technology is an
incredibly powerful platform, and through this project, we aim to inspire students to look beyond
geographical boundaries and become true innovators and leaders in space science.”
The project is structured into two key phases. Phase 1 will focus on training students in space science
and technology, with 50 school students from Sri Lanka, 10 school students from India, and 50 college
students undergoing comprehensive training. This phase is designed to give participants a foundational
understanding of satellite development and space missions, offering a rich educational experience that
combines theoretical knowledge with practical insights.
Phase 2 will involve 30 college students from Sri Lanka who will be directly engaged in building,
integrating, and preparing the satellite for its eventual launch. The collaborative process will allow them
to work alongside Indian experts and their peers, gaining hands-on experience in satellite construction.
Furthermore, 15 college students and 50 school students from Sri Lanka will travel to India to witness
the satellite launch, creating a powerful learning opportunity that will inspire future generations to
pursue careers in space science and technology.

பிரம்மாண்ட தயாரிப்பில் வெகு விரைவில் வெளிவர உள்ளது படை தலைவன்

சிபி ராஜ் நடித்த வால்டர் படத்தை வெற்றிகரமாக இயக்கிய  இயக்குனர் அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிப்பில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் படைதலைவன் படம் வெகு விரைவில் வெளிவர உள்ளது.

வி ஜே கம்பைன்ஸ் சார்பில் பரமசிவம் அவர்கள் தயாரிப்பில், ராஜு காளிதாஸ் அவர்களின் இணை தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம், படை தலைவன். இப்படத்தில் ஆக்சன் அதிரடியில் சண்முகபாண்டியன் விஜயகாந்த்  வெறித்தனமாக பெரும் மெனக் கெடல் எடுத்து நடித்துள்ளார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படி படத்தின் வெளியீட்டு வேலைகள் துவங்கி உள்ளன.  இசைஞானி இளையராஜா அவர்களின் அற்புதமான இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. கஸ்தூரி ராஜா அவர்கள் முக்கிய கதா பாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்துள்ளார். படை தலைவன் படத்தை ஓப்பன் தியேட்டர் நிறுவனம் சார்பில் ஏ. செந்தில் குமார் வெளியிட உள்ளார். இசை வெளியீடு,  படம் வெளியிடும் தேதி குறித்து  விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

DMY கிரியேஷன் நிறுவனர் மகனின் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி !!

திரையுலக முன்னணி பிரபலங்கள் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும், DMY கிரியேஷன் நிறுவனர் மகனின் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி !!

மலேசியா இதுவரை காணாத அளவில், பிரம்மாண்டமான நட்சத்திர திருமண விழா நடைபெற உள்ளது. இரண்டு நாடுகளை ஒன்றாக இணைக்கவுள்ள இவ்விழாவில், மலேசிய என்டர்டெயிண்ட்மென்ட் உலக பிரபலங்களும், தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களும் பங்கேற்கவுள்ளனர்.

அக்டோபர் 12 அன்று, DMY கிரியேஷன் நிறுவனர் மற்றும் (மேலும் DMY என அறியப்படும்), தலைவர் டத்தோ முஹம்மது யூசாஃப், தனது மகன் ஃபஜ்ருல் ரஹ்மானுக்கு, செட்டியா நகரில் அமைந்துள்ள கன்வென்சன் சென்டரில், பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துகிறார். தம்பதிகளின் திருமணத்தைக் குறிக்கும் நிக்கா விழா, அங்கு அரங்கேறுகிறது. நண்பர்கள், விருந்தினர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இரு காதல் மனங்களின் ஒருங்கிணைவு கொண்டாடப்படவுள்ளது.

இந்த பிரம்மாண்டமான கொண்டாட்டத்தில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களும், கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்கவுள்ளனர். மினுமினுக்கும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் இவ்விழா பெரும் கவர்ச்சியுடன் கலாச்சார அடையாளமாகவும் நிகழவுள்ளது.

பழம்பெரும் ஆளுமைமிக்க நடிகர்கள் உட்பட, கோலிவுட் சூப்பர்ஸ்டார்கள் என கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள இந்நிகழ்வில்,
உலகநாயகன் கமல்ஹாசன், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது திறமையான மகன் ஏ.ஆர்.அமீன், அதே போல் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நட்சத்திரமான சிவகார்த்திகேயன், பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் நடிகர் சூரி ஆகியோர் இணையவுள்ளார்கள். இவர்களுடன் உள்ளூர் மலேசியப் பிரபலங்களும், அரசியல்வாதிகளும் இந்த கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

உலகின் தலைசிறந்த வடிவமைப்பாளர்கள் இந்தியாவின் மிகவும் பிரபலமான பேஷன் மேஸ்ட்ரோக்கள் – மனீஷ் மல்ஹோத்ரா மற்றும் சப்யாசாச்சி வடிவமைத்த புதுவிதமான ஆடை அணிகலன்களை, மணமகனும், மணமகளும் அணிய இருக்கிறார்கள்.

“இந்தத் திருமணம் இரு நபர்களுக்கு இடையேயான அன்பின் கொண்டாட்டம் மட்டுமல்ல, ஒன்று கூடும் இரண்டு துடிப்பான கலாச்சாரங்கள், வேற்றுமையில் ஒற்றுமையின் அழகை வெளிப்படுத்துகின்றன.

“இந்த சிறப்புத் தருணத்தை உலகம் முழுவதும் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். மலேசியப் பொழுதுபோக்கு திரை பிரபலங்கள் மற்றும் தமிழ்நாட்டு சினிமா பிரபலங்கள் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை அடைவதைக் காண ஆவலாக இருக்கிறேன் என்று முகமது யூசாஃப் கூறினார்.

DMY ஈவன்ட்ஸ் குரூப் மிக உயர்ந்த தரத்தில் உலகம் வியக்கும் வகையிலான பிரம்மாண்ட திருமண வரவேற்பை உருவாக்கவுள்ளது.
இந்த கலாச்சார நிகழ்வு பாலிவுட் மற்றும் கோலிவுட்டின் அடையாளங்களை ஒருங்கிணைக்கும் அதே வேளையில், செழுமையான பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாக இருக்கும்.

முன்னணி நட்சத்திரங்களான விஜய், கார்த்தி போன்றோருடன் பணிபுரிந்த பிரபல சமையல்காரர் மாதம்பட்டி ரங்கராஜ், தலைமையில் விருந்தினர்களுக்கு 77 உணவுகள் கொண்ட விருந்து அளிக்கப்படும், பாரம்பரிய தானியங்கள் மற்றும் தினை, என ஒரு தனித்துவமான மற்றும் மறக்க முடியாத சமையல் அனுபவத்தை இந்த விருந்து உங்களுக்குத் தர இருக்கிறது.

உணவை ருசித்து ரிவ்யூ தரும் இர்ஃபான் வியூ சேனலின் பிரபலமான யூடியூபர் முகமது இர்ஃபான், இந்நிகழ்வில் கலந்துகொண்டு, விருந்தின் சுவைகளை எடுத்துரைத்து, இந்த இரவை இனிமையாக்க இருக்கிறார்கள்.

இவருடன் இணையும் பிரபல ஆர்.ஜே. பிராவோ, வாழ்க்கை முறை மற்றும் பயண வீடியோக்களுக்காக கொண்டாடப்பட்ட டிஜிட்டல் கிரியேட்டர் சிந்துஜா ஹரி, மற்றும் சமூக வலைதள பிரபலமான சஞ்சனா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.

ஷியாமக் தாவர் போன்ற மற்றும் பிரபு தேவா, ஜாம்பவான்களால் பாராட்டப்பட்ட சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற நடன அமைப்பாளர் ஜான் பிரிட்டோவின் குழு இவ்விழாவை நடனங்களால் சிறப்பிக்கவுள்ளது.

புகழ்பெற்ற வயலின் கலைஞர் மனோஜ் குமாரும் தனது மயக்கும் நிகழ்ச்சிகளால் மேடையை அலங்கரிக்கவுள்ளார்.
பாரம்பரிய மற்றும் சமகால பாணிகளைக் கலக்கும் அவரது திறன் ஒரு மாயாஜால சூழலை உருவாக்கும், விருந்தினர்கள் உண்மையிலேயே மறக்கமுடியாத இன்னிசை அனுபவத்தைப் பெறுவார்கள்.

