
சமீபத்தில் தமிழகத்தில் ஒரு பிரபல அரசியல் கட்சியை சேர்ந்த ஒரு ஒரு நபர் முறைகேடான கிட்னி திருட்டில் ஈடுபட்ட சம்பவத்தை மையப்படுத்தி இந்த படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் எழுத்தாளர் இயக்குனர் ராஜமுருகன்.
இந்த அரசியல் கிட்னி திருட்டு சம்பவத்தை வெளியில் கொண்டு வந்ததற்கு ராஜமுருகனுக்கு ஒரு பாராட்டு அதுவும் இன்றைய அரசியல் சூழலில்…
தமிழகத்தின் தென் பகுதியில் வாழும் சசிகுமார் அவரது மனைவி சைத்ரா இருவரும் இறந்து விட்டதாக போலிச் சான்றிதழ் வந்து அவர்களது ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கியமான அரசு ஆவணங்கள் அனைத்தும் பதிவாகிவிட்டது. அதை மீட்க அவர் ஊரெங்கும் போஸ்டர் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு உறுதுணையாக லோக்கல் பத்திரிகையாளராக குரு சோமசுந்தரம்.
லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து லோக்கல் மருத்துவமனையில் அனைவரும் அந்த கவுன்சிலருக்கு உதவுகிறார்கள் கவுன்சிலின் முக்கிய வேலையை ஏழை மக்களை மூளைச்சலவை செய்து அவர்களுக்கே தெரியாமல் அவர்களது உடல் உறுப்புகளை விற்பது தான்.
இந்த சூழலில் மத்திய அமைச்சராக இருக்கும் ஆஷா சரத்திற்கு இரண்டு சிறுநீரகம் செயல் இழந்து விட அதை முறைகேடாக எடுத்து வைக்க ஒரு புரோக்கரை நியமிக்கிறார்கள். அவர் ஒத்துப் போகும் கிட்னி சசிகுமார் மட்டும் தான் இருப்பது என்பதை கண்டறிந்து அவரை எப்படி முறைகேடாக அழைத்துச் சென்று கிட்னியை எடுத்து வைக்க முயற்சி செய்கிறார்கள். இந்த முயற்சியை பயன்படுத்தி சசிக்குமாறும் அவரது நண்பருமான பத்திரிகையாளர் குரு சோமசுந்தரம் இருவரும் இணைந்து சசிகுமாரின் டெத் சர்டிபிகேட்டை கேன்சல் செய்து அவருக்கு ரேஷன் கார்டு முதல் கொண்டு அனைவரையும் வாங்க வைக்கிறார்கள் அரசியல் பலத்தை பயன்படுத்தி,
அதே நேரத்தில் கோபி நயினார் மூலம் இந்த முறைகேடான சம்பவத்தை கோர்ட் மூலம் வெளி கொண்டு வர நினைக்கிறார்கள், இதில் ஆஷா சரத் தண்டனை பெறுகிறாரா? சசிகுமார் என்ன முடிவு செய்கிறார்? என்பதுதான் படத்தின் திரைக்கதை.
சமீபத்தின் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட கிட்னி திருட்டும் அதற்குப் பின்னணியில் இருந்த ஒரு லோக்கல் அரசியல்வாதி என்று பேசப்பட்டார் அவரது பின்புலத்தை பயன்படுத்தி அரசை எதிர்த்து படம் எடுத்திருக்கும் ராஜமுருகனுக்கு உண்மையிலே பாராட்டுகள்.
இந்த படத்தில் முத்து சிற்பியாக சசிகுமார் அவருக்கு வழக்கமான நடிப்பு தான் இது எனவே அதிலேயே நடித்துவிட்டு போகிறார்.
மனைவியாக வரும் சைத்ரா சுசிலா கேரக்டரில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்
குரு சோமசுந்தரம் தனக்கு வழக்கமான நடிப்புதான்.
மேலும் இந்த படத்தில் நீதிபதியாக ஜெயப்பிரகாஷ் அரசியல்வாதியாக ஆஷா சரத் இப்படி பலரும் அவர்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
படத்தின் மிகப்பெரிய குறையே படத்தில் வரும் கோர்ட் சீன்களை மிகவும் ஸ்ட்ராங்காக்கி கோபி நாயனார் அவரது கேரக்டரை பலப்படுத்தி இருக்க வேண்டும் அவர் ஏதோ வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல் ஒப்பித்துக் கொண்டிருக்கிறார் இதை மட்டும் சரியாக கையாண்டு இருந்தால் மை லார்ட் என்னும் தலைப்பிற்கு படம் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்.

