Breaking
March 7, 2026

January 2026

வாரணாசி’ ( VARANASI )திரைப்படம் 2027 ஏப்ரல் 7-ல் உலகம் முழுவதும்

மகேஷ் பாபு – எஸ். எஸ். ராஜமௌலி கூட்டணியில் உருவாகி வரும்  ‘வாரணாசி’ ( VARANASI )திரைப்படம் 2027 ஏப்ரல் 7-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது !!

இந்திய சினிமாவில் தற்போது மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படங்களில் ஒன்றாக, நடிகர் மகேஷ் பாபு மற்றும் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி கூட்டணியின் முதல் படமாக “வாரணாசி” உருவாகி வருகிறது. Sri Durga Arts மற்றும் Showing Business நிறுவனங்களின் சார்பில்  K.L. நாராயணா மற்றும் S. S. கார்த்திகேயா இணைந்து  தயாரிக்கின்றனர்.  இந்த மாபெரும் ஆக்ஷன்–த்ரில்லர் திரைப்படத்தில், பிரியங்கா சோப்ரா மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் தொடர்பான ஒவ்வொரு தகவலும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பிரம்மாண்டமான க்ளிம்ப்ஸ் நிகழ்வு, ரசிகர்களை மெய்சிலிர்க்கச் செய்தது.  

பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த இந்த கிளிம்ப்ஸில், காலத்தையும்,  நில பரிமாணங்களையும் கடந்து செல்லும் காட்சித் தொகுப்பாக,  திரேதாயுகம் தொடங்கி, கி.பி. 512-ம் ஆண்டு  வாரணாசி, அதன்பின் கி.பி. 2027, அண்டார்டிகா, ஆப்பிரிக்கா, வனாஞ்சல் எனப் பல பரிமாணங்களைத் தொட்டு, மீண்டும் திரேதாயுகம் (கிமு 7200) வரை பயணிக்கிறது. மர்மமான ஒரு பணிக்காகப் பயணிக்கும் ருத்ரா என்ற கதாபாத்திரத்தின் சக்திவாய்ந்த அறிமுகத்துடன் இந்த க்ளிம்ப்ஸ் நிறைவடைகிறது.

வித்தியாசமான, அதிரடி விளம்பர யுக்திகளுக்குப் பெயர் பெற்ற எஸ். எஸ். ராஜமௌலி, இப்படத்தின் விளம்பர முன்னோட்டங்களை மிக அட்டகாசமாக துவங்கியுள்ளார். நேற்று, வாரணாசி நகரம் முழுவதும் திடீரென தோன்றிய வெளியீட்டு தேதி பேனர் போஸ்டர்கள், நாடு முழுவதும் பேசுபொருளாக மாறின. இதனைத் தொடர்ந்து இன்று, படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எஸ். எஸ். ராஜமௌலி, மகேஷ் பாபு உள்ளிட்ட முழு படக்குழுவும், கண்கவர் புதிய போஸ்டருடன் இந்த தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

அதன்படி, ‘வாரணாசி’ திரைப்படம் 2027 ஏப்ரல் 7-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த மாபெரும் சினிமா அனுபவத்தை காண ரசிகர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருந்தாலும், இது ஒரு பிரம்மாண்டமான, வரலாற்று சிறப்புமிக்க திரையரங்கு அனுபவமாக இருக்கும் என படக்குழு உறுதி அளித்துள்ளது.

இந்த படத்தை தனது கனவுப் படம் என வர்ணித்துள்ள மகேஷ் பாபு, இப்படம் நம் அனைவரையும் பெருமைப்படுத்தும் படமாக அமையும் என்று  நம்பிக்கை  தெரிவித்துள்ளார் . தற்போது இப்படத்தின்  படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.  ”குளோப்ட்ராட்டர் ( Globetrotter) “( உலகம் சுற்றும் பயணி ) மற்றும் “டைம் ட்ராட்டர்” (Timetrotter)( காலம் தாண்டும் பயணி) என்ற டேக் லைனுடன் உருவாகி வரும், ‘வாரணாசி’ இந்தியாவை மட்டுமல்லாது, சர்வதேச சினிமா அரங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தயாராகி வருகிறது.

அட்லீ வெளியிட்ட அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” படத்தின் ட்ரெய்லர்

இயக்குநர் அட்லீ வெளியிட்ட அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” படத்தின் ட்ரெய்லர்
அபிஷன் ஜீவந்த் நடிக்கும் ‘வித் லவ் ( With Love)’ படத்தின் டிரெய்லர் வெளியீடு
‘டூரிஸ்ட் ஃபேமிலி’  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் – அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வித் லவ் ( With Love )’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான அட்லீ அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜென் ஜீ ( Gen z) (தலைமுறையினரை) கவரும் வகையிலான காதல் கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான்  தயாரித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வித் லவ் ‘ ( With Love) எனும் திரைப்படத்தில் அபிஷன் ஜீவந்த்,  அனஸ்வரா ராஜன், ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன்,  சரவணன், தேனி முருகன், உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை K. சுரேஷ்குமார் மேற்கொள்ள கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். பிரியா ரவி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.‌ 

இதில் கதையின் நாயகனான அபிஷன் ஜீவிந்த் மற்றும் கதாநாயகி அனஸ்வரா ராஜன், தான் பள்ளிப் பருவத்தில் காதலித்தவர்களிடம் சொல்லமுடியாத காதலை சொல்ல இணைந்து பயணிப்பதும் …அது தொடர்பான காட்சிகள், வசனங்கள் – பின்னணி இசை என அனைத்து அம்சங்களிலும் இருப்பதால்.. அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

இப்படத்தின் டைட்டில் டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது .  

பிப்ரவரி 6 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

Link : https://www.youtube.com/watch?v=je1xB5ColOQ

ஆகாசம்லோ ஒக தாரா” (Aakasamlo Oka Tara) படத்திலிருந்து ஸ்ருதிஹாசன்

ஆகாசம்லோ ஒக தாரா” (Aakasamlo Oka Tara) படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

துல்கர் சல்மான் நடித்துவரும் “ஆகாசம்லோ ஒக தாரா” திரைப்பட உலகிலிருந்து நடிகை ஸ்ருதி ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளார்.

Geetha Arts & Swapna Cinema வழங்க,  சந்தீப் குன்னம் ( Sandeep Gunnam) , ரம்யா குன்னம் (Ramya Gunnam) தயாரிப்பில் உருவாகும் இந்த படம், 2026 கோடைக்காலத்தில் பான்-இந்தியா அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது

தொடர்ச்சியான பிளாக்பஸ்டர் வெற்றிகளாலும், பான்-இந்தியா அளவிலான புகழாலும் உச்சத்தில் இருக்கும்  நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான், அடுத்ததாக  “ஆகாசம்லோ ஒக தாரா” படத்தில் நடித்து வருகிறார் . புதுமையான கதை சொல்லல் மற்றும்  தனித்துவமான காட்சி அமைப்புகளுடன், பல வெற்றிப்படங்களைத் தந்து,  புகழ் பெற்ற பவன் சடினேனி  ( Pavan Sadineni ) இப்படத்தை இயக்குகிறார் . புகழ்பெற்ற Geetha Arts மற்றும் Swapna Cinema வழங்கும் இந்த திரைப்படத்தை, சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் தயாரிக்கின்றனர். புதுமுக நடிகை சாத்விகா வீரவள்ளி துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதற்கு முன்பு வெளியான புரமோக்கள், ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன்,  இப்படத்தின் மீது  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையில், படக்குழு ரசிகர்களுக்கு ஒரு இனிய ஆச்சரியத்தை வழங்கியுள்ளது. சமீப காலமாக தேர்ந்தெடுத்த படைப்புகளில் மட்டுமே நடிக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் கண்ணாடியுடன், கீழ்நோக்கி பதிந்த தீவிரமான பார்வையுடன்,  இயல்பான தோற்றத்தில் இருக்கிறார் —அது அவரின் கதாபாத்திரத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது. அவரது உதட்டில் இருக்கும் சிகரெட்டும், மேலெழும் புகையும், அந்த கதாபாத்திரத்தில் உள்ள உணர்ச்சி ஆழத்தையும் சொல்லப்படாத கதைகளையும் சுட்டிக்காட்டுகிறது.

இந்த திரைப்படத்தின்  கதையோட்டத்தில் ஸ்ருதி ஹாசனின் கதாபாத்திரம் ,கதையின் திருப்புமுனையாக முக்கிய பங்கு வகிக்கவுள்ளது. அவர் இப்படத்தில் இணைந்துள்ளது, கதையை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும். அவரது தோற்றமே, இந்த டிராமாவுக்கு புதிய பரிமாணத்தையும் கனத்தையும் சேர்க்கும் சக்தியாக அவரை நிலைநிறுத்துகிறது.

இந்த திரைப்படத்தின் இசையமைப்பை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை சுஜித் சாரங், தயாரிப்பு வடிவமைப்பை ஸ்வேதா சாபு சிரில் கவனிக்கின்றனர்.

தற்போது தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்தப் படம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக தயாராகி வருகிறது.

