Breaking
June 5, 2026

January 2026

யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்திலிருந்து, மெலிசா (Mellisa) பாத்திரத்தில், ருக்மணி வசந்தின் ஃபர்ஸ்ட் லுக்

யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படம், மேலும் மேலும் இருளும், ஆழமும் , துணிச்சலுடனும் வளர்ந்து வரும் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக தன்னை நிறுவி வருகிறது. அந்தப் பயணத்தில், முக்கியமான திருப்பமாக, மெலிசா என்ற கதாபாத்திரத்தில் ருக்மிணி வசந்த் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். கம்பீரமும் அதிகாரமும் கொண்ட, அசைக்க முடியாத உறுதியுடன் நிற்கும் மெலிசாவாக திரையில் தோன்றுகிறார்.

இந்த படம், இயக்குநர் கீது மோகன்தாஸின் தனித்துவமான கற்பனை உலகில், நடிகர் யாஷுடன் ருக்மிணி வசந்த் இணைவது, முக்கியமான கூட்டணியாக அமைந்துள்ளது. தனித்துவமான நடிப்பு திறமைக்கு பெயர்பெற்ற ருக்மிணியின் அறிமுகம், கீதுவின் உணர்வுப்பூர்வமான, கதைசொல்லலுக்கும், உலகத் தரத்திலான இந்திய திரைப்படம் உருவாக்க வேண்டும் என்ற யாஷின் கனவுக்கும் வலுவான அடையாளமாக இருக்கிறது.

முன்னதாக கியாரா அத்வானி (நாதியா), ஹூமா குரேஷி (எலிசபெத்), நயன்தாரா (கங்கா), தாரா சுதாரியா (ரெபேக்கா) ( Rebecca) ,ஆகியோரின் கண்கவர் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இப்போது மெலிசாவாக ருக்மிணி வசந்தின் அறிமுகம், ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தின் உலகத்தை மேலும் அழகுபடுத்துகிறது.

1960-களின் இறுதிக் காலத்தை பின்னணியாகக் கொண்ட பார்ட்டி சூழலில், மெலிசா தன்னம்பிக்கையின் உருவமாக இயல்பாக நடிக்கிறார். அவளைச் சுற்றியுள்ள சத்தம், கலகலப்பும், கூட்டம், கொண்டாட்டம் என அனைத்தையும் மீறி, அவளின் கண்களில் தெரியும் கூர்மையான உறுதி நம் கவனத்தை ஈர்க்கிறது. அந்த கூட்டத்தில் கூட, அவள் முழுமையாக தன் கட்டுப்பாட்டில், சூழலை தன்னகத்தே வைத்துக்கொள்ளும் ஒரு ஆளுமை அவளின் நடையில், பார்வையில் வெளிப்படுகிறது.

இயக்குநர் கீது மோகன்தாஸ் கூறியதாவது:

“ருக்மிணியிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவளின் அறிவாற்றல். அவள் வெறும் நடிப்ப்பை மட்டும் வெளிப்படுத்துவதில்லை, அவள் ஆழமாக சிந்திக்கிறாள். சந்தேகத்தால் அல்ல, ஆர்வத்தால் கேள்விகள் கேட்கிறாள். அது என்னையும் இயக்குநராக மேலும் ஆழமாக யோசிக்க வைக்கிறது. சில நேரங்களில் நான் சிந்தித்த விசயங்களையும் மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. திரையில் உள்ள அறிவாற்றல் பெரும்பாலும் சொல்லப்படாத இடங்களில்தான் இருக்கும் என்பதை அவள் நினைவூட்டுகிறாள். காட்சிகளுக்கு இடையில், அவள் அமைதியாக தனது குறிப்பேட்டில் எழுதிக்கொண்டிருப்பதை நான் அடிக்கடி பார்க்கிறேன்—செட்டிலிருந்து கிடைக்கும் சிறு அனுபவங்கள், எண்ணங்களை பதிவு செய்கிறாள். அந்தக் கணங்களே அவளின் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றன. அவள் எப்போதும் தனக்கான தனி உலகத்தை கட்டியெழுப்பிக்கொண்டே இருக்கிறாள். அவளின் அணுகுமுறை மிகுந்தசிந்தனையுடையது சில நேரங்களில், அந்த அடுக்குகளான நடிப்பிற்குப் பின்னால் இருக்கும் மனதைப் புரிந்துகொள்ள, அவள் குறிப்பேட்டின் பக்கங்களைப் படிக்க முடியுமா என எனக்கு ஆசை கூட வருகிறது.”

யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதையை எழுதியுள்ள இந்தப் படம், கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கத்தில் உருவாகியுள்ளது. ஆங்கிலம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

தேசிய விருது பெற்ற ராஜீவ் ரவி ஒளிப்பதிவையும், ரவி பஸ்ரூர் இசையையும், உஜ்வல் குல்கர்ணி எடிட்டிங்கையும், T.P.அபித் புரொடக்ஷன் டிசைன் கவனிக்கின்றனர். ஆக்‌ஷன் காட்சிகளை ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் J.J. பெரி (John Wick) உடன் இணைந்து இணைந்து அனுபவம் வாய்ந்த அன்பறிவ் மற்றும் கெச்சா காம்பக்‌டி (Kecha Khamphakdee)அமைத்துள்ளனர்.

வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, வரவிருக்கும் மார்ச் 19-ம் தேதி, ஈத், உகாதி, குடி பட்வா ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து, திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

JITO HOSTS NATIONAL JOB FAIR 2.0 IN CHENNAI

Chennai, January 7, 2026: Jain International Trade Organization (JITO) organised National Job Fair 2.0 at SRKK Agarwal Bhawan, Anna Nagar, with the objective of promoting youth employment and economic empowerment. The programme was held under the joint aegis of JITO Chennai Chapter, JITO Youth Wing and JITO Ladies Wing, with the Flossil Group of Companies extending principal support.

Shri Samay Singh Meena, IPS, DCP (Traffic), Tambaram, attended the event as the Chief Guest. Addressing the gathering, he stated that such initiatives go beyond employment generation and play a vital role in enabling youth participation in nation-building. Shri Sitaram Goyal, President, Agarwal Sabha, was present as the Guest of Honour, while actress Upasana RC attended as the Special Guest.

The job fair witnessed participation from over 32 reputed companies representing sectors such as banking, IT, retail and manufacturing. More than 500 candidates registered and participated in the recruitment process. Following day-long interviews, several candidates received on-the-spot job offers, while many others were shortlisted for further rounds.

Mr.Ajay Nahar, Chairperson, JITO Chennai said, National Job Fair 2.0 seems to be focused on creating employment opportunities, especially for women and underprivileged groups. The event is likely organized to support the community in Chennai, aligning with the mission of service, education, and economic empowerment.

Organisers acknowledged the significant support extended by the Flossil Group of Companies, stating that its active involvement contributed substantially to the scale and smooth execution of the job fair.

Office bearers of JITO, including Rajesh Chandan, Akash Chauhan, Pankaj Kankaria, Ajay Nahar and CS Ashish Jain, Sunil Balawat along with members of JITO Chennai, Chennai Plus, Youth Wing and Ladies Wing, coordinated the event. The proceedings were effectively anchored by Pinky Mehta.

Members and volunteers of the JITO Youth and Ladies Wings, including Suresh Gundecha, Pankaj Kankaria, Pinky Bhandari, Adarsh Betala, Himanshu Jain, Sudarshan Bohra, Nitesh Lodha, Rishabh, Slok and Sharmila, rendered dedicated services and played a key role in ensuring the smooth conduct of the programme.

The organisers stated that the initiative reflected JITO’s continued commitment to service, knowledge and economic empowerment, while providing meaningful employment opportunities to the youth.

Yamaha Celebrates Pongal with Special Festive Offers on Fascino 125 Fi Hybrid, Ray ZR 125 Fi Hybrid, FZ-S Hybrid and R15 in Tamil Nadu

As the golden harvest season arrives, Pongal brings with it warmth, gratitude, and new beginnings. Embracing the spirit of this auspicious festival, India Yamaha Motor invites customers to celebrate Pongal by riding home on a Yamaha, with specially curated festive offers across its popular range of motorcycles and scooters. Designed to add joy to the celebrations, these limited-period Pongal benefits make owning a Yamaha more rewarding than ever.

