Breaking
November 18, 2024

ஏ ஆர் ஆர் (ARR) ஃப்லிம் சிட்டியில் யூஸ்ட்ரீம் (uStream) என்ற பெயரில் அதிநவீன வசதிகளை கொண்ட மெய்நிகர் தயாரிப்புக் கூடம் தொடக்கம்

ஏ ஆர் ரஹ்மான், மணிரத்னம் உள்ளிட்ட சர்வதேச புகழ் பெற்ற திரைப் பிரபலங்கள் பங்கேற்பு

சென்னையில் உள்ள ஏ ஆர் ஆர் (ARR) ஃப்லிம் சிட்டியில் யூஸ்ட்ரீம் (uStream) என்ற பெயரில் அதிநவீன வசதிகளை கொண்ட மெய்நிகர் தயாரிப்புக் கூடம் (Virtual Production Studio) இந்தியா மற்றும் உலகெங்கும் இருந்து வந்திருந்த 500க்கும் மேற்பட்ட திரையுலகப் பிரமுகர்கள் முன்னிலையில் செப்டம்பர் 22 அன்று தொடங்கப்பட்டது.

முழுமையான தொழில்நுட்பப் பணிகளை வழங்கும் uStream, ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் A.R. ரஹ்மான் மற்றும் தொழில்துறை முன்னோடி ஸ்ரீதர் சந்தானம் கூட்டணியில் உருவாகியுள்ளது. இந்திய சினிமாவின் புதிய யுகத்தை வரவேற்க வழிவகுப்பதாய் இது வடிவம் எடுத்திருக்கிறது.

தொடக்க விழாவில் தொழில்துறை தலைவர்களின் கருத்தாழம் மிக்க உரைகள் இடம்பெற்றன. சிஜி ப்ரோவைச் சேர்ந்த எட்வர்ட் டாசன் டெய்லர், மெய்நிகர் தயாரிப்பில் தனது நிபுணத்துவத்தையும், எதிர்காலத் திரைப்படத் தயாரிப்பை மாற்றி அமைக்கும் தொழில்நுட்ப திறனையும் பகிர்ந்து கொண்டார்.

Dimension5 ஐச் சேர்ந்த இயன் மெசினா திரைப்படத் தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவின் அற்புதமான பயன்பாடுகளைப் பற்றி எடுத்துரைத்தார். இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, பிரபல இயக்குநர் மணிரத்னம் கலந்து கொண்டு, UStream-ன் புதுமையான திறன்கள் மீதான தனது ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தினார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது தொடக்க உரையில், “கலை மற்றும் தொழில்நுட்பம் உயர் மட்டத்தில் சங்கமிக்கும் இடமாக UStream அமைந்துள்ளது. UStream மூலம் இந்தியக் கதைசொல்லலை உலகளாவிய பார்வையாளர்களுக்கு கொண்டு செல்ல முடியும். தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு தொழில்நுட்பத்தை மட்டுமில்லாமல், புதிய வாய்ப்புகளையும் அளிப்பதும் இதன் நோக்கம் ஆகும்,” என்றார்.

ஸ்ரீதர் சந்தானம் பேசுகையில், “UStream என்பது வெறும் ஸ்டுடியோ அல்ல; இது இந்தியத் திரைப்படத் தயாரிப்பில் புரட்சியை ஏற்படுத்தும் புதுமைக்கான மையம். சென்னையில் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களை சர்வதேசத் தரத்தை அடையச் செய்வதே எங்கள் குறிக்கோள்,” என்று கூறினார்.

வியப்பூட்டும் LED திரை அமைப்புகள் கொண்ட இந்த ஸ்டூடியோவில், கலைஞர்கள் கணினி காட்சியமைப்புகளுடன் கற்பனை செய்ததை, நேரடியாக அந்தக்கணத்திலேயே கண் முன் காட்சிப்படுத்த முடியும். இந்த நவீன டிஜிட்டல் நுட்பத்தைக் உலகப்பதிவுகள், அக்கணத்தின் கற்பனைக்காட்சிப்படுத்துதல், செயல்திறன் பதிவு, பல மெய்நிகர் காட்சிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் simulcam நுட்பம், கேமராவினுள்ளேயே செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் (ICVFX) கொண்டு உலகின் மெய்நிகர் தயாரிப்புத்துறையில் முன்னணியில் இருக்கிறது uStream.