நடிகர்கள்: துல்கர் சல்மான்,  சாத்விகா வீரவள்ளி, ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர்
தொழில்நுட்ப குழு:
இயக்கம்: பவன் சடினேனி
கதை: கங்கராஜு குன்னம்
தயாரிப்பாளர்கள்: சந்தீப் குன்னம், ரம்யா குன்னம்
வழங்குபவர்கள்: Geetha Arts, Swapna Cinema
இசை: GV பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: சுஜித் சாரங் (Sujith Sarang)
தயாரிப்பு வடிவமைப்பு: ஸ்வேதா சாபு சிரில்

ZEE5 இல் வெளியான சிறை திரைப்படம், மிகக் குறுகிய காலத்தில் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை!!

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் சமீபத்தில் வெளியான “சிறை” திரைப்படம், மிகக் குறுகிய காலத்திலேயே 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியைக் குவித்த பிறகு, ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட அதன் ஆழமான கதைக்களம், வலுவான நடிப்புகள் மற்றும் உணர்வுபூர்வமான உருவாக்கம் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில் தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில் உருவான இப்படத்தை, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி எழுதி இயக்கியுள்ளார். ‘டாணாக்காரன்’ திரைப்படத்தின் இயக்குநர் தமிழ் தனது உண்மை வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணமே “சிறை” படத்தின் மையம். அதிகாரம், மனிதநேயம், மனசாட்சியின் போராட்டம் ஆகியவற்றை மையமாக வைத்து நகரும் இந்த கதை, ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை உணர்வுப்பூர்வமாக ஈர்க்கிறது. நாயகனாக விக்ரம் பிரபு நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை அனந்தா நடித்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் LK அக்‌ஷய் குமார் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவும், பிலோமின் ராஜ் எடிட்டிங்கும் படத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது. ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார்.

திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாகவே இப்படத்தின் சேட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகளை ZEE நிறுவனம் கைப்பற்றிய நிலையில், ZEE5 இல் வெளியானதும் “சிறை” திரைப்படம் பார்வையாளர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றது. சமூக வலைதளங்களில் வலுவான விமர்சனங்களும், பாராட்டுகளும் குவிந்ததன் விளைவாக, படம் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

மண் சார்ந்த உண்மைக் கதைகளை தரமான உருவாக்கத்துடன் வழங்கும் ZEE5 தமிழ், தொடர்ந்து இப்படிப்பட்ட வித்தியாசமான படைப்புகளை தமிழ் பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக கொண்டு வருகிறது. அந்த வரிசையில் “சிறை” திரைப்படம், தமிழ்த் திரையுலகின் முக்கியமான ஓடிடி சாதனைகளில் ஒன்றாக தன்னை பதிவு செய்துள்ளது.

உணர்வுபூர்வமான, தாக்கம் மிக்க ஒரு அனுபவத்தை தேடும் ரசிகர்கள், “சிறை” திரைப்படத்தை ZEE5 தளத்தில் தவறாமல் கண்டுகளிக்கலாம்.

MGM Healthcare Malar Performs Live Mono-Segment Liver Transplant on 2-Year-Old Child with Primary Hyperoxaluria, Ending Dialysis

Chennai, January 29, 2026: MGM Healthcare Malar, Adyar has successfully performed a complex liver transplant on a two-year-old boy weighing just nine kilograms after his liver failed to produce essential enzymes to clear harmful metabolic waste substances known as oxalates, produced excessively due to a rare genetic disorder, leading to kidney stones and subsequent kidney failure. Following the surgery, the child’s kidney function has improved; while he is no longer dependent on dialysis, a kidney transplant will be required at a later stage.

The young boy was admitted to MGM Healthcare Malar, Adyar with symptoms such as severe vomiting and poor physical growth. He was diagnosed with advanced kidney failure and required peritoneal dialysis, a type of dialysis that uses the lining of the abdomen. Further investigations traced the condition to primary oxaluria, a rare genetic disorder that caused excessive production of oxalates in the body. A deficiency of key liver enzymes prevented the clearance of these oxalates, allowing them to accumulate and form kidney stones.

The boy required a kidney transplant; however, without first correcting the liver’s condition, a new kidney would not function properly and the underlying disease would persist, making a liver transplant a crucial prerequisite for treating his renal condition. The procedure was made possible by the boy’s grandmother, who served as the living donor. Live Donor Mono-Segment Liver transplant was performed and uneventful, and the child’s recovery has been smooth and rapid.
This eliminated the need for dialysis after the transplant, and he is scheduled to undergo a kidney transplant in the coming months.

The surgery was performed by a multi-visceral transplant team led by Dr Anil Vaidya MD, Chair and Director, Institute of Multi-Visceral and Abdominal Organ Transplant, MGM Malar, with support from Dr Senthil Muthuraman, Senior Consultant and Dr Venkatesh BS, Consultant, Multi Visceral Transplant. Anaesthesia was managed by Dr Dinesh Babu Senior Consultant, Anaesthesiology, and late.Dr Nivash Chandrasekaran, Senior Consultant, Dr Saravanan – Senior Consultant.Pre- and post-surgical kidney care was overseen by the nephrology team headed by Dr Srinivasa Prasad ND,Senior Consultant while the hospital’s intensive care unit played a critical role in ensuring the child’s smooth post-operative recovery.

In his comments, Dr Anil Vaidya MD said, “Performing a liver transplant on such a young and underweight child is undeniably complex. Typically, we would wait for a child to gain more weight, but given the severity of his condition, we needed to act promptly. By addressing the liver first, we ensured that the kidneys would function properly afterward. This sequential approach will allow the boy’s body to gradually clear the excess oxalates. Now, within weeks, he’s no longer dependent on dialysis and is thriving. He requires immunosuppressants to ensure the transplant’s success, and we look forward to the upcoming kidney transplant at the right time.”

In his comments, Mr. Venugopal Bhat, COO, MGM Healthcare Malar, said, “We are immensely proud to have achieved this rare and complex milestone. This case shows that renal issues from severe genetic conditions such as primary oxaluria can be successfully treated even at a very young age. The surgery was uneventful thanks to meticulous pre-operative preparation, including thorough assessment of the child’s vascular status and infection profile. Instead of performing the liver and kidney transplants together, as is done at many centres, we adopted a carefully planned sequential approach in the child’s best interest. Following the liver transplant, the child was closely monitored in our ICU for a week, with support from nephrology and other specialist teams. The success of this procedure reflects the seamless coordination and dedication of our multidisciplinary teams.”

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 மச் ‘படத்தின் வெற்றி விழா

கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜே. பாலாமணி மார்பன் தயாரிப்பில் இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 ‘ மச் ‘ திரைப்படம் ஜனவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர் வெற்றி விழாவை சென்னையில் ஒருங்கிணைத்தனர். இவ்விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த வெற்றி விழாவில் ஒளிப்பதிவாளர் ஜோசப் பால் பேசுகையில், ” அஸ்வின் குமாருடன் பணியாற்ற வேண்டும் என்ற போது முதலில் தயக்கம் இருந்தது. அதன் பிறகு பழகும் போது தான் அவருடைய அர்ப்பணிப்பு தெரிந்தது. படப்பிடிப்பு தளத்தில் அஸ்வின் குமார் வழங்கிய ஒத்துழைப்பு மறக்க முடியாதது. ஏழு மணிக்கு படப்பிடிப்பு என்றால் ஐந்தரை மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிடுவார். ஒரு நாள் தான் வருவார் என்று எதிர்பார்த்தால்.. ஒவ்வொரு நாளும் இதே போல் வந்தார். அவருடைய கடுமையான உழைப்பிற்கு முதலில் நான் நன்றி சொல்கிறேன்.

பவானி ஸ்ரீ யுடன் பணியாற்றும் போது ஒரு முறை கூட எனது பெயரை முழுவதுமாகவும், சரியாகவும் உச்சரித்ததில்லை.

பிரிகிடா இந்தப் படத்திற்காக நடித்த நாட்களை விட , இப்படத்தின் விளம்பர நிகழ்வுக்காக நிறைய நாட்கள் எங்களுடன் இணைந்து பயணித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் பாலாமணி மார்பன் நான் குறும்படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே என்னை ஒளிப்பதிவாளராக பணியாற்ற செய்ய வேண்டும் என நினைத்தவர். இறுதியாக இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார்.

நாங்கள் பாதி தூரம் சென்ற பிறகு எங்களை கை தூக்கி ஆதரவளித்தவர் தயாரிப்பாளர் அனில்.

‘மங்காத்தா’வில் குறிப்பிடுவது போல் செந்தில் சார் இறுதியாக தான் வந்தார். வந்தவுடன் இப்படம் ஜனவரி 23 வெளியாகும் என்று சொன்னார். படம் வெளியானது. இப்படத்திற்கு வெற்றி விழா நடைபெறும் என்றார். அது தற்போது நடைபெறுகிறது.

கடைசியாக வந்த ஸ்டுடென்ட் போன்றவர் ராபின். அவுட் ஆஃப் சிலபஸில் இருந்து வந்து, அனைவரையும் வென்றுவிட்டார்.