Pongal Special Offers on motorcycles & scooters:

  • Special price on the new Yamaha XSR 155: Experience modern retro design with a limited-time special offer, featuring a introductory ex-showroom price of Rs. 1,51,493 only.
  • 70th Anniversary Celebration offers on Yamaha R15: Mark Yamaha’s 70th Anniversary with special price savings of Rs. 6,000 on the on-road price, clearly showcasing the old price versus the new festive price for greater value transparency.
  • Pongal Offers on Yamha Fascino 125 Fi Hybrid: Enjoy Insurance Benefits worth Rs. 3,000, with down payment starting at just Rs. 4,999* bringing style, comfort, and festive value together.
  • Pongal offers on Yamaha Ray ZR 125 Fi Hybrid Scooter: Now save up to Rs. 7,000 on the popular Yamaha RayZR 125cc hybrid scooter along with down payment starting at Rs. 4,999*.
  • Yamaha FZ-S Hybrid offers for Pongal: Step into the future of motorcycling with a down payment starting from Rs. 7,999*, combining performance, efficiency, and advanced hybrid technology.

These exclusive Pongal offers are available for a limited time only, making this the perfect moment for customers to align festive prosperity with Yamaha’s performance, innovation, and riding excitement. This Pongal, start the year with momentum—start it on a Yamaha.

Yamaha’s diverse product portfolio includes premium motorcycles such as YZF-R15M (155cc), YZF-R15 V4 (155cc), YZF-R15S V3 (155cc), MT-15 V2 (155cc), Yamaha XSR155 (155cc) and the FZ series that comprises of FZ-S Fi Hybrid (149cc), FZ-S Fi (149cc), and FZ-X Hybrid (149cc), FZ-X (149cc). Additionally, Yamaha offers a range of scooters including Aerox 155 version S (155cc), Aerox 155 (155cc), Fascino S 125 Fi Hybrid (125cc), Fascino 125 Fi Hybrid (125cc), RayZR 125 Fi Hybrid (125cc), and RayZR Street Rally 125 Fi Hybrid (125cc).

பால் தினகரன் தலைமையில் சென்னையில் நடைபெற்ற கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு புது வருட பிரார்த்தனை

பால் தினகரன் ஒருங்கிணைப்பில் கிறிஸ்தவ தலைவர்கள் ஒன்றுகூடி நடத்திய புது வருட பிரார்த்தனை நிகழ்வில் 40 அடி நீள கேக் வெட்டப்பட்டது

எங்களுக்கு தீமை செய்கிறவர்களுக்காக இன்னும் அதிகமாக பிரார்த்தனை மற்றும் சேவை செய்ய எங்களை அர்ப்பணிப்போம் – இயேசு அழைக்கிறார் நிறுவனர் பால் தினகரன்

புது வருட ஆசீர்வாதத்திற்காக ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களின் கூடுகையில் எல்லா கிறிஸ்தவ சபை தலைவர்களும், கிறிஸ்தவ சமூக சேவர்களும், ஊடகத்துறை தலைவர்களும், வழக்கறிஞர்களும், கல்வி ஸ்தாபனங்களின் தலைவர்களும் மற்றும் சமூக பிரமுகர்களும், சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஒன்றாக கூடி, 40 அடி நீளம் கொண்ட கேக் வெட்டி புதுவருடத்தை கொண்டாடினார்கள்.

இதனை இயேசு அழைக்கிறார் நிறுவன தலைவரும், காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தரும், சீஷா தொண்டு நிறுவன தலைவருமான பால் தினகரன் ஒருங்கிணைத்து நடத்தினார். இந்த மகாப் பெரிய கிறிஸ்தவர்களின் கூடுகை புது வருட பேரின்ப பெருவிழா என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இதில், பல்வேறு கிறிஸ்தவ சபைகளை சேர்ந்த 100 பேர் கொண்ட பாடகர் குழு பாடல்களை பாடி சிறப்பித்தார்கள்.

3 ஆம் தேதி சாமுவேல் பால் தினகரன் தலைமையில் வாலிபர்களுக்காக விசேஷித்த கூடுகை நடைபெற்றது. இந்த புதிய வருடத்தில் எல்லா ஜனங்களுடைய கண்ணீரும் துடைக்கப்பட வேண்டுமென்றும், தேசம் மற்றும் மாநிலங்களின் நிர்வாகம் இறைவனால் வழி நடத்தப்படவும், அதன் நிமித்தம் எல்லா இந்தியர்களும் சமமாக பராமரிக்கப்படவும், இந்திய பிரஜைகள் எல்லாரும் சமாதானத்தோடு வாழ்வு நடத்தவும், இறையாசி பெருகி, செழிப்பு உண்டாகவும், யாவருடைய வீடும், குடும்பமும், பொருளாதாரமும், வணிகமும், சமூக சேவையும் கட்டப்படவும், பால் தினகரன், ஸ்டெல்லா தினகரன், இவாஞ்சலின் பால் தினகரன், சாமுவேல் பால் தினகரன், ஷில்பா தினகரன், ஷேரன் தினகரன், ஸ்டெல்லா ரமோலா மற்றும் டேனியல் டேவிட்சன் இணைந்து பாடல்களோடு விசேஷித்த பிராத்தனை நடத்தினார்கள்.

நிகழ்ச்சி குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பால் தினகரன், “சுவேஷித்த இந்த புதிய வருடத்தில் இயேசுவின் ஆசி அனைத்து மக்களுக்கும் பாகுபாடின்றி கிடைக்கவும், அனைத்து மக்களும் சமாதானமாக வாழவும், மக்கள் அனைவரும் சமமாக வாழ்வதோடு, அவர்களிடத்தில் சகோதரத்துவம் நிலைத்திறுக்கவும், சகோதரத்துடனும் வாழவும், தேசத்தில் பொருளாதாரம் பெருமி, அனைத்து மக்களிடன் குடும்பங்கள் பல நன்மைகளை பெறவும், அனைத்து கிறிஸ்தவ சபைகளும், அனைத்து கிறிஸ்தவ சபை தலைவர்களும், சாதி மதம் இன வேறுபாடின்றி பிரார்த்தனை செய்திருக்கிறோம். அதன் பலன் நிச்சயம் மக்களுக்கு கிடைக்கும்.

இது மாத்திரம் அல்லாமல், அனைத்து கிறிஸ்தவ தலைவர்களும் ஒன்றிணைந்து இந்த தேசத்திற்கும் மக்களுக்கும் இன்னும் கூடுதலான நன்மைகள் செய்யலாம் என்று ஆலோசித்திருக்கிறோம். கல்வி, மருத்துவம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு வகையில் பல முன்னேற்ற பணிகளை இந்த தேச மக்களுக்கு செய்ய இருக்கிறோம்.” என்றார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கேரள மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும், தற்போது தென் இந்தியாவில் மத ரீதியான சர்ச்சைகள் உடுவெடுக்க தொடங்கியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள் ? என்ற பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த பால் தினகரன், “தேசத்தில் பலவிதமான சம்பவங்கள், முக்கியமாக கிறிஸ்தமஸ் நாளில் நடந்ததை பார்க்கிறோம். ஆண்டவர் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தது எல்லாம், உங்களுக்காக ஜெபம் செய்கிறவர்களுக்கு ஜெபம் செய்வது மட்டும் அல்ல, நன்மை செய்தவர்களுக்கு நன்மை செய்வது மட்டும் அல்ல, உங்களுக்கு தீமை செய்தவர்களாக இருந்தாலும், நன்மை செய்தவர்களாக இருந்தாலும், எந்தவித பாகுபாடின்றி நீங்கள் ஜெபம் செய்து அவர்களுக்கு இன்னும் கூடுதலான நன்மை செய்யுங்கள், அதற்கான பலனை நான் கொடுப்பேன், நான் அனைவரது இருதயங்களையும் மாற்றி, மக்களை ஒன்றினைப்பேன், என்று சொல்லியிருக்கிறார். அதனால், யார் என்ன செய்தாலும், அவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இன்னும் அதிகமான பிரார்த்தனைகள் மற்றும் சேவைகளை செய்ய எங்களை நாங்கள் அர்ப்பணிக்கப் போகிறோம்.” என்று தெரிவித்தார்.

இயேசு விடுவிக்கிறார் நிறுவன தலைவர் மோகன் சி.லாசரஸ், சி.எஸ்.ஐ சென்னை மண்டல பேராயர் பால் பிரான்சிஸ், கத்தோலிக்க பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி, அருள்தந்தை ஜி.ஜே.அந்தோனிசாமி, போதகர் டி.மோகன், பேராயர் கதிரொளி மாணிக்கம், ஆயர் லாரன்ஸ் பயஸ், அசம்பிளி ஆஃப் காட் தேசிய தலைவர் போதகர் ஆபிரகாம் தாமஸ், எஸ்.பி.சி.பேராயர் கே.பி.எடிசன், போதகர் ஜான் எப் காலேஃப், சத்தியம் டிவி தலைவர் ஐசக் லிவிங்ஸ்டன், மாதா டிவி தலைவர் அருள்திரு டேவிட் ஆரோக்கியம், AICC பேராயர் மோகன்தாஸ், பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜ், போதகர் சாம் பி.செல்லத்துரை, TELC போதகர் ஜெயசிங், பேராயர் தினத்தூது ராஜா, போதகர் சுவர்ணராஜ், போதகர் ஆனந்த், பேராயர் மோஷாக், பேராயர் லியோ நெல்சன், அருள்திரு பெனடிக், சுவிசேஷகர் ஜி.பி.எஸ்.ராபின்சன், போதகர் கல்யாண் குமார், கல்வாரி போதகர் பிரேம்நாத் சாமுவேல், MCC முதல்வர் பால் வில்சன், WCC முதல்வர் லில்லியன் ஜாஸ்பர், என்.ஜி.சி பேராயர் கிங்ஸ்லி, போதகர் ராஜன் ஜான் மற்றும் அநேக கிறிஸ்தவ பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

