Breaking
May 10, 2025

1500 பேருக்கு சிறப்பு வரவேற்பு வழங்கி அசத்தியுள்ளார் ஐசரி கே கணேஷ் 

ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், முதியோருக்கு என 1500 பேருக்கு சிறப்பு வரவேற்பு வழங்கி அசத்தியுள்ளார் ஐசரி கே கணேஷ் 

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், பிரபல சினிமா தயாரிப்பாளருமான டாகடர்.ஐசரி கே கணேஷ்- ஆர்த்தி கணேஷ் அவர்களின் மூத்த மகள் டாகடர்.பிரீத்தா கணேஷுக்கும், தொழிலதிபர் உமா சங்கர் – சித்திரா தம்பதியின் மகன் லஷ்வின் குமாருக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற்றது. 

இதில் அரசியல், சினிமா, ஊடகம், கல்வியாளர்கள், தங்க வைர நகைக்கடை உரிமையாளர்கள் என பலத்துறைகளை சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்த வந்திருந்தனர்.
இந்த திருமணத்தையொட்டி ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், முதியோர் என 1500 பேருக்காக மட்டும் நேற்று மாலை சிறப்பு திருமண வரவேற்பு நடைபெற்றது. ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள், சிறப்புக்குழந்தைகளின்
நடனமும் இசைக்கச்சேரி மற்றும் விருந்துடன் ஒவ்வொருவர்களுக்கும்  பரிசு பொருட்களை வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டார். 

  “ இவர்களின் முகத்தில் புன்னகையைப் பார்ப்பது இந்த சிறந்த நாளில் நம் வேல்ஸ் குடும்பத்திற்கு நாம் பெறக்கூடிய மிக அழகான ஆசீர்வாதம். இந்த வரவேற்பு என் மனதிற்கு மிகவும் நெருக்கமாகவும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.  அன்பு செலுத்துவது மட்டுமே உலகின் சிறந்த செயல் என்பதை எனக்கு நினைவூட்டியது, ”என்று டாக்டர் ஐசரி கே. கணேஷ் கூறினார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *