Breaking
June 5, 2026

“காளிதாஸ் 2” திரை விமர்சனம்

கதை சுருக்கம்

ஒரு குடியிருப்பில் சிறுமி காணாமல் போகும் சம்பவம் வழியாக தொடங்கும் படம், அதே இடத்தில் நடைபெறும் பல மர்ம மரணங்களுடன் கூடிய சிக்கலான விசாரணையாக மாறுகிறது.
போலீஸ் அதிகாரி (பரத்) இந்த வழக்கை விசாரிக்கும்போது பல twists & suspects வந்து கதையை திருப்புகிறது திரைக்கதை

சென்னையில் புறநகர். சென்னையில் உள்ள ஐநூறு -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப்பில்
வசிக்கும் அபர்ணதி – அனந்த் நாக், தம்பதியின் 4 வயது பெண் குழந்தை
காணாமல் போகிறது. குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும்
காவல்துறை அதிகாரிகள் பரத் மற்றும் பவானி ஸ்ரீ விசாரணையில், அதே குடியிருப்பில்
வசிக்கும் இளைஞர் அஜய் கார்த்தி மீது சந்தேகம் எழுகிறது. அவரை கைது செய்து விசாரித்துக் கொண்டிருக்கும்
போது, காணாமல் போன குழந்தையின் சடலம் கிடைக்கின்றன. இதற்கிடையே,
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அஜய் கார்த்திக்கு எதிராக எந்தவித
ஆதாரங்களும் இல்லாததால், அவரை வழக்கறிஞர் பிரகாஷ்ராஜ் காப்பற்றி அழைத்துச் சென்று விடுகிறார்.
குழந்தையின் இறப்புக்கு காரணம் யார் ? என்பதை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டும்
பரத்தின் புலன் விசாரணை ஒரு பக்கமும், அஜய் கார்த்தி தான் குற்றவாளி என்று
நிரூபிக்க போராடும் பவானி ஸ்ரீ, அதிரடியாக பயணித்துக் கொண்டிருக்கும் போது, அதே அடுக்குமாடி குடியிருப்பில் மேலும்ஒரு சிறுமி மர்மமான முறையில் உயிரிழக்கிறார். இதனால், குடியிருப்பு
வாசிகளிடத்தில் அச்சம் அதிகரிக்கிறது.இந்த மர்ம மரணங்களின் பின்னணி என்ன ?, இதற்கு பின்னணியில்

இருக்கும் உண்மையான குற்றவாளி யார் ?என்பதை பரத் எப்படி கண்டுபிக்டிக்கிறார், என்பதை பரபரப்பாக சொல்வது தான் “காளிதாஸ் -2 “
பரத் நடிப்பு: படம் முழுவதையும் தாங்கும் அளவுக்கு நல்ல performance
கிளைமாக்ஸ் ட்விஸ்ட்: படம் முழுக்க எதிர்பார்க்காத திருப்பம்
BGM: சில காட்சிகளில் tension build செய்ய உதவுகிறது
முதல் பாதி மெதுவாக நகரும்
கதை predictable ஆக இருக்கும் இடங்கள்
கேரக்டர்கள் முழுமையாக develop ஆகவில்லை

Best Tamil Crime Thriller Movie
👉 Kalidas 2

Related Post