மதிப்பிற்குரிய ஊடக அதிபரும் சன் பிக்சர்ஸ் தலைவருமான கலாநிதி மாறன், ஆந்திராவின் ஏபி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சஞ்சய், வி கிரியேஷன்ஸின் கலைப்புலி எஸ். தாணு, ஏ&பி குரூப்ஸின் அருண் பாண்டியன், வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸின் சுரேஷ் காமாட்சி மற்றும் ஐங்கரன் கருணா உட்பட, கோலிவுட் திரையுலகைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

இவர்கள் அனைவரின் பங்கேற்பு பண்டிகை சூழ்நிலையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கோலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்களிடையே நட்புறவையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்துகிறது. இது இந்த திருமணத்தை ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக மாற்றுகிறது.

இந்த திருமணமானது இரு தனிமனிதர்களின் சங்கமத்தைக் கொண்டாடுவது மட்டுமின்றி, காதல், ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தின் கலாச்சார பின்னணிகள் என வித்தியாசமான நிகழ்வாக அரங்கேறவுள்ளது, விருந்தினர் பட்டியல், பிரமிக்க வைக்கும் அலங்காரம், மற்றும் அசத்தலான சமையல் என, இந்த நிகழ்வு மிகவும் சிறப்புமிக்க நிகழ்வாக நடைபெறவுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வாக இந்நிகழ்வு இருக்கும்.

இத்திருமண விழாவில் பங்கேற்பாளர்களுடன் முக்கியமாக இடம்பெறும் பிரபலங்கள், இந்த பிரமாண்டமான கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியான தருணங்களை, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, சமூக ஊடகங்களில், #DMYVEETUKALYANAM என்ற அதிகாரப்பூர்வ ஹேஷ்டேக்கைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

திரு டத்தோ முஹம்மது யூசாஃப் நிறுவிய DMY கிரியேஷன், பொழுதுபோக்கு மற்றும் திரைப்பட விநியோகத் துறையில், மலேசியாவில் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாகத் தமிழ் மற்றும் பாலிவுட் படங்களைக் கொண்டு வருவதில் பெயர் பெற்றவர். ராயன், தங்கலான், மற்றும் சலார் போன்ற படங்களை மலேசியப் பார்வையாளர்களுக்கு இந்நிறுவனம் தந்துள்ளது.

DMY கிரியேஷன் தொடர்ந்து கலாச்சாரங்களை இணைப்பதில் கவனம் செலுத்துகிறது, மலேசியாவின் வளமான பன்முக கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் உள்ளடக்கத்துடன், இந்திய கலாச்சாரத்தை ஒருங்கிணைக்கும் கருவியாகச் செயல்படுகிறது.

                                                                                                      #DMYVEETUKALYANAM

உலகசுற்றுலாதினத்தன்று, பிஸ்லேரிஇன்டர்நேஷனல்ஊட்டியில் ‘மாற்றத்திற்கானபாட்டில்கள்’திட்டத்தைஅறிமுகப்படுத்துகிறது

பயன்படுத்திய பிளாஸ்டிக் சேகரிப்பு வங்கிகள் மற்றும் மலைகளில்காடுகளை சுத்தப்படுத்தும் இயக்கங்கள் ஆகியவை நிலையானசுற்றுலாவை நோக்கிய ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கும்வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஊட்டி, 27 செப்டம்பர் 2024: உலக சுற்றுலா தினத்தில், பிஸ்லேரிஇன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட். லிமிடெட், நீலகிரி மாவட்டநிர்வாகம் மற்றும் ஊட்டி வளாகத்தில் உள்ள ஜேஎஸ்எஸ் அகாடமிஆஃப் ஹையர் எஜுகேஷன் & ரிசர்ச் நிறுவனத்துடன் இணைந்துஊட்டியின் தொட்டபெட்டா சிகரத்திற்கு அதன் முதன்மைமுயற்சியான ‘பாட்டில்கள் மாற்றத்தை’ பெருமையுடன்விரிவுபடுத்துகிறது. நமது இயற்கை நிலப்பரப்புகளின் அழகியஅழகைப் பாதுகாப்பதிலும், நிலையான எதிர்காலத்தை உறுதிசெய்வதிலும் பிளாஸ்டிக் மறுசுழற்சியின் முக்கிய பங்கைவலியுறுத்தும் வகையில், ‘மாற்றத்திற்கான பாட்டில்கள்’ முன்முயற்சி மலைப் பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்படுவதுஇதுவே முதல்முறையாகும்.

மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டபெஞ்சுகளை நிறுவுதல் மற்றும் முக்கிய இடங்களில் பயன்படுத்தியபிளாஸ்டிக்கிற்கான சேகரிப்பு வங்கிகளை பொறுப்பாகஅகற்றுதல் மற்றும் மறுசுழற்சி செய்வதை ஊக்குவிப்பது ஆகியவைதிட்டத்தின் சிறப்பம்சங்கள். கூடுதலாக, தொட்டபெட்டா, பைன்காடுகள் மற்றும் சனிடல்லா பேக் வாட்டர் உள்ளிட்ட பலஇடங்களில் காடுகளை சுத்தம் செய்யும் இயக்கங்கள்நடத்தப்பட்டன, இது சுற்றுச்சூழல் தூய்மையைமேம்படுத்துவதையும் இந்த இயற்கை இடங்களைப் பாதுகாப்பதன்முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும்நோக்கமாகக் கொண்டது.

பிஸ்லேரி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகஅதிகாரி திரு. ஏஞ்சலோ ஜார்ஜ் பேசுகையில், “பிஸ்லேரியில்நாங்கள் பிளாஸ்டிக்-நடுநிலை மற்றும் நீர்-நேர்மறை நிறுவனமாகஇருக்க உறுதிபூண்டுள்ளோம். நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும்JSS அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் & ரிசர்ச்ஆகியவற்றுடனான எங்கள் ஒத்துழைப்பு, தமிழகத்தில்நேர்மறையான மாற்றத்தை வளர்ப்பதற்கும், நிலைத்தன்மையைமேம்படுத்துவதற்கும் எங்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இந்த முயற்சி குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இதுஒரு மலைப்பகுதிக்கான எங்கள் முதல் பயணத்தை குறிக்கிறது. இந்த திட்டத்தின் மூலம், சுற்றுலாப் பயணிகளுக்கு கல்விகற்பித்தல், உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்துதல் மற்றும்பிளாஸ்டிக் மறுசுழற்சி முயற்சிகளில் மாணவர்கள் மற்றும் அரசுஅமைப்புகளை ஈடுபடுத்துதல், இவை அனைத்தும் மிகவும்நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்துடன் உள்ளது.

‘மாற்றத்திற்கான பாட்டில்கள்’ முன்முயற்சிக்கு நீலகிரி மாவட்டவருவாய் அலுவலரால் முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து, நகரம் முழுவதும் தூய்மைப்படுத்துதல்இயக்கம் மற்றும் அடிப்படை மதிப்பீட்டு கணக்கெடுப்பு ஆகியவைதிட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்கத்திற்கான அடித்தளத்தைஅமைப்பதற்காக நடத்தப்பட்டன.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர்திரு.எம்.நாராயணன் கூறியதாவது: மலைப்பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பிளாஸ்டிக்கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து, சுற்றுச்சூழல் மாசுபடுவதில்குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது சுற்றுலாத்துறையில் நிலையான நடைமுறைகளை வளர்ப்பது அவசியம், ஏனெனில் இது நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க எதிர்காலத்தலைவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. பிஸ்லேரிஇன்டர்நேஷனலின் ‘மாற்றத்திற்கான பாட்டில்கள்’ முயற்சியுடன்ஒத்துழைக்க தமிழ்நாடு சுற்றுலாத் துறை உற்சாகமாக உள்ளது. இது நமது இயற்கை எழில்மிகு நிலப்பரப்புகளில் நிலைத்திருக்கஒரு அளவுகோலை அமைக்கும் மற்றும் வரும் தலைமுறைகளுக்குதூய்மையான, பசுமையான எதிர்காலத்தை உறுதி செய்யும்.

நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, டாக்டர்எம்.ஜே.என். ஊட்டி வளாகத்தில் உள்ள ஜேஎஸ்எஸ் அகாடமி ஆஃப்ஹையர் எஜுகேஷன் & ரிசர்ச் தலைவர் சந்திரசேகர் பேசுகையில், “ஜேஎஸ்எஸ் கல்வி நிறுவனத்தில், நிலைத்தன்மைக்கு முன்னுரிமைஅளிக்கும் பொறுப்புள்ள இளைஞர்களை வளர்ப்பதில் நாங்கள்நம்பிக்கை கொண்டுள்ளோம். பிஸ்லேரி இன்டர்நேஷனலின்’மாற்றத்திற்கான பாட்டில்கள்’ முன்முயற்சியுடன் எங்களின்தொடர்பு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான எங்கள் கூட்டுஅர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது, இது குடிமக்களை பிளாஸ்டிக்மறுசுழற்சிக்கான தீவிர வக்கீல்களாக ஆக்குவதற்கும், கிரகத்திற்குபயனளிக்கும் சுற்றுச்சூழல் உணர்வுப் பழக்கங்களைஏற்படுத்துவதற்கும் ஊக்குவிக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிஸ்லேரி இன்டர்நேஷனல், மவுத்அண்ட் ஃபுட் பெயிண்டிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் (எம்எஃப்பிஏ) உடன்இணைந்து ‘பெஞ்ச் ஆஃப் ட்ரீம்ஸ்’ திட்டத்தை அறிமுகப்படுத்திஅதன் நிலைத்தன்மை முயற்சிகளை முன்னெடுத்தது. ‘பிஸ்லேரிபசுமையான வாக்குறுதி’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இந்ததிட்டம் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் மறுசுழற்சிசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட 1,000 பெஞ்சுகளைநிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிஸ்லெரிஇன்டர்நேஷனல் அதன் அனைத்து செயல்பாடுகளிலும்நிலைத்தன்மையை உட்பொதிப்பதில் உறுதியுடன் உள்ளது, பொறுப்பான வணிக நடைமுறைகள் மூலம் வளர்ச்சியைஊக்குவிக்கிறது.

   

மாக்கியவெல்லி காப்பியம்–ஆகோள் என்ற நாவலின் இரண்டாம் பாகம்…..

குற்றப்பரம்பரை அரசியலை மையமாகக் கொண்ட கபிலன்வைரமுத்துவின் மாக்கியவெல்லி காப்பியம் வெளியானது, இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார்

2022ஆம் ஆண்டு வெளியான ஆகோள் என்ற நாவலின் இரண்டாம் பாகம்

எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியம் என்ற நாவலை இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார். இது 2022 ஆம் வெளியான ஆகோள் என்ற நாவலின் இரண்டாம் பாகம். பிரிட்டிஷ் இந்தியாவின் குற்றப் பரம்பரை சட்டத்தையும் அதன் நவீன பரிணாமங்களையும் விவாதிக்கும் முறையில் கபிலன் வைரமுத்து இரண்டு நாவல்களையும் எழுதியிருக்கிறார். முதல் பாகத்தில் பன்னிரண்டு வயது சிறுவனாக இருந்த மாக்கியவெல்லி இரண்டாம் பாகத்தின் மைய கதாபாத்திரமாக வருகிறான். மதுரை மாவட்டத்துக்குட்பட்ட எட்டு நாடுகள் என்ற பகுதியில் கதை நிகழ்வதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 1801 தொடங்கி 2057 வரையிலான காலக்கட்டத்தின் கதையாக இது எழுதப்பட்டிருக்கிறது. பல வரலாற்று தகவல்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவை குறித்த இரண்டு ஆண்டுகள் கள ஆய்வுக்கு பின் கபிலன்வைரமுத்து இந்த நாவலை எழுதியிருப்பதாக பதிப்பாளர் வேடியப்பன் குறிப்பிட்டிருக்கிறார். இஸ்ரேல் அரசு இணையவெளியில் மேற்கொண்ட முக்கியமான முன்னெடுப்புதான் இந்த இரண்டாம் பாகத்திற்கான முதல் பொறி என்று கபிலன்வைரமுத்து தன் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். நாவலுக்கென்று பிரத்யேகமாக மூல் என்ற கணினி மொழி உருவாக்கப்பட்டிருக்கிறது. மாக்கியவெல்லி காப்பியம் நூலை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வண்ணம் வருகிற அக்டோபர் 06ஆம் தேதி சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் வளாகத்தில் ஆசிரியர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது. மாக்கியவெல்லி காப்பியம் கபிலன்வைரமுத்துவின் பன்னிரண்டாவது நூல். ஐந்தாவது நாவல். ஆகோள் முதல் பாகம் ஆங்கிலத்திலும் வெளி வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

CLEF MUSIC AWARDS 2024 – ஆறு விருதுகளை வென்ற ரயில் திரைப்படத்தின் இசையமைப்பாளர், பன்முக இசைக்கலைஞர் எஸ்.ஜே. ஜனனி..

