சாம்சங் சென்னை ஆலையின் மேலாண்மை இயக்குனர் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பக் கோரியுள்ளார். நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என உறுதியளித்துள்ளார்.
சென்னை, செப்டம்பர் 27, 2024: வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் செப்டம்பர் 27, 2024 வெள்ளிக்கிழமைக்குள் பணிக்குத் திரும்பினால் அவர்கள் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று சாம்சங்கின் சென்னை ஆலையின் மேலாண்மை இயக்குநர் திரு.SH.யூன் இன்று உறுதியளித்துள்ளார். மேலாண்மை இயக்குனர் யூன் சாம்சங்கின் பணியாளர் நலன் மற்றும் நேர்மறையான பணிச்சூழலுக்கான.உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
சில தொழிலாளர்கள் வெளிப்புறக் காரணிகளால் தவறாக வழிநடத்தப்பட்டு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளனர், ஆனால் நிறுவனம் திரும்பி வரும் தொழிலாளர்களைப் பாதுகாத்து அவர்களின் நல்வாழ்வைக் கவனித்துக் கொள்ளும் என்றார். குளிரூட்டப்பட்ட போக்குவரத்து, நிதி உதவி மற்றும் சிறப்பு பண்டிகை சலுகைகள் உள்ளிட்ட ஊழியர்களின் நலனை மேம்படுத்த நிறுவனம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.
ஊழியர்களின் திருப்தி மற்றும் வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்துவதை வெளிப்படுத்தும் வகையில், சென்னை ஆலையை இந்தியாவில் வேலை செய்வதற்கான சிறந்த இடங்களில் ஒன்றாக மாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.