Breaking
February 24, 2025

deccanwebtv

தண்டேல் படத்திலிருந்து, நமோ நம சிவாயா என்ற சிவசக்தி பாடல்………

அல்லு அரவிந்த் வழங்கும், நாக சைதன்யா, சாய் பல்லவி, தேவி ஸ்ரீ பிரசாத், சந்து மொண்டேடி, பன்னி வாசு, கீதா ஆர்ட்ஸ் இணையும் தண்டேல் படத்திலிருந்து, நமோ நம சிவாயா என்ற சிவசக்தி பாடல் – வெளியிடப்பட்டது !!

தண்டேல் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது !!

இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், பன்னி வாஸ் தயாரித்து அல்லு அரவிந்த் வழங்கும், இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் நடந்து வருகிறது. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும், இந்தப்படத்தின் முதல் சிங்கிள் “புஜ்ஜி தல்லி” ஒரு பரபரப்பான ஹிட் ஆனது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது சிங்கிள் “நமோ நம சிவாய” பாடல் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சிவசக்தி பாடல், நடனம், பக்தி மற்றும் கம்பீரத்தை ஒரு இணையற்ற ஆடியோ-விஷுவல் அனுபவமாகக் கலந்து தந்து, ஒரு தலைசிறந்த படைப்பாக மஹாதேவனின் மகிமையைப் போற்றுகிறது. இந்தப் பாடலானது ஒரு தெய்வீகத் தன்மையுடன், நம்முள் ஒரு ஆன்மீக உணர்வைத் தூண்டுகிறது. பார்வையாளர்களைப் பயபக்தியுடன் கூடிய பிரமிப்பைத் தருகிறது.

ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், மனதை உருக்கும் இசையில், ஆன்மாவைக் கிளறி, கேட்பவருக்குள் நெருப்பை மூட்டுகின்றது. இந்தப் பாடல், நம் உணர்வோடு கலந்து, உடல் முழுவதும் எதிரொலிக்கிறது, மனதுக்குள் மகிழ்ச்சி மற்றும் பக்தியை உருவாக்குகிறது. இப்பாடல் பாரம்பரிய ஒலிகளை நவீன இசையுடன் தடையின்றி கலக்கிறது. ஜோனவித்துலா எழுதிய பாடல் வரிகள், சிவனின் சர்வ வல்லமை மற்றும் மாயத்தன்மையின் சாரத்தைக் கச்சிதமாகப் படம்பிடித்துள்ளன, அதே சமயம் மகாலிங்கம் மற்றும் ஹரிப்ரியா தங்களது ஆத்மார்த்தமான குரல்களால் அசத்தியுள்ளனர்.

முன்னதாக லவ் ஸ்டோரி படத்தில் அட்டகாசமான கெமிஸ்ட்ரி மூலம், ரசிகர்களைக் கவர்ந்த முன்னணி ஜோடியான நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி, இந்த பாடலில் மிக எளிதாக நம்மை மயக்குகிறார்கள். நாக சைதன்யாவின் நேர்த்தியான மற்றும் சக்திவாய்ந்த நடிப்பு, சாய் பல்லவியின் நளினம் மற்றும் வசீகரிக்கும் பாவனைகள் நம்மை ஈர்க்கிறது.

இப்பாடலில் சேகர் மாஸ்டரின் நடன அமைப்பு மற்றொரு சிறப்பம்சமாகும், இந்த நடன அமைப்பு, பாடலை மறக்க முடியாத அனுபவமாக மாற்றுகிறது. மிக அழகான நடன அமைப்பு, பின்னணி அரங்குகள் என அனைத்தும் , சிவபெருமானுக்கு ஒரு புனிதமான அர்ப்பணிப்பாக அமைந்துள்ளது.

மொத்தத்தில், நமோ நம சிவாய பாடல், கலை மற்றும் ஆன்மீக இணைப்பின் மூலம் சிவபெருமானின் மகிமையைக் கொண்டாடுகிறது. இந்த பாடல் வரும் ஆண்டுகளில் மிகப்பெரிய சார்ட்பஸ்டர்களில் ஒன்றாக மாறும்.