சமீபத்தில் வெளியான RAIL திரைப்படத்தின் இசையமைப்பாளர் S. J. ஜனனி, RAIL திரைப்படப் பாடல்களுக்காக 4 பிரிவுகளில் 4 CLEF இசை விருதுகள் மற்றும் மும்பை 2024 மற்றும் பக்திப் பிரிவுகளுக்கான 2 விருதுகளை வென்றுள்ளார். இந்த திரைப்படத்தை டிஸ்கவரி சினிமாஸ் திரு . வேடியப்பன் தயாரித்தார் மற்றும் திரு. பாஸ்கர் சக்தி இயக்கியுள்ளார்.

விருது விவரங்கள்

Radio & Music 5 CLEF MUSIC AWARDS 2024-இன் 4வது பதிப்பு, செப்டம்பர் 27, 2024 அன்று லீலா ஹோட்டல், இன்டர்நேஷனல் ஏர்போர்ட், மும்பையில் நடைபெற்றது. இந்திய சினிமா பிரிவில் எஸ்.ஜே.ஜனனிக்கு RAIL திரைப்படத்திற்காக 4 விருதுகள் வழங்கப்பட்டன: சிறந்த இசையமைப்பாளர் – பூ பூக்குது (“ரயில்” பாடலுக்காக),
சிறந்த பெண் பின்னணிப் பாடகி, ஏலே செவத்தவனே… (“ரயில்” படத்தில் இருந்து), சிறந்த திரைப்படப் பாடல் – தமிழ் – பூ பூக்குது (“ரயில்” பாடலுக்காக),& எது உன் இடம் (“ரயில்” என்ற பாடலுக்காக சிறந்த இசை கோர்ப்பாளர் மற்றும் ப்ரோகிராமர்).

இத்துடன், ஜனனியின் “சிவனே சிவனே ஓம்” பிரம்மகுமாரிகளின் பாடல், 2024 ஆம் ஆண்டுக்கான 2 CLEF இசை விருதுகளை வென்றது:

பக்தி – சிறந்த இசையமைப்பாளர் & பக்தி-சிறந்த பாடல்/ஆல்பம் தமிழ், “இந்திய தேசிய விருது”, தமிழக அரசின் “கலை மாமணி விருது” & பல உலகளாவிய விருதுகள் பெற்ற எஸ்.ஜே. ஜனனி, அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள சர்வதேச பாடகர்- பாடலாசிரியர்கள் சங்கத்தின் 2024 ஆகஸ்ட் ஆண்டின் சர்வதேச பெண் பாடகருக்கான ISSA விருதை வென்றுள்ளார். இவர் கிராமி வாக்களிக்கும் உறுப்பினர் என்பது குறிப்பிடத் தக்கது.

மட்கா திரைப்படம், நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகிறது……..

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும், மாஸ் எண்டர்டெயினர் மட்கா திரைப்படம், நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகிறது ! ரெட்ரோ ஸ்டைலில் ​​இதன் செகண்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது!

மெகா பிரின்ஸ் வருண் தேஜ் நடிக்கும் மாஸ் ஆக்‌ஷன் எண்டர்டெய்னர் படமான “மட்கா” தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. தற்போது, படக்​​குழு வருண் தேஜ் மற்றும் போராளிகள் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான மற்றும் தீவிரமான அதிரடி ஆக்சன் காட்சிகளைப் படமாக்கி வருகிறது. கருணா குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தினை, வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் சார்பில், டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா மற்றும் ரஜனி தல்லூரி ஆகியோர் தயாரிக்கின்றனர். வருண் தேஜ் திரை வரலாற்றில் மிக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் மட்கா ஆகும்.

படத்தின் அனைத்து பணிகளும் முடிவடையும் தறுவாயில் உள்ளது, இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியைத் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். கார்த்திகை பூர்ணிமாவுக்கு முன்னதாக நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகும். இது ஒரு நீண்ட வார இறுதியில் ரசிகர்கள் கொண்டாட ஏதுவாக இருக்கும்.

பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அசத்திய படக்குழு தற்போது செகண்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளனர். வருண் தேஜ் இந்த போஸ்டேரில் ரெட்ரோ அவதாரத்தில் அசத்தலான உடையில், வாயில் சிகரெட்டுடன் படிக்கட்டுகளில் நடந்துகொண்டு, நேர்த்தியுடன் காட்சியளிக்கிறார். வருண் தேஜ் அவரது கதாபாத்திரத்தின் பரிணாமத்தை அழகாகப் பிரதிநிதித்துவப்படுத்தும், இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் அசத்துகிறார்.