விஜய் டிவி அமருக்கு நான் மிகப்பெரிய ரசிகன். படப்பிடிப்பு தளத்தில் அவர் பேசும் ஒவ்வொரு வசனங்களுக்கும் சிரித்துக் கொண்டே இருப்போம்.

இப்படி படக் குழுவினர் அனைவரும் மறக்க இயலாத அனுபவங்களை வழங்கியதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இந்த வெற்றி விழாவில் நடிகை சஞ்சனா திவாரி பேசுகையில், ” இந்த வெற்றி விழாவில் கலந்து கொண்டிருப்பதை மகிழ்ச்சியான தருணமாக கருதுகிறேன். ஹாட்ஸ்பாட் 2 மச் படத்தின் மீதும் அதில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் மீதும் ரசிகர்கள் அன்பு செலுத்துவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய கதாபாத்திரத்திற்கு எப்படி வரவேற்பு கிடைக்கும்? என்று பதட்டத்துடன் இருந்தேன். இதற்காக எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் ,தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகை பவானி ஸ்ரீ பேசுகையில், ” இந்தப் படத்திற்கு ஊடகங்களும், பத்திரிகைகளும் வழங்கிய பேராதரவு படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. இதற்குப் பின்னர் ரசிகர்களும் திரையரங்கத்திற்கு வருகை தந்து தங்களுடைய வாய் மொழியால் படத்தை பாராட்டி கொண்டாடினர். மூன்று கதைகளுக்கும் பெரும் ஆதரவும் , வரவேற்பும் கிடைத்தது. எல்லா தரப்பு ரசிகர்களும் இப்படத்துடன் தங்களை இணைத்துக் கொண்டனர். இது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப் படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து எங்களுக்கு சாதகமாக பல விசயங்கள் நடைபெற்றிருக்கிறது. தற்போது கூட திருச்சி- தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் சொல்லியிருக்கிறார். இதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

நல்ல கன்டென்ட் இருந்தால் ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பு அளிப்பார்கள் என்பதற்கு இந்த படம் மீண்டும் ஒரு சாட்சியாகி, வெற்றி பெற்று இருக்கிறது இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

இது போன்றதொரு வாய்ப்பை வழங்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் , தயாரிப்பாளர்கள், இணைந்து பணியாற்றிய சக நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகை பிரிகிடா சகா பேசுகையில், ” இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகி இருக்கும் மிகப்பெரிய வெற்றி படம் இது. எங்கள் திரைப்படத்திற்கு எவ்வளவு பெரிய வரவேற்பும், வெற்றியும் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

இதன் மூலம் தற்போது லைக் மைண்டட் பீப்புள் நிறைய பேர் வருகிறார்கள் என தெரிகிறது. இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இதனால் இப்படத்தில் நானும் பங்களிப்பு செய்திருக்கிறேன் என்பதில் சந்தோஷம். இதற்காக இயக்குநருக்கு நன்றி. ஒரு வெற்றி பெற்ற படத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த மேடையில் வீற்றிருக்கும் அனைவருக்கும் உள்ள எண்ணமாக இருக்கும்.

இந்த படத்தில் என் கதாபாத்திரத்தை பற்றி இயக்குநர் சொன்னபோது மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறதே..! ஏற்று நடிக்கலாமா? என முதலில் தயங்கினேன். இந்தப் படத்தில் ஒரு வசனம் வரும். ‘நான் ஒரு லெஸ்பியன் என்று ‘.. இதனை பேசும்போது முதலில் ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் உணர்வு உணர்வு தான். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக இதைப்பற்றி யாரும் பேச மாட்டார்கள். சமூகத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு மதிப்பீடு இருக்கிறது. ஆனால் இது குறித்து என் கேரக்டர் பேசி இருக்கிறது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

உடலுக்குள் நடைபெறும் மாற்றத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும்… என்பதெல்லாம் நல்ல விசயமாக இருந்தது. அதேபோல் தம்பி ராமையா பேசும் வசனங்களும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருந்தது.

இதெல்லாம் சமூகத்தில் நடைபெறும் விசயங்கள் தான். ஆனால் இதனை யாரும் பேச மாட்டார்கள். இயக்குநர் விக்னேஷ் கார்த்தி இது தொடர்பாக பார்ட் 1 எடுத்து, பார்ட் டூவும் எடுத்திருக்கிறார். இவை வெற்றி பெற்றிருக்கிறது என்றால்… ரசிகர்களின் விசாலமான மனதும் ஒரு காரணம். இதனை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தப் படத்திற்குப் பிறகு.. நான் இனி நடிக்கப் போகும் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான நம்பிக்கையை எனக்குள் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் உருவாக்கியிருக்கிறார்.

உண்மையான லவ் கிடைக்காதா? என ஏங்கிக் கொண்டிருக்கும் 90ஸ் கிட்ஸ்களுக்கு இப்படத்தில் வரும் காதல் கதை மிகவும் பிடிக்கும். இதுவரை இந்தப் படத்தை பார்க்காதவர்கள் உடனடியாக திரையரங்கத்திற்கு சென்று படத்தைப் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகர் அஸ்வின் குமார் பேசுகையில், ” இறைவனுக்கு நன்றி. கடவுள் பல ரூபங்களில் வந்து என்னை பல தருணங்களில் காப்பாற்றி இருக்கிறார். நிறைய வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறார். நான் இந்த பிரபஞ்சத்தை முழுமையாக நம்புகிறேன். அவர்களில் ஒருவராக எனது நண்பராக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கை நான் பார்க்கிறேன்.

அவர் என்னை சந்தித்து இந்த படத்தில் இந்த கதையை நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் சொன்னார். அவரிடம் நான் ஏராளமான சந்தேகங்களை கேட்டுக் கொண்டே இருப்பேன். அவர் ஒவ்வொரு சந்தேகத்திற்கும் பொறுமையாக எனக்கு புரியும்படி விளக்கம் அளிப்பார். இந்தப் படத்தில் என்னுடைய அறிமுகக் காட்சியும் அவருடைய ஐடியா தான். நான் இயக்குநரை முழுமையாக நம்பி ஒப்படைத்து விட்டேன். இதற்காக அவருக்கு என்னுடைய முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மிகச்சிறந்த திறமைசாலி.

இந்தப் படத்தின் வெற்றி என்னுடைய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. இதற்காக நான் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படக் குழுவில் பணியாற்றிய அனைவரும் பாசிட்டிவ் எனர்ஜி கொண்டவர்கள். அவர்களால்தான் இந்த வெற்றி சாத்தியமாகி, இன்று நாங்கள் வெற்றி விழாவில் மகிழ்ச்சியுடன் ஒன்றிணைந்திருக்கிறோம். இதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்திற்காக தயாரிப்பாளர் பேசிய சம்பளத்தை முழுமையாக வழங்கி விட்டார். நடிகராக தயாரிப்பாளர் வழங்கும் ஊதியம் என்பது எங்களுக்கு முக்கியமானது. அதற்காக தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்

தயாரிப்பாளர் – நடிகர் கே.ஜே. பாலாமணி மார்பன் பேசுகையில், ” படம் வெளியாகி ஆறாவது நாளில் வெற்றி விழா கொண்டாடும் அளவிற்கு இப்படத்தை மக்கள் திரையரங்குகளில் பார்த்து கொண்டாடுகிறார்கள். வரவேற்றிருக்கிறார்கள். இதற்கு ஊடகங்களும், விமர்சனங்களும் எங்களுக்கு பேராதரவை அளித்ததுடன் ரசிகர்களை திரையரங்கிற்கு அழைத்து வந்தது. இதனால் படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் இப்படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்திருந்தாலும் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.‌ படம் வெளியான நான்கு நாட்களில் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 90 சதவீதத்திற்கும் மேலான பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வருகை தந்திருந்தனர். தமிழகத்தின் தென்பகுதிகளில் 70 சதவீதத்திற்கும் மேலான பார்வையாளர்கள் திரையரங்குக்கு வருகை தந்திருந்தனர்.

அத்துடன் நாங்கள் இப்படத்திற்கான வரவேற்பு மெதுவாக நடைபெற்று அதன் பிறகு விரிவடையும் என எதிர்பார்த்தோம். ஆனால் படம் வெளியான இரண்டாவது நாளே அனைத்து திரையரங்குகளிலும் பார்வையாளர்கள் நிரம்பி வழிந்தனர்.

படம் வெளியான பிறகு நாங்கள் 15 திரையரங்குகளுக்கு ரசிகர்களின் வரவேற்பை காண சென்று இருந்தோம். அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் ரசனையும் , வரவேற்பும் ஒரே மாதிரியானதாக இருந்தது. இதன் மூலம் இப்படத்தை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதை நேரில் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.