இதில், மோகன் சி.லாசரஸ் தேசத்திற்காகவும், மாநிலத்திற்காகவும் விசேஷித்த பிரார்த்தனை நடத்தினார். சி.எஸ்.ஐ சென்னை மண்டல பேராயர் பால் பிரான்சிஸ் புது வருட ஆசீர்வாதத்திற்கான பிரார்த்தனை நடத்தினார். இயேசு அழைக்கிறார் நிறுவன தலைமை நிர்வாகி முனைவர் எஸ்.ஜே.கிங்ஸ்லி ஒருங்கிணைப்பில் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

RYA Cosmo Foundation to Host Fundraising Musical Evening Featuring Anuv Jain in Chennai

Chennai, 4th January 2026: RYA Cosmo Foundation, a Chennai-based charitable trust committed to accessible healthcare and early disease detection under its MEDI BANK Project – “Care the Uncared” for the past three decades, is organizing a special fundraising musical evening featuring renowned singer-songwriter Anuv Jain held today at YMCA Grounds, Royapettah, Chennai, in association with Hivefy Events.
The concert aims to support and strengthen the Foundation’s flagship healthcare initiatives — Shanti Devi Jawaharmal Day Care and Diagnostic Centre and Manoharraj Kamala Kankaria Cancer Detection Centre, both of which have been serving the community with affordable, reliable, and quality medical services.
The Shanti Devi Jawaharmal Day Care and Diagnostic Centre provides comprehensive diagnostic and day-care medical facilities with a strong focus on early diagnosis, preventive healthcare, and affordable investigations, catering to people from all walks of life. The Manoharraj Kamala Kankaria Cancer Detection Centre is dedicated to early cancer screening and detection, playing a crucial role in identifying cancer at treatable stages.


Speaking about the Foundation’s mission, Managing Trustee Mr. Kalpesh Shah stated, “These initiatives reflect RYA Cosmo Foundation’s commitment to ‘Healthcare with Compassion and Accessibility’, especially for the underprivileged sections of society.”
Music for a Cause Fundraising Chairman Mr. Prasan Kankaria emphasized, “Music for a Cause” is the spirit of this event. The concert featuring Anuv Jain, whose soulful music resonates deeply with today’s youth, is expected to draw a large and diverse audience.


President Mr. Satish Munoth of RYA Cosmo Foundation added, “This concert is more than an evening of music—it is a collective step towards saving lives through early diagnosis and quality healthcare. We are grateful to our donors, Hivefy Events, and all supporters for standing with us in this noble cause.”
The event has been made possible through the dedicated efforts of the entire organizing team, including Manish Ranka, Sanjay Gundecha, Ajay Nahar, Chiragh Chowatia, Mahesh Taleda, Anil Kothari, Abhay Lodha, along with trustees and committee members.


RYA Cosmo Foundation invites citizens, corporates, donors, and music lovers to participate and contribute towards strengthening these life-saving healthcare initiatives.

ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “ஃபாதர்” !!

RC Studios தயாரிப்பில், இயக்குநர் இராஜா மோகன் இயக்கத்தில், பிரகாஷ் ராஜ்,
டார்லிங் கிருஷ்ணா முதன்மை பாத்திரத்தில் மனதை நெகிழ வைக்கும் அழகான திரைப்படமாக ஐந்து மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் “ஃபாதர்”.

குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் மூலம் , திரையுலகைத் திரும்பிப்பார்க்க வைத்த இயக்குநர் ராஜா மோகன், ஒரு தந்தையின் தியாகத்தை, பெருமையை பேசும் அழகான திரைப்படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்.