1958 மற்றும் 1982க்கு இடையில் நடக்கும் கதை என்பதால், 50 களில் இருந்து 80 கள் வரையிலான சூழலை மீண்டும் கச்சிதமாக உருவாக்கி இயக்குநர் கருணா குமார் வெற்றி பெற்றிருக்கிறார். 24 வருட கதை என்பதால் வருண் தேஜ் இப்படத்தில் நான்கு வித்தியாசமான கெட்-அப்களில் தோன்றுகிறார். வருண் தேஜின் மாறுபட்ட தோற்றம் ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஒர்க்கிங் ஸ்டில்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது வெளியீட்டுத் தேதியை அறிவித்து தயாரிப்பாளர்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

வருண் தேஜ் ஜோடியாக நோரா ஃபதேஹி மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் நவீன் சந்திரா மற்றும் கன்னட கிஷோர் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மட்கா தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியப் படமாக வெளியாகவுள்ளது.

நடிகர்கள்: வருண் தேஜ், நேரா ஃபதேஹி, மீனாட்சி சௌத்ரி, நவீன் சந்திரா, கன்னட கிஷோர், அஜய் கோஷ், மைம் கோபி, ரூபாலட்சுமி, விஜய்ராம ராஜு, ஜெகதீஷ், ராஜ் திரந்தாஸ்

தொழில்நுட்பக் குழு:
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கருணா குமார்
தயாரிப்பாளர்கள்: மோகன் செருகுரி (CVM) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா
பேனர்: வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் இசை: ஜீ.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : பிரியசேத்
எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீனிவாஸ் R
தயாரிப்பு வடிவமைப்பு: ஆஷிஷ் தேஜா
கலை: சுரேஷ்
நிர்வாகத் தயாரிப்பாளர் – RK.ஜனா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் & டிஜிட்டல் – ஹேஷ்டேக் மீடியா

தமிழகத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய வாகன தயாரிப்பு ஆலையின் அடிக்கல் நாட்டு விழாவை நடத்துகிறது

அதிநவீன, கிரீன்ஃபீல்ட் ஆலை இந்திய மற்றும் உலக சந்தைகளுக்கு அடுத்த தலைமுறை வாகனங்களை தயாரிக்க 100% புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பயன்படுத்தும்
உள்ளூர் சமூகத்தில் குறிப்பிடத்தக்க திறன்-வளர்ச்சியுடன் 5,000 வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்

பனப்பாக்கம், ராணிப்பேட்டை, தமிழ்நாடு, 28 செப்டம்பர் 2024: உள்நாட்டு (“மேக் இன் இந்தியா, உலகத்துக்காக”) உற்பத்தியை ஊக்குவிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க படியாக, வணிக மற்றும் பயணிகள் வாகனங்கள் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் குழுமம் இன்று அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியது. தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பணப்பாக்கத்தில் கார்கள் மற்றும் SUV களை தயாரிக்கும் அதன் புதிய, உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி நிலையம். இந்த உற்பத்தி நிலையம் Tata Motors மற்றும் JLR க்கு அடுத்த தலைமுறை வாகனங்களை உற்பத்தி செய்யும். சர்வதேச அளவில் தரப்படுத்தப்பட்ட ஆலை இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும்.

அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் மற்றும் டாடா சன்ஸ் & டாடா மோட்டார்ஸ் தலைவர் திரு. என். சந்திரசேகரன், பல பிரபல அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், மூத்த அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் டாடா குழுமத்தின் மூத்த பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது ..

விழாவில் பேசிய திரு மு.க. மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “டாடா குழுமம் தேசத்தைக் கட்டியெழுப்பும் பங்களிப்பிற்காகப் புகழ்பெற்றது. கடந்த பல ஆண்டுகளாக நமது மாநிலத்தில் வெற்றிகரமாக இயங்கி வரும் அதன் பல உற்பத்தி ஆலைகளுடன் இது தமிழ்நாட்டுடன் ஆழமான, வரலாற்று உறவைக் கொண்டுள்ளது. உலக அளவிலான வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ், ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் தனது புதிய உற்பத்தி ஆலையை நிறுவுவதை வரவேற்கிறோம்.