இப்படத்தின் வெற்றிக்காக வழி விட்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்களுக்கு இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் திரைப்படம் கிட்டத்தட்ட 200 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதனை சாத்தியப்படுத்திய விநியோகஸ்தர் ‘பைவ் ஸ்டார்’ செந்தில் மற்றும் அவரது குழுவினருக்கு எங்கள் நிறுவனத்தின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு அந்தப் படம் மட்டும் காரணம் அல்ல அந்தப் படம் வெளியாகும் சூழலும் ஒரு முக்கிய காரணம். இருப்பினும் இந்தப் படத்தின் வசூலைக் கடந்து படம் வெற்றி பெற்றதற்காக ரசிகர்களின் வரவேற்பினை பெற்றதற்காக குடும்பம் குடும்பமாக நண்பர்களுடன் அனைவரும் இணைந்து திரையரங்கத்திற்கு இந்தப் படத்தை பார்க்க வருகிறார்கள் என்றால்.. அதற்கு இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தன்னுடைய பங்களிப்பை 100 சதவீதம் வழங்கியிருக்கிறார் என்பதை நான் பெருமிதத்துடன் சொல்கிறேன். இதற்காக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தை இதுவரை பார்க்காதவர்கள் விரைவில் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து எங்களுக்கு தொடர் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் ” என்றார்.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசுகையில், ” ஹாட்ஸ்பாட் டூ மச் படம் வெளியாகி இன்றுடன் ஆறு நாள் ஆகிறது. அதற்குள் ஏன் சக்சஸ் மீட்? என கேட்டார்கள். ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகம் குறைவான திரையரங்குகளில் வெளியாகி, ஐந்து வாரங்கள் வெற்றிகரமாக ஓடியது. பெரும் வரவேற்பும் இருந்தது. ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகத்தின் ஒட்டுமொத்த வசூல் எவ்வளவோ.. அதைவிட இரண்டு மடங்கு இப்படம் வெளியான நான்கு நாளில் வசூலித்திருக்கிறது. அந்த வகையில் இந்தப் படம் எங்களுக்கு வெற்றி தான். அதனால் தான் இந்தப் படத்திற்கு ஆறாவது நாளில் நம்பிக்கையுடன் வெற்றி விழாவை ஒருங்கிணைத்திருக்கிறோம். இந்த வெற்றிக்கு காரணமான ரசிகர்கள்- ஊடகங்கள் – விநியோகஸ்தர்கள்- திரையரங்கு உரிமையாளர்கள் – உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தில் என்னுடன் பணியாற்றிய படத்தொகுப்பாளர் – ஒளிப்பதிவாளர்கள்- கலை இயக்குநர் – இசையமைப்பாளர் – தயாரிப்பு நிர்வாகி – நடிகர்கள் ராபின், அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர் ரக்சன், பிரியா பவானி சங்கர், ஆதித்யா கதிர், பவானி ஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி மற்றும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய எல்லா திரைப்படங்களிலும் முதல் நன்றி ‘குறிஞ்சி’ என்பவருக்கு இருக்கும். இவர்தான் 2013 ஆம் ஆண்டில் எனக்கு இரண்டு லட்ச ரூபாயை கொடுத்து ‘முதல் கனவே’ எனும் என்னுடைய முதல் குறும்படத்தை தயாரித்தவர். அவர் கொடுத்த ஊக்கம் தான் இன்று ஹாட்ஸ்பாட் டூ மச் வரை தொடர்கிறது. அவருக்கு நன்றி தெரிவிப்பது என்னுடைய அனைத்து படங்களிலும் தொடரும்.

இப்படத்தின் விமர்சனங்களில் நாங்கள் இரண்டு குறிப்பிட்ட நட்சத்திரங்களின் ரசிகர்களைத்தான் சுட்டிக் காட்டி இருக்கிறோம் என்று இடம்பெற்று இருந்தது. இது தவறு. பொதுவாகவே ரசிகர்களைப் பற்றிய பார்வை தான் இது. அதனை இரண்டு நட்சத்திரங்களின் வழியாக சொன்னால் நன்றாக இருக்கும் .. எளிதாக புரியும் என்பதாகத்தான் விவரித்து இருக்கிறோம்.

டோனி ரசிகர்கள் கோலியை வசைபாடுவதும், கோலியின் ரசிகர்கள் தோனியை வசை பாடுவதும் இணையத்தில் தொடர்கிறது. ஒரு இசை அமைப்பாளரின் ரசிகர்கள் மற்றொரு இசையமைப்பாளரை விமர்சிக்கிறார்கள். இவை அனைத்தையும் ஒன்றிணைத்து தான் நாங்கள் ரசிகர்களின் கோணத்தில் அவர்களுடைய உணர்வாக பேசி இருக்கிறோமே தவிர.. குறிப்பிட்ட இரண்டு நட்சத்திரங்களின் ரசிகர்களை பற்றி நாங்கள் ஒருபோதும் எங்கும் குறிப்பிடவில்லை.

அதே சமயத்தில் தம்பி ராமையா பேசும் வசனங்கள் தொடர்பாகவும் இணையத்தில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் இடம் பிடித்திருக்கிறது. ஒரு படம் பிடித்திருக்கிறது என்பதும் ஒரு படம் பிடிக்கவில்லை என்பதும் படத்தை பார்த்த ஒவ்வொரு ரசிகர்களின் தனிப்பட்ட கருத்து. இதை நாங்கள் மதிக்கிறோம். வரவேற்கிறோம். ஆனால் பெண்ணியவாதிகள் சிலர் தங்களின் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் இவர்கள் இந்த திரைப்படத்தை முழுமையாக பார்க்காமல்.. இணையத்தில் வெளியான துண்டு காணொளிகளை மட்டும் பார்வையிட்டு சில சூடோ ஃபெமினிஸ்ட்டுகள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இது தவறு. அவர்கள் இந்தப் படத்தை முழுமையாக பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு படைப்பை பற்றிய விமர்சனங்களை முன் வைப்பதற்கு எப்படி பார்வையாளர்களுக்கு முழு உரிமை இருக்கிறதோ… அதே போல் ஒரு படைப்பை எப்படி வழங்கிட வேண்டும் என்பதில் படைப்பாளனாகிய எனக்கும் முழு உரிமை உள்ளது.

நான் என்னுடைய மனசாட்சிக்கு உட்பட்டு எனக்குத் தெரிந்த வகையில் நிறைய மக்களுடன் விவாதித்து அதனை எப்படி குழப்பம் இல்லாமல் தெளிவாக மக்களுக்கு வழங்கிட இயலும் என்பதையும் எப்படி சமூக பொறுப்புடன் இதனை சொல்ல வேண்டும் என்பதையும் மனதில் வைத்து தான் இந்த படைப்பை உருவாக்கி இருக்கிறேன். ஒரு படைப்பாளனாக ஒரு படைப்பை உருவாக்குவதற்கு எனக்கு முழு சுதந்திரமும், உரிமையும் உண்டு என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்” என்றார்.

ஹாட் ஸ்பாட் 2 மச் ‘ படத்தில் அஸ்வின் குமார், பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர்,‌ தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர் , ரக்சன், பவானி ஸ்ரீ , பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, ‘ஆதித்யா’ கதிர், விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவி – ஜோசப் பால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாரான இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களுடைய பேரன்பினையும் பேராதரவையும் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.

Kia India Reaffirms People-First Culture with SecondConsecutive Great Place To Work® Certification™

 Back-to-back Great Place To Work® Certification™ reinforces Kia India’s employer-of-choice
positioning
 Currently, the only car manufacturer in India to be recognised consecutively with this certification
NEW DELHI, India, 28 January 2026: Kia India, one of country’s leading mass- premium
carmaker, has been certified as a Great Place To Work® for the second consecutive year,
reinforcing the company’s commitment to building a trusted, inclusive, and people-centric
workplace. Kia India is currently the only car manufacturer in the country to receive this
certification for two consecutive years.
The certification is based entirely on confidential employee feedback, reflecting high levels of
trust, pride, and engagement across the organisation. In the latest assessment cycle, 93%
employee participation was recorded, demonstrating a strong culture of openness and
collaboration.
“Organizations progress when people are trusted to think, speak, and act with ownership,”
said Mr. Gwanggu Lee, Managing Director & CEO, Kia India, said, “This recognition
reflects the everyday choices our teams make—how they collaborate, raise the bar, and
support one another. At Kia India, we remain focused on creating an environment that
enables our people to grow confidently, contribute meaningfully, and succeed together.”
The certification reaffirms Kia India’s people-first philosophy and its continued focus on
strengthening organisational culture as a key driver of sustainable growth.
Kia India’s workplace culture is driven by a strong emphasis on collaboration, transparency,
diversity, and continuous learning. The company has put into practice structured
development programmes, comprehensive employee well-being initiatives, and open
communication platforms to support employee engagement and long-term capability
building. The Great Place To Work™ Certification™ further strengthens Kia India’s position
as an employer of choice, enabling stronger talent attraction and retention while translating a
people-first culture into improved organizational and business outcomes.
Great Place To Work® is the global authority on workplace culture, employee experience,
and leadership practices that drive sustained business performance, innovation, and
employee retention.
Commenting on the recognition, Balbir Singh, CEO, Great Place To Work®, India, said,
“At Great Place To Work®, we believe that strong workplace cultures are built on trust,
purpose, and consistency. By earning this Certification for the second year in a row, Kia
India has demonstrated a sustained commitment to employee experience and a work
environment where individuals are empowered to perform and grow.”
According to Great Place To Work® research, employees at certified organisations are 93%
more likely to look forward to coming to work and are twice as likely to perceive fairness in
Kia India Contact:
Madhulika Singh
Lead – Public Relations
9999673459
madhulika.singh@kiaindia.net

compensation and equal access to growth and advancement opportunities. Job seekers are
also 4.5 times more likely to find high-quality leadership in certified workplaces.