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஷாம்தத் ஒளிப்பதிவு செய்துள்ளார், தேசிய விருது பெற்ற நவீன் நூலி எடிட்டராக பணியாற்றியுள்ளார், ஸ்ரீநாகேந்திர தங்காலா கலை இயக்கம் செய்துள்ளார்.

“தண்டேல்” படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகிறது.

நடிகர்கள் : நாக சைதன்யா, சாய் பல்லவி

தொழில்நுட்பக் குழு:
எழுத்து இயக்கம் : சந்து மொண்டேடி வழங்குபவர்: அல்லு அரவிந்த்
தயாரிப்பாளர்: பன்னி வாஸ்
பேனர்: கீதா ஆர்ட்ஸ்
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு : ஷாம்தத்
எடிட்டர்: நவீன் நூலி
கலை: ஸ்ரீநாகேந்திரன் தாங்கலா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

https://bit.ly/NamoNamahShivaya

குற்றப் பின்னணியில் நடக்கும் கதை “பட்டினப்பாலை”

யு கேன் productions
P. V. சந்திரசேகர் தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் “பட்டினபாலை “.
நேற்று இந்த நேரம் திரைப்படத்தின் இசையமைப்பாளர் கெவின் அவர்கள் இசையமைக்க
அறிமுக இயக்குனர் பிரதாப் ராஜா இயக்கியிருக்கும் இந்த படத்தில் gv பிரகாஷ் குமார் ஒரு பாடலை பாடி படக்குழுவினரை பாராட்டினார்.
இதன் கதைக்களம் கிராமத்தில் நடக்கும் ஒரு கொலையை சுற்றி நடக்கும் சுவாரசியமான திரைக்கதையை கொண்ட படமாக உருவாகியுள்ளது.. படத்தில் பிரீத்தி, வேலப்பன், துவாரகேஷ், பாலசுப்பிரமணி, ராஜேந்திரன், போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். படபிடிப்பு கிருஷ்ணகிரி, குப்பம் பகுதிகளில் நடந்துள்ளது
விரைவில் திரைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது…

சசிகுமார் – சிம்ரன் இணைந்து நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய்சங்கர் ,கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ராஜ்கமல் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் , யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான காணொளி வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்திருக்கிறது. இதனை முன்னிட்டு படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் இடம்பெறும் காட்சிகள் பார்வையாளர்களை சிரிக்க வைத்திருப்பதால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருக்கிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

விரைவில் இப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும், அதனையடுத்து படத்தினை பற்றிய புதிய தகவல்களை படக்குழு தொடர்ச்சியாக வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகுமார்- சிம்ரன் இணைந்து நடித்திருக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“அகத்தியா” திரைப்படம் உலகம் முழுக்க ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது….

தமிழ்த் திரையுலகில் மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் “அகத்தியா” படத்தின் அதிரடி டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசையுடன், ஒரு அற்புதமான ஃபேண்டஸி-திகில் த்ரில்லர் அனுபவமாக இருக்குமென்பதை, இந்த டீசர் உறுதி செய்கிறது. பான் இந்தியப் பிரம்மாண்ட அனுபவமாக உருவாகியிருக்கும், இந்த ஃபேண்டஸி திரைப்படம், வரும் ஜனவரி 31, 2025 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்த டீசர் அகத்தியா திரைப்பட மாயாஜால உலகத்தின் பரபரப்பான காட்சி அனுபவத்தை அறிமுகப்படுத்துகிறது. திகில், சஸ்பென்ஸ் ஜானரில் ஃபேண்டஸி கலந்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வசீகரிக்கும் வகையில் ஒரு புதிய அனுபவத்தை வழங்கும்.

“ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்” என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன், அதிநவீன CGI உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில், திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில், ஒரு புதுமையான உலகைப் படைத்திருக்கும் “அகத்தியா” படத்தினை, புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் நிறுவனரும் தலைவருமான டாக்டர். ஐசரி கே. கணேஷ், படம் குறித்துக் கூறியதாவது…
“ஃபேண்டஸி-திகில் வகை ரசிகர்களை இந்த டீசர் வெகுவாக வசீகரித்து வருகிறது. – நமது கலாச்சாரத்தினை மிக ஆழமாகப் பிரதிபலிக்கும் அதே வேளையில், மிகவும் பிரபலமான உலகளாவிய பிளாக்பஸ்டர்களுக்கு போட்டியாக, ஒரு அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கம். இந்தியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பார்வையாளர்களுக்கு இந்த படம் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

முன்னணி நடிகர் ஜீவா இப்படம் குறித்துக் கூறியதாவது…
“ஒரு ஃபேண்டஸி ஹாரர் த்ரில்லரில் பணிபுரிவது முற்றிலும் புதிய அனுபவம். கதை, காட்சிகள், என நிஜ வாழ்வைத் தாண்டி விரியும் பிரம்மாண்ட உலகம் என்பது மிக மிகப் புதிதானது. பிரமிக்க வைக்கும் இந்த உலகத்தை உருவாக்கியதற்காகக் கலை இயக்குநரையும், ஒளிப்பதிவாளரையும் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். பா.விஜய் கதையைச் சொன்னபோது, இந்த தலைசிறந்த படைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென விரும்பி உடனே ஒப்புக்கொண்டேன். இப்படம் கண்டிப்பாக மிகப் புதிதான உலகிற்குள் உங்களை அழைத்துச் செல்லும்.

முன்னணி நட்சத்திர நடிகை ராஷி கண்ணா கூறியதாவது…
“நான் ஸ்கிரிப்டைக் கேட்ட கணம், கதையின் பிரம்மாண்ட உலகைக் கேட்டுச் சிலிர்த்துப் போனேன். அகத்தியா நான் முன்பு செய்த எந்தப் படத்தையும் போல் இல்லாமல், அசத்தலான காட்சிகள் மற்றும் நம்பமுடியாத இசை, பிரம்மாண்ட புதிய உலகம் எனப் பார்வையாளர்களைக் கண்டிப்பாகக் கவரும் என்று நம்புகிறேன்.

டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட , தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் (வைட் ஆங்கிள் மீடியா பிரைவேட் லிமிடெட்), அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, மகத்தான படைப்பான “அகத்தியா” திரைப்படத்தை உருவாக்கியுள்ளது.

சினிமா ஆர்வலர்களே தயாராகுங்கள், ஒரு முழுமையான ஃபேண்டஸி உலகிற்குள் அழைத்துச் செல்லும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான அகத்தியா திரைப்படம், ஜனவரி 31, 2025 அன்று வெளியாகிறது.

“எமகாதகி” பட ஃபர்ஸ்ட் லுக் !

தமிழ் சினிமாவில் வந்து குவியும், பல வகையான ஹாரர் த்ரில்லர் படங்களுக்கு மத்தியில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள
“எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. “எமகாதகி” திகில் படமா? அல்லது அம்மன் படமா? என்று இப்போஸ்டரை வைத்து நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், “எமகாதகி” மற்ற திகில் படங்களிலிருந்து மாறுபட்ட தனித்துவமான படைப்பாக இருக்கும் என்பதை, உணர்த்துமென தயாரிப்பாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கணபதி ரெட்டி இணைந்து தயாரித்துள்ள “எமகாதகி” திரைப்படத்தை, யெஷ்வா பிக்சர்ஸ் உலகம் முழுவதும் வெளியிடுகிறது. உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா மற்றும் மிஸ்டர்.பிரக்னெண்ட் படப்புகழ் ரூபா கொடவாயூர் முன்னணி பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் இயக்கியுள்ளார். “எமகாதகி” கிராமப் பின்னணியில் அமானுஷ்ய மர்ம திரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தில் ரூபா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு இளம் பெண்ணின் மரணத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. முழுப் படத்தையும் தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கியுள்ளதாக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் அமரன் புகழ் நடிகை கீதா கைலாசம் மற்றும் பிளாக்‌ஷீப் புகழ் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

துருவங்கள் பதினாறு, டியர் காம்ரேட், முதல் நீ முடிவும் நீ, கணம், படப்புகழ் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார், அனிமல், அமரன், லியோ போன்ற பல படங்களின் சவுண்ட் டிசைனிங் நிறுவனமான Sync Cinema, ஒலி வடிவமைப்பை செய்துள்ளது. உயர்தர தொழில்நுட்ப தரத்தில், மிகச்சிறப்பான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

“எமகாதகி” படத்தின் திரையரங்கு வெளியீட்டு தேதி மற்றும் டீசர், டிரெய்லர் குறித்த அறிவிப்புகள் விரைவில் தயாரிப்பாளர்களால்
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.

