ஊட்டியில் தாய் தந்தை இல்லாமல் சித்தி சித்தப்பா ஆதரவில் வசித்து வரும் கிருஷா குரூப்.நிறைய சொத்துக்கள் இருக்கும் இவரை சித்தி சொத்திற்காக ஆசைப்பட்டு தனது தம்பிக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்.குடித்துவிட்டு கும்மாளம் அடித்துக்கொண்டு ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் அவரை பிடிக்காமல் பக்கத்து வீட்டு ஒரு பெரிய மனிதனிடம் ஐடியா கேட்டு யாரையாவது காதலித்து இந்த ஊரை விட்டு ஓடி விட வேண்டும் என்று முடிவு எடுக்கிறார் கிருஷா குரூப்.அவர் தேர்ந்தெடுக்க நம்பர் தன் வீட்டில் தங்கியிருக்கும் ஒரு ஈபி இன்ஜினியரை ஆனால் அவரோ திடீரென்று ஒரு நாள் வீட்டை காலி செய்துவிட்டு சென்னைக்கு சென்று வருகிறார்.சோகமடையும் நாயகி அவர் எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார்.
இதே நேரத்தில் சென்னையில் வைட் லைஃப் போட்டோகிராபராக இருக்கும் ஸ்ரீராம் கார்த்திக் ஊட்டியில் இருக்கும் ஒரு அரிய வகை பறவையை படம் பிடிக்க வருகிறார் அங்கே நாயகி உடன் நட்பு ஏற்பட அந்த நட்பு அந்த நட்பு பின்பு ஒரு தலை காதலாக மாறுகிறது ஸ்ரீராம் கார்த்திக் இருக்கு.சொல்ல நினைக்கும் வேலையில் நாயகியோ நான் ஒருவனே காதலிக்கிறேன் அவனுடன் என்னை சேர்த்து வை என்று ஸ்ரீராம் கார்த்திக் இடம் உதவி கேட்கிறார்.
உங்களை சேர்த்து வைத்தாரா இல்லை இவர்களது காதல் சேர்ந்ததா என்பது தான் மயிலாஞ்சி படத்தின் திரைக்கதை
இந்த மாதிரியான ஒரு முக்கோண காதல் கதையை எடுத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் அஜயன் பாலா இவர் ஒரு பிரபல எழுத்தாளர் பல படங்களுக்கு பணிபுரிந்திருக்கும் அஜயன் பாலா தனது படத்திற்கான திரைக்கதையில் கோட்டை விட்டு இருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்திகை நடிப்பு மிகவும் செயற்கை தனமாகவே உள்ளது அவர்அவர் நடிப்பு காதலிலும் சரி, சோகத்திலும் சரி எந்த ஒரு ஃபீலிங் இல்லாமல் ஒரே மாதிரியாக உள்ளது நடிப்பில் மெருகேற வேண்டும் ஸ்ரீராம் கார்த்திக்.
கிரிஷா குரூப் இந்த கதாபாத்திரத்தை என குழந்தைத்தனமாகவே வடிவமைத்து இருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் சிங்கம் புலி முனீஸ் காந்த் இன்னும் நிறைய பேர் வருகிறார்கள் போகிறார்கள் அவ்வளவே
இந்த படத்தில் பணியாற்றிய டெக்னிஷிகள் அனைவரும் மிகவும் அனுபவசாலிகள் ஒளிப்பதிவாளர் செழியன் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்,இசை இளையராஜா,இப்படி பலர் இருந்தாலும் பல சொதப்பல்கள் தான் இவர்கள் அனைவருமே
மைலாஞ்சி இன்னும் சற்று மைலேஜ் தந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
“மைலாஞ்சி” திரைவிமர்சனம்