நவீன அம்சங்கள் மற்றும் விரிவுபடுத்தக்கூடிய கட்டமைப்பு

1.9 பிக்சல் தடத்திற்கு உட்பட்ட முதன்மையான LED சுவர் 40 அடி நீளமும், 20 அடி உயரமும் கொண்டது. நேரடி 3D சூழல்களுக்காக வடிவமைக்கப்பட்ட அதிவேகத் துல்லியமான ரெண்டர் (Render) கட்டமைப்பு. 7,000 சதுர அடி பரப்பளவுடைய ஸ்டூடியோ.
விரிவான கேமரா டிராக்கிங் அமைப்பு, காட்சிகளுக்கு ஏற்ற ஒளியமைப்பைப் பெறுதல், படக்காட்சிகளின் தரவுகளை உடனுக்குடன் பதிவேற்றுதல், உயர்தரப் படக்காட்சிகள் மற்றும் நிறக்கட்டமைப்புகளை விரைவாக, விருப்பத்திற்கு ஏற்ற முறையில் செயல்படுத்தும் வசதி.
ஸ்டூடியோவை 20,000 சதுர அடிக்கு விரிவுபடுத்தும் திட்டம்.
படத்தயாரிப்பாளர்களுக்காக, தொடக்கம் முதல் நிறைவு வரை ஒருங்கிணைந்த தயாரிப்புத் தீர்வுகளை வழங்குதல்.
படப்பிடிப்பிலிருந்து, எடிட்டிங் & இறுதிப்பணி வரை சீராகச் செயல்படும் உட்புற (on-site) படப்பிடிப்பிற்குப் பின்பான தயாரிப்பு அறைகள்.

விரிவுபடுத்தக்கூடிய ரெண்டர் (render) கணினிகள், மிகக்கடினமான காட்சியமைப்புகளையும் எளிதாகக் கையாள்கிற வகையில் வடிவமைக்கப்பட்ட கணிப்பொறிகள்.
மொபைல் LED பக்கச்சுவர்கள், நகர்த்தக்கூடிய LED வான்முக விளக்குகள் (Sky light) மற்றும் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட கேமரா-டிராக்கிங் அமைப்புகள். இதனால் இலகுவாகும் படத்தயாரிப்பு.
திரைத்துறையின் தொலைநோக்குப்பார்வையைக் கொண்டு இயங்கும் பொறியியல் பணிமனை, தயாரிப்பு பணிச்சூழல், தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஆதரவான உபகரணக் களஞ்சியம்.
உடனடி கூட்டுச்செயல்பாட்டிற்காக இணைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த இணையப்பதிவேற்றச் சேமிப்பு (Cloud-Integrated Workflow)
தொழில்நுட்பத்தை முன்னிலைப்படுத்துதல்.
உலகின் எந்த மூலையில் இருப்பினும், படத்தயாரிப்பாளர்கள் அன்றாடம் பதிவேற்றும் வீடியோ காட்சிகளை உடனடியாக அணுகக்கூடிய, ‘காமிராவிலிருந்து இணையச்சேமிப்பு’ (camera-to-cloud) என்ற புதியதொரு தொழில்நுட்பத்தை உருவாக்குதல்.
முழுமையான ஒருங்கிணைந்த இணைய அமைப்பு, தயாரிப்பு காலக்கெடுக்களை விரைவுபடுத்தி, இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள், VFX குழுக்கள், மற்றும் படப்பதிவிற்குப் பிந்தைய தயாரிப்பு விற்பனையாளர்களுக்கு நேரடி ஒத்துழைப்பைச் சாத்தியமாக்குதல்.
ஸ்டூடியோவின் இணைய அடிப்படையிலான VFX மற்றும் தயார்நிலை காட்சிகள் அமைப்பு வழியாக மேம்பட்ட தீர்வை வழங்குகுதல்.
காட்சிகள், கோப்புகள் மற்றும் காட்சிப்படிமங்களின் பரிமாற்றத்தின் போது ஏற்படும் தாமதங்களை கணிசமாகக் குறைத்து, திரைப்படக்குழுவின் தயாரிப்புத் திறனை மேம்படுத்துதல்
பல்துறை தயாரிப்பு இடங்கள் (Versatile Production Spaces)