லிங்கேஷ், கஞ்சா கருப்பு நடிக்கும் புதிய திரைப்படம்…….

பரபரப்பான இறுதிக்கட்ட பணிகளில்,  Sky wanders Entertainment நிறுவனத்தின் முதல் திரைப்படம் !!

Sky wanders Entertainment நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.

இறுதிக்கட்ட தயாரிப்பிலுள்ள இப்படத்தின் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. 

திரைத்துறை மீதான தீராக்காதலிலும், ஆர்வத்திலும், 63 வயதில் தனது முதல் படமாக  இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஜெயலட்சுமி.  இது அவரது முதல் திரைப்படம் என்றாலும் திரைத்துறைக்கு பழமையானவர். மீனவ மக்கள் வாழ்க்கை பின்னணியில்  ஒரு மென்மையான, முக்கோண காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. 

லண்டனிலிருந்து தமிழக கலாச்சாரத்தை ஆய்வு செய்ய, இந்தியா வருகிறார் நாயகி லியா. மீனவ இளைஞனான லிங்கேஷ் மீது அவருக்கு காதல் வருகிறது. ஆனால் லிங்கேஷுக்கு அவரது மாமன் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தடைகளைத் தாண்டி  அவர்கள் காதல் நிறைவேறியதா?, காதலர்கள் சேர்ந்தார்களா? என்பது தான் இப்படத்தின் கதை. 

கபாலி, பரியேறும் பெருமாள் படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களிலும், “காலேஜ் ரோட்” படத்தில் நாயகனாகவும் நடித்த லிங்கேஷ்,  இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த பிரிடிஷ் நடிகை லியா நாயகியாக நடித்துள்ளார். நடிகை திவ்யா இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார்.  அறிமுக நடிகர்  காட்பாடி ராஜன் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் மதுசூதனன், மாறன், கஞ்சா கருப்பு, சித்தா தர்ஷன், செந்தமிழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிந்த நிலையில் படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. 

தொழில் நுட்ப குழு விபரம் 

தயாரிப்பு – Sky wanders Entertainment

தயாரிப்பாளர் – ஜெயலட்சுமி

நிர்வாக தயாரிப்பாளர் – காட்பாடி ராஜன்

எழுத்து, இயக்கம் – ஜெயலட்சுமி 

ஒளிப்பதிவு – மூடர்கூடம் புகழ் டோனி ஜான்

இசை – சாண்டி சாண்டெல்லோ

எடிட்டிங் – தனி ஒருவன் படப்புகழ் கோபி கிருஷ்ணா 

பாடல்கள் – கபிலன், சந்துரு, ஜெயலட்சுமி 

பாடியவர்கள் – ஸ்வேதா மோகன், சைந்தவி, ஶ்ரீதர் சேனா, திலீப் வர்மன் ( மலேசியா ), அனிதா ஷேக்

மக்கள் தொடர்பு – வேலு

பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ‘கரவாலி’ படத்தின் டீசர் ……..