“காந்தி டாக்ஸ்” டிரெய்லர் வெளியீடு: வார்த்தைகளை விட வலிமையாக பேசும் மௌனம்

Zee Studios, Kyoorius Digital Pvt Ltd, Pincmoon Meta Studios மற்றும் Movie Mill Entertainment இணைந்து தயாரித்துள்ள, “காந்தி டாக்ஸ்” திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முழுமையாக வசனங்கள் இல்லாமல் உருவாகியுள்ள இந்தப்படம், சினிமா மரபுகளை உடைத்து, துணிச்சலான உள்ளடக்கம் மற்றும் கதைசொல்லலை நம்பும் தயாரிப்பாளர்களின் உறுதியை வலுவாக பிரதிபலிக்கிறது.

ஒலி, ஆரவாரம், பிரம்மாண்டம் ஆகியவற்றால் நிரம்பிய இன்றைய சினிமா சூழலில், “காந்தி டாக்ஸ் ” தன்னடக்கத்துடனும் நம்பிக்கையுடனும் வருகை தருகிறது. வசனங்கள் இன்றி, உணர்ச்சியை தூண்டும் காட்சிகள், பதற்றம் நிறைந்த மௌனம், ஆழமான உணர்வுகள் ஆகியவற்றின் மூலம் டிரெய்லர் பலவற்றை சொல்லுகிறது. காதுகளால் மட்டும் அல்ல, பார்வையாளர்களின் உள்ளுணர்வுகளாலும் கேட்க வைக்கும் ஒரு சினிமா அனுபவமாக இது அமைந்துள்ளது.

விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த் ஜாதவ் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் , நுணுக்கமும் உள்ளார்ந்த நடிப்பும், உணர்வுப்பூர்வமான மோதல்களும் நிறைந்த சுவடுகளை, டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. வார்த்தைகள் இல்லாததால், முகபாவனைகளும் நடிகர்களின் இருப்புமே கதையின் மையமாக இருக்கின்றது.

படம் குறித்த அனுபவத்தை பகிர்ந்த விஜய் சேதுபதி ..,
“வார்த்தைகள் இன்றி உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற சவாலை ‘காந்தி டாக்ஸ்’ எனக்கு அளித்தது. மௌனமே மிக வலுவான உரையாடலாக மாறும் அரிய படம் இது.” என்றார்.

படம் குறித்து அரவிந்த்சாமி கூறுகையில்..,
“சத்தத்தில் மூழ்கிய இந்த உலகில், மௌனம் இன்னும் மனசாட்சியை உலுக்கும் என்பதை ‘காந்தி டாக்ஸ்’ நினைவூட்டுகிறது. இங்கே வார்த்தைகள் விலகி நிற்க, உண்மை அமைதியாக நடந்து வருகிறது. ரஹ்மானின் மேதைமை மிக்க இசையே இத்திரைப்படத்தின் மொழியாகிறது.” என்றார்.

படத்தின் உணர்ச்சிப் பிணைப்பை பற்றி அதிதி ராவ் ஹைதாரி கூறியதாவது..,
“வார்த்தைகளை விட உணர்வுகள் தான் இதில் என்னை அதிகம் நெகிழ வைத்தது. மௌனமும், நுணுக்கமான உணர்வுகளும் ஒன்றோடொன்று அழகாக இணையும் படம் இது.”

சித்தார்த் ஜாதவ் கூறியதாவது..,
“உரையாடலின்றி இவ்வளவு வலிமையாக உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு படத்தின் அங்கமாக இருப்பது உண்மையிலேயே சிறப்பு. வார்த்தைகளைத் தாண்டி பேசும் சினிமாவின் உலகமொழியை இது மீண்டும் நினைவூட்டுகிறது.”

கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், இப்படத்திற்கு, இசை ஜாம்பவான் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இசையே கதையின் குரலாக மாறி, ஒவ்வொரு மௌனத்தையும், பதற்றத்தையும், சொல்லப்படாத எண்ணங்களையும் உணர்ச்சிபூர்வமாக உயர்த்துகிறது.

இசையின் உச்சமான ஏ ஆர் ரஹ்மான் கச்சேரிக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக, துணிச்சலான மற்றும் மரபு மீறிய ஒரு முயற்சியாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டு, பாரம்பரிய சினிமா மற்றும் இசையின் சங்கமத்தை கொண்டாடியுள்ளது படக்குழு. இந்த தனித்துவமான விளம்பர அணுகுமுறை, படத்தின் தத்துவத்தை, ஆழமான, அனுபவபூர்வமான மற்றும் கலை நோக்கத்தை பிரதிபலிக்கிறது.

“காந்தி டாக்ஸ்” மூலம், Zee Studios மற்றும் தயாரிப்பாளர்கள் விதிமுறைகளைத் தாண்டி, நுணுக்கமான நடிப்பைக் கொண்டாடும் மற்றும் இந்திய சினிமாவின் எல்லைகளை முன்னுக்கு எடுத்துச் செல்லும் படங்களுக்கான தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர். இத்திதிரைப்படத்தை தமிழகம் முழுவதும் ரோமியோ பிக்ச்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார்

2026 ஜனவரி 30 அன்று “காந்தி டாக்ஸ்” திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

🔗 https://youtu.be/rph2F0uX-A0

செழியனின் ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ மாணவ படைப்பாளிகளின் 34 திரைப்படங்கள் – இயக்குநர்கள் அறிமுக விழா

தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த ஒளிப்பதிவாளர், இயக்குநர், எழுத்தாளர், திரை ஆர்வலர் என பன்முக ஆளுமை கொண்ட செழியன், ‘ தி ஃபிலிம் ஸ்கூல்’ எனும் பெயரில் எதிர்கால திரையுலக படைப்பாளிகளுக்கான பயிற்சி பட்டறையை நடத்தி வருகிறார். இந்த பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட 34 மாணவ படைப்பாளிகள் ஒன்றிணைந்து 34 சுயாதீன திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். இதற்கான அறிமுக விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரே நிறுவனத்தில் பயின்ற 34 பேரின் 34 திரைப்படங்கள் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் புதிய சரித்திரம் படைத்திடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தி ஃபிலிம் ஸ்கூல் செழியனுடன் படத்தொகுப்பாளர்கள் பி. லெனின், ஸ்ரீகர் பிரசாத்; ஒளிப்பதிவாளர்கள் பி. சி. ஸ்ரீ ராம், ரவிவர்மன்; வரைகலை இயக்குநர் ட்ராட்ஸ்கி மருது; தயாரிப்பாளர்- விமர்சகர் தனஞ்ஜெயன்; இயக்குநர்கள் ஞானராஜசேகரன், ஹரிஹரன்; ஒலிப்பதிவு கலைஞர் தபஸ் நாயக்; திரைப்பட திறனாய்வாளர் மருத்துவர் தாயப்பன்; எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர், தமிழ் பிரபா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.‌

விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் திரு. செழியன் வரவேற்று பேசுகையில், ”வருகை தந்து சிறப்பித்திருக்கும் விருந்தினர்கள், நண்பர்கள், இலக்கிய ஆளுமைகள், என்னுடைய ஃபிலிம் ஸ்கூலில் படித்த மாணவர்கள் என அனைவரையும் வரவேற்கிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் உலக சினிமா என்ற புத்தகத்தை எழுதுவதற்கு முன் ஜெர்மானிய இயக்குநர் வெர்னர் ஹெர்சாக்கைப் பற்றி படித்தேன். அவர் ஒரு ஃபிலிம் ஸ்கூலில் படிக்கிறார். படித்து முடித்தவுடன் அவர் ஒரு கண்ணாடி கூண்டிற்கு முன் நிற்கிறார். அப்போது அவர் அதிலிருந்து ஒரு கேமராவை கொடுங்கள், நான் படம் எடுத்துவிட்டு தருகிறேன் என்கிறார். அது இன்ஸ்டியூட்டில் உள்ள கேமரா. அதனை கொடுக்க முடியாது என்கிறார்கள். அவர் அன்றிரவு அந்த கண்ணாடி கூண்டை உடைத்து ஒரு கேமராவை எடுத்து, படத்தை எடுத்த பின் மீண்டும் கேமராவை ஒப்படைக்கிறார். அதன் பிறகு அவரைப் பற்றிய நிறைய விஷயங்களை தேடத் தொடங்கினேன். அதன் பிறகு அவர் ரோக் ஃபிலிம் ஸ்கூலில் படித்தார் என்ற தகவலை உறுதியாக பிடித்துக் கொண்டேன். ரோக் என்றால் நாடோடி, கலகக்காரன், ஊர் சுற்றி இப்படி எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம்.

