ரேட்டிங்: 3 / 5 ⭐

யாரும் இல்லாமல் தனியாக வளர்ந்த இளைஞன் ஜெய் ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்கிறான் ஹீரோயினை சந்திக்கும் ஜெய், திடீரென காதலித்து உடனடியாக திருமணம் செய்து கொள்கிறார்கள் ஆனால் அந்த திருமணத்திற்கு பிறகு இருக்கும் கடன் பண பிரச்சினை ஆகியவை அவர்களது வாழ்க்கையை மாற்றுகிறது. இந்த சூழலில் நாயகியின் அப்பாவோ அரசியல்வாதி, அவர்களின் துரத்தல் ஒரு பக்கம் எதிரிகளின் மிரட்டல் ஒரு பக்கம் இதை சமாளித்து அவர்கள் எப்படி வெளியில் வருகிறார்கள் என்பது படத்தின் கதையாக இருந்தாலும் ,
திரைக்கதையானது பல்வேறு கிளைக் கதைகளை கொண்டு பயணிக்கிறது. முக்கியமாக வில்லன் ஹோட்டலில் ரகசிய கேமரா வைத்து தேனிலவு கொண்டாட வரும் ஜோடிகளின் அந்தரங்க வீடியோக்களை எடுத்து அதை porn சைடில் போட்டு பணம் சம்பாதிக்கும் கொடூரமான வில்லன். இதை சுற்றி ஒரு கதை பயணிக்கிறது,ஒரு அரசியல்வாதி தன் மனைவியை கொலை செய்கிறான் அதை நோக்கியும் பயணப்படுகிறது ஹோட்டலில் எடுக்கப்படும் அந்தரங்க வீடியோ வெளியில் வந்து அதன் மூலம் தற்கொலை செய்து கொள்ளும் இருவரின் கதையை சொல்லுகிறது. இப்படி பல்வேறு திரைக்கதைகளை ஒரு புள்ளியில் இணைக்க இயக்குனர் முயற்சி செய்திருக்கிறார் அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா என்பது தான் சட்டென்று மாறுது வானிலை படத்தின் திரை கதையாக எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பாபு விஜய்
இந்தப் படத்தில் ஜெய்யுடன் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்திருக்கிறார் ஜெய் படத்தில் விஜயை பிரதிபலிக்கிறார் ஏற்கனவே நம்ம திடீர்னு தளபதி சிவகார்த்திகேயனும் விஜயை பிரதிபலிக்க இப்பொழுது ஜெயின் இந்த படத்தில் விஜயின் ரசிகராகவே வருகிறார் மீனாட்சி கோவிந்தராஜனின் நடிப்பு அளவாகவும் இயல்பாகவும் இருக்கிறது மேலும் இந்த படத்தில் யோகி பாபு சத்யன் ஸ்ரீமன் ஆதித்யா கதிர் மற்றும் பல நடித்திருக்கிறார்கள் ஸ்ரீமனுக்கு காமெடி கலந்த ஒரு காவல்துறை கேரக்டர்
படத்தின் இசை அமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இவரது இசை ஓரளவுக்கு படத்துடன் ஒத்துப் போகிறது
யோகி பாபு உடன் நடிப்பு ஏனோ படத்துடன் ஒட்டவில்லை ஆதித்யா கதிர் அவரும் பேசிக்கொண்டே இருக்கிறார்
இந்தப் படத்தின் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் உதவி இயக்குனராக இருந்தவர் தனது குருநாதரின் இடத்தை நெருங்க முயற்சி செய்திருக்கிறார் அதில் சற்றே நெருங்கியும்இருக்கிறார்
சட்டென்று மாறுது வானிலை முழுமையாக புதிய அனுபவம் கொடுக்கவில்லை என்றாலும் லைட் ரொமான்டிக் த்ரில்லர் படங்களை ரசிப்பவர்களுக்கும் இது ஒரு முறை பார்க்கக்கூடிய படம்.