கௌரவத்தின் சின்னமாக கவனம் ஈர்க்கும் நடிகர் பிரஜ்வல் தேவராஜின் ‘கரவாலி’ பட டீசர்

‘அது சாதாரண நாற்காலி அல்ல. கௌரவத்தின் சின்னம்’ எனும் பின்னணி குரலுடன் வெளியாகி இருக்கும் நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ‘ கரவாலி ‘ படத்தின் டீசர் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.‌

இந்திய திரையுலகில் 2025 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் ‘கரவாலி’. இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தருணத்தில் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அதிரடியான புதிய டீசரை வெளியிட்டு, சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளனர். குரு தத் கனிகா இயக்கத்தில் ‘டைனமிக் பிரின்ஸ்’ பிரஜ்வல் தேவராஜ் நடித்துள்ள ‘கரவாலி’ படத்தின் தனித்துவமான டீசர்.. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

பொதுவாக டீசரில் கதாநாயகன்- கதாநாயகி அல்லது முன்னணி கதாபாத்திரத்தின் மீது கவனம் செலுத்துவார்கள். ஆனால் ‘கரவாலி’ படத்தின் அண்மைய டீசரில் கௌரவம் என்ற அடையாளப் பொருளை சுற்றி வருவது கவனத்தை கவர்ந்திருக்கிறது. அண்மையில் வெளியிடப்பட்ட புதிய டீசர் – முக்கியத்துவம் வாய்ந்த நாற்காலியை முதன்மைப்படுத்துகிறது. ‘இது சாதாரண நாற்காலி அல்ல. கௌரவத்தின் சின்னம் ‘ என்ற பின்னணி குரலுடன் டீசர் தொடங்குகிறது. நடிகர் மித்ராவின் குரலில் வெளியாகி இருக்கும் இந்த டீசரில், ‘இந்த கௌரவம் மிக்க நாற்காலியை உரிமை கொண்டாட துணிபவர்கள் தப்ப மாட்டார்கள்’ என்பதையும் வலியுறுத்துகிறது. டீசரில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் மற்றும் உரையாடல்கள் ஒரு சிலிர்ப்பான அனுபவத்தையும், அற்புதமான தோற்றத்தையும் பார்வையாளர்களிடத்தில் உருவாக்குகிறது.

‘கரவாலி’ என்பது கம்பளா உலகத்தை (பாரம்பரிய எருது விடும் பந்தயம்) மையமாகக் கொண்ட திரைப்படம். இதற்கு முன் வெளியான டீசரில் ..ஒரு குழந்தை பிறக்கும் போது கன்று ஒன்று பிறந்ததை உருவகப்படுத்தியது. இந்த புதிய டீசரில் அதன் தொடர்ச்சி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு சிறுவன் வளர்ந்து கௌரவத்தின் நாற்காலியை பார்த்துக் கொண்டிருப்பதை காண்பிக்கிறது. மேலும் அது பலரின் ஆசைக்கும் ஆளாகிறது. டீசரில் மித்ராவின் கட்டளையிடும் குரலுடன் கூடிய தோற்றம்.. ரமேஷ் சந்திராவின் அச்சுறுத்தும் தோற்றம்.. மற்றும் இறுதி காட்சியில் ‘டைனமிக் பிரின்ஸ்’ பிரஜ்வல் தேவராஜின் கூர்மையான பார்வை ஆகியவை இடம் பிடித்திருக்கிறது.

பிரஜ்வல் தேவராஜின் மூன்று விதமான தோற்றங்களும் போஸ்டர்களாக இதற்கு முன் வெளியாகி இருக்கிறது. இதில் யக்ஷகானா – கம்பளா மற்றும் மகிஷாசுரன் -என ஈர்க்கப்பட்ட அவதாரங்களை கொண்டிருந்தது. இந்த வித்தியாசமான தோற்றம் பிரஜ்வல் தேவராஜ் ஒரு யக்ஷகானா கலைஞராக நடிக்கிறாரா ? அல்லது கம்பளா பந்தய வீரராக நடிக்கிறாரா? அல்லது ‘டைனமிக் பிரின்ஸ்’ ஆக அதாவது அவரது கதாபாத்திரத்தை சுற்றியுள்ள சூழ்ச்சியை மையப்படுத்தியதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