அதன் பிறகு அவர் படித்த ஸ்கூலில் சேர்வதற்கான விதிமுறைகளை ஆராய்ந்தேன். அந்த ஸ்கூலில் சேர வேண்டும் என்றால் 12 புத்தகங்கள் வாசித்திருக்கவேண்டும். எங்கு சென்றாலும் வாகனங்களில் செல்லாமல் நடைப்பயணமாகவே செல்ல வேண்டும். சென்ஸிபிலிட்டி இருக்க வேண்டும். ஒரு நான்கு வயது குழந்தைக்கு அரை மணி நேரம் கவனம் சிதறாமல் கதை ஒன்றை சொல்ல வேண்டும். இதெல்லாம் செய்ய முடியும் என்றால் எங்களுடைய பிலிம் ஸ்கூலில் சேர முடியும் என்கிறார். அவரிடம்‌ பிலிம் ஸ்கூலின் முகவரியை கேட்கிறார்கள். அந்த முகவரி நான்தான் என்கிறார். ஒரு நாடோடியாக இருக்கிறார். நியூசிலாந்தில் இருக்கிறார் என்றால் அங்கு ஒரு பத்து நாள் வகுப்பு நடைபெறும். ஜெர்மனியில் இருக்கிறார் என்றால் அங்கு ஒரு பத்து நாள் வகுப்பு நடைபெறும்.

அதன் பிறகு ஈரானிய இயக்குநர் மக்மல்பாஃப்பை சென்னையில் சந்தித்தேன். அவருடன் மூன்று நாட்கள் உடனிருந்தேன். அவர் ஒரு ஃபிலிம் ஸ்கூலை நடத்திக் கொண்டிருந்தார். உங்களுடைய ஃபிலிம் ஸ்கூலுக்கான சிலபஸ், அட்மிஷன் ப்ரொசீஜர் என்ன என கேட்டேன். ஏதேனும் ஒரு கவிதை புத்தகத்தை ஒரு வாரம் வரை படித்துக் கொண்டிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு ஓவியரை மட்டும் தெரிவு செய்து அவருடைய ஓவியப் படைப்புகளை தொடர்ந்து ஒரு மாதம் வரை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அதன் பிறகு ஒரு எழுத்தாளரின் சிறுகதைகளை ஒரு மாதம் வரை தொடர்ந்து படித்துக் கொண்டிருக்க வேண்டும் .அதன் பிறகு தினமும் 50 கிலோ மீட்டர் வரை தூரம் வரை சைக்கிள் ஓட்ட வேண்டும் . ஒரு மணி நேரம் நீச்சல் அடிக்க வேண்டும். நான் உடனடியாக உங்களுடைய பிலிம் ஸ்கூலில் நான் சேர இயலுமா எனக் கேட்டேன். அதற்கு அவர், “அரசுக்கு எதிராக திரைப்படம் எடுக்கிறேன் என்று சொல்லி என்னை நாடு கடத்தி விட்டார்கள். நான் ரஷ்யாவில் இருக்கிறேன். ரஷ்யாவில் இருந்து தற்போது இந்தியாவுக்கு வந்திருக்கிறேன். நான்தான் அந்த ஃபிலிம்ஸ் ஸ்கூல்,சி என்றார். அதன் பிறகு அவர், “நான் ஒரு 15 நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகிறேன். நீங்கள் உங்கள் நண்பர்களை எல்லாம் ஓரிடத்தில் ஒன்றிணையுங்கள். சேர்ந்து சினிமாவை பற்றி பத்து நாள் பேசுவோம். பதினோராவது நாள் திரைப்படத்தின் பணிகளை தொடங்கி, 15 நாளில் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து விடுவோம்,” என்றார்.

இதுதான் என்னுடைய பிலிம் ஸ்கூலின் கான்செப்ட். இதனை பிரம்மாண்டமாகவோ, விழாவாகவோ, நிறுவனமாகவோ உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. தீவிர சினிமாவை பற்றி பேசும் நண்பர்கள், இலக்கியத்தைப் பற்றி தீவிரமாக பேசும் நண்பர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இயங்கும் அமைப்புதான் இது.

சென்னையில் எங்கேனும் 500 குடியிருப்புகள் உள்ள பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டால்… அதன் அருகே அரசு ஒரு பூங்காவை உருவாக்க வேண்டும். அதில் புல்வெளி இருக்க வேண்டும். மரங்கள் இருக்க வேண்டும். இது விதி. அதேபோல் சினிமா ஒரு மிகப்பெரிய இண்டஸ்ட்ரி.
செயற்கையான பிரம்மாண்டமான கட்டடங்கள் இருக்கும் போது இயற்கையான புல்‌வெளியும், மரங்களும் எப்படி இருக்க வேண்டுமோ, அதே போல் தான் இந்த பிலிம் ஸ்கூலின் சினிமா.

இப்பொழுது எல்லா நேரங்களிலும் ஏசியில் தான் இருக்கிறோம், இயங்குகிறோம். சிறிது நேரம் புல்வெளியிலும் காலாற நடக்க வேண்டும். மூன்று கோடி முதல் 300 கோடி வரை படம் எடுங்கள். அவை அனைத்தும் வெற்றி பெறட்டும். 20 லட்ச ரூபாய் முதலீட்டிலும் சில திரைப்படங்கள் உருவாகட்டும். இத்தகைய முயற்சிக்கு இங்குள்ள பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் வருடத்திற்கு 10 அல்லது 12 நாட்கள் ஒதுக்கீடு செய்து ஆதரித்தால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். கமர்ஷியல் சினிமாவும் வெற்றி பெறும், சிறிய பட்ஜெட் படங்களும் வெற்றி பெறும். இருவரும் இணைந்து வளர்வார்கள். இந்த துறையும் வளர வேண்டும். சினிமாவிற்கு ஆர்கானிக்கான ஒரு விசயமும் தேவை.  

‘விதைத்துக்கொண்டே இருங்கள்’ என நம்மாழ்வார் அடிக்கடி குறிப்பிடுவார். அதனால் நாங்கள் விதைத்து கொண்டே இருக்கிறோம். அவர் விவசாயத்தில் செய்ய திட்டமிட்டது இயற்கை விவசாயம். நாங்கள் செய்யத்திட்டமிடுவதும் இயற்கையான சினிமா விவசாயம்,” என்றார்.

உலக சினிமா ஆய்வாளர் மருத்துவர் தாயப்பன் பேசுகையில், ”1950 களில் பிரான்ஸில் நியூ வேவ் அதாவது புதிய அலை என்ற இயக்கம் உருவாகிறது. எழுத்து, இசை, ஓவியம், அரசியல், திரைப்படம் என அனைத்திலும் ஏற்கனவே இருக்கக்கூடிய, சலித்து போன மரபுகளை உடைத்து விட்டு புதிய சிந்தனை பரவ வேண்டும் என்பதற்காக அந்த இயக்கம் தோன்றுகிறது.‌ இதன் தாக்கம் திரைப்படத்திலும் ஏற்படுகிறது. மரபு சார்ந்த திரைப்படங்களை விமர்சித்து விமர்சித்து சலித்து போன விமர்சகர்கள் புதிய அலை குறித்து விவாதிக்கிறார்கள். பழக்கப்பட்ட திரைக்கதை, வழக்கமான கேமரா கோணங்கள், பழக்கப்பட்ட ஒளி/ ஒலி அமைப்பு என இருக்கும் மரபுகளை உடைத்து, எங்கும் நிற்காத கேமரா கோணங்கள், இயல்பான கதைகள், இளைஞர்களைப் பற்றிய கதைகள், இயற்கையான ஒளி/ ஒலி அமைப்பு இவற்றையெல்லாம் தங்களுக்குள் வரித்துக் கொண்டு படைப்பை உருவாக்குகிறார்கள்.

இந்த புதிய அலைக்கு அரசியலோடும் பிணைப்பு உள்ளது. முசோலினியின் வீழ்ச்சிக்கு பிறகு தான் ரியலிசம் தோன்றியது.

புதிய அலை என்பது ஒரு இயக்கமோ ஒரு சிந்தனையோ அல்லது ஒரு குழுவோ அல்ல. இது சமத்துவமானது. இந்த சமத்துவம் என்ற சொல் பிரெஞ்சு புரட்சிக்கு விதைத்த அரசியல் ரீதியிலான தாரக மந்திரமாகவே உருவானது.

டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியல் அமைப்பை எழுதும் போது ஈக்குவாலிட்டி என்பதை உள்ளார்ந்த, அறநெறி சார்ந்த விஷயமாகத் தான் உருவாக்கியிருக்கிறார்.

பார்வையாளர்களை படைப்பை வேடிக்கை பார்க்கும் வேடிக்கையாளர்களை போல் பார்க்காமல், அவர்கள் தங்களுக்குள் தங்களை பார்க்கும் வகையில் உருவாக்குவது தான் புதிய அலை.  

மரபை மீறி புதிய அலையை உருவாக்குவது என்பது தமிழ் சூழலில் எப்போதோ நிகழ்ந்து இருக்க வேண்டும். ஏனெனில் வழக்கத்திற்கு மாறாக சிந்திக்க வேண்டும் என்ற சிந்தனையை விதைத்த பெரியார் இங்குதான் இருந்தார். அவருடைய நீட்சியாகத்தான் புதிய அலை திரைப்படங்கள் இருந்திருக்க வேண்டும். அதன் தாக்கம் பெரிதாக இல்லாமல் கொட்டிய குப்பையை மீண்டும் மீண்டும் கிளறுவது தான் தொடர்கிறது இதற்கு முன்னர் ஒரு சில முயற்சிகள் நடந்திருக்கின்றன, ஆனால் அவை முழுமையான வெற்றியைப் பெறவில்லை.

