
தமிழின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 ல் சமீபத்தில் வெளியான கிங்ஸ்டன் திரைப்படம், வெளியான வெறும் 48 மணி நேரத்திற்குள், 50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படம் கடற்கரை கிராம பின்னணியில், அசத்தலான விஷுவல்களுடன், ஃபேண்டஸி அம்சங்கள் நிறைந்த, புதுமையான ஹாரர் படமாக அனைவரையும் கவர்ந்துள்ளது. இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், இப்படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யா பாரதி, இளங்கோ குமரவேல், சபுமோன் அப்துசமத் மற்றும் சேதன் கடம்பி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
கிங்ஸ்டன் திரைப்படம், துணிச்சலான கடத்தல்காரரான கிங்ஸ்டன் (ஜி.வி. பிரகாஷ்) என்பவனின் கதையை விவரிக்கிறது. உள்ளூர் ரௌடியிடம் வேலை பார்க்கும் கிங்ஸ்டன், ரௌடி கிராமத்தை ஏமாற்றுவதை அறிந்து, அவனுக்கு எதிராகக் களமிறங்குகிறான். தன் கிராமத்தை மீட்கும் பொருட்டு, மீன் பிடிக்க முடியாமல், பல வருடங்களாகச் சபிக்கப்பட்ட கடற்பகுதிக்குள், தன் நண்பர்களுடன் துணிந்து நுழைகிறான். அந்த சாபத்தின் ரகசியத்தை அவன் கண்டுபிடித்தானா? தன் கிராமத்தை மீட்டானா? என்பது தான் இந்தப்படத்தின் கதை.
கிங்ஸ்டன் திரைப்படம் மாறுபட்ட கதைக்களம், அற்புதமான விஷுவல்கள், கடல் பின்னணி, நடிகர்களின் திறமையான நடிப்பு என, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பரவலான பாராட்டுக்களைக் குவித்துள்ளது.
ZEE5 இன் SVOD தெற்கு துணைத் தலைவர் லயோட் சேவியர் கூறுகையில், “
‘கிங்ஸ்டன்’ படத்திற்குக் கிடைத்த அற்புதமான வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. தமிழ் சினிமா இப்போது மிகப்பெரிய வெற்றிப்பயணத்தில் இருக்கிறது. அந்த வகையில், அட்டகாசமான எண்டர்டெயினர் திரைப்படமான, “கிங்ஸ்டன்” படத்தை, எங்கள் பார்வையாளர்களுக்கு வழங்கியதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள இந்தப்படம், ஒரு புதுமையான களத்தில், அதிரடி திரில்லராக ஒரு ரோலர்கோஸ்டர் பயணத்திற்கு ரசிகர்களைக் கூட்டிச் செல்கிறது. இது போல் சிறந்த படைப்புகளைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு வழங்க வேண்டுமென்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம். ZEE5ல் இன்னும் சிறந்த நல்ல படைப்புகள், மண் சார்ந்த படைப்புகள், தொடர்ந்து வரவுள்ளது.
இயக்குநர் கமல் பிரகாஷ் கூறியதாவது…,
இந்தப் படம் அன்பான குழுவின் உழைப்பு. எதிர்பாராத ஒரு களத்தின் பின்னணியில் மர்மம், அதிரடி மற்றும் ஃபேண்டஸி அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான அனுபவத்தைத் தர வேண்டும் எனும் நோக்கத்தில் உருவாக்கிய படைப்பு இது. இப்படத்தை உருவாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது, கிங்ஸ்டன் கதாபாத்திரத்தில் ஜிவி பிரகாஷின் உழைப்பு வியக்கதக்கதாக இருந்தது. தன்னை முழுதாக மாற்றிக்கொண்டு, மிகப்பிரமாதமாக, தனித்துவமான நடிப்பைத் தந்தார். இந்த வேடத்தில் வேறு யாரையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ZEE5 ப்ரீமியர் மூலம் இப்படத்தை அனைத்து மக்களும் கொண்டாடுவதைக் காணப் பெரு மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தின் மீது அன்பைக் கொட்டிய அனைவருக்கும் நன்றி.
நடிகர் ஜி.வி. பிரகாஷ் கூறியதாவது..,
“கிங்ஸ்டன் திரைப்படம் மீது மக்கள் காட்டி வரும் அபரிமிதமான அன்பைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! கிங்ஸ்டன் பல வழிகளில் சவாலாக அமைந்த மிகச்சிறப்பான ஒரு கதாபாத்திரம் – கிங்ஸ்டன் துணிச்சலானவன், கணிக்க முடியாதவன், இப்பாத்திரத்தை ஏற்று நடித்தது மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்த விசித்திரமான உலகில் மூழ்கி அதை இவ்வளவு பெரிய டிஜிட்டல் வெற்றியாக மாற்றிய அனைத்து ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி”
கிங்ஸ்டன் இப்போது ZEE5 இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்கிறது, இன்றே கண்டு மகிழுங்கள்!