அம்மா எனும் உறவை கொண்டாடும் சமூகம், அம்மாவின் பாசத்தை, தியாகத்தை போற்றும் சமூகம் அப்பாவை பற்றிப் பேசுவதே இல்லை. அப்பாவின் பாசம், பெருமை, வலிகள், எதுவும் எங்குமே பதிவு செய்யப்படுவதில்லை. ஒரு அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான அழகான உறவையும், அப்பாவின் பெருமையையும் அழுத்தமாக பேசும் அழகான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

மைசூர், பெங்களூர், குடகு உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. “கப்சா” படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, RC Studios சார்பில் தயாரிப்பாளர் R.சந்துரு இந்தப் படத்தை மிகப் பெரிய அளவில் தயாரித்து வருகிறார்.

இசையமைப்பாளர் நகுல் அப்யங்கர் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான தீம் மியூசிக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விரைவில் முழு இசை வெளியீடு நடைபெறவுள்ளது. படத்தின் ஆடியோ உரிமையை ஆனந்த் ஆடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

நடிப்பு:
பிரகாஷ் ராஜ்
டார்லிங் கிருஷ்ணா

தொழில்நுட்பக் குழு

தயாரிப்பாளர்கள் – R . சந்துரு , யமுனா சந்திரசேகர்
இயக்கம் – இராஜா மோகன்
நிர்வாக தயாரிப்பாளர் – தயால் பத்மநாபன்
ஒளிப்பதிவு – சுகுணன்
இசை – நகுல் அப்யங்கர்
படத்தொகுப்பு – ரகுநாத் A
கலை இயக்கம் – ஸ்ரீகாந்த்
இசை வெளியீடு – ஆனந்த் ஆடியோ
PRO – சதீஷ் (AIM) – தமிழ்

மூன்வாக்’ மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்!

பிரபல நிறுவனமான Behindwoods Productions தயாரிக்கும் ‘மூன்வாக்’ (Moonwalk) திரைப்படத்தின் 14 கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பிரபுதேவா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் பல்வேறு வகைகளில் புதுமைகளை கொண்டு வரவுள்ளது.

“மூன்வாக்” படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், இசை உலகின் ஜாம்பவான் ஏ.ஆர். ரஹ்மான் முதன்முறையாக நடிகராக இந்தப் படத்தில் தோன்றுகிறார் என்பதுதான். மேலும், இந்த படத்தின் ஐந்து பாடல்களையும் அவரே பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் என்ற தன் வழக்கமான அடையாளத்தைத் தாண்டி, “ஒரு கோபமான இளம் திரைப்பட இயக்குநர்” என்ற கதாபாத்திரத்தில் அவர் தோன்றுவது ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியமாக இருக்கும்.

இதுகுறித்து இயக்குநர் மனோஜ் NS கூறியதாவது..,
“‘மயிலே’ பாடலின் படப்பிடிப்பு பிரபுதேவா சார் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் சார் உடன் இணைந்து நடந்தது ஒரு மறக்க முடியாத அனுபவம். அந்தப் பாடல் திரையில் மிக அழகாக உருவாகியுள்ளது. பிரபுதேவா சார் இதில் தன் சிறந்த நடனங்களில் ஒன்றை வழங்கியிருக்கிறார். கொரியோகிராஃபர் சேகர் மாஸ்டருக்கு என் மனமார்ந்த நன்றி.

ஏ.ஆர், ரகுமான் சார் இந்த பாடல் முழுவதும் வருகிறார். அவரது இருப்பு, பாடலுக்கு கூடுதல் அழகையும் சுவாரஸ்யத்தையும் தந்துள்ளது. அந்த பாடலுக்கு பிறகு ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்குமாறு சொன்ன போது , அவர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். இது படத்தை காணும் ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸாக இருக்கும். அவரை முதல் முதலாக நடிகராக இயக்கிய அனுபவம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. படம் தொடங்கிய முதல் நாள் முதல் அவர் தந்த ஆதரவும் ஊக்கமும் மிகப்பெரிது. அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். செட்டில் அவர் நடிகராக ரசித்துக் கலந்து கொண்ட தருணங்கள் எங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியது.” திரையில் இதை காணும் ரசிகர்களுக்கும் இது எதிர்பாராத அனுபவமாக இருக்கும்.