நடிகர்கள்
‘டைனமிக் பிரின்ஸ்’ பிரஜ்வல் தேவராஜ் , சம்பதா , ரமேஷ் இந்திரா , கே கே மாதா, மித்ரா மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் : குரு தத் கனிகா
தயாரிப்பு நிறுவனம் : குருதத் கனிகா பிலிம்ஸ்
இணை தயாரிப்பாளர்கள் : வினோத்குமார் – ஷிதில் ஜி. பூஜாரி – சதீஷ்குமார் ராஜி – பிரசன்னா குமார்- மனிஷ் தினகரன் .
கதை : சந்திரசேகர் பாண்டியப்பா
ஒளிப்பதிவு : அபிமன்யு சதானந்தன்
இசை & பின்னணி இசை : சச்சின் பஸ்ரூர்
படத்தொகுப்பு : பிரவீன் கல்
கலை இயக்குநர் : குணா
மக்கள் தொடர்பு : யுவராஜ்

‘ஐயையோ’ பாடலை இசையமைத்து, பாடி, நாயகனாக நடித்துள்ளார் சாமுவேல் நிக்கோலஸ்

பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை பின்பற்றி அவரது மகன் சாமுவேல் நிக்கோலசும் இசை உலகத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்.

சாமுவேல் நிக்கோலஸ் இசையமைத்து, பாடி, நாயகனாக நடித்துள்ள இளமைத் துள்ளும் ‘ஐயையோ’ பாடலை முன்னணி இசை நிறுவனமான திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது. இப்பாடல் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இக்கால இளைஞர்களின் கொண்டாட்டத்தை உற்சாகம் மற்றும் குதூகலம் குன்றாமல் பதிவு செய்யும் பாடலான ‘ஐயையோ’ மாறுபட்ட குணாம்சங்கள் கொண்ட பெண்களை பற்றியதாகும். ஒரு புதுமுகம் போன்று இல்லாமல் இசையிலும், பாடுவதிலும், நடிப்பிலும் தனது முத்திரையை பதித்துள்ளார் சாமுவேல் நிக்கோலஸ்.

பாடலைப் பற்றி பேசிய சாமுவேல் நிக்கோலஸ், “ஏழாம் அறிவு படத்தில் கோரஸ் பாடகராக இசைப் பயணத்தை தொடங்கிய நான், எனது தந்தையாரின் இசை நிகழ்ச்சிகளில் கித்தார் கலைஞராகவும் பாடகராகவும் பங்காற்றி இருக்கிறேன். ‘தேவ்’ திரைப்படத்தின் பின்னணி இசையில் ஒரு பாடலையும் பாடியுள்ளேன். தற்போது ‘ஐயையோ’ பாடல் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆவது மிக்க மகிழ்ச்சி,” என்றார். தனது நான்காம் வயது முதல் டிரினிட்டி இசைப் பள்ளியின் பாடத்திட்டத்தின் படி சாமுவேல் நிக்கோலஸ் இசையை கற்று வருவது குறிப்பிடத்தக்கது.

‘ஐயையோ’ பாடலை மோகன்ராஜ் மற்றும் சாமுவேல் நிக்கோலஸ் இணைந்து எழுத சனா மரியம் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு: ஜாயித் தன்வீர்; நடனம்: ஆலிஷா அஜித்; உடைகள்: ஹர்ஷினி ரவிச்சந்தர்: கலை இயக்கம்: பிரதீப் ராஜ்; எடிட்/வி எஃப் எக்ஸ்: கிரியேட்டிவ் கிரவுட், சிவசுந்தர், சாய் முத்துராமன்; ஒலி வடிவமைப்பு: ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி; கலரிஸ்ட்: மனோஜ் ஹேமச்சந்தர்.

நடிகர் சூர்யா நடிக்கும் ‘ ரெட்ரோ ‘ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் ‘சூர்யா 44’ படத்திற்கு ‘ ரெட்ரோ’ என பெயரிடப்பட்டு, அதற்கான பிரத்யேக டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஜாக்கி மற்றும் மாய பாண்டி ஆகிய இருவரும் இணைந்து கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஷபிக் முஹம்மத் அலி மேற்கொண்டிருக்கிறார். லவ் வித் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா – சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகியிருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான் ,ஊட்டி, கேரளா, சென்னை ஆகிய இடங்களில் நான்கு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான டீசர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நடிகர் சூர்யாவின் தோற்றம் வித்தியாசமாக இருப்பதாலும், காட்சிகள் விறுவிறுப்பாகவும் இருப்பதாலும், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