திரைக்கலைஞர்களின் பல்வேறு படைப்பாற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக உருவாக்கப்பட்ட மெய்நிகர் இடம் தேடல் பகுதி, தொழில்நுட்பத்தேடல் பகுதி, VIP பார்வையிடல் பகுதி, மேம்பட்ட செயல்திறன் பதவிற்கான பகுதிகள், சிமுல்கேம் கட்டமைப்புகள்.
இயக்குநர்கள், நிர்வாகிகள், விருந்தினர்கள் படப்பிடிப்பின் போதே முன்வரிசையில் அமர்ந்து நேரடியாகக் காட்சிகளை காணும் சாத்தியம் மினியேச்சர் ஸ்கேனிங், மினியேச்சர் 3D பிரிண்டிங், காஸியன் ஸ்பிளாட்டிங் தொழில்நுட்பங்களையும் (Gaussian splatting) விரைவில் வழங்குதல்.
வீடியோக்களில் இருந்து
குறைந்த படங்கள் அல்லது கையிருப்பு அசாதாரணமான உண்மை சார்ந்த 3D காட்சிகளை உருவாக்குதல்.
சென்னையின் மையத்தில் உள்ள இரண்டாவது, சிறிய LED மேடையும் நிகரான உயர்தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கிறது.
இந்தக்கூடுதல் வசதி குறுகிய வடிவ உள்ளடக்கங்கள், இசை வீடியோக்கள், மற்றும் நிறுவனப்படப்பிடிப்புகளைப் பூர்த்தி செய்யும். அனைத்துத் தரப்பட்ட தயாரிப்புத் திட்டங்களையும் ஆதரிக்கக் கூடியது.
சிறந்த திறன் மற்றும் புதுமைக்கான உலகளாவிய கூட்டுச்செயல்பாடுகள்
இந்தியாவில் மெய்நிகர் தயாரிப்பின் தரத்தை உயர்த்துதல்.
உலகின் முன்னணி கணினி காட்சி (visual effects) மற்றும் கைவினை நுட்பங்களை கொண்ட AL தொழில்நுட்ப நிறுவனங்களுடன், பன்னாட்டு வழிநடத்துர்களுடன், பங்குதாரர்களுடன் வகுத்த யுத்திகளைச் செயல்படுத்துதல்.
CG Pro நிறுவனம், உலகளாவிய திறமைகளை அறிமுகப்படுத்துவதுடன் VFX துறையில் நவீனப் பயிற்சியையும் வழங்குவது.
Vu, Dimension5, Cuberic போன்ற திரைப்படத்தொழில்நுட்ப நிறுவனங்கள் AI மூலம் உருவாக்கப்படும் பின்னணிகளைக் கொண்டு உள்ளூர்த்தயாரிப்புகளின் தரத்தையும் படைப்பாற்றலையும் பன்னாட்டுத்தரத்திற்கு உயர்த்துவதை உறுதிசெய்தல்.
உலகளாவிய ஸ்டூடியோக்கள் மற்றும் VFX கலைஞர்களுடன் நெருங்கிய தொடர்புகளை மேற்கொண்டு, இந்திய திரைப்படத்தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்துவதில் தீவிரமாகச் செயல்படுதல்.

ARR ஃபிலிம் சிட்டி: ஏஆர்ஆர் திரைப்பட நகரம் – உலகளாவிய தயாரிப்புகளுக்கான ஒரு கலைத்துறை மையம்

சென்னையின் அருகில் 100 – ஏக்கர் பரப்பளவில் அமைந்த ARR ஃபிலிம் சிட்டி, உள்ளூர் மற்றும் சர்வதேசத்தயாரிப்புகளுக்கான சிறந்த சூழலை வழங்குகிறது. uStream – ஸ்டூடியோவின் உயர்தொழில்நுட்ப மெய்நிகர் தயாரிப்பு மேடையைத் தவிர, ARR ஃபிலிம் சிட்டி, இசையமைப்பாளர் A.R. ரஹ்மான் அவர்களால் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட உலகத்தரத்திலான இசைப்பதிவு, தயாரிப்புக் கூடத்தையும் கொண்டிருக்கிறது. பாரம்பரிய திரைப்படத்தயாரிப்பு, படப்பிடிப்பு அரங்க உருவாக்கத்திற்குப் பொருத்தமான இரண்டாவது மேடை மற்றும் பல அளவிலான தயாரிப்புக் குழுக்களுக்கான தனிப்பட்ட வசதிகளையும் கொண்டிருக்கிறது. திரை இயக்குநர்கள் தங்கள் படைப்பாக்கத் திட்டங்களில் முழுமையான கவனம் செலுத்துவதற்கு வழிவகுக்கிறது, இந்தக் கலைமையம். அதே நேரத்தில் சிறந்த தரமான வசதிகளை ஒரே இடத்தில் பயன்படுத்தும் வாய்ப்பையும் வழங்குகிறது.
தொழில்நுட்பம், படைப்பாற்றல், ஒத்துழைப்பு, கூட்டு உழைப்பு மனப்பாங்கின் கலவையுடன், uStream இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதிலும் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கான ஒரு மகிழ்ச்சியான கலங்கரை விளக்கமாகச் சுழன்று எரியும்.

Related Post