அதே போல் பிரபுதேவா கதாப்பாத்திரமும் இப்படத்தில் மிகச்சிறப்பு மிக்கதாக இருக்கும். இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடனக் கலைஞர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக போற்றப்படும் பிரபுதேவா, இந்தப் படத்தில் ‘பாபூட்டி’ என்ற இளம் திரைப்பட நடன இயக்குநராக நடித்துள்ளார். நடனம், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை ஒருங்கே வெளிப்படுத்தும் இந்தக் கதாபாத்திரம், படத்தின் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் கவனம் ஈர்க்கும் அம்சங்களில் ஒன்றாக இருக்கும்.

மேலும், யோகி பாபு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ‘கவரிமான் நாராயணன்’ மற்றும் ‘ஆட்டுக்கால் அழகு ராசா’ என்ற இரண்டு கதாபாத்திரங்களுடன், மூன்றாவது கதாபாத்திரமாக ‘துபாய் மேத்யூ’ என்ற வேடத்திலும் தோன்றுகிறார். இது படத்தின் விசித்திரமான மற்றும் வித்தியாசமான அம்சமாக ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும். மேலும் “யோகி பாபு சாரின் கதாபாத்திரம் தொடர்பான ஒரு பெரிய சர்ப்ரைஸ் ஆடியோ வெளியீட்டில் அறிவிக்கப்படும்” என இயக்குநர் மனோஜ் தெரிவித்தார்.

இப்படத்தில் அஜு வர்கீஸ் (‘லார்ட் ஜோகோவிச்’), அர்ஜுன் அசோகன் (‘லூனா’), சாட்ச் (‘ஜாஸ்மின்’), சுஷ்மிதா (‘சில்க்’), நிஷ்மா (‘நக்மா’), ஸ்வாமிநாதன் (‘பெரிய பண்ணை’), ரெடின் கிங்ஸ்லி (‘கண்ணு குட்டி’), ராஜேந்திரன் (‘மல்லிகார்ஜுன்’), தீபா அக்கா (‘கற்பூரழகி’), சந்தோஷ் ஜேக்கப் (‘தவசி’) மற்றும் ராம்குமார் (‘ராஜ் பப்பர்’) ஆகிய வேடங்களில் நடித்துள்ளனர். “இத்தனை திறமையான கலைஞர்கள் அனைவரும் ஒரே படத்தில் இணைந்திருப்பது பெரும் ஆசீர்வாதம். ரசிகர்கள் இந்த திரைப்படத்தை நிச்சயம் ரசிப்பார்கள்” என இயக்குநர் மனோஜ் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவா – ஏ.ஆர். ரஹ்மான் போன்ற மாபெரும் கலைஞர்கள் ஒரே படத்தில் இணைவது மட்டுமல்லாமல், புதுமையான கதை சொல்லலுடன் “மூன்வாக்” ஒரு வித்தியாசமான திரைப்பட அனுபவத்தை வழங்கவுள்ளது. இயக்குநர் மனோஜ் NS இன்னும் என்னென்ன ஆச்சரியங்களை ரசிகர்களுக்காக வைத்திருக்கிறார் என்ற ஆவலைத்தூண்டியுள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 4-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்த முழுநீள நகைச்சுவை திரைப்படம் 2026 மே மாதத்தில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

2005-ஆம் ஆண்டின் காதல் கதை “மாயபிம்பம்” – ஜனவரி 23 அன்று திரைக்கு வருகிறது !!

“மாயபிம்பம்” 2005-ஆம் ஆண்டு காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு அழகான காதல் திரைப்படம். K.J. சுரேந்தர் தயாரித்து இயக்கியுள்ள இந்தப் படம், Self Start Productions நிறுவனத்தின் சார்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜானகி, ஆகாஷ், ஹரிகிருஷ்ணன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் சிறப்பம்சமாக, நடிகர்கள் மட்டுமல்லாமல் தொழில்நுட்பக் குழுவும் முழுவதுமாக புதிய முகங்களைக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் ஆகியோர் தங்கள் முதல் முயற்சியாக இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். பாடல்களை விவேகா மற்றும் பத்மாவதி எழுதியுள்ளனர்.

