ZEE5 இல் “சங்கராந்திகி வஸ்துனம்” திரைப்படம், 360 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்த புதிய சாதனை படைத்துள்ளது !!

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5 இல் , கடந்த மார்ச் 1ஆம் தேதி வெளியான “சங்கராந்திகி வஸ்துனம்” திரைப்படம், மிகப்பெரிய வரவேற்பைக் குவித்து, சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படம் 360 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, இதுவரையிலான ஸ்ட்ரீமிங்க் சாதனைகளைத் தகர்த்துள்ளது.

ZEE தொலைக்காட்சியில் இத்திரைப்படத்தின் உலக தொலைக்காட்சி முன்னுரிமையுடன் (WTP) நடந்த டெலிகாஸ்ட் 18.1 TVR (SD+HD) என சாதனை புரிந்தது, இது கடந்த 2.5 ஆண்டுகளில் இந்தியாவில் எந்தவொரு நிகழ்ச்சியும் எட்டாத உயரமாகும். மேலும், 11.1 மில்லியன் AMAs (சராசரி நிமிட பார்வையாளர்கள்) என்பதைத் தாண்டி சாதனை படைத்த இத்திரைப்படம், இந்தியா முழுவதும் பார்வையாளர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.

நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம், திரையரங்குகளில் ₹300 கோடியைத் தாண்டி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் OTT வெளியீட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை 12 மணி நேரத்திற்குள் கடந்து புதிய சாதனை படைத்தது. தற்போது வரை 360 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனையையும் படைத்துள்ளது

ZEE5 தரப்பில் கூறியதாவது..,
“சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படத்தின் அபார வெற்றி, தரமான கதை சொல்லலுக்கு மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பைப் பிரதிபலிக்கிறது. ZEE5 இல் இந்தப் படத்தின் சாதனைப் பதிவு, இந்தியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கை வழங்குவதற்கான எங்கள் முன்னெடுப்பிற்கான ஊக்கமாக அமைந்துள்ளது. ZEE5 சார்பில் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்விக்கும் தரமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்குவோம்.

இயக்குநர் அனில் ரவிபுடியின் இயக்கத்தில், வெங்கடேஷ் டக்‌குபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்திரி மற்றும் உபெந்திரா லிமாயே ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் ஒரு குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை அழுத்தமான காமெடியுடன் பரபரப்பான ரோலர் கோஸ்டராக சொல்லியது. “YD ராஜு” என்ற ஓய்வு பெற்ற காவலர் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் டாக்‌குபதி, “பாக்யலக்ஷ்மி” (ஐஸ்வர்யா ராஜேஷ்) மற்றும் அவரது முந்தைய காதலியாக “மீனாட்சி” (மீனாட்சி சௌதரி) கதையின் மைய கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். ஒரு பிரபல பிஸினஸ்மேன் கடத்தப்படுகிறார், இதனால் ராஜு மீண்டும் தனது கடந்தகால ஆக்சன் அவதாரத்தில் இறங்கி, அந்த பிரச்சனையை எப்படி தீர்க்கிறார் என்பது தான் இப்படத்தின் கதை. குடும்பம், காதல், காமெடி அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்து பரபரப்பான திரைக்கதையுடன் அருமையான எண்டர்டெயினராக இப்படம் ரசிகர்களை மகிழ்விக்கிறது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *