

அர்ஜுன் தாஸ் 2012ல் தமிழில் பெருமான் என்னும் திரைப்படத்தின் அறிமுகமாகிறார் .இவரது குரலைக் கொண்டு இவரது நடிப்பு நிச்சயம் பிற்காலத்தில் பேசப்படும் என்று இந்த திரைப்படத்தின் மூலம் நம்பப்படுகிறது. அந்த நம்பிக்கைக்கு ஏற்ப
அந்தகாரம் என்னும் படத்தில் ஒரு கதாபாத்திரம் நடிக்கிறார். அதன் பிறகு சிறிது காலம் ஒரு ரேடியோ எஃப் எம் இல் டிரைவ் என்னும் வானொலி நிகழ்ச்சி தொகுத்து வழங்குகிறார்.
இவ்வாறு சென்று கொண்டிருக்க 2017ல் ஆக்சிஜன் என்னும் தெலுங்கு படத்தில் கோபிசந்த் சகோதரராக நடிக்கிறார். இந்த சூழ்நிலையில் 2019 லோகேஷ் கனகராஜன் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியில் வந்த கைதி திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று வில்லனின் வலது கரமாகநடித்திருக்கிறார். இந்த படத்தின் அன்பு என்னும் கதாபாத்திரம் இவரது குரலால் மிகவும் பெரிதாக பேசப்படுகிறது. இந்த படத்தின் திரைக்கதையின் வெற்றிக்கு இவரது குரலும் இவரது நடிப்பும் உடல் மொழியும் ஒரு முக்கியமான பங்காற்றுகிறது.
அதன் விளைவாக லோகேஷ் கனகராஜ் தொடர்ச்சியாக விஜயை வைத்து இயக்கிய திரைப்படத்தில் ஒரு முக்கிய கதை பாத்திரத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க வைக்கிறார் .அந்த படத்திலும் தாஸ் என்னும் கேரக்டர் மிகவும் பேசப்படுகிறது .அதன் பிறகு விக்ரம் படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார் அந்த திரைப்படமும் லோகேஷ் கனகராஜ்அவர்கள் இயக்கப்படுகிறது ,அவரால் மீண்டும் நடிக்க வைக்கப்படுகிறார்.
அதேபோல் புட்டபொம்மா என்னும் திரைப்படத்தில் 2023 மீண்டும் தெலுங்கு மொழியில் கால் பதிக்கிறார். அதே நேரத்தில் தமிழில் அநீதி திரைப்படத்தில் ஒரு மிகச்சிறந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் அர்ஜுன் தாஸ் அதன் பிறகு.
2024 இல் போர் என்னும் திரைப்படத்தில் நடித்து அந்த படமும் அவரது நடிப்பால் பேசப்படுகிறது இந்த சூழ்நிலையில் பல திரைப்படங்களில் வில்லனாகவே நடித்து வந்த அர்ஜுன் தாஸ் அவர்களை ரசவாதி என்னும் திரைப்படத்தில் காதல் காட்சிகளில் நடிக்க வைக்கிறார்கள் .அந்த காட்சிகளில் அவரது குரலுக்கும் எதிர்மறையாக என்று நினைத்து பார்த்தால், என்னால் செய்ய முடியும், அந்த ரொமான்ஸ் பண்ண முடியும் என்று அதிலும் நிமிர்ந்து நிற்கிறார் அர்ஜுன் தாஸ்.தன்னால் காதல் கட்சியும் பண்ண முடியும் என்பது ரசவாதி படத்தின் மூலம் நிரூபிக்கப்படுகிறது.
இப்படி சூழ்நிலையில் குட் பேட் அக்லி யில் இரட்டை கதாபாத்திரத்தில், அஜித்துக்கு வில்லனாக ஒரு மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்து நடிக்க அந்த திரைப்படமும் அந்த திரைப்படத்தில் இவரது கதாபாத்திரமும் மிகவும் பேசப்படுகிறார் அந்த இரண்டு கதாபாத்திரம் இரண்டு பேர் உடல் மொழிகளை கொடுத்து அந்த நடனம் ஒரு காமெடி கலந்த அந்த வில்லத்தனம் நிச்சயம் அவரது நடிப்பில் ஒரு மைல்கல்லாக அமைந்தது .
இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு வெளிவந்திருக்கும் பாம் என்னும் திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான ஒரு கதையின் நாயகன் என்று சொல்ல முடியாமல் கதைக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரமாக ஏற்று நடித்திருப்பது மிகப்பெரிய ஒரு நடிப்பை அவருக்கு தந்திருக்கிறது. அந்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் காலி வெங்கட்டும் அந்த கிராமத்தில் மாட்டிற்கு லாடம் கட்டும் கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாசும் அவரது நடிப்பு நிச்சயம் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கிறது. இந்த படத்தின் மூலம் அவர் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய கதாநாயகனாக உயர்ந்து நிற்கிறார்
அர்ஜுன் தாஸ் தனது குரல் வளர்த்தால் தனித்துவமான குரலால் தனது கதாபாத்திரங்களை மேலும் வலுப்படுத்தி தனக்கான ஒரு ஆயுதமாக அதை பயன்படுத்தி நடிப்பில் உயர்ந்து நிற்கிறார்
இனிவரும் காலங்களிலும் தனது ஆழமான நடிப்பினாலும் தன் குரல் வளத்தினாலும் நிச்சயமாக ரசிகர் மனதில் மேலும் மேலும் இடம் பிடித்து ஒரு முன்னணி நாயகனாக வந்து நிற்பார் என்பது நமக்கு சந்தேகம் இல்லை