வெண்மணி படுகொலை பற்றி புதிய அலை சார்பில் எந்த ஒரு படைப்பும் இங்கு இல்லை. தமிழகத்தில் எவ்வளவோ சம்பவங்கள் இருக்கின்றன. 2009ம் ஆண்டில் மறைந்த பிரபாகரனை பற்றிய உள்ளார்ந்த படைப்பு என்று எதுவும் இங்கு இதுவரை இல்லை. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கூட நாம் ஒரு செட் பிராப்பர்ட்டியாகத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.‌

செழியனுக்கு பாராட்டுவது பிடிக்காது இருந்தாலும் செழியன் செழியன் தான். செழியனை செழியன் ஆகத்தான் பார்ப்போம்,” என்றார்.

எழுத்தாளர் தமிழ் பிரபா பேசுகையில், ”செழியன் உடைய மாணவராகத் தான் நான் இங்கு பேசுகிறேன். உலக சினிமாவைப் பற்றிய வித்தியாசமான பார்வையை அவர்தான் எனக்கு காண்பித்தார். சினிமா படைப்பாளிகளுக்கு இலக்கிய பின்புலம் வலிமையாக இருந்தால் அவர்களிடம் இருந்து செழுமையான படைப்பு வெளிப்படும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். அவர் இலக்கியம், ஓவியம், இசை என அனைத்தும் அறிந்தவர். இதன் கலவையாகத் தான் அவர் ஒவ்வொரு காட்சியையும் வடிவமைக்கிறார் என நான் நினைக்கிறேன். அவரிடமிருந்து மாணவர்கள் தயாராகி வெளியாகும் போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாற்றம்- இயக்கமாக தொடரும் என்பதாக பார்க்கிறேன்.

கமர்ஷியல் சினிமா, ஆர்ட் சினிமா என நாம் பிரித்துப் பார்த்தாலும் கேரளாவில் கலை இலக்கியம் சார்ந்த சினிமாவை தொடர்ந்து வளர்த்தெடுத்து வருகிறார்கள் என எனக்குத் தோன்றுகிறது. ஆனால் தமிழில் இது மெல்ல மெல்ல அழிந்து வருவதாக கருதுகிறேன். ஒரு தூய்மையான கலை வடிவத்திற்குள் ஒரு படைப்பு தமிழில் உருவாகவில்லையோ, என நினைக்கிறேன். இந்த இடைவெளியை செழியனின் தி ஃபிலிம் ஸ்கூல் மாணவர்கள் நிரப்புவார்கள் என நம்புகிறேன்,” என்றார்.

இயக்குநர் ஞான ராஜசேகரன் பேசுகையில், ”இன்று தமிழ் சினிமாவில் ஒரு படம் ஒரே நேரத்தில் 2000 திரையரங்குகளில் வெளியாகிறது. இது ஒரு தவறான முன்மாதிரி என நான் நினைக்கிறேன். இதை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் இங்கு இல்லை. இதற்காக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் புரட்சி ஏற்பட வேண்டும். சினிமா என்பது வணிகத்தனம் மட்டுமல்ல அதில் படைப்புத் திறனும் உள்ளது.

ஒவ்வொரு படைப்பாளிக்கும் தன்னுடைய படைப்பை மக்களிடத்தில் காட்சிப்படுத்தி, அவர்களிடமிருந்து வெற்றியோ தோல்வியோ பரிசாக கிடைப்பதில் ஒரு சவுகரியம் இருந்தது. இந்த நிலை தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக இருந்தது. அந்த நிலை இன்று திடீரென்று மாறிவிட்டது. தற்போது சிலர் மட்டுமே வெற்றி பெற்று பெரும்பாலானவர்கள் தோல்வியைத் தழுவும் ஒரு தொழிலாக மாற்றி விட்டார்கள். இதற்கு செழியன் தன்னால் ஆன மிக சிறிய சீர்திருத்த பணியை தொடங்கி இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்,” என்றார்.

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் பேசுகையில், ”எழுத்து மூலமாக உலக சினிமாவை செழியன் அறிமுகப்படுத்தினார். அவர் தொடராக எழுதியதை வாசிக்கும் போதே எனக்குள் ஒரு உத்வேகம் எழும். நாமும் செய்து பார்க்கலாம் என்ற விதையை விதைக்க செய்தவர் செழியன். அவருடைய சினிமா பற்றிய ஞானத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் பிலிம் ஸ்கூலை தொடங்கி இருக்கிறார்.

தொலைக்காட்சிகளில் நடைபெற்ற நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சி மூலம் தற்பொழுது மெயின் ஸ்ட்ரீமில் ஏராளமான இயக்குநர்கள் இருக்கிறார்கள். இவர்களைப் போல் செழியனின் ஸ்கூலில் இருந்து வரும் 34 படைப்பாளிகளில் பலரும் மெயின் ஸ்ட்ரீமில் தங்களுடைய முத்திரையை பதிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, சாதிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

செழியன் துணை முதல்வரை சந்திக்கும் போதும் அழைப்பிதழ் மட்டும் வழங்காமல், கோரிக்கையையும் இணைத்து கொடுத்திருக்கிறார். அவருடைய இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

மொழிபெயர்ப்பு எழுத்தாளர் வே. ஸ்ரீராம் பேசுகையில், ”தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று எல்லோரும் வீட்டில் உட்கார்ந்த படி உலக சினிமாவை பார்க்க முடியும். 1970களில் இதுபோன்ற வசதி கிடையாது. சினிமா சார்ந்த அமைப்புகளில் உறுப்பினராக இருந்தால் மட்டும் தான் அதிலும் சிலருக்கு மட்டும் தான் இது போன்ற உலக சினிமாவை பார்க்கும் வாய்ப்புக் கிட்டும். சென்னையில் உள்ள பிரான்ஸ் நாட்டின் தூதரகத்தில் பணியாற்றியதால் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரெஞ்சு திரைப்படத்தை திரையிட்டோம். அப்போது திரையிடப்படும் திரைப்படங்களைப் பற்றிய ஒரு முன் சுருக்கத்தை திரையிடலுக்கு முன்னர் வழங்குவோம். படம் நிறைவடைந்த பிறகு படத்தைப் பற்றிய விவாதம் நடைபெறும் என்று நான் எதிர்பார்த்தேன் ஆனால் அது நடைபெறவில்லை. அதிலும் குறிப்பாக தமிழில் இதைப் பற்றி பேசுவதற்கு ஆள் இல்லை. அதன் பிறகு சென்னை பிலிம் சொசைட்டி மூலமாக ‘மரபியல் மீறிய சினிமா’ என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டோம். அதில் இயக்குநர் ஹரிஹரன் இந்த புதிய அலை பற்றிய அருமையான முன்னுரையை எழுதி இருந்தார்.

புதிய அலை தொடர்பான படைப்புகள் ஐரோப்பாவில் மட்டும்தான் வெளியாகுமா, தமிழிலும் வெளியாக வேண்டும் என்று எண்ணத்தில் செழியன் எடுத்த முயற்சி தான் இது. அவருடைய முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், ”50 லட்சம் ரூபாயில் ‘டூ லெட்’ எனும் திரைப்படத்தை உருவாக்கி, அதனை அனைத்து சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிட்டு, விருதுகளை வாங்கி, இன்று வரை தமிழ் சினிமாவின் பெஞ்ச் மார்க்காக திகழும் படத்தை உருவாக்கியவர் செழியன். அதனால் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவரைப் பற்றி பல தருணங்களில் பெருமிதமாக குறிப்பிட்டிருக்கிறேன்.  

அவர் எடுக்கும் இந்த முயற்சி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விழா பல தயாரிப்பாளர்களின் முன்னிலையில் நடைபெற வேண்டிய விழா.

இது தொடர்பாக நானும் சென்னையில் மத்திய அரசு ஆதரவுடன் மிகப்பெரிய விழா ஒன்றினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிட்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன்.‌ அதற்கான முன்னோட்டமாக இந்த நிகழ்வை நான் காண்கிறேன்.‌

இங்கு அறிமுகமாகும் 34 இயக்குநர்கள், 30 லட்சத்தில் படமெடுக்க முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள். இதில் 10 பேர் வெற்றி பெற்றாலும் செழியனின் இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றியை அடையும்,” என்றார்.

இயக்குநர் ஹரிஹரன் பேசுகையில், ”ஈரானிய இயக்குநர் மக்மல்பாஃப்பை சந்தித்த பிறகு என்னுடைய மாணவர்களுக்கும் அவர் போதித்த சினிமா பற்றிய விஷயங்களை அறிமுகம் செய்தேன்.  

இங்கு அறிமுகமாகும் 34 இயக்குநர்களும் எப்போதும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அனைவரும் பிரிந்து சென்றால் நீங்கள் கற்றது பயனற்றதாகிவிடும். எப்போதும் உங்களுடைய எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் புரட்சி உருவாகும். புதிய அலை உருவாகும்,” என்றார்.

