May 10, 2025

ஓடிடியில் கலக்கும் ZEE5-இன் கன்னட சீரிஸ், “அய்யனா மானே” !!

~ இயக்குநர் ரமேஷ் இந்திரா இயக்கத்தில், குஷி ரவி, அக்ஷயா நாயக் மற்றும் மானசி சுதீர் நடிப்பில் உருவான ZEE5-இன் அய்யனா மானே – கர்நாடகத்தின் பெருமையாகவும், ஓடிடி உலகின் அடுத்த பிளாக்பஸ்டர் சீரிஸாகவும், சாதனை படைத்து வருகிறது ~

இளைஞர்களின் இதயம் கவர்ந்த நடிகை குஷி ரவி நடிப்பில், சமீபத்தில் வெளியான ZEE5 இன் முதல் கன்னட ஓரிஜினல் வெப் சீரிஸான “அய்யனா மானே” பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த சீரிஸ் தற்போது 5 கோடி ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. மக்களின் உள்ளார்ந்த கலாச்சார அம்சத்தோடு, நவீனத்தை இணைக்கும் ZEEயின் கதைகளில் இது ஒரு சிறந்த படைப்பாக அமைந்துள்ளது. ஆறு எபிசோடுகளைக் கொண்ட இந்த திரில்லர் சீரிஸை, இயக்குநர் ரமேஷ் இந்திரா இயக்க, ஸ்ருதி நாயுடு புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ZEE5 டிஜிட்டல் உலகில் தனது தனித்துவமான நிபுணத்துவத்தால், இன்றைய தலைமுறையை ஈர்க்கும், நல்ல கதைகளைத் தருவதில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. “அய்யனா மானே” குடும்பத்துடன் முழுவதும் ரசிக்கக்கூடிய ஒரு உணர்ச்சிப் பூர்வமான திகில் அனுபவமாக அமைந்துள்ளது. இளைஞர்களின் கனவுக்கன்னி குஷி ரவி பாத்திரம், தனித்த பாராட்டுக்களைப் பெற்று வருவதுடன், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்று வருகிறது. தியா திரைப்படம் குஷி ரவிக்கு, தமிழிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுத் தந்துள்ள நிலையில், “அய்யனா மானே” சீரிஸ் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

டிஜிட்டல் தளங்களில் இதன் டிரெய்லர் மட்டும் 14-15 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த சீரிஸின் இந்தி டப்பிங் தேசிய ரீதியில் அதிகமான பார்வையாளர்களைப் பெற உதவியுள்ளது.

சிக்கல் நிறைந்த சிக்மங்கலூர் மலைப்பகுதியில் வாழும் சக்திவாய்ந்த அய்யனா மானே குடும்பம் ஒரு பயங்கரமான ரகசியத்தை மறைக்கிறது – அக்குடும்பத்தில் மூன்று மருமகள்கள் மர்மமான முறையில் இறந்துபோகின்றனர், ஒவ்வொரு மரணமும் குடும்பத்தின் தெய்வமான கொண்டையாவுடன் தொடர்புடையதாக உள்ளது. ஜாஜி (குஷி ரவி) அக்குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ளும்போது, ஒரு புதிய தொடக்கமாக இருக்க வேண்டிய அவரது வாழ்வு, விரைவாகவே சாபமிக்க கனவாக மாறுகிறது. சாபங்களின் கிசுகிசுக்கள், அமானுஷ்ய சம்பவங்கள் மற்றும் பழம்பெரும் மரபுகள் என எல்லாம் இணைந்து, ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தி விளையாடுகிறதா? அல்லது வீட்டிற்குள் இன்னும் மோசமான ஏதோ ஒன்று பதுங்கியிருக்கிறதா? என்று அவளைக் கேள்வி கேட்க வைக்கின்றன. குடும்பப் பணிப்பெண் தாயவ்வா மற்றும் காவல்துறை அதிகாரி மகாந்தேஷ் ஆகியோரின் உதவியுடன், அவள் ஆழமாக விசாரிக்கும் போது, ஒவ்வொரு பதிலும் இன்னும் பயங்கரமான கேள்விகளுக்கு மட்டுமே வழிவகுக்கிறது என்பதை ஜாஜி உணர்கிறாள். அவள் விதியின் வலையில் சிக்கிக் கொண்டாளா? மேலும் முக்கியமாக – அவள் உயிருடன் தப்பி வருவாளா? என்பது தான் இந்த சீரிஸின் கதை.

நடிகை குஷி ரவி கூறுகையில்:
”‘அய்யனா மானே’ ஒரு மறக்க முடியாத அனுபவம். இந்த கதாபாத்திரத்தில் பயம், எதிர்பார்ப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவது சவாலானதாய் இருந்தது, ஆனால் அதே சமயம் எனக்கு மிகவும் திருப்தி அளித்த பாத்திரமாக அமைந்தது. இந்த சீரிஸ் இந்த அளவிற்கு ரசிகர்களிடம் சென்று சேரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இப்போது ரசிகர்கள் என் மீது காட்டும் அன்பு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இதற்காக ZEE5 மற்றும் ஸ்ருதி நாயுடு புரொடக்ஷன்ஸுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.”

இயக்குநர் ரமேஷ் இந்திரா கூறுகையில் :
“அய்யனா மானே எனது உள்ளார்ந்த பயம், நம்பிக்கை மற்றும் குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களிலிருந்து உருவானது. இது கர்நாடக கலாச்சாரத்தின் ஆழத்தைப் பிரதிபலிக்கும் ஒரு முயற்சியாகவும் இருந்தது. இந்த வெற்றி, இந்தியாவில் உள்ள மண் மற்றும் மொழி சார்ந்த கதைகள் புதிய உயரங்களை எட்ட முடியும் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.”

இப்போதே ‘அய்யனா மானே’ சீரிஸை ZEE5-இல் கண்டு களியுங்கள் – திரில்லரின் புதிய அனுபவத்தைப் பெறுங்கள்.

🔗https://www.youtube.com/watch?v=9F3YU0oE9vs&pp=ygUZYXl5YW5hIG1hbmUgdGFtaWwgdHJhaWxlcg%3D%3D

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *