கடந்து வந்த பாதையை மறந்த விஜய், அரசியலில் வெற்றி காண்பாரா???????????


தமிழ் திரையுலகின் பிரபல முன்னனி இயக்குநர் S.A. சந்திரசேகர் ஷோபா இவர்களின் மகன் விஜய். தந்தையின் செல்வாக்கினால் தமிழ் திரையில் எளிதாக நாயகனாக களம் இறங்கினார் ஆரம்பகால படங்கள் சரியாக போகாத நிலையில் இவரது தந்தை மேல் இருந்த மரியாதையில் நடிகர் விஜயகாந் அவர்கள் விஜய் படத்தில் இணைந்து நடித்து அவரை வளர்த்துவிட்டார். அதன் பிறகு விஜய்க்கு தமிழ் திரையுலகில் ஏறுமுகம்தான். விஜய் வளர வளர அவரது தந்தையின் ஆதிக்கம் குறைய தொடங்கியது. அந்த நிலையில் திரு சந்திரசேகர் அவர்கள் அரசியலில் இறங்கினார். இந்த நிலையில் விஜயின் பெயரில் ரசிகர் மன்றம் மூலம் பல்வேறு விஷயங்களை செய்து விஜய்யையும் அரசியலுக்கு கொண்டு வர முயற்ச்சி செய்தார்.. ஆனால் சில காலங்களில் தந்தைக்கு மகனுக்கும் பிரச்சனை வந்து தனியாக வாழ தொடங்கினார். தன் பெயரை பயன்படுத்தியதற்காக தந்தை மீதே வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் பிரபல முன்னனி நடிகைகளுடன் தொடர்பில் இருப்பதாக செய்தி வந்தது. இதன் காரணமாக மனைவியை பிரிந்து விட்டார் என்றும், வீட்டில் இருவரும் தனி தனியாக இருக்கிறார்கள் என்றும் இன்று வரை பேசப்படுகிறது.. இவருக்கும் மகனுக்கும் பிரச்சனை என்றும் பேசபடுகிறது.. ஆனாலும் திரையுலகில் மிகவும் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் புஸ்ஸி ஆனந்தை ஆலோசகராக கொண்டு கட்சி ஆரம்பிப்பதாக கூறினார். சினிமாவில் இருந்து முழுமையாக விலகுவதாக கூறினார். கட்சியையும் ஆரம்பித்தார். ஆனால் பத்திரிகையாளர்களை கண்டு பயந்தார். அவர்களை சந்தித்து பேசுவதை தவிர்த்தார். இதற்கு மேலாக புஸ்லி ஆனந்தோ அவர் தான் கட்சி தலைவர் என்பது. போல் நடந்து கொள்கிறார். இது விஜய்க்கு தெரியுமா என்று தெரியவில்லை நிர்வாகிகள் யாராவது விஜய்யை . சந்திக்க வந்தால் அவர்களை அவமதித்து அனுப்புவார். சமீபத்தில் நடந்த தனது கட்சி கொடி அறிமுக விழாவில் பெற்றவர்களை மதிக்கவில்லை. பத்திரிகையாளர்களை அவமதித்து,

சிறு பத்திரிகைகள் யாரும் வர கூடாது, பெரிய பத்திரிகைகள் மட்டும்தான் வர வேண்டும், அவர்களுக்கும் ஏகப்பட்ட கெடுபுடிகள், என்று கொடுத்துள்ளனர்.
கொடி அறிமுக விழா கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஆனால் அவர் வீடு உள்ள ஏரியாவில் உள்ள பொதுமக்கள் பெரும் தொல்லைக்குள்ளாயினர். அதற்கு எந்த அறிக்கையும் இல்லை.
இந்நிலையில் இவர் நடித்து பெரும் பொருட் செலவில் தயாரிகியுள்ள படம் GOAT இந்த படத்திற்கு கோடி கணத்தில் சம்பளம் பெற்று, தயாரிப்பாளர் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அவரை வர சொல்லி எவ்வளவோ கேட்டும் இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று அலைக்கழித்து கடைசி வரை வராமல் போனர். அதற்கு காரணம் அங்கு வந்தால் பத்திரைக்கையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற பயத்தில் அவரது அறிவு மிகுந்த ஆலோசகரை கேட்டு வராமல் போனார்.

இதே மாதிரி சென்றால் அவர் எப்படி பொதுமக்களை சந்திப்பார். அரசியலில் ஜெப்பாரா? திரையில் ஜெயிக்க பத்திரிகையாளர்கள் ,ரசிகர்கள் தேவைப்பட்டது ஆரசியலுக்கு வந்தால் அவர்களை உதாசீனப்படுத்துவது. இதுதானோ இவர் பாதை.

தன் தந்தையின் சதாபிஷேகத்திற்கு கூட செல்லாமல் அவமதித்த விஜய் மக்களை என்ன வெல்லாம் அவமதிக்க போகிறாரோ?

Related Post