2005-ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு உருவான இந்தக் காதல் கதை, அந்த காலத்து உணர்வுகளையும் நினைவுகளையும் உயிர்ப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காதல் மட்டுமின்றி, நட்பு மற்றும் குடும்ப உணர்வுகளும் அழகாக பின்னியமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தலைமுறைக்கு புதிய அனுபவமாகவும், 90-களில் வளர்ந்தவர்களுக்கு இனிய நினைவுகளாகவும் இந்த படம் அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்தின் ஹிட் பாடலான “எனக்குள்ளே” பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் நடிகை வாணி போஜன் வெளியிட்டனர். இருவரும் பாடலை பாராட்டி, படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும், முன்னணி இயக்குநர் சுந்தர் சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, பாடல்களையும் கேட்டுப் பாராட்டியுள்ளார்.

ஒரு அழகான காதல் அனுபவமாக உருவாகியுள்ள “மாயபிம்பம்” – வரும் 2026 ஜனவரி 23 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா ஜனவரி 4 அன்று ZEE5-தளத்தில் ஒளிபரப்பாகிறது !!

தளபதி விஜய்யின் இறுதி சினிமா மேடை :

தமிழ் ரசிகர்களுக்காக ZEE5 ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணத்தை வழங்குகிறது. தளபதி விஜய் நடித்த கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, ஜனவரி 4 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு, ZEE தமிழ் தொலைக்காட்சி மற்றும் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் ஆகிறது.

H. வினோத் இயக்கத்தில், KVN புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன், அரசியல் பின்னணியுடன் கூடிய ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாகும். தளபதி விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். KVN நிறுவனத்தின் முதல் தமிழ் தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படம், நடிகராக விஜய் மேற்கொள்ளும் இறுதி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ரசிகர்களின் நினைவில் என்றும் பதியும் வகையில் அமைந்தது. வெளிநாட்டில் நடைபெற்றதால் நேரில் பங்கேற்க முடியாத ரசிகர்களுக்காக, இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வை ZEE5 நேரடியாக ரசிகர்களின் இல்லங்களுக்கே கொண்டு வருகிறது.

இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டதுடன், தளபதி விஜய் நடிகராக தனது திரை வாழ்க்கையின் இறுதி மேடை உரையை வழங்கி, ரசிகர்களை உருக வைத்தார். அவரது திரைப்பயணத்திற்கு மரியாதையாக, அவரது பிரபலமான பாடல்களும் நடனமும் கூடிய நேரடி மேடை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மேலும், இயக்குநர்கள் நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ், அட்லீ உள்ளிட்ட பல முன்னணி திரையுலக பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஒரு உட்ச நட்சத்திரத்தின் விடைபெறும் நிகழ்வு மட்டுமல்ல — தமிழ் சினிமாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம்.

‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டை ஜனவரி 4, மாலை 4.30 மணிக்கு, தமிழ் ZEE5-ல் தளத்திலும் ZEE தமிழ் தொலைக்காட்சியிலும் தவறாமல் காணுங்கள்.

🔗https://youtu.be/SlG3_ABHcJI?si=-nHSNABKR2EKEdvt

ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் மலையாள சீரிஸ் “ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்” படப்பிடிப்பு துவங்கியது !!

ZEE5 நிறுவனம் தனது அடுத்த அதிரடி இருமொழி (தமிழ் – மலையாளம்) ஒரிஜினல் சீரிஸான “ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்” ( “Once Upon A Time in Kayamkulam” )சீரிஸின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த சீரிஸ் புத்தாண்டை முன்னிட்டு ZEE5 தளத்தில் வெளியாக உள்ளது.

Rise East Production House தயாரிப்பில், அமீன் பாரிஃப் இயக்கத்தில் உருவாகும் இந்த சீரிஸ், முழுக்க மண் மணம் கமழும் ஹைஸ்ட் காமெடி (Heist Comedy) ஜானரில் உருவாகவுள்ளது. இந்த சீரிஸ் நகைச்சுவை, பரபரப்பான திருப்பங்கள் மற்றும் இன்றைய OTT ரசிகர்களை கவரும் நவீன கதை சொல்லல் ஆகியவை இணைந்து, தனித்துவமான அனுபவத்தை வழங்கும்.

இந்த சீரிஸில் அன்புசெல்வன், சுபாஸ், ரமேஷ் மாதவன், வின்சு ரேச்சல், ராகேஷ் உசார், கௌதமி நாயர், சாவித்ரி, விஜய் சத்தியா, அருண், விக்னேஸ்வர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த சீரிஸின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், “ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்” தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ZEE5-இன் ஒரிஜினல் உள்ளடக்க வரிசையில் ஒரு புதுமையான, ரசிக்கத்தக்க படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.