ரவிவர்மன் பேசுகையில், ”எனக்கு செழியன் உலக திரைப்படங்களை பற்றி எழுதிய எழுத்தாளராகத்தான் அறிமுகமானார். செழியனின் விரிவுரை வாசித்த பிறகு பல திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். செழியனை எப்போதும் ஒரு வரையறைக்குள் அடக்க முடியாது. பல பேருடைய லட்சியங்களை சில லட்சத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார். அது மிகப்பெரிய முயற்சி. இதற்காக நான் அவரை மனதார பாராட்டுகிறேன். 34 திரைப்படங்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல அரிய நிகழ்வு.

சீனாவில் தற்போது இரண்டு நிமிடம், மூன்று நிமிடம் கொண்ட மினி சீரிஸ் அறிமுகம் ஆகி இருக்கிறது. தற்போது நாம் இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் நீடிக்கக்கூடிய படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் இது போன்ற படங்கள் உருவாகாது. தற்போது வெளியாகும் படங்களில் பாடல்கள் இடம் பெறுவதில்லை. அவை தனி ஆல்பமாக வெளியாகும் .அதன் பிறகு அதற்கென்று தனி ஒரு இசை வங்கி உருவாகும்.  

இறவா வரம் பெற்ற படைப்பாளிகளை உருவாக்கிய செழியன் வாழிய வாழிய,” என்றார்.

படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் பேசுகையில், ”சுயாதீன படைப்பாளிகளுக்கு நேர்மை மிகவும் அவசியம். அதுவும் படைப்பை இன்றைய கால கட்டத்திற்காக உருவாக்காமல் எதிர்காலத்திற்காக உருவாக்குங்கள், 34 இயக்குநர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்,” என்றார்.  

திரு. ட்ராட்ஸ்கி மருது பேசுகையில், ”செழியனை எனக்கு முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தெரியும். மிக தெளிவாக பணியாற்றக்கூடிய தொழில்நுட்பக் கலைஞர் அவர். அவருடைய அந்தத் தெளிவு திரைத்துறையில் ஒரு புதிய அலை தொடர்பான இயக்கமாக உருவாகி இருக்கிறது.‌ இது ஒரு ஆரம்பம் என்று தான் நான் நினைக்கிறேன். கடந்த 40, 50 ஆண்டுகளில் இது போன்றதொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டதில்லை. தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்த காலகட்டத்தில் ஓவியத்தை போல கவிதையைப் போல ஒரு திரைப்படத்தையும் எளிதாக உருவாக்கலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

சக கலைஞர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான காலகட்டமாக இது இருக்கிறது. இதனை செழியன் முன்னெடுத்திருப்பதை நான் மிக முக்கியமானதாக பார்க்கிறேன்.‌ 34 திரைப்படங்களையும் சாத்தியப்படுத்தி இருக்கின்ற தி ஃபிலிம் ஸ்கூலில் படித்த மாணவர்களுக்கும், அவர்களுக்கு துணைபுரிந்தவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

எடிட்டர் பி.லெனின் பேசுகையில், ”அடிதடி இருப்பது மாற்று சினிமா. நாம் உருவாக்குவது ஒரிஜினல் சினிமா. ஏழு ஸ்வரம் தெரிந்து இருந்தால் உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று பேசி விடலாம். அதற்கு ஆங்கிலம் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. இந்தி தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. தமிழ் தெரிந்தால் மட்டும் கூட போதும்.

இங்கு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட தி ஃபிலிம் ஸ்கூல் மாணவப் படைப்பாளிகளின் சுய விவர பட்டியலில் படைப்பிற்கான பட்ஜெட் 50 லட்சம் தான் அதிகபட்சமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் படப்பிடிப்பு நாட்களும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இப்போது நாங்கள் அதனை தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். அதனை பார்க்கும் போது நாட்கள் தெரியவில்லை. முழு நீள திரைப்படத்தையும் சொன்ன நாட்களுக்குள் படப்பிடிப்பை நிறைவு செய்து வழங்கி இருக்கிறார்கள்.

நான் திரைத்துறையில் பணியாற்றத் தொடங்கி இது 61 வது ஆண்டு. இன்றும் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஸ்கிரிப்ட் தான் முக்கியமானது. ஸ்கிரீன் பிளேயும் முக்கியம்.‌ எனவே இளம் இயக்குநர்கள் அனைவரும் பிரசண்ட்டில் பிளசன்ட்டாக பிரசண்டபிளாக இருங்கள். வாழ்த்துக்கள்,” என்றார்.

இந்நிகழ்வில் 34 சுயாதீன திரைப்படங்களை இயக்கும் இயக்குநர்களின் விவரங்கள்- அவர்கள் உருவாக்கும் திரைப்படங்களின் கதைச் சுருக்கம், பட்ஜெட், படப்பிடிப்பு தொடர்பான திட்டமிடல் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விழா மலரை ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீ ராம் வெளியிட, திரு. டிராட்ஸ்கி மருது பெற்றுக்கொண்டார்.  

இதைத்தொடர்ந்து தி ஃபிலிம் ஸ்கூல் சார்பில் குறும்படம் மற்றும் ஆவண படங்களுக்கான போட்டி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்ரீகர் பிரசாத், இயக்குநர் ஞான ராஜசேகரன், ஹரிஹரன், தனஞ்செயன் ஆகியோர் விருதை வழங்கி கௌரவித்தனர்.

இதைத்தொடர்ந்து 34 படைப்புகளும் திரையிடப்பட்டன. அவை அனைத்தையும் திரையுலக பிரபலங்கள் பார்வையிட்டு இளம் படைப்பாளிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

34 படைப்பாளிகளின் பெயர்களும் அவர்களின் படைப்புகள் பற்றிய விவரங்களும் வருமாறு:

1. அமல்.– தீவிரவாதி
2. சந்துரு – கூடு
3. விஜய் சுப்ரமணியன் – ஜஸ்ட் லிசன்
4. வினி லீட்டஸ் – சுழற்சி
5. குமரவேல் – நேற்றைய நிலா
6. சசிகுமார் திருமூர்த்தி – சேவ் தி கேட்
7. லெனின் சீதாராமன் – மோகன மதில்
8. அனுதீபன்.– கடைசி எல்லை
9. பாலா சீதாராமன் – பசி
10. மு. கார்த்திக் – மயில
11. ஹரிஹரன் ராக்கி – ஓட்டம்
12. **பொன் பொவனசுவரன் – கைபேசி
13. மைக்கேல் – கனி
14. மகேஷ் முருகேசன் – மியாவ்
15. பின்சி – மடந்தை
16. வீரா – விதி
17. சந்தோஷ் – தம்மம் பழகு
18. பாலு முருகேசன் – தாழ்
19. செந்தூ – உறுதுணை
20. நவீன் சீதாராமன் – குடை வள்ளல்
21. வெற்றிசெல்வன் – கிடை
22. விக்னேஷ் – லகடு
23. கோட்டை ராஜ் – இசக்கி
24. செந்தில் – அடவி
25. எர்னஸ்டோ – தணல்
26. வினோத் – வழித்துணை
27. ஆதம் – கண்ணாயிரம்
28. யுத்வின் சுபாஷ் – மத்தி
29. ஹபீப் – வார் கிட்ஸ்
30. கிருஷ்ணமூர்த்தி – அருகன்
31. சேகர் – ரைடர்
32. அகில் ரஹ்மான் – மௌனி
33. திலக் – மீனாட்சிபுரம்
34. மகேஷ் மிஷ்ரா – நிசப்தம்

தி ஃபிலிம் ஸ்கூல் குறித்த மேலும் விவரங்களை https://thefilmschool.in/ எனும் இணையதளத்தை பார்வையிட்டு அறிந்து கொள்ளலாம்.

பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி ‘

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி ‘ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘ ராக் ஸ்டார் ‘அனிரூத் வெளியிட்ட ‘ராவடி’ படத்தின் டைட்டில் – ஃபர்ஸ்ட் லுக் & கேரக்டர் கிளிம்ப்ஸ்

நடிகர்கள் பஸில் ஜோசப் – L.K. அக்ஷய் குமார் ஆகிய இருவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் ‘ ராவடி ‘ எனும் திரைப்படம் மலையாளத்திலும் அதே பெயரில் தயாராகி வருவதுடன், இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ராவடி’ எனும் திரைப்படத்தில் L. K . அக்ஷய் குமார், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA , ஷாரீக் ஹாஸன், நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பஸில் ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் கவனிக்கிறார். பிரியா ஆடை வடிவமைப்பாளராகவும், K. அருண் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். காமெடி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டைட்டில் – ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கேரக்டர் கிளிம்ப்ஸை இசையமைப்பாளர் ‘ராக் ஸ்டார்’ அனிருத் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதில் நடிகர்கள் பஸில் ஜோசப் – L.K. அக்ஷய் குமார்- ஜாபர் – நோபல்- அருணாசலம் – ஆகியோரின் தோற்றங்களும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மேலும் இப்படம்- எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.