“தி ஸ்மைல் மேன்” திரை விமர்சனம்

பலபடங்களில்பார்த்த
சைக்கோ கொலைக்காரன் கதைதான். தொடர் கொலைகளை செய்து உடலை சிட்டியில் அங்கங்கே போடுகிறான் சைக்கோ கொலைக்காரன். கொன்றுவிட்டு வாயை கிழித்து சிரிப்பது போல மாற்றி உடல்கள் போடப்படுகிறது. யார் இந்த கொலைகளை செய்கிறார்? என கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணற இது போன்ற கொலைகள் தொடர்பாக ஏற்கனவே விசாரணை செய்த ஒரு போலீஸ் அதிகாரியை தேடிப்பிடியுங்கள் என உயர் அதிகாரிகள் சொல்ல சரத்குமாரை காட்டுகிறார்கள். அவர் ஒரு புத்தகம் எழுதுகிறார். அதன்பின்னரே கொலைகள் நடப்பதாக காட்டப்படுகிறது.- எனவே, சரத்குமாருக்கும் அந்த கொலைகாரனுக்கும் பல வருடங்களுக்கு முன்பே தொடர்பு
அது என்ன தொடர்பு? கொலை காரனுக்கும் சரத்குமாருக்கும் நடக்கும் யுத்தம் என்ன?

அதேபோல், விபத்தில் சிக்கி ஒரு வருடத்தில் மொத்த ஞாபகங்களையும் மறந்துவிடும் நிலையில் இருக்கும் சரத்குமார் எப்படி அந்த சைக்கோ கொலைகாரனை பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. ஒருபக்கம், சிஜா ரோஸும் சைக்கோ கொலை காரன் பற்றி விசாரணை நடத்துகிறார்.

ஸ்ரீ குமாரும் சரத்குமாரை பின்தொடர்ந்து கண்டுபிடிக்கிறார்

யார் அந்த கொலைகாரன் என்று தெரிய வரும் பொழுது அதிர்ச்சியாக இருக்கிறது படம் பார்ப்பவர்களுக்கு தெளிவான கதை, சீரான இயக்கம், வித்தியாசமான சிந்தனை ,படத்தின் வெற்றிக்கு அழைத்து செல்கிறது

கம்பீரமான போலீஸ் அதிகாரியாக ஃபிளாஷ் பேக்கில் இவரை காட்டும் பொழுது ரசிக்க வைக்கிறது அதே சமயம் மறதி நோயால் அவதிப்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கும் பொழுது பரிதாபம் ஏற்படுகிறது இரண்டு மாறுபட்ட வேடங்களில் சிதம்பரம் நெடுமாறனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

கீர்த்தனாவாக,சிஜா ரோஸ்,நர்ஸ் சித்ராவாக இனியா ,அரவிந்தாக
ஸ்ரீகுமார்,

வெங்கடேசன்ஆகசுரேஷ்மேனன்,மற்றும்நடராஜன்,
ராஜ்குமார்,மலைராஜன், ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்

பேபி ஆலியா, கலையரசன், ஆகியோரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்

அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக தங்கள் பங்குக்குஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார்கள் .

தி ஸ்மைல் மேன் என்ற புத்தகத்தில் சரத்குமார் எழுதியதற்கு பிறகு சைக்கோ கொலைகாரன் ஏன் கொலை செய்கிறான் அவன் யார்?

சரத்குமாரை குறி வைத்து அவன் நடத்தும் அந்த யுத்தம் எதற்காக ?

சரத்குமார் இறுதியில் அந்த கொலைகாரனை கண்டுபிடித்தாரா? என்ற பாணியில் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்கப்படும்

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை, ஆர்ட் டைரக்டரின் கைவண்ணம், காஸ்ட்யூமரின் பங்கு,
நேர்த்தியான திரைக்கதை,
தெளிவான இயக்கம்
என எல்லாம் அம்சமாக பொருந்தி இருக்கும் இப்படம் வெற்றி பட்டியலில் சேரும்