பஸ் ஸ்டாப் அமைக்கும் பணிக்காக

கேளம்பாக்கம் சந்திப்பு அருகே பள்ளம் தோண்டியபோது
ஏஜி&பி பிரதம் எரிவாயு குழாயில் சேதம்:
உடனடியாக சீரமைக்கப்பட்டு கியாஸ் வினியோகம்

செங்கல்பட்டு, ஜூலை 10- ஏஜி&பி பிரதம் நிறுவனம் வீடுகள், தொழில்துறை, வணிக நிறுவனங்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை (பிஎன்ஜி) வழங்குவதற்காக இந்நிறுவனம் செங்கல்பட்டு பகுதியில் பூமிக்கு அடியில் குழாய்களை பதித்துள்ளது. இந்த குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள பாதைகளில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் கேளம்பாக்கம் சந்திப்பு அருகே பஸ் ஸ்டாப் பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர் அவற்றை அலட்சிப்படுத்திவிட்டு. எரிவாயு குழாயில் சேதம் ஏற்பட்டு அதில் இருந்து கியாஸ் வெளியேறியது. இது குறித்து தகவல் அறிந்து ஏஜி&பி பிரதம் நிறுவன ஊழியர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று அதை சீரமைத்தனர். பின்னர் அப்பகுதியில் எரிவாயு வினியோகம் சீரடைந்தது. இது குறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடப்பு சட்டத்தின்படி ஐபிசி பிரிவு 285 மற்றும் 336-ன் கீழ், அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற பணிகளால் ஏற்படும் சேதங்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 25 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

அரசு சட்டத்தின்படி, மூன்றாம் தரப்பினர் பள்ளம் தோண்டும் பணிகளைத் தொடங்க திட்டமிட்டால், அவர்கள் நகராட்சி அல்லது நகர எரிவாயு வினியோக நிறுவனத்திற்கு ‘தோண்டுவதற்கு முன் தொடர்பு கொள்ளுங்கள்’ என்னும் எண்ணிலும் ஏஜி&பி பிரதம் நிறுவனத்தின் கட்டணமில்லா எண். +91 8056847333/1800-2022-999 மூலம் தெரிவிக்க வேண்டும்.

Related Post