இந்த மேம்பட்ட, அதிநவீன உற்பத்தி வசதி, 5,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை (நேரடியாகவும் மறைமுகமாகவும்) உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது மற்றும் ஆலை மற்றும் அதைச் சுற்றியுள்ள உள்ளூர் சமூகங்களிடையே எதிர்கால ஆயத்த திறன்களை வளர்ப்பதற்கு பங்களிக்கிறது. கூடுதலாக, ஆலை நிலைத்தன்மையின் கொள்கைகளால் வழிநடத்தப்படும் மற்றும் இயங்கும் செயல்பாடுகளுக்கு 100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் இவை பயன்படுத்தும்.

நிகழ்ச்சியில் பேசிய டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன், “எங்கள் அடுத்த தலைமுறை கார்கள் மற்றும் எஸ்யூவிகள், எலக்ட்ரிக் மற்றும் சொகுசு வாகனங்கள் உள்ளிட்டவற்றின் தாயகமாக பனப்பாக்கத்தை மாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ்நாடு முற்போக்கான கொள்கைகளுடன் முன்னணி தொழில்துறை மாநிலமாக உள்ளது மற்றும் தகுதியான மற்றும் திறமையான பணியாளர்களுடன் நிறுவப்பட்ட வாகன மையமாக உள்ளது. பல டாடா குழும நிறுவனங்கள் இங்கிருந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. அதிநவீன உற்பத்தி தொழில்நுட்பம் மற்றும் உலகத் தரம் வாய்ந்த நிலைத்தன்மை நடைமுறைகளைப் பயன்படுத்தி, எங்களின் மேம்பட்ட வாகன உற்பத்தி ஆலையை இப்போது இங்கு உருவாக்க உத்தேசித்துள்ளோம். பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தும் வகையில், அனைத்து நிலைகளிலும் பெண் ஊழியர்களின் அதிக பங்கைக் கொண்டிருப்பதே எங்கள் முயற்சியாக இருக்கும்.

டாடா மோட்டார்ஸ் குழுமம் ~INR 9,000 கோடிகளை இந்த கிரீன்ஃபீல்ட் உற்பத்தி நிலையத்தில் முதலீடு செய்ய உத்தேசித்துள்ளது, இது ஆண்டுக்கு 250,000 வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த 5-7 ஆண்டுகளில் இந்தத் திறனை எட்டுவதற்கு படிப்படியாக உற்பத்தியை அதிகரிக்க உள்ளது ,.

தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் குறித்து ஒரு சிறு அறிக்கை

அனைவருக்கும் வணக்கம், என் பெயர் ஆனந்த் கோபாலன், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்தின் சார்பாக நான் ஆஜராகிறேன். இன்று, என்னுடைய வாடிக்கையாளரான சாம்சங் இந்தியாவின் சென்னை தொழிற்சாலையில் நடைபெற்று வரும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் குறித்து ஒரு சிறு அறிக்கையை வெளியிட இங்கு வந்துள்ளேன். சாம்சங் இந்தியா அனைத்து சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கும் இணங்க செயல்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அனைத்து சட்டப்பூர்வமான பலன்களும் கிடைக்கின்றன, மேலும் அவர்களின் ஊதியம் அரசாங்கம் மின்னணு தொழில்துறைக்கு நிர்ணயித்ததை விட மிக அதிகமாகவே வழங்கப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன், ஏனெனில், தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பான சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தொழிலாளர்களின் சங்கம் இன்றுவரை பதிவு செய்யப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது சாம்சங் இந்தியா நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுப்பது நியாயமானது. இருப்பினும், சாம்சங் இந்தியா நிர்வாகம் பொறுமையாக இருந்து, பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காண தொழிலாளர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது. சாம்சங் இந்தியா நிர்வாகம், தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்னிலையில் தொழிலாளர்களுடன் அமர்ந்து பேச தயாராக உள்ளது. மேலும், தொழிலாளர்களுடன் ஓர் நீண்ட கால ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் நிர்வாகம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது. இருப்பினும், சாம்சங் இந்தியா நிர்வாகம் நமது தொழிலாளர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தும், மூன்றாம் தரப்புடன் அல்ல. சாம்சங் இந்தியா நிர்வாகத்தின் சார்பாக, சட்டவிரோத வேலைநிறுத்தத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பி, அனைத்து கருத்து வேறுபாடுகளையும் விரைவில் சுமூகமாக தீர்க்கும் நோக்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று தொழிலாளர்களிடம் இதன் மூலம் நான் கேட்டுக்கொள்கிறேன்்